Friday, November 06, 2009

இம்மாம் பெருசா!!!

தலைநகர் போயிருந்தப்பக்கூட இம்மாம் பெருசா ஒன்னை நான் பார்த்ததே இல்லை. அதுவும் உசரத்துலே இருந்து கீழே இறங்கும்போதுதான் பிரமாண்டம் தெரிஞ்சது. பதினைஞ்சு வருசத்துக்கு முன் இந்தப் பக்கம்போனபோது ஒரு நிமிசம் நின்னு பார்த்த இடம். 'சம்பவம்' நடந்த மூணு வருசத்துக்கப்புறம் இந்தப் பக்கம் போறோம். வாடகைக்கார் ஓட்டுனருக்கு எங்களுக்கெல்லாம் இதைக் காமிச்சே ஆகணுமுன்னு ஒரே ஆசை. 'இங்கெதாம்மா...இங்கெதாம்மா....'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.
வெள்ளைக் கலர் அடிச்ச ஒரு சின்ன மண்டபமுன்னு நினைவு.

அந்தி மயங்கும்நேரம். அரக்கப் பரக்க வண்டியைவிட்டு இறங்குனோம். என்னப்பா இப்படி ஒரு பிஸி ரோடு..... பார்வைநேரம் இரவு 9வரைன்னு ஒரு அறிவிப்பு. பிரமாண்டமான கேட்டைக் கடந்தால் வலதுபக்கம் நாலைஞ்சு காக்கிச் சட்டைகள்.( இது காவல்துறைக்கு மட்டும் இல்லைதானே? ) காப்பாளர்கள். நம்ம கவலை நமக்குன்னு 'படம் எடுக்கலாமா?' கேட்டுக்கிட்டோம். எடுத்துக்கலாமுன்னு பதில். அப்பாடா ...நிம்மதி. மூன்று மொழிகளில் சுருக்கமாக இன்னாருடைய பரம்பரைன்னு செதுக்கிவச்ச கல்வெட்டு/கல்ச்சுவர்.
இடதுபக்கமாகப்போனப்போதுதான் உச்சியில் படபடத்துக்கிட்டு இருந்த தாயின்மணிக்கொடியைக் கீழே இறக்கும் நிகழ்வு. க்ளிக்கிட்டே போனவளை, இறக்கும்போது எடுக்கக்கூடாதுன்ற அன்பு(?)க்கட்டளை நிறுத்துச்சு. அப்படியே அடென்ஷனில் நின்னவள்தான்....... ஹம்மா......... எம்மாம் பெரிய கொடி!!!!! கீழே வரவர .......ஏழெட்டுப்பேர் தாராளமாப் போர்த்திக்கலாம். தரை தொடாமல் பிடிச்சு மடிக்கிறாங்களான்னு கவனிச்சேன்.

அப்படியே கண்ணுக்கெட்டியதூரம்(காம்பவுண்டுச் சுவர்வரை) பசுமையா இருந்த புல்வெளியை ரசிச்சுக்கிட்டே வலப்பக்கம் திரும்பினால் தூரத்திலே மங்கலான பளிச். மரத்தினிடையில் பார்க்கும்போது உயரமான ஸ்தூபங்களின் மத்தியில்..........முழுநிலவின் மங்கலில் ...... இன்னிக்குப் பவுர்ணமி வேற!
இங்கேயெல்லாம் மாலை வெளிச்சம் போன அடுத்தவிநாடியே சட்னு ஒரு அந்தகாரம் சூழ்ந்துக்குது. சூரியன் மறைஞ்சபிறகு கொஞ்ச நேரம் இருக்கும் ட்வைலைட் சமாச்சாரமெல்லாம் இல்லை. வெளிச்சம் நோக்கி நடக்க நடக்க அந்த ஸ்தூபிகளின் பிரமாண்டம் புலப்பட்டது.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவகம். உயரக்குறைவான ஒரு மேடையில் நடுகல். அன்னார்மீது மலர்மாரி பொழிவதுபோல ஒரு அமைப்பு. பூக்கள் சிதறி மேடை முழுசும் விழுந்து கிடக்குது. அற்புதமான வேலைப்பாடு. எல்லாமே பளிங்கு. நடுகல்லின் முன் சிதறிய செம்மண் பாறையின் சிறுபகுதிபோல ஒன்னு. அந்த இடம்தானாம்..... ஓ... அது மலர் மாரி இல்லை.....சம்பவம் நடந்தபோது தெறித்துவிழுந்த மாலைகளில் இருந்து வீசப்பட்டப் பூக்களோ?
கூடவே வந்துக்கிட்டு இருந்த காவல்பணியாளர் சொன்னார். இந்த ஏழு தூண்களும் இந்தியாவின் ஏழு புண்ணிய நதிகளைக் குறிப்பிடுதாம். அப்ப நடுகல்லின் பின்னே தனித்து நிக்கறது கங்கையா? ஆமாவாம்! மற்ற ஆறும் இந்தப் பக்கம் மூணு அந்தப் பக்கம் மூணுன்னு எதிரெதிரா ஒரு வளையம் அமைச்சதுபோல நிக்குது. இந்தப் புண்ணிய நதிகளின் நீரில் அஸ்தியைக் கரைச்சு இங்கே கொஞ்சம் கொஞ்சம் தெளிச்சு அதுமேல் ஏழு தூண்கள் வச்சுருக்காங்களாம்
நடுகல்லின் மறுபுறம் அதே மூன்று மொழிகளில் இவரைப் பற்றிய குறிப்பு ஒன்னு இருக்கு. எதிர்ப்புறம் நீளமான சுவரில் கல்லால் ஆன ம்யூரல். சுவரோவியம்/சுவர்ச்சிற்பம்? வலது பக்கம் ஒரே ஒரு விளக்கு. கொஞ்சம் (spooky)ஸ்பூக்கியான உணர்வைத் தந்துச்சு. விலங்குகளுக்கிடையில் யானைகள்கூட இருக்கு அதுலே! .
அமைப்பு, டிசைன், தரம் எல்லாம் அப்பழுக்கே சொல்ல முடியாமல் 'த பெஸ்ட்'ன்னு சொல்லலாம். தூசி, தும்பு, அழுக்கு இப்படி ஒன்னும் இல்லாம அந்த நினைவகம் முழுசும் பரிசுத்தமா இருக்கு. புல்தரைகள் கூட பச்சப் பசேலுன்னு மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. ரொம்ப நல்லாவே இருக்கு பராமரிப்பு.
பெரிய இடம்தான். பத்துப் பதினைஞ்சு ஏக்கர் இருக்கலாம். ஒவ்வொரு தூண்களின் தலையிலும் ஒவ்வொருவிதமான அம்சம் . அசோக சக்கரம் மாதிரி ஒன்னு புலப்பட்டது. மற்றதெல்லாம் ......ரொம்பவே இருட்டிவிட்டதால்..... கண்பார்வைக்குக் கஷ்டமாப் போச்சு.

அங்கே நின்னு ஒருமுறை 'திரும்பிப்பார்த்தபோது' வயித்துக்குள்ளே ஒரு இனம் புரியாத சங்கடம்.................

ஏன்? எதுக்காக?
விடை தெரியாத ஆயிரம் கேள்விகளை மனசில் சுமந்துக்கிட்டு மௌனமா வீடு திரும்புனோம். கனத்த மனசைக் கொஞ்சம் லேசாக்க, 'சட்'னு ஒரு கேள்வி கேட்டேன் கோபாலை.

"அந்த ஏழு நதிகளில் எத்தனை பெண்? எத்தனை ஆண்?"

திருதிரு ...திருதிரு.......

"அஞ்சு பெண் ரெண்டு ஆண்."

"பேர் சொல்லுங்க பார்க்கலாம்?"

"கங்கை, கோதாவரி, பிரம்மபுத்திரா........"

சரித்திர டீச்சர், இப்படியே விட்டுற முடியுதா?

"யமுனை, காவேரி, நர்மதா, கிருஷ்ணா.........."

ஆமாம்......சரஸ்வதி இந்தக் கணக்கிலே வருதா இல்லையா?


பி.கு: நினைவகம் கட்டி முடிச்சது 2003 வது வருடம்.

35 comments:

said...

அவர் கூட்டத்துக்கு வந்த போதும் இப்படித்தான் இருந்திருக்கும் .இருளோன்னு.மனசைப் பிடிச்சு இழுத்து நிறுத்தும் குழந்தைப் புன்னகை.


அந்த செம்மண்ணைப் பார்க்கச் சங்கடப் பட்டுக்கொண்டே திருப்பதி போகும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்வேன்.

இதுவரை தைரியம் வந்ததில்லை அங்கே போக.
வேற ஒண்ணும்சொல்கிறாதாயில்லை:(

said...

பெங்களூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணப்பட்ட 2,3 முறை நின்று பார்த்து விட்டுக் கடந்தபடி..

//அங்கே நின்னு ஒருமுறை 'திரும்பிப்பார்த்தபோது' வயித்துக்குள்ளே ஒரு இனம் புரியாத சங்கடம்.................//

உண்மைதான். எனக்கும் உள்ளே போகவே ஒரு சங்கடம். ஆனால் சர்வேசன் ஒருமுறை இது போல படங்களுடன் எழுதியிருந்ததைப் படித்தபின் அடுத்தமுறை போகவேண்டுமென நினைத்து விட்டேன்.

விவரங்களுக்கு நன்றி.

said...

ஆயிரத்தெட்டு தரம் அந்த வழியா கார்லே வந்திருக்கேன். ஒரு தரம் கூட பார்த்ததில்லை. போட்டோக்களோடு உங்க கட்டுரை பார்த்தப்புறம் பார்க்கிற ஆசை வந்திடுச்சு. ஒவ்வொரு படமும் அருமையான லைட்டிங்க்ல எடுத்திருக்கீங்க.

தலைப்பு குமுதம் ஒரு பக்க கதை தலைப்பு மாதிரி குடுத்திருக்கீங்க!

http://kgjawarlal.wordpress.com

said...

//அங்கே நின்னு ஒரு முறை’திரும்பிப் பார்த்தபோது’ வயித்துக்குள்ளே ஒரு இனம்புரியாத சங்கடம்//

அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்
போது மனது சங்கடபடுவது உண்மை
துளசி.(எத்தனை உயிர்கள் சிதறி போயின)

said...

என் மனதுக்குப் பிடித்த இளம் தலைவர், வசிகரமான முகம், மாறாத புன்னகை என்று தமிழ் நாட்டுத் தமிழர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டவர். தமிழ் நாட்டில் மட்டும் பாதுகாப்பை மீறி மக்களுடன் கலர்ந்து வெளிவருவார். பலமுறை பாதுகாவலர் அறிவுறுத்திய போதும், எனக்கு தமிழர்களிடம் அன்பும், நம்பிக்கையும் உள்ளது என்று மறுதலித்தவர். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சுவாமிகளால், டி என் சேஷன் மூலமாக மரணம் அருகில் இருக்கின்றது எனவே பிரச்சாரம் செய்யவேண்டாம் எனத் தடுத்தும் கேளாமல் மரணத்தை தழுவினார். அவரின் மரணத்தின் ஆற்றாமை இன்னமும் என் மனதில் இருக்கின்றது. அவரைக் கொன்றவர்கள் மீதும். நன்றி.

டீச்சர் நான் ஒரு உண்மைக் கதையை தொடராக எழுதி வருகின்றேன், படித்து தங்களின் கருத்துக்களைக் கூறவும். நன்றி.

said...

yes , we had hopes with Rajiv.

If he would have been alive, i do not know how Globalisation and internet's influence in India would be.

said...

படங்கள் எல்லாம் அருமையா எடுத்திருக்கீங்க..

மெட்ராஸை சுத்திப்பாக்க போறேன் ந்னு நல்லது கெட்டது எல்லாம் காமிக்கிறீங்க..

said...

துளசி,படங்களும் அதை வர்ணித்த விதமும் அசத்தலாருக்கு.நான் இன்னும் இந்தியா வரல.
உங்களைப்போன்றவர்கள் சொல்ற இடமெல்லாம் சேகரிச்சு வைக்கிறேன்.பாக்கணும் எல்லா இடங்களும்.

said...

ம்ம்ம்...புகைப்படம் எல்லாம் எப்போ கலக்குறிங்க டீச்சர் ;)

said...

போன பின்னூட்டத்தில் publish கொடுக்கும் போது தான் பார்த்தேன்...எப்போ இல்ல இப்போ ;))

said...

நினைவகம் இரு முறை மீண்டும் செப்பனிடப்பட்டு இருக்கு , அதனால்தான் அருமையான பராமரிப்பு ....

the memorial in night is brilliant looking .....

Ram N (www.ramaswamyn.com)

said...

//அந்த ஏழு நதிகளில் எத்தனை பெண்? எத்தனை ஆண்?"

திருதிரு ...திருதிரு//

கொஞ்சம் பிரமிப்போட பாத்திருப்பாரு....அதுக்காக அண்ணனை இப்டில்லாம் வாரப்பிடாது:-)))

said...

நினைவகம் கட்டுவதற்கு முன் உள்ளே சென்று பார்த்திருக்கிறேன் பின்னர் செல்லவில்லை.

தங்கள் படங்கள் அனைத்தும் பிரமாதம்.

said...

வாங்க வல்லி.

சிரிக்கும் முகத்தோடு அரசியல்வாதியைப் பார்ப்பதே அதிசயமாப் போயிருச்சோ!!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நல்லா நீட்டா இருக்குப்பா. அந்த சுவர் சிற்பங்களுக்காகவே போகலாம்.

said...

வாங்க ஜவஹர்.

குமுதம் ஸ்டைலா?

அச்சச்சோ:-))))))

said...

வாங்க கோமதி அரசு.

ஆமாங்க. 11 உயிர்கள் ஒன்னாப் போன இடம்(-:

said...

வாங்க பித்தனின் வாக்கு.

இதைத்தான் 'விதி'ன்னு சொல்லிருவோமில்லையா?

உங்க கதையைப் பார்த்தேன்.

said...

வாங்க குப்பன் யாஹூ.

நல்ல அரசியல்வாதிகள் வந்து எதாவது நல்லதா நாட்டுக்குச் செய்யமாட்டாங்களான்னு ......ஆதங்கம்தான்.

ஒவ்வொரு புதிய அரசியல்வாதிகள் 'தோன்றும்போதும்' நமக்கு ஆவல்தான் அதிகரிக்குது. ஆனால்......

நடப்பு வேற(-:

said...

வாங்க கயலு.

மெட்ராசைச் சுத்துனாலும் மெரினாவில் கால் வைக்க முடியலைப்பா.

yucky ஆக இருக்கு(-:

இவ்வளோ நல்ல பீச்சுலே கருவாடு காயப்போடறாங்க(-:

said...

வாங்க ஹேமா.

என்னோட லிஸ்ட்டும் வளர்ந்துக்கிட்டே போகுது:-)))))

said...

வாங்க கோபி.

என்னத்தைக் கலக்கறதுப்பா!!!!

இடத்தோட அழகு படத்தில் வந்துருது:-))))

said...

வாங்க ராம்.

முதல்முறை வருகையா இங்கே நம்ம வீட்டுக்கு?

அழகாச் செப்பனிட்டு வைக்கவும் இங்கே தெரியுது. அதே சமயம் ஊரை அழுக்கா வைக்கவும் தெரிஞ்சுருக்கு(-:

said...

வாங்க ஐம்கூல்.

தனக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா!!!!!

மகிழ்ந்துபோயிருக்கார் உங்க அண்ணன்:-)

said...

வாங்க கைலாஷி.

அடுத்தமுறை நீங்க ஸ்ரீராமானுஜரைப் பார்க்கப்போகும்போது இங்கே(யும்) போனால் ஆச்சு!

said...

அங்கே நின்னு ஒருமுறை 'திரும்பிப்பார்த்தபோது' வயித்துக்குள்ளே ஒரு இனம் புரியாத சங்கடம்.................
ஆமாம் துளசி. அந்த வழி எவ்வளவோ தடவை போனாலும் எங்களால் சங்கடத்தில் பாக்க மனசு வரவில்லை. ரொம்ப நல்ல மனுஷர்.என் 50% உபயத்தால் பூனாவில் மீட் பண்ணி பேச கிடைத்தது. டின்னெர் முடிந்து Chef இடம் போய் "முஜே கைசா பசந்த் ஹெ வைசே ஹி பனாயா! ஷுக்ரியா" என்று THANK பண்ணி அவரை embrace பண்ணிண்டு CHEF கண்ணுல கண்ணீரை வரவழைத்தவர்.ரொம்ப பணிவு.Down to earth man . This humility and sophistication comes to very few people.

said...

இது வரை உள்ளே போனதில்லை அடுத்த முறை அவ்வழியே போகும் போது நிச்சயம் பார்க்கவேண்டும்.

said...

thulasi amma irunga athukulal current cut vanthu comment poduren ungaluku

said...

டீச்சர் நான் தங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். தாங்கள் படித்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

said...

:(

கொஞ்ச வருஷமா தான் நல்லா பராமரிக்கிறாங்க. 2005களில் கொஞ்சம் மோசமாக இருந்தது. நல்ல கவரேஜ்.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

நீங்க சொன்னது அனைத்தும் சத்தியமான உண்மை.

பி.கு: தாமதமான பதிலுக்கு மாப்ஸ்!

(பயணம். உங்களை நினைச்சுக்கிட்டேன்)

said...

வாங்க குமார்.

போயிட்டு வந்ததும் 'கட்டிட அமைப்புகள்' பற்றிச் சொல்லுங்க.

said...

வாங்க பிரபாகர்.

No probs:-)

waiting!!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

கட்டாயம் வந்து பார்க்கிறேன்:-)

said...

வாங்க வித்யா.

பராமரிப்புக்குப் பின்னால் 'அரசியல்' இருக்கோ? :-)))))