Sunday, September 02, 2007

மை டியர் பதிவுலக அப்பாக்களே,

இன்னைக்குத் தந்தையர்கள் தினமாம்.

நட்பு வட்டத்தில் இருக்கும் பதிவுலக அப்பாக்களுக்கும்,அப்பாக்களின் அப்பாக்களுக்கும், அப்பா ஆகப்போகும் நண்பர்களுக்கும், அப்பா ஆகும் கனவுகளில் மிதக்கும் அன்பர்களுக்கும்


தந்தையர் தின வாழ்த்து(க்)கள்.



இப்படிக்கு(எல்லாம் அம்மா சொன்னபடிக் கேட்டு எழுதுனது)
கோபால கிருஷ்ணன்.



படத்தில் இருப்பது ஒரு அப்பாவும் மகனும்.





இது நம் வீட்டில் நேற்றலர்ந்த பூ.

நேத்து முதல் நமக்கு வசந்த காலமாம்.

16 comments:

said...

படம் தப்பு. பொதுவா பெண் குரங்குதான் குட்டியோட இருக்குமாம்.

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

said...

வாங்க தறுதலை,
( என்னங்க பேரு இது? )

//பொதுவா....//

அதுதான் இன்னைக்குச் சிறப்பு நாளாச்சேன்னு அப்பாகூட இருக்கு:-))))

said...

அக்கா!
பிராண்சில் யூன் 17 அப்பாக்கள் தினம்.
எனினும் எல்லா அப்புக்களையும், உங்க அப்பாக்களை கடைசி வரை நன்கு கவனியுங்கள் என வேண்டி வாழ்த்துகிறேன்.

said...

அப்பாக்கள் தினமென்றால் குரங்கு படமா!! நடக்கட்டும் நடக்கட்டும்!! :))

said...

எனக்கு இந்த, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் இவற்றின்மேல் நம்பிக்கை இல்லையென்றாலும்....

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

என்னைப் பொறுத்தவரை, எல்லா நாட்களிலும் எல்லோரையும் நினைக்க வேண்டும்.

- தஞ்சாவூர் தந்தை

said...

இலவசக் கொத்தனாரை வழிமொழிகிறேன்....
:-)

said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!

said...

துளசீ, என்னஅப்பா,
ர்ரெண்டூ தட்டவையா அப்பாக்கள் தினம் வரும்??????
சரி பரவாயில்லை வாழ்த்து சொல்வதில் என்ன குறை:))
நல்லா இருக்கட்டும் ஏற்கனவே அப்ப்பா ஆனவங்களும்ம். அப்ப்ப ஆகப் போறாவங்களும், அப்பா ஆகித் தாத்தா ஆனவங்களும்.
அவங்க பொண்டாட்டிகளும் எல்லார்ரும்ம் நல்லா இருக்கட்டும்.
கு.குட்டி சூப்பர்.

said...

அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு
கோபால கிருஷ்ணன் சாருக்கு இன்று
ஆகஸ்ட் 15 ஆ?
நன்றி!

said...

வாங்க யோகன்.

ஒருவேளை வடக்குக்கு ஒரு நாள் தெற்குக்கு
ஒருநாள்ன்னு வச்சுருட்டாங்க போல இருக்கு.

said...

வாங்க கொத்ஸ்.

'குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்' என்று ஒரு நினைப்பு:-)

said...

வாங்க தஞ்சாவூரான்.
நமக்கும் எல்லா நாளும் ஒண்ணுன்னு இருந்தாலும், ஊரே சேர்ந்து எதாவது செய்யறப்பக்
கூட ஓடவேண்டித்தானே இருக்கு.

எனக்கும் அன்னையர் தினத்தைத் தவிர வேற தினம்
ஒண்ணும் அவ்வளவா முக்கியமில்லை:-)))))

said...

வாங்க மதுரையம்பதி.

//இலவசக் கொத்தனாரை வழிமொழிகிறேன்.... :-) //

அப்ப உங்களுக்கும் அதே பதில் ரிப்பீட்டு:-))))

said...

வாங்க விஜயன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

கால்வலி தேவலையா?

உலகை வடக்கு தெற்குன்னு ரெண்டாப்
பிரிச்சுட்டாங்கப்பா இந்த அப்பாக்கள்:-))))

said...

வாங்க சிஜி.

நீங்க சொன்னதுபோல ஆனந்த ஆகஸ்ட் 15ன்னு பாடவேணாமா இவன்? ஆனா, நாங்க வீடு தங்காம
இன்னிக்குச் சுத்திக்கிட்டு இருந்தோமுன்னு மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கான்:-)))