Wednesday, September 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 23

23 லெங்த் (1 x 3 மீட்டர் நீளம்) கார்னீஸ் வாங்கியிருக்கு. அது பத்தாதுன்னு இன்னும் ஒரு 8க்கு பில்டர் ஆர்டர் கொடுத்திருக்காராம்! எதுக்கு அளவுக்குமீறி வாங்கி வீணாக்கணும்? இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு. எதுன்னாலும் தேவைக்கு மேல வாங்கறாரு. காசு வீணாப் போகுதுன்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லே. செலவு பண்ணறவங்களுக்குக்குத்தானே கஷ்டம் தெரியும்?


இங்கே ஒண்ணு சொல்லிக்கறேன். சாமான்கள் எல்லாம் நாங்க வாங்கித் தர்றதாய் ஒப்பந்தமுன்னு சொன்னேன் இல்லையா? இங்கே பில்டர்கள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன் ன்னு தொழில்முறைப் படிப்புப் படிச்சவங்க, அவுங்க பேரை அந்தந்த தொழில்முறை சங்கத்துலே பதிஞ்சுக்குவாங்க. ரெஜிஸ்டர்டு ட்ரேட்ஸ்மென்.


பில்டிங் சப்ளைஸ்ன்னு சாமான்கள் விக்கற கடைகளில் இவுங்களுக்கு எதாவது ஒரு கடையில் கணக்கு இருக்கும். இதெல்லாம் மொத்த விற்பனைக் கடைகள். 'டூ இட் யுவர்செல்ஃப்' னு ச்சின்னசின்னதா எதாவது வீட்டு வேலைகள் செஞ்சுக்கறதுக்கு, சாமான்கள் வாங்கிக்க 'ரீடெய்ல்' கடைகள் நிறைய இருக்கு. இங்கேதான் நம்மைப்போல உள்ள ஆட்கள் எதாவது ஒரு ச்சின்ன வேலைக்கு பயன்படும் சாதனம் வாங்கிக்குவோம்.



வீடு கட்டறது போல இருக்க பெரிய வேலைகளுக்கு ஏராளமா சாமான்கள் வேணுமே. அதெல்லாம் நாம் போய்க்கேட்டு நேரிடையா வாங்க முடியாது. அக்கவுண்டு இருக்கும் ட்ரேடு ஆட்கள்தான் வாங்கிக்க முடியும். அதிகபட்சமா 30 % தள்ளுபடிக்கும் சாமான்கள் அவுங்களுக்குக் கிடைக்கும்.


பில்டர் , அவர் அக்கவுண்டுலே வேணுங்கற சாமான்கள் வாங்கிப்பார். பில் வரவர நாம் அதை அடைச்சுக்கிட்டே வரலாம். தேவையான அளவைக் கரெக்ட்டா வாங்கிக்காமக் கூட கொஞ்சம் சேர்த்து வாங்கிப்பாங்க. பாதி வேலைக்கு நடுவில் இன்னும் கொஞ்சம் வேணுமுன்னா வேலையை விட்டுட்டு ஓட முடியாதில்லையா? அந்த வேலை முடிஞ்சதும் மீதம் ஆகற கட்டைகள், பலகைகள் முதலானதைத் திருப்பிக் கொடுத்துக்கலாம். இப்படி அப்பப்பத் திருப்பிக் கொடுத்துட்டாப் பிரச்சனையில்லை. நம்ம பில்டர் வாங்குறதோட சரி. ஒரு நாளும் எதையும் திருப்பி அனுப்புறதில்லை. மீதம் ஆகற நல்ல சாமான்களையும் 'ரப்பிஷ் ஸ்கிப்லே போட்டுருவார். ஒரு நாள் அதுக்குள்ளே எட்டிப் பார்த்தப்ப நல்லநல்ல பலகைகள் கிடக்குது. அடுத்தவாரம் இன்னும் பலகைகள் வாங்குவார். அப்பப்ப வீட்டைச் சுத்தம் செய்யறேன்னு எல்லாத்தையும் கழிச்சுக் கட்டிருவார். திருடும் எண்ணம் இல்லை. எல்லாம் ஒரு அலட்சியம். இப்படி அவர் அனாவசியமா தூக்கிப் போட்டதே ஒரு இருபதாயிரம் டாலர் வரை ஆச்சு. கூடுதலாச் சொல்லிட்டேனா? ஒரு பதினைஞ்சு இல்லேன்னா பத்து கட்டாயம் இருக்கும்.


18/11 மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்த கோபால் சொல்றாரு, அடுக்களையெல்லாம் கார்னீஸ் போட்டுட்டாங்க! ஐய்யோடா......... உடனே போய்ப் பார்த்தா அடுக்களையெல்லாம் 'ஜம்'ன்னு இருக்கு! ஆனா அங்கே வேற மாதிரி வரணும். இப்ப எல்லாம் குழம்பியாச்சு. ஆனாலும் இப்ப 'டூ லேட்' . கிச்சன் கிங்குக்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லியாச்சு!



சாயந்திரம் மறுபடி நாங்க ரெண்டுபேரும் போனோம். 'ரிச்சர்டு வேலை செய்யறார். ரொம்ப நல்ல ஆளு! பேசறப்ப குரல்கூட எழும்பாமபேசறார். மூக்குலே மூக்கு வளையம் வேற. நம்ம ஊர்லே குழந்தை தக்காட்டி, மூக்கு குத்தி சாமிக்கு நேர்ந்துக்குவாங்களே, அது ஞாபகம் வருது! இன்னோரு 8 கார்னீஸ் வந்து இறங்கியிருக்கு. இப்ப அதுவும் பத்தாதாம்! இன்னும் 8 வேணுமாம்! ஒண்ணு 30 டாலர். வேற வழி? வாங்கித்தானே ஆகணும்? இல்லாட்டி பாதிலே நிக்காதா?


19/11
பொழுது விடிஞ்சதும் கார்நீஸ் 8 வேணும்ன்னு ஃபோனில் சொல்லியாச்சு.ஆனா ஸ்டாக் இல்லையாம். செவ்வாய்க்கிழமைதான் வருமாம்.





காலையிலே யாருமே வரலையாம். அப்புறம் வெளியே பூசற ஆளுங்க வந்தாங்களாம். ஜிப் சேண்டிங் செய்யறவுங்க வரணும். ஆனா மத்தியானம் வரைக்கும் வரலை! மொத்தம் மூணு கோட்டிங் சிமெண்ட் பூச்சு வெளியே பூசறாங்க. முதல்லே பார்க்க என்னவோ லேசா ச்சும்மாப் பேருக்குப் பூசுனதா இருந்துச்சு. அதுக்கப்புறம், இன்னும் கொஞ்சம் கூடுதல்ன்னு ஆகி இப்ப மூணாவது நல்லா பட்டையா ப்ளாஸ்டர் செஞ்சுருக்கு. ஜன்னல், கதவு எல்லாம் நல்லபடியா ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு மூடிட்டு, கவனமாத்தான் ப்ளாஸ்டர் போட்டாங்க.





ஒரு நாலு மணிக்கு இவர் ஃபோன் செஞ்சு சொன்னார், அங்கே சேண்டிங் வேலை நடக்குது! சாயந்திரம் போனப்ப எல்லாத்தையும் 'சேண்டிங்' செஞ்சுட்டுப் போயிருந்தாங்க. ஆனா, டஸ்ட் எல்லாம் அப்படியே இருக்கு! அதை யாரு சுத்தம் செய்வாங்கறது தெரியலை. இவர்தான் துடிச்சிகிட்டு இருக்காரு. கொஞ்சம் விட்டா 'சித்தாளு' வேலை செய்ய நம்ம ஆளு ரெடி!
ரிச்சர்டு, லவுஞ்சிலே கார்நீஸ் போட்டு முடிச்சாச்சு. சாமி அறையும் ஃபோயரும் பாக்கி.

ஆர்டர் கொடுத்திருந்த லைட்டுங்க வந்திருச்சாம். திங்கள் அன்று போய்க் கொண்டுவரணும்!





20/11
காலையிலே வழக்கம்போலப் போனோம். இன்னைக்கு சனிக்கிழமையாச்சே. யாரும் வேலை செய்யலே! சாமி இடத்துக்குக் கார்நீஸ்ப் போட்டு முடிச்சு இருக்கு ! வீட்டைப் பூட்டிட்டு வந்தோம்! தினம் திறந்துதான் இருக்கும். ஆனா ஆளுங்க வேலை செய்ய வந்துக்கிட்டு இருப்பாங்க! நாளைக்குச் சாயந்திரமாப் போய்சைடு கதவுப் பூட்டைதிறந்து வச்சிட்டு வரணும்!

அப்படியே டைல்ஸ் கடைக்குப் போய் இன்னும் சில சாம்பிள் வாங்கிட்டு வந்தோம். இது பார்க்க 'மார்பிள்' மாதிரி இருக்கு.எனக்குப் பிடிச்சிருக்கு!பாக்கலாம் எது அமையுதுன்னு! அங்கங்கே வாங்கிவந்த சாம்பிள்களைத் திருப்பிக் கொண்டுபோய் கொடுக்கறதுன்னு புது வேலையும் சேர்ந்துக்கிச்சு.


22/11
இன்னைக்கு லீவு எடுத்திருக்கார். காலையிலே போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னார். வெளியே பூசறதுக்கு ரெண்டுபேர் வந்து வேலை நடக்குது! 'ட்ரெயின் லேயர்' ரெண்டுபேர் வந்து பைப் போட தோண்டிகிட்டு இருக்காங்க! பெயின்டர் ரெண்டுபேர் பெயின்ட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க! கேக்கவே எவ்வளவு நல்லா இருக்கு பாத்தீங்களா? மறந்துட்டேனே. ரெண்டு பேர் 'ஜிப் சேண்டிங்' செஞ்சுகிட்டு இருந்தாங்களாம்.


எங்க இவரு சொன்னாராம், 'அதை முடிச்சிட்டு, சேண்டிங் பண்ணப்ப விழுந்த டஸ்ட் சுத்தம் செஞ்சிடுங்க. பெயிண்ட் அடிக்கறவங்களுக்கு ஸர்பேஸ் சுத்தமா இருக்கணும்'


அதுக்கு அந்த ஆளு என்ன சொன்னாராம் தெரியுமா? 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்' ( 'மூடிகிட்டுப் போ'ன்னு சொல்லாதவரை லாபம்!)



மரியாதை பார்த்தீங்களா எப்படி இருக்குன்னு! இங்கத்து 'ஆட்டிட்யூட்' இப்படி. 'ரஃப் அண்ட் டஃப்' தான்! இதுவரை இந்தமாதிரி ஆளுங்களைச் சந்திக்க நமக்கு வாய்ப்பே இல்லாம இருந்துச்சு. கடை கண்ணிகளில் நாம் பார்க்கிற மக்கள், வியாபாரிகள் வேற வகை. இனிமை & மரியாதையாப் பேசுவாங்க. இதைவச்சு, எல்லா மக்களும் இப்படி இருப்பாங்கன்னு நாமே நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விதமான மக்கள். ஒருவேளை இனிப்பாப் பேசுனா இவுங்க தொழிலுக்கு ஆகாதோ என்னவோ?


ரெய்லாக் ஆளுங்களுக்கு ஃபோன் செஞ்சு மெசேஜ் விட்டுருக்கு! நம்ம பேரைப் பார்த்தாலே ஓடி ஒளியறாங்க!

டைல்ஸ் கடை ( சாலீஸ்பரித் தெரு) போனோம். ஒண்ணும் சரியா இல்லே. அங்கிருந்து கார்பெட் வைனல் போனோம். சில டிஸைன் பரவாயில்லே! அங்கிருந்து 'லைட்டிங்' கடைக்குப் போய் ஆர்டர் கொடுத்த சாமான்கள் வந்திருந்ததை எடுத்துகிட்டு வந்தோம். வர வழியிலே பெயிண்ட் பார்க்கலாம் என்று 'பிளேஸ் மேக்கர்' போனா அங்கே துணி காய வைக்கறது clothes line 'சேல்' போட்டிருந்தது. கிட்டத்தட்ட 90 $ லாபம். அதையும் வாங்கிகிட்டு வந்தோம்!



23/11
வேலை நடந்த அடையாளம் இல்லே! சாயந்திரம் கார்நீஸ் போடற ரிச்சர்டுதான் வந்து வேலை செஞ்சாரு. வாசக் கதவுக்கு உள்புறம் மேலே கொஞ்சம் 'கேப்' இருக்கு. அதை அப்படியே விட்டுட்டா அசிங்கமா இருக்காதா? அதை சரி செய்யச் சொன்னா, தலையை ஆட்டுறாரே தவிர வேலையை பூர்த்தி செய்யலையே!


24/11
வீட்டுக்குள்ளே பெயிண்டிங் வேலை நடந்துகிட்டு இருக்கு. அவுங்களும் 'பெட் ரூம்'லே இருந்துதான் ஆரம்பிப்பாங்களாம்! எப்படியோ செய்யுங்கன்னு விட வேண்டியதுதான்! நாளைக்கு 'ரைலாக்' ஆளுங்க வந்து அளக்கப் போறாங்களாம். அப்புறம் ரெண்டு வாரத்துலே ஜன்னலுங்களைப் போடுவாங்களாம்! ஃபோயர்லே போட்ட 'ஸீலிங் ரோஸ்'க்கு பக்கத்துலே இருக்கற லைட்டுங்க கொஞ்சமே கொஞ்சம் 'தேடா'வா இருக்கு. ஒரு நேர் கோடா வர வேண்டாமா?




25/11
நம்ம பில்டர்க்கு 'வாக் இன் ரோப்' டிஸைன் கொடுத்து ரொம்ப நாளச்சு. இதுவரைக்கும் ஒண்ணுமே செய்யலே. எப்ப கொடுத்ததுன்னா, இவர் மலேசியா போனாரே அப்ப நவம்பர் 8. இப்ப கிட்டத்தட்ட 3 வாரம் கழிச்சு, மறுபடி அதே டிஸைனை ( நல்ல வேளை, ஃபோட்டோகாப்பி எடுத்து வச்சிருந்தோம்!) கொடுத்து, 'ப்ளேஸ் மேக்கர்'லே போய் எந்த பலகைன்னு காமிச்சாச்சு. பழைய ப்ளானை மாத்தி, மத்த ரெண்டு ரூமுக்கும் ரெடிமேட் டிஸைன் வாங்கிக்கச் சொன்னோம். அவருக்கு வேலை கம்மி! அப்படியே போட்டுடலாம். எல்லாம் 'காம்ச்சோர்'ஆளா இருக்காங்க!



அங்கிருந்து வரப்பவே 'ரைலாக்'க்குக்கு ஃபோன் செஞ்சார். மத்தியானம் வரதாச் சொன்னாங்க.



சாயந்திரம் வரைக்கும் ரைலாக் ஆளுங்க வரவேயில்லை. இவர் ஃபோன் செஞ்சு கேட்டதுக்கு, அந்தப் பொண்ணு 'லிஸா' சொல்லுதாம்,'வேற வேலையிலே இருந்துட்டாங்களாம். நாளைக்கும் வர முடியாதாம். திங்கள் கிழமைதான் வருவாங்களாம். அவுங்களைப் பத்திப் புகார் கொடுக்கணும்ன்னா கொடுங்க'ன்னு அலட்சியமா சொல்றாங்களாம்!


இவுங்க வந்து ஆர்டர் கேட்டப்ப நாந்தான், 'ச்சின்னப் பொண்ணு. இப்பத்தான் பிஸினஸ் செய்ய வந்திருக்காங்க ( அப்பாவால முடியலைன்னு அந்தக் கம்பெனிப் பொறுப்பை எடுத்து நடத்துறாங்களாம்) ஐய்யோ பாவம்'ன்னு அவுங்களையே ஜன்னல்ங்க சப்ளை செய்யச் சொன்னதுக்கு இதுதான் கூலி!


புத்தி கொள்முதல். பாடம் எண்...........?
தொடரும்...................
==================

12 comments:

Anonymous said...

//அதுக்கு அந்த ஆளு என்ன சொன்னாராம் தெரியுமா? 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்' ( 'மூடிகிட்டுப் போ'ன்னு சொல்லாதவரை லாபம்!) //

ஒப்பந்தத்திலயே இதெல்லாம் செய்யுங்கன்னுதான் இவங்ககிட்ட கையெழுத்து வாங்கி வச்சிக்கணும். எனக்கு எல்லாம் தெரியும் அப்படிங்கற ஒரு இதுதான் இவங்களுக்கு

said...

//ஜன்னல், கதவு எல்லாம் நல்லபடியா ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு மூடிட்டு, கவனமாத்தான் ப்ளாஸ்டர் போட்டாங்க.//

அப்பவே கேட்கனும்னு நினைச்சேன் , ஜன்னல் கண்ணாடியெல்லாம் மாட்டிட்டா வேலை செய்வாங்க அங்கே , இங்கேலாம் கடைசியா தான் கண்ணாடி மாட்டுவாங்க.

அப்புறம் இந்த ரைலாக் , கார்நீஸ்னா என்னனு சொல்லிட்டா வசதியா இருக்கும் . என்னனே தெரியலை!இப்படி பேரு வரப்ப எல்லாம் விளக்கிட்டா நல்லது(ஒரு வேளை முன்னரே சொல்லிடிங்களா)

இந்த பில்டர் லாம் கடைகளில் அக்கவுண்ட் வைத்து இருப்பது இங்கேயும் இருக்கு. நம்மை ஒரு கடைக்கு அவங்களே கூப்பிட்டு போய் வாங்க வைப்பாங்க(அங்கே 10 சதம் வரை கமிஷன் கிடைக்குமாம்)

said...

ரொம்பத்தான் படுத்தறாங்க இந்த ஆளுங்க. தாங்க முடியலைடா சாமீ!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ஒரு நல்ல ட்ரேட் ஆளுங்கன்னா, அவுங்க வேலை செஞ்சபிறகு அந்த இடத்தைச் சுத்தமா
வைக்கணும்ங்கறது ஒரு நியமம். பலபேர் நல்லா நீட்டாவே வைப்பாங்க. சிலர்தான் கொஞ்சம் அடாவடி.

இவுங்கெல்லாம் சப் காண்ட்ராக்ட்தான். டீம் லீடரை மட்டும்தானே நாம் பார்த்தோம். அவர்கீழே யாரு என்ன
எப்படியெல்லாம் நமக்குத் தெரியாதுல்லெ(-:

said...

வாங்க வவ்வால்.

//ரைலாக், கார்நீஸ்னா.................//

ரைலாக் ஒரு கம்பெனியோட பேர். அவுங்கதான் நம்ம வீட்டுக்கு ஜன்னல் சப்ளை.
கார்நீஸ் பத்தி இன்னும் விரிவாச் சொல்லலை. அது ஒரு ப்ளாஸ்டர் அஃப் பாரிஸ்லே
செய்யற டிசைந்தான். சுவரும், சீலிங்கும் சேரும் இடத்துக்குப் போடறது. ஒரு அலங்காரமா
இருக்குமுன்னுதான்.

இங்கே பில்டருக்கு 30% கழிவு உண்டு. அதை அவர் எடுத்துக்க மாட்டார். நாம்தானே பில்வரவர
அடைக்கிறோம். அவர்மூலமா நமக்கு இந்த 30% கிடைக்கும். பில்டர் கடைக்காரரின் குட்புக்ஸ்லே
இருப்பார். அவரைக் கடைக்காரர் கிறிஸ்மஸ் சமயம் பார்ட்டி கொடுத்துக் கண்டுக்குவார்:-)

said...

வாங்க கொத்ஸ்.

//ரொம்பத்தான் படுத்தறாங்க இந்த ஆளுங்க//

அந்த வேலைசெய்யற ஆளுங்களைத்தானே சொல்றீங்க?

ச்சும்மா ஒரு சந்தேகம்தான் :-))))

said...

அதென்ன ஜிம் சேண்டிங்?
வீடு கட்டினதைவிட இந்த மாதிரி கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டமாக இருக்குமே!!
தேடா- அதாவது நேர் வரிசையில் இல்லாமல் இருக்கு,அப்படித்தானே?அனேகமாக அது ஹோலோஜன் விளக்குக்காக இருக்கும்,அது அறையின் மூலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வைத்து ஓட்டை போட்டிருப்பார்கள்.என்ன இருந்தாலும் மற்ற fixtures பார்த்து அதற்கு தகுந்தார்போல் போட்டால் தான் "அழகு".
பல கட்டுமான தொழிலாளர்கள் இப்படித்தான் ரஃப் & டஃப், முதலில் சொன்ன மாதிரி சரியா படிக்கா....
அதை நானே சொல்லக்கூடாது. :-))))

said...

september 12-இந்தத் தேதி மாறாமல் எல்லா பதிவுகளிலும் டாப்லெ வருது. ஏன்?

said...

வாங்க குமார்.

அது ஜிப் GIB சேண்டிங்:-))))

ஜிப் போர்டுமேலே ஒரு கலவையைப் பூசுறாங்க இல்லையா அது ஜிப் ஸ்டாப்பிங்(காம்)
ஒவ்வொருதடவை பூசிக் காஞ்சபிறகு அதை லேசா சேண்ட் பண்ணி கொஞ்சம் மழமழப்பாக்கறாங்க.
மூணாவது தடவை( லெவல் 4) இப்படிச் செஞ்சபிறகுதான் பெயிண்ட் அடிக்கணும்.

அங்கே போட்டது ஹாலோஜென் விளக்கு இல்லைங்க. ச்சும்மா டவுன் லைட்தான்.
நம்ம எலக்ட்ரீஷியனுக்கு கொஞ்சம் 10 மிமீ-20 மிமீ எப்பவுமே சைடு வாங்குது.
அவர்கண்ணுக்கு எல்லாமெ நேராத்தெரியும், கோணயாத் தெரிவது எனக்கு மட்டும்.
ஃபார் மை ஐஸ் ஒன்லி:-))))

கேள்வி கேளுங்க. இதுதான் இண்ட்டரஸ்டிங்:-)))

said...

வாங்க சிஜி.

பேராசிரியருக்கு கண்ணு எங்கெல்லாம் போகுது பாருங்க:-)))))

அது ஒண்ணுமில்லைங்க. நம்ம கணினி மண்டையைப் போடும் நிலைக்கு
வந்துருச்சு. எல்லாம் ஓல்ட் ஏஜ் ப்ராப்ளம்தானாம். வாங்கி 5 வருசமாச்சே.

அதை ரிப்பேருக்கு அனுப்பிட்டாத் தமிழ்ச்சேவை(!!) செய்யமுடியாதே??)ன்னு
சில பதிவுகளை ப்ளொக்கர்லே ட்ராஃப்ட் போட்டு வச்சேன். எந்த நாளில்
சேமிச்சேனோ அதே நாளைக் காட்டுது. அம்புட்டுதான்.

said...

இவர் ஃபோன் செஞ்சு கேட்டதுக்கு, அந்தப் பொண்ணு 'லிஸா' சொல்லுதாம்,'வேற வேலையிலே இருந்துட்டாங்களாம். நாளைக்கும் வர முடியாதாம். திங்கள் கிழமைதான் வருவாங்களாம். அவுங்களைப் பத்திப் புகார் கொடுக்கணும்ன்னா கொடுங்க'ன்னு அலட்சியமா சொல்றாங்களாம்!
ஓஹோ, இந்தப் பொண்ணைப் பத்திதான் அப்புறம் சொல்றேன்னு சொன்னீங்களா???
ஐய்யோ பாவமே சொல்லக் கூடாது.

said...

வாங்க வல்லி.

ஜனங்கள் மாறிவிடறாங்கன்னு சொல்றதை இப்பத்தான் பார்த்தேன்.
இனிமே நோ பாவம் பார்த்தல்