Sunday, November 15, 2009

தென்றலுடன் உறவாடு

எங்கியாவது ஒரு ஊருக்குக் கிளம்பலாமுன்னா, மனசுக்குள்ளெ முந்திக்கிட்டு வந்து நிக்கும் முதல் கேள்வி..... 'அங்கே நம்ம 'மக்கள்ஸ்' யாராவது இருக்காங்களா?'

போகலாமுன்னு முடிவானதும் மயிலைத் தூதுவிட்டேன். மூணுநாள் போதுமா? பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் பளிச்ன்னு மயிலில் வந்தது. கூடவே, 'எங்க வீட்டில் வந்து தங்குங்க' என்ற விசேஷ வரிகளுடன்! ஆஹா......

இந்திய வழக்கப்படி ஒன்னேகால் மணி நேரம் தாமதமாப் புறப்பட்ட விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். ஒரு மணி நேரப் பயணம். ஆனால் அங்கே இருந்து நகருக்குள் போக ஒரு மணி நேரம் ஆச்சு. அட்டகாசமான விமான நிலையம். எல்லாமே பளிச் பளிச். அசப்புலே ப்ரிஸ்பேனை நினைவுபடுத்தியது, ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம். பூக்களும், செடிகளும் பச்சைப்பசேல்களுமா இருந்த பகுதியைக் கடந்து வெளியே போய்க்கிட்டு இருந்த வண்டி,( தோழி ஏற்பாடுதான் இதுவும்) சின்னதா இருந்த சில பேட்டைகளைக் கடந்து (இதெல்லாம் இன்னும் சில வருசங்களில் ஜகஜகன்னு ஆகப்போகும் அறிகுறிகள் ஏற்கெனவே தெரிய ஆரம்பிச்சு இருக்கு)ஒரு மேம்பாலம் மீது ஏறுச்சு. அவ்ளோதான். போய்க்கிட்டே இருக்கோம். ஆசியாவிலேயே மிகவும் நீண்ட மேம்பாலமாம். 11.6 கிலோமீட்டர்கள். பளிச்சுன்னு அப்படி ஒரு சுத்தம். நல்ல அகலமா நாலு லேன். ஊர் எல்லைவரை கொண்டுவந்து விட்டுருது. ஊருக்குள் நுழைஞ்சதும் கண் போன இடங்களில் எல்லாம் பச்சையும் வெண்மையுமான நிறங்களில் மசூதிகளின் மினாராக்கள். பழைய ஊர் என்பது பார்த்ததும் தெரியுது. இந்திய நகரங்களுக்கே சொந்தமான ஒழுங்கீனமான போக்குவரத்து, தெருவோரக்குப்பை இதுக்கெல்லாம் ஒரு குறைவும் இல்லாமல் எல்லாம் பரிபூரணம்.

இந்த ஊரை நிர்மாணிச்சப்ப இதன் பெயர் பாக்யநகர். 1592 வது வருசம் நிர்மாணம். சின்ன வீட்டைப் பெருமைப்படுத்த அரசர் Mohammed Quli வச்ச பெயர். இவரோட ஹிந்து மனைவி பாக்மதி. (மனைவிக்காக ஒரு ஊரையே கட்டிக் கொடுத்துருக்கார். என்ன இருந்தாலும் ராஜான்னா ராஜாதான்)இதைப்பற்றி அப்புறம் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம். இப்போதைய 'கதை'க்கு வர்றேன்.

கட்ரியா வரவேற்புக் கூடம். இதுமட்டும்தான் ஜோர். மத்த புலம்பல்களை அப்புறம் வச்சுக்கறேன்


கட்ரியா ஹோட்டேலில் ரூம் போட்டுருந்தோம். அறைக்குள் நுழைஞ்சப்ப ரெண்டரை மணி. மூணரைக்கு ரெஸ்டாரண்ட் மூடிருவாங்களாம். 'குச்சிப்புடி' ஆடலாமுன்னு போனோம். செட்டிநாடு ரெஸ்டாரண்டுகளை நினைவுபடுத்தும் தூண்களும் உள் அலங்காரங்களும். சப்பாத்தி சாப்பிட்டவர் தப்பிச்சுக்கிட்டார். ஆப்பம் கேட்ட நாந்தான் நொந்து போயிட்டேன். திக்கா ஒரு தோசை, ஆப்பம் என்ற பெயரில் வந்துச்சு. அதைத் திருப்பி அனுப்பிட்டு ஆப்பம் என்றால் எப்படி இருக்கணுமுன்னு ஒரு லெக்சர் கொடுத்தேன். அதே புளிச்ச மாவில் கொஞ்சம் மெத்துன்னு ஒன்னு வந்துச்சு. போகட்டும். கறுப்புப் பட்டியலில் சேர்த்தேன். குச்சிப்புடியில், உங்க டீச்சரை இப்படிக் குச்சியைக் கையில் எடுக்க வச்சுட்டாங்களே(-:
தென்றலைக் கூப்பிட்டேன். மகன் பேசுனார். (பயந்துட்டாராம். 'டீச்சர்'ன்னு செல்லில் பெயர் வந்துருக்கு!) ராச் சாப்பாட்டுக்குச் சந்திக்கலாமேன்னு நேரம் குறிக்கப்பட்டது. அதுக்குள்ளேயே, கொஞ்ச நேரத்துலே தென்றலில் ரங்க்ஸ் தொலைபேசினார். அவரே வந்து நம்மைக் கூட்டிட்டுப் போவாராம். உடனே வந்துட்டார். தில்லக்கேணிக்கார'ராம்'
அரசர்கள் காலத்துலே முத்திரை மோதிரம் காமிக்கும் வழக்கம், இப்போ இப்படி:-)

ஹைதராபாத், சிக்கந்தராபாத் இப்படி ரெண்டு ஊர்களுக்கு நடுவிலே பிரமாண்டமான பெரிய ஏரி. புத்தர் நின்னுக்கிட்டு இருக்கார். சுற்றிக்கிட்டு வீடு போய்ச்சேர்ந்தோம். "ஹை...நான் துளசி". "ஹலோ நான் புதுகைத்தென்றல்" என்னதான் இணையத்தொடர்புன்னாலும் 'அரி' முகம் செஞ்சுக்கணுமுல்லே. சிரிச்ச முகத்துடன் வந்து வரவேற்றார்கள் ஆஷிஷ் & அம்ருதா.

காலங்காலமா தினம்வந்துபோய்க்கிட்டு இருப்பவர்களை நீங்க பார்த்துருக்கீங்களா? இல்லையா!!! அடடா மிஸ் செஞ்சுட்டீங்களே..... அப்போ, அங்கே வந்துருக்கணும்:-)
தென்றலின் கைவேலைப்பாட்டில் நம்மவர்:-)


முக்கியமாக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு.' பிள்ளைகளைச் சான்றோர் எனக் கேட்ட தாய்' என்பதைவிட 'பிள்ளைகள் நல்ல பழக்கவழக்கம் உள்ளவர்களா இருப்பது'தான் உண்மையிலேயே ஒரு தாய்க்குப் பெருமை தரும் விஷயம். வெறும் கல்வியில் மட்டும் கெட்டிக்காரர்களா இருந்துக்கிட்டு, மரியாதை கொஞ்சம்கூட இல்லாமல் கெட்டுக் கிடக்கும் பிள்ளைகளை இங்கே, சென்னை வாழ்க்கையில் சமீபத்தில் கொஞ்சம் நிறையவே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சதில் மனம் நொந்து போய் இருந்தேன். அதுவும் பொது இடங்களில் இவர்கள் நடந்துகொள்ளும் விதம் இருக்கே...... அப்பப்பப்பா...(-:

சும்மாச் சொல்லக்கூடாது இந்த பேரண்ட்ஸ் க்ளப் உரிமையாளரை. பிள்ளைகள் இருவரும் 'வெல் மேனர்டு கிட்ஸ்'. இன்னும் கொஞ்சநேரம் அவர்களோடு இருக்கலாமேன்னு ஆசை வந்ததென்னவோ நிஜம்.

மசாலா டீ ரெடியாகும்போதே இந்த ஜென்மத்துப் பேச்சுகளில் முக்கால்வாசி முடிஞ்சுருச்சு. பிள்ளைகள் படபடன்னு 'ஹோம் ஒர்க்' முடிக்கும் அவசரத்தில். ரெண்டு ரங்ஸ்களும் ட்ராவல் வண்டி ஏற்பாட்டில். அதுவும் தென்றலின் ரங்க்ஸ் அதிவேகமாக நமக்காக ஒரு ஐட்டினரியைப் பக்கவாப் போட்டுக் கொடுத்துட்டார்.
வீட்டை அட்டகாசமா அலங்கரிச்சு 'பளிச்' ன்னு வச்சுருக்காங்க. இலங்கை நினைவுகளில் இருந்து இன்னும் மீளப்போவதில்லைன்னு அங்கங்கே குறிப்பால் உணர்த்தியிருப்பது(ம்) அருமை.
வெளியே டின்னருக்கு எங்கே போகலாமுன்னு கொஞ்சநேரம் ஆலோசனை. நாங்க ரெண்டு பேரும் எதைக் கொடுத்தாலும் சரி என்ற பாவனையில் இருந்தோம். ஊருக்குப் புதுசு! கிளம்பினோம். ஹைதராபாதில் ஆளுக்கொரு நெக்லேஸ் கிடைக்கும். ஏரியைச் சுற்றிப்போகும்வழிக்கு நெக்லேஸ் ரோடுன்னு பெயர். 'சட்னி'க்குப் போய்ச் சேர்ந்தோம். ஒரு கொத்துத்தூக்கில் நாலுவகைச் சட்னிகள் முதலில் மேசைக்கு வந்துருது. மெனுவை மேய்ஞ்சபிறகு இட்லி, ஸ்டீம்தோசை, எம் எல் ஏ பெசரட்டு, ஊத்தப்பம்னு வரவழைச்சு ஒரே வெட்டு:-)





மிருதுவான இட்லி வெண்ணையுடன் வருது. சினிமா நடிகர் சிரஞ்சீவியின் கண்டுபிடிப்பான ஸ்டீம்தோசை. (ரெஸிபி ரொம்ப ரகசியமாம், நம்ம 'KFC போல '! ) எம் எல் ஏ.க்கள் சட்டசபையில்போய் நாட்டுநன்மைக்குன்னு ஒன்னும் பேசாம வாய் அடைச்சுக்கிடப்பதை சிம்பாலிக்காச் சொல்றது போல பெசரட்டுக்கு(பயத்தம் பருப்பு தோசை) உள்ளே உப்புமா!

மூடி போட்ட கண்ணாடி ஜக்கில் சுடச்சுடச் சாம்பார் கொண்டுவந்து, நமக்கு முன்னேச் சின்னக் கிண்ணங்களில் ஊத்திவைக்கிறாங்க. மீதமிருந்த கால்வாசிப் பேச்சையும் முடிச்சுட்டுக் கீழே வந்ததும் தெருமுனையில் கல்கத்தா இனிப்பு பீடா. ஹோட்டேலுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப் போனாங்க. இனிய தம்பதிகள் & இனிய குடும்பம். இருபதுவருசத்துக்கு முன்னால் என்னையே மீண்டும் ஒருமுறை பார்த்துக்கிட்டதுபோல!!!

நாளைக்குக் கதையை நாளைக்கு பார்க்கலாமா?

தொடரும்:-)

பி.கு: ஒரு க்விஸ்:-)

ஹைதை போகும் பதிவர்கள், வசதியாக இருக்கணுமுன்னா உடனே தொடர்பு கொள்ளவேண்டிவர்கள் யார்?

39 comments:

said...

Arumaiyana Pillayar velaipadu.

Good narration. :-)

said...

வாங்க நன்மனம்.

போணி நீங்கதான்! நல்ல மனசு உங்களுக்கு!

நன்றி.

Anonymous said...

புதுகைத்தென்றல் பதிவு போட்டப்பயே நினைச்சேன். இன்னும் உங்ககிட்ட இருந்து எந்த இடுகையும் வரல்லியேன்னு. பன்னெண்டு வருஷம் முன்னாடி ஹைதை போனேன். சாலர்ஜங் ம்யூசியம் போனீங்களா டீச்சர்

said...

ஆஹா. டீச்சர் இப்போ ஹைதராபாத்துலயா..?

டீச்சர் அப்படியே அந்த ஜெகன்மோகன்ரெட்டிக்கும், ரோசையாவுக்கும் இடையேயான பிரச்சினையை சுமூகமாப் பேசித் தீர்த்து வைச்சிட்டு வந்திருங்க.. புண்ணியமாப் போகும்..!

said...

நாலு சட்னி

ரெண்டு இட்லி அப்படியே கண்ணுல நிக்கிது எடுத்துக்கவா டீச்சர் :))


ஹைதைக்கு எங்க பாஸ் என்னிய கூப்பிட்டுக்கிட்டேஏஏஏஏஏஏஏ இருக்காங்க!

தென்றல் வந்து சோறுபோடும்போது என்ன டேஸ்ட்டோ மீல்ஸ்ல

ஹைதை வந்து திங்கும்போது எவ்ளோ ஜாலியோ மனசுலன்னு பாட்டு பாடிக்கிட்டே

எங்க அக்காவூட்டுக்கு போகத்தான் போறேன் நானும் போட்டோ எடுத்து போடத்தான் போறேன் ஒரு நாளைக்கு...! :)))))

said...

Nice post on your Hydai trip, Thanks for detailed sharing

said...

பதிவைக்காணோமேன்னு பார்த்தேன்.
தென்றலின் இன்ய குணத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நல்ல மனைவி,நல்ல பிள்ளைகள். கணவனும்நல்லவராக அமைந்து,
விருந்தாளியும் நல்லவர்களாகிப் பதிவும் சுவையாக மழைக்கு இதமா வந்துட்டது. மேற்கொண்டு ஹை-தை!யில் என்ன பார்த்தீர்கள் கேட்டீர்கள் என்று காத்திருக்கிறேன்.

said...

சூப்பரா எஞ்சாய் பண்ணிருக்கீங்களே! பதிவர் சந்திப்பு அமோக வெற்றியா???!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

நன்றிப்பா பதிவு விவரம் சொன்னதுக்கு. ரெண்டுமூணு நாளா கணினிகிட்டே வரமுடியலை(-:

சுற்றுலா விவரம் வந்துகிட்டே இருக்கு:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

ஏம்ப்பா..... நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா?

கேட்ட 'கதைகள்' ஏராளம்(-:

ஒன்னுக்கொன்னு குறைச்சல் இல்லை.

இதுலே மட்டும் எந்த மாவட்டமும் சளைச்சதில்லை!

said...

வாங்க ஆயில்யன்.

இதென்ன கேள்வி? சூடா இருக்கும்போதே எடுத்துக்குங்க.

நீங்க போகும்போது என் பேரைச் சொல்லி இன்னும் ரெண்டு இட்லி கூடுதலா இருக்கட்டும்:-)

said...

வாங்க குப்பன்.யாஹூ.

வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

//தென்றலின் இன்ய குணத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். //

'கண்டு' how how how?

பார்த்ததும் கேட்டதும் கொஞ்சம் சைட் டிஷ்களோட பரிமாறத்தான் வேணும்:-)))

said...

வாங்க அன்புடன் அருணா.

சூப்பர் வெற்றி.

எங்கூர் கணக்குலே ஒரே கூட்டம். அதான் 6 பேர் இருந்தோமே!!!!

said...

சூப்பரு ;)

\\நாளைக்குக் கதையை நாளைக்கு பார்க்கலாமா?\\

ரைட்டு ;))

said...

துளசீம்மா, என்னமா எழுதறீங்க!

உங்களைப்பார்க்க கழுதை மேல் ஏறி ஹைதை வரவேண்டும் போலிருக்கிறது. By the way, who coined ஹைதை? Good one.
பாரதி மணி

said...

வாங்க கோபி.

நாளைக்குப் பார்க்கலாம்:-)))))

said...

வாங்க பாரதி மணி.

எல்லாம் 'நம்மூர்த்தாக்கத்தால்' புதுகைத் தென்றல் தானே சொந்தமாய்க் கண்டுபிடிச்சதுன்னு நினைக்கிறேன்:-)))))

அதான் புதுகை, முகவை, அருவைன்னு பலதும் இருக்கே!!!!

ஆமாம்.... கழுதைக்கு எங்கே போவீங்க? நம்மூட்டாண்டை வண்ணாந்துறைன்னு ஒரு இடம் இருக்கு. விசாரிச்சுச் சொல்லவா?

said...

ஆந்திரா பொசரட் நல்லா இருக்கும், ஏரியின் கரையில் விற்கும் பொரி வாங்கி சாப்பிடுல்லையா, இரவில் புத்தரின் அழகும், ஏரியில் படகுப் பயணமும் நல்லா இருக்கும். மறக்காம ஆவக்கா ஊருகாய்யும் பருப்புப் பொடியும் வாங்கி வாருங்கள். நன்றி.

said...

குச்சிப்புடியில், உங்க டீச்சரை இப்படிக் குச்சியைக் கையில் எடுக்க வச்சுட்டாங்களே//

டீச்சர் எங்களுக்கு மட்டும் வகுப்பு எடுத்தா போதாதுன்னு அங்கயும் கோலெடுக்க வெச்சிருக்காங்க.

:)))))

said...

டீச்சர் அப்படியே அந்த ஜெகன்மோகன்ரெட்டிக்கும், ரோசையாவுக்கும் இடையேயான பிரச்சினையை சுமூகமாப் பேசித் தீர்த்து வைச்சிட்டு வந்திருங்க./

உண்மைத் தமிழன் அண்ணாச்சி ஒரு முடிவோடத்தான் இருக்கீக போல இருக்கே.

said...

ஹைதைக்கு எங்க பாஸ் என்னிய கூப்பிட்டுக்கிட்டேஏஏஏஏஏஏஏ இருக்காங்க!

தென்றல் வந்து சோறுபோடும்போது என்ன டேஸ்ட்டோ மீல்ஸ்ல

ஹைதை வந்து திங்கும்போது எவ்ளோ ஜாலியோ மனசுலன்னு பாட்டு பாடிக்கிட்டே

எங்க அக்காவூட்டுக்கு போகத்தான் போறேன் நானும் போட்டோ எடுத்து போடத்தான் போறேன் ஒரு நாளைக்கு...! :)))))//

அது....

தம்பியின் வருகைக்காக மீ த வெயிட்டிங் பாஸ்

said...

ஹ!! ஹா ஸ்டீம் தோசை CONDIMENTS,காஃபி எப்படி? தாராமதி பாராத்ரி, FORT LIGHT SOUND SHOW பாத்தேளா?. mossies தூக்கிண்டு போய்டும் இல்லை? ஷில்பா ராமம்
ஜூப்லி ஹில்ல் கோவில்
சிலுக்குர் பாலாஜி பாக்க முடிஞ்சதா ?

said...

//ஹைதை போகும் பதிவர்கள், வசதியாக இருக்கணுமுன்னா உடனே தொடர்பு கொள்ளவேண்டிவர்கள் யார்?//

மயில் மற்றும் துளசி... =))...

அருமையா இருக்குங்க!

said...

தாராமதி பாராத்ரி//

இது எங்க இருக்குன்னுத் தெரியலையே.. கொஞ்சம் டீடெய்ல்ஸ் ப்ளீஸ் ஜெயஸ்ரீ.

ஜூப்லி ஹில்ல் கோவில்//

ஆமாம் டீச்சர் இது மறந்து போயிட்டேன். பூரி ஜெகன்னாதர் கோவில் மாதிரி அமைச்சிருக்காங்க.

கேசரிகுட்டாங்கற இடத்துல நிறைய்ய சிவலிங்கங்கள் இருக்காம்.(அர்ஜுனின் மல்லிகார்ஜுன சுவாமி படத்துல வரும்னு சொன்னாங்க)


சரி விட்டதுக்காக அடுத்த ரவுண்டு ஹைதை ட்ரிப் ஒண்ணு ஏற்பாடு செஞ்சிடலாம். :))

said...

வாங்க புதுகைத் தென்றல்.
செஞ்ச உதவிகளுக்கு மறுபடியும் இங்கே எங்கள் நன்றியைச் சொல்லிக்கறேன்ப்பா.

அந்த தாராமதி பாராத்ரி, காந்திப்பெட் லேக் அருகே இருக்கும் ஒரு அரண்மனை. 12 வாசல் இருக்கு அதுக்கு. கோல்கொண்டா சுல்தான் கட்டுனதுப்பா.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

உங்களை நினைச்சேன்னு சொன்னேன் பாருங்க. இதுக்குத்தான்:-))))))

பார்த்ததெல்லாம் பதிவா வந்துகொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கு:-)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ஊறுகாய், பருப்பொடி இதெல்லாம் ஆகறதில்லைப்பா.

காரம்? நோ பேச் நோ மூச் :-)

said...

வாங்க கலகலப்பிரியா.

விடை அது இல்லீங்க......
தலைப்புலே(யே) இருக்கு:-)

said...

நன்றில்லாம் டூ மச்.

உங்க வருகை எங்களுக்கு சந்தோஷம். என் கை வலியால் உங்களுக்கு நானே சமைச்சு போட முடியாம போச்சேன்னு நினைக்கிறேன்.

(ஆயில்யன் தப்பிச்சீங்க டீச்சர்னு சொல்வார். :)) )

கண்டிபேட் லேக் கிட்ட வா? ஓகே. பாத்திடறேன்.

said...

டீச்சர், கண்தராவூரிலே எங்க ஆப்பீஸ் கெஸ்ட் ஹவுஸ் (அது ஆப்பீஸ்க்குள்ள... ஊருக்கு வெளிய இருக்கு)ல ஒரு மாசம் தங்கீருந்தேன். ஆப்பிஸ்குள்ளயே என்னால சாப்ட முடில. வயிறு பிடிக்குது. ஒரு தமிழ் நண்பர்கிட்ட கண்ணீர் விட்டுக் கதறுனேன். அவருதான் காரு வெச்சி (அவரோடதுதான்) சட்டினிக்குக் கூட்டீட்டுப் போனாரு.


நாலு வகைச் சட்டினி போட்டிருக்கீங்களே. அதுல வெள்ளவெளேருன்னு ஒரு தொவையலு இருக்கே. அதுதான் அன்னைக்கு என்னையக் காப்பத்துச்சு. தேங்காச்சில்லும் ஜீனியும் வெச்சு அரைச்சது. அவ்ளோதான். அதத் தொட்டுச் சாப்டுதான் வயித்தைக் காப்பாத்துனேன்.

மேங்கோ தோசைன்னு போட்டிருக்கானே... அது மாங்கா ஊறுகா தோசை. தோசைக்குள்ள மாவிடிகாய பச்சடி (மாங்கா ஊறுகாய்) தடவி வெச்சிருப்பாங்க. நல்லாருந்துச்சு. இதெல்லாம் விட பாதுகாப்புன்னா பாரடைஸ் பிரியாணிதான்.

said...

உங்களை நினைச்சேன்னு சொன்னேன் பாருங்க. இதுக்குத்தான்:-))))))

!!!!!!!?????????? எங்கே ? எப்போ?
:)) உடநே கோடு கிழித்து காட்டவும் ASAP.:))))

கட்ரியா எந்தது? பேகம்பெட் ஆ, சோமாஜி க்ரீன் பார்க் ஆ? பாராதரிலே யே தங்கி இருக்காலாமே!!
MRS தென்றலுக்கு பதில் அவங்க பக்கத்துல:)) TARAMATI AND PREM MATI WERE THE COURTESAN IN THE DARBAR OF KULI KUTUB SHAW. குதுப் ஷா இந்த அம்மாவோட பாட்டையும் டான்ஸை யும் கோல்கொண்டா ஃபோர்ட் தர்பார் ஹால் லேந்து கேட்டு ரசிப்பாராம்.இந்த அரண்மனை 12 வாசல் கொண்டது.CROSS VENTILATION க்கு. ACCOUSTICS ம் ரொம்ப தரமானதாம் அந்த காலத்தில். எனக்கு அவர் கேட்டு ரசிப்பார் என்கிற CONCEPT ஐ இந்த நிகழ் காலத்துடய LIGHT ல COMPREHEND பண்ண முடியல. சுத்துப்புற சத்தத்தில் எங்க கேட்க? இருக்கற தூசி SMOGல எங்கேந்து என்னத்த எப்படி பாக்க?
இப்பல்லாம் (ஒரு ELITE CLASS) கலைநிகழ்ச்சிகளை HOST பண்ணறாங்க. நாங்க போனவருஷம்
குச்சிப்புடி, சிவகுமார் ஷர்மா, அனுஷ்கா ரவிசங்கர் இவர்களோட programmes ISB sponsorshipla இங்க பாத்தோம்.

A

said...

வாங்க ராகவன்.

நலமா?

ஹைபர்நேட் முடிஞ்சதா? :-)

நானும் அந்த வெள்ளை மட்டும்தான் எடுத்துக்கிட்டேன்.

பயணத்துலே வயித்தைப் பற்றிய கவலையினால் வயிறே கலங்கிருது:-)

மாவிடிப் பச்சடி எல்லாம் கண்ணில் 'போட்டுக்கறதே' இல்லை!!!!

said...

ஜெயஸ்ரீ,

எத்தனை முறை ஹைதராபாத் வரச்சொல்லிக் கூப்பிட்டீங்க? வாய்க்கலையே. இப்போ தானா ஒரு பயணம் அமைஞ்சதும் நினைப்பு வராதா? :-))))

முதலில் ராஜ் பவனில் தங்கறதாத்தான் இருந்துச்சு. ஆனால் அந்த அதிர்ஷ்டம் அவுங்களுக்கு இல்லை. அதனால் ராஜ் பவன் ரோடில் இருக்கும் கட்ரீயா ஹொட்டேல் எங்களை உபசரிக்கும் பாக்கியம் பெற்றது:-))))

இது சோமஜிகுடா ஏரியா.

said...

ஸ்டீம்தோசை
Nothing screat in this.My amma & wife used to prepare "Illavadam",thats it.Should be thicker to call it Doasai. :-)

said...

வாங்க குமார்.

இது 'அது' இல்லை:-))))

said...

வணக்கம் மேடம்; ஹைதை ஏர்போர்ட் ரொம்ப நல்லாருக்கும்னு கேள்வி; பாக்கலை.

தென்றல் குடும்பம் ஹைதையா? அவரை எனக்கு அறிமுகமில்லை. பதிவர்கள் யாரையும் நான் பார்க்கலை. நாலு நாளும் ஊர் சுத்தவே சரியா போச்சு.

பெயர் காரணம் வரை ஆ எழுதிருக்கீங்க. நைஸ். மத்த பகுதியும் அப்புறம் படிக்கிறேன்.

said...

By the way, who coined ஹைதை? Good one.

எல்லாம் 'நம்மூர்த்தாக்கத்தால்' புதுகைத் தென்றல் தானே சொந்தமாய்க் கண்டுபிடிச்சதுன்னு நினைக்கிறேன்:-)))))


ஆஹா இந்தக் கமெண்ட்டை இப்பத்தான் பாத்தேன். ஹைதராபாத்தை ஹைதை ஆக்கியது நானில்லை. அந்தப் புகழ் எஸ்.வீ.சேகரைத்தான் சேரும் :)) ஹனீமூன் இன் ஹைதராபாத் எனும் தன்னோட நாடகத்துல அவர்தான் சைதாப்பேட்டையை சைதைன்னு சொல்வது போல ஹைதராபாத்யை ஹைதைன்னு சொல்வார். நான் அதை எடுத்து உபயோகம் செஞ்சேன். அம்புட்டேதான்.

:)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஊர்/பேர் 'மூலம்' இப்படியா!!!!!!!

பேஷ் பேஷ்.

டாங்கீஸ்ப்பா.