கண் முழிக்கும்போதே மனசு பரபரன்னு இருக்கு. இன்னிக்கு 'லேடீஸ் டே அவுட்'. இவருக்கு வேலை சம்பந்தமான ஒரு 'வேலை' இருக்காம். நவீன்கிட்டே ஏற்பாடு செஞ்சாச்சு...இவரை 'அங்கே' கொண்டுபோய் விட்டுட்டு வந்து 'எங்களை' பிக் பண்ணிக்கணும்.
காலையின் வேலைக்குப் போகும் வழியில் தென்றலின் ரங்ஸ்க்கு ஒரு கடமை இருக்கு. தங்க்ஸைக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கணும். எல்லாம் சொன்னது சொன்னபடிக்கு!
'ச்சலோ சார்மினார்' னு புறப்பட்டோம். வளையல் யாவாரம் பரபரப்பா நடக்கும் இடம். புதுகைத் தென்றலுடன் உல்லாசமாய்ப் பேசிக்கிட்டே அவுங்களுக்குத் தெரிஞ்ச கடைகளுக்குப் போனோம். கண்ணாடி வளையல்கள் கலர்கலரா ஜொலிக்குது. எதை வாங்க எதை விட?
சார்மினார்
ஹைதையில் பரபரப்பே இல்லாம ஒரு 'ஸப் ச்சல்த்தா ஹை'ன்னு கொஞ்சம் சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை போல! கடைகள் கண் திறக்கவே காலை பதினொரு மணி ஆகிருது. மகளுக்கும், இன்னொரு தோழிக்குமாகக் கொஞ்சம் வளையல்கள் வாங்கிக்கிட்டோம். எனக்குன்னு வாங்கிக்கலை. கண்ணாடி வளையல்கள் ஆசை மனசை விட்டுப்போய் பல வருஷங்கள் ஆகியிருந்துச்சு.( இதுக்குப்பின்னே ஒரு கதை இருக்கு. அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறில்' சொல்வேன்) நாம் சிலுப்பும் சிலுப்புக்குன்னு ஒரு மோர் மத்து வாங்கினேன். கடைஞ்சுறமாட்டேனா இனி:-))))
அங்கே இங்கேன்னு கொஞ்சம் க்ளிக்கினேன். 'பளிச்'ன்னு தேங்காய்ச் சில்லுகளை அழகா அடுக்கி வச்சுருக்கார் வண்டிக்காரர். மீந்து போச்சுன்னா என்ன செய்வார்? பக்கத்துலேயே ஒரு டப்பாவில் தேங்காய் மிட்டாய் இருப்பதைப் பார்த்து வச்சுக்குங்க:-)))) பச்சைப் பசேலுன்னு கீரைகள், காய்கறிகள், குண்டுகுண்டாக் கொய்யாப் பழங்கள், திருவிழாவில் பொரிகடலைக் குவியல்போல கூடைகளில் குவிச்சுவச்சுருக்கும் வளையல்கள் இப்படி. ஒரு இடத்துலே ஏதோ கிழங்கு, சின்ன வவ்வால்களை அடுக்கிவச்ச மாதிரி ஒன்னு வயலெட் நிறத்துலே இருக்குது. என்னவோ பெயர் சொன்னார் விற்பனைப் பையர். மனசுலே பெயர் தங்கலை(-:
குட்டி வவ்வால்?
முத்து பவழம் விற்கும் ஒரு கடையில் ரெகுலர் கஸ்டமராம் நம்ம தென்றல்! பவழச் சரங்கள் விலை சல்லிசாத்தான் இருக்கு. சின்னதா 100 பவழம் இருக்கும் சரம் 330 ரூபாய்தானாம். தய்வானில் இருந்து வருதாம். மகளுக்கு ஒரு கழுத்தணி வாங்கினேன். கடைகண்ணிகள் ரொம்பத் தாமதமாத் திறப்பதால் வியாபாரம் மாலை நேரங்களில்தான் சூடு பிடிக்குமாம். அதுவும் ரம்ஜான் காலங்களில் இரவு 12 வரை கடைகள் திறந்துருக்குமாம்.
மணி ஒன்னு ஆகப்போகுது. தென்றலின் செல்வங்கள் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துருவாங்கன்னு ஷாப்பிங்கை அ(த்)தோடு அப்படியே முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்து கோபாலையும் கூப்புட்டுக்கிட்டுப் பகலுணவுக்கு ஓடுனோம்.
வேலை முடிஞ்சு டாக்ஸியில் அறைக்கு வந்தவர் இணையத் தொடர்பு கிடைக்கலையே அதோட மாரடிச்சுக்கிட்டு இருந்துருக்கார். மூணுநாளா இதே கதிதாங்க. ஹொட்டேல் ரிஸப்ஷனில் நிறைய தடவை புகார் செஞ்சாச்சு. கம்ப்யூட்டர் ஆளு வந்தவுடன் அறைக்கு அனுப்பறோமுன்னு சொல்லிக்கிட்டேக் காலத்தை ஓட்டிட்டாங்க. கடைசியில் பார்த்தா...... நெட் கனெக்ஷனுக்குன்னே அங்கே மேசையடியில் ஒரு ஸ்விட்ச் இருக்காம். அது பவர் போனதும் நின்னுருமாம். பவர் வந்ததும் அதை மீண்டும் தட்டிவிட்டாத்தான் அறைகளில் இணையத்தொடர்பு கிடைக்குமாம். கவனமா மறந்துட்டாங்களாம். தட்டாம விட்டதுதான் தப்பாப் போயிருச்சு.
போதுண்டா சாமி......
சிக்கந்தராபாத் போய், தென்றலுக்கு ஆகிவந்த ஒரு உணவகத்துலே பகலுணவு ஆச்சு. 'தாலி' மீல்.:-))))) பிள்ளைகள் வந்துருப்பாங்களேன்னு அடிச்சுப்பிடிச்சு ஓடுனோம். ஆஷிஷ் & அம்ருதா ரொம்ப சமர்த்தா சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஸ்நாக்ஸ் மட்டும் சமையலில் சேராதா என்ன? கொஞ்சநேரம் அவுங்களோடு இருந்துட்டுப் பிரியாவிடை பெற்றோம்.
ஸ்நாக்ஸ் சமையல்!
ஹுஸைன்சாகரில் கால்கடுக்க நிற்கும் புத்தரை இதுவரைப் படம் எடுக்கலை. சரியான கோணம் (வண்டியில் போகும்போதே எடுக்கலாமுன்னா) அமையலை. இந்த ஏரியில் இருந்து அடிக்கடி மூக்கைப் பொத்திக்கும் மணம் ஒன்னு வீசுது. நாம் போன நாட்களில் இது...... ஐயோ.... படகு ஒன்னு புத்தர் காலடி வரை கொண்டு போகுதாம். மூச்சு இருந்தாத்தானே 'நடந்ததை' எழுதமுடியும்? வேண்டாத ரிஸ்க் வேணாம்.....
ராமதாஸு
பனி மூட்டமா? மசமசன்னு நிக்கிறாரே புத்தர்!
தியாகையர்
ஏரிக்கரைச் சாலையில் ஒரு ரவுண்டு போனோம். மெரினாவுக்கும் இதுக்கும் ஒத்துமை நிறைய. சிலைகளான சிலைகள். 33 இருக்காம். சாம்பிளுக்காக இதோ ரெண்டு. 'சீதைக்கு மடிமேல் இடம் கொடுத்த ஸ்ரீராமன், லக்ஷ்மணனோடு இருக்கும் தியாகைய்யர், பக்த ராமதாஸ் (பித்தன் வாக்கு, கவனிக்கவும்) விவேகானந்தர் இப்படி சிலரைப் புடிச்சுக்கிட்டு லும்பினி பார்க் வழியாப் போனப்ப..... 'லேபாக்ஷி' னு கண்ணுலே பட்டது. கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சி & விற்பனை. வாசலில் டெர்ரக்கோட்டா பொருட்கள் குவிஞ்சு கிடக்கு. ஒன்னொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. நானும் (கெமெரா கண்ணில்) அள்ளிக்கிட்டேன்.
கத்வால் புடவையாம். புடவையை விட அதைச் சுருட்டி வச்சுருக்கும் விதம்? பரோட்டாவுக்கு மாவை நீளமா உருட்டுவோம் பாருங்க. அதைப்போல அந்த ஆறுகஜத்தையும் உருட்டி, பாம்பாட்டம் வச்சுருக்காங்க. அஞ்சடி நீளப் பாம்பு!
போச்சம்பள்ளி, வெங்கடகிரி இப்படி எல்லா ஊர்ப் புடவைகளும் தனித்தனி ஸ்டால்களில். பாவம்........ஆண்கள்ன்னு ஒரு கதர் ஷர்ட்(ரெடிமேட்) ஸ்டால். சின்னதாக் கொஞ்சமா ஒரு ஷாப்பிங் நமக்கு. விலை கொஞ்சம் மலிவ்வாத்தான் இருக்கு நம்ம சென்னையைவிட. அதுக்காக..... வாரிக்கிட்டு வரமுடியுதா என்ன?
தென்றலோடு போகும் வழியில் அங்கே ஹைதையில் இருக்கும் ஏராளமான மேம்பாலங்கள் ஒன்றின் சமீபம் அழகான கோவில் ஒன்னு கண்ணில் பட்டது. நவீனிடம் சொல்லி அங்கே போனோம். கோபுரவாசலுக்கு நேர் எதிரா பிள்ளையார். அவருக்கு இடப்பக்கம் தனிச்சந்நிதியா ரெண்டு மனைவிகளுடன் முருகன், அவருக்கு இடப்பக்கம் உமா மகேஸ்வரன்(லிங்க ரூபம்) அடுத்த சந்நிதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இப்படி தனித்தனியா ஒவ்வொன்னும் ஒரே திசையைப் பார்த்து! சிவலிங்கத்துக்கு எதிர்ப்புறம் பெருசா ஒரு நந்தி. அதுக்குப் பின்னால் ஒரு கொடி மரம். அதுகுப் பின்னால் தெற்கே பார்த்தமாதிரி ஒரு ஹனுமன். அஞ்சு அடி இருக்கலாம். சிவந்த மூக்குடன் சேவை சாதிக்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் நவகிரக சந்நிதி.
எல்லா சந்நிதிகளிலும் ஒவ்வொரு குருக்கள் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தமும் சடாரியும் தர்றாங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு. பெருமாள் கோவிலுக்கே உரிய இந்தச் சடங்குகள் இங்கே..... எப்படி? அதிலும் நவகிரக சந்நிதிக்கும் தீர்த்தமும் சடாரியுமுன்னா...... பேஷ் பேஷ்!
கொடிமரத்தின் பக்கத்தில் கொஞ்சநேரம் உக்கார்ந்தோம். கண் எதிரில் ஒரு அறிவிப்பு எழுதி வச்சுருக்கு. இடது பக்கம் முக்கால்வாசி தெலுங்கிலும் வலப்பக்கம் ஆங்கிலத்திலும். கண்ணால் மேய்ஞ்சேன். ஒரே ஜிலேபி. ஊஹூம்..... வேலைக்காகாது. ******* ரூபாய் மட்டும் புரியுது. ஆங்கிலத்தில் அதே விஷயம். அப்பாடா..... இந்த ஆறு சந்நிதிக்கும் மேலே இருக்கும் கோபுரங்களுக்குத் தங்கக் கவசம் போர்த்தணுமாம். ******* செலவாகும். இதுக்குக் கொடுக்கறவங்க கொடுங்க.
ஆமாம்....இந்தக் கோவிலுக்குப் பெயர் என்ன? அறிவிப்பின் தலைப்பிலே ஜிலேபி. எழுத்துக்கூட்டிப் படிக்க 'முயற்சி' செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஸ்ரீ தெரியுது. பாக்கி? படிக்கத் தெரியாததுக்கு வாழ்க்கையில் முதல்முறையா நொந்துக்கிட்டு, மறுபடி வீட்டில் இருக்கும் ஃபைல்களில் கவனம் செலுத்தணுமுன்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டேன்.
அப்பப் பார்த்து ஒரு பெண்மணி கொடிக்கம்பம் அருகில் வந்து நிக்கறாங்க. ஒரே நொடி.. மானம் அவமானம் பார்த்தா வேலைக்காகாது......
" ஏமண்டி.... நா(க்)கு ச்சதுவேதானிகி (அந்தகா) ராது. அக்கட ஏமி ராஸியுந்தி?"
என்னை ஏற இறங்க (இரக்கமா ) ஒரு பார்வை பார்த்துட்டு 'ஸ்ரீ ஸ்ரிங்கேரி ஷாரதா பீடம் ஸ்ரீ சித்திவிநாயகா தேவஸ்தானம்'.
ஆஹா......
ரெண்டு எட்டு எடுத்து உள்ளே போனவங்க மறுபடி எங்ககிட்டே வந்தாங்க. அப்பத்தான் முகத்தைக் கவனிக்கிறேன். மனசு முழுசும் சந்தோஷம் பொங்கித் தளும்பி முகத்தில் வந்து நிக்குது. அச்சச்சோ.... எனக்குப் படிக்கத் தெரியலைன்னா அதுக்கு இவ்வளோ சந்தோஷப்படுவானேன்?
(பதிவர் நலம் கருதி நடந்த உரையாடலைத் தமிழில் கொடுத்துருக்கேன்)
எங்கே இருந்து வந்துருக்கீங்க? இங்கே சொந்தக்காரர்கள் இருக்காங்களா?
சென்னையில் இருந்து. (பதிவர் குடும்பத்தைப் பத்தி என்னன்னு விளக்குவது?) முதல்முறையா இங்கே வந்துருக்கோம்.
இந்தக் கோயிலைப் பார்க்கவா?
ஊரைச் சுத்திப் பார்க்கலாமுன்னுதான்.
எங்கே தங்கி இருக்கீங்க?
ஹொட்டேலில்தான்.
என்னென்ன பார்த்தீங்க?
அட ராமா..... சார்மினார் கோல்கொண்டா, ம்யூஸியம் எல்லாம் ஆச்சு.
எனக்கு ரெண்டு பசங்க. உங்களுக்கு?
ஒரு பொண்ணு.
ரெண்டு பையன்களில் பெரியவன், அவுங்க அப்பாகூடவே இங்கே பிஸினஸ் பார்த்துக்கறான். ரெண்டாவது பையன் அமெரிக்காவிலே. நாளன்னைக்கு வரான். இப்பதான் கொஞ்ச நேரமுன்னே ஃபோன் செஞ்சு சொன்னான்.
ஆஹா.... அப்படிப்போகுதா சேதி..... மகன் வரும் நல்ல சேதியைப் பகிர்ந்துக்கச் சாமியைத்தேடி வந்துருக்காங்க!
இன்னிக்கு 'ஆண்டியையும் அங்கிளையும்' இங்கே பார்க்கணுமுன்னே அந்த ஆண்டவன் என்னைக் கோவிலுக்கு வரவழைச்சுருக்கான், பாருங்க ஆண்ட்டி.'
தாயாரும் பெருமாளுமா வந்துட்டோம் போல! உங்க பெயர் என்னங்க?
புண்ணீயவதி.
ஆஹா....ரொம்பப் புண்ணியம் பண்ணவங்கதான். என் பெயர் துளசி.
நான் தினமும் துளசி பூஜை பண்ணுவேன் 'ஆண்ட்டி'.
அந்தப் புண்ணியம்தான் துளசியை நேரில் பார்த்துட்டீங்க. சாமிக்கு ஒரு எக்ஸ்ட்ரா நமஸ்காரம் பண்ணிக்குங்க. அப்புறம் பார்க்கலாம். வரட்டா?
இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் இருந்துருந்தா வீட்டுக்கேக் கூப்புட்டுட்டு போயிருப்பாங்க போல. முன்பின் அறிமுகம் இல்லாத ஆட்களிடம் எப்படி ரெண்டே நிமிசத்தில் குடும்ப விஷயம் எல்லாம் பகிர்ந்துக்கத் தோணுது? ஒருவேளை...வெளியூர்க்காரரா இருப்பதே ஒரு இணக்கத்தைத் தந்து அணுக வைக்குதோ?
மனிதமனமே விசித்திரங்கள் நிறைஞ்சது. சிலரைப் பார்த்தவுடனே மனசுக்கு வெறுப்பும், சிலரிடம் அன்பும், சிலரிடம் மரியாதையுமா என்னென்னவோ தோணிப்போகுது. இத்தனைக்கும் அவுங்களை நம்ம வாழ்வில் முதல்முறையாச் சந்திச்சு இருப்போம்!
அறைக்கு வந்து மூட்டை கட்டும் சமாச்சாரங்களை முடிச்சுட்டு காலையில் எழுப்பறதுக்கு ஒரு அலார்ம் கால் புக் பண்ணினோம். க்வாட்டர் டு ஸிக்ஸ்.
அஞ்சே முக்கால்ன்னும் ஒருதடவை அழுத்திச் சொல்லியாச்சு.
ஒம்பொது நாற்பதுக்கு ப்ளைட்.அப்படியே பின்னாலே கணக்குப் போட்டுக்கிட்டே போனால் ஏழரைக்குக் கிளம்புனாச் சரியா இருக்கும்................
(ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?)
தொடரும்....:-)
Saturday, November 21, 2009
வாங்கலாம்.... வாங்களேன்
Posted by துளசி கோபால் at 11/21/2009 05:33:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
//இந்த ஏரியில் இருந்து அடிக்கடி மூக்கைப் பொத்திக்கும் மணம் ஒன்னு வீசுது. நாம் போன நாட்களில் இது...... ஐயோ.... படகு ஒன்னு புத்தர் காலடி வரை கொண்டு போகுதாம். மூச்சு இருந்தாத்தானே 'நடந்ததை' எழுதமுடியும்? வேண்டாத ரிஸ்க் வேணாம்.....//
அந்த ஊரில் கடல் கிடையாது, அனைத்தும் சங்கமம் அந்த ஏரியில் தான். அந்த புத்தர் கொண்டு செல்லும் முன் ஏரித்தண்ணீரில் ஒருமுறை விழுந்து விட்டாராம்.
//(ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?)//
காருக்குள்ளே இருந்து புகைப்படம் எடுத்தால் இப்படித்தான்
வாங்க கோவியாரே.
துர்நாற்றம் பொறுக்க முடியாம புத்தர் மயங்கி விழுந்தாருன்னு ஊரார் சொல்லக்கேள்வி!!!
நவீன் ஓட்டும் வேகத்துக்கு காலும் வாலுமாவது கிடைச்சதேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டேன்:-)
தெய்வமே..!
நம்ம துளசி டீச்சர் வர வர எனக்குப் போட்டியா நீட்டமா எழுதிட்டு வராங்க..! அதை அப்படியே பாலோ பண்ண வைச்சிரு..
நான் தப்பிச்சிருவேன்..!
கதை சொல்லும் கதை சூப்பர் டீச்சர். சுவாரசியமாக இருக்கிறது.
போட்டோவெல்லாம் கலர்புல்லா இருக்கு...அதுவும் வளையல் போட்டோ...சூப்பர்.
(((நாம் சிலுப்பும் சிலுப்புக்குன்னு ஒரு மோர் மத்து வாங்கினேன். கடைஞ்சுறமாட்டேனா இனி:-))))
இதை படிச்சுட்டு கற்பனையும் பண்ணி சிரிச்சு வயித்தவலி வந்திருச்சு.
பாவம் புத்தர்.
பவள மாலை கண்ணை பறிக்குது.
ஹைதையில் பரபரப்பே இல்லாம ஒரு 'ஸப் ச்சல்த்தா ஹை'ன்னு கொஞ்சம் சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை போல! //
ஹைதரபாத் லைஃப்ஸ்டைல ”பிந்தாஸ்”னு சொல்லலாம். வெயில் காலத்துல் வெயில் அதிகம் அதனால லேட்டாத்தான் கடை தொறப்பாங்க, குளிர் காலத்துல சூரியனைக் கண்டாதான் கடை தொறப்பு இப்படி பழகி பழகி பின் தூங்கி, பின் எழும் பழக்கத்துக்கு ஹைதரபாத் ஆகிடுச்சு.
ஹைதரபாத் நித்தர லேச்சேதி தாமசங்கா :))
காலங்காத்தால கடைக்கு போனோமா வந்தோமான்னு கிடையாது. 11 மணிக்கு மேலே தான் “மால்”களே திறப்பாங்க. :))) பெங்களூர்லயும் இதே கதைதான்.
ஒருமுறை விழுந்து விட்டாராம்.//
அட நீங்க வேற, இந்த நாத்தத்துல என்னிய ஏண்டா நிக்க வைக்கறீங்கன்னு 3 தடவை விழுந்திட்டாரு பாவம்.
ஏரியை சுத்தின ஏரியாக்களில் “சுகந்தச்ச மனோகரம்” தான் :))
அந்த ச்ருங்கேரி மடத்துக்கு உரிய கோவிலில் ஒவ்வொரு பொளர்ணமியும் சண்டி ஹோமம் ரொம்ப சிறப்பா செய்வாங்க.
வந்திருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு அங்கே தான். ரொம்ப ருசியாவும் இருக்கும். (முக்கியமா புளிஹோரை(புளியோதரைதான்) )
ஹைதைக்கு வருபவர்கள் ஏப்ரல், மே தவிர எப்போது வந்தாலும் நல்லா எஞ்சாய் செய்யலாம். (ஏப்ரல்,மேயில் வெயில் 44 டிகிரி தாண்டும்)
//(ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?)//
Teacherukkey adangalena eppadi, ummm... :-))
ரீச்சர்
ஸ்ரீருங்கேரி சாரதா கோயில்கள் பெரும்பாலும் அதே மாதிரிதான் இருக்கும்.
ராஜராஜேஸ்வரின்னு சொன்னது கொஞ்சம் உதைக்குது. பெரும்பாலும் மூணு சந்நதியாவது இருக்கும். பிள்ளையார், சாரதா, சிவலிங்கம். சில இடங்களில் முருகன், நவக்கிரகம் எல்லாம் இருப்பதுண்டு.
இங்க நம்ம வீட்டில் இருந்து ஒரு ஒன்றரை மணி நேரம் வண்டியோட்டிக்கொண்டு போனால் மலை மேல் கோயில் இருக்கிறது. சுத்தம் கண்ணைப் பறிக்கும்.
சென்னையில் திநகரில் உள்ளது. அடுத்த ட்ரிப் ஸ்ரீருங்கேரிக்கு வண்டியை விடுங்க. சூப்பர் இடம்.
வளையல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.துளசி இத்தனை அழகா வரிசையாக் கலை நயத்தொட அடுக்கி வச்சு இருக்காங்களே.
வளையலுக்குன்னு ஒரு புகைப்படப் பதிவு போடுங்கப்பா.
அந்த அம்மாவுக்கு ரெண்டு வளர்ந்த பிள்ளைங்க.
அப்புறம் உங்களை ஏன் ஆண்டின்னு கூப்பிடணும்:)
அந்த ராமரும் சீதையும் அழகத்தான் இருக்காங்க. பாவம் அந்த நாற்றத்தில் இருக்க வேண்டாம்.
தென்றலோட பிள்ளைங்க செய்த ஸ்னாக்ஸ் அற்புதமா இருக்கே. வாழ்த்துகள்பா. தென்றல்.
ஹைதை புகைப்படத் தொகுப்பு பதிவாப் போடுங்கப்பா. அதாவது வளையல்,புடவை கடை மட்டும்.:)
\\எனக்குன்னு வாங்கிக்கலை. கண்ணாடி வளையல்கள் ஆசை மனசை விட்டுப்போய் பல வருஷங்கள் ஆகியிருந்துச்சு.( \\
ஆகா...டீச்சர் இதுல ஏதே ஒரு உள்குத்து செய்தி கோபால் சாருக்கு சொல்வது போல இருக்கு ;)))
\\மனசு முழுசும் சந்தோஷம் பொங்கித் தளும்பி முகத்தில் வந்து நிக்குது\\
இதான் விஷயம்..அதான் உடனே சொல்லிட்டிங்க எல்லாத்தையும் ;))
குட்டிவவ்வால் எங்க ஊருலயும் இருக்குது.. சில சமயம் பச்சைக்கலராவும் இருக்கும்..பேரு கேட்டதே இல்லை.
ஹைதை சுற்றிப் பார்த்துவிட்டோம்.
தென்றல்.
ஹைதை புகைப்படத் தொகுப்பு பதிவாப் போடுங்கப்பா. அதாவது வளையல்,புடவை கடை மட்டும்.//
புடவை வெங்கடகிரி, மங்களகிரி, காட்வால், என நிறைய்ய வெரைட்டி இருக்கு. படம் பிடிச்சு போடுவது கஷ்டம். வளையல்கல் துளசி மேடமே போட்டுட்டாங்க. நீங்க ஹைதைவாங்க பர்ச்சேஸுக்கு மட்டும் 3 நாள் வெச்சுக்குவோம். அப்ப போடலாம் பதிவு.
என்னங்க டீச்சர் நீங்க, நான் அந்த ஏரிக்கரையில் ஜஸ்கீரீம் சாப்பிட்டு, படகில் சும்மா ஜல்சா டான்ஸ் பார்த்து ஒரு மூனு மணி நேரம் சுத்தி வந்தேன், நீங்க நாறுதுன்னுட்டு வந்துட்டிங்க. நைசா நாறுதுன்னு சொல்லி கோபால் சாருக்கு படகு டான்ஸ் காட்டாம வந்துட்டிங்கன்னு சொல்லுங்க.
அப்புறம் ராமதாசரையும், இரிகோ பத்ராத்தே அரிகோ சூடண்டின்னு ராமரையும் காட்டினதுக்கு நன்றி. முடிந்தால் பத்தராச்சலம் போய் வாருங்கள். சின்ன மலைதான். அற்புதமான இராமரை மிஸ் பண்ணி விடாதீர்கள். போய் விட்டு இருட்டுவதுக்குள் திரும்பி விடுங்கள்.
இன்னும் ஊறுகாய் வாங்க வில்லையா?
அந்த ஏரியின் கரையில் ஒரு கண்ணாடி பாருடன் கூடிய ஓட்டல் ஒன்னு இருக்கும். அது முழுக்க கண்ணாடியால் செய்யப்பட்டது. பார்க்கவும். நன்றி.
beautiful..!
//(ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?)//
=))
வண்ண வளையல்களை நானும் படம் பிடித்திருக்கிறேன் அதே சார்மினார் அருகில்.... :)
வாங்க உண்மைத்தமிழன்.
நீங்க(ளே) கொஞ்சம் குறுகியதுக்கு இன்னிக்கு எவ்வளோ பாராட்டுகள் வந்துச்சுன்னு கவனிச்சீங்களா?
எல்லாப் புகழும் அந்த எழுத்துக்கே!!!
இப்படித்தான் அந்த புராணங்கள் எல்லாமே அந்தக் காலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே குறிப்பிடுவது என் கடமை என்று நம்புகின்றேன்!!1 (அப்பாடா...)
வாங்க சிந்து..
பவளம் 'உண்மையா'ன்னு இன்னும் லேசா ஒரு ஐயம் இருக்கத்தான் செய்யுது.
வாங்க புதுகைத் தென்றல்.
என்னப்பா பிந்தாஸ்ன்னு சொல்லிக்கிட்டே...பிஞ்சுகளுக்குப் பள்ளிக்கூடம் ஏழரைக்கு வச்சால் எப்படிப்பா?
என்ன....மூணுமுறை வுழுந்துட்டாரா(-:
பௌர்ணமி எப்ப வருதுன்னு பார்க்கவே பஞ்சாங்கம் வாங்கித்தான் ஆகணும்போல இருக்கே.
தேங்ஸ் ஃபார் தெ இன்ஃபோ.
இன்பரமேசன் ஈஸ் வெல்த்:-)
சென்னைமக்களுக்கு எல்லாமே ஒரே எஞ்சாய்மெண்ட்தான். 44 எல்லாம் ஜூஜுபி இங்கத்து 45க்கு:-)))
வாங்க நன்மனம்.
அடங்காப்பிடாரிக்குன்னே நாலு காலில் தங்கக் கொலுசு. கவனிச்சீங்களா?:-)
வாங்க கொத்ஸ்.
என்ன கனகாலமா ஆளைக் காணோம்?
தி.நகர் சாரதாபீடம் கோவிலுக்குப் போயிருக்கேன் சிலமுறை. அதுவும் டிடிடி தேவஸ்தானக் கோவில் கூட்டத்தில் சிக்கி.... இங்கே போனா அப்பான்னு..... நிம்மதியா இருக்கும்.
ஸ்ருங்கேரிக்குப் போகும் ஐடியாவும் இருக்கு. பார்க்கலாம். எப்ப வாய்க்குதுன்னு!
வாங்க வல்லி.
அக்கான்னதுக்கே புதுகையின் பதிவு பார்த்தீங்க. இப்ப ஆண்ட்டீன்னதுக்கு நான் ஒன்னு எழுதணும் போல இருக்கே:-)))))
போட்டும்.... அந்தவரைக்கும் பாட்டின்னு சொல்லாதது நம் 'முக'விலாசமே!!!!
வாங்க கோபி.
நீர் ஒருத்தர்தான் 'கண்டு' பிடிச்சீங்க.
க்ரேஸ் மார்க் 15
கையோடு இருக்கும் வளையல்களைக் கழட்டவே முடியாத நிலை. கோபாலுக்கு அது ஒரு எக்ஸ்ட்ரா கவலை, 'அப்ப' கையை வெட்டி எடுக்கணுமா? இல்லை வளையலை மட்டும் வெட்டலாமான்னு!
வளையலை வெட்டுனா....திரும்பப் பத்தவைக்க வீண்செலவு வேற ஆகுமேன்னு......
கோபி,
நல்லா கவனிக்கலையா?
க்ரேஸ் மார்க்கில் அஞ்சு குறைச்சுக்கணும்.
சந்தோஷம் பொங்குனது அவுங்களுக்குத்தான்:-)))))
.பிஞ்சுகளுக்குப் பள்ளிக்கூடம் ஏழரைக்கு வச்சால் எப்படிப்பா?//
ஏழரைக்கு பள்ளில் இல்ல 8 மணிக்குத்தான். வீட்டிலிருந்து 7.15க்கு கிளம்பிடுவாங்க பசங்க. வருவதும் சீக்கிரம் என்பதால் பிரச்சனையாத் தெரியலை. மத்த பள்ளிகள் 8.45க்கு துவங்கி 4.30க்குத்தான் விடறாங்க,
பிள்ளைகள் படிக்கும் பள்ளி, டெல்லி பப்ளிக் என சில பள்ளிகள் சீக்கிரமே வெச்சு, சீக்கிரமே விடறது.
சீக்கிரம் துயிலெழப் பயிற்ச் கிடைக்குதுல்ல. :))
சென்னைமக்களுக்கு எல்லாமே ஒரே எஞ்சாய்மெண்ட்தான். 44 எல்லாம் ஜூஜுபி இங்கத்து 45க்கு:-)))//
நான் ஒண்ணும் சொல்லலை. :))
அக்கான்னதுக்கே புதுகையின் பதிவு பார்த்தீங்க. இப்ப ஆண்ட்டீன்னதுக்கு நான் ஒன்னு எழுதணும் போல இருக்கே//
ஆஹா :)))
அம்மா,
நீங்க இன்னும் ஹைதராபாத்ல தான் இருக்கீங்களா?
முத்து வாங்க லால் பங்களா பக்கத்தில இருக்கிற Siddhi Jewellers பாருங்க.
என் நண்பர் அங்கு தான் பல வருடமாக வாங்குகிறார்.
நானும் அங்கு வாங்கி இருக்கிறேன்.
வாங்க கயலு..
பச்சையை அடுத்தமுறை பார்க்கும்போது பெயரைக் கேட்டுச் சொல்லுங்க.
வாங்க மாதேவி..
ஆஹா...... பில்லை அனுப்பி வைக்கட்டுமா? அதிகம் வேணாம். ஒரு 20% போதும்:-)
வாங்க பித்தனின் வாக்கு.
இந்தியாவில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமான இருக்கு. இதுவரை 1 சதமானம் பார்த்திருப்பேனா என்ரது கூட சந்தேகம்தான்.
நோ ஊறுகாய்! அதி'காரம்' கூடாது:-)
வாங்க கலகலப்ரியா.
சிரிப்புதேன்:-)
வாங்க வெயிலான்.
வளைகள் அப்படியே வளைச்சுருக்குமே!
ஆணின் பார்வையில் வளைன்னு எழுதுங்க:-)
புதுகைத் தென்றல்,
சீக்கிரம் துயில் குடும்பம் முச்சூடும் எழுந்திரிக்கணுமேப்பா!
ஒன்னும் சொல்லாதீங்க. சிங்காரச்சென்னையில் ஒரே ஒரு காலம்தான். அதுக்குக் கோடைன்னு பெயராம். நவம்பர் டிசம்பரில் இளங்கோடை.
வாங்க ராஜ்குமார்.
கணக்காச் சொன்னா 72 மணி நேரம்தான் இருந்தேன்.
சித்திக்குப் போக முக்தி கிடைக்கலை.அதனால் முத்தும் கிடைக்கலை(-:
சீக்கிரம் துயில் குடும்பம் முச்சூடும் எழுந்திரிக்கணுமேப்பா!//
ஆமாம்.
சிங்காரச்சென்னையில் ஒரே ஒரு காலம்தான். அதுக்குக் கோடைன்னு பெயராம். நவம்பர் டிசம்பரில் இளங்கோடை.//
:))) ரசிச்சேன். கோடை, கடுங்கோடை, இளங்கோடை மட்டும் தான் சீசன். இதுல மார்கழி மாசம் குளிருதுன்னு ஸ்வெட்டர் போட்டுக்குவாங்க பாருங்க அது செம காமெடி.
புதுகைத்தென்றலே,
மார்கழி மாசம் விஷப்பனியாம். அதுலே போய் மொட்டை மாடியில் சட்டையில்லாம நிக்கறார் கோபாலுன்னு மாமி ஒரே புலம்பல் ஒரு காலத்தில்.
(மாமி இப்போ இல்லை போயாச்சு)
துளசி மேடம் என்ன டூர் எல்லா முடிஞ்சுதா? நல்ல அருமையான விளக்கத்தோட படிக்கும் போது மேலும் மேலும் படிக்க தோன்றுகிறது.
தி.நகர் ச்ருங்கேரி மடம் பக்கம் தான் இருந்தேன். தி நகர் வெங்கடேஸ்வரா கோவில் பக்கம் தான் இருந்தேன். அதை எல்லாம் மிஸ் பன்றேன்.
வாங்க விஜிக்ரியேஷனஸ்.
(தமிழ்ப்பெயர் இல்லாததால் உங்களுக்கு வரி விலக்கில்லை! )
ஹைதை டூர் முடிஞ்சு அஞ்சாறு வாரம் ஆகிருச்சு!
சென்னைன்னதும் நல்லதும் கெட்டதுமா நிறைய மனசுலே வராம இருக்குமா? :))))
Post a Comment