Saturday, March 29, 2008

இது நம்ம ஸ்டைல் Earth Hour 2008

இந்த வருசத்துலே இருந்து நாங்களும் கலந்துக்கறதா முடிவு செஞ்சது போன வருசத்திலே இருந்து. இந்த 'விழா'வை ஆரம்பிச்சது ஆஸ்தராலியாவின் சிட்னி நகரம்.2007 மார்ச் 31 தேதி மாலை ஏழரை முதல் எட்டரைவரைன்னு நடந்துருக்கு. இந்த ஒரு மணி நேரத்திலேயே நகரின் மின்சாரத்தில் 2.1% சேமிக்கப்பட்டதாம்.



இந்த வருசம் இதுக்கான நாள் இன்னிக்குத்தான் . மார்ச் 29, இரவு எட்டுமுதல் ஒன்பது மணிவரை. ஆஸ்தராலியாவுடன் கைகோர்க்க நியூஸி, ஃபிஜி, இந்தியா உள்பட 18 நாடுகள் முன்வந்துருக்கு.



எல்லாத்துலேயும் முந்திக்கும் நாங்கள் இன்னிக்கும் முந்திக்கிட்டோம். ஃபிஜியும், நியூஸியும் ஒரே தீர்க்கரேகையின் பாதையில்ன்னு சொன்னாலும், இப்ப எங்களுக்கு இந்தப் பகல்நேரச் சேமிப்பு இன்னும் முடியாததால் 'வீ த ஃப்ர்ஸ்ட்':-))))


சனிக்கிழமை. கோயிலுக்குப் போய்வரவே ஏழே முக்கால் ஆகிரும். வந்தவுடன் எட்டுமணிக்கு மெழுகுவத்தி வெளிச்சத்தில் ராச்சாப்பாடுன்னு மனசுக்குள்ளே பயங்கரமாத் திட்டம், கேண்டில்லைட் டின்னர் இதுவரை ஜிகே சாப்புட்டதே இல்லையேன்னு .......




கோயிலில் ஆரத்திக்குத் திரை விலகியதும் என்னவொரு இன்ப அதிர்ச்சி. சாமி எல்லாருக்கும் ரோல் மாடலா இருக்கார். மெழுகுவத்திகளால் அலங்காரம். ஜிலுஜிலுன்னு ஜொலிக்கிறார்.



ச்சின்ன டீலைட் கேண்டில்ஸ். வரிசையா தீபாவளிக்கு வைக்கிறாப்போல இருக்கு. எனக்குத்தான் எதையெடுத்தாலும் எண்ணனுமே....... 76 சாமிக்கு. அடுத்த கோடியில் ஒரு ஏழெட்டு ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதாவுக்கு. இன்னிக்குன்னு பார்த்துக் கேமெரா கொண்டுபோகலை(-:


நகரச் சதுக்கத்தில் இதைக் கொண்டாட சிட்டிக்கவுன்ஸில் ஒரு ஏற்பாடு செஞ்சுருக்கு. அங்கே பெரிய திரையில் Eleventh Hour ன்னு ஒரு குறும்படம் காமிக்கிறாங்க. எல்லாரும் மெழுகுத்திரி ஏத்திவச்சுக் கொண்டாடுவாங்க போல. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுப் போகலாமுன்னு அந்த வழியா வீட்டுக்கு வந்தோம்.

அங்கே 2000 மக்கள்ஸ் கூடுனாங்கன்னு உள்ளூர் பத்திரிக்கையும் ச்சுடச்சுட ரிப்போர்ட் கொடுத்துருக்கு இங்கே.


சரியா எட்டு மணிக்கு வீடுவந்தாச்சு. எங்க தெரு முழுசும் ஒருத்தர் வீட்டிலேயும் லைட் எரியலை. எங்கூரு ஆளுங்களுக்குச் சொல்லிட்டாப்போதும். கடைப்பிடிச்சுருவோம். தட்டுத்தடுமாறி வீட்டுக்குள்ளே வந்து மெழுகுத்திரி நாங்களும் கொளுத்திட்டுக் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். இந்த டிவிச்சனியன் சத்தமில்லாம நிம்மதியா இருந்துச்சு.


கோபால் போய் அவருடைய மடிக்கணினி எடுத்துக்கிட்டு வந்தார். எதுக்கு அனாவசியமா எர்த் அவர்லே இப்படின்னா....ரெடிமேடா பதில் வருது, இது பேட்டரியில்தான் வேலை செய்யுதுன்னு.



பதிவுக்குன்னு கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டேன். ஒரு மணிநேரம்தானே.... ஒம்போது மணிக்குச் சாப்பிட்டா ஆச்சு. மைக்ரோவேவ் வேணுமே சாப்பாட்டைச் சூடாக்க.



தினமும் இரவு எங்கள் (இறந்துபோன ) பூனை அடையாளம் இருக்கும் ஒருத்தன் சரியா 9.15க்கு நம்ம வீட்டுக்குச் சாப்பிட வந்து போய்க்கிட்டு இருக்கான் இப்பக் கொஞ்சநாளா..இனிமே எந்தக் கமிட்மெண்ட்டும் வேணாம்னு இருந்தாலும், எங்க கப்பு போலவே இருக்கறானேன்னு துரத்த மனசு வரலை. எப்படிடா இவனுக்கு நேரம் கண்டுபிடிக்க முடியுதுன்னு நினைப்பேன். வெளியே போட்டிருக்கும் பெஞ்சு மேலே பொறுமையா உட்கார்ந்துருப்பான். 9.13க்குப் பார்த்தாக்கூட வந்துருக்கமாட்டான்.
ஒம்போதேகால் ஆகணும்.



இன்னிக்கு ஒன்பது மணியானதும் வீட்டு முன் அறையில் வச்ச மெழுகுத்திரியை அணைக்கப்போனா, அந்த பெஞ்சுலே உக்கார்ந்துருக்கான் அந்தக் கருப்பன்!


இந்த எர்த் அவர் நிகழ்ச்சியாலே எனக்கு ஒரு உண்மை தெரியவந்துச்சு.


வீட்டில் விளக்கு இல்லைன்னா பூனைக்கு மணி பார்க்கத்தெரியாது.:-)))))))






21 comments:

said...

வீட்டில் விளக்கு இல்லைன்னா பூனைக்கு மணி பார்க்கத்தெரியாது

;-))

இப்ப தான் நம்ம இருட்டு நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு பல்ப் மட்டும் எரியவிட்டிருக்கேன். கணினியும் கூட ;-)

said...

வாங்க பிரபா.

எல்லாம் நீங்க போனவருசம் ஆரம்பிச்சுவச்ச திருவிழாதான்:-)

said...

பூனைக்கும் மணி பார்க்கத் தெரியலை...

இதனையே சாக்கா வைச்சி ஒரு பதிவும் கிடைச்சாச்சு :).

படங்கள் அருமை, அதிலும் அந்து சாமி விளக்கு பளிச்.

said...

அக்கா,

நல்ல விஷயம்தான். ஆனா, கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமோன்னு தோணுது! இப்பவாவது இந்த அளவுக்காவது செய்றோமேன்னு சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான் :)

said...

நானும் அட்டென்டண்ஸ் குடுத்துகறேன்.

said...

:-p நல்லா எழுதியிருக்கீங்க..

ஆனா அக்கா நீங்களுமா???? இந்த இடுகையை கட்டாயம் வாசியுங்க தமிழ்க்கொலை

said...

ரொம்ப நல்ல விஷயம் துளசி மேடம். நாங்களும் கலந்துக்கபோறோம் இன்னைக்கு இரவு. கூகிள் வலைத்தளம் கூட தன் முகப்பு பக்கத்தை இருட்டா காமிக்குது.கூகிள் தளமும் இருண்டது

said...

எங்க வீட்டு எஜமானரும் சொல்லிட்டாரு நாங்களும் இன்னிக்கு ராத்திரி இருட்டில்தான் இருக்கணுமாம். :))

said...

வாங்க தெகா.

குழந்தை நலமா?

காமாட்சிவிளக்குன்னு இதைச் சொல்வாங்கதானே?

எரிக்கவோப் புதைக்கவோக்கு முன் நடக்கும் நிகழ்ச்சிக்கு இதுவேணுமுன்னுதான், மறக்காம ஊரில் இருந்து வாங்கிவந்தேன் 5 வருசம் முன்பு:-))))

said...

வாங்க தஞ்சாவூரான்.

நெவர் டூ லேட்.

இன்றுமுதல் புது வாழ்வுதான்:-)

said...

வாங்க சாமான்யன் சிவா.

ஆஜர் பதிஞ்சாச்சு:-)

said...

வாங்க கௌபாய் மது.

கொலைகாரி ஆகிட்டேனா?!!!!

அங்கங்கே நவ்வாலு க ச ப ட இருக்கும்போது நமக்குமட்டும் ஏன் பஞ்சம்ன்னு இருக்கு(-:

said...

வாங்க பிரேம்ஜி.

அடுத்த வருசம் இன்னும் பல நாடுகள் கூடவே வருமுன்னு தோணுது.

சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

இங்கேயும் 'எஜமானர்கள்' சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள் விடுமுறையாச்சேன்னு, வெள்ளியன்றே அவுங்கவுங்க வகுப்புகளில் 'எர்த் அவர்' ஆரம்பிச்சு வெற்றிகரமா நடத்திட்டாங்க.

எதிர்கால உலகம் எஜமானர்களுக்குத்தானே? அக்கறை இருக்காதா என்ன? ;-)))

said...

நல்ல பதிவு மேடம்,

ஒரு சிறு வேண்டுகோள்: இது மாதிரியான "செய்தி சார்ந்த" பதிவு போடும் போது அதன் பின்னணி குறித்து ஒரு பத்தி எழுதினால், சேகரித்து வைத்துப் படிப்பவர்களுக்கும் அயல்நாட்டில் இருந்து படிப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். ஒரு மணிநேர விளக்கணைப்பு எதற்காக என்கிற ஒருபத்தி விளக்கம் ஒரு சமூக நல செய்தியும் சொல்லி இருக்கும்.

//இந்த டிவிச்சனியன் சத்தமில்லாம நிம்மதியா இருந்துச்சு.//

விட்டுத் தொலைக்கவும் படாமல், அனுபவிக்கவும் பட்டு கொண்டு இப்படி நன்றி இல்லாமல் ஏச்சும் வாங்கிக் கட்டும் தலையெழுத்து டிவி, பிவி இருவருக்குமே விதிக்கப்பட்டதோ!

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

விவரம் அந்தச் சுட்டியில் இருக்கேன்னுகொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன். இனிமேப்பட்டு இப்படிச் செய்திகளுக்கு நானும் நாலுவரி(!) எழுதுனா ஆச்சு:-)

(இருட்டுலே எழுதமுடியலைன்னு சாக்க்கு சொல்லிக்கவா? :-)))))


டிவிக்கு மட்டும்தான் இது. பிவிக்கு இல்லை.

நமீதா சொன்னது ஞாபகம் வருது:-)

'எல்லாம் செவ்வாய்க் கிரக வாசிகளைப் பற்றித்தான்':-))))

"இவர்களோடு வாழவும் முடியாது. இவர்கள் இல்லைன்னாலும் வாழ்வது கஷ்டம்"

said...

மேடம்,

//நமீதா சொன்னது ஞாபகம் வருது:-)

"இவர்கள் இல்லைன்னாலும் வாழ்வது கஷ்டம்"//

நமீதாவுக்குப் பொருத்தமான வார்த்தைகள் தான்.

said...

ஆமாங்க.. எனக்கும் இருட்டிலே மணி தெரியலே. அவன் மேலேயே மோதிட்டேன்...:-))

நல்ல பதிவு / படங்கள்...

said...

வாங்க ச்சின்னப் பையன்.

//ஆமாங்க.. எனக்கும் இருட்டிலே மணி தெரியலே. அவன் மேலேயே மோதிட்டேன்...:-))//

பிறாண்டலைன்னு நம்பறேன்:-)))))

said...

துளசி புது ஆளுதான் ஜிகுஜியா:)

நாங்களும் முந்தாநாள் ஒரு மாணி நேரம் இருட்டில் இருந்தோம். ஒளியில்லையானால் ஒலியும் குறையுமோ??
அனுபவித்தேன் அந்த நேரத்தை:))


படங்கள் வெகு நேர்த்தி.

said...

வாங்க வல்லி.

நம்ம ஜூனியர்தான் ஜிக்கு ஜூனியர்.

சுருக்கமா ஜிக்குஜூ:-))))

எல்லா சத்தமும் இந்த 'பவர்'ரால் தான்:-)))