எந்த வேலை செஞ்சாலும் அதுலே எவ்வளவு கவனம் இருக்கணுமுன்னு இங்கே பார்த்தாலே புரிஞ்சு போகும்.
கொடியிடை?
உனக்குத் தலையிலே எதாச்சும் இருக்கா?
கழுத்து ஏந்தான் இப்படி.....
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!
வாலோடுதான் நான் பேசுவேன்!
குரங்குமாதிரிக் கையைக் காலை ஆட்டாமக் கொஞ்சம் சும்மாத்தான் இரேன்.
யக்கா...புள்ளையைக் கூட்டியாரேன்.கொஞ்சம் பேன் பார்த்துவுடேன்.
Monday, November 30, 2009
செய்யும் வேலையில் கவனம் வேணும்
Posted by துளசி கோபால் at 11/30/2009 03:19:00 PM
Labels: அனுபவம், குரங்கு I பேன், மல்லை
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
குரங்கு குடும்பத்துகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தானே போட்டோ எடுத்தீங்க :)
கலக்கீட்டீங்க டீச்சர்..
:)))))!
இன்னிக்கு
மூதாதையர்
நினைவு நாளா?
படங்களும் கமெண்ட்டுகளும் ஸூப்பர்!
"குரங்குமாதிரிக் கையைக் காலை ஆட்டாமக் கொஞ்சம் சும்மாத்தான் இரேன்". அசத்தல்.
மனிதர்கள் மாதிரி........எனக் கேட்டாலும் ஆச்சரியமில்லை.
ஆகா அருமை டீச்சர். ரொம்ப நல்லா இருக்கு. டீச்சர் நான் தங்களுக்கு விருதுகள் கொடுத்துள்ளேன். அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.
:))))
செம சிரிப்பு
வாலோடுதான் நான் பேசுவேன்ன்னா யாரு ஈரோடு வால்பையனோடயா டீச்சர்?
கமெண்ட் எல்லாம் சூப்பர்! சின்ன அம்மணி கேட்ட மாதிரி அந்த குடும்பத்துல பர்மிஷன் வாங்கியாச்சா?
வர வர குசும்பன் கார்டூனுக்கு பயங்கர போட்டி வந்திடுச்சு :)
// சின்ன அம்மிணி said...
குரங்கு குடும்பத்துகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தானே போட்டோ எடுத்தீங்க :)//
:))))))))
ஜாக்கிரதை!! கடைசி படத்தில் “பார்வையே” சரியில்லை அதுவும் Body Language ஒரு மாதிரி இருக்கு.
வீட்டு பக்கம் குரங்கு தொல்லை அதிகமாக இருக்கா?
ரசனையான விஷயங்கள் எல்லாம் உங்க காமிராவுக்குள்ளே டக் டக் ன்னு பதிவாயுடுது. நீங்க எந்த ஏரியான்னு சொல்லுங்க. அங்க வராம இருக்கணும். வந்தா நீங்க பாட்டுக்க பதிவு பண்ணி.... நமக்கிந்த விளம்பரமே பிடிக்காதுங்க!
http://kgjawarlal.wordpress.com
=))... lol.. super..!
ஷூட்டிங் ஸ்பாட் இப்போ மகாபலிபுரத்திலா, நடக்கட்டும்..:-)). அம்மாவின் மேல் பட்டுக்கொண்டே போகும் குழந்தை... கவிதை.!
நாந்தான் லேட்டா.:)
அற்புத டேஸ்ட்.
நேயடுவை ரசிக்கத் தெரியும்.
இயற்கை போட்டோக்ரபர் மாற தனி ஆர்வம் வேணும்.
அம்மா முதுகு மேல க் கையை (வாலை)ப் போட்டுக்கொண்டு போகும் குட்டி சூப்பர்.
எல்லாத்தையும் நீங்க கொடுத்திருக்கிற காப்ஷன்ஸ் தான் இன்னும் அழகு
வாங்க சின்ன அம்மிணி.
அதெல்லாம் கேட்டுப்புட்டேனுங்க. சரின்னு சொலலிக் கொஞ்சம் 'அந்தப் பக்கம்' காமிச்சார். (Bit rude)
வாங்க ராமலக்ஷ்மி.
சிரிப்பானுக்கு நன்றிப்பா.
வாங்க சிந்து.
கலக்கலா இருந்துச்சே. அதான் நானும்....:-)
வாங்க சிஜி.
ஊர்லேதான் இருக்கீகளா?
டார்வின் தியரி முழுசும் உண்மை இல்லைன்னு ஒரு பேச்சு அடிபடுதே!
வாங்க மாதேவி.
அதேதாங்க. பாய்ண்டைக் கப்ன்னு பிடிச்சீங்க பாருங்க.
முந்தாநாள் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பிரபலம் தலையில் அணிஞ்சிருந்த ராக்கொடிபோல ஒரு ஆபரணத்தை( எனக்கு நாலு வரிசைக்கு முன்னால்தான் உக்கார்ந்துருந்தாங்க) க்ளிக்கலாமுன்னு ஒரு முப்பதுமுறை முயற்சித்தும்....
ஊஹூம்......வேலைக்காகலை.
ஒரு விநாடி தலையை ஆட்டாம இருந்தாலும்.... அம்மம்மம்மா....!!!!
வாங்க பித்தனின் வாக்கு.
டீச்சருக்கு அவார்டு எல்லாம் கொடுத்துட்டீங்க!!!! நன்றிப்பா.
வாங்க கோவியாரே.
சிரித்து வாழவேண்டும் என்பதுதான் நம்ம கொளுகை:-)
வாங்க அபி அப்பா.
ஒவ்வொன்னையும் கவனிச்சு, வாலில் பேன் இருக்கான்னு பரிசோதிச்ச அழகு இருக்கே...... சூப்பர்!!!!
அதெல்லாம் 'வாங்காம' இருப்போமா?:-)
வாங்க நான் ஆதவன்.
'மங்கி ப்ளே'ன்னு கூட ஒரு ஆல்பம் போட்டுருக்கலாம்:-))))
வாங்க குமார்.
வீட்டுலே குரங்குத் தொல்லை?
சே.........ச்சே.... அவ்வளவா இல்லை:-))))
வாங்க ஜவஹர்.
அதேதாங்க.இந்த விளம்பரமெல்லாம் நல்லாவா இருக்கு. ப்ளெக்ஸ் பேனர் மலிவாக் கிடைக்கும்போது அளவு பெருசா இருக்கவேணாமோ?
வாங்க கலகலப்ரியா.
நன்றிப்பா. கீப் கமிங்:-)
வாங்க ஐம்கூல்.
ஷூட்டிங் ஸ்பாட் 'கத்திப்பாரா'வா இல்லாதவரை க்ஷேமம்தான்:-)
வாங்க வல்லி.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க:-)
ஜாலியா இருக்காங்கப்பா நேயடூஸ் எல்லோரும். பார்க்கும்போதே நமக்கும் ஆனந்தம் 'தொத்திக்குது' வாலில்:-)
ஆஹா.. டீச்சர் நீங்க கேமிரால போட்டோ புடிச்சதுக்கு இன்னிக்குத்தான் ரொம்ப ரொம்ப பெருமைப்படணும்..!
எவ்ளோ பொறுமையா உங்களுக்கு போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க..!
சூப்பர் அம்மா! :)))
//யக்கா...புள்ளையைக் கூட்டியாரேன்.கொஞ்சம் பேன் பார்த்துவுடேன்//
:):):)
வாங்க உண்மைத் தமிழன்.
மொக்கை போட அதுகளுக்குத் தெரியலைப்பா. ரொம்ப(வே) சீரியஸ்:-)
வாங்க கவிநயா.
கவனமான வாழ்க்கை. சூஷிச்சால் துக்கமில்லை:-)))))
வாங்க நசரேயன்.
சிரிப்பாணிகளா? நன்றி!
உங்களின் முழுத்திறமையை இதில் தான் பார்த்தேன்.
வெகு அற்புதம். நெஞ்சாங்கூட்டில் பிடித்த பாட்டு. நீங்கள் தேர்ந்தெடுத்த படமும் எத்தனை பொருத்தம்.
தனிப்பட்ட அக்கறைக்கு நன்றி.
வாங்க ஜோதிஜி.
அவுங்களுடைய இயல்பு வாழ்க்கையைக் கொஞ்சம் கூட அலட்டிக்காம நமக்குக் காமிச்சதுக்கு நானல்லவா நன்றி சொல்லணும்?
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Post a Comment