7/10
இன்னைக்கும் வொயரிங் நடந்திருக்கு! 'க்ரேக்' வந்து பாக்கி வச்சிருந்த 'பாலீஸ்டைரீன் போர்டு' களை அளவா வெட்டி, கராஜ் சுவத்துக்கு லைனிங் போட ஆரம்பிச்சிருக்கார்.
இன்னும் கூரை சரியாகலே. மழைத்தண்ணி உள்ளெ இறங்கியிருக்கு.
8/10
ஜன்னல்கள் எல்லாம் இன்னைக்கு வருதுன்னு சொன்னாங்க! வந்துடுச்சுன்னு நியூஸ் வந்தது. மத்தியானமாப் போனேன். அதுக்குள்ளே பாத்ரூம், லவுஞ், மாஸ்டர் பெட்ரூம்லே வர்ற ரெண்டு சின்னது எல்லாம் போட்டுட்டாங்க! கார்னர் விண்டோ ஒரு பெட் ரூம்லே சரியா இருக்கு. இன்னொண்ணுலே அளவு சரியில்லே, பெருசா இருக்கு. 'கேட் டோர்' பார்த்தா ரொம்பச் சின்னதா இருக்கு. நம்ம ஜி.கே அதுலே நுழைஞ்சிருவாரான்னு தெரியலே. கப்புவுக்குச் சரியா இருக்கும். அது ஒல்லிக்குச்சி உடம்புக்காரி. லிவிங் ஏரியாவில் வெளிச்சத்துக்காகத் தரையில் இருந்து சுவர் உயரத்துக்குப் பெரிய ரெண்டு மீட்டர் அகல ஜன்னல் வந்துருக்கு.
அப்புறம் ரெண்டாவது பாத் ரூம்லே வர்றதும் ரொம்பப் பெருசா இருக்கு. ஸ்டடின்னு போட்டு ஒரு ஃப்ரேமும், கதவும் இருக்கு. நாம் 'சாலிட் டிம்பர் டோர்' தானே ஸ்டடிக்குச் சொல்லியிருக்கோம்? இன்னும் 5 ஜன்னலுங்க வேற வரலையாம்!
எதா இருந்தாலும், 'க்ரேக்' ஜன்னல் (ரைலாக் Rylock) காரங்களுக்கு சொல்லியாச்சாம். அவுங்க வந்து சிலதையெல்லாம் திருப்பிக் கொண்டுபோய்ச் சரி செஞ்சு கொண்டு வரணுமாம்! ரைலாக் கம்பெனி அவுங்க விளம்பரத்தை மட்டும் ஊருக்கு முன்னாலே கொண்டு வந்து மாட்டியிருக்கு.
இவுங்க கிட்டேயும் நம்ம வீட்டோட 'ட்ராயிங்' இருக்கு.( இன்னும் ஹெலன் க்ளார்க், நம்ம பிரதம மந்திரிகிட்டதான் கொடுக்கலே) மேலும் ஒருநாள் வந்து எல்லாத்தையும் அளவு எடுத்துக்கிட்டு வேற போனாங்க.அப்ப எப்படி தப்பா செஞ்சிருவாங்க?
நாளைக்கு வீக் எண்ட் வேற. திங்கட்கிழமை கதவுங்க வரப்போகுது. என்ன ஆகுமோ? ஜன்னல் எல்லாம் ஒரே நாளிலே வச்சிருவாங்களாமே!
9/10
மத்தியானம் போனா அங்கே ஒரு கூட்டமே இருக்கு! எலக்ட்ரீஷியன் குடும்பம் பூராவும் வேலை செய்யறாங்க! சரி, வேலை முடியட்டும்னு இருக்கோம்.
10/10
கிச்சன் கிங் வந்தாருன்னு எல்லோரும் அங்கெ போனோம். அடுக்களையிலே ரேஞ்ச் ஹூட்க்கு அவுட்லெட் எங்க வைக்கணும்னு சொன்னாரு.அப்படியே ஒரு புது வீட்டு 'ஓப்பன் ஹோம்' போய் வார்ட் ரோப் எப்படி வைக்கணும்னு பாத்துட்டு வந்தோம். இன்னைக்கு ஒரு 'பில்டிங் சாமான் விக்கற இடம் 'ரிஸீவர்ஷிப்'லே போயிருச்சு. அதனாலெ சேல் இருக்குன்னு போனோம். நமக்கு அங்கெ ஒண்ணும் பெருசா இல்லே. வீடு மராமத்து / ரினொவேஷன் பண்ணுறவங்களுக்கு சாமான்கள் இருந்தது!
இன்னும், என் மனசை சுத்திகிட்டே இருக்கற ஒரு விஷயத்தைச் சொல்றேன்.
இங்கே நம்ம நண்பர்கள் (!) சிலர், எங்களைப் பாத்தவுடனே கேக்கறது இப்படி.
இங்கே நம்ம நண்பர்கள் (!) சிலர், எங்களைப் பாத்தவுடனே கேக்கறது இப்படி.
" வீடு எப்படி வந்துருக்கு? முடிச்சிட்டாங்களா?"
" இல்லே. அப்படி முடிஞ்சிடுமா? இன்னும் பல வேலைங்க பாக்கி இருக்கு"
" எந்த ஸ்டேஜ்லே இருக்கீங்க?"
" இப்பத்தான், எலக்ட்ரிகல் வேலை நடக்குது. இன்னும் ஜிப் போடணும் எக்ஸட்ரா எக்ஸட்ரா...."
" உங்களுக்கு நல்ல பொறுமை இருக்கு. எங்களாலே இப்படி முடியாது. நமக்கெல்லாம் சட்டுன்னு வேலை முடியணும்..."
இப்பத்தான் என் சந்தேகம் இன்னும் 'ஸ்ட்ராங்கா' ஆகுது! ஆமா தெரியாமத்தான் கேக்குறேன்!
இவுங்க வீடு கட்டறதுன்னா, சாமான்களைப் பாக்காம, விலை எல்லாம் விசாரிக்காம அப்படியே போய் வாங்கிடுவாங்களா? ஒரு கத்தரிக்கா வாங்க நாலு கடை போறவுங்க இவுங்க. நம்ம கிட்டே கேக்கறது இப்படி, அதுவும் ஒரு காய்கறிக் கடையிலே எங்களைப் பார்த்திட்டு!
இவரு சொல்றாரு, 'இதை எல்லாம் நான் கண்டுக்கறதே இல்லை. இந்தக் காதுலே வாங்கி அந்தக் காதுலே விட்டுருவேன்'ன்னு!
எனக்குத்தான் இவுங்க இப்படிச் சொல்றப்ப எரிச்சலா வருது! அடப் போங்கப்பா..........
11/10
இன்னைக்குப் பொழுது விடிஞ்சதுலே இருந்து ஒரே ஓட்டம்தான்! இவரு ரெண்டு நாளைக்கு லீவு போட்டிருக்கார். காலையிலே 'க்ளாஸ் ப்ரிக்' பார்க்கப் போனோம். ப்ளான்படி 15 அங்குலம் இடம். ஆனா இப்ப அளந்தா வர்றது 14 அங்குலம் அகலம், உயரம் 2 மீட்டர். இதுபோல ஒரு கதவுக்கு 2 பக்கமும் வருது! க்ளாஸ் ப்ரிக்கோட அளவு 7.5 " சதுரம். 2 வைக்கணும்னா 15 அங்குலமிடம் வேணும். அதான் இப்ப ஒரு அங்குலம் காணாமே. சின்ன இடத்துக்கு அரை ப்ரிக் இருக்குன்னாங்க. பாத்தாஅது வெறும் வெள்ளைக்கலர் ( கலர் லெஸ்) அதுகூடப் பாருங்க முழுசு 7.70 $ அரை 6.60 $. ஒண்ணொண்ணும்! அதுக்கு ஃப்ரேம் தனிக்காசு. தொலையட்டும்னு பார்த்தா வெறும் கலர் இல்லாம வைக்கணும். கிழக்கு பார்த்த இடம், வானவில் போல வர்ணம் வீட்டுக்குள்ளெ வரும் என்ற கற்பனையெல்லாம் போச்சே. எனக்கு மனசே சரியில்லே. ஹூம்......என்னதான் இது தான் 'காம்ப்ரமைஸ்' வீடானாலும் அதுக்காக இப்படியா?

அந்தக் காசை 'ஷோ கேஸ்' வைக்க செலவு செய்யலாம்னு நினைச்சுகிட்டேன். அதுவும்கூட ·ப்ரீ ஸ்டேண்டிங்தான். சுவத்துலே பதிச்சது இல்லே! இன்னும் கேபிள் வேணும்னு கேரி சொன்னதாலே அங்கெ போனோம். க்ரேக் & க்ளிண்டன் வந்தாங்க! டாய்லெட் வைக்கும் இடம் ரொம்பச் சின்னதுன்னு அங்கே வரும் கட்டைச் சுவரைக் கொஞ்சம் நகர்த்தச் சொல்லி செஞ்சாச்சு!
அப்படியே 'ப்ளேஸ் மேக்கர்' போய் 'மெல்டிக்கா'ப் பலகை விலை விசாரிச்சுகிட்டு வந்தோம். வார்டு ரோப்க்கு பலகை போடணுமே!
சாப்பிட்டுட்டு, எலக்ட்ரிகல் வேலைக்கு சில சாமான்கள் வாங்கிக் கொடுத்தோம். மத்தியானம் 'செக்யூரிட்டி அலாரம்' போடற ஆளு வந்தார். நம்ம கடையிலே இருந்ததைக் கழட்டி வச்சிருந்தோம்லே அதையே போடலாம்னு முடிவாச்சு. அப்புறம் இன்னும் 4 சென்ஸர் போட்டுடலாம்னு! இந்த சென்ஸர் எல்லாம் பூனை பிடிக்காததா இருக்கணும். நம்ம வீட்டுலே பூனைகள்தான் எஜமானர்கள். முன்னுரிமை எல்லாம் அவுங்களுக்குத்தான். இதுங்க வீடு முழுக்கக் கண்டபடி ஓடியாடும். அலாரம் போட்டுட்டு நாம் வெளியே போனா, அது இவுங்க நடமாட்டத்தை உணர்ந்து மணி அடிக்க ஆரம்பிச்சுரும். அதனால் நடமாடுறது மனுஷனா, இல்லை ச்செல்லங்களான்னுப் பார்த்துட்டு, அப்புறமாக் கத்தும் சென்ஸர் வேணும் நமக்கு. அலாரம் அடிச்சா என்னன்னு பார்க்கறதுக்கு, செக்யூரிட்டி ஆளுங்க வந்தா, ஒவ்வொரு விசிட்டுக்கும் 25 டாலர் வேற சார்ஜ் பண்ணிருவாங்க. நான் திருடனுக்குப் பயப்படுவேனா இல்லை பூனைக்குப் பயப்படுவேனா? அலாரம் ஆளு,எல்லாம் பார்த்து விவரம் கேட்டுக்கிட்டுப் போயாச்சு. செக்யூரிட்டி அலாரம் போட்டா வீட்டுப்பொருள்கள் காப்புரிமைக்கு ஒரு நல்ல தள்ளுபடியும் கிடைக்கும். பூனை சைஸுலே திருடன் இருப்பானா? ஒருவேளை இருப்பானோ? நைட் வாட்ச் இல்லாததாலே மாஸ்டர் பெட் ரூமுக்குள்ளேயும் ஒரு கீ பேட் வைக்கணும்.

தப்பாப் பண்ண கதவு, ஜன்னல் எல்லாம் ரைலாக் கம்பெனி ஆளுங்க வந்து கொண்டுபோயாச்சு.
கராஜ்க்கு மேலெ வர்ற பாலீஸ்டைரீன் செய்யும் கம்பெனி ஆளுங்களுடன் 'ட்ரெவர்' வந்தார். அளந்தாங்க. அது செய்யறதுலெ ஏதோ குழப்பமாம். அளவு ரொம்பப் பெருசாம். ஆறு மீட்டர் அகலம் வருது. நாளைக்கு 'பொய்டு'கிட்டே பேசணும்.
கிச்சன் டைல்ஸ் தேர்வுக்கு reptiles கடையில் போய்ப் பார்த்தோம். ஒண்ணுதான் கொஞ்சம் நல்லா இருக்கு. அதை ஒரு சாம்பிள் வாங்கி வந்தாச்சு. இங்கெல்லாம் டைல்ஸ், கார்பெட் சரியா வருமான்னு பார்க்க சாம்பிள் பீஸ் தருவாங்க. அவைகளைக் கொண்டுவந்து வச்சுப் பார்த்துட்டு அப்புறம் வேண்டிய அளவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். எல்லாம் நோ ஆப்ளிகேஷந்தான். நம்ம சுவர் வர்ணத்துக்கும் பொருத்தமா இருக்கணும். கூடவே அது சேலிலும் இருக்கணும்னா எப்படி? அவ்வாவும் காவால, புவ்வாவும் காவால :-)
தொடரும்...................
12 comments:
டீச்சர், அவங்க எல்லாம் ரெடிமேட் வீடு வாங்கறவங்க. அதான் உங்களைப் பார்த்தா அப்படி ஒரு கேள்வி வருது. நாங்களும்தானே கேட்கறோம். இப்போ எரிச்சலா வருது? வீடு கட்டி குடி புகுந்தாச்சு. அதான் இப்படி. அப்போ இருந்த ரென்சனில் அந்த கேள்வி காதில் விழுந்தா எரிச்சல் வந்தது. இல்லையா?
வாங்க கொத்ஸ்.
நீங்க சொல்றது சரிதான்னு இருந்தாலும், அந்த ரெடிமேட் வீட்டை மட்டும்
போய்ப் பார்த்த முதல் வீட்டை வாங்கிருவாங்களா?
இங்கே வீடு வாங்குமுன் கிட்டத்தட்ட 80 வீடு பார்த்தவங்க இருக்காங்க:-)
அங்குலம் அங்குலமாக வளருகிற வீட்டை பார்க்கும் போது ஆசையாக இருக்கும்.
நாம்் எதிர்பார்த்தது போல் வராமல் அங்கங்கு செய்யும் தவறுகள் நம் கண்ணுக்கு மட்டும் தெரிந்துகொண்டே இருக்கும்.இது உங்களுக்கு மட்டும் அல்ல பல கட்டிடங்களை கட்டிமுடிந்த பிறகு நான் செய்த தவறு/தப்புகள் என் கண்ணில் மட்டும் தெரிந்துகொண்டே இருக்கும்,அடுத்த கட்டிடம் கட்ட போகும் வரை.
//இங்கே வீடு வாங்குமுன் கிட்டத்தட்ட 80 வீடு பார்த்தவங்க இருக்காங்க:-)//
நாங்களும் 80 இல்லைனாலும் 50 ஆவது பார்த்திருப்போமில்ல. ஆனா அது இவ்வளவு கோஆர்டினேஷன் வேண்டாத வேலைதானே...
வாங்க குமார்.
உங்களுக்காவது அடுத்த கட்டிடம் வந்தவுடன் அதுலே கவனம் போயிரும். நமக்கு?
இருந்திருந்து ஒரு வீடு கட்டும்போது அப்படியே மனம் உடைச்சு போயிருது சில சமயம்.
இங்கே வீடு கட்ட ஆரம்பிச்சு, அந்த மன அழுத்தம் தாங்காம டிவோர்ஸ் ஆனவங்க கதைகளும்
ஏராளம்:-)
கொத்ஸ்,
அப்படியே வாங்குன வீடா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் நம்ம செளகரியத்துக்கு
மாத்தணுமுன்னு 'ஆசை' இருக்குமில்லையா?
எங்க பழைய வீட்டிலும் இப்படித்தான் ச்சின்ன சின்ன மாற்றங்களாச் செஞ்சுக்கிட்டே இருந்தோம்.
இங்கேயும் இப்ப அது தொடர்கதைதான்:-)
இங்கே வீடு கட்ட ஆரம்பிச்சு, அந்த மன அழுத்தம் தாங்காம டிவோர்ஸ் ஆனவங்க கதைகளும்
ஏராளம்:-)
இதானா வேண்டாம் என்கிறது...
இ.கொத்தனார் போட வேண்டிய கமெண்டு இது. :-))
நிஜமாக இருந்தா நிறையவே வருத்தப்பட வேண்டியது.
kalyaaNam paNNippaar. veettaik kattippaar:)
veettaik kattippaar.
divorce paNNippaara???????
குமார்,
இது விளையாட்டுக்குச் சொல்லலை.
பாதிவீட்டுலே அப்படியே நின்னுபோய்,
அதுக்கு ஏற்பாடு செஞ்ச ஜன்னல்,கதவுகள் எல்லாம் இங்கே
ஏலக்கடையில் பார்த்தோம்.
கருத்துவேறுபாடு ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தா வேற என்ன வழி?
வாங்க வல்லி.
குமாருக்குச் சொன்னதுதான்.
பாவம் சிலபேர்(-:
நான் ஒரு 30 வீடு தான் பார்த்தேன். ஒரே நாள் 20வீடு போய்பார்த்துட்டு ஒரு அட்டவனண போட்டு எந்த எந்த வீட்டில் என்ன என்ன இருக்கு... அப்பரம் இந்த வீட்ட வாங்கியாச்சு..
வாங்க அரவிந்தன்.
நல்லவேலைதான் செஞ்சுருக்கீங்க. நிறைய வீடுகளை ஒரே நாளில் பார்த்தால்
எங்கே என்ன மாதிரின்னு மறந்து போயிருமே.
நாங்க எங்க பழைய வீட்டை வாங்குனப்ப நாங்க பார்த்த மூணாவது வீடு அது:-)
அப்ப அவ்வளவா விவரம் பத்தாது எங்களுக்கு.
இப்பெல்லாம் எங்கியாவது போறப்ப வழியிலெ 'ஒப்பன் ஹொம்' போர்டு பார்த்தா
'சட்'ன்னு வண்டிதானெ நின்னுருது:-))))
Post a Comment