கேணிக்குப் போகலையான்னு சிங்கை எழுத்தாளர் தோழி போனவாரம் ஒரு நாள் அரட்டையில் வந்து கேட்டாங்க. போகலாமான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனால் நமக்குத்தான் இலக்கியமொன்னும் தெரியாதே. சமீபத்தில் ஞாநி சிங்கை போயிட்டு வந்துருந்தார். சித்ராதான் சிங்கை எழுத்தாளர் சங்கத்தின் இப்போதைய செகரட்டரி ( சரிதானா சித்ரா?) என்பதால், ஞாநி எப்படி? பழக இனியவரா இருக்காரான்னு கேட்டேன். (பிரபலங்களைப் பத்தி நமக்கு அவ்வளவா ஒன்னும் தெரியாது பாருங்க)' ரொம்ப நல்லவர். நம்ம கூடப்பிறந்த அண்ணன் மாதிரி மனம்விட்டுப்பேசலாம்,சுருக்கமாச் சொன்னால் ஞானி மாதிரி. அருமையான மனிதர்' ன்னு சொல்லி அவரோட செல்பேசி எண்ணும் கொடுத்தாங்க.
அந்த எண்ணைக் கூப்பிட்டப்ப என் எதிர்பார்ப்பு என்னன்னா, 'ஞாநி பேசுகிறேன்'னு சொல்லப்போறாருன்னு! அவசரக்குடுக்கையாட்டம் நானே பேச்சை ஆரம்பிச்சு வச்சேன்.(நாம் கூப்பிட்டா நாம்தானே முதலில் பேசணும்) விஷயத்தைச் சொன்னதும் வரும் ஞாயிறு மாலை கேணி சந்திப்பு நடக்கப்போகுது. சரியா நாலரைக்கு. இங்கேதான் இருப்பீங்கன்னா வாங்களேன்னார். கூடுதல் தகவலா சிறப்புச் சந்திப்பா எழுத்தாளர் பிரபஞ்சன் வர்றாருன்னார். அப்படியே விலாசமும் வாங்கி வச்சுக்கிட்டேன்.
நம்ம எஸ்.ராவின் பக்கங்களில் 'கேணி'விவரம் பார்த்த நினைவு. இன்னொரு முறைத் தேடிப் பார்த்து வச்சுக்கிட்டேன். பேச்சுவாக்கில் வல்லி சிம்ஹனிடம் சொல்லி வச்சேன். மீன் தூண்டிலில் மாட்டிக்கிச்சு. அவுங்களும் வரேன்னாங்க. ரெண்டுபேருமாக் கிளம்பிப்போனோம்.
கிணத்தடியில் பாரதியை நினைவூட்டும் விதம் பத்துப்பனிரெண்டு தென்னை மரம்! ஆனால் எல்லாம் பக்கத்து வீட்டில் இருந்து:-) இலக்கியம் பேசவும் கேட்கவுமா நண்பர்கள் வந்து சேர ஆரம்பிச்சாங்க. சரியா நாலரைக்கு ஞாநியும் பிரபஞ்சனுமா வந்து அவுங்களுக்கான பெஞ்சில் உட்கார்ந்தாங்க. கூடவே பாஸ்கர் சக்தி.
கேணி இலக்கியக் கூட்டத்தின் ரெண்டாவது சந்திப்பு இதுன்னும் போனதில் எஸ்.ரா. சிறுகதைகளைப் பற்றிப் பேசினாருன்னும் சொல்லி ஒரு சின்ன முகவுரை கொடுத்தார். (முன்னுரைன்னு சொல்லலை கவனியுங்கோ) இளைஞர்களுக்கு குறைஞ்சபட்சம் அம்பதாண்டு கால அளவில் வந்த புத்தகங்களையும், இலக்கியங்களையும் பற்றிய ஒரு தெளிவை/அறிவைச் சொல்லி வைப்பது கேணியின் நோக்கம் என்றார். என்னை மாதிரி இலக்கியமே தெரியாத ஞா,சூக்கள் என்ன செய்வதுன்னு சுத்திமுத்திக் கண்ணை ஓட்டினேன். கிணறுக்குக் கம்பிவலை மூடி போட்டுவச்சுருக்காங்க.
பிரபஞ்சன் , தன்னைக் கவர்ந்த சிறந்த சிறுகதைகள் பலவற்றைப் பற்றிக் கதையாச் சொன்னார். தி.ஜானகிராமனின் ஆறடி நீளக்கூந்தலோடு நிகுநிகுன்னு நிற்கும் பெண்களைப் பற்றிச் சொன்னப்ப, என்னையறியாமலேயே என் கை, அரையடிக்கூந்தலைத் தடவுனதென்னமோ நிஜம்.
சங்ககாலக் காதலர்களைப் பற்றி சங்க இலக்கியத்தில் வந்த ஒரு சின்னக் கதை. தலைவனும் தலைவியும் தோட்டத்துலே சந்திக்கறாங்க. கிளைவிட்டு வளர்ந்திருக்கும் ஒரு புன்னை மரத்தடியில் இருந்து சல்லாபிக்கலாமுன்னு காதலன் சொல்லத் தலைவி அந்தக் குறிப்பிட்ட மரத்தடி வேண்டாமென்கிறாள். காரணம்? அவள் சிறிய பெண்ணாக இருந்த போது அவள் கையில் இருந்து வீழ்ந்த புங்கைக்கொட்டை, முளைத்து அவளோடு கூடவே வளர்ந்த மரமாம். சுருக்கமாச் சொன்னால் தங்கை போல. அதன் கீழே இருந்து காதல்மொழி பேச ஒரு தயக்கமாம்.
இந்தக் கதையை நான் கொஞ்சம் வேறமாதிரி மாத்தி முடிச்சுருக்கலாமோன்னு நினைச்சேன். சங்கத்தைக் கொஞ்சம் சமீபகாலமா மாத்துனோமுன்னா....... " அந்த மரம் வேணாங்க. ராசி இல்லாத மரம்"
சிறந்த பத்துச் சிறு கதைகளை எழுதிட்டோமுன்னா பெரிய எழுத்தாளர் ஆகிறலாம். ஆனா அது ரொம்பக்கஷ்டமுன்னு சொன்னார். அதை எழுதறோமுன்னு சொல்லி நானூறு நாவல் எழுதுவோம். பத்துத் தேறுவது ..... ஊஹூம்.
ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. நடுவில் சிற்றுண்டியாக ஸ்வீட் காரம் காஃபி. ச்சோ...............ச்வீட்
ஏழு எழுத்தாளர்களும், தொன்னுத்திமூணு வாசகர்களுமாச் செமக்கூட்டம். பதிவுலக நண்பர்கள் பலரைச் சந்தித்தோம். உமா சக்தி, மிஸஸ்.டவுட், ஓசைச் செல்லா, உண்மைத்தமிழன், கே.ஆர், அதியமான் மற்றும் பலர்.
இவ்வளவு ஆர்வமா இத்தனைபேர் வருவாங்கன்னு எதிர்பார்க்கலை. முப்பது பேருக்குப் போதுமான இடம். அளந்து பார்த்தோமுன்னு சொன்னார் ஞாநி. அடுத்த மாதக்கூட்டத்துக்கு நண்பர்களுக்கும் விவரம் சொல்லுங்கன்னார்.
ஒவ்வொருமாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.30 வரை கேணிக்கருகில். (அதன் பின் இன்னும் ஒரு ரெண்டு மணிநேரம் வீட்டு முன்புறக் கேட்டுக்கு அருகில்) 39, அழகிரிசாமித் தெரு. கே கே நகர்.
எல்லாருடைய தொலைபேசி எண் கேட்டுச் சுற்றிவந்த நோட்பேடில் எண்களை எழுதினோம். அடுத்தமாதக் கூட்டத்தின் அறிவிப்பைப் தெரிவிப்பார்களாம். இதைவிட இமெயில் விலாசம் கேட்டுருந்தா அவுங்களுக்கு இன்னும் எளிதா இருக்குமேன்னு நினைச்சேன். எல்லோரையும்போல நானும் செல் எண்ணை எழுதிவச்சேன். முன் ஆடு போன வழியில் போக நியூஸி ஆட்டுக்குத் தெரியாதா என்ன?
திரும்பி வீட்டுக்கு வரும்போது,
"என்ன கூட்டம்மா அது?"
"இலக்கியக் கூட்டம்."
"மீடியாங்களா?"
ம்ம்ம்ம்ம்ம்ம்....... (பதிவர், இணையம் எல்லாம் விளக்கத் தெம்பில்லை)
"எழுத்தாளர்கள், சினிமா, டிவி ஆட்கள், வாசகர்கள்....இப்படிச் சேர்ந்து இலக்கியம் 'பேசுவாங்க'"
"அப்ப அது மீடியா தானேம்மா?"
"அப்படியும் சொல்லலாம்...... "
"நான் இண்டியா டுடே யில் பத்துவருசம் இருந்தேன்,"
(தூக்கி வாரிப் போட்டுச்சு எனக்கு, அடுத்த சொல் வெளிவருமுன்னே )
"ட்ரைவரா"
அங்கே எடுத்த படங்களில் சிலவற்றைப் போட்டுருக்கேன். பிரபலங்களைக் கண்டுபிடியுங்கோ.
வித்தியாசமான இனிய அனுபவம். ஞாநி, பிரபஞ்சன், பாஸ்கர்சக்தி(முடிவுரையாக நன்றி சொன்னார்) ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
வாசகர் வட்டம்
வெறும்வாயை மெல்லாமல் இருக்க....
ஞாநியும் பிரபஞ்சனும்
வேர் ஓரிடம், நிழல் வேறிடம்
த ஃபேமஸ் கேணி ஆஃப் ஞாநி
அலர்ஜி, ஆஸ்த்மாவுக்கு அலோபதி மருத்துவர் ஸ்ரீதர். அமெரிக்கா ரிட்டர்ண்ட்
Monday, July 13, 2009
ஞாநியின் கேணி
Posted by துளசி கோபால் at 7/13/2009 04:26:00 AM
Labels: அனுபவம், இலக்கியக்கூட்டம், கேணி, ஞானி
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
மிகச் சுவார்ஸமாக இருக்கிறது பதிவு. இப்படிப்பட்ட கூட்டங்களில் வெளிநாட்டில் அல்ல இங்கு கூட கலந்து கொள்வது முடியாதுள்ளது. பொறாமைப்படத்தான் முடியும் போலிருக்கிறது. பல நாட்களின் பின் இன்று உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக்க சந்தோசம்
மேடம்,
//என்னை மாதிரி இலக்கியமே தெரியாத ஞா,சூக்கள் என்ன செய்வதுன்னு சுத்திமுத்திக் கண்ணை ஓட்டினேன். கிணறுக்குக் கம்பிவலை மூடி போட்டுவச்சுருக்காங்க.//
மிகத் தேர்ந்த எழுத்தாளர்களால் மட்டுமே எழுத முடிந்த வரிகள் இவை. ஆடிப் போனேன்!
அழகா எழுதிட்டீங்க..
ட்ரைவர்.. வாய் விட்டு சிரிச்சிட்டேன்.
//என்னை மாதிரி இலக்கியமே தெரியாத ஞா,சூக்கள் என்ன செய்வதுன்னு சுத்திமுத்திக் கண்ணை ஓட்டினேன். கிணறுக்குக் கம்பிவலை மூடி போட்டுவச்சுருக்காங்க//
ஞாசூக்காக சொல்லி இருக்கிங்க !
:)
//சிறந்த பத்துச் சிறு கதைகளை எழுதிட்டோமுன்னா பெரிய எழுத்தாளர் ஆகிறலாம். ஆனா அது ரொம்பக்கஷ்டமுன்னு சொன்னார்.//
உங்க அப்பறம் கதைகள் என்னாச்சு டீச்சர்.
நல்ல செய்திப் பகிர்வு டீச்சர். நாங்களும் கூட்டத்தில கலந்துகிட்ட உணர்வு. தென்னை மரம், கேணில வலை போட்டு மூடியிருக்கது, ஸ்வீட் காரம் காபி .... இதெல்லாம் நாங்களும் மிஸ் பண்றோம் :)))
/என்னை மாதிரி இலக்கியமே தெரியாத ஞா,சூக்கள் என்ன செய்வதுன்னு சுத்திமுத்திக் கண்ணை ஓட்டினேன். கிணறுக்குக் கம்பிவலை மூடி போட்டு வச்சுருக்காங்க//
இப்படி யாருக்காச்சும் ஒருத்தருக்கு ஐடியா வரும்னு ஞானிக்கும் தெரியும் டீச்சர். அதனாலதான் முன்னேற்பாடா மூடி வைச்சிருக்காரு..
முதல் போட்டோல திரைப்படக் கதாசிரியரும், இயக்குநருமான ஒருத்தரை இப்படி வலைவீசி படம் பிடிச்சிருக்கீங்களே..!
எதுனா ஸ்பெஷல் இருக்குங்களா..?
சுண்டல் நல்லா இருந்திருக்கும்போலயே.. :)
தூங்கி எழுவதற்குள்....
துளசி தளம்.....
நீங்கள் இளைஞிதான் போங்கள்...
நேற்றைய நிகழ்வுகளை மீண்டும்
நிகழ்த்திகாட்டிவிட்டீர்கள் எழுத்தில்..
வரலாறுகள் வாக்கியங்களில்தான்
வாழ்கிறது...
விஸ்வா (எ) விஸ்வலிங்கம்...
தூங்கி எழுவதற்குள்....
துளசி தளம்.....
நீங்கள் இளைஞிதான் போங்கள்...
நேற்றைய நிகழ்வுகளை மீண்டும்
நிகழ்த்திகாட்டிவிட்டீர்கள் எழுத்தில்..
வரலாறுகள் வாக்கியங்களில்தான்
வாழ்கிறது...
விஸ்வா (எ) விஸ்வலிங்கம்...
சமீபத்தில்தான் கேணி [எஸ்.ரா கலந்து கொண்ட சந்திப்பு] பற்றி உமாஷக்தியின் பதிவு மூலம் அறிந்திருந்தேன். தங்கள் விளக்கமான பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//நான் இண்டியா டுடே யில் பத்துவருசம் இருந்தேன்//
:))))))!
அவரென்னனோ வெள்ளந்தியாய் சொன்னதுதான். இருந்தாலும் விவேக் ஒரு படத்தில் "எனக்கு ‘ஐ.ஜி’-யைத் தெரியும்" என்ற மாதிரி இருக்கிறது:)!
இப்படி யாருக்காச்சும் ஒருத்தருக்கு ஐடியா வரும்னு ஞானிக்கும் தெரியும் டீச்சர். //
அது யாருப்பா கைல சுண்டலைப் பிடிச்சிருக்காங்க.
பசியில்லையோ.ன்னேற்பாடா //:)))
தூங்கி எழுவதற்குள்....
துளசி தளம்.....
நீங்கள் இளைஞிதான் போங்கள்... நேற்றைய நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்திகாட்டிவிட்டீர்கள் எழுத்தில்.. வரலாறுகள் வாக்கியங்களில்தான் வாழ்கிறது...
விஸ்வா (எ) விஸ்வலிங்கம்...
அழகான தொகுப்பு.
ரெண்டு பதிவும் சேர்த்து இப்பதான் படிச்சேன்...சிங்கை போயிட்டு திடிரென்னு திரும்பவும் சென்னைக்கு எப்ப வந்திங்கன்னு ஒரே ரோசனை...!!! ;)
பிரபஞ்சன்...இவரோட எழுத்துக்கள் ரொம்ப படிக்கும்..அதுவும் கனவுகளை தின்னுபோமுன்னு ஒரு நாவல் (அ) சிறுகதை விகடனில் வந்துச்சி...அதான் நாயகியை என்னால மறக்கவே முடியாது..அவள் பெயர் நூதனா ;))
\\"ட்ரைவரா"\\
டீச்சர் இதெல்லாம் ஓவரு ;)))
வாங்க டொக்டர் ஐயா.
நலமா? ( டாக்டரையே நலம் விசாரிக்கும் அளவுக்குப்போயிட்டேனோ)
இந்தக் கூட்டத்துக்குப்போக அதிர்ஷ்டம் இருந்துச்சுன்னுதான் சொல்லிக்கணும்.
ஆனாலும் 'எழுத்தாளர்களுடன் உரையாடல்' என்பது அபூர்வமாத்தானே வாய்க்குது?
வருகைக்கு நன்றி
வாங்க ரத்னேஷ் சீனியர்.
இன்னும் ஒரு 'சிறுகதை'கூட எழுதலை.அப்புறம் எங்கே தேர்ந்த எழுத்தாளர்?
ஆனாலும் உங்க பின்னூட்டம் கண்டு மனசு ஆட்டம்தான் போட்டுச்சு!
நன்றி.
வாங்க கோவியார்.
ரசித்தேன்:-)
வாங்க தமிழ் பிரியன்.
நோயெல்லாம் விட்டுப்போயிருக்குமே!!
சிரிக்கவைப்பது புண்ணியங்களில் பெரும் புண்ணியமாம்:-)
வாங்க சின்ன அம்மிணி.
அதான் 'அப்புறம் கதைகள் ஆயிரத்தெட்டு'ன்னு தலைப்பை ரெஜிஸ்தர் செஞ்சு வச்சுருக்கேன்:-)
ஆகட்டும், நேரம் வரட்டும்.
வாங்க சதங்கா.
சென்னை வரும் சமயம் ரெண்டாம் ஞாயிறு கிடைக்கணும். அதுதான் பிரச்சனை, இல்லீங்களா?
வாங்க உண்மைத்தமிழன்.
அரிவாளிகள் ஒரேமாதிரி சிந்திச்சுருக்காங்கன்னு சொல்றீங்களா?
உ.த,
வந்துருந்த அத்தனைபேருமே ஒரு வகையில் ஸ்பெஷல்தான்:-)
வாங்க கயலு.
சுண்டல்...... பிரமாதம்.
கிண்டலாச் சொல்லலைன்னு நம்பறேன்.
வாங்க விஸ்வா.
முதல்முறையா நம்ம 'பக்கம்' வந்துருக்கீங்கபோல!
மிகவும் மகிழ்ச்சி.
ஆமாம்.....மூணுமுறை சொன்னதுலே எதாவது உ.கு. உண்டா?:-)))
வாங்க ராமலக்ஷ்மி.
உமாஷக்தியை நேத்துச் சந்திச்சேன்ப்பா.
அவுங்க பதிவை நான் பார்க்கலை. கவிதை எழுதுவாங்கன்னதும் ஜகா வாங்கிட்டேன். காததூரமாச்சே....
அவருக்கு நம்மோடு சேர்ந்துக்கணும் என்ற ஆர்வம். நல்ல மனிதர். நானும் ட்ரைவரைத்தான் சொல்றேன்.
வாங்க வல்லி.
அது நாந்தான்ப்பா.
சுண்டலைக் கோபாலுக்குக் கொண்டுவந்தேன்:-)
வாங்க விக்னேஷ்வரி.
நன்றி. மீண்டும் வருகன்னு சொல்லிக்கறேன்.
வாங்க கோபி.
பயணம் பழசு, கேணி புதுசு!
மருபடி சிங்கைக்குப்போகலாம் புதனுக்கு:-)))
ஓக்கேவா?
ம்ம் ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டேன் டீச்சர் பதிவுகளை. படிச்சுட்டு வரேன்
கேணி கூட்டத்தைப் பற்றிய பதிவு மொழி
நல்லா இருக்கு.நல்ல நடை.
ஞானி குறைகளையே சொல்லிக்கொண்டுருப்பதால் அவருக்கு ஒரு விதமான மனோ வியாதி என்கிறார் ஜெகத் கஸ்பர். இருந்தாலும் அந்தக்குறையில் வேறு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் யாரோ ஒருவர் பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்ற அவருடைய ஆதங்கம் எனக்குப் பிடிக்கும். ஞானியின் ஆதங்கத்தில் விளைந்த சாதனை புதுக்கோட்டை நாடளுமன்ற தேர்தலில் விழுந்த 20000 சொச்ச ஓட்டுகள் 49 ஓ க்கு விழுந்தது. மண்னாள வந்தவர்களின் வாயில் விழுந்ததென்னவா மண் மட்டும் தான். பிரபஞ்சன் பக்கத்தில் போய் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. திருப்பூரில் நான் ஆர்வமாய் கலந்து கொள்ளப் போன அணைத்து " இலக்கிய கூட்டங்களும் " எனது வண்டியின் எரிபொருளையும் எனது நேரத்தையும் வீணடித்ததை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகா இவர் அல்லவா? என்று கேள்விக்குறியை சுமந்தது இன்று இவரும் இப்படித்தானா என்று ஆச்சரியக்குறியை சுமந்து வந்துள்ளேன். உங்கள் புகைப்பட கோர்வையை பார்க்கும் " ஏதோ " நல்லது நடந்து இருக்கிறது என்று மட்டும் புரிகின்றது. நன்றி துளசி. நட்புடன் ஜோதிஜி,
http://texlords.wordpress.com
தவறவிட்டமைக்காக வருந்துகிறேன். அடுத்த மாதம் நிச்சயம் கலந்து கொள்வேன். பகிர்வுக்கு நன்றி.
(சென்னையிலா இப்போ இருக்கீங்க? சொல்லவே இல்லை...)
டீச்சர், ஞானியா இல்லை ஞாநியா?
வாங்க நான் ஆதவன்.
அச்சச்சோ..... அரியர்ஸ் இருக்கா?
நிதானமாப் படிச்சுட்டு வாங்க. ஒரே ஒரு கண்டிஷந்தான்.
நின்னு நிதானமாப் படிக்கணும். ஹரி அப்:-)))
வாங்க ரவிஷங்கர்.
நடை நல்லா இருக்குன்னது ஒரு கூடுதல் நன்றி.
வாங்க ஜோதிஜி.
இளைஞர்களுக்குச் சமகால இலக்கியத்துக்குக் கொஞ்சம் முன்னால் இருந்தவைகளையும் பரிச்சயப்படுத்துதல் நல்லதுதானே?
வாங்க குடந்தை அன்புமணி.
முடிஞ்சால் நானும் வருவேன்.
கொஞ்சநாள் மீண்டும் பயணம்.
வாங்க ராப்/
இப்படி டீச்சருக்கு வைக்கலாமா ஆப்பு:-)
ஓடிப்போய் குமுதம் புரட்டினேன்.
ஞா.............நி.
பிழையைத் திருத்திட்டேன். பார்த்துட்டுச் சொல்லுங்க.
நன்றிப்பா.
உங்க பதிவு நல்லா இருக்குன்னு நான் சொல்றது அவ்வளவு பொருத்தமாயிராது, எனவே உள்ளேன் டீச்சர்... மட்டுமே...
வாங்க தமிழ்ப்பறவை.
வந்ததுக்கே ஒரு விசேஷ நன்றியைச் சொல்லிக்கறேன்.
Post a Comment