என் பக்கத்துலே ரெண்டு இடம் காலியா இருந்துச்சு. ரெண்டு குட்டீஸ் வந்தாங்க. "ஆண்ட்டீ இங்கே யாராவது வர்றாங்களா?"
'ஆமாம். நீங்கதான் வர்றீங்க'ன்னேன். குஷியா உக்கார்ந்துச்சு ரெண்டும். அதிதி, ரக்ஷான்னு பெயராம்.
"டான்ஸ் கத்துக்கறீங்களா?"
"ஆமாம் ஆண்ட்டீ."
"எதுவரை வந்துருக்கீங்க?"
முழியே சரியில்லை.
"தட்டிக்கும்பிடக் கத்துண்டாச்சா? "
"ஹிஹி ஆமாம் ஆண்ட்டீ. எந்தப் பொண்ணு ஆடப்போறாங்க ஆண்ட்டீ."
"பொண்ணு இல்லை. பாய் ஆடப்போறார்."
தூக்கிவாரிப்போட்டுச்சு ரெண்டு பேருக்கும். லேசா ஒரு சிரிப்பு. முளைச்சு மூணு இலைவிடலை அதுக்குள்ளே பாய் கேர்ள் எல்லாம் தெரியுது:-)பாரேன் நமுட்டுச் சிரிப்பை!
பெங்களூர்லே இருந்து வந்துருக்கார். என்னை நம்பலைன்னு எனக்கு ஒரு தோணல். ப்ரவீண் குமார் ஃப்ரம் பேங்களூரு. முந்தின நிகழ்ச்சி நடக்கும்போது பாதியில்தான் போய்ச் சேர்ந்தேன். பரதநாட்டியம் ஆடுனது ப்ரீத்தி ராம்ப்ரஸாத் ஃப்ரம் அமேரிக்கா. இந்த நிகழ்ச்சிக்காகவே யுஎஸ்ஸில் இருந்து வந்துருக்கும் கலைஞர். ஆடி முடிச்சதும் தன்னைப் பத்திச் சுருக்கமாச் சொல்லி, தன்னுடைய இசைக்குழுவையும் அறிமுகப்படுத்தி நன்றி சொன்னவிதம் அழகோ அழகு. அமேரிக்கன் ஆக்ஸெண்டைப் பொருட்படுத்தாதீங்கன்னுச்சு. நாங்களும் படுத்தலை. பாடகி நந்தினி அருமையாப் பாடுனாங்க. நல்ல குரல்வளம். நேத்துக்கூட இவுங்க பாட்டுதான் சுமித்ரா சுப்ரமணியத்துக்கு.
ப்ரீத்தி ராமப்ரஸாத்
சுமித்ரா சுப்ரமணியன்
ராஜஸ்ரீ வாரியார்
இசைக்குழு இடத்தைக் காலி செஞ்சதும் மைக்குகள் மட்டும் தேமேன்னு இருந்துச்சு. ப்ரவீணுக்கு சிடிதானாம். அவருடைய நண்பர் வந்துருந்தார். நறுக்ன்னு நாப்பத்தைஞ்சே நிமிஷம், எண்ணி நாலே பாட்டு. ஜமாய்ச்சுட்டார்.
குமாரநல்லூர் கோவிலைப்பற்றிச் சொல்லி பகவதியின் பெருமைகளைப் போற்றும் க்ருதிக்கு ஆடினார். அதுலேயும் கஜேந்திர மோட்சமும், வாமன அவதாரமும் அட்டகாசம். இன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்ட புதுச் செய்தி என்னன்னா........ மகாராஜா ஸ்வாதித் திருநாள் சிவனைக் குறிச்சும் பாடல் இயற்றி இருக்கார் என்றதுதான். நிகழ்ச்சியின் முடிவில் சென்னை ரசிகர்களைப் புகழ்ந்துபேசுனார். நியாயம்தான். நாம் என்ன ...என்னை அங்கே ஆடவிட்டாத்தான், நீ இங்கே ஆடமுடியுமுன்னு சொன்னோமா என்ன?
ப்ரவீண் குமார்
பதினாலில் ஒரே ஒரு ஆண் என்ற பெருமைக்குத் தகுதியானவர்தான். முதலில் இவரைப் பஞ்சாபின்னு நினைச்சுருந்தேன். கடைசியில் பார்த்தால் கருநாடகா!
டி.வி. கோபாலகிருஷ்ணன்
மூத்த கலைஞர்களையும் அவ்வப்போது (மேடையில்) காணும் வாய்ப்பும் கிடைக்குது.
சுதாராணி ரகுபதி
நடனவிழா ஏற்பாடு செய்த கோபிகா வர்மா
இன்னிக்கு ஆணி கூடுதல்/ நாளை குச்சிப்புடி. முடிஞ்சாப் போய்வந்து சொல்றேன். சரியா?
Friday, July 24, 2009
பையன் ஆடுனாப் பாக்கமாட்டீங்களா?
Posted by துளசி கோபால் at 7/24/2009 03:30:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
டீச்சர் அமைதியாக பார்த்துக்கிட்டு இருக்கேன் ;)
\\என் பக்கத்துலே ரெண்டு இடம் காலியா இருந்துச்சு. ரெண்டு குட்டீஸ் வந்தாங்க. "ஆண்ட்டீ இங்கே யாராவது வர்றாங்களா?"\\
ஆமாம் டீச்சர்...யாரை இந்த குட்டீஸ் ஆண்ட்டீன்னு சொல்றாங்க!!! ';)))
imm vayiru mutta sapittu sertimana akama entha kavalaiyum illana pattu dance ellam pakkalam. anna sapattuka vali illaina ennatha pakkarathu.
enn teacher koil kulam nalla thana irunthinga, nangalum unka kuda konjam pakthi markama iruntham, enn thedirnu pattu dance nu konjam koil pakkam vanga teacher
ம்ம்ம் எஞ்சாயிங் போல.
சந்தோஷம். போட்டோஸ் சூப்பர்
நல்ல கவரேஜ். நேரில் கண்ட உணர்வு. நன்றிகள்...
ஆமாம், அண்மைய நிலதிர்வில் நியூசி. சில சென்டிமீட்டர் ஆஸ்திரேலியா பக்கம் நகர்ந்து விட்டதாமே ? உங்கள் வீடு பத்திரம் தானே ?
நிறைய போட்டோஸ்.....நல்லாருக்கு டீச்சர்
வாங்க கோபி.
அமைதியாப் பார்க்குறமாதிரித் தெரியலையே அடுத்த பின்னூட்டம் பார்த்தால்:-)
அதுங்க ரெண்டும் பச்சைப் புள்ளைங்க, இன்னும் பதிவர் ஆகலை. அப்புறம் எப்படித்தெரியுமாம் டீச்சர்ன்னு கூப்பிடணுமுன்னு?
வாங்க இம்சை இளவரசரே.
அச்சச்சோ.... செரிமானமாக இருந்தால் எந்தக் கலையையுமே ரசிக்க முடியாது. வயிறு கடமுடான்னும்போது இருக்கும் இடம் வேறில்லையோ?????
நமக்கோ டாஸ்மாக் போகவேணாம். அதான் ஆட்டம்பாட்டம் பார்க்கப்போனேன்.
இதுலே பாருங்க ஆட்டம் நடக்குமிடமே கோயில் ஹால்தானப்பா. சாமி கும்பிடப்போனால் இது போனஸ்.
அக்கா!
பானுமதி அம்மா குரலா???
அட்டகாசமாக இருக்குமெ! "அழகான பொண்ணு நான்..அதற்கேற்ற கண்ணு தான்"...
அந்தக் குரலிலேயே இனிப் படிப்பேன்.
கலக்குங்கோ..நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டேன்.
ஆடின அத்தனை பேரும் கச்சிதமா உடை உடுத்தி,
வர்ணக் கோளாறுகள் எதுவும் இல்லாம ,
பார்க்க நல்லா இருந்ததுப்பா.
குட்டீஸ் அருமை. அதில பெரியவளுக்குத் தூக்கம் வந்திருச்சோ. கிறக்கமாத் தெரியுது!!
எங்க வீட்ல ஒர் பெரிய மனுஷன் நிஜமாவே ஆணி பிடுங்கறேன் வேலை கொடுன்னு நிக்கறான்.
உதவிக்கு அனுப்பட்டா;)
வாங்க புதுகைத் தென்றல்..
அதே அதே....இது நான் பெற்ற இன்பம் வகைதான்:-)
வாங்க மணியன்.
ஒரு முப்பது செ.மீ பக்கத்துலே போயிருக்கோம். அதுக்கு ஒரு டாலர் குறைச்சுக்கிட்டா என்ன? ப்ளேன் டிக்கெட் அதே விலைதான்:-))))
நம்மூட்டுக்கு ஒன்னும் ஆகலை. இந்த நடுக்கம் தெற்குத்தீவின் தென் கோடியில்.
ஆனா.... எங்கூருக்கு ஒரு சுநாமி பாக்கி இருக்காம். எப்போன்னு தெரியலைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க ஒரு இருவது வருஷமா!
வாங்க நான் ஆதவன்.
முதல்வரிசையில் உக்கார்ந்துக்கிட்டு இஷ்டம்போல க்ளிக்கரதுதான். 8GB கார்ட் போட்டுருக்கேன்லெ:-))))
வாங்க யோகன் தம்பி.
பானுமதி மாதிரி கன்னிங்கா, நக்கலா, வில்லிச் சிரிப்பு சிரிக்கிறேன்னு கோபால் சொல்றார்:-)
வாங்க வல்லி.
என்னப்பாக் கேள்வி இது?
உடனே அனுப்பி வையுங்க. ஆணிகள் ஏராளம்....
ஆஹா உங்களை போல ஓர் ஏணி கிடைத்தால், ஆணி பிடுங்குவதென்ன ... என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் ...
பதிவு நல்லா இருந்தது... என் அண்ணா ஒரு நடன வாத்தியார் தான், டெல்லியில் , குரு கிருஷ்ணமூர்த்தின்னு பேரு ..
பையன் ஆடுனா பாப்போம் ..ஆனா பையனை டேன்ஸ்ல சேக்கமாட்டோம் ;))பயம் தான்..
வாங்க அது ஒரு கனாக் காலம்.
அண்ணன் டில்லியில் நடன ஆசிரியரா....ஆஹா
சூப்பர்.
கயலு கிட்டேக் கட்டாயம் சொல்லிறணும்.
வாங்க கயலு.
என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பயம்?
கமல் போல ஆயிருவாருன்னா?
உலகமே பாராட்டும் ஒலக நாயகன் நம்பர் 2 , என் அண்ணாத்தைன்னா எனக்குப் பெருமையா இருக்குமுல்லெ!!!
கேமிரா வேறு மாற்றியாகிவிட்டதா? படங்கள் நன்றாக வந்திருக்கு.பெரிது படுத்தி பார்க்கும் போது கொஞ்சம் ஷேக் தெரியுது.
வாங்க குமார்.
இந்த முறை சிங்கையில் வாங்குன புதுக் கெமெரா.
சாம்ஸங் WB500. 10.2 மெகாபிக்ஸல், 10 x ஆப்டிக்கல் zoom.
வயசாகுதில்லே...கை ஸ்டடியா நிக்கறதில்லை. அவுங்க வேற ஆடிக்கிட்டே இருக்காங்களா...அதுதான்:-)))))
IS இருக்குன்னாலும் ஆட்டோவில் போட்டு வச்சுருக்கேன்.
Post a Comment