Wednesday, July 25, 2007

மாதவன், கிருஷ்ணனா இல்லை அர்ஜுனனா?

'அடிப்பாவி'ன்னுதான் சொல்ல முடிஞ்சது விஷயத்தைக் கேள்விப்பட்டதும்.
சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப பிரெஷர் குக்கரைத் திறக்கும்போது அப்படியெ நீராவி அடிச்சு, முகம் கைகள் எல்லாம் வெந்து போச்சாம்.

கிளம்பிப்போனேன், பார்த்துட்டு வர்றதுக்கு.

'சம்பவம்' நடந்து பத்து நாள் ஆச்சாம். இப்ப எவ்வளவோ தேவலை.கடவுள் காப்பாத்திட்டார். முகத்துலெ அவ்வளவா இல்லை. ரெண்டு கையிலும் முழங்கைவரை காயம். இப்ப ஆற ஆரம்பிச்சுருக்கு. குளிர்காலத்துக்கு அதுக்கும் 'வறவற'ன்னு காய்ஞ்சுப் பிச்சுப் பிடுங்குதாம்(-:

சின்ன வயசுப் பொண்ணு. முகமெல்லாம் வெந்து போயிருந்தா? அடக்கடவுளே......... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. கவனமா இருக்கவேணாமா வேலை செய்யும்போது? கொஞ்சம் திட்டிக்கிட்டு இருந்தேன். 'தன் அவுர் மன் ஏக் ஜாகாமே ஹோனா ச்சாஹியே'!
( மேலே: உள்ளூர் கோயிலில் உள்ள விக்கிரகங்கள்)

ஹரேகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவங்க என்றதாலே........... தினமும் பூஜை வழிபாடுகள் எல்லாம் முடக்காமல் நடக்குதாம். அழகான ச்சின்ன விக்கிரகங்களை வச்சு வழிபடறாங்க.

இதுக்குள்ளே, நம்மைப்போலவே 'பார்த்துட்டுப்போக' வந்திருந்த இன்னொருத்தர் ( இவரும் இதே இயக்கத்தைச் சேர்ந்தவர்தான்) அங்கிருந்த டிவிடியைப் போட்டார்.

மகாபாரதம். குந்தியிடம் கர்ணன் விவாதிக்கும் ஸீன்.

இந்தியாவில் இது சீரியலா வந்தப்ப, எல்லாரும் விழுந்தடிச்சுப் பார்த்தாங்கன்னு அப்பக் கேள்விப்பட்டிருக்கேன்.அதுதானா இது? கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன் நல்லா கவனிக்க. கிருஷ்ணன் பாண்டவர்களுடன் போரைப்பற்றி ஆலோசனை செய்யும் காட்சி ஓடிக்கிட்டு இருக்கு இப்ப.
இவுங்களையெல்லாம் பார்த்ததும் மனம் 'திடுக்' அய்யய்ய...............வாழைக்காய் மூஞ்சிப்பா!

இதுலே குந்தியா வர்ற இளவயதுப் பெண்ணுக்கு, வெள்ளை விக் மட்டும் வச்சுக் கிழவியாக்கிட்டாங்க.மத்த நடிகர்களும் பாத்திரத்துக்குப் பொருத்தமா இல்லை. மனசு ஒட்டவே இல்லை. ஆனால்............ இதையா நம்ம மக்கள்ஸ் போற்றிப் புகழ்ந்துக்கிட்டு இருந்தாங்க? நம்மாக்களுக்கு என்னமோ ஆகிக்கிடக்கு போல.

கிருஷ்ணனா, நம்ம என் டி ஆரைத்தவிர வேற யாரையும் மனசு ஏத்துக்கமாட்டேங்குது. கர்ணன்,துரியோதனன்னு சொன்னதும் சிவாஜி கணேசனும், அசோகனையும் தவிர வேற யார்?

வழக்கமான என் புலம்பலைக் கேட்ட 'எங்க இவர்', 'எல்லாம் வடக்கத்தி முகம் என்றதாலெ இப்படி இருக்கு. நம்மூர் நடிகர்கள் நடிச்சிருந்தா ஒரு ஒட்டுதல் வந்திருக்குமு'ன்னு சொன்னாரா......... இப்ப அடுத்த யோசனை.
இந்தப் பாத்திரங்களுக்கு இப்போது இருக்கும் நடிகர்களில் பொருத்தமா இருக்கறவங்க யார் யார்? 'நூத்துக்கணக்கானவர்கள்' தேவைன்னு சொன்னாலும், முக்கியமானவங்களை மட்டும் பார்ப்போம்.

கிருஷ்ணன் வேடத்துக்கு நம்ம மாதவன். அர்ஜுனன் வேடம்கூட மாதவனுக்குப் பொருத்தமாக இருக்கும்.இப்ப மத்தவர்கள் யார் யார் ......யார்?
விக்ரம், அஜீத், ராஜ் கிரண், பரத், இவுங்கல்லாம் யார்?

சொல்லுங்கம்மா, சொல்லுங்கப்பா.

பீமன்= பொன்னம்பலம் ( கோபாலுக்குன்னு தோணுது பாருங்க!) :-))))))

48 comments:

said...

கிருஷ்னனுக்கு மாதவன் பொருத்தம். அர்ஜுனனுக்கு அஜித். கர்ணனுக்கு சூர்யா. துரியோதனனுக்கு விக்ரம். குந்திக்கு சரண்யா. பீமனுக்குப் புது ஆளத்தான் போடனும்.

முந்தி ஒரு நடிகரு இருந்தாரு. பேரு திடீர்னு நெனவு வரலை. அவருடைய மனைவி ஸ்டவ் வெடிச்சிருச்சு. காப்பாத்தப் போய் இவரும் போயிட்டாரு. அவரு பேரு மறந்து போச்சு. அவரு மகன் கூட சன் டீவில ஊரு ஊராப் போயி நீங்கள் கேட்ட பாடல் நடத்துறாரே.

Anonymous said...

பீமன் வேசத்துக்கு சரத்குமார்தான் பொருத்தம்னு தோணுது.(பொன்னியின் செல்வன்ல பழுவேட்டரையர் வேசத்துக்கு கூட சரத்குமார் சரியா இருப்பார்) கொஞ்சம் திடகாத்திரமா இருக்க வேணாமா? விதுரர் வேஷத்துக்கு சிவக்குமார்‍‍ சாந்தமான முகம். அஜீத் ‍ அர்ஜுன் வேசம் நல்லா இருக்கும்.

said...

பாஞ்சாலி-சினேகா

பீமனுக்கு சார் சொன்ன பொன்னம்பலம் சரிங்க.

அபிமன்யூ-அர்ஜூன்

said...

//பீமன்= பொன்னம்பலம்//

மன்சூர் அலிகான் கூட செட் ஆவாரு...
:)

said...

கிருஷ்ணனா, நம்ம என் டி ஆரைத்தவிர வேற யாரையும் மனசு ஏத்துக்கமாட்டேங்குது.
அப்படியா?
இங்கு ஒரு தடவை நடந்த பதிவர் கூட்டத்தில் நம் பதிவர் ஒருவரை பார்த்தேன்,கையில் புல்லாங்குழல் கொடுத்து ஒரு சின்ன மயில் தோகையை தலையில் வைத்து (மேக்கப் கூட தேவையில்லை) விட்டால் போதும்.அப்படியே கிருஷ்ணன் தான். அப்போது நடந்த மீட்டில் இதையே பாதி நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,அது எப்படிப்பட்ட வசீகரமான முகம் என்று.
அந்த முகம் 3" நீளம் உள்ள ஊது குழலை ஊதியபோது மட்டும் என் யோஜனையை மாற்றிக்கொண்டேன்.

said...

//நம் பதிவர் ஒருவரை பார்த்தேன்,கையில் புல்லாங்குழல் கொடுத்து ஒரு சின்ன மயில் தோகையை தலையில் வைத்து (மேக்கப் கூட தேவையில்லை) விட்டால் போதும்.அப்படியே கிருஷ்ணன் தான்//

குமார் சார்...என்னங்க போற போக்கில பொடலங்காய கொடுத்துட்டுப் போறீங்க? :-)
சஸ்பென்ஸ் எல்லாம் வேனாம்! யாருங்க அவரு! கண்ணன் பாட்டு பதிவுகளுக்கு இஸ்துக்கினு வாங்க!

டீச்சர்.
கோபால் சார் சொன்ன பொன்னம்பலம் சூப்பர் மேட்ச்...
ஒத்துக்குங்க!

சரி சரி ஒங்க வீட்டுக்கு வந்தா ஒரு வாய் காபியாச்சும் கிடைக்கணும்-ல?
இருங்க வேற ஆளைச் சொல்லரேன்!
பீமனுக்கு, ஏன் பிரகாஷ் ராஜைப் போடக் கூடாது?

கிருஷ்ணன் = மாதவன்
அர்ஜுனன் = அஜித்

கர்ணன் = விக்ரம்
(சிவாஜிய பாத்துட்டு..ஹூம் இவுரு தான் அடுத்த சாய்ஸ்)

துரியோதனன் = தலைவரு, ரஜினி :-)
(சும்மா...லக்க லக்க லக்க-ன்னு பின்னிடுவாரு ல்ல! அதிருது-ல்ல)

குந்தி = சரிகா
பீமன் = பிரகாஷ் ராஜ்
பாஞ்சாலி = சினேகா/த்ரிஷா

நகுலன், சகாதேவன் = வடிவேலு/விவேக்?
அய்யோ...அடிக்க வராதீங்க சாமீகளா! :-)

said...

கண்ணபிரான்
அதான் சொல்லியிருக்கேனே!! :-))சூசகமாக.
அவரெல்லாம் கண்ணன் பக்கம் வரமாட்டார்.

said...

டீச்சர், நடிகர்கள் எல்லாம் எதுக்கு. நம்ம வலைப்பதிவர்களில் யார் யாரை எந்த ரோலுக்குப் போடலாமுன்னு சொல்லுங்க. நானெல்லாம் அந்தக் காலத்துப் பாக்கியராஜ் மாதிரி ஒரு சின்ன ரோல் மட்டும் எடுத்துக்கறேன்.

said...

இதுக்கு பயந்துக்கிட்டு தான் எங்கூரு லேடீஸ் குக்கறதே இல்லை...

அதைப்போய் சோம்பேறி என்றெல்லாம் சொல்வது சரியில்லை தானே...!!!

said...

துளசியக்கா,

கிருஷ்ணராக வந்த நிதிஷ் பரத்வாஜும், துரியோதனனாக வந்த புனித் எஸ்ஸாரும் நல்ல தேர்வுகள் என நினைக்கிறேன்.


நம்மாட்களில் எனது சாய்ஸ்:

திருதராஷ்டிரன் - வினு சக்ரவர்த்தி
பீஷ்மர் - விஜயகுமார்
காந்தாரி- காந்திமதி
குந்தி - மனோரமா
அஸ்வத்தாமன்/சல்லியன் - நாசர்
பாஞ்சாலி - குஷ்பூ

said...

வாங்க ராகவன்.

உங்க தேர்வு பிரமாதம்.

அது சசிகுமார்னு ஒரு நடிகராமே. நம்ம டெல்ஃபீன் சொல்லி இருக்காங்க.
அவரோட பையன் பேர் என்னவோ?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

பீமன் = சரத் குமார்

கடைசியிலே ஒரு பெரிய லிஸ்ட் போட்டுறலாம்.

தருமன் யார்?

said...

வாங்க இளா.
சார் சொல்லிட்டார்ன்னா அதுக்கு அப்பீல் இல்லையா? :-)))))

அப்ப கடோத்கஜன் யாரு?

பாஞ்சாலி= சிநேகா

லிஸ்ட் வருது.

அபிமன்யூ = அர்ஜுன்.

எப்படி சரிவரும்? அஜீத்தோட மகன் அர்ஜுனா? :-))))

said...

வாங்க ஜிகே.

மன்சூர் அலிகான்?

ஆமாமாம். கால்ஷீட் கிடைச்சுரும். ஜெயில் தண்டனை ரத்துன்னு படிச்சேனே.

said...

வாங்க டெல்ஃபீன்.

சசிகுமார்தான் மகனா? இந்த ஸ்டவ் விபத்து எப்ப நடந்துச்சு?

said...

வாங்க குமார்.

'வெண்'குழல் ஊதுனவர் பேரைச் சொல்ல க்ளூ இருக்கா?

ஒரே பூடகமா இருக்கே:-)

said...

வாங்க KRS.

குந்தி = சரிகா? ஃபோர்மச்சா இல்லையா? :-))))

மத்தவங்களை லிஸ்ட்லே சேர்த்தாச்சு:-)

said...

வாங்க கொத்ஸ்.

வலைப்பதிவர்களில் எடுத்துக்கலாமா நடிகர்களை? இது நல்ல ஐடியாவா இருக்கே!

உங்களுக்கு என்ன ரோல்? யோசிக்கணும்:-)

said...

வாங்க ரவி.

//எங்கூரு லேடீஸ் //

இதுலே அந்த 'எங்கூரு' பெங்களூருவா இல்லை கொரியனூருவா?

பெங்களூரு லேடீஸ்க்கு பிரச்சனை இருக்காது குக்கலைன்னாலும்.
உங்கூரு மகனர் அணி பாசிப்பயறு கடைஞ்சது, முட்டைப்பிச்சு பரோட்டான்னு வெளுத்து
விளாஸிக்கிட்டு இருக்கு:-))))

கொரியனூர்ன்னா குக்கரே வேணாம். ஒரு பெரிய 'கடாய்' போதுமே.

said...

//ஜிரா கேள்வி.....டால்பின் பதில்//

மகன் பெயர் விஜய சாரதி

said...

பீமன் - பொன்னம்பலம் ... பொருந்தாதுன்னுதான் தோணுது. பீமன் பலசாலியே தவிர ரொம்பவே வெகுளி. பொன்னம்பலத்தை பல படங்களில் வில்லனா பாத்து பாத்து அதுவே மனசுல பதிஞ்சு போச். So, சரத்குமார் பரவாயில்லை.
அர்ஜுனன் - மாதவன். கண்ணன் - கமல். அபிமன்யூ - பரத். துரியோதனன் - பிரகாஷ்ராஜ். சூர்யா - கர்ணன். பாஞ்சாலி - ப்ரியாமணி. குந்தி - ராதிகா.

said...

யக்கோவ்
ராஜ்கிரன்----தருமன்
சரத்குமார் [அ] பசுபதி---பீமன்
விக்ரம்.....அர்ஜுனன்
விஷால்....நகுலன்
பரத்-----சகாதேவன்

மாதவன்.....கண்ணன்
சூர்யா........கர்ணன்

பாஞ்சாலி.....ஸ்நேகா அல்லது கோபிகா
நெப்போலியன்......திரியோதனன்
பொன்னம்பலம்....துச்சாதனன்

ஆமா படம் எடுத்தா நீங்கதான் டைரக்ஷனா?;)
[நம்மளையும் சாமரம் வீசும் லிஸ்ட்ல சேத்துடுங்க]

said...

ஆனா ஒன்னு, பதிவுக்கு தலைப்பு வைப்பது எப்படின்னு உங்ககிட்டதான் கத்துக்கணும். பின்றீங்க... :) தலைப்பை பாத்து குழம்பி போயிட்டேன் அதே நேரம் படிச்சு முடிச்சதும் பொருத்தமாவும் இருக்கு.

said...

இல்ல டீச்சர் சசிகுமார்ங்குறது அப்பா. அவரும் நடிகர். காசேதான் கடவுளடா படத்துல கூட வருவாரே. அவருதான் வில்லன். அவரோட பையன் சன் டீவியில நீங்கள் கேட்டல் பாடல் நடத்துறாரே...சாரதியோ பாரதியோ.

Anonymous said...

சகுனி வேசத்துக்கு எங்கூர் சத்தியராஜ்தான் பொருத்தம். நக்கல் பேச அவர விட்டா ஆள் கிடையாதே.
தருமனா நடிக்க நாசர் நல்லாருப்பாரோ

said...

'வெண்'குழல் ஊதுனவர் பேரைச் சொல்ல க்ளூ இருக்கா?
அதான் இருக்கே!

said...

வாங்க சிஜி.

டாக்ட்டரம்மாவை 'மீனா'க்கிட்டீங்க:-)))))

விஜயசாரதி- பார்த்த ஞாபகம் இல்லை.

said...

வாங்க லக்ஷ்மி.

லிஸ்டுலே சேர்த்தாச்சு.
அதென்னங்க, பிரியாமணி? பருத்திவீரன் எஃபெக்ட்டா? அபிமன்யூவுக்கு அம்மாவா
இருக்கணுமே! இது ரொம்பச் சின்னப்பொண்ணாச்சே...........

தலைப்பு நல்லாருக்குன்றீங்க? டேங்க்ஸ்:-)

சரக்கு சரி இல்லைன்னாலும் ஒரு முறுக்கு வேணுமுல்லெ?:-))))

said...

வாங்க கண்மணி.
லிஸ்ட்லே சேர்த்துட்டேன்.
ஆமா, ஒரு பக்கமாவா சாமரம் வீசுவாங்க? ரெண்டு பேர் வேணாம்? அந்த
இன்னொண்ணு நானு:-)

தமிழ்மணம் ப்ரொடக்ஷன்ஸ் எடுக்கப்போற படம்!

ஆளாளுக்கு வசனம் எழுதலாம்:-))))

said...

ராகவன்,
நம்ம சிஜி 'டாண்'ன்னு பேரைச் சொல்லிட்டார். விஜயசாரதியாம்.
இப்ப சிஜிக்கு பீஷ்மர் ரோல் தரலாமான்னு ஒரு யோசனை:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நக்கலுக்கு நல்லஆள்தான். ஆனா ச்சின்னரோல் இல்லையா?
லிஸ்ட்டுலே சேர்த்தாச்சு.

said...

குமார்,

ஆஹா............. புரிஞ்சுபோச்சு:-)
நான் சந்திக்கலை, அதான் 'குழ'ம்பிட்டேன்.

பெயர்ப் பொருத்தமும் இருக்கே!!!!!

said...

வாங்க ஹரிஹரன்,

ரொம்ப நாளாச்சே 'பார்த்து'! நல்லா இருக்கீங்களா?

அது நிதின் பரத்வாஜா? ஒரு அஞ்சு நிமிஷம்தான் பார்த்ததுலே
அதுலேயும் என் டி ஆரை நினைச்சுக்கிட்டே பார்த்ததுலே மனசுலே பதியலை(-:

உங்க நடிகர்களையும் லிஸ்ட்டுலே சேர்த்தாச்சு.

நிதின், இஸ்ஸார் சரி.ஆனா அவுங்க 'டப்பிங்'
இல்லாமத் தமிழ் பேசணும், ஆமா:-)))

said...

//முந்தி ஒரு நடிகரு இருந்தாரு. பேரு திடீர்னு நெனவு வரலை. அவருடைய மனைவி ஸ்டவ் வெடிச்சிருச்சு. காப்பாத்தப் போய் இவரும் போயிட்டாரு. அவரு பேரு மறந்து போச்சு. அவரு மகன் கூட சன் டீவில ஊரு ஊராப் போயி நீங்கள் கேட்ட பாடல் நடத்துறாரே. //

சசிகுமார்ன்னு பேர்!ராணுவத்திலே கேப்டனா இருந்து சினிமாவுக்கு வந்தார். அவர் பீமனுக்கு சரி வர மாட்டார் ஜிரா, பீமனுக்கு சரியான சாய்ஸ் மைக்கேல் மதன காமராஜன்ல வரும் பீம்பாய் தான் சரி, அவர் தான் ஸீரியல்லயும் பீமன் வேஷம் கட்டினவர்!

said...

டீச்சர் சசிகுமார் பையன் பேரு விஜயசாரதி! சன் டிவில பின்னால நடந்து போய்கிட்டே ஊர் சுத்தி காமிப்பார்!

said...

துள்சிம்மா!!
கிருஷ்ணர் வேஷமென்றால் என்.டி.ஆர். என்ற மனபிம்பமெல்லாம்
கேபிள் டிவி வந்த பிறகு, ஈடிவி,ஜெமினிடிவி எல்லாம் பார்த்து
அதில் என்.டி.ஆர். சின்னச்சின்ன நடிகைகளுடன் டூயட் பாடி ஆடும் அழகைப் பார்த்ததும் கலகல என்று
கலைந்து போயேவிட்டது.
அது சரி... நடிகர் தேர்வெல்லாம் ஓகே! இவர்களெல்லாம் சுத்தத்தமிழ்
பேச வேண்டுமே? அதற்கென்ன செய்வது? யோசித்தீர்களா?

said...

அப்பப்பா அளாளுக்கு நாளைக்கே படம் எடுக்க போறா மாதிரி கற்பனை ஓடுது. சரி என் பங்குக்கு ;-)

பீமன் - பீம்பாய் (மைக்கெல் மதன காம ராஜன்ல வருவாரே பீம்பாய் அவர் ரொம்ப பொருத்தம் :-))
கிருஷ்ணருக்கு பால் வடியும் முகமா இருக்கணும் அதனால் மாதவன் சரி வராது பிரசாந்த் மாதிரி யாராவது..

அர்ஜுனனுக்கு சரத் போட்டுக்கலாம்,
தர்மன் (யுதிஷ்டிரன்) அர்ஜுன்
நகுலன் அஜீத்
சகாதேவன் தனுஷ்

துரியோதனன் விக்ரம்
கர்ணன் சூர்யா/ மாதவன்

கெளரவர்களில் ஒருவராக விஜய்க்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்திடுங்கப்பா பாவம். :-)

said...

அக்கா!
படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா??
அதுவும் இதிகாசப்படம்....
நடிகர் தேர்வு நடக்குது அதுதான் கேட்டேன்.

said...

வாங்க அபி அப்பா.

அட............நம்ம 'பீம்பாய்' அவர்தானா?

நான் நம்மூர் டிவியெல்லாம் அவ்வளவாப் பார்த்ததே இல்லைங்க(-:
அதான் யார் யார், யாருன்னு தெரியாமப்போச்சு.

said...

வாங்க நானானி.

இப்பத்தான் அபி அப்பாகிட்டே ,'நான் நம்மூர் டிவியெல்லாம்
அவ்வளவாப் பார்த்ததே இல்லைங்க' ன்னு புலம்புனேன்.

அப்ப நல்லாதாப்போச்சு இல்லீங்களா? நீங்க சொன்னதையெல்லாம்
பார்த்தா....................

எல்லாருக்கும் ஒரு வருசம் தமிழ் வகுப்பு
நடத்திட்டுத்தான் ஷூட்டிங் ஆரம்பிப்போம்:-)

said...

வாங்க ஜெஸிலா.

பிரசாந்த் 'இப்ப இருக்கும் நிலை'யில் 'பால்' வடியுமான்றது கொஞ்சம் சந்தேகம்தான்(-:
நடிகர் தேர்வுன்னா நாலுபேத்தைக் கேட்டு நல்லதாத் தெரிவு செய்யணுமுல்லே? அதுக்குத்தான் இப்படி.....

உங்க செலக்ஷனை லிஸ்ட்டுலே சேர்த்தாச்சு:-)

said...

வாங்க யோகன்.

இது தமிழ்மணம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பேரில் தயாராகப்போகுது.

//இதிகாசப்படம்//
அப்பதானே இதுலே கதை இருக்கா, இல்லையா ன்னும், காபிரைட் பிரச்சனைன்னும்
ஒண்ணும் வராது.

நம்மூர்லே இருக்கற கூட்டத்துக்கு மகாபாரதம்ன்னாத்தான்
'வேலை வாய்ப்பு' சரியா இருக்கும்:-)))

said...

/*'தன் அவுர் மன் ஏக் ஜாகாமே ஹோனா ச்சாஹியே'!*/
இதுக்கு மட்டும் வடக்கு ஒட்டுமாம்மா..?
போதும் ஒரு தடவை அதை பார்தததே..

said...

வாங்க tbcd.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!

நல்லா இருக்கீங்களா?

//இதுக்கு மட்டும் வடக்கு ஒட்டுமாம்மா..?//

வேற வழி? நான் போன வீட்டு ஆளுங்க ஃபிஜி இ (ஹி)ந்தியர்கள் ஆச்சே.
தமிழில் சொன்னா புரியாதுல்லே?

//போதும் ஒரு தடவை அதை பார்தததே..//

அப்டீங்கறீங்க? நான் பார்த்ததே இல்லைங்க. நீங்க சொல்றதைப் பார்த்தால்
பார்க்காம இருந்ததே நல்லதாப் போச்சு.

நம்ம தமிழ்மணம் மக்களை வச்சுப் புது முறையில் எடுத்துறலாம்:-))))

said...

/*அப்டீங்கறீங்க? நான் பார்த்ததே இல்லைங்க. நீங்க சொல்றதைப் பார்த்தால்
பார்க்காம இருந்ததே நல்லதாப் போச்சு.

நம்ம தமிழ்மணம் மக்களை வச்சுப் புது முறையில் எடுத்துறலாம்:-)))) */

தமிழ்மணம் மக்களை வச்சுத் தமிழ் கதை எடுங்க... அந்த கதை நல்லா இல்லை...

said...

/*வாங்க TBCD. முதல்முறையா வந்துருக்கீங்க போல! நல்லா இருக்கீங்களா?*/

தங்கள் கனிவான வரவேற்புக்கு நன்றி!!.. நான் இங்கு சுகமே..!! நீங்கள் அங்கே சுகமா!!.. நடு நடுவில மானே,பொன் மானே எல்லாம் போட்டுக்கங்க.. அட சே..!! ஆமாம் நீங்க அடிக்கடி பதிவு போட்டா, நாங்க உள்ள புகுந்து விளையாட வேன்டாமா..!! எப்ப நீங்க என் வீட்டுக்கு வரீங்க.. :)

said...

நடிகர்களுக்கு தமிழ் வகுப்பா..?ஒரு வருஷம் போதுமா..? ரொம்பப் பாவம் டீச்சர் நீங்க!

said...

ராகவன் சசிகுமாரா...அவரைப்பத்தியா சொல்றீங்க.அவர்மகன் விஜயசாரதியா அடடே. எத்தனை விவரம் துளசி தளத்தில கிடைக்குது. நன்றிப்பா.

துளசி தர்மருக்கு ராஜ்கிரண் போடலாமே. அந்தப் பொண்ணுக்கு நல்லா ஆயிடுச்சா.
சாமி காயங்களை ஆத்தணும் சீக்கிரமா.