Monday, November 16, 2009

ச்சால பாகுந்தி :-)

'பாட்டி' சொல்லிட்டுப் போயிருக்காங்க. 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று. செஞ்சுருவோம். நோ ஒர்ரீஸ் பாட்டி.

கொஞ்சம் எரிச்சலோடுதான் காலை உணவுக்குப் போனேன். (அறை வாடகையில் ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே சேர்க்கப்பட்டுருக்கு) காலையில் பாத்ரூம் குழாயில் வெந்நீர் வரலை. பச்சைத் தண்ணீரில் ஒரு அவசரக்குளியல் போட்டேன். பள்ளிக்கூட ஹாஸ்டல் நினைவுக்கு வந்துச்சு. பல்லைக் கடிச்சுக்கிட்டு முதுகைச் 'சட்'னு காமிக்கணும். யாருக்கு? அய்ய.... அந்தக் குழாய்த் தண்ணீருக்குத்தான். அதே டெக்னிக் இங்கே இத்தனை வருசத்துக்குப் பிறகு! எப்படி நினைவு இருந்துச்சுன்னே தெரியலை. எடு ஃபோனை! ஹவுஸ் கீப்பிங் உடனே ரெண்டு வாளித் தண்ணீர் அனுப்புது. பாய்லர் ரிப்பேராம். போச்சுரா.........

குளிர் காலமுன்னு இங்கே ஹொட்டேல் நீச்சல் குளத்தைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருப்பதை நேத்து அறைக்கு வந்ததுமே கவனிச்சேன். பம்ப் செஞ்சு அழுக்காக் கிடக்கும் தண்ணீரை நிமிஷமா வெளியேத்தாம நாலு ஆளை வச்சு வேலை நடக்குது. அநேகமா இன்னும் ஆறேழு மாசத்துலே முடிஞ்சுரும். அரை அரை பக்கெட்டா எடுத்து மொட்டை மாடியில் கொட்டிக்கிட்டு இருந்தாங்க. இளவெயிலில் குளிர்காயும் புறாக்கள் ஒரு கட்டிடக்கூரையில்.


"ஏங்க, லிஸ்ட் எடுத்துக்கிட்டீங்களா? "

'தோ.......'ன்னு சட்டைப் பையைக் காமிச்சார்.

ஒம்போது மணிக்கு வண்டிச் சொல்லி இருக்கு. ட்ரைவர் நவீன் சரியான நேரத்துக்குப் பத்து நிமிசம் பிந்தி வந்துட்டார்.

முதல்லே பிர்லா மந்திர். ரெண்டாயிரம் சலவைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டதுன்னு குறிப்பு வாசிச்சேன் நம்ம அறையில் இருந்த டூரிஸ்ட் இன்ஃபோ நோட்புக்கில். அங்கே போய்ப் பார்த்தால் ராட்சஸ சைஸில் இருக்கும் பெரிய சலவைக்கல் மலைகள் ரெண்டாயிரத்தைப் பயன்படுத்தி இருக்காங்கன்னு புரிஞ்சது! அப்படி இழைச்சு வச்சுருக்கு! 'சுற்றுச்சுவர் அலங்கார வளைவு அபூர்வமா இருக்கே'ன்னு கோபால் சொன்னார். 'ம்ம்ம்ம்ம்ம்ம் மயிலைக் கச்சேரி ரோடில் இருக்கும் ஜெயின் கோவிலை ஒருதடவை 'ஏறெடுத்துப் பார்த்துட்டு' அப்புறமாச் சொல்லுங்கோ'ன்னேன்.

ஏற்கெனவே அங்கே இருந்த கருங்கல் குன்றின் மேலே கட்டப்பட்டக் கோவில். முப்பத்திமூணு வருசப் புதுசு! மொத்தம் 13 ஏக்கர் நிலப்பரப்பு. கட்டிமுடிக்கப் பத்துவருசங்கள் ஆகியிருக்கு. கார் மேலே போக நல்ல பாதையும் இருப்பதால் சிரமம் இல்லாமப் போக முடியுது.

கெமெரா, செல்ஃபோன் அனுமதி இல்லை. அங்கே ஒரு கட்டிடம் செருப்புக்கும் இதுகளுக்குமுன்னு இருக்கு. கொடுத்துட்டு டோக்கன் வாங்கிக்கணும். வெளியே சின்னதா ஒரு குட்டி மண்டபத்தில் பெரிய திருவடி, உசரமா, ஒல்லியா நிற்கிறார். அவருக்கு அட்டெண்டென்ஸ் கொடுத்துட்டு இடப்பக்கமா இருக்கும் பாதையில் ஏறுனால் புள்ளையார். படமா இருக்கார். அவருக்குப் பின்னால் ஒரு சின்னக் கல் இருக்கோ? நாலெட்டில் பூச்செடிகளுக்கு நடுவில் ஒரு ஷேர்வாலி. சிங்கத்துடன் கம்பீரமா அம்பாள்! கொஞ்சதூர வளைவில் ஹனுமான். அவரைக் கடந்தால் படிகள் ஆரம்பிக்குது. "செல்ஃபோன் உந்தா?" "லேது "ன்னு ஒரு தலை ஆட்டல். ஆண் பெண் காவலர்கள். பாதுகாப்புக் காரணங்களால் இந்த எலெக்ட்ரானிக் கேட் எங்கே பார்த்தாலும் வந்துருக்கு.

ரொம்ப நாளாப் பேசாம இருக்கும் மொழியைக் கூர் தீட்டிக்கலாமுன்னு நினைச்சால்...... வாயைத் திறந்தால் ஹிந்திதான் வருது. தப்பித்தவறி வரும் தெலுங்கு , வாளிக்கு அர்தம் காலேது(-: சல் ஜாயேகா. கோயி பாத் நஹீ

புகைமூட்டத்தில் தெரியும் நகரைப் பார்த்துக்கிட்டே மேலே போனோம். அஞ்சு நிலையில் அழகான ராஜ கோபுரம். தென்னிந்திய ஸ்டைல். ஒரு பக்கம் பிள்ளையார், இன்னொரு பக்கம் நரசிம்ஹர்ன்னு ஜொலிக்குது. கோபுரவாசலில் ஒரு அறிவிப்பு, 'அனைவருக்கும் அனுமதி'ன்னு.

நுழைஞ்சதும் கண் எதிரே கீதா உபதேசம், சுவர் முழுக்கப் பெரிய அளவில். இடதுபக்கம் இன்னும் சில படிகள். மேலே ஏறும்போதே வலப்பக்கம் இருக்கும் சுவரில் ரெண்டு வரிசையா ராமாயணக் காட்சிகள். மேல்தளம் போனதும் கொடிமரம், பெரிய திருவடியின் சின்னச் சந்நிதி. எதிரில் இன்னும் சில படிகள். ரெண்டு பக்கமும் ரொம்பவே அழகா நம்ம ஆள், அம்சமான தந்தங்களுடன். தடவிப் பார்த்தால் மழமழன்னு ஆசையா இருக்கு.

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் நம்ம வெங்கி. தீபாராதனை எல்லாம் முடிஞ்சுருச்சு போல. தீர்த்தம்(மட்டும்) கிடைச்சது. கருவறைக்கு மேலே இருக்கும் கோபுரம் வட இந்தியப் பாணியில் (பூரி ஜகன்னாதர் கோவில் கோபுரம் போல). .மேற்கூரையின் உள்பக்கம் அலங்கார வேலைகள். கோவிலைச் சுற்றி வரும்போது தாயாரைச் சேவிச்சுக்கிட்டு கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள தசாவதாரச் சிற்பங்களையும், அப்படியே தலையை இடப்புறம் திருப்பினால் சல்லாத்துணியைப் போர்த்திக்கிட்டு இருக்கும் நகரத்தையும் பார்த்துக்கலாம் படி இறங்கிக் கீழ்தளம் வரும்போதும் ராமாயணக் காட்சிகள். சீதை அக்னிப் பிரவேசம் செய்யறதைப் பார்த்தால் வயிற்றைப் பிசையுது. (காலங்காலமாய், பெண்களின் பரிசுத்தத்தை(??) நிரூபிக்க (!) என்னென்ன வழிகள் எல்லாம் கண்டுபிடிச்சு வச்சுருக்காங்க பாருங்க. மனசை யாரும் சட்டைபண்ணலை. எல்லாமே உடம்புதானோ.....(-:
அடுத்ததாக உள்ள காட்சி பட்டாபிஷேகம். (எப்படித்தான் மறுபடி ராமனுடன் சிம்ஹாசனத்தில் உக்கார மனம் வந்துச்சோ? என்னதான் ஊர் உலகத்துக்குன்னு சொன்னாலும்........ புதுப் பொண்ணா என்ன? கிட்டத்தட்ட இருபது வருசம் (கணக்கு சரியா?) ஒன்னா இருந்தவங்கதானே? கொண்டவனே நம்பலைன்னா, மத்தவங்க நம்புனா என்ன நம்பாட்டா என்ன? )

கீழே வரும்வழியில்தான் பிர்லா ப்ளானட்டோரியம் இருக்கு. போகணுமான்னு கேட்ட நவீனுக்கு வேணாமுன்னேன். பகலிலே சந்திரனைப் பார்க்க வேணாம். சோம்பல் முறிச்சுக் கண்திறக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும் கடைத்தெருக்களைக் கடந்தோம். மூசி நதியைத் தாண்டி சாலார்ஜங் ம்யூசியம் போய்ச் சேர்ந்தோம். நதியின் பாலம் கடக்குமிடத்தில் இருந்து பார்த்தால் ரொம்ப அழகான கட்டிடம் ஒன்னு கண்ணில் பட்டது. உயர்நீதி மன்றமாம். நகரத்தில் இருக்கும் முகமதிய கலை & கலாச்சாரத்துக்கு இசைவாகக் கட்டி இருக்காங்க. கண்ணில் உறுத்தாமல் ஒன்னோடொன்னா இருக்கு.

கெமெராக்களுக்கு அனுமதி இல்லை. தனியா லாக்கர் ரூம் இருக்கு. வச்சுட்டுச் சாவியை நம்ம கையோடு கொண்டுபோயிரலாம். பிரதமரா இருந்த ஸாலார் ஜங் அவர்களின் 35 வருசச் சொந்த சேகரிப்பு இந்த கலைப்பொருட்கள் எல்லாம். மனிதருக்கு அபார டேஸ்ட். உலகம் முழுக்க இருந்து கொண்டு வரப்பட்டவை (60 வயசுவரை வாழ்ந்தவர். கலியாணம் பண்ணிக்காமலேயே இருந்துட்டார். கிடைச்சக் காசு முழுசும் இதுக்கே செலவாகி இருக்கும். அப்புறம் மனைவிக்கு என்னத்தை வாங்கிக் கொடுத்துக் காப்பாத்தறதுன்னு நினைச்சுக்கிட்டாரோ என்னவோ! அவர் இறந்தபிறகு அவரோட வேலை ஆட்கள் ஆட்டையைப் போட்டுட்டாங்கன்னு கேள்வி. சேகரிப்புலே பாதி மாயமாகிருச்சாம்). மேலே இருக்கும் படத்தைப் பெருசு பண்ணிப் பார்த்தீங்கன்னா இதனோட சரித்திரம் முழுக்க இருக்கு. சரியாப் பன்னெண்டு மணிக்கு அங்கே கட்டாயம் இருங்கன்னு புதுகைத் தென்றல் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தாங்க.


பள்ளிக்கூடப் பிள்ளைகள் வந்துருந்தாங்க. தண்ணீர் பாட்டிலைத்தவிர உணவுப்பொருள்கள் அனுமதி இல்லை

உள்புறம் பெரிய முற்றத்தில் ஏராளமான நாற்காலிகளைப் போட்டுவச்சுருக்காங்க. வராந்தாவில் ஒரு வேலைப்பாடுகள் உள்ள மேசையில் இருக்கும் கடிகாரம்தான் செண்ட்டர் ஆப் அட்ராக்ஷன். ரெண்டு பக்கமும் CC டிவி ஸ்க்ரீன். கடிகாரத்தின் முகப்பில் மேல் பகுதியில் நடுவில் ஒரு காண்டா மணி ( சர்ச் வாசலில் இதைப்போல இருப்பதைப் பார்த்திருக்கேன்) தொங்கிக்கிட்டு இருக்கு. இடதுபக்கம் சின்னதா ஒரு ஷெட். கதவு ஒருக்களிச்சாப்போல் மூடி இருக்கு. வலப்பக்கம் ஒரு கருமார் (ப்ளாக் ஸ்மித்) சம்மட்டியால் இரும்பை அடிச்சுக்கிட்டே இருக்கார் விநாடிக்கு விநாடி. 19-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் Cooke & Kelvey Company தயாரிப்பு

பனிரெண்டடிக்கப் பத்து நிமிசம் இருக்கும்போது டிவி திரைக்கு உயிர் வந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தால் எல்லா இருக்கைகளும் (சுமார் 250) நிறைஞ்சு வழியுது. எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். பனிரெண்டு. குடிசைக் கதவு திறந்து ஒரு மனிதர் கையில் சுத்தியோடு வெளிப்பட்டார். டண் டண் டண்..... 12 முறை மணியில் ஓங்கி அடிக்கிறார்.அடிச்சு முடிச்சதும் ஒரு எட்டு பின் வாங்கி குடிசைக்குள் போய்க் கதவை இழுத்துச் சாத்திக்கிட்டார். Done :-) அடுத்த நிமிஷம் இருக்கைகள் அத்தனையும் காலி:-)

விதவிதமான கண்ணாடிச் சாமான்கள், கடிகாரங்கள், பளிங்குச் சிலைகள், அந்தக் காலத்து ஆடைகள், கத்தி கப்டா(!) இருக்கைகள் படுக்கை அறை அலங்காரமுன்னு பலதும் இருந்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது சல்லாத்துணியால் தலையை முழுசும் மூடிக்கிட்டு இருக்கும் ரெபேக்கா(ள்) சிலைதான்.Veiled Rebecca மெலிசான அந்தத் துணிக்குள்ளே மூக்கும் முழியுமா அரைக் கண்மூடி நிற்கிறாள். அந்தத் துணியை எப்படித்தான் செதுக்குனாரோ அந்த சிற்பி!!

அதிகமாகப் பேசப்பட்ட இன்னொரு சமாச்சாரம் ரெட்டை முகமுள்ள ஒரு சிலை. கம்பீரமாக தலையை அலட்சியமாச் சாய்ச்சு நிற்கும் மனிதன். (Mephistopheles) அவன் பின்னே முதுப்புறம் தலையைக் குனிஞ்சு நிற்கும் பெண் (Margaretta) ஆஹா.....ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எவ்வளோ நிஜம் பாருங்க!!!! மரத்தில் செதுக்கியவர் இத்தாலி நாட்டுச் சிற்பி பென்ஸோனி ( G.H Benzoni, an Italian sculptor ) இதுவும் 19-ஆம் நூற்றாண்டுச் சிற்பம்தான்.

நகரின் லேண்ட் மார்க் சார்மினார் வந்து சேர்ந்தோம். பாக்ய நகரை நிர்மாணிச்ச அதே சமயம் கட்டப்பட்டது. வயசு 418 தான். அஞ்சு ரூபாய் கட்டணம் உள்ளே போய்ப் பார்க்க. வாங்கிட்டு உள்ளே போனோம். படிகளில் ஏறி முதல்தளம்வரை போகலாம். கால் இருக்கும் இருப்பில் வேணாமுன்னு ஒதுக்கினேன். தரைத்தளம் போதும். நடுவில் அலங்கார செயற்கை நீர் ஊற்று. நாலு பக்கமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மினாராக்கள். நடு உச்சிக் கூம்பு தொடங்கி உள்புறமும் வெளிப்புறமுமா நுண்ணிய வேலைப்பாடுகள்.

சார்மினார் உயரமான ஆர்ச்

உள்ளே தரைத் தளத்தில் ஒரு மூலையில் சின்னதா ஒர் தர்க்கா. அங்கே மயில்பீலிக் கொத்தும் சாம்பிராணியுமா வழிபாடு நடக்குது. வேண்டாத வேலையா இதுக்கு வெளிப்புறம் தெருவைப் பார்த்தமாதிரி ஒரு ஹிந்துக் கோயில் (பாக்யலக்ஷ்மி கோவிலாம்) காவிக் கொடிகளோடு யாரோ(????) உண்டாக்கி(!!!!) வச்சுருக்காங்க (-:


இதுக்கு நாலுபுறமும் நாலு தெருக்கள். முக்கியமான வியாபார ஸ்தலம். வளையல், செருப்பு, துணிமணி, நகைநட்டு, காய்கறி இன்ன பிற. பழைய கடைத்தெருக் கட்டிடங்களுக்கிடையில் கஷ்டப்பட்டு நசுங்கி நுழைஞ்சு நிற்பதுபோல் ஒரு சிவன் கோவில்.
சொல்ல மறந்துட்டேனே..... இங்கே வந்து இறங்குனவுடனே, முத்துமாலைகள் (அசலா இல்லை நக்லியா? க்யா மாலும்? ) விற்பனையாளர்கள், போட்டோ எடுத்து உடனே ( ஒரு மணி நேரத்தில்) ப்ரிண்ட் போட்டுக் கொடுப்பவர்கள்ன்னு ஏராளமா நம்மைச் சூழ்ந்துக்கறாங்க. தப்பிக்கறதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆகிருது. வேணாம். நம்மகிட்டேயே கெமெரா இருக்குன்னதும், "அதுலேயே உங்களை 'ஜோடியா' நிக்கவச்சுப் படம் எடுத்துத் தர்றேன்.பத்து ரூபாதான்!" பத்தா? ஊஹூம். அஞ்சுதான் தருவேன். ஓக்கே.

"இப்படி நில்லு, கையை இங்கே வை, இந்தப் பக்கம் பார், அந்தப் பக்கம் பார். மேலே பார், கீழே பார்" க்ளிக் க்ளிக் க்ளிக். தொலையட்டும் பத்து ரூபாயாக் கொடுத்துடலாம். 'என்ன சார். ஆறு போட்டோ எடுத்துருக்கேன். முப்பது ரூபாய் ஆச்சு சார்.' இதப் பார்றா:-)))))))))))))))) பேரம் இருபதுக்குப் படிஞ்சது!

புதுகைத் தென்றலின் ரங்க்ஸ் போட்ட லிஸ்டை அப்படியே கடைப்பிடிச்சாச்சு இதுவரை. பகல் சாப்பாடு ஆனதும் மத்ததைப் பார்க்கலாமுன்னு அறைக்குத் திரும்புனோம். வரும்வழியிலேயே ohri hyderabad என்ற உணவகத்துக்குப் போனோம். உள்ளே பஃபே லஞ்ச். ஜஸ்டிஃபை பண்ண முடியாதுன்னு முகப்பில் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் செக்ஷனில் உடுப்பி லைட் லஞ்ச் எடுத்துக்கிட்டோம். அதென்னப்பா...இப்படி மிளகாயை அரைச்சு, அரைச்சுப் போட்டுடறாங்க!!!!

அரைமணி நேரம் ஓய்வு. நேத்தே நெட் கனெக்ஷன் எடுத்தது, ரொம்ப ஸ்லோவா இருந்துச்சு. இன்னிக்கு வேலையே செய்யலை(-: சுத்தம்.....

படுக்கையில் சாய்ஞ்ச கோபாலிடம், 'மூணுவரை ரெஸ்ட் எடுத்துக்குங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு'ன்னேன்.

தொடரும்.....:-)

34 comments:

said...

=)... azhagu.. arumai..! thodarattum..!

said...

'மூணுவரை ரெஸ்ட் எடுத்துக்குங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு'ன்னேன்.//

பாவம் கோபால் சார்.

சரித்திர வகுப்புல நிறைய்ய குறிப்புக்கள் எடுத்துகிட்டேன். நிஜமாவே நிறைய்ய விஷயங்கள் சேகரிச்சு அழகா கொடுத்திருக்கீங்க.

said...

இதனால நம்ம வலையுலக நட்புக்களுக்கும், உறவுகளுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா? ஹோட்டல் சம்பந்தமாவோ, எங்க எப்படி போகலாம்னாலோ(உள்நாடு, வெளி நாடு) எல்லா விவரத்துக்கும் தொடர்புகொள்ள வேண்டியது எனது அன்பு அயித்தானை.

கிட்டத்தட்ட 16 வருட அனுபவத்துல நிறைய்ய தகவல்கள், மனிதர்களுடன் தொடர்பு சேத்து வெச்சிருக்காரு அயித்தான். :))

said...

ஓரிஸ் புஃபே தான் நாங்க ட்ரை செஞ்சிருக்கோம். ரொம்ப நல்லா இருக்கும். ராஜ்பவன் ரோடில், நெக்லஸ் ரோடில் மற்றும் பஞ்சாராவிலும் இருக்கு இந்த ஹோட்டல்.

said...

மூணூ வரை ரெஸ்ட் எடுங்க. இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குன்னேன்!!!
கில்லாடிப்பா.:)
காரம் ஜெரிக்கவே ஒரு மணி நேரம் படுக்கணும்.

:)
ஹ்ம்ம் சீதை அக்னிக்குள்ள போய் வந்தது கதையாப் போச்சு.
நம்ம நாட்ட்ல ரொம்பத் தாயார்கள் சீதைன்னு , மகளுக்குப் பெயர் வைக்கத் தயங்குவது உங்களுக்குத் தெரியுமா.!!
சீதாலட்சுமி இருக்கும்.
வெறும் சீதா குறைவுதான்.:((

said...

Oru idam vidarathu illanu mudivu pannitteenga pola irukku.

Good Photographs!

:-)

said...

சாலார்ஜங் ம்யூஸியம் பாக்க எங்களுக்கு அரைநாளுக்கும் மேல் தேவைப்பட்டுச்சு. குறிப்பா அந்த முக்காடு போட்ட சிலை அழகு.

said...

Wonderful! Looking forward to hear more about Hyderabad. Though I have been there once,it looks all new seeing through your eyes.

said...

வாங்க கலகலப்ரியா.

தொடர்ந்து நீங்க வருவது மகிழ்ச்சியா இருக்கு. நன்றி.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

சரித்திர ஆசிரியையா இருந்துக்கிட்டு ஒரு வரி சரித்திரமாவது ஒரு இடுகையில் படைக்காமப்போனால் எப்படி? :-)))))
நாங்க ராஜ்பவன் ரோடில் இருப்பதுக்குத்தான் போனோம்.

காரம் உடம்புக்கு ஆவறதில்லை என்றதுதான் பிரச்சனை:-)

said...

வாங்க வல்லி.

வெறும் சீதா வைப்பதில்லையா?

கூட லக்ஷ்மி இருந்தா ரெண்டு பேர்கள் இருக்காங்கன்னு கஷ்டம் வராது போல.

ஒண்டிக்கு ஒண்டியா நின்னாத்தான் கஷ்டம் ஜெயிக்கும் இல்லே? :-)

said...

வாங்க நன்மனம்.

படம் எடுக்கரதுக்குள்ளே முழி பிதுங்கிருச்சு. அதுவும் நவீன் ஓட்டும் வேகம், எங்காவது சிக்னலில் நிக்கும்போது மனசுக்குப் பிடிச்ச காட்சியோ சிலையோ இருந்து அதை எடுக்கப் ஃபோகஸ் செய்யும்போதுதான் உசரமான ஒரு ட்ரக் வந்து நம்ம வண்டிக்குப் பக்கத்துலே நின்னுரும். ரெண்டு சைடும் இதேதான்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

உலகப்பயணம் போனபோது ஏராளமான ம்யூஸியங்கள் அங்கங்கே பார்த்துட்டதால் நின்னு ஒவ்வொன்னா இங்கே பார்க்கலை. போறபோக்கில் மனசுக்குப் பிடிச்சதை மட்டும் நல்லாப் பார்த்தேன்.

ஓவியங்கள் ஆம்ஸ்டெர்டாம் Rijks ம்யூஸியத்துலே ரொம்பப் பிரமாதமா இருந்துச்சு. பாரீஸ் Louvre Museum கூட அட்டகாசம்தான்.

said...

வாங்க சந்தியா.

இதே ஊரை இன்னொரு முறை பார்க்கப்போனா நீங்க வேறமாதிரியாவும் உணரலாம்.
நகரம் என்பதே நாளும் புதுமைதான்.

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக:-)

said...

அட.....அட்டகாசம் !

நான் 1993ல் சென்ற இடங்கள் !

:)

கோல்கொண்டா போனிங்களா ?

said...

// வல்லிசிம்ஹன் said...
மூணூ வரை ரெஸ்ட் எடுங்க. இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குன்னேன்!!!
கில்லாடிப்பா.:)
காரம் ஜெரிக்கவே ஒரு மணி நேரம் படுக்கணும். //

ஒரு மணி நேரமா? வாய்ப்பேயில்ல... நான் ஐதராபாத் போயிருந்தப்போ ஒவ்வொரு ராத்திரியும் உருண்டு பெரண்டு கதறி அழவேண்டியதாப் போச்சு. ஊர்ப்பக்கத்துல ஒறப்புன்னு சொல்வாங்க. அதுல கொறப்பு செஞ்சா நமக்கெல்லாம் நல்லாருக்கும். ஆனாலும் ஆந்துரால பொறப்புன்னா மெளகாயால வயித்த நெரப்புன்னு வழக்கமாமே! கேக்கச் சிறப்புதான். இருந்ததலும் வயித்துல நெருப்புதான்.

// ஹ்ம்ம் சீதை அக்னிக்குள்ள போய் வந்தது கதையாப் போச்சு.
நம்ம நாட்ட்ல ரொம்பத் தாயார்கள் சீதைன்னு , மகளுக்குப் பெயர் வைக்கத் தயங்குவது உங்களுக்குத் தெரியுமா.!!
சீதாலட்சுமி இருக்கும்.
வெறும் சீதா குறைவுதான்.:(( //

உண்மைதான். ஜானகின்னு பேர் வெப்பாங்க. மைதிலின்னு பேர் வெப்பாங்க. ஏன்னா அதெல்லாம் பொறந்த வீட்டுப் பேரு. சீதான்னு வெக்க மாட்டாங்க. என்னக் கேட்டா.. தாய்மார்கள் ராமன்னு பேர் வைக்கவும் தயங்கனும். வேணும்னா ராகவன்னு வெச்சுக்கலாமே :)

said...

அடடா, ஆமாம் ராகவன்னு வைக்கலாமே. சமத்துப் பிள்ளை பேராச்சே.

பங்களூரு எப்படி இருக்கு சார்;)
ரொம்ப நாளாத் தேடிட்டு இருக்கேன். டீச்சர் அருளால இப்ப எழுத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைச்சுது.

நல்லா இருக்கீங்களாப்பா. காரம்னு கேட்டதும் உங்க நினைவுதான் வந்தது. இந்தப் பிள்ளை உடல் நலமெல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டு மெயிலணும்னு:)

said...

[[[படுக்கையில் சாய்ஞ்ச கோபாலிடம், 'மூணுவரை ரெஸ்ட் எடுத்துக்குங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு'ன்னேன்.]]]

இந்த மனிதரை நினைத்தால் எனக்குக் கண்ணுல காவிரியே பொங்குது..!

எம்புட்டு பொறுமைசாலி..!

said...

// படுக்கையில் சாய்ஞ்ச கோபாலிடம், 'மூணுவரை ரெஸ்ட் எடுத்துக்குங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு'ன்னேன்.//
ஆகா என்ன தயாள குணம் உங்களுக்கு, பாவம் நாங்க பதிவு படிக்கறதுக்காக ரொம்ப கஷ்டப்படுறார். நல்ல குறிப்புகள். அழகான விளக்கம், நன்றி டீச்சர்,

said...

டீச்சர் நீங்க ஒரு இண்டர்நேஷனல் கைடு :)

நீங்க துபாய் வந்தீங்கன்னா எங்களுக்கே தெரியாத இடத்தையெல்லாம் துபாய்ல சுத்திகாட்டுவீங்க :)

said...

//வேணாம். நம்மகிட்டேயே கெமெரா இருக்குன்னதும், "அதுலேயே உங்களை 'ஜோடியா' நிக்கவச்சுப் படம் எடுத்துத் தர்றேன்.பத்து ரூபாதான்!" பத்தா?//

நம்ம கேமராவுல எடுத்தாலும் காசா? ரொம்ப காஸ்ட்லியான இடம் போல :)

said...

இந்த பிர்லா ம்ந்திர் எனக்கு ரொம்பவே பிடிச்சது . இதுவும், நாம்பல்லி iskcon temple m தான் கொஞ்சம் ஜகன்நாத் மாதிரின்னு தோன்றித்து. jubilee hills சௌத் இண்டியன் மாதிரி தானே பட்டது.( Mrs Thenral பிர்லா வை தான் மறந்து ஜூப்ளீ நு எழுதீட்டாங்கனு நினைக்கிறேன்.) ஆனாலும் மனதை கவர்ந்தது ஜுபிலீ ஹில் ஃபில்ம் மந்திர் ம், ஊருக்கு வெளியே பாலாஜிமந்திரும் தான். ஃப்ல்ம் சிடி கோவில் மெயின் ரோட்டிலிருந்தே ராத்ரில கருப்பா அழகா சத்யநாராயண ஸ்வாமி பளிச்சுனு சர்வ அலங்காரத்தோட தெரிவார் .
veiled rebecca எவ்வளவு துல்லியம் இல்ல? எனக்கு Pieta ந்யாபகம் வந்தது. expressions, precision எல்லமே renaissance sculptures க்கு equal ஆ தான் இருந்தது!! " காமிராகாரர்" கடவுளே !! யார? நம்ப வேணுகோவாலுவையா!! தாயாரே!!

said...

துளசிகாரு, சார்மினார்லோ டயமன்ட் கட் பாங்கில்ஸ் சாலா பாக உண்டுந்தி, கொன்னாரா? பிர்லா மந்திர் பக்கனோ மிர்ச்சி பஜ்ஜிலு பாக உண்டுந்தி, தின்னாரா? தெலுகு அர்த்தம் அவுதுந்தா, பாரி போயாரா, உன்னாரா?

http://kgjawarlal.wordpress.com

said...

\\படுக்கையில் சாய்ஞ்ச கோபாலிடம், 'மூணுவரை ரெஸ்ட் எடுத்துக்குங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு'ன்னேன்.\\

;)))))

கொலைவெறி டீச்சர் உங்களுக்கு ;)))

said...

வாங்க கோவியாரே.

போகாமல் இருப்பேனா? சரித்திரம் படைக்க வேணாமா?:-))))

said...

வாங்க ராகவன்.

ராமனைத் தள்ளிட்டு ராகவனை வச்ச்சுக்கிட்டால் ஆச்சு:-)))))

அங்கே காரம் பார்த்தவுடன் உங்கள் கண்ணீர்க் கதையும் நினைவுக்கு வந்து பதிவர் வாசகர் சந்திப்பில் சொன்னேன்:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

நம்ம சிவஞானம் ஐயா (சிஜி) இவருக்குப் பொறுமைத் திலகம் என்று ஒரு பட்டம்கூடக் கொடுத்துருக்கார்.

பாவம். பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏறத்தானே வேணும். இவர் மட்டும் விதிவிலக்கா என்ன? :-)))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

என் 'தயாள குணத்தைப் பாராட்டுனதுக்கு' ஒரு ஸ்பெஷல் நன்றி:-)

said...

வாங்க நான் ஆதவன்.

ஜோடி போடணுமுன்னா காசு செலவு செய்யத்தானே வேணும்:-))))))

துபாய்க்கு வரும்போது சொல்றேன். உள்ளூர் பதிவர்களுக்கு டூர் கைடா இருக்க சம்மதம்:-))))

said...

வாங்க ஜெயஸ்ரீ.

நீங்க சொன்னது அனைத்தும் உண்மை!

//" காமிராகாரர்" கடவுளே !! யார? நம்ப வேணுகோவாலுவையா!! தாயாரே!!//

அச்சச்சோ..... இல்லைப்பா. நம்மை ஜோடியாப் படம் எடுத்துத் தந்தவரைத்தான் சொன்னேன்!!!!

said...

ரண்டி ஜவஹர்காரு.

பாரி போனால் என்ன? இன்னும் 6 வள்ளல்கள் பாக்கி இருக்காங்களே!

காஜுலு தீஸ்கொடம் ஓக்கே. மிர்ச்சி பஜ்ஜி(லு) அலர்ஜி(லு) காரம் அவ்வது.

'ஆந்திரா போனதும் நீங்கெல்லாம் பணக்காரரா ஆகிருவீங்க. உடனே ஆளுக்கொரு 'காரு' கிடைச்சுடும்'னு ஒரு பதிவில் முந்தி எப்பவோ படிச்சது நினைவுக்கு வருது:-))))

said...

வாங்க கோபி.

பத்து நிமிஷமுன்னாப் பத்து நிமிஷம்.

வாய் பேசாம சைலண்ட்டா ஒரு பத்து நிமிஷம் இருந்து பாருங்க:-)))))

said...

//பாரி போனால் என்ன? இன்னும் 6 வள்ளல்கள் பாக்கி இருக்காங்களே!//

இதைப் படிச்சிட்டு தொடர்ந்து அஞ்சு நிமிஷம் சிரிச்சேன். உங்க இடுகைகள்ளே இந்த சென்ஸ் ஆப் ஹ்யூமர் இன்னும் அழுத்தமா வெளிப்பட்டா நீங்க எல்லாரையும் தூக்கி சாப்ட்டுடுவீங்க!

http://kgjawarlal.wordpress.com

said...

ஜவஹர்,

வேணுமுன்னா கொஞ்சம் முயற்சிக்கட்டுமா? :-)))))