Wednesday, September 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 22

8/11
காலையிலே 10 மணிக்குப் போய்,'லெட் லைட்' கண்ணாடி வேலை செய்யறவங்களைப் பார்த்து, 'பின்' கதவுக்கு 'மியாவ்' டிஸைனைச் சொல்லி ஏற்பாடு செஞ்சிட்டு .........

நம்ம வீட்டுலே இப்ப அஃபிஷியலா ரெண்டு பூனைங்க இருக்கு. அதுகளும் வீட்டு அங்கத்தினர் என்ற அந்தஸ்த்தோட இருக்கணுமுன்னா, நாமும் சில உரிமைகள் கொடுக்கணுமில்லையா? இதோ...... வீட்டில் உங்களுக்கான பங்குன்னு ஒரு கண்ணாடிக் கதவை இவுங்களுக்குன்னு ஒதுக்கினேன். அதுலே வர்ற ரெண்டு துண்டுகளுக்கும் ஒரே டிசைன். பூத்துக் குலுங்கும் ஒரு செடியின் அடியில் உக்கார்ந்து வெயில் காயறாங்க. நல்லவேளை ரெண்டு பேரும் கறுப்பாவே இருக்கறதாலே பிரச்சனையில்லை:-)


அப்படியே 'ட்ரெண்ட்டி மிர்ரர்' கடைக்குப் போய் விவரம் சொன்னேன். வியாழன் காலையிலே 10.30 க்கு 'ஜான்' வந்து பார்த்து அளவெடுக்கறேன்னு சொன்னார்.


4.30க்கு வெளிப்புறம் 'டெக் ஏரியாவுலே காங்க்ரீட் போட இடத்தை சமன் செய்யற ஆளு வர்றதா இருந்தது. நானும் க்ரேகும் 5.05 வரை காத்திருந்தோம். யாரும் வரலை! கப்போர்டுங்களுக்கு பலகை போடறதுக்கு இவர் டிஸைன் வரைஞ்சு தந்துட்டுப் போயிருந்தார். அதைக் கொடுத்தேன். முகத்துலே ஒரு சின்ன(!) அதிர்ச்சியோட அதை வாங்கிப் பார்த்துட்டு விவரம் கேட்டார் பில்டர். சொன்னேன்.பெயிண்ட் ஆளுங்க வந்து 'சா·ஃபிட் பெயிண்ட்' ஒரு தடவை அடிச்சு முடிச்சிருக்காங்க! நல்லா பளிச்சுன்னு இருக்கு!9/11
உள்ளே ஜிப் ஆளுங்கதான் வேலை செஞ்சிகிட்டு இருக்காங்க! இவர் வேற ஊருலே இல்லையா, அதனாலே ரொம்பவே 'கொயட்டா'இருந்தது! ச்சீ ....பாவம்......


இவரா அப்பச் சத்தம் போடறது? :-)))))) நாளைக்கு வந்துருவார்.10/11
இவர் வந்துட்டாரு! வெளியே ப்ளாஸ்டர் பூசறதுக்கு காசு கொடுத்தா, மறுநாளு வேலையை ஆரம்பிக்கறோம் என்று செங்கல் வைக்கற குழுவின் 'டீம் லீடர்' மத்தியானம் வந்து சொல்லிக் காசை வாங்கிக்கிட்டுப் போனாரு. இப்பெல்லாம் இங்கே வெளியே செங்கலோட அப்படியே விட்டுடறாங்க. அதுக்கு நிறைய கலர்களிலும் கிடைக்குது செங்கல்லுங்க. ப்ளாஸ்டர் போடறது, அதுக்கு மேலே பெயிண்ட் அடிக்கறதுன்னு செலவு மிச்சம். எனக்கு என்னவோ அது பிடிக்கறதில்லை. நம்ம ஊர்ப் பக்கம் செங்கல் வச்சுக் கட்டிட்டு, அப்புறம் நிதி நிலையைப் பொறுத்துக் கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு சுவரா பூசுவாங்க . இதெல்லாம் அந்தக் காலத்தில். வெறும் செங்கல்லுன்னா 'பணித் தீராத வீடு'ன்றது மனசுலே பதிஞ்சு போச்சு. நம்ம வீட்டைஅப்படியே விடும் எண்ணம் எனக்கில்லை. செலவைப் பார்த்தா முடியுமா? மனத்திருப்தி முக்கியமில்லையா?


நாங்க மத்தியானமாப் போய் வீட்டையும் பார்வையிட்டு வந்தோம். நாலுமணிக்கு லைட்டிங் செலெக்ட் செஞ்சு சொல்லிடணும்ன்னு நம்ம எலக்ட்ரீஷியன் சொன்னதாலே எந்த லைட் எங்கே போடணும்ன்னு புஸ்தகத்தைப் பார்த்து 'மண்டையை உடைச்சிக்கிட்டதுதான்' மிச்சம்! வீட்டைச் சுத்தி வெளிப்புறம் வரும் விளக்குகள் மட்டும் 'ரக்பி பந்து ஷேப்' இருக்கட்டும். வீட்டுக்குள்ளெ ஹாலோஜென் லைட்ஸ், டவுன் லைட்ஸ்ன்னு வெவ்வேற விதமா இருந்துட்டுப் போகட்டும்.


11/11
காலையிலே 10.30க்கு 'மிர்ரர்' கண்ணாடி போடறவர் வந்து பார்த்துட்டு அளவெல்லாம் எடுத்துக்கிட்டுப் போனார். ஃபோயர்லே கதவுக்கு ரெண்டு பக்கமும் ஒரு செவ்வக மாடம் வச்சுருக்கு. அதுக்குள்ளே கண்ணாடி பதிச்சு மேலே இருந்து விளக்கு வெளிச்சம் வர்றமாதிரி வைக்கணும். மாடத்துலே அலங்காரச் சிலைகளை வைக்கலாம். பாத்ரூம் வேனிட்டிக்கு கண்ணாடி. ஹால் டேபிள் போடும் இடத்தில் ஒரு கண்ணாடி. இதெல்லாம் இல்லாம ஒரு பெரிய கண்ணாடி 1.2 x 1.5 மீட்டர் அளவுலே ஒண்ணு வருது. புடவை கட்டிக்கிட்டுச் சரியா இருக்கான்னு பார்க்கறதுக்கு. ஆமாம்........... ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு புடவை கட்டுற லட்சணத்துக்கு இதுதான் கொறைச்சல்னு உள்மனசு சொன்னாலும்................... கேட்டுட்டுத்தான் மறுவேலை:-)

பெரிய வசந்த மாளிகை.............. இதெல்லாம் இல்லாம முடியாது. யாருக்காக......... இது யாருக்காக? துளசிக்காகக் கட்டும் துளசிமஹால்னு சொல்லிக்கலாமுன்னா, இன்னும் துளசி 'மேலே' போகலையேங்க.

12/11
இன்னைக்குத் தீபாவளிப் பண்டிகை. இங்கே 'ஷோ டே' ஆனதால் லீவு! பட்டிக்காட்டு ஆடு, மாடு, கோழி,பன்னியெல்லாம் பட்டணத்துக்கு வந்து மூணுநாள் இருந்துட்டுப் போகும். நாங்களும் 'ப்ரைஸ் வின்னிங் அனிமல்ஸ் பார்க்கணுமில்லே? நம்ம பிள்ளைகளும் 'கண்ட்ரி அனிமல்ஸ் பார்க்க நல்ல ச்சான்ஸ்:-) ஆனா வெளியிலே பூசறவரு வந்து வேலை செஞ்சுகிட்டிருந்தாரு. லீவு எடுக்கலையான்னு கேட்டதுக்கு, 'இல்லை. எனக்கு 5 புள்ளைங்க! வீட்டுலே இருக்கறதைவிட இங்கிருந்தா நல்ல சமாதானமா இருக்கும்' என்று சொன்னாரு! இதையெல்லாம் அதுங்களை பெத்துக்கறதுக்கு முந்தியில்லே யோசிச்சு இருக்கணும்:-)


ராத்திரி பத்து மணிக்கு மேலே பட்டாஸு கொளுத்தினோம். எங்களுக்கு இப்ப வசந்தகாலம் முடியப்போகுது. சூரியன் எட்டுமணிவரைக்கும் இருக்கான். இருட்டுனாத்தானே கம்பிமத்தாப்பூக் கொளுத்துனா நல்லா இருக்கும். இந்த வீட்டுலே (311) இது கடைசி தீபாவளி.13/11
ஜிப் ஆளு வந்து வேலை செய்றார்! சாயந்திரம், தமிழ்ச் சங்கத்திலே தீபாவளிக் கொண்டாட்டம். நல்லா நடந்து முடிஞ்சது! கை ஃபாக்ஸ் புண்ணியத்தில் கிடைக்கும் பட்டாஸ்களை வாங்கி வச்சு இங்கேயும் கொளுத்திக்கிட்டு இருக்கோம். இங்கே நியூஸியில் வெடிகள் வெடிக்கத் தடா. கிடைக்கவும் கிடைக்காது. அதனால் எல்லாமே வண்ணம் பொழியும் வாண வேடிக்கைகள்தான்.14/11
டைல்ஸ் கடைக்குப் போய் 'சாம்பிள்' வாங்கினோம். அகஸ்மாத்தா, ஒரு லைட்டிங் கடையைத் தாண்டினோம். அங்கெ போனா ஒரு நல்ல (நம்ம ஐவேஜ்க்குத் தகுந்த) 'சாண்டிலியர்' கிடைச்சது. வாங்கி ( பதிவு செஞ்சு) வச்சிட்டு வந்தோம்! ஃபோயர் கூரை மட்டும் 2.6 மீட்டருக்கு நல்ல உசரமா இருக்கு. அங்கே தொங்கும் விளக்கும், லவுஞ்சில் கூரையோடு பதிஞ்சு இருக்கும் விளக்கும் சரியா இருக்கும். இது சங்கு மாதிரி டிஸைனில் இருக்கு.15/11
தினம் பொழுது விடிஞ்சவுடனே,'இன்னைக்கு வேலைக்கு யாராவது வரப்போறாங்களா? நமக்கு என்ன வேலை இருக்கு? நாமயாரையாவது பாக்கறதுக்கு முன்பதிவு செஞ்சிருக்கோமா'ன்றதே முதல் எண்ணமா இருக்கு!
ஒரு பத்துமணிக்குக் கிளம்பி, முதல்லே 'லெட் லைட்' கடைக்குப் போய் பின்கதவுலே வரப்போற சூரியனுக்கு கொஞ்சம் 'சக்தி' கொடுக்கணும். இ-மெயிலில் படத்தை அனுப்பி இருந்தாங்க. பூனை, பூக்கள் எல்லாம் சரி. சூரியன்தான் பாக்கறதுக்கு 'சந்திரனைப் போல மஞ்சளா' இருக்குது!


அங்கே போனேன். 'பேட்' வேற வேற கலர் போட்டுப் பார்த்துட்டு, மஞ்சள் கலந்த சிகப்புன்னு முடிவாச்சு. அங்கிருந்து 'நேச்சுரல்லி டைல்ஸ்' கடையிலே போய் கொஞ்சம் டைல்ஸ் செலெக்ஷன் பார்த்துட்டு 'சாம்பிள்' எடுத்துகிட்டு, அப்படியே 'யூரொப்பியன் டைல்ஸ்' போய் விவரம் கேட்டுட்டு வந்தேன்.


16/11
காலையிலே எட்டரைக்குப் போகணும். கராஜ் கதவுக்குள்ள ஆட்டோமாடிக் ஓப்பனரை மாத்த ஆள் வருது! போனோம். 'கோப்ரா க்ரோம்' சரியா வேலை செய்யறதில்லையாம். நிறைய புகார் வருதாம். பெல்ட் எரிஞ்சு போகுதாம்! 'கோப்ரா ஐஸ்' மாடல் செயின் இருக்கறது மாத்தியாச்சு. க்ரேக் வந்து காசு வாங்கிட்டுப் போயாச்சு.


சாயந்திரம் கேரியைப் பார்த்து விளக்கு ஃபிட்டிங்க்ஸ் சொல்லியாச்சு!


வீட்டு முகப்புப் பிள்ளையார் வந்தாச்சு. சிமெண்டு ப்ளாஸ்டர் போட்டு அனுப்பி இருக்காங்க. முகப்புலே பொருத்திட்டா, பெயிண்ட் அடிக்கும்போது இதுக்கும் ஆச்சு. உள்ளெ மட்டும் தூண் கலரை அப்புறமா அடிக்கச் சொல்லணும்
17/11
இவர் வந்து சொல்றாரு அங்கே யாருமே இன்னைக்கு வரலே! இது ஒரு எரிச்சலான விஷயம். எப்ப வராங்க, என்னைக்கு, எதுவும் தெரியாது. வந்தா வரவுன்னு போகுது!என்னன்னு பாக்கலாம்ன்னு சாயந்திரம் போனா, அங்கே ஒருத்தர் பேரு 'ரிச்சர்டு' , கார்னீஸ் போட்டுகிட்டு இருக்கார். ராத்திரியும் வேலை செய்வாராம். இங்கே 'பவர்' இருக்கு ஆனா 'லைட்' இல்லேன்னோம். லைட் வீட்டுலே இருந்து கொண்டு வருவாராம்!


தொடரும்................
=================

11 comments:

said...

Me, the first?

said...

என்னங்க அந்த சாம்பிள் படத்தில் கோபால் ரெசிடென்ஸ் அப்படின்னு இருக்கு. ஸ்பெல்லிங் மிஷ்டேக்கா?

said...

வாங்க சிஜி.

நீங்கதான் ஃபர்ஸ்ட்.
ஆமாம், இப்ப ராத்திரி 2.30 மணிக்குத் தூங்காம ஆர்வமா வகுப்புக்கு வந்துருக்கும்
உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை.

said...

வாங்க கொத்ஸ்.

ஸ்மைலியை மறந்துட்டீங்களா? இல்லே சீரியஸ் கேள்வியா?
'கோபால்'தான் இங்கே நமக்கு 'சர் நேம்'.
வேற வழி இல்லாமப் போச்சேப்பா:-)

said...

ஸ்மைலி எல்லாம் போடாமலேயே புரிஞ்சுப்பீங்கன்னுதான். :))

said...

இ.கொத்தனார் கண்ணில் எதெல்லாம் படுகிறது பாருங்கள்!!! :-)
அந்த லைட் என்ன கரேஜ் "கோப்ரா க்ரோம்" என்று சொல்லியிருக்கிறீர்களே.புரியவில்லை.

said...

எதுக்குப்பா கோப்ரா னு பேரு.
அந்தக் கராஜ் ஒபனர் எலி மாதிரின்னா இருக்கு??

கோபால் ரெசிடென்ஸி இல்லையே:)))

எங்க வீட்டுக்கு சுந்தரராஜன் (மாமனார் பேரு)கஃபேனு பேரு வைக்கணும்னு மாமியார் சொல்லுவாங்க.
அத்தனை காப்பிச் செலவு:)))

said...

வாங்க குமார்.

இது ஒண்ணும் பிரமாதமில்லைங்க. கராஜ் டோர் ஆட்டோ
ஓப்பனர்தான். ஒரு ரிமோட்லே வேலை செய்யுது.
இந்த மாடல் பெயர் கோப்ரா ஐஸ்( பாம்புக் கண்ணாப் பார்த்துக்கிட்டு இருக்குமாம்)


நமக்கு இதைத்தான் காமிச்சு, நாங்க விலைக்குச்
சம்மதம் சொன்னபிறகு ஒரு கருப்புப் பெட்டிமாதிரி இருக்கறதைப்
போட்டுட்டாங்க. அதைத்தான் இப்ப மாத்தியிருக்கு.

சொல்வது ஒண்ணு செய்யறது ஒண்ணு(-:

கொத்தனார் கேள்வியா? :-))))

டீச்சர் எட்டி அடின்னா,
மாணவர் எம்பது அடின்னு பாயறார்:-))))))

said...

வாங்க வல்லி.

பாம்புன்னு பயப்படுத்த முடியாம எலி மூஞ்சு ஆயிருக்கு:-)))))

//கோபால் ரெசிடென்ஸி இல்லையே:)))//

இல்லைப்பா, இது 'துளசி விலாஸ்' இண்டர்நேஷனல் ரெஸ்டாரண்ட்:-))))))

said...

'கோபால்'தான் இங்கே நமக்கு 'சர் நேம்'.
வேற வழி இல்லாமப் போச்சேப்பா:-)//
சரியாப் போச்சு.

சார், கோபால் சார்ர் படிச்சீங்களா??
ஹ்ம்ம் எங்க அண்ணனை(தம்பியை) இப்படி கலாய்க்கிறீங்களே!!!!!!
ஸ்மைலி இதோ:)))

said...

வல்லி,

கோபால் பதிவைப் படிக்கிறாரோ இல்லையோ பின்னூட்டத்தைக் கட்டாயம் படிச்சுருவார்.

பின்னூட்டப் ப்ரேமி