Wednesday, November 18, 2009

காவியமா....நெஞ்சின் ஓவியமா....ஏழு ஏழுன்னு சொன்னாங்க.. இங்கேவந்து பார்த்தா எக்கச்சக்கமா இருக்கு? உள்ளே நுழைஞ்சதும் ஓடிவந்த கைடை வேணாமுன்னு விரட்டியாச்சு(-: அரைமணி நேரத்துலே 'எல்லாம்' விளக்கிருவேன்னு சொன்னதுதான் முக்கிய காரணம்.

'லிஸ்ட்டின் படி அடுத்துப்போக வேண்டியது சிலுகூர் பாலாஜி கோவில். நாப்பது கிலோமீட்டர் தூரமாம். போகவர 80. நவீன் சொன்னதுதான். எம்பதா? வெளங்கிரும்....

'அங்கே என்ன விசேஷமு'ன்னு இவர் ஆரம்பிச்சார்.

"பெருமாள் கோவில்தான். விஸா ஸ்பெஷலிஸ்ட்"

"நமக்கு இப்ப எதுக்கு விஸா? கட்டாயம் போகணுமா?"

ஞாயம்தான். தேவை அதிகம் இருக்கறவங்களுக்கு விட்டுக்கொடுத்துடலாமுன்னு பெரியமனசு பண்ணிக்கிட்டு, அந்த ஏழு tombs போகலாமுன்னு சொன்னேன். எல்லா(ரு)ம் போறவழிதான். அங்கே கொஞ்ச நேரம் சுத்தியடிச்சுட்டுக் கோல்கொண்டா போறதா ஒரு ப்ளான். நகரைவிட்டு அதிகதூரம் போகுமுன்பே இடம் வந்தாச்சு. அனுமதிக் கட்டணம் இருபது ரூபாய். பத்துன்னு இருப்பதில் அந்த ஒன்னை மட்டும் வளைச்சுத் திருப்பி ரெண்டாக்கி வச்சுருக்காங்க. கெமெராவுக்கும் ஒரு கட்டணம் உண்டு. உள்புறம் இருக்கும் ஒரு கேட்வரை காரில் போகலாம். போகும் வழியிலேயே இந்தப் பக்கம் அந்தப் பக்கம்ன்னு சமாதிகள் கண்ணிலே பட்டுச்சு. கேட்டுக்குப் பக்கத்தில் நமக்கிடது பக்கம் மேலே இருக்கும் கிண்ணம் இன்னும் மூடப்படாம அரையும் குறையுமா நிக்கும் சமாதிக் கட்டிடம். ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் டார்ச் எரிக்கக் கட்டுனதுபோலக் கிடக்கு.

விளக்கறேன் விளக்கறேன்னு சொன்ன வழிகாட்டியை விலக்கிட்டு உள்ளே போனோம். 1518 முதல் 1687 வரை 169 வருசம் இந்தப் பகுதியை ஆண்ட முகலாய மன்னர்கள் மொத்தம் ஏழுபேர். அவுங்களோட சமாதிகள்தான் இவை. ராஜான்னா ராஜா மட்டுமா? அவரோட குடும்பங்களில் மரணம் நடந்துட்டா அதுக்காகன்னு தனியா ஒரு புதைக்குமிடம் வச்சுக்கணுமா என்ன? அந்தக் கணக்குலேதான் இங்கே அந்த ஏழைத் தவிர்த்து அங்கங்கே சின்னதும் பெருசுமா சமாதிகள் இருக்கு(அப்படின்னு நினைக்கிறேன்)
அநேகமா பெரிய சமாதிகள் எல்லாம் ஏறக்குறைய ஒன்னுபோலவே வடிவமைக்கப்பட்டு இருக்கு. அந்தக் காலத்து 'ஸ்டேண்டர்ட் டிஸைன்' இதுதான் போல! படிகள் ஏறி உள்ளே நுழைஞ்சதும் நடுவிலே உசத்தி இருக்கும் சமாதி. சிலவற்றில் நடுவிலே இருப்பதைத் தவிர்த்து சின்ன சைஸில் சிலது. உசரமான உள்கூரை. தாஜ்மகாலும் இப்படித்தானே இருக்கு? என்ன ஒன்னு அங்கே எல்லாமே பளிங்குக் கல்.

ஒரு சமாதிக் கட்டிடத்தின் உள்ளே

அது என்னமோங்க....இந்த மாதிரி இடத்துலே நுழைஞ்சதும், சி.எஸ். ஜெயராமன் 'காவியமா............ நெஞ்சின் ஓவியமா...................ன்னு தலைக்குள்ளே பாட ஆரம்பிச்சுருவார். இப்பவும் பாடுனார். ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே போனோம். தொல்பொருள் இலாகா, இந்த இடத்துக்குப் பொறுப்பேத்துக்கிட்டு இருப்பதால் கொஞ்சம் சுத்தமாவே இருக்கு.
கட்டிடமாக் கட்டாம சின்ன மண்டபங்களாவும், அதுலே நடுவில் ஒற்றைச் சமாதிகளாவும் இருக்குமிடங்களில் அங்கங்கே சில ஜோடிகள் தீவிரமா அவுங்க எதிர்காலம் குறித்து கவலையோடு பேசிக்கிட்டு இருந்தாங்க. போனாப் போகட்டும். நகர சந்தடியிலே இதுக்கெல்லாம் இடம் ஏது? இங்கேன்னா வெறும் நாப்பது ரூபாயோட போயிருது. இல்லீங்களா?

சில கட்டிடங்களில் பறவை எச்சத்தின் விளைவால் செடிகள் முளைச்சு வளர்ந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரம் கவனிச்சுச் சரி பண்ணலைன்னா... சரித்திரம், சரித்திரமா ஆயிரும். ஒரு வெங்காயகூம்பில் ஏற்பட்ட துளையை, இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக்கி ஒரு குடித்தனம் வேற நடக்குது.


குடித்தனம்

வேலைப்பாடு
சமாதிக் கட்டிடங்களின் சுவர்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருக்கு. சிமெண்டுன்னு ஒன்னும் இல்லாத காலத்துலே, வெறும் சுண்ணாம்புச் சுவர்களில் இத்தனை டிஸைன்ஸ் எப்படித்தான் செஞ்சாங்களோ!

பேகம் சமாதியை நோக்கிப் போகும்போது......... திடீர்னு..

ரெண்டு காதலர்கள். உயிருக்கு உயிரா நேசிக்கிறாங்க. எப்போதும் சந்திக்கும் இடம் இந்த ஏழு சமாதிகள்தான். இங்கே இருக்கும் பெரிய குளம் போலக் காட்சியளிக்கும் கிணற்றைச் சுற்றியுள்ள தாழ்வாரம்தான் யாரும் வராத நிம்மதியான இடம். 'அபாயம். வெகு ஆழமான இந்தக் கிணற்றில் இறங்கிக் குளிக்கவேண்டாம்' னு அறிவிப்புப் பலகை வேற இருக்கு. வழக்கம்போல் வீட்டில் எதிர்ப்பு. பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடியாச்சு. கலியாணம் நிச்சயமாகி மறுநாள் நடக்கப்போகுது.
காதலர்கள் கடைசிமுறையாச் சந்திக்க 'அதே இடம் அதே நேரம்'ன்னு இங்கே வர்றாங்க. அழுது, புலம்பி முடிச்சபிறகு, இருவரும் சேர்ந்து வாழ முடியலைன்னா என்ன? சேர்ந்தே செத்துப்போயிரலாம். இறந்த பிறகு ஆவிகளா மாறி இதே தோட்டத்தில் 'காவியமா....நெஞ்சின் ஓவியமா....பாடி எப்போதும் மகிழ்வா வலம்வரலாமுன்னு ஒரு ஐடியா. முடிவு செஞ்சு, கைகள் கோர்த்துக்கிட்டுக், கண்ணை மூடிக்கிட்டு அந்த ஆழ் கிணற்றில் 'தொப்'ன்னு குதிச்சுட்டாங்க.
அடுத்த விநாடி.............

அய்ய....வெறும் முழங்காலளவு தண்ணி!

கோபாலிடம் கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கேன். சர்வேசனின் 'நச்'க்கு அனுப்பலாமா? சரியா முடிச்சுப் போட்டேனா ?

பேகம் சமாதி. இடதுபுறம் குட்டி மசூதி


அஞ்சாவதாக ஆண்ட மன்னர் sultan Mohammed Qutub shaw அவர்கள் மனைவி Hayat Bakhshi Begum அவர்களின் சமாதியை ஒட்டி ஒரு சின்ன மசூதி இருக்கு. சும்மா ஒரு ரெண்டு பேர் தொழுகை செஞ்சுக்கப் போதுமான இடம். இது மன்னர் ஔரங்கசீப், இங்கே கோல்கொண்டாக் கோட்டையை முற்றுகையிட்ட சமயம் அவருக்காகக்கட்டிக்கிட்ட மசூதியாம். ரொம்ப க்யூட்டா மினியேச்சர் கட்டிடமா இருக்கு.

மரணத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் பயமில்லாம ஒரு வீர வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்க போல. தன் மரணத்துக்குப் பிறகு தன்னைக் குளிப்பாட்டவே டர்கிஷ் பாத் ஸ்டைலில் ஒரு மாளிகை கட்டிவச்சுருக்கார் அரசர் sultan Quli. கூடவே தனக்கான சமாதியும்.!குளியலறை வெராந்தாகாற்றோட்டத்துக்கு ஜன்னல்

டர்கிஷ் பாத்


சரித்திர டீச்சராச்சே...வருசங்கள் சரியா இல்லையே....இவுங்க ஆட்சி செய்த காலக்கட்டம் 1518 முதல்தானே? எப்படி 1020ன்னெல்லாம் இருக்குன்னு ஒரு சின்னக் குழப்பம்! ஐயத்தை உடனே சரி செஞ்சார் கோபால். "இதெல்லாம் இஸ்லாமிய ஆண்டா இருக்கும். அவுங்க காலண்டர் நபிகள் காலத்துலே இருந்துதானே ஆரம்பிக்குது." சபாஷ்! சரியாத்தான் பயிற்சி கொடுத்துருக்கேன்:-))))
அழகான தோட்டமா அமைதியா இருக்கு இந்த இடம். சமாதிக் கட்டிடங்கள் பழசாகிக்கிட்டு, வர்ணமெல்லாம் உதிர்ந்து அங்கங்கே ஒட்டுப்போட்ட துணிகளா ஆகிக்கிட்டு இருக்கு. அரசு கொஞ்சம் கவனம் எடுத்து இதை, ஒரிஜனல் அழகு கெடாமப் பார்த்துக்கிட்டால் நல்லது. சரித்திரம் முக்கியம் பாருங்க. இதைப்போல் ஒன்னு இப்போ கட்ட முடியுமா?

முடிஞ்சால் எனக்கொன்னு இருந்தால் தேவலை. பிரமாண்டமா வேணாம். சின்னதா, அழகா, செல்லம் போல ஒன்னு. 'சீக்கிரம்' செஞ்சுறலாமுன்னார் கோபால்.
'அந்நோன்' சமாதிகள் இருக்குமிடத்தில் 'அன்நெஸஸரி' ஐட்டமா இங்கேயும் புதுசா முளைச்சுருக்கு ஒரு இந்து'கோவில்' சகிப்புத்தன்மை எவ்வளவுதூரம் போகுமுன்னு பார்த்துக்கறதுக்காக வச்ச பரிட்சையோ????

பதிவர் சந்திப்புக்குச் சமைச்சுடலாமா?


தொடரும்.......:-)

21 comments:

said...

கடைசிய இருக்கறது என்ன டீச்சர் பதிவர் சந்திப்புக்கு வடைச் சட்டியா? .

// விளக்கறேன் விளக்கறேன்னு சொன்ன வழிகாட்டியை விலக்கிட்டு உள்ளே போனோம் //
உங்களது நடையில் நிறைய நாங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.

சிலுகூர் பாலாஜி கோவில்.
இங்க போய் 108 சுற்றுக்கள் சுற்றினால் நல்லது. நான் கூட சுற்றவேண்டும். ஒரு பிரார்த்தனை உள்ளது.

// சபாஷ்! சரியாத்தான் பயிற்சி கொடுத்துருக்கேன்:-)))) ///
இது எப்படி குப்புற விழுந்தாலும்,,,,, உங்களை டீச்சர்னு சொல்லறது கரெக்ட்.

நல்ல கட்டுரை. நன்றி டீச்சர்.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நல்லவேலை ஞாபகப்படுத்தினீங்க!
எனக்குக்கூட மாலிபு வெங்கடேஸ்வரனுக்கு ஒரு பிரார்த்தனை இருக்கு. நேரில்வந்து நமஸ்காரம் பண்ணறதா ஒரு வேண்டுகோள்!

said...

முடிஞ்சால் எனக்கொன்னு இருந்தால் தேவலை. பிரமாண்டமா வேணாம். சின்னதா, அழகா, செல்லம் போல ஒன்னு. 'சீக்கிரம்' செஞ்சுறலாமுன்னார் கோபால்.//

:)))

said...

நல்லாத்தான் சுத்தி பாத்திருக்கீங்க போல.

ம்ம்ம்ம்ம்

said...

சின்னதா ஒண்ணா.:)
அதுக்கு அவர்வேற சரின்னு சொல்லிட்டாரா.ஹ்ம்ம் விளக்கமாத்தான் இருக்கீங்க!!!
சிரிக்காம உம்க்க பதிவைப் படிக்கணுமுன்னு பார்த்தா நடக்காது போல இருக்கு.:)
எங்க வீட்ல தான் காவியமா ப்ரசித்தம்னு நினைச்சுட்டேன். அங்கயும் அதே கதையோ. சிவாஜியும் எம் என் ராஜமும் கோவிச்சுக்கப் போறாங்க.:)
அந்தப் பச்சைக்கலர் தண்ணில நின்னு பார்த்தீங்களா என்ன !முழங்கல் அளவுன்னு எப்படித் தெரிந்தது:))
இன்னோரு தடவை படிக்கணும். வெளி வேலை ,ஒருத்தரைப் பார்க்க வரதா சொல்லி இருந்தேன். அதான்....

said...

சமைக்கவா??அந்த பெரிய்...ய கங்காளத்துல உக்காந்துண்டா !!!
" குண்டு சட்டிக்குள்ள குதிரை "

said...

//கோபாலிடம் கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கேன். சர்வேசனின் 'நச்'க்கு அனுப்பலாமா? சரியா முடிச்சுப் போட்டேனா ?//

அதெல்லாம் முடிஞ்சு போச்சே டீச்சர். அந்த குளத்தைப் பார்த்ததும் வந்த கதையோ? :-)

//சபாஷ்! சரியாத்தான் பயிற்சி கொடுத்துருக்கேன்:-))))//

அப்ப கூட கோபால் சாருக்கு பாராட்டு கிடையாதா? :( நீங்க சரியான பெண்ணியவாதி டீச்சர் :)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அன்னிக்கு நல்லாவே 'சுத்திட்டோம்':-)

said...

வாங்க வல்லி.

வெளிவேலை முடிச்சுட்டு வந்தாச்சா?

சின்னதா ஒன்னுன்னாலும் அதுக்குள்ளே ரெண்டு துளியூண்டு சமாதிகள் வைக்கணும்.

க்ளூ: பிரமிடுக்குள்ளே பூனை மம்மீஸ் இருக்காம்!

said...

வாங்க ஜெயஸ்ரீ.

எண்ணெய் ஊத்தி வடாம் பொரிக்கலாமுன்னா பாத்திரம் ஓட்டையா இருக்குப்பா!!!!

said...

வாங்க நான் ஆதவன்.

முடிஞ்சா என்ன? அடுத்த 'நச்' வராமலா போயிரும்? :-)

கிணற்றைப் பார்த்ததும் கற்பனை 'ஊற்று' எடுக்குது!

பாவம்...கோபால். இல்லே?

said...

அடட, ம்ம் புரியுது யாருக்குனு:(
கப்புவுக்கும் ஜிக்குவுக்கும் தானே.

said...

wow.. supernga..!

said...

//சின்னதா ஒன்னுன்னாலும் அதுக்குள்ளே ரெண்டு துளியூண்டு சமாதிகள் வைக்கணும்//

நெகிழ்ச்சியான வார்த்தைகள் அக்கா.

//பாவம்...கோபால். இல்லே?//

"வேணாம்.... விட்டுடு.... அழுதுடுவேன்..."

கோபால் அண்ணா குரல் மாதிரியே இருக்கே:-))).

said...

//பதிவர் சந்திப்புக்குச் சமைச்சுடலாமா?


தொடரும்.......:-)//

யார் சமைப்பது என்பதைப் பொருத்து தான் சரி சொல்ல முடியும். கைவண்ணம் ரொம்ப முக்கியம். சேவை மேஜிக் ப்ரசர் குக்கரெல்லாம் வைத்து நம்ம காஞ்சனா அம்மா கலக்குறாங்க. நீங்க சமைச்சாலும் ஓகே தான்.

said...

கோவியாரே,

சமையல் பொறுப்பைக் காஞ்சனாவுக்கே விட்டுறலாம். எனக்கு அதையெல்லாம் ஃபோட்டோ எடுக்கும் வேலை இருக்கேப்பா:-))))

said...

ஆமாம் வல்லி.

பாவம் பிஞ்சுகள்:-)

said...

வாங்க கலகலப்ரியா.

நன்றிப்பா.

said...

வாங்க ஐம்கூல்.

கோபாலுக்கு ரொம்ப ஆதரவு பெருகிக்கிட்டே வருதுப்பா பதிவர் வட்டத்தில்:-)))))))))))))

said...

அது என்னமோங்க....இந்த மாதிரி இடத்துலே நுழைஞ்சதும், சி.எஸ். ஜெயராமன் 'காவியமா............ நெஞ்சின் ஓவியமா...................ன்னு தலைக்குள்ளே பாட ஆரம்பிச்சுருவார். இப்பவும் பாடுனார். ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே போனோம். //

நான் சின்னவனா இருக்கும்போது எங்கப்பா இந்தப்பாட்டை பாடுவாரு, அவளோ கொடுரமான குரலில் இந்தப்பாட்டை இதுவரை யாரும் கேட்டிருக்கமுடியாது. தலைப்பை பார்த்தவுடனே வந்துட்டேன்.

said...

வாங்க குடுகுடுப்பை.

ஆஹா..... ஜக்கம்மா பழைய 'குரலை' எழுப்பிட்டாளா?

:-)))))