எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
இன்னிக்கு 'ஆஸி டு நியூஸி'ன்னு கிளம்பறோம். காரைக் காலையில் பத்துமணிக்குத் திருப்பிக் கொண்டுவிட்டுறணும்.'க்ரேஸ் டைம்' அரைமணி நேரம் இருக்கு. அதுக்குமேலே போச்சுன்னா ஒருநாள் வாடகை கூடிப்போயிரும்.இன்னிக்குக் காலையில் வழக்கமான(??) நடைப்பயிற்சி வேணாமுன்னு முடிவு பண்ணிட்டு, சாமான்களையெல்லாம் பொறுக்கி ஒழுங்கா மூட்டைக் கட்டிட்டு, 'கோயில்' பார்க்கப் போனோம். உள்ளெ எப்படித்தான் இருக்குன்னு பார்த்தே தீரணும்.
நல்ல கூட்டம் இருக்கு. எல்லாரும் நீட்டா உடை உடுத்தி வந்துருந்தாங்க. அன்பா வரவேற்று உள்ளெ போகச் சொன்னாங்க.பெரிய ஹால்தான். ஒரு கோடியில் மேடை இருக்கு. அதுலே ஒரு மைக். கீழே நிறைய நாற்காலிகள். குழந்தையும் குட்டியுமா ஜேஜேன்னு இருக்கு. கடைசி வரிசையில் உக்கார்ந்தோம். ஒரு ட்ரே மாதிரி (தூக்குக் கைப்பிடியுள்ளது) வரிசையா எல்லார்க்குமுன்னே நீட்டிக்கிட்டே வந்தாங்க. மக்கள் அதுலே இருந்து ஒண்ணை எடுத்து வாயில் கவுத்துக்கிட்டு திருப்பி காலிக்குப்பியை அதுக்குன்னு இருக்கும் இடத்துலே போடறாங்க. கண்ணு பார்த்தா கை செய்யாதா நமக்கு? அரை ஸ்பூன் அளவு வரும் தண்ணீர்( தீர்த்தம்?)அதுக்கேத்தமாதிரி ச்சின்ன்ன்ன்ன்ன டம்ப்ளர். நம்மூர்லே டீக்கடைக்காரப் பையன் கொண்டுவரும் அஞ்சாறு டீ க்ளாஸ் வைக்கும் கொத்து ஞாபகம் வந்துச்சு. ஆமாம். இதுக்கு எதுக்கு இவ்வளவு நோணாவட்டம்?பேசாம நம்மூர்லே ச்சொட்டு மருந்து தர்றதுபோல வாயிலே விட்டுறலாமே? ச்சுப். பேசப்படாது:-)
Mormons churchன்னு எப்பவோ கேட்டுருக்கேன். அவுங்களுதாம் இது. நாங்க இப்ப இருக்கறது 'மீட்டிங் ஹவுஸ்ன்னு சொல்ற ஞாயித்துக்கிழமை நிகழ்ச்சியாம். நேத்துக் காலையில் என்னவோ அலுவல் நடக்குதுன்னு எட்டிப் பார்த்த இடம்தான் கோவிலாம். இங்கே 'அதுக்குன்னு' இருக்கறவங்க மட்டுமே நுழைஞ்சு பூசை செய்வாங்களாம். அப்ப எல்லாரும் வெள்ளை உடுப்புப் போட்டுக்குவாங்களாம். வெள்ளைன்றது பரிசுத்தத்தைக் குறிக்குமாம். நல்லவேளை, நேத்து ஓசைப்படாம ஓடுனது.'நேரமாகுது, பிரசங்கம் ஆரம்பிச்சா அப்புறம் நடுவுலே எழுந்து போறது நல்லா இருக்காது'ன்னு இவர் சொன்னதாலேஒரு அஞ்சு நிமிஷம் மனசுக்குள்ளெ 'தெரிஞ்ச மாதிரி' சாமியைக் கும்பிட்டுட்டு வெளியே வந்தோம். வாசலில்உக்கார்ந்திருந்த பாட்டி(??) அன்போடு பேசுனாங்க. 'நேரமாயிருச்சு'ன்னு சொன்னேன். நம்மைப் பத்துன விவரம்கேட்டுட்டு, பத்திரமா பிரயாணம் இருக்கணுமுன்னு ஆசி வழங்குனாங்க. பெரியவங்க சொன்னா அது பெருமாளே சொன்ன மாதிரி இல்லையா?
ஷாலட் தெருவிலே வண்டியைச் சரியான நேரத்துக்குக் கொடுத்துட்டு, 'ஆன், ஆல்பர்ட், மேரி, எலிஸபெத், மார்கரெட், ஆலிஸ், எட்வர்டு, வில்லியம், ஜ்யார்ஜ்'களில் குறுக்கெயும் நெடுக்கேயுமாப் போய் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலின் நடுவிலே இன்னிக்கு பள்ளிக்கூடப் பசங்க நிறைய இருக்கும் 'கொயர் நிகழ்ச்சி'. சனி, ஞாயிறுகளில் இப்படி எதாவது நடத்துதாம் 'மால் மேனேஜ்மெண்டு'.
இந்தப் பக்கம் கழைக்கூத்தாடி வித்தை காமிக்கிறார், ஆங்கிலம் பேசிக்கிட்டு. நெத்தியிலே கத்தியைச் செங்குத்தா நிறுத்தறதும், மூணு கத்திகளை வச்சு அம்மானை ஆடறதும், அவரைச்சுத்தி ச்சின்னப்பிள்ளைகள் கூட்டமும் கனஜோர். இன்னொரு பக்கம் வாயில் ஒரு சின்னக்குழாய் மாதிரி ட்யூப் அடைச்சுக்கிட்டு கர்மசிரத்தையா ஓவியம் தீட்டிக்கிட்டு இருந்தார் ஓவியர். என்னென்னவோ நிறங்களை ஸ்ப்ரே செஞ்சு கடைசியில் பார்த்தா அட்டகாசமான கலர்காம்பிநேஷனில் படம். வரைஞ்சு தள்ளியது நிறைய விற்பனைக்கு இருக்கு ஒரு பக்கம்.
எலிஸபெத் தெருவில் இருக்கும் 'கோவிந்தாஸ் ரெஸ்டாரெண்ட்' லே( ஹரே கிருஷ்ணா) சாப்பிடலாமுன்னு போனா......... நம்ம அதிர்ஷ்டம்மாலையில் பஜனை & 'இலவச'விருந்து இருக்காம். அதுக்காக சமைச்சுக்கிட்டு இருக்கறதாலே இப்ப 'உணவுவிற்பனை' கிடையாதாம். ஃபுட்கோர்ட்டுக்கு வந்து 'நம்ம பேர் எழுதியிருந்த பீட்ஸா'வை முழுங்கிட்டு ரெண்டு மணிக்குஅறைக்கு வந்தோம். செக் அவுட் நேரம் காலை 10 மணி. ஆனா நமக்கு ரெண்டு மணிவரை லேட் செக் அவுட் அனுமதி இருந்துச்சு. மோட்டல்காரங்ககிட்டே, இனி எப்ப வந்தாலும் 4A ரூம் நமக்குன்னு சொல்லிட்டு, ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு ஏர்போர்ட்டுக்கு நதியின் குறுக்கே இருக்கும் பதிமூணில் ஒண்ணான 'ஸ்டோரி ப்ரிட்ஜ்' ( நல்ல பொருத்தமான பெயர்தான் இந்தக் கதை முடிவில்) வழியா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.
சிட்னியின் ஹார்பர் ப்ரிட்ஜ் டிஸைன் செஞ்சு கட்டுனவர் ஜான் ப்ராட்ஃபீல்ட்(John Job Crew Bradfield) . இந்த'ப்ரிஸ்பேன் ஸ்டோரி ப்ரிட்ஜ்'ம் இவர்தான் டிஸைன் செஞ்சு கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க முழுக்க ஸ்டீல்கன்ஸ்ட்ரக்ஷன்.cantilever bridge
அமெரிக்கா கொண்டுவந்த விதிப்படி இப்ப இங்கே ஆஸி, நியூஸியெல்லாம் 'ஸீத்ரூ ப்ளாஸ்டிக்' பையில் டூத்பேஸ்ட்,க்ரீம் இத்தியாதிகள் ( 100 ml அளவுக்குள்ளே மட்டும் இருக்கணுமாம்) போட்டு,செக்யூரிட்டி செக்கப் வரை கையிலே தனியா வச்சுக் காமிக்கணுமுன்னு தமிழைத் தவிர எல்லா மொழிகளிலும் அச்சடிச்சு வச்சு கூடவே அதுக்குண்டான ப்ளாஸ்டிக் பைகளையும் போட்டு வச்சுருக்காங்க. எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு பையைக் கையில் எடுத்துக்கிட்டேன்.
செக்யூரிட்டியில் நான் வெறும் ஹேண்ட் பேக் மட்டும் வச்சுருக்கறதைப் பார்த்துட்டு அதை ஸ்கேன் செஞ்சபிறகு, என்னோட ப்ளாஸ்டிக் பை சாமான்கள் எங்கேன்னு கேட்டதுக்கு, நான் 'எல்லாத்தையும் செக்கின் பண்ண பெரிய பெட்டியிலே போட்டாச்சு. கையோட கொண்டு போறதுன்னாதானே ப்ளாஸ்டிக் பையிலே போடணும்?' சொன்னேன்.
"இந்தப்பக்கம் வாங்க, உங்க ஹேண்ட்பேகைத் திறந்து காமிங்க. அதுலே என்னவோ இந்த இடத்தில் இருக்குன்னு, ஸ்கேன்லே காமிக்குது."
அந்த இடத்துலே திறந்து நான் வெளியே எடுத்தது ஒரு லிப்ஸ்டிக்.
"ஓ........ நீங்க இதைத் தனியா ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."
"அப்படியா? லிக்விட் ஐட்டம்தானே பையிலே போடணும்? "
"இல்லையில்லை. இதையும் ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."
போட்டாப்போச்சு. இதோன்னு கையிலெ வச்சிருந்த ப்ளாஸ்டிக்லே போட்டேன்.
'சரி. நீங்க போகலாமு"ன்னு அதிகாரி சொன்னார். ( ஹூம்........இந்த இடத்துக்கு இவ(ன்)ர் ராஜா.)
என்னவோ எதோன்னு ' எங்க இவர்' பதறியடிச்சு என் பக்கம் வந்தார்.
"ஒண்ணுமில்லை."
(லிப்ஸ்டிக்கை வச்சு, விமானத்தைக் கடத்திருவேன்னு ஒரு சந்தேகம்)
உள்ளே லவுஞ்சுலே போனபிறகு, 'அந்த ஸ்கேனர் இதைப் பிடிக்காம விட்டுருச்சு பாருங்க'ன்னு கைப்பையில் இருந்த இன்னொரு லிப்ஸ்டிக்கை எடுத்துக் கோபாலுக்குக் காமிச்சேன்.
"எல்லாரும் கையிலெ ப்ளாஸ்டிக் பை பிடிச்சுக்கிட்டு வந்தப்ப நீ வெறுங்கையா வந்ததுக்கே, உன்னை ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு அவருக்குத் தோணி இருக்கு"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த இடத்துக்கு அவ(ன்)ர் ராஜா"
விமானம் கிளம்ப இன்னும் மூணுமணி நேரம் இருக்கு.
அருமையான பாஸ்த்தா, சன் ட்ரைய்டு டொமாட்டோ, மஃப்பின், காஃபின்னு கொஞ்சம் நல்லாவே( ஓசியில்) சாப்பிட்டுட்டு, நான் தமிழ்மணத்திலும், இவர் தினசரியிலுமா மூழ்குனோம்.
ஊருக்கு வந்து சேர்ந்தப்ப இரவு 12 மணி. இறங்குன பிறகு, Agate Geode கொண்டு வந்துருக்கேன்னு டிக்ளேர் செஞ்சிருந்தேன்.எடுத்துக்கூடக் காமிக்கச் சொல்லலை. ஒரு கேள்வி மட்டும்தான்.
"கடையில் வாங்குனதுதானே?"
"ஆமாம்."
"நோ ப்ராப்ளம். "
இது.............. :-)
வெளியே வந்தவுடன் 'ஆச்சரியத்திலும் ஆச்சரியமா' மகள் வந்துகாத்திருக்காள். டாக்ஸி செலவு மிச்சம்:-)))))
இதுவரை பன்னிரெண்டு முறை கேட்ட கேள்விக்கு என்ன பதில்?
எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
12 பதிவு(ம்) எழுதலாம்:-)))))
நன்றி & வணக்கம்.
14 comments:
//லிப்ஸ்டிக்கை வச்சு, விமானத்தைக் கடத்திருவேன்னு ஒரு சந்தேகம்//
யார் கண்டா...செஞ்சாலும் செய்வீ(வா)ய்ங்க டீச்சர்!
விமான ஓட்டியின் அருகில் சென்று, அடேய் இந்த லிப்ஸ்டிக்கை வைத்து உன் கன்னம், மூக்கு, சட்டை, டை, பேண்ட் எல்லாத்திலும் கோடு இழுத்துடுவேன்-ன்னு மிரட்டினா...நீங்க சொல்ற திசைக்கு திசை திருப்ப மாட்டாரா என்ன? :-)
அதுவும் திருப்பு திருப்பு-ன்னா..திருப்பிட்டேன்
கதையாப் போயிடும்! :-))
கடைசியில் "நச்" என்று முடித்திருக்கிறீர்கள்.
அந்த பாலம் "கேன்டிலிவரா?"?மேல் விபரங்கள் படித்துவிட்டு வருகிறேன்.
வாங்க KRS.
உண்மையைச் சொன்னா 'லிப்ஸ்டிக்' ரொம்ப டேஞ்சரான சமாச்சாரம்.
பாவம் விமானி. அவர் 'குடும்பத்தில் குழப்பம்' உண்டாக வழி சொல்றீங்களா? :-))))
வாங்க குமார்.
கடைசி நச்?
ஓஓஓ அந்த 'நன்றி & வணக்கம்'தானே? :-)))))
சான்ஃப்ரான்ஸிக்கோ பாலமும் இந்த வகைதானாமே.
மங்களம்...சுபமங்களம்!
இந்த பாடத்திலேயும் கேள்விகள் உண்டா டீச்சர்?
வாங்க சிஜி.
மங்களம் இதுக்கு மட்டும்தான். அப்படியொண்ணும் உங்களையெல்லாம்
ச்சும்மா விடறதா எண்ணம் இல்லை.
பயணத்தைவிட முற்றிலும் வேறொரு
அனுபவத்தொடர் வந்துக்கிட்டு இருக்கு:-)
எல்லாப் பாடத்துலேயும் 'கேள்விகள்' இருக்கும்:-)
//முற்றிலும் வேறொரு அனுபவத்தொடர் வந்துகிட்டிருக்கு...
எல்லாப்பாடத்திலும் 'கேள்வி'கள் உண்டு.//
அப்ப 'கேள்வியின் நாயகி'
ஆய்டுவீங்க..........!
சாமான்களையெல்லாம் பொறுக்கி //
????????
'கோயில்' பார்க்கப் போனோம். //
என்ன கோயில்ங்க.. பேர் ஏதாச்சும் இருக்கா...
'அந்த ஸ்கேனர் இதைப் பிடிக்காம விட்டுருச்சு பாருங்க'ன்னு கைப்பையில் இருந்த இன்னொரு லிப்ஸ்டிக்கை எடுத்துக் கோபாலுக்குக் காமிச்சேன்.//
இத வச்சே ப்ளேனை நீங்க கடத்தியிருக்கணும் :-)
கடைசியில் "நச்" என்று முடித்திருக்கிறீர்கள். லிப்ஸ்டிக்கினால பிரிஞ்சு போன தம்பதியர் நிறையன்னு கூகிள்காரர் சொல்றாரே.
பொம்பளையா லட்சணமா பை நிறைய மேக்கப் சாமான் எடுத்துக்கிட்டு போய் இருந்தா இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வந்திருக்கும்? இனிமேலாவது ஊரோட ஒத்து வாழப் பழகிக்குங்க. :))
(சாரி பார் தி லேட் எண்ட்ரி.)
என்னங்க சிஜி,
அப்ப நீங்க பதிலின் நாயகனாக ரெடியா? :-)))
வாங்க டிபிஆர்ஜோ.
இந்த பகுதி 8-இல் கோயில் பேர் எழுதி இருந்தேனுங்களே.
உங்களுக்காக இதோ இன்னொரு முறை.
The church of Jesus Christ of the latter-day saints
Brisbane Australia Temple.
கண்ட இடத்தில் போட்டு வைக்கிற புத்தகங்கள், செல்பேசி, கேமெரா
இதுகளோட அடாப்ட்டர்னு நிறைய இருந்ததைப் 'பொறுக்கி' :-))))))
வாங்க இளா.
'சந்தேகம் தீராத வியாதி' இல்லீங்களா?
லிப்ஸ்டிக் இல்லாத காலத்துலே என்னவா இருந்துருக்கும்?
கண்மை, குங்குமம். நேத்துப் பார்த்த திருநீலகண்டர் படத்துலே
கண்மை இந்த வேலையைச் செய்யுது. ( டி.ஆர். மகாலிங்கம் & செளகார் ஜானகி)
வாங்க கொத்ஸ்.
என்னத்தை மேக்கப்? எல்லாம் 'இயற்கை அழகே அழகு'ன்னு இருக்கறதுதான்!!
ஊர்ப்பட்ட மேக்கப்பைப் போட்டாலும் 'சட்டியில் இருந்தால் தான்....... 'கதை:-))))
Post a Comment