Wednesday, September 05, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 18

17/10
ஒரு 10 மணிக்குப் போனோம். நம்ம ' (skip) ரப்பிஷ் பின்'னுக்குள்ளே ஒரு ஆள் அவரோட 'ட்ரையிலர்'லே இருக்கற குப்பையை யெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கார்! யாருன்னு கேட்டா, அவர்தான் திங்கட்கிழமை செங்கல் வைக்கப் போறவறாம்! எங்கேயோ இருக்கற குப்பையைக் கொண்டுவந்து நம்ம தொட்டியிலே போடறார். கண்டிக்க முடியாத நிலமை! அவர் தயவு வேணுமே. அவர்தானே செங்கல் வைக்கப்போறவர்! வாயைக் கஷ்டப்பட்டு மூடிக்கிட்டு இருந்தோம்! ரெண்டு நாளைக்கு ஒரு முறை இந்த ஸ்கிப் கொண்டுவந்து வச்சு, இங்கே வேலை நடக்கும்போது வரும் குப்பைகளை வாரிக்கிட்டு போற ஏற்பாடு. இதுக்கு பயங்கரக் காசு வேற. சிட்டிக் கவுன்ஸில் குப்பையில் இதைச் சேர்க்க முடியாது. ரொம்ப தூரம் கொண்டுபோய் அதுக்குன்னு இருக்கும் இடத்தில் டம்ப் செய்யணுமாம். இந்த செலவெல்லாம் நாம்தானே செய்யணும்? வீடு நம்மதாச்சே.


18/10
வரப்போகுதுன்னு சொன்ன செங்கல்லும் வரலே கருங்கல்லும் வரலே. நம்ம எலெக்ட்ரீஷியந்தான் ரொம்ப 'சின்சியரா' வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. பசங்க 'பிங்க் பேட்ஸ் Pink Batts' போட்டுக்கிட்டு இருக்குங்க! கருப்பு பேட்ஸ்ம் போட்டிருக்கு. இது சத்தத்தைக் கட்டுப் படுத்தறதுக்கு! இதை, குளியலறைக்கு ரெண்டு பக்கமும் இருக்கற அறைகளிலேயும் போடணும். அப்பத்தான் அங்கே தங்கறவங்களுக்குத் தண்ணீர் சத்தம் கேக்காது! நம்ம லிவிங் ஏரியாவிலிருந்து மற்ற ரெண்டு படுக்கை அறையைப் பிரிக்கும் சுவருக்கும் இந்தக் கறுப்புபேட்ஸ் போடறோம். இங்கே இருக்கும் டிவி சத்தம் அங்கே தூங்கறவங்களுக்குக் கேக்கக்கூடாது.



இந்தப் 'பிங் பேட்ஸ்'ன்றது பார்க்கறதுக்குப் பஞ்சுமிட்டாய் கலரில் அச்சுஅசலாய் அப்படியே பஞ்சுமிட்டாய் போலவே இருக்கு. இதுலே 80% கண்ணாடி இழைகள். மறுசுழற்சிக்குப்போற கண்ணாடிகளில் இருந்து செய்யறாங்க. இது குளிர்காலத்தில் சூட்டைத் தக்க வைக்கும். வெயில் காலத்தில் வீட்டின் உள்புறத்தைக் குளிர்ச்சியா வச்சிருக்குமாம். நியூஸியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இதை அனுமதிச்சிருக்கு.(Pink Batts Ultra thermal insulation is made from up to 80% recycled glass and is the only insulation in New Zealand to receive the “Big Tick” from Environmental Choice New Zealand) இது இப்ப ஒரு ரெண்டுமூணு வருசமாத்தான் இங்கே பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. நம்ம பழைய வீட்டில் இது கிடையாது. அங்கே நாங்க வீட்டைப் புதுப்பிச்சப்ப, மேலே சீலிங்குக்கு மட்டும் போட்டோம்.







சாயங்காலம் நம்ம கிச்சன் கிங் வந்து 'லாண்டரி டிஸைன்' காமிச்சு அதுக்கு 'பேரம்' பேசிட்டுப் போனார். நுழையறப்பயே சொல்லிட்டார் இதுலே ஒண்ணும் குறைக்கவே முடியாது, 1700 டாலர்தான். சரின்னு சொல்லிட்டு நாங்க அதை 1550 ஆக ஆக்கினோம்:-) ஊஞ்சப் பலகையும், இதுவும் சேர்த்து 2100 முடிவாச்சு!

19/10
காலையிலேயே இவர் போய் முன்வாசக் கதவுக்குள்ள பூட்டு, கைப்பிடி கொண்டுவந்தார். நாம இதையெல்லாம் ஆர்டர் கொடுத்தது 'நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ்' கடையிலே. இவர் கொண்டு வந்தது ( அவுங்க கொடுத்தது) பாக்கறதுக்கே நல்லா இல்லே. இவ்வளவு செலவு செஞ்சு கட்டற வீட்டுக்கு முன்கதவுலே பொருத்தறதுக்கு ஒரு அழகு வேண்டாமா? உடனே ·போன் செஞ்சு, 'எனக்குப் பிடிக்கலே. நேரிலே மத்தியானம் வரேன்'ன்னு சொன்னேன்.

மத்தியானம் லைப்ரரி ட்யூட்டி முடிச்ச பிறகு, போனோம். நாம கேக்கற கலருலே (Iridium) இல்லையாம். சரின்னு, தங்க நிறத்துலே ( பித்தளைதான்! ஆனா கருக்காம இருக்குமாம், ஆயுள்காலம் வரை! யாருடைய ஆயுள்காலம்ன்னு தெரியலை?) தேர்ந்தெடுத்தோம். அதுக்கு 'மேட்ச்சிங்'காக ஸ்டடி ரூமுக்கும் எடுத்தோம். தங்கமாச்சே. எல்லா இடத்துக்கும் பொருந்துமே என்ற எண்ணம்தான்!

மத்தியானம் 1.30க்கு குளியலறைச் சுவத்துலே 'டைல்ஸ்' பதிக்கறவர் வந்து பாக்கிறேன்னு சொல்லியிருந்தார். வந்தார். எல்லாத்தையும் பார்த்துட்டு,அளந்து என்ன செலவு ஆகும்ன்னு சொல்வார்.


இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவராம்! நம்ம பேங்க்லே இருக்கற ஒருத்தரோட கணவர். அவர்கிட்டே எங்கே இதெல்லாம் செய்யப் படிச்சாருன்னு கேட்டோம்.
எனக்கு ஒரு தோணல் என்னன்னா, ஈரான் நாட்டு ஆளுங்க தானே நம்ம 'தாஜ்மஹால்' கட்ட வேலை செஞ்சாங்க. எத்தனை அருமையான கட்டிட வேலைப்பாடுகள் உள்ள 'மசூதிகள்' பார்த்திருக்கோம். இந்த கல் பதிக்கற வேலைகளிலே இவுங்க கில்லாடிகளாச்சே!


இவருடைய முன்னோர்கள் யாரோதான் 'தாஜ்மஹால்' கட்டறப்ப வேலை செஞ்சார்' அப்படின்னு சொல்வார்ன்ற நப்பாசைதான்:-)


இங்கே நியூஸிலாந்துலேதான் இந்த வேலைக்குப் படிச்சாராம்! இதுக்கு முன்னாலே ஈரான்லே என்ன தொழில் செஞ்சாருன்னு கேட்டேன். தங்கநகைக் கடை வச்சிருந்தாராம்! துபாய்லேயும் 10 வருசம் நகைக்கடைத் தொழில் தானாம்.

பொன்னைக் கையாண்டவர் இப்ப டைல்ஸ் கையாள்கிறார்! தங்கக் கை! என்ன கூலி சொல்றாருன்னு பார்க்கலாம்!


வீட்டு முகப்புலே வர்ற வளைவு வேலை நடக்குது. ப்ளைபோர்டுலே வளைச்சுப் பாத்தாங்களாம். வளைவு சரியா வராம உடையுதாம்!இதெல்லாமே மொத மொத நம்ம வீட்டுலெதான் வேலை செஞ்சு கத்துக்கறாங்க! இதுவரை இப்படி யாருமே இந்த டிஸைனு எல்லாம் போடலையாமே! இந்தியர்களுக்கு முதல்முதலா வீடு கட்டறாங்களாம்.

அப்படியே அங்கேயிருந்து 'ஹேக்ளி அலுமினியம்' போனோம். சாமியறைக்குக் கதவு போடறதுலே ஒரு ப்ரச்சனை இருக்கு! முதல்லே.......... போடணுமா வேண்டாமான்னே விவாதம்! எனக்குப் போடணும். 'காசு குடுக்கற மவராசனுக்கு' வேணாமாம்!

என் கட்சியை விலாவரியா எடுத்துச் சொல்லி ( காதுலே விழுந்ததான்னே தெரியாது!) போடணும்னு 'முடிவு' செஞ்( சேன்)சோம்!


மேலே மட்டும் கண்ணாடி, கீழே மரம் என்று சொல்லி ஒரு பை ஃபோல்ட் எட்டுப் பகுதி போட, விலை சொல்றேன்னு சொல்லியிருக்காரு 'ப்ரெண்டன்'. நாலு மீட்டர் நீளம். அரை மீட்டர் அகலமா எட்டு மடிப்பு வரணும்.


சாயந்திரம் பெயிண்டர் வரேன்னு சொன்னதாலெ நான் அங்கே 5 மணிக்குப் போனேன். அஞ்சேகாலுக்கு இவரும் வந்தார். ஆனா பெயிண்டர்தான் வரலே. அவுங்க வீட்டுக்கு ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொல்லிட்டு அஞ்சரைவரை காத்திருந்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.


எனக்கு ஒரே கவலையா இருக்கு, இந்த புது வீட்டிலே 'வெயில்' சரியா வரலையேன்னு! இதுவரை ஒரு நாளின் பலநேரங்களில் போய்ப் பார்த்துட்டேன். சாயங்காலம் வெயிலு வீட்டுக்கு முன்னாலே இருக்கற ஃபோயர் பகுதிக்கு வருது. வீட்டுக்குள்ளே 'நோ வே' (-:


ஆறரைக்கு ஃபோன் வருது, அவரு மறந்துட்டாராம்! மன்னிப்பு கேட்டுகிட்டார்! இப்ப ஏழு மணிக்கு வரேன்னு சொன்னதாலே மறுபடி போனோம். வந்தார். எல்லாம் சுத்திப் பார்த்தார். கொஞ்சம் நடுவயது ஆள். பொறுப்பா செய்வாருன்னு நினைக்கிறேன்.கோபால் அவர்கிட்டேயும் ஒரு 'ப்ளான்' கொடுத்தார். இதுவரைக்கும் நம்ம வீட்டு 'ப்ளான்' கிடைக்காத ஆளுங்களை விரல்விட்டு எண்ணிரலாம்!


இந்த வாரம் இங்கத்து பிரதம மந்திரி இந்தியா விஸிட் போயிருக்காங்க! மொதல்லேயே தெரிஞ்சிருந்தா, நம்ம வீட்டுப் ப்ளானை ச்சும்மா ஒரு பில்லியன் ப்ரிண்ட் எடுத்து, இந்தியாவுலே எல்லோருக்கும் விநியோகம் செஞ்சிருக்கலாம்! நல்ல சான்ஸைக் கோட்டை விட்டுட்டோம்! :-)

'மிட்லேண்ட் ப்ரிக்' செங்கல்லுங்க வந்து இறங்கியிருக்கு. நடுவுலே ஓட்டை ( வெற்றிடம்) உள்ள பெரிய கல்லுங்க. ஒரு பெரீஈஈஈஈய்ய்ய'ட்ரக்' லே வந்து இறங்கியதாம். இவரு சொன்னாரு!


20/10
இன்னைக்கு 'ஹீட் பம்ப்' போடறதுக்கு பைப் லைன் போட ஆளுங்க வராங்க! அஞ்சாறு 'ப்ரிக் லேயர்'ங்க வந்தாங்களாம்!வேலை பரபரன்னு நடக்குதுன்னு இவர் வந்து சொன்னாரு.




சாயந்திரம் போனா, சில இடத்துலெ ரெண்டு மீட்டர் உயரத்துக்கும், சில இடங்களிலெ அதுக்கும் கூடுதலாவும் செங்கல்லை வச்சுப் பூசியிருக்காங்க!இந்த வேகத்துலெ போனா 3 நாளுலே முடிஞ்சிரும்னு நினைக்கிறேன். நம்ம பில்டரும் கராஜ்க்கு மேல வர்ற வளைவை செஞ்சுகிட்டு இருக்கார்.


கீழே உள்ள படம் கேவிட்டி ஸ்லைடிங் கதவு. நம்ம கொத்ஸ்க்கான ஸ்பெஷல்:-)


தொடரும்.......................


18 comments:

said...

டீச்சர், கேவிட்டி ஸ்லைடிங் கதவு படத்திற்கு நன்றி.

திறக்கும் பொழுது இரு பக்கங்களில் இருக்கும் இடத்திற்குள் சென்று விடும் இல்லையா?

கருப்புப் பேடுக்கும் பிங்க் பேடுக்கும் என்ன வித்தியாசம்? அது என்ன சில இடங்களுக்கு அது மத்த இடங்களுக்கு இது? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.

said...

ஆஹா , உங்க ஊருல இப்படி தானா , வீட்ட கட்டிட்டு செங்கல் சுவர் வைக்கிறாங்க, எல்லாம் நம்ம ஊருக்கு உல்டாவா இருக்கே!(இந்த செங்கல் வைப்பாங்கலா இல்லையானு இத்தனை நாளா வெய்டிங்க்)

எனக்கு ஒரு சந்தேகம் செங்கல் வைத்து சுவர் கட்டிவிட்டு கூறை அமைத்தால் தானே அதன் எடை சுவற்றில் உட்காரும் , இப்போ எப்படி , சுவரும் ,கூறையும் தனி தனியேவா?

Anonymous said...

வீட்டுக்கு முன்னாடி பில்லர்ஸ் இருக்கு போல இருக்கு. இந்த பில்லர்ஸ் அழகா இருக்கும் ஆனாஅவ்வளவு உறுதியா இல்லன்னு சொல்லறாங்களே.

said...

வாங்க கொத்ஸ்.

இந்த பேட்ஸ் சமாச்சாரத்துலே எனக்குத் தெரியவந்தது என்னன்னா,
பிங் கலர்லே இருக்கறது ஹீட் லாஸ் தடுக்கவும், கருப்பு பேட்ஸ்,
நாய்ஸ்(??) கண்ட்ரோல் செய்யவுமுன்னு சொன்னதுதான்.

கேவிட்டி டோர்ஸ் இடம் அடையாம இருக்கவும்,
நிறைய மக்கள்ஸ் வந்துட்டு, உக்கார இடம் வேணுமுன்னா
கதவை முழுசாத் தள்ளிட்டா ஒரே ஹாலா தோற்றமளிக்கும்
காரணத்துக்கும்தான்.

said...

வாங்க வவ்வால்.

செங்கல் வைக்கற பகுதி வந்தவுடன் உங்களைத்தான் நினைச்சேன்.
கரெக்ட்டா நீங்களும் ஆஜர்:-)

கூரையின் கனம் தாங்கறது வீட்டுக்குள் அடிக்கும் மரச்சட்டங்கள்தான்.
ரொம்பவே திக்கா இருக்கும் கட்டைகள். சுவரும் இப்பக் கூடுதல் சப்போர்ட்டுக்கு
இருக்கு. எதாவது ரினொவேஷன் செய்யறதா இருந்தா,
ஒரிஜனல் ப்ளானில், வெயிட்பேரிங் வால்ஸ் எது, எங்கே இருக்குன்னு
பார்த்துக்கிட்டுத்தான் செய்யணும்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இந்தத் துண்கள் எல்லாம் 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' லே செய்யறதுதான்.
கனம் தாங்காது. அதுக்குத்தான் தூணுக்குள்ளெ மரக் கட்டை, க்ளாம்ப்ஸ்.
அடிவாரத்துக்கு சிமெண்ட், கம்பி எல்லாம் வச்சு காங்க்ரீட் போட்டு இருக்கும்.

நிறைய வீடுகளில் செங்கல் வச்சுத் தூண் எழுப்பிடுறாங்க, ஒரே வேலையா. நம்மது
அழகு பார்த்தா................... நொச்சுப்பிடிச்ச வேலை(-:

said...

அந்த ஈரான்காரர் தாஜ்மாகால் வேலை தன் முன்னோர்கள் செய்தார்கள் என்று சொல்லவேண்டுமா? ஆசை தான்.
இன்னும் 2~3 வருடத்தில் கிரிஸ்சர்ச் முழுவதும் நான் தான் துளசி கோபால் வீட்டை கட்டினேன் என்று சொல்லப்போகிறார். :-)
பிளான் தான் எல்லோரிடமும் இருக்கே அதோடில்லாமல் வீட்டு ஹேண்டில் எல்லாம் ரிஜெக்ட் பண்ணி கடைகாரன் வயிற்றில் புளியை கரத்திருக்கிறீர்கள்.
சில இடங்களில் ஆங்கில வரிகள் இருப்பாதால் போன பதிவில் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் கிடைத்தது.
எனக்கென்னவோ அந்த செங்கல்ச்சுவர் ஒரு பாதுகாப்பு/அழகு/Temperature Control க்கு மட்டும் என்கிற மாதிரி தோனுகிறது.
உங்கள் முழு வீடும் மரத்தில் தான் நிற்கிறது.
படத்தை எல்லாம் வைத்து ஒரு VCD பண்ணிவிடலாம் போல் உள்ளது.
எப்படி இருக்குமா? மாதிரிக்கு சிங்கை பெருமாள் கோவிலை பாருங்க.இங்கு

said...

வாங்க குமார்.

நீங்க சொன்னது அரிதான். வீடு முழுக்க மரம்தான் தாங்குது.
செங்கல் வைக்கறது ஒரு ஆப்ஷன் தான். சிலர் வெளியேயும்
மரப்பலகைகளைச் சட்டங்களா அடிச்சுடறாங்க. சிலர் செங்கலோட
நிறுத்திக்கறாங்க. இன்னும் சிலர்............. நம்மைப்போல இன்னும் வேண்டாத
வேலையெல்லாம் இழுத்துவிட்டுக்கறோம்:-))))

வெள்ளிக்கிழமைக் கோயில் தரிசனம் கிடைச்சது. அதுக்கு
ரொம்ப நன்றி. உங்க மென்பொருள் ரொம்ப நல்லாப்
பயன்படும்போல இருக்கே!

இனி அதுக்குள்ளேயும் புகுந்து வரணும். புரியாமப் போறப்
பகுதிக்கு உங்க உதவி வேணும்.

said...

இனி அதுக்குள்ளேயும் புகுந்து வரணும். புரியாமப் போறப்
பகுதிக்கு உங்க உதவி வேணும்.

எனக்கு தெரிந்த அளவு உதவுகிறேன்.

said...

பொன்னைக் கையாண்டவர் இப்ப டைல்ஸ் கையாள்கிறார்! தங்கக் கை! என்ன கூலி சொல்றாருன்னு பார்க்கலாம்!

Super Thulasi:)))
Ultimate!!!!!

said...

இந்த வாரம் இங்கத்து பிரதம மந்திரி இந்தியா விஸிட் போயிருக்காங்க! மொதல்லேயே தெரிஞ்சிருந்தா, நம்ம வீட்டுப் ப்ளானை ச்சும்மா ஒரு பில்லியன் ப்ரிண்ட் எடுத்து, இந்தியாவுலே எல்லோருக்கும் விநியோகம் செஞ்சிருக்கலாம்! நல்ல சான்ஸைக் கோட்டை விட்டுட்டோம்! //

haiyo haiyo:))
Enakkuk kaal vali kooda maRanthu pochchu.

said...

என் கட்சியை விலாவரியா எடுத்துச் சொல்லி ( காதுலே விழுந்ததான்னே தெரியாது!) போடணும்னு 'முடிவு' செஞ்( சேன்)சோம்//

Ithula unGaLukku doubt veRa:)))
Pramaadham.

enna oru azhakaana narration Thulasi.
Thank you so much for sharing...it is so nice.

Vaduvooraar link poyip paarkkiREn.

said...

ரெண்டு நாள் காட்டுக்கு போய்ட்டு வாரதுக்குள்ள இவ்ளோ எழுதிட்டீங்க. போட்டோக்கள்ல பார்க்கறதுக்கு அழகழகா இருக்கு. நான் இடம் வாங்கி வீடு கட்டுன அழகை இந்த மாதிரி உங்களை போல எழுதலாம்தான். இதை விட சுவாரஸ்யமான காமெடி அது.
அப்புறம் நீங்க குறிப்பிடுற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கவே இந்த மரை மண்டைக்கு போதும் போதும்னு ஆயிடுது.
ஆடுமாடு

said...

வாங்க வல்லி.

தாமதமா வந்து பதில் சொல்றதுக்கு மன்னிக்கணும்.
விக் எண்ட் வந்தாவே பயித்தியம் பிடிச்ச ஓட்டம்தான்.
ஏன்? எதுக்கு? காரணமே வேண்டாம் நமக்கு:-)))))
வடுவூரார் லிங்க் நல்லா இருக்கு.
அதையும் ஒரு கை பார்க்கலாமா? :-)

said...

வாங்க ஆடுமாடு.

காட்டுக்கு...............?

ஓஓஓஓஓஒ மேய்ச்சலுக்கா?

நிறைய ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ப்'படுத்த'த் தெரியலை. அதனால் அவைகளையும்
தமிழ்ச்சொற்களாகவே அங்கீகாரம் பண்ணிட்டேன். அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி இல்லையா? :-)

//நான் இடம் வாங்கி வீடு கட்டுன அழகை இந்த மாதிரி உங்களை போல
எழுதலாம்தான். இதை விட சுவாரஸ்யமான காமெடி அது.//
காமெடியா? அப்பக் கட்டாயம் எழுதுங்க. சொந்த வாழ்க்கையே சோகமா இருக்கும்போது,
நமக்குக் கடவுள் அனுப்புற சிரிப்பு நடுநடுவிலே இப்படித்தான் அமைஞ்சிருது:-))))

சிரிச்சு நாளாச்சு. சீக்கிரம் எழுத ஆரம்பியுங்க:-)

said...

துளசி வீட்டில் விருந்தினர் வருகை லேட்டா லேட்டாத்தான் எல்லாம் படிக்கிறேன் வீடு நல்லா வளர்ந்துருச்சே!

said...

வாங்க முத்துலெட்சுமி.

விருந்தினரைக் கவனிங்கப்பா முதல்லெ. வீடு என்ன ஓடியாப் போகப்போகுது? :-)))))

டில்லியில் இப்ப இலையுதிர்காலம், அருமையா இருக்குமே.

said...

நான் காட்டுக்கு போனேன்னு சொன்னது நிஜக் காட்டுக்கு. மேய்ச்சலுக்கு இல்லை. அதுக்கு ரெண்டு மூணு நாள் லீவு. நம்ம ஏரியா வந்து நீங்க வாசிக்கலையோ காட்டனுபவத்தை.
ஆடுமாடு