Tuesday, July 17, 2007

தமிழ்மணம் கொ.ப.செ. சந்திப்பு வித் பீட்டர்.

நிறைய வருஷமாத் தெரிஞ்ச நண்பர்தான். ஆனாலும் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்காருன்னு நம்பவே முடியலை:-)


குளிர்காலம் ஆச்சுனா நானும் ஒரு ஹெட்ஜ்ஹாக் மாதிரிதான் ஹைபர்னேட் பண்ணும்வழக்கம். காலநிலை மனுஷனை அண்ட்டீ சோஷியல் ஆக்கி வச்சுருதுன்னு நம்பிக்கிட்டு இருக்கேன். இந்த நம்பிக்கையை உடைச்செறியலாமுன்னு நண்பர் வீட்டுக்கு ஒரு விஸிட்.'வழக்கம்போல்' தமிழ்மணத்தின் பெருமைகளை அள்ளி வீசிக்கிட்டு இருந்தேன். கொ.ப.செ.வா இருந்துக்கிட்டு இதையெல்லாம் செய்யாட்டா எப்படி? பதவி தனக்குத்தானே திட்டம்:-))))நண்பருக்குப் புகைப்படக்கலையில் ஆர்வர் அதிகம். படங்கள் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கார்.அவைகளை ஃப்ளிக்கரில் போட்டு வச்சுருக்கறதாகவும் சொன்னார். ஆஹா........நம்ம மேதா விலாசத்தைக் காமிக்க நல்ல ச்சான்ஸ்." அதுலே மாசாமாசம் இத்தனை ஃபோட்டோன்னு கணக்கு இருக்கே. கோட்டா முடிஞ்சதுன்னாஅடுத்தமாசம்தான் இன்னும் சிலதைச் சேர்க்கமுடியும். மாசத்துக்கு 18 படமுன்னு நினைக்கறேன்"


" ஆமாம். நான் அப்க்ரேடு வாங்கிவச்சுருக்கேன்"


"ஹா.........(ங்) அப் க்ரேடா? எத்தனை படம் இதுவரை போட்டுருக்கீங்க?"


" ஐநூத்துச் சொச்சம்"


"(................ மீண்டும் ஹா.........(ங்)...........)


"ப்ரைவேட்டா இல்லை பப்ளிக் வ்யூவா?"

" பப்ளிக்தான்"

" பேசாம ஒரு ப்ளொக் ஆரம்பிச்சு, அதுலே போடுங்களேன் படங்களை"


" ஒரு ப்ளொக் வச்சுருக்கேன்"


" (அடுத்த ஷாக்!!!!) என்ன பெயரில் வச்சுருக்கீங்க? "


சொன்னார்.

( அட! ரஜினியை இவரும் விட்டுவைக்கலை!!!!)


" ஓ........... பீட்டரா? அதான் நான் பார்க்கலை!"


" பீட்டரா? அப்படீன்னா? "


பீட்டரைப் பத்தி விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டு, பேசாம தமிழ் ப்ளொக் ஒண்ணு ஆரம்பிச்சுஅதைத் தமிழ்மணத்துலே சேர்த்துருங்க. நம்ம தமிழ்ப்பதிவுகளிலே ஃபோட்டோக்ராஃபிக்குன்னே
ஒரு வகுப்புவேற நடக்குதுன்னு சொன்னேன்.


நண்பர் தமிழ்காரர்தான். ஆனா தமிழில் எழுதறதுக்குக் கொஞ்சம்.............................?


" இது ஒரு பிரச்சனையா?" கலப்பையைப் புடிச்சு எப்படி உழணுமுன்னு 'ஊதி'யாச்சு:-)


ஆனா...சும்மாச் சொல்லக்கூடாது, படங்கள் ஒவ்வொண்ணும் அருமையாத்தான் எடுத்துருக்கார்.


நேரம்கிடைச்சா......... கொஞ்சம் எட்டிப் பாருங்க.

14 comments:

said...

நியுஸியில் இன்னுமொரு தமிழ்கார பீட்டர்-வலைபதிவர கண்டுபிடிச்சு அறிமுகப்படுதினதுக்கு நியுஸி பிராந்திய 'தல'யின் பாராட்டுக்கள் (கொ.ப.சென்னு நீங்களே அறிவிச்சிட்டீங்க அப்ப தலையாவது இருக்கட்டுமேன்னுதான் ஹி ஹி..)

பிகு: படங்கள் அருமை.

said...

படங்கள் அருமை அறிமுகத்திற்கு நன்றி..
பேட்டியும் அருமை.ஆண்டி சோஷியல் நம்ம்பிக்கையை உடைக்க போனீங்களா
பதிவு போட விசயம் தேத்த போயிருப்பீங்க.. :)

said...

டீச்சர்...மேட்டர் என்னன்னா...

நாம எடுக்குற போட்டோவை ப்ளிக்கரில் வெலைக்கு விக்குற வாய்ப்பு இருக்கா என்று அவரிடம் கேட்டு சொல்லுங்க...

நாங்க எடுத்த ஹிஸ்டாரிக்கல் போட்டோக்களை எல்லாம் எவன் கிட்ட தள்ளி உடலாமுன்னு காத்துக்கிட்டிருக்கம்...

said...

அக்கடான்னு இங்கிலீசுல பீட்டரு உட்டுட்டு இருக்கிவரை திட்டுவாங்க வரச் சொல்லி இருக்கீங்க.இது க்கு பேர்தான் கொலை பரப்பு செயலாளர்ங்கிறது,, சும்மாங்காச்சுக்கும். ல்லூல்லூலாயி

said...

//ஆனா...சும்மாச் சொல்லக்கூடாது, படங்கள் ஒவ்வொண்ணும் அருமையாத்தான் எடுத்துருக்கார்//

u r right! pleasant color and black'n white pics of excellant landscape are really fabulous.

said...

வாங்க சுரேஷூ.

'தல' யா இருக்க ஆசையா? ஆபத்து தலைக்குத்தான் அதிகமாம். பார்த்துப்பா..............
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன். ஆமா...........:-)

said...

வாங்க முத்துலெட்சுமி.

நட்சத்திர வே(ளை)லையிலும் தவறாம வந்த உங்க பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.

பதிவுக்குத் தேத்த............... வூட்டுக்குள்ளேயே விஷயங்கள் வந்துக்கிட்டு இருக்கு. எழுத நேரம்தான்
இல்லையாக்கும்:-)

said...

வாங்க ரவி.

//நாங்க எடுத்த ஹிஸ்டாரிக்கல் போட்டோக்களை .......//

'ஹிஸ்ட்டீரிக்கல்'னு தப்பா வாசிச்சுட்டேன்:-)

நாம காசு 'கொடுத்து' விக்கணும்போல இருக்கு(-:

கொரியாவுலேற் ச்சான்ஸ் இருக்குதான்னு பாருங்க. நம்மகிட்டேயும் ஒரு லோடு இருக்கு:-)

said...

வாங்க இளா.

அப்பாவோட பொறந்தநாளுக் கொண்டாட்டம் நல்லா நடந்துச்சா?


குளுரு தாங்கமுடியலை. பேசாம ஒரு கொலை செஞ்சுறலாமான்னுகூட
மனசுலே வருது. இங்கே ஜெயிலில் இணையம் இருக்குன்னு நினைக்கேன்:-)

said...

வாங்க வெங்கடேஷ்.

முதல்லே யாரோ புதுசா இருக்கீங்கன்னு நினைச்சுட்டேங்க.

அவர்கிட்டே சொல்லிடறேன். நல்லாத்தான் இருக்கு. காலண்டர்கூட
போட்டுக்கலாம் நாம்.

said...

aஆண்டி சோஷியலா...நீங்களா. ஏதாவது நம்பற மாத்ரி சொல்லுங்க.

அவர் எடுத்த படமெல்லாம் க்ளியரா வந்திருக்கே.
படப்பதிவே அவர் நடத்தலாமே.
அப்போ பீட்டரும் வேணாம் சோழனும் வேண்டாம்.

said...

ஏங்க வல்லி,

நான் Aunty சோஷியல்ன்னா நம்பமாட்டீங்களா? :-))))

அவர்கிட்டே சொல்லி இருக்கேன் பட ப்ளொக் துவங்கச்சொல்லி.

said...

படங்க நல்லாருக்கு டீச்சர். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். ஆமா இப்பல்லாம் பதிவெழுதுறதில்லையா. உங்க பதிவுகள் தமிழ்மணத்துல தெரியிறதில்லையே?

said...

வாங்க ராகவன்.

'சொறி பிடிச்சவங்க கையும், எழுதி ருசி கண்டவங்க கையும் ச்சும்மா
இருந்ததா சரித்திரம் இருக்கா? :-))))

வாரம் குறைஞ்சது மூணு பதிவு எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.தமிழ்மணம்
காமிக்கலையா? கருணை இல்லையோ?