வரவேற்பில் உள்ளே நுழைஞ்சவுடன் தாமரைக்குளம். புத்தம் புதுசாப் பூத்துச்சிரிக்கும் அல்லிகள். விஸ்தாரமாப் பரந்து விரிஞ்ச ஹால். ரெஸ்டாரண்டை நோக்கி உள்ளே நடந்தோம். அங்கேயும் அழகான பூக்கள். முதலில் பார்த்த அதே பூக்கள்தான். ஆனா வாஸ்துப்படி உருளியில் வச்ச அலங்காரம். எதிரில் பெண்டாட்டியுடன் புள்ளையார்.
பெரிய நடராசர் விக்கிரகத்தின் முன்னே விரிச்சக் குட்டிக் கம்பளத்தில் கச்சேரி. ஆரவாரமில்லாம இனிமையான இசை. வயலின் & மிருதங்கம்ன்னு ரெண்டே பேர். ஒரு ஏழெட்டுப்பேர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தால் அதிகம். நாங்க நால்வராப்போய் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிச்சோம். கோபால் முதல்நாள் ஏறக்கொறைய நள்ளிரவில் டெல்லியில் இருந்து 'ரெஸ்ட் எடுத்துட்டு'த் திரும்பிவந்துட்டார். மறுநாள் இந்தியாவைவிட்டுக் கிளம்பறோம்.
அண்ணன் குடும்பத்துடன் அவுட்டிங். வெளியே எங்காவது போய் சாப்பிடலாமுன்னு திட்டம். நாங்கள் கிளம்பும் மகிழ்ச்சியைக் கொண்டாட அவுங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கணுமுல்லே:-) அப்படியே கோபாலுக்கு சென்னையைச் சுத்திக்காமிச்ச மாதிரியும் ஆச்சு! புது ஷாப்பிங் ஒன்னும் செய்யமாட்டேன்னு பேச்சுவாக்குலே சொல்லியிருந்தேன். அதனால் அவரும் ஏகப்பட்ட குஷியில் இருந்தார்.
குடும்ப நண்பர்களான இனிக்கும் முதுமையில் இருக்கும் ஜோடியைப் பார்க்கப்போனோம். வேலைக்குப் போயிருந்தார் தலைவர். வயசு ஒன்னும் அதிகமில்லை எம்பத்திமூணுதான். ஆனாலும் படு ஸ்மார்ட் ஆளு. 83 லே ரிட்டயர் ஆனேன். இப்ப எனக்கு 83 ன்னார். இப்படித்தான் ஒரு ஏர்லைன்ஸ்க்கான ஸ்பெஷல் மீட்டிங்குலே, சுய அறிமுகம் செஞ்சுக்கவேண்டி வந்தப்ப, மத்தவங்களைப்போல நான் அது செஞ்சேன், இது படிச்சேன், இங்கே வேலை செஞ்சேன்னு அளக்காம எனக்கு 60 வருட அனுபவம் ஏர்லைன்ஸ்லேன்னு ஒரே வரியில் 'பஞ்ச்' டயலாக் விட்டவர் இவர். வீக்எண்டா இருந்திருந்தா அவரைப்பிடிச்சிருக்கலாம். ஒரே ஊர்லே இருக்கறாங்கன்னாலும் இப்படி நாங்க வரும்போதுதான் அண்ணன் குடும்பமும், இவுங்க குடும்பமும் சந்திக்க வாய்க்குதாம். பாலம் போடுவது நாங்கதான்:-)
போனவாரம் எடுத்தபடம்:-)
ஏழு கோர்ஸ் மீல்ஸ். ஒவ்வொன்னையும் கொண்டாந்து விளம்பி அதை எப்படிச் சாப்புடணுமுன்னும் சொல்லி வைக்கிறாங்க. எல்லாம் விதேசிகளுக்கான ஏற்பாடு. ஸ்வதேசிகளுக்குச் சிரிப்புதான். அப்பாவி முகத்தோடு நான், நமக்குப் பரிமாறின தாமரைகிட்டே சோறு எப்படித் தின்னணுமுன்னு கேட்டு வச்சேன்:-)
லைவ் ம்யூஸிக் இருக்குமிடங்களில் நேயர் விருப்பம் கேக்காட்டி....நம்ம சங்கீத 'ஞானத்தை' எப்படி வெளியே காட்டிக்கிறது? சின்னஞ்சிறுகிளியே, அலைபாயுதே ன்னு வாசிக்கச் சொல்லிக்கிட்டு இருந்தோம். இன்னும் ஏழெட்டு சொல்லுங்கன்னு அவுங்க கேட்டுருந்தால் நாம் அம்பேல்:-)
தெரிஞ்ச ஒன்னுரெண்டை வச்சே ஒரு பந்தாக் காட்டிருவொம்லெ:-) ஆனா ஒன்னு பாட்டுக்கச்சேரிகளில் நமக்குத் தெரிஞ்ச பாட்டு வந்துருச்சுன்னு வையுங்க அதை நாம் ரசிக்கும் விதமே அலாதி. கூடக் கொஞ்சம் தலையாட்டல், தொடையிலே தாளம் சேர்த்துக்கிட்டா யதேஷ்டம். ஆனா முன் வரிசையில் இருந்தால் கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா. நாம் தாளத்தைத் தப்பாப் போட்டுப் பாடகருக்கு பிபி எகிறடப்போகுது:-)
பொன்னாக மினுக்கும் பாத்திரங்களும், வகைவகையான சாப்பாடுகளும், மண்சட்டியில் கட்டித்தயிருமா அட்டகாசம். அமைதியான சூழலில் அடக்கமான அலங்காரம் உள்ள ஹாலில் இனிய உணவு. கவனிப்பும் நல்லா இருந்துச்சு. மாவுக்கேத்தப் பணியாரமுன்னா இங்கேக் காசுக்கேத்தக் கவனிப்பு:-) எரிச்சலா இருந்த ஒரே விஷயம் அங்கே ரெஸ்டாரண்ட் பணியாட்களின் சீருடைதான். என்னவோ விசித்திரமான டிஸைன். இதுவும் ஒருவேளை விதேசிகளுக்கான விசேஷமோ என்னவோ.
பீச் ரோடில் அங்கும் இங்குமா போனோம். தின்னது செரிக்கணுமே. ஆனா ஒன்னுத்துக்கும் பிரயோசனமில்லை. காரில் போயிருக்கக்கூடாதாம். நடக்கணுமாமே.... சரி. அப்பக் கபாலியை நாலு சுத்துச்சுத்துனா ஆச்சு. மயிலைக் கச்சேரி ரோடில் இருந்து கிழக்கு மாடவீதி திரும்பும் இடத்தில் ஒரு ஜெயின் கோவில் இருக்குன்னு பார்த்துவச்சுக்கிட்டேன். ராஜஸ்தான் மார்பிள். நுணுக்கமான ஜன்னல் வேலைப்பாடுகளுடன் சுற்றுச்சுவர் அட்டகாசம். ஆனால் வாகனங்களின் புகையால் நிறம் மங்கி அழுக்காக் கிடக்கு. ஸ்வேதாம்பரர் கோயில், பெயருக்கேற்றபடி அப்பழுக்கில்லாத வெள்ளையா ஒரு காலத்தில் இருந்துருக்கலாம். ஆனா இப்போ இல்லை(-:
தி.நகரில் ஒரு ஜெயின் கோயிலைப்பத்தி (சாந்திநாத் கோவில்) சொல்லியிருந்தேனில்லை சில வருசங்கள் முந்தி. அதைவிட இது இன்னும் அழகாப் பாரம்பரியமானக் கட்டிடக்கலையோடு இருக்கு. அதைவிடப் பழசுன்னாலும் சௌக்கார்ப்பேட்டையில் இருக்கும் ஜெயின் கோவில்தான் சென்னையில் ஆகப் பழசாம். மூத்த கோவில். எல்லாம் மார்வாடிங்க, இங்கே வந்த காலத்தில் ஆரம்பிச்சது. மனுசன் எங்கே போனாலும் இஷ்ட தெய்வத்தையும் மதத்தையும் கூடவே கொண்டு போவான் என்பதில் ஐயமே இல்லை. அப்படித்தானே இந்தச் சர்ச்சுகளும் மசூதிகளும் வந்துருக்கும்?
தமிழ்நாட்டுலேயும் சமணர்கள் ஆயிரத்திநானூறு, ஐநூறு வருசங்களுக்கு முன்னேயே இருந்துருக்காங்கன்னாலும் இப்படி மார்பிள் கட்டிடங்கள் கட்டுனதாத் தெரியலை. நம்ம நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் தீர்த்தங்கரர்கள் சிலை தூணில் செதுக்கி இருக்கு. அதுவும் சமணர்கள் கோயிலாத்தான் ஆரம்பகாலத்துலே இருந்துருக்குமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களாம். ஏறக்கொறைய 85,000 சமணர்கள் தமிழ்நாட்டுலே இருக்காங்களாம். ஒரு முறை சித்தன்னவாசல் போகணும்.
போய்வந்தவங்க யாராவது இருந்தாப் பதிவு ஒன்னு போடுங்களேன்.
வருசாவருசம் மகாவீர் ஜெயந்தின்னு தேசிய விடுமுறை விடறதால் ஜெயின் மதத்தை நிறுவினவர் அவர்ன்னு நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோமே.... அது சரியான தகவல் இல்லை(யாம்) அவர் 24 வது தீர்த்தங்கராராம். இப்போதைக்கு இவர்தான் கடைசி. இந்த மதத்துலேயும் ஒரு ஆறேழு உட்பிரிவுகள் இருக்கு.(ஹூம்....எதுலேதான் இல்லை? உங்க மதத்துலே இத்தனை சாமி, இத்தனை பிரிவுகள் இருக்கான்னு கேக்கும் வெள்ளைக்கார நண்பர்களுக்கு, 'நிறைய சாமிகள் இருக்காங்க. நிறைய பிரிவுகள் இருக்கு. ஆனால் ஒரே சாமியைக் கும்பிடும் உங்களுக்கு ஏகப்பட்ட பிரிவுகள் இருக்கேன்னு எனக்கு வியப்பு'ன்னு சொல்வேன். ஒரு இடத்துலே சிலது ஒத்துவரலைன்னா இன்னொரு உட்பிரிவு ஆரம்பிப்பது மனுச இயல்பு இல்லீங்களா? அதுக்கும் நாலுபேர் வந்து சேர்ந்துட்டாங்கன்னா அது மெள்ள மெள்ள வளர்ந்துபோயிருது. )
இந்த பேச்சு எங்கியோ போய்க்கிட்டு இருக்கு பாருங்க. அது கிடக்கட்டும். சென்னையில் மட்டும் சின்னதும் பெருசுமா நாப்பது சமணக்கோயில்கள் இருக்காம். (இது தெரியாம தி.நகர் கோயில் மட்டும்தான் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்துருக்கேன் ) இந்த மயிலாப்பூர் ஜெயின் கோவில் ஸ்வேதாம்பரர், சமணர்களின் 12வது தீர்த்தங்கரர். கோயிலுக்கு முன்னாலே வண்டியை நிறுத்திட்டுக் கோபாலும், அண்ணனும் இறங்கிப்போயிருந்தாங்க. சமயம் பார்த்துக் கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு. நானோ கோவிலைக் கண்ணால் படம் புடிச்சுக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தால் வண்டி முழுசும் காஃபி & பஜ்ஜி வாசனை தூக்கிக்கிட்டுப் போகுது. நரசூஸ் காஃபி(பொடி) வாங்கப்போனாங்களாம். பேஷ் பேஷ். கூடவே பக்கத்துக் கடையில் சுடச்சுடப் போட்டுக்கிட்டு இருக்கும் பஜ்ஜிகளில் நாலு வந்துருக்கு. ஹேண்ட் பேக்லே 'டயாஸ்டாப்' இருக்கும் தைரியத்தில் நானும் ஒரு விள்ளல் எடுத்துக்கிட்டேன். வடை வாசம் வேற பஜ்ஜி வாசம் வேற, என்னதான் ஒரே எண்ணெயில் சுட்டாலும்!!
கபாலீஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்துக்கு முன் காரை நிறுத்த இடம் கிடைச்சது. இன்னும் அவ்வளவாக் கூட்டம் வரலை. நுழைஞ்சதும் நேர் எதிரா இருக்கும் புள்ளையாருக்கு முதல் வணக்கம். மூஞ்சூரு நல்லா பெருசா பெருச்சாளி சைஸுலே இருக்கு. வலதுபக்கம் சுத்துனதும் முருகன் சந்நிதி. அவருக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு கற்பகாம்பாளைத் தரிசிக்கப்போனோம். தெற்கே பார்த்தபடி உண்மையான ஆள் சைஸுலே அம்மன் சிலை. நம்ம காந்திமதி போல! (அம்மனுக்குச் சாத்திய பட்டுப்புடவைகளை இங்கே ஒரு விலைக்கு வாங்கிக்கலாமாம். சில நாட்களில் அந்தப் புடவைகளைத் துவைச்சுக் காயப்போட்டுருப்பதையும் பார்த்துருக்கேன்.) அம்மன் சந்நிதியை வலம் வரலாம். நல்ல விஸ்தாரமா இருக்கு. வெளியே வந்தவுடன் அடுத்து லிங்க ரூபத்தில் நம்ம கபாலி. மேற்கு பார்த்த சந்நிதி. இங்கே வலம் எல்லாம் வரமுடியாதுன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் அதுக்கு வழி இருக்கான்னுக்கூடப் பார்த்ததில்லை.
அப்புறம் கோவிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவரும்போது பசு மடம், தலவிருட்சம்(புன்னை) எல்லாம் பார்த்தோம். மாடு பாப்பாக்கள் நாலைஞ்சு இருக்கு.நல்ல சுத்தமா ஆரோக்கியமா இருந்தாங்க. அதை வச்சுத்தான் பராமரிப்பைப் புரிஞ்சுக்க முடியும். இடதுமூலையில் சனீஸ்வரர் சந்நிதி. அதை வலம் வந்து வலப்பக்கமாவே வந்தால் நமக்கு வலதுபக்கம் நவகிரக சந்நிதிகள். அதையும் சுத்திட்டு வலத்தைத் தொடர்ந்தால் முதல்லே பார்த்த புள்ளையார் வந்துருவார்.
மேற்கு கோபுரவாசலுக்கு முன்புறம் திருக்குளம் இருக்கு. பெரிய குளம்தான் நடுவில் நீராழி மண்டபம் ஜோர். அறுபத்திமூவர் திருவிழாவின்போதும்(பங்குனி மாசம்) தெப்பத் திருவிழாவின்போதும்(தைப்பூசம்) அலங்காரம் ரொம்பவே நல்லா இருக்குமாம். எல்லாம் போட்டோக்களில்தான் பார்த்துருக்கேன். ரொம்பவே சிம்பிள் & ஸ்வீட்டான தேர். அழகாவும் இருக்கு. அந்த 63 பேரையும் வீதிக்குக் கொண்டுவந்து வலம்வர வச்சுருவாங்க. அதனால் மயிலையே கயிலையாட்டம் இருக்குமாம்.
சமீபத்தில் ஒரு நாவல் வாங்கினேன்.பாலகுமாரன். புருஷவதம். பெயரே அப்படிச் சட்னு கவ்வி இழுத்துருச்சு. இன்னும் என்னென்ன வதைகள் பாக்கி இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு. அதுலே கபாலி கோயில் மதில் சுவரைக் கடல் அலை வந்து மோதாம இருக்க, மதிலுக்கருகில் பாறைகள் போட்டு வச்சுருந்தாங்கன்னு படிச்சதும் லேசான குழப்பம். கோவில் சரித்திரம் தெரியவந்தப்ப எல்லாமே க்ளியர் ஆயிருச்சு.
இப்ப இருக்கும் கோவில் ஒரு முன்னூறு வருசப் பழசுதான் அதுக்கு முந்தி கபாலி இருந்த இடம் சாந்தோம் சர்ச் இருக்கு பாருங்க அந்த இடமாம். அங்கே இருந்த கோவிலை எதுக்கு இடிச்சாங்கன்னு தெரியலை. சர்ச் கட்டத்தான் இடிச்சாங்கன்னு ஒரு இடத்துலே இருக்கு. இன்னும் சுவையான குறிப்புகள்கூட இருக்கு. படிச்சுத்தான் பாருங்களேன்.
இதைப் படிச்சதும் நம்ம தாஜ்மஹாலைப் பத்தி வந்துக்கிட்டு இருந்த செய்திகள்கூட உண்மையா இருக்குமோன்னு ஒரு சம்சயம். எப்படியோ பழைய கோவில் இருந்துருந்தா அதுக்கே வயசு ஆயிரத்துநூறு தாண்டி இருக்கும்! கோயிலுக்குள்ள ஒரு விசேஷம் என்னன்னா ஸ்ரீ ராமர் வழிபட்டுருக்காராம். எப்போ? சீதையைத் தேடிக்கிட்டு வந்தப்பயா? அது ஆச்சே.....ரெண்டு அவதார காலத்துக்கு முன்பு!!!
சரி. நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். கோவிலை விட்டு வெளியே மாடவீதியில் தேர்முட்டி அருகே வரும்போது, ஒரு சின்னக் கூட்டம் தெருவை அடைச்சாப்புலெ. அப்பத்தான் அண்ணன் ஒரு உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தக் கூட்டம் பஜ்ஜிக்காக வெயிட்டிங்ஸ். அங்கேதான் மயிலையில் தலை சிறந்த பஜ்ஜி கிடைக்குமாம்.
வேணாம் விஷப்பரிட்சைன்னு அவரை அடக்கவேண்டியதாப் போச்சு. தங்கையின் கடமையைச் சரிவரச் செஞ்சேன்:-)
தொடரும்.......:-)
Sunday, July 05, 2009
சாப்புடச் சொல்லித் தர்றாய்ங்கப்பா!!..........(2009 பயணம் : பகுதி 40)
Posted by துளசி கோபால் at 7/05/2009 02:40:00 PM
Labels: அனுபவம், கபாலி, தக்ஷின், ஜெயின் கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
மைலாப்பூரைச் சுத்திட்டீங்க. அந்த ஜெயின் கோவிலுக்குள்ள இன்னும் நான் போனதில்லை. நல்லா இருக்கும்னு கேள்வி.
லிஸ்ட் போட்டுக்கிட்டு ப் போக வேண்டியதுதான்.
தக்ஷின்ல முன்னால இப்படி இல்லம்மா. இப்பத்தான் இந்த மாதிரி ரெண்டுங்கெட்டான் அங்கவஸ்திரத்தைப் போட்டு இருக்காங்க.
நல்லா கழுத்தைச் சுத்திப் போட்டுக்கலாம்.
சாப்பாடு நல்லாத்தான் இருக்கு. பரமேஸ்வரன்னு ஒருத்தர் தோசை போட்டுக்கொடுப்பார் முன்னாடி. ரிடயர் ஆகிட்டாரோ என்னவோ!!
கபாலி கோவில் மிளகாய் பஜ்ஜி ரொம்ப ஃபேமஸ். பத்து வருடங்களுக்கு முன்னால.
இப்ப ம்ஹூம் பக்கத்தில போகக் கூடாது:)
கோவில்ல கார்த்திகேயனைப் பார்த்தீங்களா. சிங்காரவேலனா அழகா மயிலோட உட்கார்ந்திருப்பாரு.
//சமீபத்தில் ஒரு நாவல் வாங்கினேன்.பாலகுமாரன். புருஷவதம்//
நானும் ரெண்டு வருசம் முன்னாடி இந்தப்புத்தகம் வாங்கினேன்.தோழிகளும் படிச்சாங்க. ஆனா ரங்கமணிகளோட கமெண்ட் எல்லாம் ஒரே மாதிரித்தான் இருந்துது இந்தத் தலைப்ப பாத்துட்டு. :)
நியூசிக்கு கிளம்பறீங்களா டீச்சர்? பேரரை பார்த்தா அர்த்தநாரீஸ்வரர் மாதிரி இருக்கு.
தட்டில் இருந்த அயிட்டத்தையெல்லாம் ஒரு கை பார்த்தீங்களா டீச்சர்?
Kabali ya nannave suthi varalam; Pinnale alaga pakarathuku salikatha sirichute irukira Durgai; Sandikeswarar, Durga Lakshmi Saraswathi; aprum corner le Bairavar, Veerabadrar lam parthutu Polla Pillayarayum parthutu innnoru corner le Suriyan parthutu tirumbina Dakshinamurthi, Selva vinayagar; Santhana kuravargal, Somaskandar nu vantha oru round mudinjudum;
//எதிரில் பெண்டாட்டியுடன் புள்ளையார்.//
என்ன கொடுமை இது புள்ளயாருக்கு கல்யானம் ஆயிடுச்சா?
சித்தன்னவாசல்க்கு போகனும் போகனுன்னு இன்னும் முடியல.. :(
அடுத்த ட்ரிப்லயாச்சும் பாக்கலாம்..
சித்தி புத்தி பத்தி சொன்னா ஷாகுல் என்ன சொல்வாரோ.. :))
ம்ம்ம்...வந்துக்கிட்டே இருக்கேன்..
//எரிச்சலா இருந்த ஒரே விஷயம் அங்கே ரெஸ்டாரண்ட் பணியாட்களின் சீருடைதான். என்னவோ விசித்திரமான டிஸைன்//
கொஞ்சம் சீரில்லாத உடையாத்தான் இருக்கு:-). இதை அங்கவஸ்திரம் மாதிரியோ, அல்லது தலப்பா மாதிரியோ உபயோகப்படுத்தியிருந்தா நல்லா இருந்திருக்கும் போலிருக்கு.
சாப்பாட்டை மிச்சம் வைக்காம சாப்பிடுறவங்களுக்கு, டைனிங் டேபிளில் இருக்கும் ட்ராபியை கொடுப்பாங்களாமா:-)))))
வாங்க வல்லி.
புள்ளையாரைப் பார்த்தகையோடு தம்பியின் தரிசனம்தான்:-)
இந்த சீருடை தெரிஞ்செடுக்கவும் ஒரு அதிகாரி இருந்துருப்பாரே...அவரைச் சொல்லணும்.
இனி நீயே இதைப் போட்டுக்கோன்னு.
நமக்குத் தோசை வரலை. அடை அப்பம். இடியாப்பம்முன்னு வந்துக்கிட்டே இருந்துச்சு.
வாங்க சின்ன அம்மிணி.
அந்த நாவலில் அநேக புது விஷயங்கள் இருப்பதைக் கவனிச்சீங்களா?
மனுசனைச் சும்மாச் சொல்லக்கூடாது. நிறைய ஹோம்வொர்க் பண்ணி இருக்கார்.
வாங்க சிந்து.
அநேகமாக் கிளம்பும் சமயம்தான்.
தாமரைக்கு மனசு ஒடைஞ்சுருமேன்னு திங்க வேண்டியதாப்போச்சு:-))))
வாங்க பகா.
அட! அங்கே கபாலி முன்னால் கம்பித்தடுப்பு இருக்கே அதோட நின்னு கும்பிட்டு வர்றதுதான் வழக்கம். அம்மன் சந்நிதியுள் சுத்துவதுபோல அங்கேயும் சுத்த முடியுமா?
இது தெரியாமப்போச்சே.
வருகைக்கும் விவரத்துக்கும் நன்றிங்க.
வாங்க ஷாகுல்.
திருவையாறு கோவிலில் ரெண்டு பெண்டாட்டிகளோடு இருக்காருப்பா.
முத்துலெட்சுமி சொல்லி இருப்பதைக் கவனிச்சீங்களா? :-))))
வாங்க கயலு.
போகும்போது சொல்லுங்களேன். நானும் வர முயற்சிக்கிறேன்.
வாங்க கோபி.
வாங்க. ஆறுதலா வாங்க. எங்கெ போயிடப்போறோம்:-)
வாங்க ஐம்கூல்.
எங்கே ஆளைக் காணோம்?
வலை மறுபடி புட்டுக்கிச்சா?
நீங்க சொல்லும் கண்டிஷனுன்னா...ட்ராஃபி யாருக்கும் இல்லை:-)
கொஞ்சூண்டு குழம்பாவது மிஞ்சிரும்தானே?
//வாங்க ஷாகுல்.
திருவையாறு கோவிலில் ரெண்டு பெண்டாட்டிகளோடு இருக்காருப்பா.
முத்துலெட்சுமி சொல்லி இருப்பதைக் கவனிச்சீங்களா? :-))))//
அவருக்கும் ரெண்டா? எங்க ஊருல தனியாதான் இருப்பாரு.
அன்புள்ள டீச்சர், நான் ரொம்ப நாளாக உங்களை வாசிக்கிறவன். (திண்ணை எழுத்துக்களிலிருந்து..) எனக்கு நாங்குநேரி தான் சொந்த ஊர். இப்போ ப்ளோரிடாவில் இருக்கிறேன். திருநெல்வேலியில் வீடு கட்ட பிளான் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். அப்போ தான் உங்க போஸ்டுல இருக்கிற போட்டோஸ் ஞாபகம் வந்துச்சு. இன்னிக்கு திரும்பவும் வந்து பாத்தேன். ஆனா போஸ்டுல அந்த கட்டுமான கம்பெனி பெயர் இல்லை. தயவு செஞ்சு அந்த கம்பெனி பெயரை எனக்கு சொல்ல முடியுமா?
அன்புடன்
JEYARAJAN RAMANUJAM ( JEYARAJAN@GMAIL.COM)
வாங்க ஜெ.
http://www.shifahousing.com/
இதுதான் கம்பெனி பக்கம்.
நல்லாதான் இருக்கு வீடுகள் எல்லாம்.
போய்ப் பாருங்க.
நம்ம பதிவு பயனுள்ளதுன்னு இப்பவாச்சும் மக்கள்ஸ் புரிஞ்சுக்கிட்டாச் சரி:-))))))
ஷாகுல்,
உங்கூர்லே பொழைக்கத்தெரியாதவரா இருக்கார் போல!!!!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
பகா,
கபாலியைச் சுத்திட்டேன். அறுபத்து மூவர் உற்சவ மூர்த்திகளையும் கண்டேன்.
நன்றி பகா.
நீங்க சொல்லலைன்னா உள்ளே போயே இருக்க சான்ஸே இல்லை.
Wow...Kabaliya suthi pathathukaga illai. Ichiriyenayum ninaivil vaithu tirumba Dharishanam senjaprum quote pannathuku.
என்ன பகா...இப்படி?
'சிரி'யேன்னு யாருமே இல்லை.
ச்சும்மா..... சிறியோரும் பெரியோரும் நம்ம வலைகளில் சமம்தான்.
நம்ம பதிவர்களில் ஒருத்தர் சிறியேன் என்று இழித்தலும் இல்லை. பெரியோர் என்று வியத்தலும் இல்லைன்னு சொல்லி இருக்காங்க.
thiruvasagam lyrics in tamil .
Post a Comment