Tuesday, July 07, 2009

என்னமோ போங்க....பேய், பூதமுன்னு பேர் வச்சுக்கிட்டா நல்லாவா இருக்கு?..........(2009 பயணம் : பகுதி 41)

"என்ன அதுக்குள்ளே முடிஞ்சுபோச்சு? "

"அதான் மணி ஏழரை ஆயிருச்சே."

இதே கேள்வியும் ஒவ்வொரு அரை அரை மணியாக் கூட்டுன பதிலுமா
ரெண்டுவாரம் போயிருச்சு. தினம் நகர்வலம் முடிஞ்சதும் மாலை நேரத் திருவுலாத் தொலைக்காட்சிப் பொட்டி முன்னாலே. வீட்டுலே அவுங்க எல்லாரும் பார்க்கும்போது வேணாமுன்னாலும் கண்ணில் விழத்தானே செய்யுது? ஆனாலும் அண்ணிக்குப் பொறுமை ஜாஸ்தி. விடாம நான் தொணப்பிக்கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருப்பாங்க.

"இவுங்களை எங்கியோ பார்த்தமாதிரி இருக்கே?"

"பாடகி அனுராதாங்க"

"அச்சச்சோ.... நல்லாப் பாடுவாங்களே....இவுங்க எதுக்கு டிவி சீரியலில்?"

"அஞ்சு லட்சம் வேணுமுன்னா நேத்து டௌரி கேட்ட பணத்தைக் கொடுத்துருக்கலாமுல்லே?"

"அது வேற சீரியல்ங்க"

"இதென்ன ராதிகாவா? தொண்டையை கரகரப்பாக்கிப் பேசுனா அம்மா. சாதாரணமாப் பேசுனா மகளா?"

"அழகழகான வீடுகளா இருக்கே!"

"சீரியல் ஷூட்டிங்க்குக்குன்னே கட்டி, வாடகைக்கு விடுறாங்க. நல்ல வருமானம்"

"இவங்க ஏன் இப்படி ஏழையா இருக்காங்க? நகைநட்டெல்லாம் என்ன ஆச்சு? அதுக்குள்ளே வேற வீட்டுலே நிக்கிறாங்க?"

ஒரு நடிகை ஒரு சமயத்துலே ஒரு சீரியலில்தான் நடிக்கணுமுன்னு கட்டுப்பாடு கொண்டு வரணும். இப்பப் பாருங்க எது என்னன்னு எனக்கு ஒரே கன்ஃப்யூஷன்.........

"கதை என்ன ஆச்சுன்னு இமெயில் கொடுங்க அப்பப்ப."

"கவலையே படாதே. நீ அடுத்தவருசம் வரும்போது ஒரு சீன் தான் போயிருக்கும். நான் வேணாச் சொல்லிருவேன்" (இது அண்ணன்)

வெளங்கிரும்.

"கொஞ்சம் பிடுங்கி எடுக்காமதான் அவுங்களை சீரியல் பார்க்கவிடேன்"( இது கோபால்)

இதுவரை பார்த்த நிகழ்ச்சிகளில் கன்னடத்துப் பைங்கிளியின் பழைய நினைவுகள் நல்லா இருந்துச்சு. எல்லாம்' பிட் பிட்'டாப் பார்த்ததுதான். இனி அடுத்த முறை வரும்போது......

அந்தக் கதை இருக்கட்டும் இப்போ நம்ம கதையைப் பார்க்கலாம்:-)


ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாள் திருப்பாற்கடலில் ஆனந்தமா அனந்தன்மேல் சயனம். தூங்கும்போது ஆயுதங்களையெல்லாம் கழட்டிவச்சுருக்கார். ஒன்னும் இல்லாத நாமே தூங்கறப்ப போட்டுருக்க ஒன்னுரெண்டைக் கழட்டிவைக்கும்போது, அஞ்சாயுதம் தரித்தவர் அதோடயேவா படுத்துருப்பார்?

இந்தப் பெரும் ஆளுக்கு அதென்ன அஞ்சு ஆயுதம்?
பாஞ்சஜன்யம் என்னும் வலம்புரிச் சங்கு
சுதர்ஸனம் என்ற சக்ராயுதம் (சக்கரம்)
கௌமோதகி என்ற கதை (gha)
நந்தகம் என்ற கத்தி (போர்வாள்)
சார்ங்கம் என்ற தனுஸ் (வில்.)

மஹாலக்ஷ்மி, ஊரெல்லாம் சுத்திவந்துக் களைப்பாப் படுத்துருக்கும் கணவனுக்குக் கால் அமுக்கி விட்டுக்கிட்டு இருக்காங்க. வில்லும் சக்கரமும் பெரியவர் தூங்கறார்ன்னு ஓசைப்படாம இருக்க, மத்த மூணும் போரடிச்சுக்கிடக்குதுங்க. அப்பா பகல்தூக்கம் போடும்போது, கொஞ்சம் சத்தம்கித்தம் போடாம இருங்கன்னு அம்மா விரட்டுவாங்க பாருங்க, அப்ப என்னடா செய்யலாமுன்னு தெரியாம, சும்மா கப்சுப்னு இருக்கவும் முடியாம இருக்கும் சின்னப்பசங்களைப்போலன்னு வச்சுக்குங்க.

இப்ப மாதிரியா? டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ், காமிக்ஸ்ன்னு பொழுது போக? ஆயிரத்துநானூறு வருசத்துக்கு முந்தின கதை(ka)
கத்திதான் துருதுருன்னு இருக்கு. ச்சும்மா இருந்தாத் துருப்பிடிச்சுருமுல்லெ! லக்ஷ்மியம்மாகிட்டேப் போய் 'எனக்கு உபதேசம் பண்ணுங்க'ன்னு கேட்டுக்கிச்சு. 'நீயோ கத்தி.உன்கிட்டேக் கத்திக் கத்திப்பேச என்னாலே ஆகாது. அவர் தூக்கத்துலே இருக்கார். நீ என்ன பண்ணறேன்னா, பூலோகத்தில் போய் மனுசனா அவதரிச்சு வெயிட் பண்ணு. நான் அங்கே வந்து உபதேசிக்கிறேன்'ன்னு சொல்லிட்டாங்க.( அப்பா தூங்கறார். சத்தம் போட்டா உதைதான் வெளியே போய் விளையாடுங்க. )

போர்வாள் நேரா பூலோகத்துலே புண்ணீயம் செஞ்ச பாரதபூமியில், தருமமிகு சென்னையில் மயிலாப்பூர் என்ற தலத்தில் மணி கைரவணி என்ற தீர்த்தத்தில் அன்றுதான் மலர்ந்திருந்த அல்லிப்பூவில் குழந்தையாத் தோன்றினார். யாரோ புண்ணியவான் , குழந்தையை எடுத்துக்கிட்டுப்போய் 'மகதாஹ்வயர்' னு பெயர் சூட்டி வளர்த்துருக்கார். வளரவளர உள்ளூர் பெருமாள் கோவிலுக்குப்போய் மகாவிஷ்ணுவைக் கும்பிட்டுக்கிட்டேக் காலம்தள்ளி இருக்கார்.

இந்தக் கோவில் எப்போ, எப்படி வந்துச்சுன்னு பார்த்தால்........

திரேதாயுகத்தில் இந்த கைரவணி தீர்த்தக் கரையில் ரிஷிகள் எல்லாம் ஒன்னாச் சேர்ந்து யாகம் நடத்தறாங்க. பொதுவா எதாவது நல்லது நடந்தா அதைத் தடுக்கவும் கெடுக்கவும் சிலர் இருப்பாங்க இல்லையா? அவுங்களைத்தான் அசுரர்கள்ன்னு சொல்றது. (ராக்ஷஸக்கூட்டம் நல்லதுக்கு முட்டுக்கட்டை போடணுமுன்னா உடனே வந்துருமே) அந்தக் கூட்டத்துக்குத் தலைவன் கேசி என்ற குதிரை மூஞ்சுள்ள அசுரன். முனிவர்கள் எல்லாம் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கறாங்க, 'யாகத்தை நடத்தவிடாமத் தொந்திரவு செய்றவங்கள்கிட்டே இருந்து காப்பாத்து'ன்னு. வேண்டிக்கப்படாதே......

'இதோ'ன்னு விஷ்ணு வந்தார். கேசியைப்போட்டுத் தள்ளினார். அசுரர் கொட்டம் அடங்கியது. முனிவர்கள் (வழக்கம்போல்) பெருமாளே...இங்கேயே இருந்து எல்லோருக்கும் அருள் பாலிக்கணுமுன்னதும் 'ஓக்கே டன்'னு கோயில் கொண்டுள்ளார். கேசியை சம்ஹாரம் செஞ்சதால் கேசவன்னு பெயர் வந்துருச்சு. கேசவன் என்ற பெயருக்கு 'தடைகளை நீக்குபவன்' என்று பொருளாம். ஏழுதடவை கேசவா கேசவான்னு சொல்லிட்டு ஒரு காரியம் செஞ்சால் வெற்றிதானாம். இப்படி ஒரு நம்பிக்கை.

பெருமாள் அவர்பாட்டுக்கு இங்கே தங்கிட்டா..... ? வூட்டுலே சொல்லிக்கிட்டு வந்துருக்கலாம்லெ? மஹாலக்ஷ்மி என்ன செஞ்சாங்கன்னா தேடிக்கிட்டு வந்துருக்காங்க. அப்பப் பார்த்து பிருகு மகரிஷி, லக்ஷ்மியே தனக்கு மகளாப் பொறக்கணுமுன்னு அதே குளத்தாண்டைத் தவம் செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். அங்கே மலர்ந்திருந்த தாமரைப்பூவில் குழந்தையா தோன்றி இருக்காங்க லக்ஷ்மி. அன்னிக்கு பங்குனி மாசம் உத்திர நட்சத்திரம். முனிவர் குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்கிப் பெருமாளுக்கேக் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டார். ஐயாவுக்கு வலது பக்கத்துலே அம்மாவுக்கும் தனிச் சந்நிதி வச்சாச்சு. தாயார் பெயர் மயூரவல்லி. மயிலைப்பகுதியில் அந்தக் காலத்துலே மயில்களா இருந்துருக்கும்போல. நம்ம கப்புவும் மயிலா, ரூபம் எடுத்துக் கபாலியை நினைச்சுத் தவம் செஞ்ச இடமாச்சே!

இந்தத் தாயாரிடம் உபதேசம் பெறத்தான் அந்த நந்தகம் இங்கே வந்து பொறந்தது. இப்போ கதை(ka) ஒருவழியாப் புரிஞ்சுருக்குமே. சரியான பெருமாள் கழகப் போர்வாள்! உபதேசம் கிடைச்சக் கத்திக்கு யார் எப்போ பேயாழ்வார்ன்னு பெயர் கொடுத்தாங்கன்னு தெரியலை. ராவுன்னு இல்லாமப் பகலுன்னு இல்லாம அல்லும்பகலும் பேயாட்டம் முழிச்சிருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டதாலேன்னு வச்சுக்கலாமா?
இதோ இவர் அவதரித்த இடத்தில் நிக்கறோம். ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில். மயிலைச் சித்திரக்குளம் தெருவில் போனால் வந்துருது. இன்றே இப்படம் கடைசி என்றதுபோல இன்னிக்குத்தான் நம்ம பயணத்தின் கட்டக்கடைசிநாள் இந்தியாவில். கோயிலை நோக்கிப்போகும்போதே நமக்கிடது பக்கம் ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் ஒன்னும் இருக்கு. ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம். இங்கே போயிட்டு அங்கேயா இல்லை அங்கே போயிட்டு இங்கேயான்னு ஒருவிநாடி தயக்கம். ஆதியில், ஆதியே இருக்கட்டும்.அதுக்குத்தானே வந்தோம்? இது நமக்கு போனஸ் கிடச்சமாதிரி
ரெண்டு கோயிலும்

தகதகன்னு ஜொலிக்கும் வைணவச் சின்னமான சக்கரம், திருமண், சங்கு பெண்டண்ட் இணைஞ்சிருக்கும் தங்கச்சங்கிலி (தாராளமா ஏழெட்டுப்பவுன் இருக்கும். வைரக்கல்லோ? இப்படி மின்னுதே!) போட்டுக்கிட்ட பட்டர் ஒருத்தர் எதிரே வந்தார். எங்கே வாங்கினாருன்னு கேட்டுருக்கலாமோ? அட்டகாசமா இருந்துச்சு.

மயிலை மாடுகள்


கோவிலுக்குள் நுழைஞ்சால் பேயாழ்வார் அவதார ஸ்தலம்னு போட்டுருக்கு. கோவிலில் உற்சவம் ஆரம்பிச்ச ரெண்டாம் நாள் இன்னிக்கு. நேற்று அலங்காரம் சேஷவாகனம்போல. கோவில் பணியாளர்கள் ஏழெட்டுப்பேர் சேஷனைத் தூக்கிக்கிட்டு வாகனங்கள் வைக்குமிடத்துக்குப்போய்க்கிட்டு இருந்தாங்க.

மூலவர் நின்ற திருக்கோலம். வழக்கம்போல் கோவிலைச் சுத்திவந்து மயூரவல்லித் தாயாரையும், ஆண்டாளம்மாவையும் ஆழ்வார்களையும் சேவிச்சுக்கிட்டோம். ராமர் கூட்டமும், வீர ஆஞ்சநேயரும் கூட தனிச்சந்நிதிகளில் இருக்காங்க. திருமங்கை ஆழ்வாரும் திருமழிசையாழ்வாரும் மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க. பேயாழ்வார் அவதார தினத்தில்(ஐப்பசி மாசம், சதயம் நட்சத்திரம்) நம்ம தில்லக்கேணி பாசாதிக்குப் போட்ட மாலைமரியாதைகள் பரிவட்டம் எல்லாம் கொண்டுவந்து பேயாழ்வாருக்குப் படைப்பாங்களாம்.

பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் மூவரும் சமகாலத்தவர்கள். மூணுபேருமே விஷ்ணுவின் ஆயுதங்களின் அம்சமாம்.
பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம், பூதத்தாழ்வார் கௌமோதகி ( ghaதை)
வைணவத்துலே முதலாழ்வார்கள்ன்னு இந்த மூணுபேரும்தான் அந்தப் பனிரெண்டில் முன்வரிசையில் நிக்கறாங்க. வரிசைப்படி பார்த்தால் பொய்கை, பூதம் பேய்ன்னு வருது. இதுலே நம்ம ஆண்டாளம்மா ஒம்போது!

சக்கரமும் வில்லும்தான் பூமியில் அவதரிக்கலை போல. எதுக்கும் பதிவுலக ஆழ்வாரைத்தான் கேக்கணும். ஒருவேளை அவரே பதிவர் அவதாரமோ என்னவோ?
பெருமாளை வீட்டு விலகாமல் அவர் அவதாரம் எடுக்கும்போதெல்லாம் இவுங்களும் துணை நடிகர் வேஷம் கட்டிக்கிட்டு வந்துருவாங்க. அஞ்சு பத்தாதுன்னு இந்த ஆதிசேஷன் வேற!

வெளியே வந்து அடுத்த கோவிலுக்கு ஸ்ரீநிவாஸனைத் தரிசிக்கப்போனோம். சாமிக்குத் திரை போட்டுருக்கு. வெளியே உக்கார்ந்திருந்த ஒரு தம்பதிகள், இன்னும் அரைமணி நேரம் ஆகுமுன்னு சொன்னாங்க. அரைமணின்னதும் கோபால் ஜகா வாங்கிட்டார். கோயிலை வலமாவது வரலாமுன்னு போனால் அடைச்சக் கம்பிக்கதவின் பின்னே அலர்மேல் மங்கைத்தாயார் இருக்காங்க. நரசிம்ஹர், சுதர்ஸன், ஆண்டாள், ராமர், ஆழ்வார்ஸ் எல்லாரையும் வணங்கிட்டு, வர்றதுக்குள்ளே அங்கே கோவிலோட மாடல் வச்சுருந்த மேசைக்கருகில் கோபால் நின்னு கோவிலழகைப்பார்த்துக்கிட்டு இருந்தார்.

நமக்குத்தான் காலிலே கஞ்சி கொட்டுன அவசரமாச்சே...... பெரிய திருவடியிடம், 'நான் வந்து போனேன் என்று சொல்லு'ன்னு ஆஜர் கொடுத்துட்டுக் கோபாலை நோக்கி அடி எடுத்து வைக்கவும், 'வாங்கோ'ன்னு பட்டரின் குரலுடன் சரேல்ன்னு திரை விலகவும் சரியா இருக்கு. திரும்பிப்பார்த்தால் நம்ம சீனு சிரிச்ச முகத்தோட 'வா வா'ன்றார். நான் கோபாலை வா வான்னு கையாட்டிக் கூப்புடறேன். ஆசாமி கவனிச்சாத்தானே? இடத்தைவிட்டு நகர மனசில்லாமல் 'கோபால்'னு ஒரு குரல் கொடுத்துட்டேன். நல்லவேளை கேட்டுருச்சு.

அருமையான தரிசனம். நமக்கிடப்பக்கம் ஹயக்ரீவர் வேற தனிச்சந்நியா இருக்கார். கிளம்புனவளைக் கூப்பிட்டுக் காட்சி கொடுத்தக் கருணையை நினைச்சு எனக்குக் கண்ணுலே தண்ணி வந்துருச்சு. இதுக்கெல்லாம் நாம் தகுதியான்னு நினைச்சு மனசு கலங்குனதென்னவோ நிஜம்.

கோவில் படு சுத்தமா இருக்கு. நல்லா நிர்வகிக்கிறாங்க. வெளியே வந்து பார்த்தால் நாம் விட்டுட்டுப்போன காலணிகளைக் காணோம். 'பீடை விட்டது'ன்னு பாட்டி சொல்வாங்கன்னு நினைவு வந்தப்போ, 'அதெல்லாம் இப்போதைக்கு விடலை' ன்னு ஒரு அம்மா எல்லாத்தையும் சேகரிச்சு எடுத்து வச்சுக்கிட்டு இன்னொரு பக்கமா உக்கார்ந்துருக்காங்க. வயித்துப் பிழைப்புக்கு இது ஒரு வழி. போயிட்டுப்போறது. நல்லவேளை கிடைச்சதே. செருப்பில்லாமக் கல்லில் நடக்கவே முடியாது. அப்படிக் காலைப் பழக்கிக் கெடுத்து வச்சுருக்கோம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையெல்லாம் நமக்கில்லை.
தட்டு போட்டாச்சு

போற வழியில் பதிவர் சந்திப்பு ஒன்னையும் நடத்திக்கலாமுன்னு நாச்சியார் வீட்டுக்குப் போனோம். ஏற்கெனவே வரேன்னு தகவல் சொல்லி இருந்தேன். நமக்காக அவுங்களும் சாப்பிடாமல் காத்துருந்தாங்க. அன்னிக்குக் காரடையான் நோம்பு வேற.

ஆப்பம்/தோசை, சாதம், பருப்பு, கத்தரிக்காய் கறி, கீரை மசியல், ஸாலட், ரஸம், தயிர், அப்பளம், சிப்ஸ், ரெண்டுமூணு ஊறுகாய் வகைகள், பாதாம் ஹல்வா, காரடையான் நோம்பு ஸ்பெஷலா ஒரு (பெயர் தெரியாத) ஸ்வீட் இப்படி அமர்க்களம் போங்க. வல்லியும் சிம்ஹனுமா நம்மை அன்பாலே திணறடிச்சுட்டாங்க. (கவிநயா கவனிக்க)


பசேல்ன்னு கீரை மசியல்

தோசை ஆப்பம்!


காரடையான் நோம்புக்கு இனிப்பு

தாம்பூலம்

பதிவராகிக் கண்ட பலன் இவ்வளவுமுன்னு பெருமையாவும் இருந்துச்சு. அதே மண்டைக் கனத்தோடு திநகர் சரவணாஸ் போய் நியூஸி மக்களுக்கு இனிப்பு வகைகள் (லாஸ்ட் ஷாப்பிங்) வாங்கிக்கிட்டு வீடுபோய் பொட்டிகளைக் கட்ட ஆரம்பிச்சோம். இரவு பதினொன்னேகாலுக்கு ஃப்ளைட்.


பொழுதுவிடிஞ்சா....சிங்கையில்

தொடரும்.......:-)

38 comments:

said...

வல்லிம்மா வீட்டு விருந்தின் சுவை படங்களிலேயே தெரிகிறதே. [அன்பும், கவிநயாவுக்கு தகவல் சொல்லிடுறேன்:)!]

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

said...

சீக்கிரம் பொழுது விடியட்டும்

சிங்கைக்கு வாருங்கள் (பதிவுல தான்)

Anonymous said...

//வைணவத்துலே முதலாழ்வார்கள்ன்னு இந்த மூணுபேரும்தான் அந்தப் பனிரெண்டில் முன்வரிசையில் நிக்கறாங்க. வரிசைப்படி பார்த்தால் பொய்கை, பூதம் பேய்ன்னு வருது. இதுலே நம்ம ஆண்டாளம்மா ஒம்போது!//

டீச்சர், இந்த கடைசி வரில நிக்கறாங்கன்னு கொஞ்சம் மாத்துங்களேன்.
(எத்தனை நல்ல விஷயம் எழுதியிருக்காங்க. அதை விட்டுட்டுட்டு.....- இது மனசாட்சி)

said...

அன்பும் விருந்தும் அமர்களம்.

said...

விளம்பர இடைவேளையில் அடுத்த சேனல் நாடகத்தையும் பாக்கறாங்க .. :)

said...

//ஆப்பம்/தோசை, சாதம், பருப்பு, கத்தரிக்காய் கறி, கீரை மசியல், ஸாலட், ரஸம், தயிர், அப்பளம், சிப்ஸ், ரெண்டுமூணு ஊறுகாய் வகைகள், பாதாம் ஹல்வா, காரடையான் நோம்பு ஸ்பெஷலா ஒரு (பெயர் தெரியாத) ஸ்வீட் இப்படி அமர்க்களம் போங்க.//

வல்லீம்மா
உங்க பேச்சி டூ க்கா :(
நான் வீட்டுக்கு வந்த போது, இதுல ஒரு ஐட்டம் மிஸ்ஸிங்! :((

said...

//கேசவன் என்ற பெயருக்கு 'தடைகளை நீக்குபவன்' என்று பொருளாம். ஏழுதடவை கேசவா கேசவான்னு சொல்லிட்டு ஒரு காரியம் செஞ்சால் வெற்றிதானாம்//

* கேசி எனும் அரக்கனைக் கொன்றதால் கேசவன்!
* கேசமாகிய அழகிய தலைமுடிச் சடையைக் கொண்டதாலும் கேசவன்! (கூந்தல் உள்ள பெண்ணைக் கேசவி என்றும் சொல்லலாம் :)

தடைகளை நீக்குபவனும் கேசவன்!
அதான் என் தோழியும்
"கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தீயோ?" என்கிறாள்!
"வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை" என்று கேசவனைச் சொல்லியே முடிக்கிறாள்!

தோலாயமானம் கோவிந்தம்
மஞ்சஸ்தம் மதுசூதனம்
ரதத்ஸம் கேசவம் த்ருஷ்ட்வா
புனர்ஜன்மம் நவித்யதே!

ஊஞ்சல் உற்சவத்தில் கோவிந்தனையும்
மஞ்சக்குளி மஞ்சத்தில் மதுசூதனனையும்
ரதோற்சவத்தில் (திருத்தேரில்) கேசவனையும் தரிசிப்பார்க்கு
புனர் ஜன்மம் என்பது இல்லையே!

said...

நேத்துதான் இந்தியா வந்த மாதிரியிருக்கு. அதுக்குள்ள கிளம்புற நாள் வந்தாச்சா? மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்குமே? நாலு தமிழ் சீரியல் பாருங்க,மனசு டரியலாகி சரியாயிடும்:-)))).

said...

//உபதேசம் கிடைச்சக் கத்திக்கு யார் எப்போ பேயாழ்வார்ன்னு பெயர் கொடுத்தாங்கன்னு தெரியலை//

ஹிஹி!
பேயின் குணம் பிடித்துக் கொள்வது!
நல்ல பேயின் குணம், பிடித்தால், விடாமல் இருப்பது! :)

எக்காரணம் கொண்டும் பெருமாளை அணுவளவும் விடாமல் பிடித்துக் கொண்டதால் பேய் + ஆழ்வார்!

இந்தப் பேயாழ்வார் தான்
சைவ-வைணவ ஒற்றுமைக்கு முதலில் கொடி பிடித்தது!
தாழ்சடையும் நீண் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
"இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து"

said...

//சக்கரமும் வில்லும்தான் பூமியில் அவதரிக்கலை போல. எதுக்கும் பதிவுலக ஆழ்வாரைத்தான் கேக்கணும். ஒருவேளை அவரே பதிவர் அவதாரமோ என்னவோ?//

:))
ஆமா! அவரை(னை)யே கேட்போம்! யாருப்பா அந்த ஆளு?

said...

//பெரிய திருவடியிடம், 'நான் வந்து போனேன் என்று சொல்லு'ன்னு ஆஜர் கொடுத்துட்டுக் கோபாலை நோக்கி அடி எடுத்து வைக்கவும், 'வாங்கோ'ன்னு பட்டரின் குரலுடன் சரேல்ன்னு திரை விலகவும் சரியா இருக்கு. திரும்பிப்பார்த்தால் நம்ம சீனு சிரிச்ச முகத்தோட 'வா வா'ன்றார்.//

எங்க டீச்சரின் ராசியே ராசி!
ஆ! வா!
என்று
ஆராய்ந்து
அருளேலோர்
எம் பாவாய்!
:)

said...

//நியூஸி மக்களுக்கு இனிப்பு வகைகள் (லாஸ்ட் ஷாப்பிங்) வாங்கிக்கிட்டு வீடுபோய் பொட்டிகளைக் கட்ட ஆரம்பிச்சோம். இரவு பதினொன்னேகாலுக்கு ஃப்ளைட்/

ஹா ஹா ஹா
அப்போ கட்டின பொட்டி எல்லாம்
இப்போ திருப்பி சென்னை வந்துருச்சா டீச்சர்? :))

எந்தக் கடையில் கடைசியா ஸ்வீட் வாங்கினீங்க? அந்தக் கடை ராசி தான் போல! சென்னை தவம் இருந்து உங்களை பெற்றுக் கொண்டது! :)))

said...

//சக்கரமும் வில்லும்தான் பூமியில் அவதரிக்கலை போல. எதுக்கும் பதிவுலக ஆழ்வாரைத்தான் கேக்கணும். ஒருவேளை அவரே பதிவர் அவதாரமோ என்னவோ?//

இதெல்லாம் டூ மச்! :)
அடியேன் பொடியேன்! வெரி வெரி பொடியேன்!

* திருமழிசை ஆழ்வார் = சுதர்சனம் என்னும் சக்கர அம்சமாகவும்
* திருமங்கை மன்னன் = சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாகவும்
தோன்றினார்கள்

திருமழிசை பாசுரங்களில் பொறி பறப்பதும், டடங் டடங் என்று ஒரே சந்தக் கவியாய் இருப்பதற்கு இந்தச் சக்ராம்சம் தான் காரணம்!

said...

அன்பும் விருந்தும் அமர்களம்.//

ரிப்பீட்டு....

said...

படிச்சிட்டே வரும்போது ,என்னடா இது சிங்கத்தோட கை மாதிரி இருக்கேன்னு கொஞ்சம் பார்த்தேன். எங்க வீடேதான்.!!!!!


அன்பு பதிவர்களே, விருந்தெல்லாம் கொடுக்கலை. ஒப்புடன் முகம் மலர்ந்து .....அவ்வளவுதான். நோம்பு அன்னிக்கு தாம்பூலம் கொடுக்க முடிந்ததுதான் எனக்கு சந்தோஷம்.
இந்த அம்மா இப்படி ஒரேயடியாப் புகழ்ந்து தள்றாங்க.:))


அன்பு ரவி,

உங்க பக்கம்(பதிவு) அப்லோட் ஆகவே இல்லை.

படிக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட 6 பதிவாவது விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.
அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சாப்பிட வாங்க.

said...

/* நாம் விட்டுட்டுப்போன காலணிகளைக் காணோம். 'பீடை விட்டது'ன்னு பாட்டி சொல்வாங்கன்னு */

அட.. அப்படியா! நான் நெறைய வாட்டி தொலைச்சிருக்கேன்.

ஆமா! செருப்பை மட்டும் தான் தொலைக்கனுமா.. இல்லை எதைத் தொலைச்சாலும், பீடை விட்டுடுமா? :-)

said...

//வல்லியும் சிம்ஹனுமா நம்மை அன்பாலே திணறடிச்சுட்டாங்க. (கவிநயா கவனிக்க)//

கவனிச்சிட்டேன் அம்மா :) (ராமலக்ஷ்மிக்கு நன்றி. கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் அவ்வளவா உலா வர முடியறதில்ல). வல்லிம்மா அன்புக்கு கேட்கணுமா? விருந்து அருமை!

said...

டிவி சீரியல்

ரெண்டு கோவில்

வல்லிம்மா சமையால் (ம்ம்ம்..எங்களுக்கு எல்லாம் எப்போ கொடுத்துவச்சிருக்கோ தெரியலை! ;))

கடைசியில சரவணாஸ் இனிப்பு...

கலக்குறிங்க டீச்சர்...;)

said...

//அப்பா பகல்தூக்கம் போடும்போது, கொஞ்சம் சத்தம்கித்தம் போடாம இருங்கன்னு அம்மா விரட்டுவாங்க பாருங்க, அப்ப என்னடா செய்யலாமுன்னு தெரியாம, சும்மா கப்சுப்னு இருக்கவும் முடியாம இருக்கும் சின்னப்பசங்களைப்போலன்னு வச்சுக்குங்க.//

ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!டச்சிங்க் .....

பயணத்தோடு செய்திகளும் (எப்படீ...) அருமை. அருமை. ஏதாவது லைப்ரரி வச்சிருக்கீங்களா ? :))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றிப்பா.

கலப்படமில்லாதச் சுத்த அன்புடன் அமைஞ்சுபோச்சு அந்த விருந்து.

மனசுதானே முக்கியம்,இல்லையா?

said...

வாங்க நட்புடன் ஜமால்.

கஞ்சி ரொம்பவே ஆறிப் பழங்கஞ்சியாப் போயிருச்சோன்னு.......

வேற வழி இல்லை!

said...

வாங்க சின்ன அம்மிணி.

த்தோடா..... இப்படியெல்லாம் வேறு பொருட்குற்றம் இருக்கா?

ஒன்பது என்பது ரொம்ப உயர்வான எண்.

நவம்.

நம்ம மக்கள் அதையே வேற ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டாங்களேப்பா(-:

said...

வாங்க மாதேவி.

அருமையா உணர்ந்தோம் அன்று.

அதுதானே முக்கியம்!

said...

வாங்க கயலு.

ஆமாம்ப்பா. கிடுகிடுன்னு வரிசைப்படி 99 மாத்திட்டு டான்னு சீரியலுக்குத் திரும்பிடுறாங்க!!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

எது மிஸ்ஸிங்ன்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. கார ஆம்படையாள் நோன்புக்கு அங்கே போனால் விசேஷ இனிப்பு கிடைக்கும். இந்த நோன்பு ஆண்கள் ஸ்பெஷல். மனைவியை விட்டுப்பிரியாமல் இருக்கவரம் வேண்டி ரங்க்ஸ் நோற்கணுமாம்.

மறுஜென்மம் இல்லையென்பது ஷ்யூர்
ஆயிருக்கு.

பெருமாளின் கௌஸ்துபம்கூடப் பிறவி எடுத்துருச்சேப்பா.

நம்ம குலசேகராழ்வார்தான். படியாய்க்கிடந்து உன் பவழவாய் காண்பேனேன்னவர். ( இந்தகுறிப்பு விஷயம் தெரியாத நம்ம வகுப்பு மாணாக்கருக்கு)
ஆகக்கூடி பெருமாளின் சுத்துவட்டம்பூராவும், ஜாலியா வைகுண்டத்துலே இருக்காம மனுஷனாப்பிறந்து அவரை வழிபட்டுருக்கு. இதுலே இருந்தே தெரியலையா மானிட ஜென்மம் எப்படி சிறப்பானதுன்னு. நாமும் கிடைச்ச இந்தஜென்மத்தை வீணாக்கக்கூடாது( அதான் பதிவரா ஆயிட்டோம்)

said...

வாங்க ஐம்கூல்.

பொதுவாவே கிளம்பும்போது ஒரு ஃபீலிங்ஸ் வர்றதைத் தடுக்கமுடியாது.

எல்லாம் ஏர்ப்போர்ட் போறவரைதான்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

உங்களுக்கும் காலம் வரும்:-)

said...

வாங்க வல்லி.

கொடுக்கற மனசைத்தான் பார்க்கணும்ப்பா.

இன்னொருக்கா நன்றி சொல்லிக்கறேன்.

said...

வாங்க சோம்பேறி.

நாம எங்கே தொலைக்கறோம்? அதுவா இல்லே காணாமப் போயிருது!!

தொலைக்கணுமுன்னு நினைச்சாத் தொலைக்கறோம்?

எது தொலைஞ்சாலும் பீடை விட்டுச்சுன்னு இருக்க முடியாது?

தங்கம், காசு தொலைஞ்சால் லட்சுமி நம்மைவிட்டுப் போயிருச்சுனு கவலை வந்துருமே.

நாம் எங்கியாவது போகும்போது நமக்கெதிரில் சவ ஊர்வலம் வந்தால் நல்லதாம்.எதிரில் வராமல் நாம் போகும் பாதையில் நம்மைத் தொடர்ந்து பின்னாலே வந்தால் பாதி நல்லதாம். இது நம்ம சாரதி சொன்னது.

தங்க்ஸ் காணாமப்போனா......

மூச். பேசப்படாது:-)

said...

வாங்க கவிநயா.

அது பலன் எதிர்நோக்காத 'அன்பு'

நானும் 'பாசமா' சாப்பிட்டேன்:-)

said...

வாங்க கோபி.

நானெங்க கலக்குனேன். எல்லாம் அதுவாய் கலங்குது:-)))

said...

வாங்க சதங்கா.

லைப்ரெரி எல்லாம் வச்சுக்க ஆசை இருந்தாலும்.... அதிர்ஷ்டம் வேணாமா?

said...

இது அப்பாக்கு பிடிச்ச‌ கோயில், பார்த்த‌சார‌தி விட்டா இங்கே தான் இருப்பார். நீங்க‌ போன‌ நேர‌த்துல‌ கூட‌ இங்க‌தான் இருந்திருப்பார். கேசவா கேசவான்னு சொல்லிட்டே இருப்பார். உங்க‌ புண்ணிய‌த்துல‌ சேவை கிடைச்ச‌து !

ஃபோட்டோ பார்த்து வாயெல்லாம் ஜொள்ளோ ஜொள்ளு

said...

//பொழுதுவிடிஞ்சா....சிங்கையில்//

ரொம்ப தாமதமா பார்த்து விட்டேனோ!

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

நம்ம ஆழ்வார்கள்கூட திருவல்லிக்கேணிக்கும் மயிலைக்கும் இடையே நடந்துநடந்தே பாடி வச்சுருக்காங்களே.
கேசவா கேசவான்னு சொல்லவா, கோவிந்தா கோவிந்தான்னு சொல்லவான்னு பட்டி மன்றம் வைக்கலாம்,இல்லே?

said...

வாங்க கிரி.

தாமதமே இல்லை.

ஜஸ்ட் ரைட் டைமிங்:-))))

said...

அடுத்த முறை சென்னை விஜயத்துல கண்டிப்பாக வல்லியம்மா வீடுக்கு போயிட வேண்டியதுதான்.... :)

said...

வாங்க மதுரையம்பதி.

தகவல் சொல்லுங்க நாங்களும் வந்துருவொம்:-)