கண்ட்ரோல் டவரில் பேய் வசிக்குதாம். நவீன் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டுச்சு. நெசமாவா சொல்றீங்க?
ஆமாம் மேடம். புது ஏர்ப்போர்ட் கட்டுனதும் வந்து இறங்குன முதல் ப்ளைட் (அது எங்கே இறங்குச்சு? ) லேண்ட் ஆக வருமுன் ரன்வே முழுசும் கண்ணுக்குத் தெரியாமலேயே மறைஞ்சுருச்சாம்! (ஒன்னுமே தெரியாம பேய்கள் எல்லாம் இருட்டடிப்பு செஞ்சுருச்சோ?)
திரும்ப ப்ளைட்டை மேலே கொண்டுபோயிட்டு க்ளியரன்ஸ் கேட்டால் எல்லாம் க்ளியரா இருக்கு வாங்கன்னு சொல்ராங்களாம். இப்படி மூணு முறை நடந்ததும், 'என்னமோ ஏதோ'ன்னு ப்ளைட்டை சென்னைக்குத் திருப்பிட்டாங்களாம்.
"ஆங்..... அப்புறம்?"
இங்கே இன்னும் வேலைகள் பூர்த்தியாகாத நிலமையில் யாரும் வேலைக்கே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. தனியா க்ரவுண்ட் கண்ட்ரோல் பணியாளர்கள் நிக்கப் பயப்படுறாங்கன்னு ரெவ்வெண்டு பேரா நின்னுக்குங்கன்னு நிர்வாகம் சொல்லி இருக்கு. மேலும் கட்டிடத் தொழிலாளர்கள் யாரும் வராம வேலை தடைப்பட்டு, கூட்டமா வந்து வேலை செஞ்சுட்டுப்போங்க. கூலி நிறையத் தர்றோமுன்னு சொல்லி ஒருவழியா வேலைகள் முடிஞ்சதாம். கம்யூனிஸ்ட் பேய்களா இருக்கலாமோ? தொழிலாளர் நலன்களுக்கு இதுங்களாவது பாடு பட்டுருக்கே!
ராத்திரி நேரங்களில் கண்ட்ரோல் டவர்களிலும் கொஞ்சம் கூடுதலான ஆட்களை வேலைக்கு இருத்தினாங்களாம். இப்பப் பேயெல்லாம் அடங்கி இருக்கும்:-)
டிபாச்சர் லவுஞ் அழகா நீட்டா இருக்கு. அசப்புலே பார்த்தால் எந்த வெளிநாட்டு விமானநிலையத்துக்கும் ஈடு கொடுக்கும் வகையில் அமைஞ்சுருக்கு. ஹைதை மக்கள் பெருமைப்பட்டுக்கலாம். என்ன ஒன்னு...... நகரில் இருந்து ரொம்ப தூஊஊஊஊஊரம்(-: ஆனால் வேற வழி? இவ்வளவு பெரிய இடம் நகருக்கு ரொம்பப் பக்கத்தில் கிடைப்பது கஷ்டம் இல்லையா? இது கிறைஸ்ட்சர்ச்சா என்ன? :-)))
இண்டிகோ ஏர்லைன்ஸில் வந்தோம். அதுலேயே திரும்பிப்போறோம். அடிச்சுப் புடிச்சு வந்தா வழக்கமான 'தாமதம்' ச்சும்மா ஒரே ஒருமணி நேரம்தான். அப்டீன்னு (ச்சும்மாங்காட்டியும்) சொல்லிவச்சாங்க. உண்மையைச் சொன்னால்...... 'விமானநிலையத்தில் பயணிக்கு மாரடைப்பு'..... நியூஸ் வந்திருக்கும்
முதலிலேயே சொல்லி இருந்தால்..... கொஞ்சம் நிதானமாகப் புறப்பட்டு இருக்கலாம். தாமதம் வழக்கம்போல் தினமும் இருக்குமோ? அநேகமா இது ஹொட்டேல் ரிஸப்ஷன் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கும் போல க்வாட்டர் டு சிக்ஸ்ன்னு சொன்னதுக்கு 'டான்'ன்னு கரீட்டா..... ஆறேமுக்காலுக்கு அலார்ம் கொடுத்தாங்க(-: இத்தனைக்கும் கோபால், ஃபைவ் ஃபார்ட்டிஃபைவ்ன்னு விளக்கம்வேற கொடுத்துருந்தார் மேஜர் சுந்தரராஜன் வசனம் மாதிரி!
கிளம்பி ஹொட்டெல் காம்பவுண்ட் கடக்கும் முன்பே, தற்செயலாக் கையைப் பார்த்தால்.....விரல்லே ஒன்னைக் காணோம்......... மோதிரம். திருப்பிப் போய் அறைச்சாவியை வாங்கி மேலே ஓடி.... படுக்கைக்கு பக்கத்து மேசை ட்ராவில் உக்கார்ந்துருந்ததை எடுத்துப்போட்டுக்கிட்டு..... ( ஒரு டிப்ஸ்: ஹொட்டேலில் நகைகளைக் கழற்றி வைக்க எப்போதும் அங்கே இருக்கும் கண்ணாடி க்ளாஸில் ஒன்னு எடுத்துக்குவேன். அது மேசை மேலே பளிச்ன்னு உக்கார்ந்துக்கிட்டு நம்மையே பார்ப்பதால் நமக்கு(ம்) மறக்காது. இந்த முறை என்னவோ வழக்கத்தில் இருந்து தவறியதுக்கு ஒரு தண்டனை) இதுலேயே ஒரு கால்மணி போயிருச்சு. ஆசியாவின் நீளமான மேம்பாலத்துலே வண்டியை விரட்டிக்கிட்டு, பேய்க்கதைக் கேட்டுக்கிட்டே வந்து சேர்ந்தால்......
இட்லி ஃபேக்டரி, ராஜஸ்தான் கைவினைப்பொருட்கள், நக்ஷத்ரா டயமண்ட் கலெக்ஷன்( ஏங்க யாராவது ஏர்ப்போர்ட்லே வைரம் வாங்குவாங்களா?) ஹைதை முத்து நகைகள் இப்படி கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.
உங்கள் இருக்கையை நீந்துவதற்கு பயன்படுத்தவும்.. கண்ணெதிரில் இருந்த முன்ஸீட்டின் முதுகிலே இருக்கு! ஆமாம்..... ஒருவேளை தரையில் விழுந்துட்டால்..... 65 நிமிசத்துலே எதுவும் நடக்காதுன்னு........
சென்னைத் துறைமுகத்தைப் பறவை பார்வைப் பார்த்துக்கிட்டு, சமாதிகளுடன் மெரீனாவைக் கடந்துக் கத்திப்பாராவை எடுப்பதற்குள் நகர்ந்து போன பாலத்தைக் கவனிச்சுட்டு வந்து இறங்கி, 'பஸ் பிடிச்சு' வெளியில் வந்தால்...... பதினாயிரம் வாலாக்கள் வெடிச்சு பலத்த வரவேற்பு. நமக்கெதுக்கு இதெல்லாம்? நாலுநாள் ஊருலே இல்லைன்னா...... ஃபோர்மச்சா இல்லை? ..... மூவர்ணக் கொடிகள் கட்டிய வண்டிகள் பார்க்கிங் ஏரியா முழுசும்.
டெல்லியில் இருந்து வெற்றிவாகை (????) சூடி வந்து இறங்குன திருநாவுக்கரசருக்காம்... போயிட்டுப் போகுது. வளாகம் முழுசும் அவுங்க பங்குக்கான பொல்யூஷன் புகையும் (வெத்துவேட்டுக்) குப்பைக் காகிதமும்!
சென்னை ரொம்பத்தான் கசமுசான்னு கிடக்கு!
பி.கு: நாலு நாளைக்கு முன்னே இங்கே நம்மூட்டுக்கு ஒரு அவசர விஸிட்டா வந்துட்டுப்போன புதுகைத் தென்றலின் ரங்ஸ், சின்னதா ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டிக்கெட்டை ஆன்லைனில் புக் பண்ணி இருக்கக்கூடாதாம்.!
நாலாயிரம் நம்மகிட்டே இருந்து எக்ஸ்ட்ராவா அடிச்சுட்டாங்க 'இண்டிகோ'க்காரங்க(-: விமானக் கொள்ளை!
அடுத்தமுறை வேற வழி பார்க்கலாம்:-) இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு அங்கே பார்க்கவேண்டிய இடங்கள். ஹைதராபாத் நாட் பேட் அட் ஆல்.
பயணத்தில் கூடவே வந்த அனைவருக்கும் நன்றி.
( இந்த கலாட்டாவில் சிவிஆரின் கல்யாணத்தைக் கோட்டைவிட்டுட்டேன். மணமக்களுக்கு நம் ஆசிகள்)
என்றும் அன்புடன்,
துளசி.
Wednesday, November 25, 2009
Hi தரா bad is not bad at all.
Posted by துளசி கோபால் at 11/25/2009 05:14:00 PM
Labels: அனுபவம் ஹைதராபாத், பேய்
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//...அநேகமா இது ஹொட்டேல் ரிஸப்ஷன் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கும் போல க்வாட்டர் டு சிக்ஸ்ன்னு சொன்னதுக்கு 'டான்'ன்னு கரீட்டா..... ஆறேமுக்காலுக்கு அலார்ம் கொடுத்தாங்க(-: ...//
:-(
/. கம்யூனிஸ்ட் பேய்களா இருக்கலாமோ? //
பல இடங்கள்ல இதே மாதிரி சிரிக்க முடியுது டீச்சர் :) உங்க ஸ்டைல்
அப்புறம் கண்ணாடி க்ளாஸ் டிப்ஸ்... ரொம்ப நல்ல டிப்ஸ் :)
//நாலாயிரம் நம்மகிட்டே இருந்து எக்ஸ்ட்ராவா அடிச்சுட்டாங்க //
பகல் கொள்ளைதான். சரி பேய் என்ன சொல்லிச்சு.
:)
டிப்ஸ் நல்லா இருக்கு..
நடக்கற போதுதான் படம் எடுப்பாங்கன்னு பார்த்தால் பறக்கிற போதுமா:)
ஆமா நீங்களும் அந்தப் பேயைச் சுத்திதானே வந்திருப்பீங்க!! ஒண்ணும் கண்ல படலியா:))
ஏர்போர்ட்ல தான்பா நிறைய பேரு வாங்குவாங்க.
நான் வாங்கினதில்ல. இந்த வெளியூர்க்காரங்க நிறைய ஏமாறுவாங்க.
பேய்கள்// :))
அந்த முதல் விமானத்துக்கு அடுத்த விமானம் அயித்தான் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம் தான். டீவிக்காரவுங்க காத்திருக்க, இவுகளும் கேட்டுக்குள்ளேயே காத்திருக்க நேர்ந்ததாம். சாவி தொலைந்துவிட்டது.
:)
45 சாவிகள் அடங்கிய கொத்தை கொண்டுவந்து போட்டு போட்டு திறந்தார்களாம். இதுவும் பேயின் சதியோ. :)))
Hi தரா bad is not bad at all.//
இது நெம்ப பிடிச்சிருக்கு :)))))))
விமானம் தரையிறங்கும் முன் புகைபப்டம் சூப்பர்ப்
pics nallaarukku... appuram vanthu padichchukkaren..!
சூப்பரு...ஹைதராபாத் டூர் நன்றாக போச்சு...;))
பறவைப்பார்வை சூப்பரா தசாவதாரம் ஓப்பனிங் சீன் மாதிரி இருக்கு.
//ராத்திரி நேரங்களில் கண்ட்ரோல் டவர்களிலும் கொஞ்சம் கூடுதலான ஆட்களை வேலைக்கு இருத்தினாங்களாம். இப்பப் பேயெல்லாம் அடங்கி இருக்கும்:-)//
இப்படி பேச்சுத்துணைக்கு யாரையாவது முதலிலேயே போட்டிருந்தா,அதுங்க சமத்தா இருந்திருக்கும்.
சூப்பர்!!ஹைதராபாத் டூர் நல்லா போச்சு டீச்சர்!!
விமானப்படம் நல்லாயிருக்கு அக்கா!!
வாங்க நான் ஆதவன்.
டிப்ஸை மறக்காம இருக்க இன்னொரு டிப்ஸ் கொடுக்கணும்போல!
வாங்க நன்மனம்.
இந்த மாதிரிப் பணிகளில் இருப்பவர்களுக்கு, 'கவனிச்சுக் கேக்கணும்' என்பது முக்கியமா இருக்கணும்.
ஆனால்.... எல்லாம் ஏனோ தானோ..(-:
வாங்க சின்ன அம்மிணி.
ஒன்னும் அதிகம் பேசலை. ச்சும்மா நலம் விசாரிப்பு. அம்புட்டுதான்.
பெரிய பேய்களைப் பார்த்தா.... மரியாதையா நடந்துக்கணுமாம் அவுங்க உலகில்.
வாங்க கயலு.
வாழ்க்கை முழுசும் ஏகப்பட்ட டிப்ஸ் கிடைக்குதுப்பா:-)
வாங்க வல்லி.
நம்மைப் பார்த்து 'அது' ஓரங்கட்டிருச்சு:-)
சென்னை ஏர்ப்போர்ட்லே ஹைதராபாத் முத்து விற்கும் கடை ஒன்னு இருக்கு. அங்கே 'பார்த்த' ஒரு பச்சைக்கல் நெக்லேஸ் பத்தாயிரம் ரூ! இத்தனைக்கும் அது நக்லி:-)
வாங்க புதுகைத் தென்றல்.
பேயோடு சேர்த்து அங்கே பூட்டிட்டாங்களா? அடப்பாவமே!
கவனிக்க: 'உம்' விகுதியைச் சேர்க்கலை:-)))))
ச்சும்மா........:-)
வாங்க கலகலப்ரியா.
வரணும். அம்புட்டுத்தான்:-)
வாங்க கோபி.
டூர் கைடு வேலைக்கு ட்ரெயினிங்:-)
வாங்க ஐம்கூல்.
பேச்சு சுவாரசியத்துலே அதுகளும் மயங்கிரும். பேசிப்பேசியே ஆட்சியைப் புடிக்கும் ரகசியம் நமக்குப் புதுசா? :-)
வாங்க மேனகா.
கிச்சனைவிட்டு அடிக்கடி இப்படி டூர் போகணும் நீங்க என்பதால்தான்:-)))
இதுவும் சூப்பரு...
அடடா கம்யூனிஸ்ட் பேயா! இனி வெற்றிலை போட்டு கிட்டு உங்க பதிவை படிக்க கூடாதுன்னு டைல்ஸ்சை லைசால் போட்டு கிளீன் செய்யும் கிருஷ்ணாவின் பகிரங்க எச்சரிக்கை! என்ன கொடுமை டீச்சர்.
வாங்க அபி அப்பா.
கிருஷ்ணா கோச்சுக்காம இருக்க ஒரே வழிதான் இருக்கு.
சுத்தம் நம் கையில்:-)
Post a Comment