Thursday, March 20, 2008

KRS-உனக்கு ஆப்பு ஏலோ ரெம்பாவாய்

இப்படி ஓர் மாணவரா?


டீச்சர் ஆப்புரெய்ஸல் பண்ணுங்கன்னு 'தானே' வந்து மாட்டிக்கிட்டார். சொ.செ.சூ:-))) டீச்சரைப்பார்த்து ஓடிஒளியும் மாணவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருத்தரா? இரு, ஆப்பு வைக்கிறேன்னுட்டுக் கண்ணாடியை நல்லாத் தொடைச்சு காதுலே மாட்டிக்கிட்டு உக்கார்ந்தேன்.

அங்கங்கே பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் போடறாங்களாமே..... நெசமாவா? நாமும் அப்படி(யே) செஞ்சுறலாமுன்னா...... இந்த மனசாட்சி வேற
முன்னாலெ வந்து கும்மியடிக்குது. இது வேலைக்காகாதுன்னுட்டு , எங்கெடா அந்த மாதவிப் பந்தல்? எட்றா அதை..... பந்தலைப் பிரிச்சு மேய்ஞ்சுக் கந்தலாக்கிறலாமுன்னு நம்ம ஜிகேகிட்டே சொன்னேன்..... பூனைப் பயபுள்ளே பயங்கரமானவன். 'சட்'னு எடுத்துக் கொfடுத்துட்டான்.

மொத்தம் 102 பதிவுகள். 2005 வது வருசம் ஆரம்பிச்சுருக்கார். அந்த வருசம் பூராவுக்கும் ஒரே ஒரு பதிவு. (வெல்டன்) ஓம் நமோ நாராயணா,ஓம் நமோ வெங்கடேசான்னு சொல்லிக்கிட்டே பிள்ளையார் சுழி போடறார். எப்படி? பிள்ளையார்ன்னு லேபிள் கொடுத்து:-))))

பதினோரு மாச விரதம். ஆளையே காணோம். எந்தக் கைகேயி காட்டுக்கு அனுப்பினாளோ? மக்கள்ஸ் நிம்மதியா இருக்காங்க. ...

மறுபடி புள்ளையார்ன்னு லேபிள், கூடவே படம் ( நல்லாவே இருக்கு) சின்னதா ஒரு நாலைஞ்சுவரிப் பதிவு. கடவுள் வாழ்த்து?ம்ம்ம்ம். இருக்கட்டும்.

ஸ்டார்ட்டிங் ட்ரபுள் முடிஞ்சு வண்டியை எடுத்தாச்சுப்பா. ஒளவையாரையும் புள்ளையாரையும் கொஞ்சிட்டுக் கிளம்புன வண்டி நேராப்போய் நின்னது திருப்பதியில்.

குற்றம் கண்டுபிடிச்சு ஒரு குட்டு வைக்கலாமுன்னு படிச்சா..... எங்கே படிக்கிறது.?? கண்ணுலே குளம் கட்டி நிக்கும்போது என்னன்னு படிக்கிறது?
பொல்லாத மாணவர். டீச்சரை அழவச்ச வெங்காயம்:-)


பிரம்மோத்ஸவப் பதிவுகள் ஒம்போதும் நவரத்தினங்கள். படிக்கறதோட விட்டுறாம பார்த்து மகிழவும்ன்னு அட்டகாசமான படங்கள். ஒவ்வொண்ணும் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்லுது. எங்கிருந்து கிடைச்சதோன்னு ஆராயக்கூட மனம் வரலை. பேசாம இதையே காப்பியடிச்சு வச்சுக்கிட்டா ஆச்சு.

சாமி வாங்குன இடிகள் படிச்சுட்டு, என் மனசாட்சி என்னை இடிச்சதை எங்கெபோய் சொல்வேன்?
நாமும்தான் 'திருப்பதிக்குப் போய்வந்தேன் நாராயணா'ன்னு இருக்கோம். இவ்வளோ விஷயம் இருக்கா அங்கே கவனிக்கன்னு எனக்கே(!) வியப்பாச்சு
திருமலைக் கோயிலில் இனிப் பார்த்துவச்சுக்கணுமுன்னு குறிப்பெடுக்க வச்சுட்டாரு கோயில் பதிவுகளில். இப்பெல்லாம் நம்மூட்டுப் பெருமாளுக்கும் ஒரு 'தயாசிந்து' வச்சுவுடறதுதான்:-)

(அதுக்காக கோபாலின் தாடையில் தழும்பைத் தேடவேணாம்)

சாமியைப் பத்தி எழுத இவரைவிட்டா வேற ஆளு இல்லைன்னு நாம் சொல்லணுமாம்? என்ன ஒரு இது பாருங்க. நடைவேற அருமையா வந்து விளுது. அப்புறம் வேற வழி? சொல்லிட்டா ஆச்சு. கோயில்கோயிலாப் போய் நாமெல்லாம் சாமியார் ஆயிட்டா? அப்புறம் ப்ளொக் படிக்க ஆளுக்கு எங்கே போவதுன்னு ஒரு பயம் வந்துருச்சு போல.......

ஒரு பண்டிகை, நல்லநாளை விட்டு வைக்காமத் தீவுளிக் கொண்டாட்டம், கந்தசஷ்டி, பேய்த் திருவிழா, நன்றி சொல்லும்நாள்ன்னு இண்டோ அமெரிக்க நல்லெண்ணத் தூதரா ஆனதுமில்லாம, ச்சும்மா வந்து படிச்சுட்டுப்போற ஆளுகளுக்கு என்னதான் தெரியுமுன்னு பார்க்கப் பரிட்சை வச்சுட்டாருப்பா. எல்லாம் ராமாயணம், மகாபாரதம், திருத்தலங்கள்ன்னு தெரிஞ்ச( தா நாம் எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்) விஷயங்கள்தானாம்.

புதிர் போடறது ஒரு பக்கமுன்னா...... இந்த ஜெயஸ்ரீ? எல்லாத்துலேயும் பத்துக்குப் பத்துன்னு அடிச்சு ஆடறாங்க. டீச்சர்னு பேர் வச்சுக்கிட்டு, துப்பட்டாவைத் தேடிக்கிட்டு இருக்கேன். பின்னே? வெக்கக்கேட்டை மறைக்க முக்காடு வேணாமா?

2006லே வெறும் முப்பத்தியேழு பதிவுதானேன்னு உள்ளே வந்தவளை இப்படிச் சங்கிலி ( ப்ச்.... பொற் சங்கிலிப்பா) போட்டுக் கட்டி வச்சதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? மத்தவேலைகள் எல்லாம் அப்படியப்படியே நின்னு போச்சு.

முழுக்க நனைஞ்சாச்சு...மிச்சம் மீதிகளையும் பார்த்துட்டே போகலாமுன்னு போனவருசத்துக்குள்ளே போனேன்....................

பெருமாளுக்கே பேதம் இல்லே...அப்புறம் வெறும் ஆளான நமக்கு எதுக்கு சைவம் & வைஷ்ணவ பேதமுன்னு ஒரு உலுக்கு உலுக்கிட்டார். குலுக்குன்னா படிச்சீங்க? :-))))

ஆண்டாளம்மா ஓடி வருது. நாமும்கூடத்தான் ஓடுவோம். கொஞ்சமா நஞ்சமா? நூறு தடா சக்கரைப் பொங்கலாம், வெண்ணெயாம். கொலஸ்ட்ரால் ஏறப்போகுது.........
இதுலே சுயம்பாகமா ஒரு புதினாத் தொவையலாம். மனுசன்......நம்மையெல்லாம் எப்படி ஆலாப் பறக்க வைக்கிறார் பாருங்க. போற போக்குலே ஒரு சினிமா, பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம்னு கலந்துகட்டி ஆடிக்கிட்டு இருக்கும் கலக்கல் மாணவர் யாருன்னு தெரிஞ்சதா?

இந்தவருசத்துக்கு சமூகசேவை, கோயிலுக்குப்போனா காசு கொடுத்துச் சாமியைப் பார்க்காதே, உண்டியலில் காசு போடாதேன்னுக்கிட்டே 'மயில்'தூதுகள் வேற ஆரம்பமாயிருக்குபோல. ஆறுமுக சாமிக்கு, தீட்சதர்களுக்குன்னு மடல் வழியா சமாதான(மயில்)ப்புறான்னு இன்னோரு ஓட்டம் ........

கண்ணனைக் கட்டிப்போட்டாங்களாம். அதுக்குப் பழிவாங்கறதுபோல கண்ணபிரான் ரவிசங்கர் நம்மை எழுத்தாலேயே கட்டி வச்சுருக்கார் இங்கே.

நவநாகரிக விஞ்ஞான உலகத்தில் இருக்கற நமக்கு, ஒரேடியா ஆன்மீகம், ஆத்திகமுன்னு எடுத்துச் சொல்லவும் சிலர் வேண்டி இருக்காங்கதானே? ஒரு விசயத்தைத் தெரிஞ்சுக்கிட்டாத்தானே அது இருக்கா இல்லையான்னு ஆராயலாம். சங்க காலத்துத் தமிழில் இல்லாட்டி அங்கங்கே கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகளில் எழுதி வச்சுருக்கறதைப்போல இருந்தா, படிக்கிறதோ
இல்லைப் புரிஞ்சுக்கிறதோ கஷ்டம்தான். இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கணுமுன்னா இந்தியக் கல்விமுறை மாதிரி உருப்போட்டுக் கத்துக்கோன்னு விடமுடியாது. காலம் மாறிகிட்டே வருது. விளையாட்டாக் கதை சொல்லிச் சொன்னாத்தான் கொஞ்சமாவது மனசுலே ஏறும்.

இந்தக் கதையின் மூலம் சொல்லி மனதில் ஏத்துறது உண்மைக்கும் புது முறையே இல்லை. பஞ்சதந்திரக் கதைகள் சொல்லிக்கொடுக்காத நீதிகளா?
கதை, பாட்டு. கலாட்டான்னு போனால்தான் படிக்கும்போது மட்டும் இனிக்காம பின்னாலே மனசில் ஊறவச்சுத் திங்கவும் முடியும்.

சாப்பாட்டு நேரம்வேற .....திங்கற எண்ணம் முன் வந்து நிற்குது.

போய்யா.போய் இன்னும் நல்லா ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும் சொல்லவர்றதைச் சொல்லு. இருக்குடீ உனக்கு...........

28 comments:

said...

அப்பாடா. வந்துருச்சா? எப்படா யானைப்படைத்தலைவிகிட்ட இருந்து ஆப்பு வரும்ன்னு தெனமும் வந்து எட்டிப் பாத்துக்கிட்டு இருந்தேன். :-)

said...

டீச்சர்,

எல்லா மதிப்பெண்ணையும் அவருக்கே போட்டுவிட்டால் மற்ற ஆன்மீக மாணாக்கர்கள் என்ன செய்வார்கள் ?

said...

சூப்பர் ரீச்சர்.....குறையில்லா கோவிந்தனை பதியும் கே.ஆர்.எஸ் தன் பதிவு எதிலும் குறை வைப்பதில்லை என்பதை அழகா சொல்லியிருக்கீங்க.

said...

ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க துளசி.

நான் கூட குமரன் சொன்னப்போ முடியாதுனு தோன்றியதை பின்னூடம் போட்டேன்.
இந்தப் பிள்ளை நன்றாக இருந்து இன்னும் நிறைய நினைப்புகளையும் (thoughts) நிஜங்களையும் சொல்லணும்.

எல்லாப் பதிவுகளையும் படிச்சு முடிச்சதே பெர்ர்ர்ரிய காரியம்.
அதை ரொம்ப நிதானமாப்(ஆராய்ந்து) பகிர்ந்து கொண்டதற்கு ஜிகேக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

said...

டீச்சரை அழவைத்த “வெங்காயமே!!” - வாழ்க வளர்க.
:-)

said...

ரீச்சர், மாதவிப் பந்தல் தவிர மத்த இடங்களில் இந்த ஆள் அடிக்கும் கூத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே...

அப்புறம் இந்த நட்சத்திர புதிரா புனிதமா பக்கமே வரலையே.... உங்க ஸ்பெஷல் வேற..

said...

துளசி இவரு ஒரு ஜகஜ்ஜால கில்லாடின்னு சொல்லுங்க...:):)

//அப்புறம் இந்த நட்சத்திர புதிரா புனிதமா பக்கமே வரலையே//

கொத்ஸ்சு தான் கெலிச்சிட்டோம்னு ஒரே குத்தாட்டம் போடராரு கொஞ்சம் அடக்கி வைங்க துளசி.:):)

said...

டீச்சர் ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க..;)))

தல கே.ஆர்.ஏஸ் பத்தி சொல்ற அளவுக்கு நமக்கு சரக்கு இல்லைங்க.


\\\கண்ணனைக் கட்டிப்போட்டாங்களாம். அதுக்குப் பழிவாங்கறதுபோல கண்ணபிரான் ரவிசங்கர் நம்மை எழுத்தாலேயே கட்டி வச்சுருக்கார் இங்கே.\\

எழுத்துலக கண்ணன்
எங்கள் மன்னன்
கண்ணபிரான் வாழ்க..வாழ்க ;))

said...

என் இனிய டீச்சர்...
உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி!
நான் உங்க கிட்ட என்ன பேச முடியும்? எப்ப வந்தாலும் பலகாரங்களையும் வடைகளையும் கொடுத்துப் பாச மழையால் வாயை அடைச்சிடறீங்க! (ரெண்டு எக்ஸ்ட்ரா வடை உங்களுக்குத் தெரியாம, அந்தா...அந்த டப்பாவுல இருந்து எடுத்துக்கிட்டேன்! கள்வன் :-)

இருங்க மென்னுட்டு வந்து இன்னும் சொல்லுறேன்!

said...

//2005 வது வருசம் ஆரம்பிச்சுருக்கார். அந்த வருசம் பூராவுக்கும் ஒரே ஒரு பதிவு. (வெல்டன்)//

அப்போ தான் டீச்சர், நீங்க, குமரன், ஜிரா, எல்லாரையும் படிக்க ஆரம்பிச்சேன்! அட கலகலப்பா எழுதறாங்களே! நாமும் எழுதலாம்-னு சும்மா ப்ளாக்கர்-ல அக்கவுண்டைத் தெரியாத்தனமா ஓப்பன் பண்ணித் தொலைச்சிட்டேன்!

said...

எழுத உக்காந்தா...ஒரு மண்ணும் வரலை! வாயில மண்ணு தின்னு அம்மா கிட்ட அடிவாங்குன கண்ணன் தானே! அதான் போல!

சரி..நமக்கெதுக்கு வம்பு-ன்னு உங்களை எல்லாம் படிச்சிக்கிட்டே ஒரு வருசம் போயிரிச்சி!
பின்னூட்டம் போட மட்டும் அந்த அக்கவுண்ட் பயன்பட்டுச்சு!
ஆனா இப்ப அதுவே 2005-இல் ஒரே பதிவுன்னு பப்ளிக்கா காட்டி மானத்தை வாங்குது! :-))

கொத்ஸ்
அந்த Date-ஐ எல்லாம் நம்ம இஷ்டத்துக்கு சேஞ்ச் பண்ண முடியாதா? ச்சே...எதுக்கும் கோவி கிட்டயு கேட்டு வைப்போம். அவர் கிட்ட தானே "காலங்கள்" இருக்கு! :-)

said...

டீச்சர்...
இதுக்குப் பேரு தான் ஒங்க ஊர்ல ஆப்பா?
இனி மாதவிப் பந்தல்-ல எப்படிப் பந்தல் போடணும்-னு சொல்லச் சொன்னா, நீங்க என்னைச் சீராட்டிப் பாராட்டறீங்க! எடுங்க அந்த இஸ்கேலை! :-)))

//இருக்குடீ உனக்கு...........//

என்ன டீச்சர் இருக்கு? எனி மோர் மிளகு வடை?

said...

நேத்து நியூயார்க்கில் 47th street and 5th ave கடையில் ஒரு மோதிரம் பார்த்தேன்...அதன் முகப்பில் யானை முகம்...கல்லு வச்சி ஜொலி ஜொலின்னு ஜொலிச்சிச்சி!

உங்க ஞாபகம் தான் வந்திச்சி!
வாங்கலாமா-னு பாக்ககுள்ள...மாலையில் வூட்டுக்குப் போயி மோதிரப் படத்தை மெயில் அனுப்பறேன் பாருங்க!

said...

எல்லோரையும் அப்ரைஸல் செய்யும் அந்த ஆண்டவன் தன்னையும் ஒரு
அப்ரைஸலுக்கு ஆட்கொண்டான் என்றால் எப்படி இருக்கும் ? என்ற கேள்விக்கு
ஒரு தினுசான பதில் உங்கள் பதிவு மூலம் கிடைக்கிறது.

போகட்டும். உங்கள் சிஷ்ய கோடானு கோடிகள் உபயோகிக்கும் சில வார்த்தைகளுக்குத் தாங்கள் தான் மனமுவந்து பொருள் சொல்லவேண்டும்:
உதாரணமாக : ஆப்பு , மொக்கை , கவுஜ
அடுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட‌
k r s
பதிவுகள், கே = கண்ணியமாகவும் கனிவாகவும், ஆர் = ரஸமாகவும் அதையும் ரசிக்கத்தகுந்ததாகவும், எஸ் = சிந்தனைக்குரியதாகவும், சிறப்பாகவும் இருக்கின்றன்.


அப்பதிவுகளை அக்கக்காக, ஆணிவேராகப் பிரித்து, ஒரு தினுசா ஓவர் ஹால் சர்வீஸ் செய்திருக்கிறீர்கள். சும்மா சொல்லக்கூடாது. அபாரம் ! ஒரு சரித்திர ஆசிரியர் பிஸியாலஜி (மனித உடற்கூறு) பாடம் நடத்தியது போல ...


சுப்பு ரத்தினம்
தஞ்சை.
பி.கு: உங்கள் மாணவிகள் சக்கை போடு போடுகிறார்கள். எல்லாப் புகழும் தங்களுக்கே.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

எல்லோரையும் அப்ரைஸல் செய்யும் அந்த ஆண்டவன் தன்னையும் ஒரு
அப்ரைஸலுக்கு ஆட்கொண்டான் என்றால் எப்படி இருக்கும் ? என்ற கேள்விக்கு
ஒரு தினுசான பதில் உங்கள் பதிவு மூலம் கிடைக்கிறது.

போகட்டும். உங்கள் சிஷ்ய கோடானு கோடிகள் உபயோகிக்கும் சில வார்த்தைகளுக்குத் தாங்கள் தான் மனமுவந்து பொருள் சொல்லவேண்டும்:
உதாரணமாக : ஆப்பு , மொக்கை , கவுஜ
அடுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட‌
k r s
பதிவுகள், கே = கண்ணியமாகவும் கனிவாகவும், ஆர் = ரஸமாகவும் அதையும் ரசிக்கத்தகுந்ததாகவும், எஸ் = சிந்தனைக்குரியதாகவும், சிறப்பாகவும் இருக்கின்றன்.


அப்பதிவுகளை அக்கக்காக, ஆணிவேராகப் பிரித்து, ஒரு தினுசா ஓவர் ஹால் சர்வீஸ் செய்திருக்கிறீர்கள். சும்மா சொல்லக்கூடாது. அபாரம் ! ஒரு சரித்திர ஆசிரியர் பிஸியாலஜி (மனித உடற்கூறு) பாடம் நடத்தியது போல ...


சுப்பு ரத்தினம்
தஞ்சை.
பி.கு: உங்கள் மாணவிகள் சக்கை போடு போடுகிறார்கள். எல்லாப் புகழும் தங்களுக்கே.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

மக்கள்ஸ்,

ரொம்பத் தாமதமா பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லவேண்டியதா ஆகிருச்சு.
மன்னிக்கணும். காரணம்? இருக்கே ( அது,இன்னொரு பதிவுக்குண்டான சமாச்சாரம்)

said...

வாங்க குமரன்.

இது ஆப்பு இல்லைன்னு சொல்றாருப்பா இந்த கேஆரெஸ்:-)

said...

வாங்க கோவியாரே.
என்னங்க இப்படிக் கணக்குப் போட்டா எப்படி? எல்லாருக்கும் 100 மார்க் அடுப்படியில்...ச்சீச்சீ.... அடிப்படையில் தானே மார்க். இப்போதைக்கு வகுப்பில் முதல் மார்க் இவர். ( போனாப்போவுது..நட்சத்திரம். நல்லநாள் பொல்லநாளுன்னா கொஞ்சம் சலுகை காமிக்கறதில்லையா அப்படி. ....(பிறந்தநாளுன்னா அன்னிக்கு எங்க வீட்டில் அடிக்கக்கூடாதுன்னு ஒரு சலுகை)

வலையில் கணக்கு வகுப்புத் துவங்குனா உங்களை அங்கே சேர்த்துவிட்டுருவேன்,ஆமா:-))))

said...

வாங்க மதுரையம்பதி,
உங்க பின்னூட்டமே சூப்பர்:-)

said...

வாங்க வல்லி.

அதுதான்ப்பா பேஜாராப்போச்சு. நல்லா இருப்பதை வேற எப்படிச் சொல்லறதுன்னு புரியலை. ஜிகேகிட்டே கேட்டால் 'மியாவ்'ன்னு சொல்லுங்கறான்:-)))

said...

வாங்க குமார்.

இவர் வாழப்பந்தல் வெங்காயம்:-)

said...

வாங்க கொத்ஸ்.

ஆறுமுகத்தைப் பத்திச் சொல்ல நேரமில்லைப்பா. அதான் ஏறுமுகத்தை மட்டும் சொன்னேன்:-)

புதிரா புனிதமா பக்கம் புள்ளைங்க வெள்ளாடட்டுமுன்னுதான். ஆமாம் நம்ம வகுப்பைவிட்டுட்டு வேற எங்கெல்லாமோ சுத்தறீர்ன்னு மக்கள் சொன்னப்ப நான் நம்பலை. இப்போ......

said...

வாங்க ராதா.

ஆமாம்ப்பா. ஜகஜ்ஜால கில்லாடிதான்:-)))
கொத்ஸ் குத்தாட்டம் போடறாரா? நம்ம வகுப்பில் 'பூனை'மாதிரி இருக்காரேப்பா:-)

said...

வாங்க கோபி.
சரக்கு ஏத்திக்கிட்டு வந்து சொல்றீங்களா?:-))))
கும்பலில் கோஷமா? :-))))

said...

வாங்க கதை நாயகரே.

வடை செஞ்சுக்கிட்டு இருந்ததில் புதிராபுனிதமாவுக்கு விடை சொல்ல விட்டுப்போச்சு:-)

என்ன.....நான் சீராட்டிப் பாராட்டுறேனா? எங்க ஊர்லே ஆப்புன்னாலே இப்படித்தான். பள்ளிக்கூடத்துலே ரெட் இங்க் பயன்படுத்தக்கூடாதுன்னு சட்டமே இருக்கு. ப்ராக்ரஸ் ரிப்போர்டே கிடையாது.

எதுக்கெடுத்தாலும்,ஓ க்ரேட். வெல்டன்தான்.

மோசமா இருந்தா, இட்ஸ் ஓகே. திஸ் இஸ் நை எண்ட் ஆஃப் த வொர்ல்ட்.

அதே பழக்கம் இங்கேயும் வந்திருச்சு:-)))

அதான் ஜிகே பிரிச்சுபோட்டதையெல்லாம் எடுத்து சீரா அடுக்கி வையுங்க. மியாவ்

said...

கேஆரெஸ்,
அந்த மோதிரத்தை உடனே அனுப்புங்க. என்னுடைய கல்வச்ச குட்டியானை பெண்டண்ட்க்கு மேட்ச்சா இருக்கும்.

வைரமுன்னு பேர். ஒரே பொடிக்கல்லும் 9 கேரட்டும்.

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

நம்ம சிஷ்ய'கேடி'கள் யாரும் இதுக்குப் பதில் சொல்ல முன்வரலை பாருங்க(-:

ஆப்பு: ஆப்படிப்பது

மொக்கை: மொக்கை போடுவது

கவுஜ: கவிதை எழுதுவது

இதெல்லாம் பரவலா வலைஉலகில் அனைவருக்கும் தெரியுமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இதுலேயும் ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருக்காங்க.

உப்புமாப் பதிவு கூட இருக்குங்க.


//ஒரு சரித்திர ஆசிரியர் பிஸியாலஜி (மனித உடற்கூறு) பாடம் நடத்தியது போல //

இது என்னவோ மெய்தான். நான் சரித்திர டீச்சர்தாங்க. நியூஸியின் சரித்திரம்னு ஒரு தொடர் ( ச்சும்மா 69 பகுதிகள்தான்)இங்கே எழுதியிருக்கேன்.

said...

தங்கக் கிரீடம் இந்த வாரம் யாருக்கு எனத் தெரிந்தபின்னும்,
அந்தக் கிரீடத்தைத் துளசி டீச்சர் தான் வந்து தனக்கு சூட்டணூம்னு
சொல்லி பிடிவாதமா இருக்காங்க..

நீங்க ஒருவாட்டி வரக்கூடாதா ..எல்லாப் புள்ளைங்களும் ஜோரா
ஒரு தரம் கை தட்டுவோமில்ல...


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com