Monday, July 27, 2009

ஒருநாளைப்போல ஒரு நாள் இருக்கறதில்லைப்பா.....

அதே மாதிரித்தான் பொழுது விடியுது, சூரியன் கிளம்பும்போதே நெருப்புத் தழலாத் தகிச்சுக்கிட்டு வரான். சூடான காற்று அலைஅலையா அடிக்கிறதைப் பார்த்தால் சஹாராவில் இருக்கோமோன்னு தோணுது. போகட்டும், மாலையிலாவது தென்றல் வருதான்னா.....

இந்த ஒரு வாரம் மட்டும் மாலைத் தென்றலுக்கு கேரண்டியாம். தாஸ்யம் புண்ணியம் கட்டிக்கிட்டாங்க. மனசைக் குளிர்விக்கும் பாடல்களும், ஆடல்களுமாப் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் ரெண்டே நாட்கள்தான். (நடுவிலே புதன் & வியாழனை விட்டுட்டோம் ரெண்டு செட் மோகினியாட்டம் மிஸ் ஆகிப்போச்சு)

வெள்ளி மாலை வழக்கம்போல் கிளம்பிப்போய், முதலில் பதுமநாபனைத் தரிசனம் செஞ்சுட்டு, 'கோச்சுக்காதேடா........... இதோ அம்மா டான்ஸ் பார்த்துட்டு வந்துடறேன்'னு சமாதானம் சொல்லிட்டு ஹாலில் புகுந்தேன். ராதிகா வைரவேலவன். அந்தக் கால வைஜயந்தி மாலாவை நினைவுபடுத்தும் முகம். முகம் மட்டுமா அவுங்க போட்டுருந்த உடை கூட அந்தக் கால ஸ்டைலில் நல்லா இறுக்கமில்லாம லூசா இருந்துச்சு. பழைய காலங்களில் பரதநாட்டியத்துக்குன்னு தனியா உடை தைக்க மாட்டாங்களாம். புடவையையே அப்படி அழகாக் கட்டி விடுவாங்களாம். இப்பப் பாருங்க எங்கே பார்த்தாலும் ரெடிமேடு, இதுலேயும் வந்துருச்சு. பாண்டி பஸார்லே நம்ம (??) தையல்கடைக்கு அடுத்த கடையில் பரதநாட்டிய உடைகளைத் தைச்சுக்கிட்டு இருப்பாங்க. நான் போகும்போதெல்லாம் கண் நிறையப் பார்த்துட்டுத்தான் வருவேன். வாசலில் ஒரு பொம்மைக்கும் இந்த உடை போட்டு வச்சுருப்பாங்களா...... பேசாம நம்ம 'ஜில்ஜில் ரமாமணி'யாட்டம் ஒன்னு வாங்கிக்கலாமான்னுகூடத் தோணியிருக்கு:-))

ராதிகா வைரவேலவன்
கொஞ்சம் லேட்டாப் போனதால் 'என் சீட்டு' பறிபோயிருந்துச்சு. இசைக்குழுவில் ஒரு பெண்மணி, தப்லா வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆட்டமும் பாட்டமும் அருமை. ராதிகாவுக்குப் பரிசளிக்க வந்தவர் யாருன்னு எனக்குத் தெரியலை. நாட்டியத்தைப் பாராட்டி, உண்மைக்குமே அருமைன்னு புகழந்தார். அக்கம்பக்கத்துலே அவர் யாருன்னு கேட்டால்........ எல்லாம் சுத்தம். உள்ளூர் மக்கள்ஸ் ஒன்னையும் கண்டுக்கறதில்லையா ? பார்க்கறதுக்கு பெரியமனுஷத்தனமாக் கலா ரசிகர்களா என் கண்களுக்குத் தெரிஞ்ச இன்னும் ரெண்டுபேரைக் கேட்டேன். ஊஹூம்..... அந்தப் பக்கம் வந்துக்கிட்டு இருந்த கோபிகா வர்மாவையேக் கேட்டால் ஆச்சு. ஃப்ரொஃபஸர் ரகுராமன் அவர்களாம். கலாக்ஷேத்ரா இயக்குனர்.. நம்மைப் பத்திச் சின்ன அறிமுகம் ஒன்னும் செஞ்சுக்கிட்டேன். இந்த நாடகவிழா இடுகைகளோட சுட்டி அனுப்புங்களேன்னாங்க. ஆஹா.... அனுப்பிடலாம். நோ ப்ராப்ஸ்:-) நடனக் கலைஞர் ராதிகாவும் கலாக்ஷேத்ரா மாணவிதான், இப்போ அவுங்க அங்கேயே நாட்டியம் சொல்லித் தர்றாங்கன்ற விவரமும் கிடைச்சது. யாருக்காவது நடனம் கத்துக்கணுமுன்னாச் சொல்லுங்க, மயிலையில் தனியா வகுப்புகள் நடத்துறாங்களாம். ( எல்லாம் ஒரு விளம்பரம்தான், நம்ம சேவைக்கு)
அடுத்த நிகழ்ச்சி குச்சுப்புடி நடனம். 'குச்சிவச்சுக்கிட்டா ஆடுவாங்க?'ன்னு தன்னுடைய ஞானத்தை (என்னிடம்) காமிச்சுக்கிட்டார் நம்ம கோபால். ஆந்திர மாநிலத்தில் குச்சுப்பிடி என்ற ஊரில் இந்த பத்ததியில் ஆடிப் பிரபலமான நடனமுன்னு கோடி காமிச்சேன்.

சித்தேந்த்ர யோகி என்பவர்தான் இந்த வகை நாட்டியத்தை ஆரம்பிச்சுவச்சார்ன்னு சொல்றாங்க. பரதமுனி ஆரம்பிச்சது பரதநாட்டியமுன்னு இருக்குல்லே அந்த மாதிரி! அவர் ஒரு அநாதையாம். அந்த கிராமத்து மக்கள் எல்லாம் சேர்ந்து அவரை வளர்த்துருக்காங்க. இவருக்குத் திருமணம் செஞ்சு வைக்கலாமுன்னு அவுங்க எல்லோரும் முடிவு செஞ்சு பொண்ணு வீட்டுக்கு நதியைக் கடந்து போக ஒரு படகில் ஏறுனாங்க. பாதி வழியில் படகு கவுந்துருச்சு. கொஞ்ச தூரம்வரை நீந்திப்போன இவருக்கு அதுக்குமேலே நீந்தமுடியாமப் போச்சு. கடவுளை தியானிச்சு உனக்கே என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன்னு வேண்டிக்கிட்டார். கரையும் சேர்ந்தார். அதுக்குப்பிறகு கடவுள் மேல் பாட்டுக்கள் எல்லாம் பாடி இறைவன் சேவையா நாட்டிய நாடகம் ஒன்னு எழுதுனார். அதுலே நடிக்க அந்த அக்கிரஹாரத்துப் பசங்களைப் பயிற்றுவிச்சாராம். அந்தக் காலத்துலே ஆம்பிளைங்க மட்டுமே இந்த நாட்டியத்தை ஆடி இந்தக் கலையை வளர்த்துருக்காங்க. நம்ம தமிழ்நாட்டுலேகூட மெலட்டூர் என்ற ஊரில் நடக்கும் 'பாகவத மேளா' ரொம்பப் பிரபலமாச்சே.

பலநூற்றாண்டுகள் ஆனபிறகு, கோல்கொண்டா அரசர் அப்துல் ஹாஸன் தனேஹா என்றவர் இந்த நாட்டியத்தை வெகுவா ரசிச்சு, இதை இன்னும் நல்லபடியா அபிவிருத்தி செஞ்சுக்குங்கோன்னு 600 ஏக்கரா உள்ள ஒரு கிராமத்தையே கொடுத்தார். (அந்த கிராமம்தான் குச்சுபிடின்னு நினைக்கறேன்.) நாட்டியம், நிருத்தம், நிருத்யான்னு மூணுவிதம் முக்கியமானவை இந்த வகை நடனங்களில். நாட்டிய நாடகம் என்றதால் எக்கச்சக்கமான நபர்கள் சேர்ந்து ஆடுவாங்களாம். மகாபாரதக் கதைகள், ராமாயணக்கதைகள்ன்னு ஆடும்போது கேரக்ட்டருகளுக்குக் கம்மியா என்ன? (யார் வந்தாலும் சேர்த்துக்கலாம். ராமாயணமுன்னா வானரக்கூட்டம். பாரதமுன்னா, குருக்ஷேத்ரப் போர்க்கள வீரர்கள்)

காலப்போக்கில் இந்த வகை நடனத்திலும் புதுமைகளைப் புகுத்திப் பெண்களும் இந்த நடனத்தில் பங்கெடுக்க ஆரம்பிச்சு இப்பப் புகழ்பெற்ற இந்திய நடனவகைகள் எட்டில் இதுவும் ஒன்னாக இருக்கு. குழு நடனமா இருந்து இப்ப தனி ஆளா ஆடும்வரை வந்தாச்சு. தாம்பாளத்துலே நின்னு ஆடிக்கிட்டே தாம்பாளத்தின் விளிம்பைக் கால்விரல்களால் பிடிச்சு தட்டை நகர்த்திக்கிட்டே ஆடுவதும்., தலையில் ஒரு செம்பு வச்சுக்கிட்டு அது விழாமல் ஆடுவதுமாப் பார்க்கப் புதுமையான நடனம் இது. சொம்புலே தண்ணி கூட இருக்கும்!

இன்னிக்கு ஆடவந்தவங்க ஜயப்ரியா விக்ரமன். செழிப்பா இருந்தாங்க. முகத்தில் நல்ல களை. நகை நட்டெல்லாம் பயங்கரமா ஜொலிச்சது. அதிலும் திருமண் டிசைன் பதக்கம் .........ஹைய்யோ.... என்ன சொல்வேன்!!! (பழைய காலத்துலே மரத்தால் ஆன ஆபரணங்களை அணிஞ்சு ஆடுவாங்களாம். ஆம்பிளைங்க ஆட்டத்துக்கு அது போதுமுன்னு நினைச்சுருக்கலாம்) அருமையான நடனம். அற்புதமான முக பாவம். முதல் மூணு நடனம் முடிஞ்சதும் தட்டு வரப்போகுதுன்னு நான் நினைக்கும்போது திடீர்னு ஆட்டத்தை முடிச்சுக்கிட்டாங்க. என்ன காரணமோ? உடல்நலக்குறைவாக இருக்கலாம். அரைமணி நேரம் கூடுதலா சாமிகும்பிட நேரம் உண்டாக்கிக் கொடுத்துட்டாங்க. அப்புறம் அவுங்களும் கோயிலுக்குள்ளே வந்து சாமி கும்பிட்டாங்கன்னு வையுங்க.
ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே ...இவுங்க வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் மாணவி. கூடுதல் விவரம் வேணுமுன்னா இதோ.. திரைப்பட இயக்குனர் விக்ரமனின் மனைவி. அழகான நீலக் கலர் உடை பிரமாதம் போங்க. பரதநாட்டியத்துக்கும் இந்த நடனத்துக்கும் நிறைய ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உண்டாம். உடையில்கூட விசிறியா வரும் முன்பாகம் பரதநாட்டியத்துக்கு மூணு அடுக்குன்னா இதுலே ஒரே ஒரு அடுக்கு.

ஜயப்ரியா
சின்ன வயசு ஜெயசித்ராவின் சாயல்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார். எப்பவும் யாரைப் பார்த்தாலும் ஏற்கெனவே பரிச்சயமாயிருந்த முகங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இயற்கையா வந்துருது. மன அடுக்குகளில் பதிஞ்சு கிடக்கும் பலவிஷயங்களில் இதுவும் ஒன்னு:-)

21 comments:

said...

சின்ன வயசு ஜெயசித்ரா நல்லா சுட்டியா இருக்குமே:)


வாழையடி வாழை படம் ஒண்ணே போதும்.
இன்னும் விசேஷமா யாரோ ஆடறாங்கனு கேள்விப் பட்டேனே. அவங்க ஆட்டத்துக்கு நீங்க போலியா!!!

அப்புறம் சுவாரஸ்யமன எழுத்தாள்ர் விருதுக்கு வாழ்த்துகள் பா. நம்ம செட்டு சின்ன அம்மிணி கொடுத்தது இன்னும் விசேஷம்.

வெய்யில் போயி மழை வருதாம்.சிஎனென்ல சொன்னாக்க. அதனால கவலையை விடுங்க.
கலாக்ஷேத்ரா தலமையைப் பார்த்தீங்களா.. அட

said...

வாங்க வல்லி.

//இன்னும் விசேஷமா யாரோ ஆடறாங்கனு கேள்விப் பட்டேனே. அவங்க ஆட்டத்துக்கு நீங்க போலியா!!!//
அச்சச்சோ.... என்னைப் போலியா ஆக்கிட்டீங்களேப்பா:-)

அவுங்களுக்குப் பதிலா நான் போலியா ஆடுனா நல்லாவா இருக்கும்?

போனேன்ப்பா. அடுத்த இடுகையில் காண்க:-)

said...

நாட்டியமும் உடைகளும் பற்றிய வர்ணனைகள் சிறப்பு.

said...

அருமையான பதிவு.பரத நாட்டியத்தை விரும்பாதவங்க யாராவது இருக்காங்களா என்ன?உடைகள், மற்றும் நகைகள் தனி அழகு.

//குச்சுப்புடி நடனம். 'குச்சிவச்சுக்கிட்டா ஆடுவாங்க?//

இப்படித்தான் நானும் நினைச்சதுண்டு.பள்ளி ஆண்டுவிழாவில் ஒரு சிறுமி மேடையில் வந்து நின்னபோது ஒன்னும் புரியல. ஆனா தலையில் தண்ணிச்செம்பு, அதுக்கு மேல தீபத்தோட அந்தப்பெண் தாம்பாளத்துல நின்னு ஆடுனா..அடடா.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது.

said...

பயணத்தின் போதே உடனுக்குடன் பதிவு அமர்க்களம்.புது பாடத்திட்டம் நல்லா இருக்கு.தொடருங்கள்.

said...

நிறைய விவரங்கள் தெரிஞ்சுகிட்டேன்..

கடைசியா பேசறாங்களே அந்த அம்மா யாரு?

said...

// பேசாம நம்ம 'ஜில்ஜில் ரமாமணி'யாட்டம் ஒன்னு வாங்கிக்கலாமான்னுகூடத் தோணியிருக்கு:‍))//

அதிசயமா இருக்கே ! எனக்குதான் தோணிச்சு அப்படின்னு நினைச்சேன்.

பரதத்தின் அரிச்சுவடி இங்கே தரப்பட்டுள்ளது.

http://menakasury.blogspot.com/2007/08/bharata-natyamindian-classical-dance.html

எந்த ஒரு நடன நிகழ்ச்சியின்பொழுது உதவிடும்.

மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

said...

நல்ல பதிவு...

said...

அப்போ பரதநாட்டிய ட்ரஸ்னு தனி ட்ரஸ் இருக்கா? இது தெரியாம வீட்ல எல்லோரும், எவ்ளோ அழகா சாரியைக் கட்டியிருக்காங்க பாரேன்னு ஆச்சரியப்பட்டுக்குவாங்க.. போய் உங்க பதிவைக் காட்டிச் சொல்லணும் டீச்சர்..
உங்க டான்ஸ் ப்ரோக்ராம் எப்ப டீச்சர்?

said...

//கூடுதல் விவரம் வேணுமுன்னா இதோ.. திரைப்பட இயக்குனர் விக்ரமனின் மனைவி. //
அப்போ, லாலா....லல்லா...அப்படின்னு ஒரு பாட்டுக்கும்(எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைவு படுத்திக் கொள்ளவு) ஆடினாங்களா டீச்சர்? :)))))

said...

\\அப்புறம் சுவாரஸ்யமன எழுத்தாள்ர் விருதுக்கு வாழ்த்துகள் பா. நம்ம செட்டு சின்ன அம்மிணி கொடுத்தது இன்னும் விசேஷம்\\

இன்னாது!!!!!!!!!!!!!!!

சின்ன அம்மணி உங்க செட்டா!!!!!!!!!!!!!!!!!!!!?

சின்ன அம்மணி அக்கா சொல்லவேல்ல!;))))

said...

வாங்க மாதேவி.

ரசிச்சதுக்கு நன்றிப்பா

said...

வாங்க ஐம்கூல்.

கடைசியில் அந்த விளக்குகளை , வாயால் ஊதி அணைச்சுட்டு, தலைமேல் இருக்கும் செம்பில் உள்ள தண்ணீரில் கை கழுவித் தாம்பாளத்தில் ஊத்துவாங்க சிலர்.
எல்லாம் ஆடியன்ஸுக்கு தண்ணி இருந்துச்சுன்னு காமிக்கத்தான்!

நாங்க ஃபிஜியில் இருந்தப்ப , ஒரு குஜராத்திப் பொண்ணு (வயசு ஏழோ எட்டோதான் இருக்கும்) காஸெட் மூலம் பார்த்துத் தானே கத்துக்கிட்டு இந்த தாம்பாள வித்தையைப் பிரமாதமாப் பண்ணும்.

said...

வாங்க கயலு.

மில்லியன் டாலர் கேள்வி.

தெரிஞ்சவுங்க யாராவது சொன்னால்தான் உண்டு.

இல்லைன்னா கோபிகா வர்மாவுக்கு மடல் அனுப்பிக் கேட்டுச் சொல்லவா?

said...

வாங்க மீனாட்சி அக்கா.

நாமெல்லாம் ஒரே குடும்பமில்லையா? அதான் ஒரே தோணல்:-)))))

சுட்டிக்கு நன்றிக்கா.

said...

வாங்க தமிழ் வெங்கட்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

மீண்டும் வரணும்.

said...

வாங்க ரிஷான்.

ஆடலாமுன்னா...கூடம் ரொம்பக் கோணலா இருக்கேப்பா:-))))

said...

வாங்க லக்ஷ்மி.

குச்சுப்புடின்னா லா...லா....லா....
எப்படிப்பா?
லு லு லு லு லு ன்னுதானே வரணும்:-)))

said...

வாங்க கோபி.

அம்மணி அக்காவிடம் சொல்லாததும் சொல்ல மறந்ததுமுன்னு ஒரு இடுகை போடச்சொல்லிக் கேளுங்க :-))))))))

said...

//சின்ன அம்மணி அக்கா சொல்லவேல்ல!;))))
//
கோபி கூட நம்ப சேட்டுதான், இல்லல்ல, நம்ம செட்டுதான், அப்படித்தானே டீச்சர்.

said...

டீச்சர் வகுப்புலே இல்லைன்னா ஒரு சேட்டைதானா சின்ன அம்மிணி?