Tuesday, March 11, 2008

குண்டுச் சட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டினா.....

இவை இரண்டும் போட்டிக்கு!!!!!!!

மிச்சம்மீதிகள் உங்கள் பார்வைக்கு.:-))))
குண்டுச் சட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டினால்....

இப்படித்தான் ஆகுமோ? மார்ச் மாத 'பிட்'க்குத் தலைப்பைப் பார்த்ததும், ஃபூன்னு ஊதித் தள்ளிறலாமுன்னு ஒரு எண்ணம். நம்ம வீட்டுக்கே 'ஹவுஸ் ஆஃப் ரிஃப்ளெக்ஷன்'னு ஒரு பேர் ஏற்கெனவே வச்சுருக்கு. கண்ணாடிகள் நிறைய இருக்கு பாருங்க.....எந்த ஒரு பகுதியில்(மூணு இடம் தவிர) இருந்தாலும் வெறுங்கண்ணுக்குத் தெரியாததை, மனக்கண்ணால் பார்த்துக்கறமாதிரி காட்சிகள் இருக்கும். இப்பக்கூட நான் கிழக்குப் பார்த்து உக்கார்ந்துருக்கேன். மேற்கே தெருவில் ஓடும் வண்டிகளும், முன்வாசக்கதவும் எல்லாம் அப்படியே தெரியும். சாப்பாட்டு மேசையில் இருந்து, வீட்டுக்குப் பின்னால் கிழக்கே இருக்கும் துணி உலர்த்தும் கம்பம், அடுத்த வீட்டு கராஜ் இப்படி எல்லாம் வடக்கே தெரியும்.
ரங்கமணிகிட்டே ஒரு வேலையை ஒப்படைச்சுட்டு, நான் வேற அறையிலே இருந்தாலும், இங்கே அவர் செய்கிற (தப்பு)அழகு கண்ணுலே பட்டுரும், குறை சொல்ல ஏதுவா:-))))
நம் 'திறமை'யைக் காட்ட மிகச்சரியான வேளைன்னு கேமராவைக் கையில் எடுத்தாச்சு. முந்திய 'குருமார்கள்' சொன்னதுக்கிணங்க, தேதி ஆப்ஷனைத் தூக்கினேன். க்ளிக் க்ளிக் க்ளிக்....... அந்தோ....... பரிதாபம்.
கேமெராவுக்கு ஏன் இப்படிக் கண்ணு கலங்குது? ஏம்மா...யாராவது அடிச்சாங்களா?
ஊஊஊம்ம்ம்ம்ம்ம்........(விக்கிவிக்கி அழுவுதுப்பா)
எல்லாம் இந்த டபுள் க்ளேஸிங் வேலை. இந்த அழகில் டிண்ட்டட் வேற. கேக்கணுமா?

வெறுங்கண்ணில் நல்லாவே தெரிவது எல்லாம் கேமெராக் கண்ணுலே ஒரே கலங்கல்........
இதுக்காகப் போட்டியில் கலந்துக்காம இருக்க முடியுமா? வெற்றி தோல்வியைச் சமமாப் பாவிக்கிறேன்னு பின்னே எப்படிக் காமிக்கிறது?
'மூளை'யைப் பயன்படுத்தி எடுத்தவைகளை எங்கியாவது போடணும்தானே?
'பளிச்'களுக்கு முன்னால் 'இருட்'னு சிலபடங்களைப் போட்டிருக்கேன்.
'கலக்கல், கலக்கிட்டீங்க' ன்னு நீங்க பாராட்டுறது இப்பவே கேக்குது:-)))))))
38 comments:

said...

//
'கலக்கல், கலக்கிட்டீங்க' ன்னு நீங்க பாராட்டுறது இப்பவே கேக்குது:-)))))))//

நாங்க சொல்லவேயில்லியே =;)

சும்மா டமாஸ். வீட்டச் சுத்தி நெஜ்ஜம்மாவே கலக்கிட்டீங்க. நல்ல ரசனை.

பாவம் ரங்கமணி, பாருங்க கொடுத்த வேலைய என்ன ஒரு பொருப்பா செய்யறார். ஒரு வேளை நீங்க watch பண்றது தெரிஞ்சு போச்சோ :)))

said...

வணக்கம் துளசி மேடம். படங்களும் கலக்கலா இருக்கு. உங்க வீடும் நல்லா இருக்கு.

said...

டீச்சர் .. கடைசிக்கு முந்தின படத்தை கொஞ்சம் கிராப் பண்ணி பாருங்க .. நல்ல வந்திருக்கு ..

said...

Romba Sumaar...

said...

ரங்க மணியத் தொவைச்சுக் காயப்போடச் சொல்லிட்டு நீங்க ஜாலியா காமெராவெ எடுத்துக்கிட்டு போட்டோ பிடிக்கிறீங்களா - வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டம் வெடிக்கும் - ஜாக்கிரதை

said...

ஓஹோ, எங்க தம்பிக்கு இப்படி வேலை கொடுக்கிறீங்களா:)
துளசி இந்த மாதிரிப் படங்களுக்காகவே
ரெண்டு வாரங்களுக்கு ஒரு போட்டோ போட்டி வந்தத நல்லா இருக்கும்னு தோணுது. படங்கள் அத்தனையும் நல்லா இருக்கு.
அவங்களுக்கு நிச்சயம் குழப்பமாப் போயிடும்.:)

said...

வாங்க சதங்கா.

மிர்ரர் கண்ணாடி(???) கட்டிடங்கள் அதிகம் இல்லாத கன்ஸர்வேடிவ் ஊர் இது. அதான் பிரதிபலிப்புக்கு வெளியே போனாலும் பயன் இல்லை.

ரங்கமணிக்குத் தெரியாது இந்த போட்டோ விஷயம்:-)

said...

வாங்க பிரேம்ஜி.

வீடு நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு ஒரு நன்றி.

இந்த வீட்டைக் கட்டுனதே ஒரு தொடரா ஏற்கெனவே போட்டுருக்கேன்.

said...

வாங்க யாத்ரிகன்.

நீங்க சொன்னதைச் செஞ்சுட்டேன். இப்பப் பார்த்துட்டுச் சொல்லுங்க சரியா இருக்கான்னு.

said...

வாங்க இளா.

எல்லாப் பயிருமா நல்லா விளைஞ்சுருது?

சாவியும் இருக்குமே. விவசாயிக்குத் தெரியாததா?

said...

வாங்க சீனா.

ஏனிந்தக் கொலைவெறி?

//ரங்க மணியத் தொவைச்சுக்//

ஐயோ.... இதுவேறயா?

said...

வாங்க வல்லி.

வீட்டுவேலை செய்யறது 'தியானம்' செய்வதற்குச் சமம். பிபி இறங்குமாம்.

அதான் கொஞ்சம் இயற்கை வைத்தியம் நடக்குது:-)

said...

நான்: ஹலோ ரீச்சர்

தங்கமணி (அசரீரியாய்): துவைச்சு வெச்ச துணி அப்படியே இருக்கு. அதைக் காயப் போடாமல் லேப்டாப்பில் என்ன வேலை....

நான்: பை ரீச்சர்!!

said...

படங்கள் நல்லாருந்துச்சு துளசி மேடம்..அதைவிட உங்க வர்ணனை இன்னும் நல்லாருந்துச்சு..

said...

//நம்ம வீட்டுக்கே 'ஹவுஸ் ஆஃப் ரிஃப்ளெக்ஷன்'னு ஒரு பேர் ஏற்கெனவே வச்சுருக்கு. கண்ணாடிகள் நிறைய இருக்கு பாருங்க.....//


என் கனவு இல்லத்துல நீங்க வாழ்றீங்க டீச்சர் :)))


//ரங்கமணிகிட்டே ஒரு வேலையை ஒப்படைச்சுட்டு, நான் வேற அறையிலே இருந்தாலும், இங்கே அவர் செய்கிற (தப்பு)அழகு கண்ணுலே பட்டுரும், குறை சொல்ல ஏதுவா:-)))) //


த‌ப்ப‌ க‌ண்டுபிடிக்குற‌துக்காக‌வே வீடு பூராக் க‌ண்ணாடி வ‌ச்சுருக்கீங்க‌ளா? அந்த‌ ஊரு துப்ப‌றியும் பொலிஸ் ப‌டையிலா வேலை செய்றீங்க‌?


//கேமெராவுக்கு ஏன் இப்படிக் கண்ணு கலங்குது? ஏம்மா...யாராவது அடிச்சாங்களா? //


கேம‌ரா "ஷேக்' ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.இங்க‌ அனுப்பிவைங்க‌.ஏன்னா ஷேக் எல்லாம் அற‌பு நாட்டுல‌ தான் இருக்க‌ணும்... :)))


ப‌ட‌ங்க‌ள் அழ‌கா இருக்கு டீச்ச‌ர்.இன்னும் கொஞ்ச‌ம் பிற்த‌யாரிப்பு செஞ்சிடுங்க‌..ப‌ட‌ங்க‌ள் சூப்ப‌ரா வ‌ரும்.
[யாருங்க‌ அவ‌ரு ர‌ங்க‌ம‌ணிங்குற‌து? அடுத்த‌ முறை நீங்க‌ அவ‌ருக்கு வேலை கொடுக்கும்போது கொஞ்ச‌ம் ஹெவியான வேலையாக் கொடுங்க‌.தொப்பை குறையுற‌ மாதிரி :))) ]

said...

சூப்பர்!சூப்பர்! சூப்பர்!!!

said...

\\இவை இரண்டும் போட்டிக்கு!!!!!!!\\\

படங்கள் நல்லாருக்கு... ;))

\\'மூளை'யைப் பயன்படுத்தி எடுத்தவைகளை எங்கியாவது போடணும்தானே? \\

சூப்பர் படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

said...

அக்கா!
வீட்டைக் கலைநயமாக வைத்துள்ளீர்கள். பாராட்டுகிறேன்.

said...

டீச்சர் முதல் இரண்டு படமும் அழகாக இருக்கிறது.

ஆனா கல்யாணத்துக்கு பிறகு இந்த துணி துவைக்கும் வேலை கிடையாது என்று நினைத்து கொண்டு இருந்த என் நினைப்பில் ஒரு லோடு மண்ணை போட்டுவிட்டீர்களே:((((

said...

மேடம்,

நீங்க நல்லா படம் எடுக்கறீங்க. தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல பெண் ஒளிப்பதிவாளரை இழந்திருக்கிறது. தமிழ்ப்பத்திரிகை உலகம் ஒரு நல்ல புகைப்படக் கலைஞரை இழந்திருக்கிறது.

எல்லாம் சரி, ஆனா நீங்க உங்க படத்தை எல்லாம் 'என் வீடு'ங்கற இணைப்போட சொல்றது எத்தனை வீடுகளில் பிரச்னை உண்டு பண்ணுகிறது என்று அறிவீர்களா? (போதாக்குறைக்கு சார் துணி துவைச்சுப் போடற மாதிரியெல்லாம் ரிஃப்லக்ஷன் காட்டி)

said...

போட்டோக்களும் கமெண்டுகளூம் சூப்பர் :))

உங்க ஸ்டைல்ல...

வாழ்த்து(க்)கள்

said...

வாங்க கொத்ஸ்.

ரங்கமணி: (அசரீரியாய்) எதுக்கு ஆளுங்க இப்படிக் கிடந்து துள்ளுறாங்க? நல்லவேளை நான் சமைக்கறதை நீ போட்டோ எடுக்கலை:-)

said...

வாங்க பாசமலர்.

சரம் தொடுத்த அசதி போயிருச்சா? :-)

said...

வாங்க ரிஷான்.

ரங்கமணி????

பினாத்தலார் வகுப்புக்கெல்லாம் போகலையா? ரொம்ப முக்கியமான வகுப்பாச்சே அது. கம்ப்பல்சரி சப்ஜெக்ட். ஆப்ஷனில் விடமுடியாது.

சின்னதா விளக்கம் சொல்றேன்.

உங்களுக்காக ஒருத்தர் பிறந்து வளர்ந்துக்கிட்டு இருப்பாங்க பாருங்க அவுங்க உங்க தங்கமணி. அவுங்களுக்கு நீங்க ரங்கமணி.

புரிஞ்சதா?:-)))))

என் ரங்கமணி தொப்பையை வளர்த்துவச்சதே நாந்தானாம். நம்ம சமையல் கைப்பக்குவம் அப்படி!!!

said...

வாங்க டெல்ஃபீன்.

நன்றி, நன்றி & நன்றி:-)

said...

வாங்க கோபி.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க யோகன்.

கெமெரா வழியாச் சொன்னது கொஞ்சம்தான். அது வெறும் நிழல்.

பேசாம ஒரு நடை இந்தப் பக்கம் வந்து 'நிஜத்தை'ப் பார்த்துட்டுப்போங்க.

said...

வாங்க குசும்ப்ஸ்.

அதுவா? துணி துவைக்கும் வேலை (உங்க துணிக்கு மட்டும்னு )கிடையாது.

மண் அள்ளிப்போட மாட்டேன். சோப் அள்ளிப்போடுவேன்:-))

said...

வாங்க ரத்னேஷ் (சீனியர்)

தமிழ்ப்பட உலகம் கொடுத்துவச்சது அவ்ளொதான். அதுக்கு நாமென்ன செய்ய முடியும்?

என்ன வீடுகளில் பிரச்சனைன்னு சொல்லிட்டீங்க. வீட்டுவேலைகளைப் பகிர்ந்து செஞ்சுக்கறது தப்புங்களா?

அதுவுமில்லாம துணிகளை மெஷீந்தானே துவைக்குது!

சார் வீட்டுவேலை செய்யும்போது நான் படம் எடுக்க, நான் படமெடுக்கும்போது சார் வீட்டுவேலை செய்யன்னு பகிர்ந்துதான் செய்வது வழக்கம்:-)

சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்கப்படவேணும் என்பதில் உறுதியா இருக்கவேண்டாமா?

said...

வாங்க சென்ஷி.

//உங்க ஸ்டைல்ல...//

அ(த்)து:-))))))

said...

முதல் படம் லல்லாருக்கு துள்சி!
ரங்கமணியை ஏன் அல்லாரும் இப்படி
கல்லாய்க்கிராய்ங்க...ஹூம்! வீட்டு வேலையை ஷாரிக்கிறது தப்பா? இன்னும் நீங்கள் ஹாலில் ஒக்காந்திருக்க உங்களுக்கு ஒரு கப் காபி கொண்டுவந்து கொடுத்தால் கூட நன்னாயிருக்கும். இது எப்படியிருக்கு?

said...

வாங்க நானானி.

இதைச் சரின்னு சொன்னா எங்கே அவுங்க வீட்டுத் தங்கமணிகளுக்குப் பச்சைக்கொடியோன்னு பயப்படறாங்கப்பா எல்லாம்:-))))

இந்த காஃபி மட்டும் வேணாமே ப்ளீஸ்......
தன்னுடைய சூட்டுக்கு ஒரேதா ஆத்தியாத்தி அதை பூ.மூ. சூட்டுக்குத் தந்துருவார்(-:

எனக்குக் காஃபி கொதிக்கும் சூடா இருக்கணும். ராஜாஜி மாதிரி சூடு வேணும்:-)

said...

மேடம்,

ஜோக் என்கிற பெயரில் முன்பொரு பத்திரிகையில் படித்த "வாழ்வியல் ஸ்லோகம்" (சோகம்?) ஞாபகம் வருகிறது.

இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்:

"ஏண்டி, உன் வீட்டில் துணி துவைத்துக் காயப்போட்டு எடுத்து வைக்க, சமையல் செய்ய, வீடு சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவ, மாவு அரைக்க எல்லாத்துக்கும் மிஷின் இருக்கா?"

"ம். இருக்கார்"

("ர்" என்கிற ஒற்றை எழுத்தே எம் தலையெழுத்தாகிப் போனது பாருங்கள்.)

said...

//'கலக்கல், கலக்கிட்டீங்க' ன்னு நீங்க பாராட்டுறது இப்பவே கேக்குது:-)))))))//

கலக்கல், கலக்கிட்டீங்க :))))))))

said...

ரத்னேஷ் சீனியர்,

'ர்'

ரசித்தேன்:-)))))))))))))))

said...

வாங்க ரசிகன்.

நன்றி

said...

துளசி
உங்களது இந்தப் புகைப்படங்கள் மிக அழகாக உள்ளன.

said...

வாங்க கல்யாணக் கமலா.

கல்யாண் & கமலா?

நீங்க புதுசுங்களா? வணக்கம்.நலமா?

உங்க வீட்டுக்கு வந்து பார்த்தேன்:-)))