Friday, March 28, 2008

வலையில் 'குமுதம்' வரலையே......

அவசரப்பதிவுன்னு வச்சுக்கலாம் இதை. ஒரு மூணு வாரமா வழக்கமா வலையில் படிக்கும் குமுதம் இதழைத் திறக்க முடியலை. லாக் இன் செஞ்சதும், இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் வேலை செய்யறதை நிறுத்திருது.

அவ்வளவு ஹாட் நியூஸா அதுலே இருக்கு? எதுக்குப் பொங்குது/மங்குதுன்னு தெரியலையேப்பா. நம் வட்டத்தில் குமுதம் வலையில் படிக்கும் அன்பர்கள் என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கப்பா.

ஆமாம். அதுலே என்னத்தைப் படிக்க இவ்வளவு மண்டையிடி?

எல்லாம் பழக்க தோஷம்தான். வீட்டுக்குத் தெரியாம அந்தக் காலத்துலே படிப்போம். அவ்வளவு நல்ல பேர் அதுக்கு அப்பவே:-)

25 நயா பைசாதான் செலவு. ஹூம்..அதெல்லாம் பழங்கதை...... இருக்கட்டும் ஒரு பக்கமா.

இப்போதையக் கவலை குமுதம் நம்ம கணினியில் திறக்க முடியலை.

குமுதம்.காம் க்கு மடல் அனுப்பினேன். கிணற்றில் போட்ட கல்:-)

19 comments:

said...

எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு. ஆனால் நேருப்புநரியில் அந்த சிக்கல் இல்லை. வழக்கம் போல் படிக்க முடிகிறது.

said...

ரீச்சர்,

எனக்கு ஓப்பன் ஆகுதே....!! காலையிலே தீராநதி'லே கவிதாயினி தமிழச்சியோட பேட்டி படிச்சேன்.... :)

said...

ஹிஹி, அவனவன் வலையே வரலைனு தேவுடு காத்துண்டு இருக்கான். இதுல உங்களுக்கு குமுதம் வரலைனு கவலையா?

அப்படினு கீதா மேடம் பின்னூட்டம் இடுவாங்க பாருங்க. :)))

said...

//ஆனால் நேருப்புநரியில் அந்த சிக்கல் இல்லை.//

@sanjai, பொருளில் குற்றம் இல்லை, சொல்லில் தான், இருந்தாலும் மன்னிக்கபடலாம் சஞ்சய் ராமசாமி. :D

said...

//ஆனால் நேருப்புநரியில் அந்த சிக்கல் இல்லை.//

@sanjai, பொருளில் குற்றம் இல்லை, சொல்லில் தான், இருந்தாலும் மன்னிக்கபடலாம் சஞ்சய் ராமசாமி. :D //

ஹிஹி.. அம்பி அண்ணே.. உங்களுக்கு தெரியாத மேட்டரா? பிழை இல்லாமல் எழுதுபவர்களை ஒரு பதிவராக இந்த சமுதாயம் ஏற்று கொள்ளுமா? சொல்லுங்கள் :P

அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்ணே.. :))

said...

வாங்க சஞ்சய்.

நெருப்பு நரி போட்டுப் பார்த்தேன். வருது. நன்றி.

said...

வாங்க இராம்.

இனிமேல் நெருப்பு (குண்டத்தில்) வச்சுதான் குமுதம் படிக்கணும்.

வராததால்தான் பிரச்சனையே(-:

said...

வாங்க அம்பி.

கவலைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

இப்படிப் பாடச்சொல்லுங்க கீதாவை:-)

said...

அம்பி,,
சஞ்சய்(ராமசாமி)க்கு புதவிசொ வாம்:-)

said...

அக்கா!
இன்ரநெற் எக்ஸ்பிளோவரில் வரவில்லையா?? உடனே நெருப்பு நரியை நாடுங்கள். நான் செய்வது அதே!

said...

வலையில் குமுதம் தாரளாமா வருதே , ஏன் வரலைனு சொல்றாங்களேனு வந்தா, இப்படி சொல்றிங்க , i.e ல வரலைனு , அப்போ உலாவியில் வரலைனு தானே சொல்லணும் ? :-)

நான் நெருப்பு நரி, ப்லோக் அப்படி ரெண்டு உலாவி தான் எப்போது, i.e எல்லாம் பாவிப்பதே இல்லை.

ப்லோக் உலாவி இங்கே கிடைக்கும்
http://www.flock.com/ அருமையான உலாவி.

said...

I Read kumudam Today.


Even I posted 'Soma.Valliappan's Paname odiva and Oh Pakkangal from kumudam to my blog
check there

said...

real player which can download .flv file directly from internet cause this problem. uninstall real player.

said...

வாங்க யோகன்.

நெருப்புநரியிலே பார்க்க முடியுது. நன்றி

said...

வாங்க வவ்வால்.

வலையில் உலாவப் போனப்பத்தான் வரலை......பேசாம கணினிக்குள்ள சொற்களஞ்சியத்தைத் தேடிப் படிச்சு வச்சுக்கணும் நான்.

நேத்து இரவில் இருந்து நரி முகம்தான்:-))))
இன்னும் உங்க ஃப்லோக் பார்க்கலை.
பொழுது விடியட்டுமுன்னு இருந்தேன்:-)

said...

வாங்க தமிழ் நெஞ்சம்.
வந்துக்கிட்டு இருந்தது வராமப்போச்சேன்னுதான் இந்தப் புலம்பல்.

ஆனா ஒண்ணு, நம்ம மக்கள்ஸ் உடனே வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சு, விளக்கம் சொல்லிக் கொடுக்கறது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு.

தமிழ்கூறும் நல்லுலகம் இது.

வாழ்க.

said...

வாங்க மருதன்.

கரெக்ட்டாப் பாயிண்டைப் புடிச்சீங்க.

அப் க்ரேடட் வெர்ஷன் இன்ஸ்டால் பண்ணிக்கோன்னு தினம் பத்துமுறைவந்து நொச்சுப் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சரின்னு தெரியாத்தனமாத் தலையை ஆட்டுனது ஒரு மூணுவாரம் முன்புதான்.
அதுக்கப்புறம்தான் குமுதத்தில் நுழைஞ்சதும் மொத்த உலாவியும்(வவ்வால், நினைவிருக்கு)நின்னுபோகுது.

இப்ப முதல் வேலையா ரியல் ப்ளேயரைத் தூக்கிட்டேன். இப்ப எல்லாம் சுபம்.

நன்றிங்க.

said...

அக்கா,

என்னக்கா இப்படி சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள்.

அப் க்ரேடட் வெர்ஷன் இன்ஸ்டால் பண்ணினதுக்கப்புறம் உலாவியில பிரச்சினை கொடுக்குதுன்னா பிளேயரை தூக்கிர்றதா? இது ஒரு தீர்வாக்கா?

உலாவிகாரங்களுக்கு சின்னதா ஒரு மெயில் அனுப்புங்கக்கா. அப்போதான் எதிர்காலத்துல எல்லாத்தையும் ஒண்ணா பாவிக்கமுடியும்.

அப்புறம் இணைய உலகத்துல ரியல் பிளேயர் தனக்கென ஒரு இடத்தை வச்சிருக்குது. அத தூக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட போறீங்க.

இப்போ எல்லாம் சுபம். ஆனா
அப்புறம் வைக்கும் பாருங்க ஆப்பு. :-) .

அக்கா, நெருப்புநரிக்கு வாங்க. எல்லாம் நல்லபடியே நடக்கும். அதில ஏதாவது பிழை இருந்தாலும் கொஞ்ச நாளிலயே அத சரி பண்ணிடுவாங்க. ஏன்னா அது ஓபன் சோர்ஸ் மென்பொருளுங்க.

குமுதம், விகடன், வெப்துனியான்னு எல்லா தமிழ் இணையங்களையும் என்ஜாய் பண்ணுங்க.

said...

வாங்க கௌ பாய் மது.

எந்த நேரத்தில் சொன்னீங்களோ.....

ஆப்புன்னு சொன்னது சரியாப்போச்சு!

பாட்டுக் கேக்க முடியாமல் ஆச்சு. உடனே ரியல் ஆடியோ பேஸிக் மட்டும் இறக்கி வச்சேன். குமுதம் டகால்ன்னு வரலை. அதான் இப்ப நரி இருக்கேன்னு விட்டுட்டேன்.

இந்தக் குழறுபடியால் ரெண்டுமூணு அட்ஜெஸ்ட்மெண்ட் போயிருக்கு நம்ம லேப்டாப்லே.

வீகெண்ட் முடியட்டுமுன்னு 'பொறுமை' காக்கின்றேன்:-)