இந்த ஜன்னல் போடாம இருக்கறதாலே பலவேலைகள் நின்னு போச்சு.
முதலாவது வீட்டைப் பூட்ட முடியாது! ( ஜன்னல் வழியா ஆளுங்க வந்துரலாமே! அப்புறம் பூட்டி என்ன பயன்?)
வீட்டைப் பூட்ட முடியாததாலே எலக்ட் ரிக் லைட் ஃபிட்டிங், பாத்ரூம் ·பிட்டிங் எதுவும் போட முடியாது!
அடுப்பு வாங்கிக் கடையிலேயே வச்சுருக்கு. அதுக்கு இப்ப ஸ்டோரேஜ் கொடுன்னு கேக்கறாங்க. பூட்டாத வீட்டுலே எப்படி 4000 டாலர் அடுப்பை வச்சிட்டுப் போகமுடியும்? இத்தனைக்கும் அடுப்பு வாங்குனப்பவே, டிசம்பர் கடைசியில் அடுக்களை வேலை முடிஞ்சப்புறம்தான் டெலிவரி செய்யணுமுன்னு ஒப்பந்தம் போட்டுருக்கு. அதை ஞாபகமா மறந்துட்டாங்க:-)
அடுக்களையை எப்பவோ செஞ்சு வச்சிருக்காரு 'கிங்' அதை எப்படி இங்கே போடறது? அப்புறம் 'டிஷ் வாஷர்' எல்லாம் திருடுபோயிடாதா?
ஜன்னல் இல்லாம 'திருடர்கள் பயப்படுற (?)அலார்ம்' எப்படிப் போட முடியும்? பூட்டு & அலார்ம் போடலைன்னா இன்சூரன்ஸ் கம்பெனி எதாச்சும் நடந்தா பொறுப்பு எடுத்துக்காது
இப்படி பல வேலைங்க பாதிக்கப்பட்டு இருக்கு! என்ன செய்யறது? கடவுள் கிட்டேதான் முறையிடணும்.
26/11
இன்னைக்கு இவர் வெலிங்டன் போயிருக்கார். அங்கெ இருந்து ஃபோன் செய்றார், இந்த பில்டர் கூப்பிட்டுச் சொன்னாராம் அவராலே நேத்து வாங்கிவச்ச பலகைங்களைக் கொண்டு நம்ம 'வாக் இன் ரோப்' லே ஷெல்ஃப் போட முடியாதாம்! அந்த வேலை அவருக்கு வராதாம்!வேலை வராதவுங்க எதுக்கு பில்டர்ன்னு பெத்த பேரு வச்சிருக்காங்க? இதை என்கிட்டே நேரடியாச் சொல்லி இருக்கலாமில்லையா?
நான் போனேன். பில்டர் அங்கே இருந்தாரு.என்னா விஷயம்னு கேட்டேன். பலகை அடிச்சு போட்டுடுவாராம். ஆனால் அந்த வேலை நீட்டா இருக்காதாம். அதுக்குன்னு இருக்கற ஆளுங்கதான் நல்லபடியாச் செய்வாங்களாம்! வேணும்ன்னா சொல்லுங்க நான் செய்யறேன். ஆனா நல்லா வராது! இது எப்படி இருக்கு?
உள்ளெ போனா, ரெண்டு கப்போர்டுக்கும் பலகை அடிச்சிருந்தது. பரவாயில்லை! ரெண்டு பெட் ரூம்லே ரெடிமேட் வார்டுரோப் போட்டிருக்கு. சின்ன ரூம்து பரவாயில்லை. சுமாரா இருக்கு. மேல்தட்டை இறக்க முடியாதாம். சரி தொலையட்டும். அங்கே யாரு புழங்கப்போறான்னு விட்டுட்டேன். இன்னொரு ரூம்லே போட்டு வச்சிருக்கு. எப்படித் தெரியுமா? தட்டு தட்டா வர செல்ஃப் நட்ட நடுவிலே! அதுக்கு ரெண்டு ஸ்லைடிங் கதவு வருமுல்லே. சரியா நடுவிலே இருந்தா கை எப்படி போகும்? துணி வைக்க, எடுக்க ஈஸியா வழி வேணாமா? சொன்னதும் 'திகைச்சுப் போயிட்டார்!' இப்படித்தான் எல்லாத்துக்கும் ஒரு 'திகைப்பு!' கொஞ்சம் யோசிச்சுப் பார்க்க வேணாமா? நம்ம கிச்சன் கிங் எப்படி எல்லாத்தையும், விஷுவலைஸ்' பண்ணிச் சொல்றாரு! 'வெள்ளைக்காரனுக்கே புத்தி மட்டு' தானோ?
அதை கொஞ்சம் தள்ளிவைக்கச் சொன்னேன். அப்ப துணி தொங்க விடற கம்பியை ச்சின்னதா ஆக்கணுமாம்! ஆக்குன்னேன்.கொஞ்சமா அதை வெட்டிட்டு தள்ளி வைச்சாரு.அப்படியே இடது பக்கத்துலே தட்டுப் போடச் சொன்னேன். மூணு தட்டுக்கு ஏற்பாடு ஆச்சு!அங்கேயே இருந்து பார்த்தேன். அப்புறம் இன்னோரு கம்பி வாங்கி போடச் சொல்லிட்டு, அப்படியே மேலே இன்னொரு நீள தட்டு குறுக்காப் போடச் சொல்லிட்டு வந்தேன்.
இந்த அழகுலே வேலை நடக்கறப்ப, பில்டர் சொல்றாரு,' டிசம்பர் 15க்கு முன்னாடி வேலை முடிஞ்சிரும்! எப்ப குடி வரப் போறே?'
முதல்லே முடியட்டும். வந்தா ஜன்னலு இல்லாமத்தான் பலகை அடிச்சுட்டு வரணும்! 'திறந்தவெளி அரங்கு!!!!!!!!!!!!!!'
பெயிண்ட் வேலை நடக்குது! அடுக்களை முடியற நிலை! ஒரு சின்னப் பையன் தூங்கி வழிஞ்சுக்கிட்டே ச்சின்ன சின்ன ஓட்டைங்களை அடைக்கிறான்ஒரு ஃபில்லிங் வச்சுகிட்டு. மூஞ்சைப் பார்த்தாவே தெரியுது சோம்பேறின்னு! இன்னோரு க்ளிண்டன் இந்த ஸ்டீவன்! வந்து வாய்க்குதுங்க பாரு! நம்ம பெயிண்டர் டோனியோட தங்கச்சி பையனாம். பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. இது அவனுக்கு ஹாலிடே ஜாப். 'வெரி நைஸ் பாய். லேர்னிங் வெரி ஃபாஸ்ட்.........' தாய் மாமன் கொடுக்கற சர்டிஃபிகேட். எல்லாம் நம்ம நேரம். நல்லவேளை டோனிகூட இன்னொரு அனுபவம் வாய்ஞ்சவர் வந்து வேலை செய்யறார்.
ஸ்டடியிலே பெயிண்ட் அடிச்சு காய வச்சிருக்காங்க!
கேரி வந்து லைட்டு வேலை செய்றார். வெளியிலே பூசறது நிப்பாட்டியிருக்கு. ஏன்னு தெரியலை! கராஜ்க்கு மேலே நேத்து போட்டு வச்சிருந்த பாலீஸ்டைரீன் பாதி கழட்டி எடுத்திருக்கு. போட்டும் அதுவே கோணையாத்தான் இருந்தது!
மழை பேஞ்ச இடமா? ஒரே நத நதன்னு இருக்கு!
இவரு வெலிங்டன்னுலே இருந்து மறுபடி ஃபோன் செஞ்சு, என்ன நடக்குதுன்னு கேட்டார். சொன்னேன். பெயின்டர் கிச்சனை முடிச்சுட்டாங்கன்னு சொன்னதுக்கு, கார்நீஸ் பெயிண்ட் அடிச்சுட்டா அடுக்களை வச்சிரலாமேன்னு அதை முதல்லே முடிக்கச் சொல்றயான்னு கேட்டாரா, நான் மறுபடியும் போனேன்.
பெயிண்டைக் கலக்கறதுக்கு ஒரு ஆள் இருக்காராம்! அவரு ஆக்லாந்து போயிருக்காராம். ஞாயிறு ராத்திரிதான் திரும்பி வருவாராம். திங்கள் காலையிலே 8 மணிக்கு கலரைக் கலக்கித் தந்தார்ன்னா, மத்தியானத்துக்குள்ளெ அடிச்சுடுவாங்களாம். இதுதான் கிடைச்ச கதை!
பில்டரும் வார்டுரோப்லே பலகையை வெட்டிப் போட்டுக் காமிச்சார். அப்பத்தான் கராஜ்மேலே இருந்த பாலீஸ்டைரீன் என்ன ஆச்சுன்னுகேட்டேன். காத்துலே பறந்து போயிருச்சாம்! ஹூம்....
காலையிலே வேலைக்கு வந்தப்ப பார்த்தா, காத்துலே கீழே விழுந்து கிடந்துச்சாம்! ட்ரெவர்க்கு ஃபோன் போட்டாராம். அது சரியா வெட்டலைன்னு சொல்லி வேற கொண்டுவருவாராம்! என்னமோ நடந்துகிட்டு இருக்கு! மத்த பலகைங்களையெல்லாம் திருப்பிக் கொடுக்கச் சொன்னேன். பழைய பாலீஸ்டைரீன் ஷீட்டுங்களையும் திருப்ப முடியுமான்னு கேளுன்னு சொல்லியிருக்கேன். குறவ(ன்)ர் மாதிரி முழிக்கிறார்!
சொல்ல மறந்துட்டேனே, தூண் இருக்குல்லே அதுக்கு கீழே வர்ற மேடையைச் செஞ்சு இருக்காங்க. 'பாலீஸ்டைரீன்'தான். அதை ரெண்டு பாகமாச் செஞ்சு ஒட்ட வச்சுட்டுப் போயிருக்காங்க! அகஸ்மாத்தா மேலே பார்த்தா, முகப்புலே வர்ற பாலி போர்டும் போட்டுட்டுப் போயிருக்காங்க. அப்ப....கராஜ்? அட! அங்கேயும் வேலை முடிஞ்சிருக்கு. அப்பாடான்னு இருக்கு. ப்ளாஸ்டரிங் பண்ணறவங்களுக்குச் சொல்லிறலாம்.
27/11
வழக்கம் போல காலையிலேயே போனப்ப ஆளுங்க பெயிண்ட் அடிச்சுகிட்டு இருந்தாங்க. என்ன ப்ரொஃபஷனல் பெயிண்டர்களோ? நாங்க அடிக்கற மாதிரிதான் இருக்கு. நாங்களும் இப்ப இருக்கற வீட்டை இந்த 17 வருஷத்துலே 2 தடவை பெயிண்ட் அடிச்சு இருக்கோமே!
டைல்ஸ் கடைக்குப் போய் அங்கிருந்து வாங்கிட்டு வந்த சாம்பிள் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்தாச்சு. இப்ப வேற கலர் தேர்ந்தெடுத்துச் சொல்லிட்டு வந்தோம். அந்த பார்டர் ரொம்ப நல்லா இருக்கு! போடமுடியுமான்னு தெரியலை.
28/11
இன்னைக்கு ஞாயிறு! நாங்க ச்சும்மாப் போயிட்டு கொஞ்சம் ·போட்டோ எடுத்துகிட்டு வந்தோம். ரொம்ப நாளாச்சு படங்கள் எடுத்து! தினம் நடக்கற இந்த கலாட்டாவுலே கேமெரா எடுத்துக்கிட்டுப் போக மறந்து போகுது.
29/11
மத்தியானம் போய்,அண்டர் ஃப்ளோர் ஹீட்டிங் கண்ட்ரோலர் ஸ்விட்ச் ரெண்டு இடத்துலே பார்த்துட்டு வந்தோம். அப்படியே புது வீட்டுக்குப் போனோம். அங்கெ வெளியிலே கலர் அடிச்சுகிட்டு இருந்தாங்க. அதுக்குள்ளே முக்கால் வாசி அடிச்சுட்டாங்க! வெளியே ப்ளாஸ்டரிங் செஞ்சு,பெயிண்ட் அடிக்கன்னு தனிக் குழுவுக்கு ஒப்பந்தம்.
வீட்டுக்கு உள்ளெயும் பெயிண்ட் வேற ஆளுங்க அதுதான் நம்ம 'டோனி ஆளுங்க' அடிச்சுகிட்டு இருந்தாங்க! அடுக்களையிலே கார்னீஸ் முடிச்சுட்டாங்க. லாண்டரியும் முடிச்சுட்டாங்க.
முக்கியமா,ரைலாக் ஆளுங்க ஜன்னல் ஃப்ரேம் சரி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வார்டுரோப் உள்ளே வர பலகையை ஒரு பையன் வெள்ளைப் பெயிண்ட் அடிச்சு வச்சிகிட்டு இருக்கான். கப் போர்டுக்குள்ளேயும் வெள்ளைக் கலர் அடிச்சு வச்சிருக்கான்.
ரைலாக் ஆளுங்க கிட்டே வேலையை முடிச்சுட்டுப் போறப்ப ஜன்னலுக்கு அட்டையை வச்சு அடைச்சுட்டுப் போங்கன்னு சொல்லிட்டு வந்தோம். சாயந்திரம் ஒரு 6 மணிக்குப் போனா, ஜன்னல் எல்லாம் 'பா'ன்னு திறந்து இருக்கு! சொன்ன கேக்கற ஆளுங்க! ரிச்சர்டு இன்னும் கார்நீஸ் சரிபண்ணிகிட்டு இருந்தாரு. திருப்பித் திருப்பிச் சொல்லிகிட்டே இருக்கேன், முன் வாசக் கதவுக்கு உட்புறம் மேலெ 'கேப்' இருக்கு. அங்க ஒருபீஸ் கார்நீஸ் வெட்டிப் போடுங்கன்னு. கேட்டுருவாங்களே! நீ பாடறதைப் பாடு. நான் செய்யறதைச் செய்யறேன்னுதான்! இன்னோருக்காச் சொன்னேன். ஒரு வழியா இன்னைக்கு செய்யறேன்னு பதில் வந்தது!
தொடரும்......................
===========================
Wednesday, September 12, 2007
வீடு 'வா வா'ங்குது ! பகுதி 24
Posted by துளசி கோபால் at 9/12/2007 02:04:00 PM
Labels: அனுபவம்/நிகழ்வுகள் வீடு
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
B.P எகிறிடபோவுது..பார்த்துக்கிங்க
யப்பா சாமி, நான் வரலை. ரொம்ப படுத்தறாங்க. நாங்க பட்ட பாடு எம்புட்டோ தேவலாம் போல! :)
சரியான பாடமாக இருக்கு.
படிக்கும் போதே உங்க கஷ்டம் தெரிகிறது.
வாங்க சிஜி.
அப்ப எகுறுன B.P இன்னும் இறங்கலை:-)
வாங்க கொத்ஸ்.
பழைய வீட்டை வாங்குனப்போ ஒரு கஷ்டமும் இல்லாம நாலைஞ்சு கையெழுத்துப்போட்டு முடிச்சாச்சு.
இப்பத்தான் ஆழம் தெரியாம காலை விட்டுட்டோம்:-)
வாங்க குமார்.
கஷ்டம் பாதிதான் சொல்லி இருக்கேன். மீதி வந்துக்கிட்டு இருக்கு:-)
என்னது பாதி கஷ்டமே இந்த அழகா?
நான் இழந்த 60k எல்லாம் ஒன்றுமே இல்லை.
குமார்,
அறுவதோ, அறுநூறோ அனாவசியமா போதுன்னா மனசுக்குக் கஷ்டமாத்தானெ இருக்கு.
அதுக்குத்தான் விதிப்படி நடக்குதுன்னு மனசை சமாதானமாக்கிக்கறது:-)
Post a Comment