Tuesday, September 11, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 20

காலையிலெ இவரு மறுபடி இன்ஸ்பெக்ஷன் வந்த ஆளைப் பார்த்தாராம். என்னென்ன செய்யணும்ன்னு சொன்னாங்களாம். அந்த வேலையைத்தான் அங்கே இப்பக் க்ளீண்டன் செய்யறானாம். இவ்வளவு காசைப் போடறோம். ஒரு கத்துக்குட்டி அங்க வேலை செய்யுது!


இவரு சொன்னார் 'எல்லா ஓட்டையையும் நல்லதா மூடி பேட்ஸ் போடணும்ன்னு சொல்லியிருக்கேன்' பாக்கி எல்லாத்தையும் ப்ளாஸ்டிக் பையிலே போடுன்னு சொன்னா 'ஒரு மாதிரி தந்திரமா( இந்த சொல் உபயம் என் மாமியார்) சிரிக்கிறான். க்ரேக்கிட்டே சொல்லியாச்சுன்னா தலையை மறுபடி ஒரு மாதிரி ஆட்டுறான். மூக்குக்கு 'மாஸ்க்' இருக்கான்னா, இல்லையாம். நாங்க வாங்கித் தர்றோம்ன்னு சொன்னோம். இவர் போய் வாங்கிவந்து கொடுத்தார். பிங்க் பேட்ஸ் கண்ணாடி இழைன்றதாலே க்ளவ்ஸ் & டஸ்ட் மாஸ்க் முக்கியமாப் போட்டுக்கிட்டுத்தான் வேலை செய்யணும்.

லெட்லைட் 'பேட்' வந்து 'டிஸைனை'க்காட்டி எதுன்னு தெரிவு செஞ்சோம். அளவு எல்லாம் எடுத்தாங்க. காசு $550 ஆகுமாம்.

சாயந்திரம் 7 மணிக்குத்தான் போனோம். எல்லாக் கதவும் 'பா'ன்னு திறந்திருக்கு. வேலையை முடிச்சவங்க, மூடிக்கிட்டுப் போகக்கூடாதா?ஜன்னலை எல்லாம் திறந்து அப்படியெ போட்டு இருக்காங்க! எனக்கு ஒரே கோவம்.( அடக்கு அடக்கு)

ஜிப் போர்டுங்க வந்து இறங்கியிருக்கு. 7000$க்கு. யாரோ அதுமேலே நடந்து ஒண்ணை உடைச்சு வச்சிருக்காங்க! காசு மரத்துலெயா காய்க்குது?
நாங்களெ எல்லாத்தையும் மூடினோம். அப்பத்தான் கவனிக்கறோம், 5 இடத்துலே பேட்ஸ் போடவே இல்லை! இது எப்படி இருக்கு! ப்ளான் கொடுத்திருக்கோம். அதுலெ எல்லாம் விளக்கமா இருக்கு. அதைப் பாக்க வேணாமா? ஜிப் போடறதுக்கு முன்னாலே எல்லாம் சரிபாக்கணுமா இல்லையா? ரத்தம் கொதிக்குது! படுக்கை அறையிலே ஒரு பக்கம் மட்டும் பேட்ஸ் போட்டா குளிராதா? அங்கே வேற ஹீட்டிங் வராது! அந்தப் பையன் க்ளிண்டன் சரியான 'காம் ச்சோர்' நல்லா தூங்கிட்டு, ப்ரிக்கிங்க வாயைப் பாத்துக்கிட்டு இருந்துட்டு ஒரு வேலையும் சரியாச் செய்யாமப் போயிருக்கான்.

அவனைச் சொல்லி என்ன பிரயோஜனம்? அவன்கிட்டெ, கிரேக் இல்லே பக்கத்துலெ இருந்து வேலை வாங்கணும்! இவன் ஆள் இருந்தா ஒரு மாதிரி, ஆள் இல்லைன்னா ஒரு மாதிரி வேலை செய்யறான். சின்னப் பசங்களை வேலைக்கு வச்சா இப்படித்தான். இந்தப் பையனுக்கு அந்த 'ட்ராயிங்' படிக்கத் தெரியுமான்னே எனக்குத் தெரியலை! படிப்பு ஏறாததுங்கதானே இந்த வேலைக்கு வருதுங்க. இங்கே 'ட்ரேட்' சொல்லிக் கொடுக்கற இடத்துலெயும் ஒரு கண்டிப்பும் கிடையாது எது எப்படிச் செஞ்சாலும் 'க்ரேட்'ன்னு இளிச்சிருவாங்க.
வாங்கற கூலிக்கு நியாயமா வேலை செய்யணுமா இல்லையா? வயிறு எரிஞ்சு போச்சு! 'சாபம்' விடறதுக்கு வாய் துடிக்குது! இதென்ன ஆம்லெட் போடற மாதிரியா? ஒண்ணு தீஞ்சுட்டா வேற போட்டுக்கறதுக்கு? வீடு கட்டறது எவ்வளவு பெரிய ப்ராஜக்ட்? எல்லாம் சரி பாக்க வேணாமா? ஒன்னுக்கு பத்து தடவை செக் செய்யணுமா இல்லையா?

நம்ம ஊர்லே இருக்கற வேலை ஆளுங்களுக்கும் இதுங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சரி. வித்தியாசம் இருக்கு. ஒத்துக்கறென் .எதுலே? தோல் நிறமும், பேசற பாஷையும்தான்! எல்லாம் 420ங்க!

வீட்டுக்கு வந்து மறுபடி பில்டருக்கு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னோம். அவருக்குப் பிடிக்கலை போல. நாளைக்கு காலையிலெ7.30க்கு வரேன்னார். இன்னும் அடுக்களை பக்கத்துலெ ஃபீச்சர் வால்' சரிபண்ணலே! நாளைக்குக் காலேல போய் எல்லாம் சொல்லிச் சரி செய்யணும்! எனக்கு நானே சொல்லிக்கறேன், 'ஆத்திரப்பட்டுக் கத்தக்கூடாது'. நமக்கு வேலை ஆகணும். 'காரியம் ஆறவரைக்கும் கழுதைக் காலையும் பிடிக்கணும்'ன்னு பழமொழி இருக்கே!

27/10
பாவம்! இவருதான் காலையிலே 6 மணிக்கே எழுந்து ரெடியாயிட்டாரு. என்னை வரவேணாம்ன்னு சொல்லிட்டாரு. ஊஞ்சலுக்கு 'க்ளாம்ப்' செஞ்சு வந்திருச்சாம். அதை ஆஃபீஸ்லேயே வச்சிட்டாராம் அதைக் கொண்டுபோய் போட்டுடறேன்னு சொல்லிப் போனாரு! ஜிப் போடறதுக்கு முன்னாலெ இந்த வேலை முடியணுமே! 250 கிலோ கனம் தாங்குமாம், ஒவ்வொண்ணும். நான் அரை டன் எடையா இருப்பேன்?

எனக்கு ஒரே கவலையா இருக்கு! இவருக்கு அவ்வளவு பலம் இல்லே. 'வெஜிடேரியன்' இல்லைதான், ஆனாலும்....! அப்புறம் கைக்கு ஏதாவது செஞ்சுக்குவாரோ, மேலே ஏறும்போது ஏதாவது நடந்துருமோன்னு ஒரே பயம் ! ஏன்னா இவருதான் நம்ம வீட்டு 'டிம் த டூல் மேன், ஆக்ஸிடண்ட் ப்ரோன்' ஆளு!

போல்ட்டை நல்லா முடுக்கணுமே, ஊஞ்சல் கனத்தைத் தாங்க வேணாமா? கவலையா இருக்கு. மனசு சமாதானமெ இல்லை.அங்கிருந்து ஃபோன் செஞ்சாரு. 'க்ளாம்ப்' போட்டுட்டாராம்! பில்டரும் அந்தப் பையன் க்ளிண்டனும் வந்து வேலையை ஆரம்பிச்சிருக்காங்களாம்!

'க்ளாஸ் ப்ரிக்' இல்லவே இல்லை. மண்ணுதான்! எரிச்சலா இருக்கு! இவரு வேற கோவமா மூஞ்சை வச்சிகிட்டு இருக்காரு. ஒருவேளை நான் வாயைத் திறக்காம இருக்கறதுக்காக இவரு இப்படி நடிக்கறாரோ? பாருங்க என் குரங்கு மனசு என்னெல்லாம் நினைக்குதுன்னு(-: ' ஃபீச்சர்வால் ஷெல்·ப்' ப்ளான் கொடுத்திருக்காராம்! எப்படி வருமோ?

28/10
என்ன வேலை நடந்துச்சுன்னே தெரியலை. செங்கல்லு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. வீட்டுக்குப் பின்னாலே முடிச்சுட்டாங்க. பிரதான வாசலுக்கு முன்னேயும், ஸ்டடிக்கு பக்கத்துச் சுவரும் கொஞ்சமே கொஞ்சம் வேலையை முடிக்காம விட்டிருக்காங்க!

29/10
'ஜிப் GIB' போடற ஆளுங்க அஞ்சாறுபேர் வந்திருக்காங்களாம்! சாயந்திரம் போனோம். ஃபிஜியிலிருந்து அமீத், மஹேஷ் பையா' வந்திருந்தாங்க. அவுங்களையும் கொண்டுபோனோம். உள்ளெ போனா, ஜிப் ஏறக்குறையப் போட்டு முடிச்சுட்டாங்க! இன்னும் கொஞ்சம்தான் பாக்கி! ஒரே நாளுலே 95% வேலையை முடிச்சிருக்காங்க! இதே வேகத்துலே எல்லா வேலையும் நடந்தா இன்னும் 4 வாரத்துலே முடிஞ்சிடுமே! இப்பப் பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு!

உள்ளே ஜிப்ஸம் நிறைச்ச போர்டுகளை (gypsum plaster board) ஜிப்ன்னு சொல்றாங்க. அதை மரச்சட்டங்களா நிக்கும் வீட்டு உள்புறத்தில் வச்சு மூடிக்கிட்டே வராங்க. ரெண்டு போர்டை இணைக்கும் இடத்தில் வலைமாதிரி ஒரு அகலமான டேப் போட்டு ஒட்டறாங்க. வேணுங்கற அளவை அறுத்துப் போட்டுக்கிட்டே போறாங்க. வேலை பரபரன்னுதான் நடக்குது. Drywalls சிஸ்டம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த போர்டும் மூணு விதமா வந்துருக்கு. பாத்ரூம் பக்கம் வர்றதுக்கு தண்ணியாலே பாதிப்பு இல்லாம இருக்கும் ரகமாம். GIB Aqualine , GIB Noiseline , GIB Fyreline இப்படி மூணு வகை.

30/10
காலையிலே கோவில் போறதுக்கு முன்னாலே போனா, அடிக்கற காத்துலே ஜன்னல் மறைப்பு எல்லாம் விழுந்து கிடக்கு! வாசக்கதவுலே நாங்க ஒட்டி வச்ச பேப்பரை எல்லாம் காணோம்!

ஒரு மாதிரி 'அட்ஜஸ்ட்' செஞ்சு வச்சிட்டு வந்தோம். மத்தியானம் திரும்ப வந்து எல்லாம் சரி செஞ்சு ஒட்டணும்! நாங்க எடுத்துவச்ச பிங்க் பேட்ஸ் பைங்க ஒண்ணையும் காணோம்! ஸ்டடி ரூம் கதவை மாத்திப் போட்டிருக்கறதை இப்பத்தான் கவனிச்சோம். லிவிங்லே இருந்து லாண்டரி போற கதவை இங்கே மாத்திப் போட்டிருக்காங்க! இது ஒரு ஸ்பெஷல் கதவு. நம்ம பூனைகளுக்கு டெடிகேட் செஞ்சது.

லவுஞ்சுக்குப் போற கதவுலே என்னவோ தகராறு. மூட வராம இடிக்குது! என்னன்னு பாக்கணும்!

சமையல் அறைக்கு 'டைல்ஸ்' மாதிரிகள் கொண்டுவந்தோம். கலர் சரியில்லேன்னு மகள் சொன்னாள். எங்களுக்குப் பிடிச்சிருக்கு. முக்கியமா விலை குறைவு! எதுக்கும் கிச்சன் கிங் கிட்டே கேக்கணும்!

31`/10
வீட்டுக்கு சோஃபா வாங்கணுமே! இங்கே ஒரு புதுக்கடை 'பாலி (Bali)' திறந்திருக்காங்க, அங்கே தேக்கு மரத்துலே செஞ்சது ஒன்ணு ரொம்பநல்லா இருக்கு. யோசிக்கணும். அங்கே ஒரு 'பூனைப் பிச்சைக்காரன் பொம்மை' இருக்கு! நம்ம ஜிகே மூஞ்சியேதான். கையிலே பாத்திரம் ஏந்திப் பிச்சை கேக்கறமாதிரி நிக்குது! பரிதாபமா இருக்கு! வாங்கலாமான்னு பாக்கறேன்!

இன்னும் என்னென்ன வேலை பாக்கின்னு இவர் ஒரு லிஸ்ட் போட்டார். நாலு மாசம் முடியுது. வேலை ரொம்பவே மெதுவா நடக்குது!
மத்தியானம் நம்ம வீட்டுக்கு ( 311லே) எதிர் வரிசையிலே இருக்கற 'பவர் ஸ்டோர்' போனோம். அங்கே 12% கழிவு மற்றும் 12 மாசத் தவணையிலே வட்டியில்லாம சாமான்கள் தராங்களாம்!

நமக்கு வேணும்ன்னு முடிவு செஞ்சிருக்கற 'டிஷ் வாஷர்' விலை குறைவா கிடைக்குமான்னு பாக்கணும். ஏற்கனவே 'ஃ பார்மர்ஸ்' கடையிலே $1213.52 ( ஜஸ்ட் ஃபார் ஒன்)க்கு தரேன்னு சொல்லியிருக்காங்க! ஆனா தவணைன்னா வட்டி கட்டணும். இங்கே முதல்லே 1250ன்னு சொன்னாங்க (12% கழிவு) அப்புறம் ஃபார்மர்ஸ்லே எழுதி வாங்கினதைக் காமிச்சோம். அதை ' பீட் பண்ணறோமுன்னு $1200க்கு தரேன்னு சொல்லிட்டாங்க! நமக்கு இன்னும் 3 வாரம் கழிச்சுதான் வேணும்ன்னு சொன்னோம். அப்ப இருந்து கணக்கு வச்சுக்கறோம்ன்னு சொன்னாங்க!சாமான் எடுக்கறப்ப $350 கட்டணும். மீதி மாசம் 176 கட்டுனாப் போதும்! நல்ல 'டீல்'தான்!
அடுக்களையிலே கூடியவரை இருடியம் வகையா போடணும்.அப்பத்தான் ஒண்ணுக்கொண்ணு பொருத்தமா இருக்கும். நமக்கு டபுள் டிஷ் ட்ராயர். ஒண்ணுங்கீழ் ஒண்ணுன்னு இல்லாமத் தனித்தனியா அடுக்களை சிங்குக்கு ரெண்டு பக்கத்திலும் போடணும். முதுகுக் குனியாம பாத்திரம் போட, எடுக்கன்னு இந்த ஏற்பாடு. (நான் ஒரு வளையாபதி. உடம்பை வளைக்க மாட்டேன்............) இப்பத்தான் கவனிக்கிறோம் அடுக்களையில் தப்பான இடத்தில் 'வெண்ட்' ஓட்டை போட்டு வச்சுருக்காங்க.

சாயந்திரம் மறுபடிப் போய் கண்ணாடி ஸ்லைடிங் கதவு பூட்டை மட்டும் திறந்து வச்சிட்டு வந்தோம், காலையில் வேலைக்கு வருவாங்களேன்னு.

1/11
ஜிப் ஆளுங்க வேலைக்கு வரலே! ஒரு நாளு வந்தா ஒம்பது நாளு மட்டம்! அது என்ன வேலை சிஸ்டமோ? பில்டர் மட்டும் வந்து முகப்பு வேலை செய்துகிட்டு இருக்காராம்! அது முடிச்சாதான் மீதி செங்கல்லு வைக்கணுமாம்!

கதவுங்க மாறிடுச்சுன்னு சொன்னேன் இல்லையா? அதுங்களை மாத்தி வச்சு இருந்தது. லவுஞ்சு கதவை சரி செஞ்சிருக்காங்க. ஆனாலும் கரெக்டா இல்லாத மாதிரி ஒரு தோணல். 'கேவிடி டோரும்' கொஞ்சம் சரி செய்யணும்.
கைப்பிடி குமிழ் எங்கே இருக்கணும்ன்னு அளந்து குறிச்சு வச்சிட்டு வந்தோம். வார்டுரோப் அளவு எடுத்தோம்.

மனசு ஒண்ணும் சரியில்லே. கொடுக்கற காசுக்குத் தகுந்த வேலைங்க நடக்கறது போல இல்லே! கடவுள் தான் பாக்கணும்!தொடரும்..............

6 comments:

said...

இன்னிக்கு முழுவதும் மனசு சரியில்லாம போகப்போவுது..
இப்படி சொல்லிட்டீங்களே!! :-)))
படிப்பு ஏறாததுங்கதானே இந்த வேலைக்கு வருதுங்க
நீங்க தானே காசு கொடுக்கிறீங்க எது வேனா சொல்லலாம்.
அடுத்து ஊஞ்சல்,படத்தில் இருந்து பார்த்தால் ஒரு 4"x2" மரத்தில் போட்டுள்ளது போல் உள்ளது.இது தான் அந்த பீம் Design ஆ!
ஆ! ஆ!
பூனைப் பிச்சைக்காரன் பொம்மை' இருக்கு! நம்ம ஜிகே மூஞ்சியேதான
அநியாயத்துக்கு வாரியிருக்கீங்க.
ஜீகே.. Pl take note.

said...

வாங்க குமார்.

அடடா.......... இப்படி நீங்க நினைக்கும்படிப் பண்ணிட்டேனா?

எல்லாம் ஒரு கோபத்துலே விட்டுற வார்த்தைகள்தான்(-:

இங்கே 'சித்தாள்' வேலைக்குத்தாங்க இப்படி ஸ்கூல் ட்ராப் அவுட்கள்
ஒரு ஆறுவாரம் 'ஆக்ஸெஸ் கோர்ஸ்' சேர்ந்துட்டு, எதாவது பில்டர்கிட்டே
வேலைக்குச் சேர்ந்துக்குவாங்க. குறைஞ்சபட்சக் கூலி நிர்ணயம் இருக்கறதாலே
காசு கிடைச்சுருது. வேலையில் கவனம் இருந்துக் கத்துக்கிட்டாங்கன்னா..........சரி.
இல்லேன்னா நம்ம க்ளிண்டன் கதைதான்.

ஆமாங்க, பீம் பீம்ன்னுட்டு ஒரு தடியான மரம்தான் போட்டுருக்காங்க. அதுக்குமேலே இன்னொரு சட்டம்
இருக்காம்.

said...

//ஒரு ஆறுவாரம் 'ஆக்ஸெஸ் கோர்ஸ்' சேர்ந்துட்டு, எதாவது பில்டர்கிட்டே
வேலைக்குச் சேர்ந்துக்குவாங்க. //

ஆறு வாரம் ஆக்ஸெஸ் கோர்ஸ் போன இங்க அவனவன் டேட்டாபேஸ் எக்ஸ்பேர்ட் அப்படின்னு சொல்லிக்கறான். ஆனா இவனுங்க கதையும் நம்ம க்ளிண்டன் கதைதான்!!

said...

G(opal)K(rishnaa)வை
நீங்க ரொம்பத்தான் வார்ரீங்க

said...

வாங்க கொத்ஸ்.

இந்த ஆறுவார ஆக்ஸெஸ் கோர்ஸ் வெவ்வேற துறைகளில் இங்கேயும் இருக்கு. சில கடைகளில் இலவச
கம்ப்யூட்டர் க்ளாஸ்கூட நடத்தறாங்க.

said...

வாங்க சிஜி.

'காணும் பொருள் யாவும் அவன் தோற்றம்':-)))))

ஜிகே இப்பெல்லாம் நம்மளை நல்லா ஏமாத்தத் தெரிஞ்சுக்கிட்டது.
அதைப் பற்றிய பதிவொண்ணு வந்துக்கிட்டு இருக்கு:-)