Tuesday, July 10, 2007

பனி நீராவி

வரேன், வந்துக்கிட்டே இருக்கேன், இதோ அதோன்னு பயங்காட்டிக்கிட்டு இருந்த குளிர் கடைசியில் வந்தேவந்துருச்சு. ஜூன் மாசம் தொடங்கி ஒவ்வொரு நாளும், 'இன்னிக்குப் பரவாயில்லை'ன்னே சொல்லிக்கிட்டு இருந்தேன்.நியுஸியில் அதிகாரபூர்வமான குளிர்காலம் தொடங்கறது ஜூன் முதல்தேதி. இது மூணு மாசத்துக்கு, ஆகஸ்ட் வரை இருக்கும்.ஆனா நமக்கு மட்டும் இந்தக்காலம் இன்னொரு ரெண்டு மாசம், முன்பாரம் பின்பாரமா 'மே'யும், செப்டம்பருமா நீட்டிரும்.குளிர் அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் கழுதைன்னு விடமுடியாது. 'பவர் பில்' வரும்போது உங்க மயக்கத்துக்கு நான் கேரண்டி:-) இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் வழக்கம்போல நம்ம 'தாமரைக்குளம்' பக்கம் கண்ணு போச்சு.கோகியும் வேற, வெளியே அவனுக்காகவும், மற்ற உயிர்களுக்காகவும் வச்சுருந்த தண்ணீர் பாத்திரத்துக்குப் பக்கத்துலே சோகமே உருவான முகத்துடன், ஒரு பரிதாபப் பார்வையை நம்ம மேல் வீசினான். எல்லாமே உறைஞ்சுகிடக்கு. தாமரைக்குளத்தில் புதுசா வச்ச தண்ணிப்பம்பு 'ஹீனமா' பொழியுது.
இந்தமாதிரி நாட்களில் சூரியன் மட்டும் வந்துருச்சுன்னா அன்னிக்கு பூலோக சொர்க்கம்தான். ஆஹா.........வெயில் எவ்வளோ இதமா இருக்கு. நம்ம வீட்டுப் பக்கம் மெயின் ரோடிலே இருந்து பார்த்தாவே, பவுடர் பூசிய மலை பளிச்னு தெரியும். அந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும் 'வா வா பக்கம் வா'ன்னு கூப்புடும். பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பியாச்சு.வழியிலேயே இருக்கும் நம்ம கிர்வி பிள்ளையார் கோயிலுக்கு முதல்லே போகணும். ஒரு 27 வருஷமாகுது இதைக் கட்டி. சலசலன்னுஓடும் கால்வாய். அதுக்கு நடுவிலே ச்சின்ன மண்டபம். மண்டபத்துக்குள்ளெ நுழைஞ்சு ஓடும் தண்ணீர். பிள்ளையார் கோயிலுக்கு இதைவிடப் பொருத்தமான இடம் வேற எங்கே கிடைக்கும்? அந்த மண்டபத்துலே தண்ணீர் மட்டத்துக்கு மேலே ஒரு பலகைபோட்டு அதுமேலே பிள்ளையாரை வச்சு வருசம் 19 ஆச்சு. இது என் மனக்கோயில் பிள்ளையார்.
கேண்டர்பரி ப்ளெயின்ஸ்க்கு கொவாய் நதியிலே இருந்து தண்ணீர் கொண்டு வரலாமுன்னு ஐடியாக் கொடுத்து அதைச் செயல்படுத்த எல்லா ஏற்பாடும் 1877- 1880 களில் செஞ்ச De Renzie James Brett அவர்களின் செயலைப் பாராட்டி 1980-ல் வச்ச நினைவுச்சின்னம். நாளைய மக்களுக்காக இன்றைய மக்கள் செஞ்சதுன்னு ஒரு plaque. நான் இந்தப்பக்கம் தண்ணியைப் படமெடுக்கும்போது, கெமாரவை சட்னு எங்கிட்டே இருந்து வாங்கி அவசரமா இன்னொரு தண்ணியைப் படம்எடுக்கறார் இவர். சரி போட்டும். ஆளுக்கொரு தண்ணீர்:-)கிர்வியிலே இருந்து டார்ஃபீல்ட் ஒரு பதினைஞ்சு நிமிஷ தூரம்தான். புதுசா நாலைஞ்சு கடைகள் வந்திருக்கு. இதுலேஒரு பெயிண்ட் விற்கும் கடையும் சேர்த்தி. வருசாவருசம் பெயிண்ட் திருவிழா நடத்தாம இருக்கும் வீடுகளை இங்கே விரல்விட்டு எண்ணிறலாம். முக்காலே மூணேயரைக்கால் வீசம் 'தன்கையே தனக்குதவி' என்றதாலே கோடை வந்தவுடன், வீட்டுப் பராமரிப்புன்னு குறைஞ்சபட்சம் ஒரு சுவத்தையாவது பெயிண்ட் அடிக்கலைன்னா எங்களுக்கு இந்த ஜென்மம் சாபல்யமாகாது.
ஓசை செல்லாவின் புகைப்படவகுப்பில் சேர்ந்துருக்கோமே, வீட்டுப் பாடத்துக்கு நாலு படம் எடுத்துக்கலாமுன்னு,அசையாத சப்ஜெக்ட்டைப் பார்த்தால்.........என் 'கண்ணுக்கே சரியான கோணம் இல்லை. இன்னும் கொஞ்சம் போகலாமுன்னு போய்க்கிட்டு இருக்கோம். வழியிலே எல்லாம் கறுப்பு ஐஸ் நல்லவேளை உருகி இருந்துச்சு.' மவுண்ட் ஹட்' க்குப் போறவங்க செயின் போட்டுக்குங்கோன்ற அறிவிப்பைப் பார்த்ததும் என்னையறியாமலேயே, 'கழுத்துலே சங்கிலி' இருக்கான்னு தடவிப் பார்த்துக்கிட்டேன்.

போனவருசம் 'க்ரே மவுத் போனப்ப ஸ்ப்ரிங் ஃபீல்ட் ரெயில் நிலையத்துலே இருந்து பனிமலைகள் கையெட்டும் தூரத்துலே இருந்த நினைவு வரவே, இன்னும் கொஞ்சம் தூரம்தானே? அங்கேயே போய் ஹொம்வொர்க் முடிச்சுக்கலாமுன்னு........................மெயின் ரோடிலே இருந்து வலது பக்கம், ரெயில் நிலையத்துக்குத் திரும்பும்போதே, எதோ சீன் மாறினாப்போல தரையெல்லாம் வெள்ளை.இளவெய்யிலில் மினுங்கும் பனித்தூள். ரெயில் நிலயத்து வாசலில் நாலு கார்கள். ஆஹா...........யாரோ வந்துருக்காங்க. அங்கே வேலைசெய்யற ஸ்டேஷன் மாஸ்டர், அவரோட உதவி ஆள், அங்கே இருக்கும் டீ ரூம் பார்த்துக்க ஒரு ஆள்னு மூணு பேரோட மூணு வண்டியைத் தவிர்த்து இன்னொரு வண்டி நிக்குதுன்னா....................என்னமோ நடக்குது!! இப்ப நம்ம வண்டி வேற. என் கணக்குத் தப்பலை. 2 +2 ! கூட்டமா இருக்கோம். ( நாலு பேர் இருந்தால் கூட்டம் எனக் கொள்க)

ப்ளாட்ஃபாரத்துலே ரெண்டுபேர் நிக்கறாங்க. கையிலே கெமரா இருக்கு. நாமும் அங்கே போய்ப் பார்க்கலாமுன்னா,ப்ளாட்ஃபாரம் டிக்கெட் வாங்கலையேன்னு கோபால் சொல்றார். 'அதெல்லாம் கவலைப்படாதீங்க. இங்கெல்லாம் ப்ளாட்ஃபாரம் வரை வந்ததுக்கு நமக்குத்தான் அவுங்க காசு கொடுப்பாங்க. கொடுக்கணும்.ஆமா'இருவரிடம் விசாரிச்சதுலே தெரிஞ்சது, இன்னிக்கு ஸ்டீம் ட்ரெயினாம். காலையில் இந்தப் போயிருக்கு. இப்பத் திரும்பி வரும் நேரமாம்.அதோ அங்கே தூரத்துலே புகை தெரியுது பாருங்க. வருசம் ரெண்டு முறை மட்டும் போகும் நீராவி எஞ்சின். எண்ணி நாலே பெட்டிகள்.ச்சிக்ன்னு வந்துக்கிட்டிருக்கு, வெள்ளைப் புகையோடு நம்ம ரயில் வண்டி. மூணு நிமிஷம் நிறுத்தினாங்க. எஞ்சினுள்ளே எட்டிப்பார்த்தேன்.நீராவியைப் பாழாக்க வேணாமுன்னு ஒரு கெட்டில் இருக்கு. சூடான காஃபி?


திகுதிகுன்னு எரியும் தீ, அதுக்குள்ளே நிலக்கரியை வாரிப்போடும் எஞ்சின் ட்ரைவர், அவருடைய முகம், உடுப்பு எல்லாம் அழுக்காக்கும் கறுப்புப் புகை, நிலக்கரி நிறைஞ்சிருக்கும் திறந்தவெளிப்பகுதின்னு ஒண்ணுமே இல்லை.
எஞ்சினைத் தொடர்வது 'மெயின்லைன் ஸ்டீம்'னு பேர் பொறிச்ச டாங்கர். அதுக்குள்ளே தண்ணீரைக் கொதிக்க வச்சு ஆவியாக்கி எஞ்சினை ஓட்டறாங்க. டீஸல் பயன்படுத்தறாங்களாம் அடுப்பெரிக்க! இப்பப் புரியுது ஏன் சுத்தமா இருக்குன்னு. செலவு இதுக்கு அதிகம் என்றதாலே 'ஸ்பெஷல் எக்ஸ்கர்ஷன் ட்ரிப்'ன்னு வருசத்துலே ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடுது.
வண்டி கிளம்புனதும் எல்லாருக்கும் டாடா காமிச்சு வழியனுப்பி வச்சுட்டுப் பார்த்தா........... உண்மைக்குமே கூட்டம்தாங்க.எதிர்வரிசையில் வேற ரெண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்களே!


ஹப்பா.......... எவ்வளோ நாளாச்சு இந்த நீராவி எஞ்சினைப் பார்த்து!!!! எவ்வளோ ஆவி.........

தெரிஞ்சிருந்தா வீட்டுலே இருந்த இட்லி மாவைக் கொண்டாந்துருப்பேன்.
ரயில் நிலையத்துலே இலவசமா எடுத்துக்கோன்னு மூணு புத்தகம். இங்கே அடுத்து இருக்கும் சுற்றுலாத் தலங்களைப்பற்றிய விவரங்களும், தெற்குத்தீவின் ஒரு பெரீய்ய்ய்ய போஸ்டரும் (88 x 62 அளவு). ஹூ....ம் இப்படி அள்ளி வீசுனா ஏன் ரெயில்வே இலாக்கா நஷ்டத்துலே ஓடாது?திரும்பிவரும்போது, போனவாரம் கப்பல், இந்த வாரம் ரயிலான்னு கேட்டார் கோபால். ஏன், அதுக்கு முந்தினவாரம் குதிரை ரேஸ் 'பார்க்கக் கிடைச்சது' மறந்துபோச்சான்னு கேட்டு வாய் மூடலை.......... முன்வண்டியில், குளித்த முடித்துத் தன் ஆறடிக் கூந்தலை ஹாய்யா வெளியே நீட்டிக் காயவைக்கும்அழகி/அழகன்/அழகு!


செல்லா, கொஞ்சம் பார்த்து மார்க் போடுங்க. 67 கிலோ மீட்டர் போய் எடுத்த படம்.
நம்ம கெமெரா லென்ஸ்லே கரும்புள்ளிகள் விழுந்துருக்கு. அதைப்போக்கும் உபாயம் என்னவோ?29 comments:

said...

i am the first?

said...

// இது என் மனக்கோயில் பிள்ளையார். //

இந்த வரிகளை வாசிப்பதற்கிடையில் கண்கள் அவசரமாக பிள்ளையாரைத் தேட... காணக் கிடைக்காமல்... ஏமாற்றம்தான் போங்கள் :-)))

வைசா

said...

குளிருக்குப்பயந்து வீட்டுக்குள்ள இருக்காம போய் போட்டோ புடிச்சதுனால "குளிரை வென்ற கோமகள்" பட்டம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது

said...

எதுக்கும் அந்த பிள்ளையார் கோவில் பக்கத்தில் ஒரு அரசமரம் ஒரு வேப்பமரமுன்னு வகைக்கு ஒண்ணா வெச்சுருங்க. அப்புறம் அந்த அரச மரத்தில் வேணா நாளையா மக்களுக்காக அப்படின்னு ஒரு போர்ட் வெச்சா நிறையா பேரு வந்து சுத்துவாங்க!! :))

said...

வாங்க சிஜி.

நீங்கதான் ஃபர்ஸ்ட்.

அப்படியே பதிவையும் படிச்சுட்டுப் போகணும். ஆமா.

said...

வாங்க வைசா.

நிஜக்கோயிலுக்கு இங்கே வழி இல்லாததால் நிறைய இடங்களிலே மனக்கோயில்களாக் கட்டி,
அதுக்குப் பேரும் வச்சுருக்கேன். நம்ம 'பே வாட்ச் புள்ளையார்' நினைவு இருக்குங்களா? :-))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

குளிருக்கு எவ்வளவுன்னு தான் பயப்படறது? இப்பெல்லாம் குளிர் விட்டுப்போச்சு:-))))
குறைஞ்சபட்சம் 'மால் வாக்கிங்' போகணுமே:-)

said...

வாங்க கொத்ஸ்.

அரசு, வேம்புக்கெல்லாம் இங்கே எங்கே போறது? பேசாம ஆப்பிள் மரம்தான் வைக்கணும்.
அதுவுமே ஒரு 'ஞானப்பழம்'தானாம்!!

said...

இந்த பதிவில் ஏகப்பட்ட இடங்களில் நகைச்சுவையை தூவி வைத்திருக்கீங்க.
2 பேர் இருந்தா கூட்டமா?
அந்த கருப்பு புள்ளி UFO வோ என்று நினைத்தேன்.
அதை எடுப்பது சுலபம்,அதற்கு முன்னால் என்ன மென்பொருள் இருக்கிறது என்று சொல்லுங்கள்.
காசு இல்லையா Gimp இறக்கிப்போட்டுங்க.அதற்கு பிறகு சொல்கிறேன்.

said...

மனக்கோயில் கிர்விபிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கடைசியா எப்ப செஞ்சீங்க..? :)

said...

திரும்பிவரும்போது, போனவாரம் கப்பல், இந்த வாரம் ரயிலான்னு கேட்டார் கோபால். ஏன், அதுக்கு முந்தினவாரம் குதிரை ரேஸ் 'பார்க்கக் கிடைச்சது' மறந்துபோச்சான்னு கேட்டு வாய் மூடலை.......... முன்வண்டியில், குளித்த முடித்துத் தன் ஆறடிக் கூந்தலை ஹாய்யா வெளியே நீட்டிக் காயவைக்கும்அழகி/அழகன்/அழகு!

//

இதல்லவோ போட்டோ. இது அல்லவோ அழகு. என்ன கொஞ்சம் குதிரை கொஞ்சம் வாலுனு தெரியுது. வெளிச்சம் பத்தலை. பிள்ளையார் வரைஞ்சுவச்சா கோவிச்சுக் கிடுவாங்களோ:))))

said...

வாங்க குமார்.

நம்மகிட்டே ஃபோட்டோ செண்ட்டர் & ஃபோட்டோ இம்ப்ரெஷன்4 இருக்கு.
ஒவ்வொண்ணா எடுத்து புள்ளிகளை நீக்கறதுக்கு சோம்பல்(-:

நான் கேக்கறது கெமெரா லென்ஸ்லே இருந்து புள்ளிகளை எடுக்க முடியுமான்னுதான்.

said...

வாங்க முத்துலெட்சுமி.


ஊருக்குப்போயாச்சா இல்லை இன்னும் ஊர்சுற்றல்தானா? :-)))))

ரொம்ப சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் 12 வருஷத்துக்கு ஒருதடவைன்னெல்லாம் இல்லை.
நினைச்சா அன்னிக்கே கும்பாபிஷேகம்தான். சிலசமயம் ஒவ்வொரு வாரமும்கூட இருக்கும்:-))))
எல்லாம் காலநிலையைப் பொறுத்து!

said...

வாங்க வல்லி.

அதான் மசமசன்னு இருட்டிக்கிட்டு வந்துச்சு. அதுலே திடீர்னு இதைப் பார்த்தோம்.
முன்னாலே நாலைஞ்சு வண்டிகள். தோதான ஆங்கிள் கிடைக்கலைப்பா(-:

அதெல்லாம் வரைய முடியுமா என்ன? புள்ளையார் புடிக்க **** ஆச்சுன்னா?

நேயடு இருக்கட்டுமுன்னு விட்டுறலாமா? :-)))))

said...

ரொம்ப ரொம்ப சூப்பருங்கோ, பளிச் நு வருது. நீங்க இந்த பாடத்துல பாஸ்! அடுத்த பாடம் படிக்கவேண்டும் இன்னும் சிலவற்றை சரியாகச்செய்ய... CVR இப்ப உங்களுக்கு அடுத்த க்ளாஸ்எடுப்பார்!

உதாரணமா அந்த வினாயகர் கோவில்.. கெட்டுக்கு வெளியேஎடுக்காமல் அந்த அழகான வளைவான பாதையில் கீழே உட்கார்ந்து பாதையோடுஎடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும்! மற்ற படங்களையும் பார்த்தேன். ரயில் வண்டி etc. ரொம்ப நல்லா வந்துருக்கு. கரும்புள்ளிக்கு ... லென்ஸுக்கு வெளியே இருந்தால்.. சாஃப்ட் காட்டன் + லென்S cleaning fluid ( available at all optical shops). உள்ளே இருந்தால் நம்மூரு வர்ரப்ப மெக்கானிக் கிட்ட குடுத்து க்ளீனிங் பண்ணலாம். இப்போதைக்கு அதைப்பத்தி கவலைப்படாமஎடுத்து தள்ளுங்க!

said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
படிக்காம பின்னூட்டமா?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//' மவுண்ட் ஹட்' க்குப் போறவங்க செயின் போட்டுக்குங்கோன்ற அறிவிப்பைப் பார்த்ததும் என்னையறியாமலேயே, 'கழுத்துலே சங்கிலி' இருக்கான்னு தடவிப் பார்த்துக்கிட்டேன்.//

புரியலையே டீச்சர்!!
மத்தபடி படங்கள் எல்லாம் போட்டு கன்னா பின்னான்னு அசத்தரீங்க!! :-)

வாழ்த்துக்கள்! :-)

said...

ஊருக்கு வந்தகையோட தான் சந்திப்பு பத்திய பதிவே போட்டேன்..வந்து இரண்டு வாரமாச்சு இன்னும் இதே கேள்வி கேட்கறீங்க்ளே துளசி..யதாஸ்தானத்துக்கு வந்தாச்சு .

said...

வாங்க செல்லா.

'பாஸ்' பண்ணி விட்டதுக்கு நன்றி.

லென்ஸ் க்ளினிங் பண்ணியாச்சு. (என் கண்ணாடிக்கு வாங்குனது இருக்கு)
ஒருவேளை உள்ளெ இருக்கோ என்னவோ(-:

said...

என்னங்க சிஜி,

நம்ம செந்தழல்பதிவுலே இருந்து நேரா வந்துட்டீங்களா?

படிச்சாச்சா? அப்ப வாயைத் திறக்கவே இல்லை? :-))))

said...

வாங்க CVR.

கன்னா பின்னா? அங்கே போய்ப் பாருங்க உங்களை எப்படிக் கன்னாபின்னா
ஆக்கி வச்சுருக்காரு நம்ம பாலாஜி! எல்லாம் இறைவன் செயல்.:-)))

ஆமாம், நீங்க இருக்கும் இடத்தில் பனி இல்லையா ?

இது 'டயருக்கான செயின்':-))))))

said...

முத்துலெட்சுமி,

சக்கரத்தாழ்வாரிகளுக்குக் கால் ஒரு இடத்தில் நிக்காதே......... அதனாலே
கேட்டுட்டேன்:-))))

said...

நான் கேக்கறது கெமெரா லென்ஸ்லே இருந்து புள்ளிகளை எடுக்க முடியுமான்னுதான்.
முடியும்.
மனதை திடப்படுத்திக்கிட்டு கடையில் கொடுத்தால்.
என்ன! அதை சுத்தப்படுத்த கேமிரா விலையில் பாதி தான் ஆகும்.
:-))

said...

அட! குளிரில் நடுங்கினாலும் கை நடுங்காத தெளிவான படங்கள். இரயிலுக்கே இங்க வழியில்ல நீங்க நீராவி இரயிலை பார்த்து எவ்வளவு நாளாச்சுன்னு சொல்றீங்க? ;-) கடைசி படம் சூப்பர் என்ன ஷாம்போன்னு அந்த குதிரை கிட்ட கொஞ்சம் கேட்டு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும் ;-)

said...

செல்லா உங்களுக்கு நூத்துக்கு நூறே
போட்டுடுவார். அவவள்வு அழகான
படங்கள்!!!நியூஸிக்கு விசிட் அடிக்கும்
ஆசையை தூண்டும் படங்கள்!!
//பவுடர் பூசிய மலைகள்...நீராவியை
வீணாக்காத கெட்டில்// ரசனையான
வரிகள்!!!

said...

"மூங்கில் இலை மேலே தூங்கும்
பனிநீரே!
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!!"
என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. போட்டோஸ் பார்த்து.

said...

குமார்,

நீங்க சொல்றதைப்பார்த்தா...........

பேசாம உங்க ஊருக்கு அடுத்தமுறை வரும்போது இன்னும் கொஞ்சம் புதிசான மாடல்
வாங்கிக்கலாம். இப்ப இருப்பது Sony Cybershot DSC P200.

said...

வாங்க ஜெஸிலா.

அந்த ஷாம்பூ நமக்குக் கட்டுப்படியாகுமா? :-)))))))

said...

வாங்க நானானி.

மூங்கில் இலைக்கு நானெங்கே போவேன்? அதான் மனசுலே வந்த பாட்டை அங்கேயே
நிப்பாட்டியாச்சு:-)))))

செல்லா பாஸ் பண்ணி விட்டுட்டார். அடல்ட் எஜுகேஷன்:-))))

இந்தப்பக்கம் வந்ததில்லைன்னா ஒருக்கா(ல்) வாங்களேன்.