சாங்கின்னதும் விமானநிலையமும், சிறைச்சாலையும்தான் நினைவுக்கு வருதுன்னு சொல்லும் மக்களுக்கு மூணாவதா இன்னொரு விசேஷமும் அங்கெ இருக்குன்னு சொல்லிக்கவா? சாங்கி ராமர் கோவில். சில வருசங்களுக்குமுன்னே குடமுழுக்கு நடந்த சமயம் நான் இங்கே இருந்தாலும் போய்வர முடியாமப்போச்சு. தொலைக் காட்சியில் காமிச்சதைப் பார்த்துக்கிட்டேன். இன்னிக்குப் போகலாமுன்னா கோபாலுக்கு டெலி கான்ஃபரன்ஸ் இருக்காம். முந்தியெல்லாம் வேலையும் வீடும் தனித்தனியா இருக்கும். இப்ப எல்லாமே கைக்கு அடங்குன சமாச்சாரப்போனதால் எங்கே 'உக்கார்ந்துருந்தாலும்' ஆஃபீஸ் வேலையைச் செஞ்சுக்கலாம். காலம் மாறித்தான் போச்சு.
நான் மட்டும் தெருவலம் கிளம்பினேன். கடவுள் வாழ்த்து மாதிரி முதலில் சீனுவின் தரிசனம். எத்தனைமுறை இந்தக் கோவிலைப் படம் எடுத்தாலும் மனசு அடங்கறதில்லை. இன்னும் இன்னும்ன்னு எடுத்ததையே திரும்பத்திரும்ப ஒவ்வொரு தடவை இங்கே வரும்போதும் எடுத்துக்கிட்டே இருக்கேன் & இருப்பேன் . காரணம் எதுவா இருக்குமுன்னு யோசிச்சா......... இங்கே படம் எடுக்கத் தடை ஏதுமில்லை. மூலவரைக்கூடப் படம் எடுத்துக்கலாம் என்ற சுதந்திரம். ஆஹா...அ(த்)து! சுதந்திரம் கிடைச்சா அதைப் பயன்படுத்தாமச் சும்மா விட முடியுமா? அதுவும் இது சும்மா வந்த சுதந்திரம். பல உயிர்களைப் பலிகொடுத்து வாங்கிய இந்திய சுதந்திரத்தையே மிஸ் யூஸ் பண்ணும் நமக்கு....................(மூச். அதெல்லாம் சொல்லப்பிடாது)
ஆனா ஒன்னு சுதந்திரமுன்னாவே கூடவே பொறுப்பும் வரணும். அதுக்கேத்தபடி அடுத்தவங்களுக்கு எந்தவிதமான உபத்திரவமும் தராம நானுண்டு என் கெமெரா உண்டுன்னு இருந்தேன். கோவிலின் சுத்தமும், சிலைகள் எல்லாம் பளிச்ன்னு இருக்கும் அழகும் 'எடு எடு'ன்னு சொல்லும்போது.......
கோவிலில் ஏதோ வழிபாடுன்னு பிரசாதங்கள் கொண்டுவந்து விநியோகம் பண்ணினாங்க ரெண்டு பேர். கேசரி, கொத்தமல்லிவிதை சாதம்னு. முதலில் சின்னதா அளவாக் கத்தரிச்ச சாப்பாடு வைக்கும் காகிதம்( ப்ரவுண் நிறம், ஒரு பக்கம் மெழுகுபோல் பளபளப்பா இருக்கு) ஒருத்தர் கொடுத்துக்கிட்டே வருவார். பின்னாலேயே பிரசாதம் உள்ள பாத்திரத்துடன் ஒருவர். சாப்பிட்டு முடிச்சவுடன் அதுக்குன்னு வச்சுருக்கும் குப்பைக்கூடையில் போட்டுட்டுப் பக்கத்துலே இருக்கும் குழாயில் கை கழுவும் ஏற்பாடு. திரவ சோப்கூட வச்சுருக்காங்க. என்னையறியாமல் நம்மூர் கோவில்களின் சுத்தங்களை நினைச்சுப் பெருமூச்சு வந்துச்சு(-:
நம்ம வீடு மட்டுமேச் சுத்தமா இருக்கணும் என்ற எண்ணம் மக்கள் மனசுலே ஊறிக்கிடக்கு. இல்லைன்னா அடுக்ககத்தில் இருக்கும் மக்கள் வீட்டுக்குப்பையை எல்லாம் மாடியில் இருந்து தெருவில் தூக்கி வீசுவாங்களா? என்னமோ போங்க(-: இது இப்போதைக்கு இருக்கட்டும். புலம்ப ஆரம்பிச்சா பொழுதே போயிரும்.
அந்தக் காலத்துலே
பழமையும் புதுமையும்
வீரமாகாளியம்மன் வரைபோய் வணக்கம் சொல்லிட்டு நிதானமா நடைபோட்டு அறைக்குத் திரும்பினேன். பொழுதன்னிக்கும் செராங்கூன் ரோடு என்ன வேண்டிக்கிடக்கு? ஆர்சர்ட் ரோடுவரை போய்வரலாமுன்னு கோபால் சொன்னதைத் தட்டவேணாமேன்னு தகஷிமாயா போனோம். ஜாப்பனீஸ் செயின் ஸ்டோர்ஸ். உலகின் முக்கிய நகரங்களில் வச்சுருக்காங்க. உள் அலங்காரங்கள் அமைப்பு எல்லாமே அற்புதமா வடிவமைச்சு வச்சுருக்காங்க. அழகான செயற்கை நீரூற்றுகள். ஆடம்பரமே இல்லாத வகை. ஷாப்பிங் ஒன்னும் செய்யலை. கண்ணாடிக்கு ஒரு ஃப்ரேம் மட்டும் பார்த்தேன். விலை அதிகமொன்னும் இல்லை. வெறும் அஞ்சாயிரம் சிங்கை டாலர்கள்தான். சீச்சீ............இந்தப் பழம் ஏன் இவ்வளவு புளிப்பு?
சொன்னா நம்பணும்:-) பிரச்சனை என்னன்னா.... ஒரு வாரம் ஆகுமாம். நமக்கு ஏது நேரம்? நாளைக்குக் கிளம்பறோமே அதான்.....:-)))) அவுங்களே அனுப்பி வச்சுருவாங்களாம் நியூஸி விலாசத்துக்கு ( விடமாட்டாங்க போல! யோசிச்சுச் சொல்றேன்னு ......ஜூட்)
தகாஷிமயா
ஆனா ஒன்னு, எங்க நியூஸியில் பலவிஷயங்களில் கொள்ளைதான். எல்லாம் யூஸர் பே. நான் ஆயிரத்து நூறு கொடுத்து வாங்குன அதே டைட்டானியம் ஃப்ரேம் இங்கே எண்பதுன்னு தெரிஞ்சதும்......வயிறு எரிஞ்சுதான் போச்சு. 'கண்ணாடியின் விலையைச் சேர்க்கமாட்டியா? அதுவும் சேர்த்துத்தானே?'ன்னு நியூஸிக்கு வக்காலத்து வாங்குனார் கோபால்.
வெளியே வந்தால் சரியான மழை. புதுப்புதுக் கட்டிடங்கள் வளர்ந்துக்கிட்டே இருக்கு. பொதுமக்கள் நடமாட்டத்தைப் பாதிக்காத வகையில் வழிகளில் நல்ல ஏற்பாடுகள்.
பகல் சாப்பாட்டுக்குப் பிறகு ராமர் கோவில் போகலாமுன்னு மனசில் தோணுச்சு. ஜெயந்தி சங்கரும் தொலைபேசி வீட்டுக்குச் சாப்பிடவரச் சொன்னாங்க. மறுநாள் இன்னொரு தோழியும் (நம்ம சித்ரா ரமேஷ்) அவுங்க வீட்டுலே சாப்பாடுன்னு அறிவிச்சுட்டாங்க என்றதால் எல்லாருமாச் சேர்ந்து சித்ரா வீட்டுலே சாப்புட்டுக்கலாமுன்னு முடிவு செஞ்சோம். அடுத்தமுறை ஜெயந்தியின் வீட்டிலேன்னு கைகேயி மாதிரி வரம் வாங்கி வச்சுக்கிட்டேன்.
சிலவருசங்களுக்கு முன்னே நான் சிங்கையில் இருந்த அன்னிக்குத்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம். கூட்டம் அதிகமுன்னு தொலைக்காட்சியில் வேற காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. பயந்துக்கிட்டுப் போகலை. அப்பப்ப மனசுலே வந்துபோகும் இங்கே போகணுமுன்னு. அது இன்னைக்குன்னு ராமனே முடிவு செஞ்சுட்டான். (ஆனா அதுலே ஒரு உ.கு. வைப்பான்னு நான் கண்டேனா?) ரயில் வசதி கோவில்வரை இல்லைன்னு ஜெ. சொல்லி தனா மெராவுலே(Tanah Merah) இறங்கி டாக்ஸி எடுத்துக்குங்கன்னாங்க.
சாங்கி கிராமம். கடலோரப்பகுதி. சிங்கப்பூரின் சந்தடிகளுக்குச் சம்பந்தமே இல்லாத இடம். எங்கே பார்த்தாலும் பசேல்லு மரங்கள். அங்கிருக்கும் சுத்தம் பார்த்துத்தான் இதுவும் சிங்கப்பூருன்னு தோணுச்சு. கோவில் சாங்கிக் கிராமத்து மெயின் ரோடில் தெரு மூலையில் இருக்கு. கோபுரங்கள் எல்லாம் அலங்காரமா இல்லாதச் சாதாரணக் கோவில். நாங்க போய்ச் சேர்ந்தப்ப மணி நாலே கால். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க...... கோவில் மாலை 6 மணிக்குத் தான் திறப்பாங்களாம். அட,ராமா???/ இப்போதைக்கு வெளியே இருந்து பார்த்துட்டுப் போகலாம். இன்னொரு சமயம் வாய்க்காமலா போயிரும்?
கோவில்
பெரிய திருவடி
சிறிய திருவடி
கோவில் மதில்சுவரிலிருந்து நம்ம நேயுடு எட்டிப்பார்க்கிறார். அவரைப் படம் பிடிச்சுக்கலாமுன்னு போனப்ப, அவருக்கு அடுத்து இன்னொருத்தர், கருடர். இன்னொருத்தர் நேயர்ன்னு சிறிய, பெரிய சிறிய திருவடிகளா இருக்காங்க. பார்த்துக்கிட்டே நகர்ந்து கோவிலின் பக்கவாட்டுக் கதவுக்குப் போயிட்டோம். அது ஒருக்களிச்சமாதிரி திறந்துருக்கு. ஆஹா.....நேயடு நம்ம கையைப் பிடிச்சுக்கூட்டிக்கிட்டுப்போய் இருக்காருன்னு நானே நினைச்சுக்கிட்டேன். கோயிலுக்குப் புதுசா கதவுகள், இன்னும் சில மண்டபங்கள்ன்னு மரவேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்தத் திருப்பணிக்குன்னு சிலர் தமிழ்நாட்டுலே இருந்து வந்துருக்காங்க. அதுலே ஒருத்தரைப் பார்த்தோம். சும்மா வந்து பார்த்துக்குங்க. பூஜை எல்லாம் மாலை 6 மணிக்குத்தான்னார். மூலவருக்குத் திரை. மற்றவர்களுக்குக் கம்பிக்கதவு. போதுமே.....
1946 வருசம் நிலம் ஒதுக்கி இருக்காங்க போல. நடுநாயகமா ஒரு சின்னக் கல்வெட்டு(?) இருந்துச்சு. ஆகக்கூடி 63 வருசப் பழசு.
ராகவேந்திரருக்கும் ஒரு சந்நிதி வச்சுருக்காங்க. பெரிய ஆஞ்சநேயர் ஒருத்தர் நிற்கிறார். கெமெராவை கையில் எடுத்தால்.......வேணாம் வேணாமுன்னு தலையை ஆட்டறார் தாற்காலிக கோவில் ட்ரஸ்டி. யாரு? கோபால்தான். இன்னொருக்கா இவர்கூடப் போகவே கூடாது. அப்படிப்போனாலும் முகத்தைப் பார்க்கவே கூடாது. சாமி வரம் கொடுத்தாலும் கோபால் வரம் கொடுக்க மாட்டார்.
ராமனைக் கண்ணாரக் கண்டேனே, மானசீகமாக் கண்டேனேன்னு கும்பிட்டுக்கிட்டு வெளியே வந்தோம். இப்ப இந்த அத்துவானக்காட்டிலே இருந்து திரும்பப் போக வழி என்ன? டாக்சி எல்லாம் கிடைக்காது. பக்கத்துலே கோவிலை ஒட்டி பஸ் ஸ்டாப் இருக்கு. அங்கே ஒரு அரைமணி காத்திருந்து வந்த பஸ்ஸில் ஏறி டம்பைன்ஸ்( Tampines) வந்து அங்கிருந்து இன்னொரு பஸ்ஸில் செராங்கூன் ரோடு வந்தோம். இது மாடி பஸ். உச்சாணிக்கிளையில் இருந்து நிதானமா வேடிக்கை. பெடோக் ( Bedok) வழியா வரும்போது பெரிய ஏரி கண்ணில் பட்டுச்சு. ஆஹா....ரிஸர்வாயர். மணல்குவாரியா இருந்த இடத்தைச் சீரமைச்சு மழைத்தண்ணீர் சேமிப்புன்னு ஆரம்பிச்சு, வெறும் பதினெட்டு வருச காலத்தில் அகில உலக நீர் விளையாட்டு அரங்கமா ஆக்கிட்டாங்க. ஜாகிங், சைக்கிளிங்ன்னு மக்கள் அனுபவிக்கத் தோதான ஏற்பாடுகளுடன், குழந்தைகள் விளையாடும் பூந்தோட்டமாகவும் இருக்கு.
பெடோக் ஏரி
இருக்கும் கொஞ்ச இடத்தையும் ஒழுங்காப் பயனுள்ள வகையில் மாத்திக்கச் சிங்கப்பூருக்குச் சொல்லியா தரணும்? சிங்காரச் சென்னையைச் சிங்கப்பூரா மாத்திக் காட்டறோமுன்னு நம்ம வியாதிகள் சொல்வது வழக்கமாப் போச்சு. ஆனால்...... எப்பவோ(-:
லேன் ட்ராஃபிக். சென்னையில் இப்படி இருக்குமாம் 3009 இல்!
மறுநாளும் சீனு, செராங்கூன் ரோடுன்னு சுற்றிட்டு, திரும்பிவந்து இன்னொரு கான்ஃபரன்ஸ் காலை முடிச்சுக்கிட்டுத் தயாரா இருந்த கோபாலுடன் சித்ரா ரமேஷ் வீட்டில் பகலுணவு. நம்ம ஜெயந்தி சங்கரும் வந்துருந்தாங்க. பகலுணவு சாதாரண மெனுன்னு சொல்லி மசால்வடை விளம்புனாங்க இந்த எலிக்கு.
நாங்க மூணுபேரும் அரட்டையான அரட்டை. கோபாலோ குறட்டையான குறட்டை . அஞ்சுமணி வாக்கில் கிளம்பி விமானநிலையம். பெட்டிகளை க்ளோக் ரூமில் இருந்து எடுத்தல், ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங்ன்னு சம்பிரதாயமான எல்லாத்தையும் ஒன்னுவிடாம முடிச்சுக்கிட்டுப் ப்ளேனில் ஏறி, சிங்கையில் தூங்கி மறுநாள் நியூஸியில் எழுந்துன்னு ..............................
பயணங்கள் என்னவோ முடிவதில்லை.
முற்றும்:-)))))
பி.கு: வெறும் 33 நாள் பயணம், 43 இடுகைன்னு சுருக்கமா எழுதியாச்சு:) பேஷ் பேஷ்ன்னு பாராட்டிக்கணுமா இல்லையான்னு தெரியலை. இது 'நான் டீ டெய்ல்' பரிட்சைக்கு வராது. வகுப்புக் கண்மணிகள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு நிதானமாத் திங்கக்கிழமை வகுப்புக்கு வந்தால் போதும். வர்ட்டா?
Wednesday, July 15, 2009
அட ராமா..........(2009 பயணம் : பகுதி 43)
Posted by துளசி கோபால் at 7/15/2009 03:18:00 AM
Labels: அனுபவம். சாங்கி ராமர் கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
nice, thanks for sharing
***ஆனா ஒன்னு சுதந்திரமுன்னாவே கூடவே பொறுப்பும் வரணும். அதுக்கேத்தபடி அடுத்தவங்களுக்கு எந்தவிதமான உபத்திரவமும் தராம நானுண்டு என் கெமெரா உண்டுன்னு இருந்தேன்.****
ஏதோ சுந்தந்திரமா ஒரு பின்னூட்டம் எழுதலாம்னு போனேன். அப்புறம், “சுந்தந்திரம்னா பொறுப்பு வேணும்னு” சொன்னதை நினைத்து பேசாமல் பொறுப்பா இருந்துட்டேன். :-)))
லேன் ட்ராஃபிக். சென்னையில் இப்படி இருக்குமாம் 3009 இல்!\\
ஒரு 0 விட்டுப்போச்சி போல டீச்சர்
30009
பாவம் அப்பவும் யார்ன்னா ப்லாக்கில் இதையே எழுதி இன்னும் இரண்டு 00 சேர்த்தாலும் சேர்க்கலாம்
ஹையோ! பாவம் ...
//பி.கு: வெறும் 33 நாள் பயணம், 43 இடுகைன்னு சுருக்கமா எழுதியாச்சு:) பேஷ் பேஷ்ன்னு பாராட்டிக்கணுமா இல்லையான்னு தெரியலை. //
பயணத்துக்கு முன்னாடி, 'பயணம் சிறக்க வாழ்த்துக்கள்'னு சொல்லலாம். வந்து இந்த அளவிற்கு செய்திகளும் படங்களும் பகிர்ந்துகிட்ட உங்களை எப்படி பாராட்டறது. சரி, பேஷ் பேஷ்னே பாராட்டுகிறோம் :)))
பயணங்கள்,அனுபவங்கள்,படங்கள் ரசிக்கக்கூடியதாக இருந்தன.
முடியும் போது கரெக்ட்டா வந்துட்டேன்...
ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டோம்ல..எப்பூடி
கடைசிப்பாடம் என்பதால் ஓடோடி வந்தேன். நான் டீடெய்ல்ஸ் எக்ஸாமுக்கு இல்லாதது சந்தோஷம்.
:)))
தற்காலிக ட்ரஸ்டி .. :))
பக்கத்துவீட்டுல குப்பை ஆமாமா நேத்து ஒரு இடத்துல பார்த்தேன்..மாடிவீட்டுப்பொண்னு மழை தான் சோ ந்னு கொட்டுதேன்னு கூலரில் இருக்கற தண்ணிய வாரி வாரி கீழ கொட்டிட்டிருந்தா.. சரி நேராத்தான் ரோட்டுல கொட்டறான்னா அது இல்ல.. கீழ ஒரு தாத்தா சேரை இழுத்துப்போட்டு மழைய ரசிக்கிறார். அவர் மூஞ்சில விழறாப்ல வளைச்சு வளைச்சு ஊத்தரா.. பாவம் அவரு நகர்ந்து நகர்ந்து கடைசியில் உள்ளுக்கே போயிட்டார்.. :(
//ஆனா ஒன்னு, எங்க நியூஸியில் பலவிஷயங்களில் கொள்ளைதான். எல்லாம் யூஸர் பே. நான் ஆயிரத்து நூறு கொடுத்து வாங்குன அதே டைட்டானியம் ஃப்ரேம் இங்கே எண்பதுன்னு தெரிஞ்சதும்......வயிறு எரிஞ்சுதான் போச்சு.//
நிறைய விஷயம் இப்படித்தான். டிவிடி ப்ளேயர்ல இருந்து
டீச்சர், இந்த 33 நாட்களும் உங்கக்கிட்ட சொல்லாமக் கொள்ளாம ரீடர்ல கூடவே வந்துட்டேன்.. அப்படியே திங்கட்கிழமை வகுப்புக்கும் வந்துடறேன்..முதல் பெஞ்சுல எனக்கு துண்டு போட்டு வைங்க.. :)
அப்புறம் கதைகள் எப்போ? :)
ஆஹா சிங்கப்பூர் இவ்வளவு அழகா. .அதான் மக்கள் அங்க போயிக் குமியறாங்க.
சித்ரா வீட்டுச் சப்பாடு கலர்ஃபுலா இருந்தது. வடையை எங்க அதுக்குள்ள காணோம்.????
ம்ம்ம்...ஒரே கால் வலி டீச்சர்...நன்றி டீச்சர்....நான் திங்கள் வரேன் ;)
வாங்க குப்பன் யாஹு.
தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி.
வாங்க வருண்.
பொறுப்புன்னா பயந்துறலாமா?
எப்படியோ, பின்னூட்டமிடும்போது பொறுப்பு வந்துருச்சுன்னு தெரியுது:-)))))
வாங்க நட்புடன் ஜமால்.
அப்ப........... சென்னைக்கும் சிங்கைக்கும் சம்பந்தமே இல்லையா?
வேணுமுன்னா இன்னும் நாலு 0 போட்டுக்கலாமா?
வாங்க சதங்கா.
பேஷ் பேஷ் என்ற பாராட்டுக்கு நன்றி:-))))
வாங்க மாதேவி.
வாசிச்சது மட்டுமில்லாம அப்பப்போ ஆதரவுக் கரம் நீட்டுனதுக்கும் நன்றிப்பா.
வாங்க நான் ஆதவன்.
வெரிகுட். ஒரு பதினைஞ்சு மார்க் கூடுதலாப் போட்டுட்டால் ஆச்சு.
க்ரேஸ் மார்க்ஸ்:-)
வாங்க புதுகைத் தென்றல்.
முதலிலேயே, இது பரிட்சைக்கு வராதுன்னு சொல்லி இருந்தால் வாசிப்பு அம்பேல்தானே?
மகிழ்ச்சியா இருப்பது கண்டு மகிழ்ச்சி:-)
வாங்க கயலு.
பாவம் அந்தப் பெரியவர்.
வயசுக்கு ஒரு மதிப்பு மரியாதை தரக்கூடாதான்னு இருக்கு.
நம்ம இந்தியாவில்தான் 45 வயசே முதியவர் பட்டியலில் சேர்ந்துருதே.......(-:
(தினமலர், தினத்தந்தியில் தெரிஞ்சுக்கிட்டது)
வாங்க சின்ன அம்மிணி.
டிவிடி ப்ளேயர் நியூஸி, ஆஸியில் சூப்பர் மார்கெட்டுலேகூட 39.95க்குக் கிடைக்குது இப்பெல்லாம்.
ஒருவருச வாரண்டி. போதுமே:-)
வாங்க ரிஷான்.
ஸ்டாட்.கவுண்ட்டர் அதிகம் காமிக்கும்போதே தெரிஞ்சது மக்கள் மறைந்திருந்து வாசிக்கறாங்கன்னு.
அது போதும்ப்பா. எப்படியோ சென்றடைந்தால் சரி. அதுலே ஒரே ஒருத்தருக்குப் பயனா இருந்தாலும் மகிழ்ச்சிதான்.
துண்டுகள் கைவசம் இல்லாத்தால் புடவைகளைத் துண்டுகளாய் ஆக்கிப் போட்டுவச்சுடறேன். போதுமா?:-))))
வாங்க வல்லி.
தட்டைப் பெரூசாக்கிப் பார்க்கணுமுன்னு தோணலையா? அதோ மேல்பக்கமா நடுவிலே இருக்கு பாருங்க:-)))))
வாங்க கோபி.
இதுக்கே கால்வலின்னா......நாளை தங்கமணி பின்னே ஷாப்பிங் எப்படித்தான் போகப்போறீங்களோ?
அதான் நாலுநாள் லீவு விட்டாச்சுல்லே:-))))
அட ராமா!... அதுக்குள்ளே பயணம் முடிஞ்சு போச்சா!.. முடிவதில்லைன்னு முடிச்சிருக்கிறீங்க:-)). அடுத்த பயணத்திற்கு நாங்க ரெடி.
கட்டுரைகளும் படங்களும் எங்களுடன் பகிர்ந்துகொண்டீர்கள்.இனிமே அங்கெல்லாம் போகும்போது அவற்றுடன் உங்க ஞாபகமும் கண்டிப்பா வரும்:-).
//இது இப்போதைக்கு இருக்கட்டும். புலம்ப ஆரம்பிச்சா பொழுதே போயிரும்.//
அதுவும் பத்தாது :-)
// பொதுமக்கள் நடமாட்டத்தைப் பாதிக்காத வகையில் வழிகளில் நல்ல ஏற்பாடுகள்.//
இது தாங்க எனக்கு இவங்க பிடிச்சது...அனைவருக்கும் எளிதாக இருக்கும் வகையில் திட்டும் தீட்டுவது தான் இவர்கள் ஸ்பெஷல்
//பேஷ் பேஷ்ன்னு பாராட்டிக்கணுமா இல்லையான்னு தெரியலை. //
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு :-)
படங்களுடன் பதிவும் அருமை...
தொடருங்கள்...
தலையில் சடாரி வைக்காத குறையாக எங்க எல்லோருக்கும் ராமரின் ஆசீர்வாதத்தை வாங்கி வழங்கியதுக்கு, துள்சிக்கு கொஞ்சம் துளசி தரலாமா?
// வடையை எங்க அதுக்குள்ள காணோம்.????//
துள்சி எடுக்கறதுக்குள்ள சிங்கை காக்கா ஒன்னு கவ்விக்கினு போயேபோச்சு.....வல்லி!!
வாங்க ஐம்கூல்.
இந்தப் பயணம்தான் முடிஞ்சது. வாழ்க்கைப் பயணம் இன்னும் முடியலை:-))))
கூடவே வந்ததுக்கு நன்றி.
வாங்க கிரி.
அதாங்க....இங்கே திட்டம் போடும்போது அதுலே இருந்து எவ்வளோ அமுக்கலாமுன்னு மட்டும் பார்த்துக்குறாங்க. பொதுமக்களைப் பத்திக் கவலை ஏன்? கிடக்கட்டும் என்ற எண்ணம்தான்(-:
வாங்க கோதை சூர்யா.
மீண்டும் வரணும்.
வருவீங்கதானே?
வாங்க நானானி.
இங்கே திருப்பதி தேவஸ்தானம் கோயில் வெங்கடநாராயணா ரோடு-இல் துளசியே கூடாது. (கூட்டிக்)கொண்டுவராதேன்னு போர்டு இருக்குப்பா(-:
Post a Comment