இதுக்கு நாகதாளின்னா சொல்வீங்க? சப்பாத்திக் கள்ளிச்செடிக்குதான் நாகதாளின்னு கேள்விப்பட்டிருக்கேன்! எல்லாம் வருஷம் ஒரு முறைதான் பூக்குது. கோடியில் மட்டும். ஆனா பூ ஒரு ரெண்டு வாரத்துக்கு அப்படியே இருக்கும்.
டீச்சர் புகைப்பட வகுப்பிலே மாணவியாச் சேர்ந்துருக்கறது தெரியாதா? வாழ்க்கை முழுசும் படிக்க வேண்டியது நிறைய இருக்கேப்பா:-) கற்றது கைம்மண் அளவு இல்லையா?
சீரியஸ் பதில்:
தாமரையா? அது ஆட்டம் சீஸன்லேயே மண்டையைப் போட்டுரும். அந்தத் தொட்டி உறையாம இருக்க இப்ப தண்ணீர் சர்க்குலேஷனுக்கு பம்ப் வச்சுருக்கோம். போன வருஷமெல்லாம் அப்படியே உறைஞ்சுபோய் இருந்துச்சு.அதுவும் நல்லதுதான். பனிக்கு அடியிலே கொஞ்சம் வார்ம் ஆக இருக்கும் தண்ணீர். அக்டோபர்லே மறுபடியும் கிழங்கிலிருந்து முளை வந்து வெளிவரும். போன ரெண்டு வருஷமா இப்படித்தான் வந்து போய்க்கிட்டுருக்கு.
வசந்தகாலம் வரும்போது பார்த்துக்கிட்டே இருந்து தாமரைகிழங்கு விற்பனைக்கு வரும்போது வாங்கிவந்து போட்டு வைக்கணும். போன சம்மருக்கு 14 பூக்கள் வந்துச்சு. அதெல்லாம் அப்பப்ப எண்ணிக்கணக்கு வச்சுக்குவேன்:-))))
வேலைன்னு பார்த்தா ரொம்ப பேஜார்தான். ஆனா பூ வரும்போது சந்தோஷமா இருக்கே. அதுக்குத்தான் மெனெக்கெடறேன். என்கூட சேர்ந்து பாவம் கோபாலும் ஆடறார்:-))))
21 comments:
அய்யோ டெல்ஃபீன்,
இது நம்ம வீட்டுக் காக்டெஸ்தாங்க.
முள் செடியெல்லாம் வூட்டுக்குள்ளேவா வெச்சு இருக்கீங்க? போட்டிக்கான வாழ்த்துக்கள் டீச்சர்.
இளா,
வாழைமரத்தையே வீட்டுக்குள்ளெதான் வச்சுருக்கேன்:-)
அடேயப்பா!
எல்லோரும் சுட்டுத்தள்றீங்க.......
கண்ணுக்கு விருந்து....
ரெண்டுமே அழகு துளசி..
அதும் ரெண்டாவது பூ வித்தியாசமா இருக்கு.
வாங்க சிஜி.
நம்ம 'திறமை'யைக் காமிக்கக் கிடைச்ச ச்சான்ஸை விட்டுறமுடியுதா? :-)))))
வாங்க முத்துலெட்சுமி.
உங்க பூவுக்குள் பூவும் அழகுதான்.
நம்ம வீட்டுலே நிறைய காக்டெஸ் வச்சுருக்கேன். எப்பவாவது தண்ணி காமிச்சாப்போதுமுன்னுதான்:-)
அதுலே ஒண்ணுதான் இது.
Burrow tails ன்னு ஒண்ணு இருக்கு.
அடர்த்தியா செழிப்பா வந்துருக்கு.
அதை அப்புறம் ஒரு நாள் போடறேன்.
ஒருவர் ஒருமுறைதான் கலந்துக்கணுமுன்னு விதி இருக்கோ?
அக்கா !
இந்த நாகதாளி வருசத்துக்கு எத்தனை தடவை பூக்கும்; அழகா இருக்கு. தாமரையும் தான்
தனிமடலில் ரெண்டு படம் பார்சேல்!:-))
ரெண்டாவது பூ பேர் என்னாங்க.
வாங்க யோகன்.
இதுக்கு நாகதாளின்னா சொல்வீங்க? சப்பாத்திக் கள்ளிச்செடிக்குதான்
நாகதாளின்னு கேள்விப்பட்டிருக்கேன்!
எல்லாம் வருஷம் ஒரு முறைதான் பூக்குது. கோடியில் மட்டும். ஆனா பூ ஒரு
ரெண்டு வாரத்துக்கு அப்படியே இருக்கும்.
வாங்க அபிஅப்பா.
என்ன பார்ஸேல் கேக்க ஆரம்பிச்சுட்டீங்க? டேக் அவுட்? :-))))
வாங்க JK.
Red crown Cactus ன்னு சொல்றாங்க. Rebutia வகை.
முள்கூட ஒரு சிகப்புக் கலர்லே இருக்கும்.
இதுபோலவே பிங், மஞ்சள் வகைகளும் நம்ம வீட்டுலே இருக்கு.இந்தச் செடிகள்
பச்சை நிறம் மட்டுமே:-)
வாழ்த்துக்கள் டீச்சர்!
டீச்சரே போட்டி போட்டால், மாணவர்கள் கதி என்ன? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! தயவு பண்ணுங்க! :-)))
சீரீயஸ் கேள்வி:
பனிக் காலங்களில் சூரியன் வரத் தாமதம் ஆகுமே! தாமரையின் கதி?
வாங்க KRS.
டீச்சர் புகைப்பட வகுப்பிலே மாணவியாச் சேர்ந்துருக்கறது தெரியாதா?
வாழ்க்கை முழுசும் படிக்க வேண்டியது நிறைய இருக்கேப்பா:-)
கற்றது கைம்மண் அளவு இல்லையா?
சீரியஸ் பதில்:
தாமரையா? அது ஆட்டம் சீஸன்லேயே மண்டையைப் போட்டுரும். அந்தத் தொட்டி
உறையாம இருக்க இப்ப தண்ணீர் சர்க்குலேஷனுக்கு பம்ப் வச்சுருக்கோம். போன
வருஷமெல்லாம் அப்படியே உறைஞ்சுபோய் இருந்துச்சு.அதுவும் நல்லதுதான்.
பனிக்கு அடியிலே கொஞ்சம் வார்ம் ஆக இருக்கும் தண்ணீர். அக்டோபர்லே
மறுபடியும் கிழங்கிலிருந்து முளை வந்து வெளிவரும். போன ரெண்டு வருஷமா
இப்படித்தான் வந்து போய்க்கிட்டுருக்கு.
வசந்தகாலம் வரும்போது பார்த்துக்கிட்டே இருந்து தாமரைகிழங்கு விற்பனைக்கு
வரும்போது வாங்கிவந்து போட்டு வைக்கணும். போன சம்மருக்கு 14 பூக்கள் வந்துச்சு.
அதெல்லாம் அப்பப்ப எண்ணிக்கணக்கு வச்சுக்குவேன்:-))))
வேலைன்னு பார்த்தா ரொம்ப பேஜார்தான். ஆனா பூ வரும்போது சந்தோஷமா இருக்கே.
அதுக்குத்தான் மெனெக்கெடறேன். என்கூட சேர்ந்து பாவம் கோபாலும் ஆடறார்:-))))
Where do you plant your lilies?
Any way nice picture. The coctus flower is looks like different.
Very nice to your new house info also.
Glk
glk,
Thanks for the comment.
The lily pond is 'our bath tub' from the old house:-)))))
துளசி,
ரெண்டு பூவுமெ செழிப்பா அழகு சொட்டறது.
நல்லத் தேறிட்டிங்கனு தோணுது.
மலர்கள் எப்போதுமே அழகு தான். அதுவும் சிவப்பு வண்ண மலர்கள் பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். புகப்படம் அருமை.
பாராட்டுகள்
வாங்க சீனா.
பாராட்டுகளுக்கு நன்றி.
இப்போ எங்கள் வஸந்தகாலம் வந்தாச்சு. தாமரையில் இலைகள் வந்து மூணு மொட்டுக்களும் வந்துருக்கு.
cacti யிலும் மொட்டுகள் வருது:-)))
வாங்க வல்லி.
//நல்லத் தேறிட்டிங்கனு ....//
எங்கே? தேறலைப்பா இன்னும்(-:
Post a Comment