Thursday, July 12, 2007

எ.கி.எ.செ? பகுதி 9

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

'சூர்யா' எழுப்புனதும் சூடா ஒரு காஃபி குடிச்சுட்டு நடக்கறதுக்குப் போனோம். உடற்பயிற்சியைக் கொண்டாடும்
ஆட்கள் எங்கே பார்த்தாலும். ஆத்தங்கரை வழக்கத்தைவிட அதிகமான சுறுசுறுப்போடு இருக்கு. நேத்து விபத்து
நடந்திருக்கக் கூடிய இடத்தை ஒரு பயத்தோடு எட்டிப்பார்த்தேன். கர்மசிரத்தையா கயிறு கட்டிக்கிட்டி இருக்கார் ஒருத்தர்.
இறங்கி ஏறுவாராம். "தலையில் ஹெல்மெட் போட்டுக்கோ. உனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை"ன்னு
கவுன்சில் போர்டு வச்சுருக்கு. ச்சின்னச்சின்ன விரிப்புகள் போட்டு அதுலே பஸ்கி, தண்டால்னு பயிற்சி செய்யும் ஆட்கள், அதலபாதாளத்தில் ஆற்றங்கரையில்.













அந்த சர்ச் கோவிலுக்குள் போய் எட்டிப்பார்த்தோம். உள் அரங்கத்துலே ரெண்டுமூணுபேர் என்னமோ அலுவலா இருந்தாங்க.
பார்வையாளர்கள் நேரம் காலை 9 முதல்னு ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்துட்டோம்.



இன்னிக்கு சவுத் பேங்க் போகலாமுன்னு எண்ணம் இருந்துச்சு. இந்த ஆற்றின் தெற்குப் பகுதி. இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாதநெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க.


சனிக்கிழமையானதாலே
விடுமுறைக்கூட்டம் இருக்குமுன்னு நினைச்சேன். கார் பார்க்கிங்தான் எங்கே போனாலும் ஒரு தொந்திரவு. இங்கே
ஒரு இடத்தில் ஒரு காருக்கு 10 டாலர்னு பார்த்து விசாரிச்சதுலே நாள் பூராவும் நிறுத்தினாலும் பத்து டாலர்தானாம்.
ஒருமுறை உள்ளே கார் போக பத்துன்னு சொன்னாங்க. கார் பார்க் கட்டிவிட்டாவே பில்லியனர் ஆயிறலாம் போல!






வண்டியை நிறுத்திட்டு நதிக்கரையில் நடந்து போனோம். இதோ நான் தேடிவந்த இடம். நேப்பாளக் கோயில். "நேப்பாள்
ஷாந்தி மந்திர்". 1988லே நடந்த எக்ஸ்போ சமயத்துலே நேபாள நாட்டுக் கலைஞர்கள் தயார் செஞ்சது. அப்பதான்
ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து 200வது வருஷக் கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உள்ளே
வெவ்வேற முகத்தால் எல்லாத் திசைகளையும் பார்க்கும் கடவுள் சிலை.





இந்தமுறை அதைச்சுற்றி கண்ணாடித் தடுப்புப்
போட்டு ஒரு ஸீத்ரூ உண்டியலா ஆக்கி வச்சுருக்காங்க. அழகான மரவேலைப்பாடுகள். செதுக்கி, இழைச்சு வச்சுருக்காங்க.
வெளியே ரெண்டு யானைகள், அழகான வெங்கல மணின்னு அம்சமா இருக்கு. உள்ளே ஒரு பெஞ்சு இருக்கை. பின்பக்கம்
புத்த ஸ்தூபியின் அடிப்பாகம் இல்லேன்னா நம்ம கோயில்களில் இருக்கும் பலிபீடம்போல ஒண்ணு இருக்கு. ஒரு ச்சின்ன
செவ்வக வடிவக் குளம். கோயிலைசுத்தி மூங்கில் வனம். அங்கே இருந்து மரப்பாதைப் பாலம் வழியா ஒரு ட்ராப்பிகல்
தோட்டத்தைக் கடந்து போகலாம். பெரணிச்செடிகள் நிறைஞ்சு கிடக்கு.மணி ப்ளாண்ட்ன்னு சொல்வோம் பாருங்க,
அது அப்படிச் செழிப்பா வளர்ந்து மரங்களில் ஏறிப்பிடிச்சிருக்கு. ஒவ்வொரு இலையும் பிரமாண்டம். பேசாம வாழை
இலைக்குப் பதிலா அதுலே சோறு போட்டுச் சாப்புட்டறலாம்( எங்கே போனாலும் இந்த சோத்து நினைவுதான். ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்........)







இந்த ஊருக்கு 'பீச்' இல்லாத குறையை நிவர்த்தி செய்யறதுக்கு ஒரு செயற்கைக் கடற்கரை உண்டாக்கி வச்சுருக்கு
நகரசபை. அதை எதுக்குப் பாழாக்கணுமுன்னு அங்கங்கே நீச்சலுடையில் மக்கள். சிலர் சூரியக்குளியல் நடத்திக்கிட்டு இருக்காங்க.
செயற்கைக்கடலில் ச்சின்னதா அலை அடிக்குது. இன்னும் அட்மாஸ்பியர்க்கு வலுவூட்ட வேணுமுன்னு ஒரு 'லைஃப்கார்டு' பத்தடி உயர ஏணியில் உக்கார்ந்து 'கடலில்' குளிக்கும் ஜனங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார். அதைத் தொட்டடுத்து சின்னப் பிள்ளைகளுக்கான நீச்சல்குளம். நீர்விளையாட்டுதான் அங்கே.






இன்னிக்குச் சனிக்கிழமையாப்போனது நல்லதுதான். இங்கே ஒரு மார்க்கெட் சனிக்கிழமைகளில் நடக்குது. கூடாரங்கள்
நாலுவரிசைகளில் முளைச்சிருக்கு. அந்தப் பகுதிக்குப் போனால் கண்முன்னே எதுத்தாப்புலே, நேத்து இருந்து மனசுலே
குடைஞ்சுக்கிட்டு இருந்த விஷயம். ஆஸ்ட்ராலியாவின் பழங்குடியைச் சேர்ந்த ஒருத்தர் டிட்ஜெரிடூ வச்சு வாசிக்கிறார்.
மரத்தினால் செஞ்ச ஒரு ஒன்னரை மீட்டர் வரும் குழாய். அதில் அவர் ஊதும் சத்தம் விநோதமா ஒலிக்குது. நான் படம் எடுக்கறதைப் பார்த்துட்டு, 'எடுத்துக்கோ'ன்னு சொல்லி கையால் ஜாடை காமிச்சுட்டு அவர் ஊதிக்கிட்டே இருந்தார். இதை ஊதறதுக்கு எவ்வளோ மூச்சடக்கி வாசிக்கணும், இது எவ்வளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுக்கிட்டு இருந்ததாலே ஒரு நிமிஷம்
போதுமே. நன்றி சொல்லிட்டு, அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்தேன்.

இங்கே போட்டுருக்குப் பாருங்க.






இவுங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கேன். அடுத்த பதிவுக்குக் கட்டாயம் வந்து பாருங்க.


கொஞ்சம் மனசைக் கல்லாக்கிக்கிட்டு வாங்க.


தொடரும்............

இன்னிக்கு கறுப்பு வெள்ளின்றது என் கணக்குலெ சரியாப் போச்சு(-:

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. இப்ப மறுபடியும் வெளியிட்டுப் பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம். ச்சூ மந்திரக்காளி......... எல்லாம் சரியாப் போச்சு:-)))) ஹங்........... போச்சா இல்லையா?

7 comments:

said...

அபாரிஜின்கள் பத்தியா அடுத்தவாரம்! நிறைய பேர் கொல்லப்பட்டுருக்காங்கன்னு தெரியும். உங்க எழுத்துல படிக்க ஆர்வமாத்தான் இருக்கு

said...

நேப்பாள கோயில் அழகா இருக்குங்க.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ம்ம்ம்ம்ம். கொஞ்சம் யோசிச்சுத்தான் எழுதணும். இன்னொரு நாட்டு விஷயமாச்சே.
அவுங்களுக்கு அங்கே என்ன நிர்பந்தங்கள் இருக்கோ?
நம்மூர் எம்.பி. சொன்னதைப் பார்த்திருப்பீங்கதானே.......... டிவியிலும் பேப்பரிலும்.

said...

வாங்க கொத்ஸ்.

அருமையான மர வேலைப்பாடுகள் தாங்க. நிறையப் படங்கள் எடுத்துத் தள்ளியாச்சு.
நம்ம கோலம் கூட இருக்கு!

said...

இத்தனை படமும் எடுத்து அதுக்கு பெயர் வடிவம்,கட்டுரை எழுதி.....ரொம்ப அழகான வேலை செய்திருக்.கீங்க.

நேபாளக் கோவில் சிலைகள் எல்லாம் நுட்பமா வேலைப்பாடோட இருக்கு.அதே சிரத்தையோட செய்திருக்காங்க.

said...

ஆரம்பத்திலே தகறார் செய்ததாலோ என்னவோ, படங்கள் எல்லாம்
பாந்தமா வந்திருக்கு..........

said...

//எங்கே போனாலும் இந்த சோத்து நினைவுதான். ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்//

அதானே!ஹி ஹி