Sunday, September 30, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 28

11/12
இன்னைக்கும் காலையிலே ஏழரைக்கே இவர் போனாரு. பில்டர் வரேன்னு சொல்லியிருக்காராம். முன் கதவு சாவி அவர்கிட்டே இல்லையே!
இவர்போய்க் கதவைத் திறந்து வச்சபிறகு, பில்டர் வந்துட்டாராம். இன்னைக்கு கதவுங்களுக்கு கைப்பிடியெல்லாம் போடறேன்னு சொன்னதாலே
இவர் திரும்பி வந்து எல்லாப் பூட்டும் கைப்பிடிகளும் இருக்கற பெட்டியைக் கொண்டுபோனார்.அப்புறம் பேப்பர் பார்த்தப்போ, பக்கத்துத் தெருவிலே ஒரு கராஜ் சேல் இருக்கு. ஃபிரிட்ஜ் இருக்காம். மகளோடத் தனிக் குடுத்தனத்துக்கு
வேணுமே! போய்ப் பார்த்தா நல்லாவே இருந்துச்சு. $200க்கு பேசி அட்வான்ஸ் கொடுத்தோம். கொஞ்சம் ப்ளாஸ்டிக் கன்டைனர்ஸ் $ 5 க்கு
கிடைச்சது. ரெண்டு மார்பிள் பொம்மைங்க $10க்கு வாங்கினேன். வழக்கம்போல கோபால் மூஞ்சை''க் காண்பிச்சார்! விக்கறவர் தனி ஆளா இருக்கார்.
அவருக்கு வயசு ஒரு 65 இருக்கும். புத்துநோய். ஆப்பரேஷன் ஆகப்போகுது. அதுக்கப்புறம் ஹோஸ்பைஸ் போறாராம். நல்ல வீட்டுக்கு
இந்த பொம்மைகள் போகணுமுன்னு ஒரு ஆசையாம். 'சிகிச்சை முடிஞ்சுத் திரும்ப வருவேனான்னு தெரியலை''ன்னு சொன்னார். 'அதெல்லாம் கவலைப் படாதீங்க. கட்டாயம் வருவீங்க. எங்க வீடு இதோ பக்கத்து தெருதான். எப்ப வேணுமுனாலும் வந்து பொம்மைகளைப் பாருங்க. நான் நல்லபடியா
வச்சுக்குவேன்னு சொன்னேன். அவர் இன்னும் சில டெர்ரக்கோட்டா ப்ளாண்டர்களை எனக்குச் சும்மாவே கொடுத்தார். காசு கொடுத்தப்ப
வேணாமுன்னு கண்டிப்பாச் சொன்னார். ( அதுக்கப்புறம் ஒரு ஆறுமாசம் கழிச்சு, வாக் போனப்ப அவரைப் பார்த்தேன். நம்ம பழைய
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இப்ப இருக்காராம். ஒரு நாள் வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு, ஒரு மாசம் கழிச்சுப் போனேன். அங்கே மூணு வாரத்துக்கு முன்னாலே அவர் இறந்துட்டார்னு சொன்னாங்க. ஹார்ட் அட்டாக். பாவம்.)ப்ச்...............
அங்கிருந்து வீட்டுக்குப் போனா, பாத்ரூம்லே கேவிட்டி கதவுக்கு லாக் போட்டாச்சு. திறக்கக் கொள்ள கஷ்டம், கைவச்சு இழுக்க இடம் இல்லே.
பெயிண்டர்ங்க வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. அப்படியே ஒரு ரெண்டு கராஜ் சேல் போனோம். மகளுக்கு ஒரு வாஷிங் மெஷின்
வேணுமே. கிடைக்கலே. ஆனா சின்னச் சின்ன பொருள்கள் சில கிடைச்சது!
மறுபடி 'நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ் போனோம். ப்ரைவஸி லாக் பெருசு வாங்கலாம்னா, 98 டாலர்! அப்புறம் 20 டாலருக்கு இன்னோரு சாமான்
ஒரு ப்ளேட் மாதிரி இருக்கு, அதைப் பொருத்திட்டு, விரலாலே இழுக்கலாம்! சரி இருவதோட போட்டும்ன்னு வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தோம்.அப்படியே 'கிச்சன்திங்க்ஸ் கடைக்குப் போய் கொஞ்சநாளாவே பார்த்துவச்சுருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மைக்ரோவேவ் வாங்கினோம். $299 ஆச்சு. வர்றப்ப மகளுக்குப்
ஃபோன் போட்டு வீட்டுக்கு வரச் சொன்னோம். அவளுக்கு ஒரு மைக்ரோவேவும் தேவையா இருக்கு. நமக்கும் அப்கிரேடு ப்ண்ணற சமயம்:-))
அவ வந்தவுடனே இவுங்க எல்லாம் போய் அந்த ஃப்ரிட்ஜ்ஜைக் காருலேயே ஏத்திக் கொண்டுபோய் மகள் வீட்டுலே வச்சாங்க. நானும் பழைய
மைக்ரோவேவ் எடுத்து மகளுக்குக் கொடுத்தேன். இன்னும் சில சாமான் மின்சார வாணலி எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். எடுத்துகிட்டுப்
போனாள். இங்கே பொதுவா, பிள்ளைகள் ஃப்ளாட்டிங் போகும்போதுதான்
அம்மாக்கள் வீட்டுச் சாமான்களை புதுப்பிக்கற நேரம். அந்த ஆகிவரும் பழக்கத்தை நாம மீற முடியுமா?மத்தியானம் 3 மணிக்கு ஷாலினி குழந்தை சுஹானாவோட பிறந்த நாள் விழாவுக்குப் போனோம். மகளும் ஒரு நாலரை மணிக்கு வந்தாள்.
அங்கிருந்து திரும்பிவர வழியிலே ( நமக்கு எங்கேயிருந்து வந்தாலும் திரும்பி வர வழின்னு ஒண்ணே ஒண்ணுதானே இருக்கு!)வீட்டுக்குப்
போனா, அங்கே கேரி மட்டும் லைட் வேலை செய்யறாரு.சில கதவுங்களுக்கு கைப்பிடி போட்டாச்சு. பைஃபோல்ட் கதவுக்குப் பிடியைத்
தப்பா போட்டிருக்கார் க்ரேக்! என்னா பில்டரோ?அப்புறம் கோயிலுக்குப் போனோம். அங்கிருந்து திரும்ப வரப்போ இன்னோரு விஸிட் வீட்டுக்கு! எல்லோரும் வேலையை முடிச்சுகிட்டுப்
போயிருக்காங்க!


12/12
இன்னைக்குக் காலையிலே போய் எல்லாக் கதவுங்களையும் 'செக்'செஞ்சோம். நிறைய கதவுகளை சரியா வைக்கவே இல்லை!
சின்னதா சந்து தெரியுது! விளக்குகளைப் போட ஆரம்பிச்சுருக்காரு கேரி! வெளியே போட்ட சிமெண்ட்டு காயத் தொடங்கியிருக்கு.
இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமையாசே. ரொம்ப கொயட்டா இருக்கு.


மத்தியானத்துக்குமேல கிங் வரேன்னு சொன்னாராம். அவரு
ஃபேக்டரியிலே, கிச்சன் பெஞ்சுக்குக் கீழே வரும் கிக் போர்டுக்குப் போடப்போற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டையை
வெட்டிக்கிட்டு இருக்காராம்!இதுக்கு நடுவிலே நாம நேத்து வாங்கின மைக்ரோவேவ் ரெண்டு ஸ்டேஜ் சமையல்தான் செய்யுது. நமக்கு வேண்டியது 3 ஸ்டேஜ்.
அதுனாலே அதைத் திருப்பிக் கொடுக்கப் போனோம். அதுலே சமையல் செஞ்ச ஸ்பைஸ் வாசனை வருதுன்னு சொன்னாங்க ஸில்வியா.
நாந்தான் நேத்து சமையலே செய்யலையே! அப்புறம்தான் ஞாபகம் வந்தது, புளி சாதத்தை 1 நிமிஷம் சுடவைச்சேன்னு!அங்கே இருக்கும் மைக்ரோ அவன்களில் வேற ஒண்ணும் சரியில்லே. நமக்கு வேணுங்கறதைச் சொல்லி விசாரிக்கச் சொன்னோம்.
அப்படியே 'ஹார்வி நார்மன்' போய் மைக்ரோவேவ் பார்த்தா, நமக்கு வேணுங்கற மூணு ஸ்டேஜ் ஃபங்ஷன் உள்ளது இருக்கு. முழுவதும் ஸ்டெயின்லெஸ்
ஸ்டீல் இல்லை. ஆனா முகப்பு மட்டும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்! விலை449$.

அந்த மாடல் நம்பரை எடுத்துக்கிட்டுக் 'கிச்சன்திங்ஸ் போய் அது வேணுமின்னு சொன்னோம்.விலை 429க்கு தரேன்னாங்க ஸில்வியா. ஆர்டர் கொடுத்து, ரெண்டு மூணு நாளுலே வருமாம்.
நான் அதுவரை, சமைக்க அடுப்பே இல்லைன்னு 'அழுது'ட்டு வந்தேன்.நமக்கு ஃ·ப்ளை பையிலே ஒரு ரேடியோ க்ளாக் புக் செஞ்சிருந்தேன். இலவசம்தான்! அதையும் வாங்கிகிட்டு வந்தேன்.
அப்புறமா பீச்சுக்குப் போனோம். காத்து வாங்க இல்லே. எப்பவும் நமக்கு பீச்சுதான் 'ப்ளானிங் மீட்டிங்' நடத்துற இடம்.
நாளையிலே இருந்து என்னென்ன செய்யணும், எல்லா வேலைகளுக்கும் செய்யற/ செய்யப்போற ஆளுங்க ஃபோன் நம்பர் எல்லாம் குறிச்சு
ஒரு 'வொர்க் ஆர்டர்' எழுதுனாரு. சனிக்கிழமை 'ச்சீனா போறாரில்லையா?

அப்புறம் அங்கேயிருந்து அப்பா, அம்மாவைப் பாக்க
இந்தியாவுக்கும் போறாரு. ஜனவரி முதல் தேதிக்கு இங்கே திரும்ப வர்றதா ப்ளான். அந்த சமயம் கிறிஸ்மஸ் விடுமுறையும் இருக்கறதால் அவ்வளவா வீட்டு வேலைகள் நடக்காது. திட்டம் எல்லாம் பக்காவா எழுதி வச்சுக்கிட்டு, நாங்க பீச்சுலெ இருந்து கிளம்பி வரும்போது அப்படியே ஒரு ரைடு வீட்டுப் பக்கம்!
13/12
நம்ம வீட்டிலே மைக்ரோவேவ் இல்லை! எல்லா வேலையும் ரொம்ப 'ஸ்லோ'வா நடக்குது! ஒரு பத்தேமுக்காலுக்கு நான் போய் என்ன
நடக்குதுன்னு பார்த்தேன்.பெயிண்டர்ங்கதான் வேலை செய்யறாங்க. தூணுக்கு ஸ்டீல் க்ரே அடிக்கறாங்க. காலையிலே கிங் வந்து கொஞ்சம்
வேலை செஞ்சுட்டுப் போயிருக்கார். அப்ப அங்கே எங்க இவரும் வந்தார். அங்கிருந்து அடுக்களை டைல்ஸ் பார்க்கப் போனோம்.
வெள்ளையிலே கொஞ்சம் கேபினெட் கலர் வர்றது ( முன்னமேயே சாம்பிள் கொண்டுவந்தது) முடிவாச்சு. அங்கிருந்து கிச்சன் திங்ஸ்க்கு ஃபோன்
போட்டா, நம்ம மைக்ரோவேவ் வந்திருச்சாம். அதையும் வாங்கிகிட்டு அப்படியே 'மெட்ரொ டைல்ஸ்' கடைக்குப் போய் பாத்ரூம் டைல்ஸ் முடிவு செஞ்சுட்டு வந்தோம்.

மத்தியானம் ரெண்டரைமணிக்கு 'டிஷ் ட்ரா' டெலிவரி இங்கே 311க்கு கொண்டு வந்துட்டாங்க. அவுங்களை புது வீட்டு விலாசம் கொடுத்துப் போகச் சொல்லிட்டு நானும் போய் பார்த்தேன். இறக்கி வச்சிட்டுப் போயிருக்காங்க. தூணுக்கு கலர் அடிச்சாச்சு. நல்லாதான் இருக்கு!
சாயந்திரமா ஒருக்காப் போகும்படியாச்சு. இவருக்குப் போகமுடியாது, மீட்டிங்கு இருக்கு. நீ போய் கதவைச் சாத்துன்னாரா, நான் போனா,
இவரும் மீட்டிங்கு கேன்சல் ஆயிடுச்சுன்னு அங்கெ வரார். அப்புறம் நான் வந்துட்டேன். இவரும், மத்தவங்களும் சேர்ந்து அடுப்பை வெளியே
எடுத்து வச்சுப் பார்த்தாங்களாம். கிங்தான் சாயந்திரம் வரதா இருக்கார்.
கிங் வந்து போனபிறகு இன்னைக்கு கட்டாயம் அலாரம் போடணும்! அதுக்கு ஒருதடவை போயிட்டு வந்தோம். நாங்க போறதுக்குள்ளெ கிங் வந்துட்டு கொஞ்சம் கார்நீஸ் ப்ளெயினா இருக்கறது, பேண்ட்ரீ வரும் இடத்தில் போட்டுட்டுப் போயிருக்காரு. அவருக்கு ஃபோன் செஞ்சு அலாரம் ஆன் செஞ்சு இருக்கற விவரம் சொன்னோம்.

இல்லாட்ட அவர் பாட்டுக்கு உள்ளே போயிட்டா?


அடுப்புக்கு பின்னாலே ஒரு splash guard கண்ணாடித் தடுப்பு வருது! அதுக்கு இடையூறா ஸ்விட்ச் இருக்கு. அதையும் மாத்தணும்.14/12
இன்னைக்கு காலையிலே ஏழரைக்கு கேஸ் இணைப்புக்கு ஆளு வருது! இவரு, பாவம் காலேலெ ஓடுனாரு.நான் ஒரு 9 மணிக்குப் போனேன். பில்டர், இவுங்களுக்கு ஃப்ரீ ஸ்டேண்டிங் அடுப்புன்னு சொல்லலையாம்! அதுக்கு வேற மாதிரி ஃபிட்டிங்காம்! இடம் சரியில்லைன்னு இன்னோரு பெரிய ஓட்டை சுவத்துலே போட்டாங்க! கேரி வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. அடுப்புக்கிட்டே ஸ்விட்ச் சொன்னேன். அப்படியெ ஒரு ப்ளக் போடச் சொன்னேன். அங்கேயே மைக்ரோவேவ் வச்சுக்கலாம்!


தொடரும்..................

11 comments:

said...

போய் பாக்கறது ரெண்டு தப்பு கண்டுபிடிக்கிறது. அதைச் சரி பண்ணறது.

வாங்கறது. திரும்பக் குடுக்கிறது. திரும்ப வேற ஒண்ணு வாங்கறது.

இன்னும் எம்புட்டு பதிவு இப்படியே ஓட்ட போற உத்தேசம்?

said...

'தப்புகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்'
எல்லாத் தப்பையும் கண்டுபிடிச்சுச் சரி செய்யும்வரை 'தொடரும்':-)

கூர்க்காக் கத்தி வெளியிலெ வந்தா.........ரத்தம் பார்க்காமத் திரும்பாது!

said...

'///சிகிச்சை முடிஞ்சுத் திரும்ப வருவேனான்னு தெரியலை''ன்னு சொன்னார். 'அதெல்லாம் கவலைப் படாதீங்க. கட்டாயம் வருவீங்க. எங்க வீடு இதோ பக்கத்து தெருதான். எப்ப வேணுமுனாலும் வந்து பொம்மைகளைப் பாருங்க. நான் நல்லபடியா
வச்சுக்குவேன்னு சொன்னேன்.///

ரசித்த வரிகள் டீச்சர்! (டீச்சர்தானே?)
கொத்தனாருக்கு ஏன் இந்த அங்கலாய்ப்பு?:-)))

said...

அந்த பொம்மைகள் வடித்த கைகளை சும்மா சொல்லக்கூடாது... அருமையான கற்பனை.தத்ரூபமாக இருக்கு.
கதவில் gap ஆ!கதவை தயாரிக்கும் போதே அதை நிலப்படியுடன் சேர்த்து தான் தயாரிப்பார்கள்,அப்போதே தெரிந்திருக்குமே?

said...

சொல்ல மறந்துவிட்டேன்.
கேரேஸ் சேல்ஸில் ஒரு தடவை நான் 220 வெள்ளி கொடுத்து கடையில் வாங்கிய டிஜிடல் கேமிரா,.அதே மாடல் 6 வெள்ளிக்கு கிடைத்தது.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

கவலைப்படுற மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாப் பேசுனா நாம என்ன குறைஞ்சாப் போயிருவோம். அதுலெயும் இங்கெல்லாம் ஒண்டிக்கட்டையாவே
பல முதியோர்கள் இருக்கறதைப் பார்க்கறப்பக் கஷ்டமாத்தான் இருக்கு. சொந்தபந்தம் எல்லாம் ரொம்ப ஒட்டிஉறவாடுறதை இப்பெல்லாம் பார்க்க முடியறதில்லைங்க(-:

கொத்தனார் அர்ஜுனன் மாதிரி. இலக்கை மட்டுமே பார்க்கிறார். அக்கம்பக்கத்துக் கிளை(கதை)களைக் கவனிக்கறதில்லை:-))))

said...

வாங்க குமார்.

ஐரோப்பாவில் சுற்றுலாப் போனப்ப நிறைய மார்பிள் சிலைகளைப் பார்த்து ரசிச்சிருக்கேன். உடைகளில் இயல்பா ஏற்படும் மடிப்புகளையெல்லாம் கூட அழகாச் செதுக்கி இருப்பாங்க. அதேபோல இந்தச் சிலைக்களிலும் இருக்கு. அநேகமா விலைகூடுனதா இருக்கலாம். என்னவொ நமக்கு 10லெ கிடைச்சிருச்சு. எந்த ஊர் என்ற விவரம் இல்லை. பறவைகள் அந்த தம்பதிகள்(??) தோள் மீதும், உடையிலும் உக்காந்துருக்கு. அந்த மனிதரின் கைத்தடி கூட மனித எலும்பு டிஸைனில் இருக்கு.

கதவுகள் ஒருவேளை அந்த மரத்தில் இருக்கும் ஈரம் உலரும்போது அப்படி ஆகுமுன்னு நம்ம நண்பர்( இந்த ஊர்க்கார்) சொன்னார். முன்வாசக் கதவு பரவாயில்லை. அது பக்கத்தில் ஸ்டடியில் இருக்கறதுக்கு ஒரு காகிதம் நுழையும் அளவு கேப் இருக்கு. நிலைவாசல் இது ரெண்டுக்கும் அலுமினியம்.

said...

துளசி, இந்தப் போயிட்டு வர பெட்ரோல் செலவிலயே இன்னோரு குட்டி வீடு கட்டிடலாம் போல இருக்கே.

வீட்டு ப்ளூ கலர் பிரமாதமா இருக்கு. எல்லாம் நல்லபடி யா ஃபிக்ஸ் ஆகணுமே சாமின்னு தோணறது:))))

said...

'குட்டி' வீடு கட்டிக்கலாம்தான். ஆனால் கோபாலுக்கு நான் அனுமதி தரலையேப்பா:-))))))

வேணுமுன்னா பூனைக் 'குட்டி' க்குக் கட்டித்தரலாம்.

பில்டர் சம்பளத்தைக் கேட்டா மயக்கமே வந்துரும்.

ஒரு வழியா எல்லாம் ஃபிக்ஸ் ஆச்சுப்பா.

said...

வீடு கட்டுறது எவ்வளவு கஷ்டமோ அவ்ளவு கஷ்டம் அதை எழுதறதும். நீங்க எதுக்கும் சளைச்சவர் அல்லன்னு இலவசத்துக்கு ஒரு தகவல் சொல்லிருங்க.

said...

வாங்க ஆடுமாடு.

'கல்'வீடு மாதிரிதான் 'சொல்'வீடும்னு சொல்லிட்டீங்க.

அரைக்கிணறு தாண்டமுடியாதுதானே?

நன்றிங்க.