எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? லைஃப்ஸ்டைல் மார்க்கெட். விதவிதமான மக்களும், கடைகளும். முதல்கடையே 'எனக்காக'ன்னு ஒரு இந்தியர் நடத்தும் நகைநட்டுக் கடை. ஜில்லாளி பில்லாளின்னு எல்லாம் ராஜஸ்தானி சமாச்சாரங்கள். அதுக்கடுத்து துணிமணிகள், கைவினைப்பொருட்கள், ஸ்கார்ஃப், கேக், பிஸ்கெட், கைரேகை நிபுணர்கள்னு பரவிக்கிடக்கு. ஒரு கூடாரத்துலே வருஷம் 365 நாளுக்கும் பிறந்ததேதி வச்சு மனுஷன் குணாதியசத்தைக் குறிப்பிட்டு அச்சடிச்சுத் தோரணமாக் கட்டி வச்சுருந்துச்சு. நம்ம நாளுக்கெல்லாம் அநேகமா சரியாத்தான் சொல்லி இருக்கு. தனிக் கடுதாசியா வாங்கணுமுன்னா ஒவ்வொண்ணும் அஞ்சு டாலர். அதான் நம்மளைப்பத்தித் தெரிஞ்சுபோச்சே(!!!) அப்ப எதுக்கு அனாவசியமா பத்து டாலர் செலவளிக்கணும்? ( கருமின்னு அதுலே போடலைபாருங்க. விட்டுப்போச்சோ?)
சின்ன மரத்துண்டுகளில் நகைப்பெட்டி மாதிரி செஞ்சு வச்சுருந்தாங்க ஒரு இடத்தில். அதோட திறப்பு ஆஸ்ட்ராலியாக் கண்டத்தின் டிஸைன். அழகா இருந்துச்சு. நாய் பூனைகளுக்கான அலங்காரம், படுக்கை, கழுத்துப்பட்டி, உடைகள்ன்னுஒரு கடை. பூனை உக்காரும் தூக்குமாடம் நல்லாவே இருக்கு. 'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூமோட கொடுத்துட்டதாலே இதை வாங்கிக்கலை. தலை அலங்கார சாமான்கள் கடையிலே விக்கும் பூவைஎப்படி வச்சுக்கணுமுன்னு கேட்ட சிறுமிக்கு கடைக்காரம்மா பூவை வச்சுவிட்டாங்க. ஒரு கடையில் கல் வித்துக்கிட்டு இருந்தாங்க.நமக்குக் கல்லுன்னாவே மனசு இளகிரும். அங்கே நின்னு கற்களை வேடிக்கைப் பார்த்துட்டு, ச்சின்ன சைஸுலேஇருக்கும் பாலீஷ்டு க்ரிஸ்ட்டல் & ஜெம் கற்களை ஒரு சின்ன அளவுக்கிண்ணம் ரெண்டு டாலர்னு வாங்கினேன்.( அதைப்போட்டு வைக்க ஒரு கண்ணாடிக் கப் இங்கே நம்மூரில் தேடி வாங்குது தனிக்கதை. சுண்டைக்கா காப்பணம்.சுமைகூலி........ முக்காப்பணம்)
நம்மூர்லே அந்தக் காலத்துலே எலந்தம் பழம், ஈச்சம்பழமெல்லாம் தெருவில் விக்கக் கொண்டாருவாங்க பாருங்க,அது ஞாபகம் வந்துச்சு. ஒரு சின்ன உழக்குலே அப்படியே குவிச்சு அளந்து போடுவாங்க. கூடவே கொஞ்சம் கொசுறும்கிடைக்கும். அதேதான். நான் அளவுக் கிண்ணத்துலே கும்மாச்சிக் கட்டிக்கிட்டு இருந்தேன் நிதானமா. இன்னும் எத்தனை கல் நிக்குதோநிக்கட்டுமுன்னு. கடைக்காரர் அதை ஒரு காகிதக் கவர்லெ போட்டுட்டு, இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)
இது கோல்ட் கோஸ்ட்டுலே வாங்கின அகேட். பருந்து எப்படி இருக்கு?
மக்களுக்குப் பொழுது போகணுமேன்னு ஒரு இசைநிகழ்ச்சியும் ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. பொலிவியா நாட்டு இசையாம். யாரும் நின்னு கேக்கலைன்னாலும் 'தேமே'ன்னு பாடிக்கிட்டு இருந்தாங்க.
அருமையான அமைப்போடு ஒரு ஆம்ஃபி தியேட்டர் இருக்கு. இன்னிக்கு நிகழ்ச்சிகள் ஒண்ணும் இல்லை. திடீர்னு என் குறுக்கே பாய்ஞ்சு ஓடுச்சு ஒரு குழந்தை. 'பிடி பிடி'ன்னு கூடவே ஒரு சத்தம். தமிழ்!!!!இது போதாதா நமக்கு? மதுரைக்காரங்களாம். வந்து 3 மாசமாகுதாம். இன்னிக்கு இங்கே சுத்திப் பார்க்க வந்தாங்களாம்.
இன்னும் கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு வண்டியை எடுக்க வந்தோம். இந்தக் கட்டிடத்தின் மாடியில்தான் ம்யூஸியம் இருக்கு. பக்கத்துக் கட்டிடம் தியேட்டர். நாளைக்கு இங்கே அபாரிஜின் நிகழ்ச்சி நடக்கப்போகுதாம்.
இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாத நெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க. ஆத்தைக் கடக்கஅங்கங்கே பாலங்கள். ரயில் போக, வண்டிகள் போக, சைக்கிளும் பாதசாரிகளும் போகன்னு மொத்தம் 13 பாலங்கள்.
பகல்சாப்பாட்டுக்கு மறுபடி சிட்டிமால். மாலின் அந்தக் கோடியில் இருக்கும் கேஸினோவுக்கு ஒரு விஸிட் அடிக்காம நாட்டைவிட்டுப் போகக் கூடாதுன்னு விரதம். மாலின் நடுப்பகுதியில் மேடை போட்டு இசை நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. ஸ்பானீஷ் சங்கீதமுன்னு நினைக்கறேன். அருமையாப் பாடறாங்க. பார்வையாளர்களுக்காக மேடைக்கு முன்னால் நிறைய நாற்காலிகளைப் போட்டு வச்சுருக்காங்க. Mae Hilda Jitoli ன்னு ஒரு பேனர் விரிப்பு இருக்கு. கொஞ்ச நேரம்இருந்துட்டு, கேஸினோக்குள்ளே நுழைஞ்சோம். வெளியே முன் முற்றத்தில்(?) பெரிய உலோக உருண்டைகள்அலங்காரத்துக்கு இருக்கு. இந்த உருண்டைகள் என்னவோ சேதி சொல்லுதோன்னு மனசுலே தோணுச்சு.
கையிலே வெறும் எட்டு டாலர்தான் இருக்கு. உள்ளே மணி மெஷின் இருக்கும் அதுலெ எடுத்துக்கலாமுன்னு இருந்துட்டோம். அங்கே எல்லாரும் க்ரெடிட் கார்டு போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. சில பாட்டிகள்கேஸினோ அங்கத்தினர் அட்டைகளை வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்காங்க. அஞ்சு செண்ட், ரெண்டு செண்ட், ஒருசெண்டுன்னு வெவ்வேற இயந்திரங்களில் இருக்கற எட்டை வச்சே விளையாடிக்கிட்டு இருக்கோம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கற நாள் போல. அப்பப்பக் காசைக் கலெக்ட் பண்ணிக்கறேன். த சவுண்ட் ஆஃப் மணி ( ஃப்ரம் பக்கத்து மெஷின் பாட்டி) இஸ் கூல்!!! இப்பக் கையிருப்பு அஞ்சு டாலர். நிறுத்திக்கலாமுன்னு தோணுச்சு. கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ரெண்டு மணி நேரம் ரெண்டுபேரும் விளையாடி இருக்கோம். மூணு டாலருக்கு இதைவிட மலிவான பொழுதுபோக்கு வேற எங்கே கிடைக்கும்? ஆனா நம்ம லிமிட் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அது முக்கியம்:-)
நான் 'மேலே போனபிறகு, உனக்கு ரொம்ப போரடிக்குமே. உனக்கு மெம்பர்ஷிப் கார்டு வாங்கித் தந்துர்றேன்னு சொன்ன கோபாலுக்கு, 'கார்டு எல்லாம் வேணாம். தினம் வரமாட்டேன். வாரம் ஒருநாள்தான்'னு சொன்னேன்.
மால் கார் பார்க்கிங் முழுக்கத் தானியங்கி. காசை வாங்கிக்கக்கூட மெஷிந்தான். மணிக்கு அஞ்சு டாலர். (இங்கே எங்கூர்லே மணிக்கு 2.20. அதுவும் முதல் ஒரு மணி இலவசம்.) கொள்ளை அடிக்கிறாங்கப்பான்னு சலிச்சுக்கிட்டு அறைக்குத் திரும்பிக் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்டு கிளம்புனோம்.
ஆட்டமெல்லாம் முடிஞ்சது. இப்ப ஆன்மீகம்.
சனிக்கிழமையா இருக்கே. இந்த ஊரு ஹரே கிருஷ்ணாவுக்குப் போகலாமுன்னு வலையில் விலாசம் தேடி, (95 Bank Road, Graceville) கிளம்பியாச்சு. 1972லே ஆரம்பிச்ச கோயிலாம். வாடகை வீட்டில் சில வருசங்கள்இருந்துட்டு 1985லே இப்ப இருக்கும் இடத்தை வாங்கிக் குடிபெயர்ந்துட்டாங்க. கோயிலைத் தொட்டு ஓடும் நதி அழகாவேஇருக்கு. நிறைய மரங்கள் வச்சுப் பராமரிக்கிறாங்க. ஆனாலும், கோயிலுக்கான ஒரு 'லுக்' மிஸ்ஸிங்(-:
முன்வெராந்தாவில் மேசை போட்டு, புத்தக விற்பனை. இடதுபுறம் இருக்கும் சமையலறையில் இரவு உணவுக்கு வேலை நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளே பூஜை ஹாலில் ஐம்பொன்னால் ஆன உருவச்சிலை. ஒரு இருபதுபேர் பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. ஏழுமணிக்கு ஆரத்தி எடுத்துட்டு அப்புறம் சாப்பாடு.
கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்தோம். என்னவோ மனசே ஒட்டலை. அதனாலெ சாமியைக் கும்பிட்டுட்டு கிளம்பிவரும் வழியில் ஒரு இந்தியன் கடையில் சாப்பாடு வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பியாச்சு. தொலைக்காட்சியில் நல்லுறவைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சிகளா வந்துக்கிட்டு இருந்துச்சு.
ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே........ சாயங்காலம் 'நம்ம பால்கனி'யில் உக்காந்து டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது,பக்கத்து அறையிலிருப்பவர் கதவைத் திறந்துக்கிட்டு பால்கனிக்கு வந்து சேர்ந்தார். ரெண்டு அறைக்கும் சேர்ந்தமாதிரி இருக்கு இது. நல்ல வயசான மனிதர். ஒரு எழுபது எழுபத்தியஞ்சு இருக்கும். நெடுநெடுன்னு உயரம். கொஞ்சம் கூன் போட்ட மாதிரி நடை.தலையெல்லாம் சுத்த வழுக்கை.குழி விழுந்த கண்ணில் எதோ கஷ்டம்போல இருக்கு. ரத்தக் கண்ணா இருந்தார். அறிமுக 'ஹை, நெய்பர்ஸ்' முடிஞ்சது. 'ஐயாம் கோயிங் டுபி ரூட்' உங்க அபார்ட்மெண்ட் பகுதியைப் பார்க்கப்போறேன்னு சொன்னார். காசா பணமா? பார்த்துக்குங்கோ. அட! ரொம்ப வசதியா இருக்கேன்னார். நாங்க போனபிறகு இங்கே மாத்திக்குங்கோன்னு சொன்னோம். இதுக்கு 50% கூடுதல் காசுன்றதை மட்டும் சொல்லலை.
இங்கே ஒரு பிஸினெஸ்ஸா வந்துருக்காராம். வீடு வாங்கிப்போடும் எண்ணமாம். இப்ப இருப்பது சிட்னி நகரமாம்.அவர் காமிச்ச ஒரு விளம்பர ப்ரோஷர்லே அட்டகாசமான இடம், இப்ப விலைக்கு வருது. ரெண்டு பக்கமும் கடல் தண்ணீர் இருக்கும் மனைகள். வெறும் மனையே எட்டு லட்சம் டாலர்கள். சன்ஷைன் கோஸ்ட் பக்கம் இருக்கு. 'கட்டாயம் ஒரு படகு வாங்கிக்கணும். அப்படியே வீட்டுமுன்னாலெ நிறுத்துனா ஒரு 'கெளரவமா' இருக்குமு'ன்னு சொன்னேன்.
ஆமாமாம். இவ்வளவு நல்ல மனையிலே வீடு கட்டணுமுன்னா அதுக்கு வேற காசு ரொம்ப வேணும். படகுக்கும் ஒரு பத்துலட்சம் டாலர்கள் வேணுமேன்னார். எல்லாம் பெரிய பெரிய பட்ஜெட்டுலே பேச்சு போய்க்கிட்டு இருந்துச்சு.எல்லாக் காசையும் இதுலே போட்டுட்டா அப்புறம் புவ்வா? தண்ணியைப் பார்த்துக்கிட்டே ப்ரெட் தின்னணுமோ(-:
என் மனைவியைக் கூட்டிட்டுவந்து காமிக்கணும். அவுங்களுக்குத்தான் கஷ்டமா இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் காரோட்டிக்கிட்டு வந்து என்னை வேலையில் விடணுமுன்னார். (பாவம். தினம் 4 மணி நேரம் காரோட்டிக்கிட்டு இருந்தா, வீட்டை எப்படி அனுபவிக்கறது?)
இந்த வயசுலே வேலையான்னு நான் முழிக்கறதைப் பார்த்துட்டு, எங்கே வேலைன்னு கோபால் கேட்டுட்டார். ஏர்ப்போர்ட்லே வேலையாம். அங்கே விமானத்தில் இருக்கும் ரேடியோ மற்ற தகவல் சாதனங்களைச் சரிபண்ணும் குழுவின் தலைவராம்.சிட்னியில் இருந்து இங்கே மாத்திக்கலாம்,பிரச்சனை இல்லை. ஆனால் அங்கே இவர் இதுக்கான பயிற்சிப்பள்ளியும் நடத்தறாராம். அதுவும் பிரச்சனை இல்லை. வாரம் ரெண்டொருநாள் போய்வந்துறலாமாம். ஆனால் திடீர்னு ஃப்ளைட்கிளம்ப ஒரு மணிநேரம் இருக்கும்போது ரேடியோ கண்ட்ரோல் வேலை செய்யலைன்னு அழைப்பு வந்துருமாம்.அப்ப எந்த நேரம் காலமுன்னு பார்க்காம ஓடணும். இவ்வளவு தூரத்துலே இருந்தா அது முடியுமான்றதுதான் முக்கிய பிரச்சனையாம். சொல்லிக்கிட்டே வந்தவர் திடீர்னு,
"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு நல்ல இடம் வாங்கிப் போடணுமுன்னு மனசுலே இருக்கு. அப்பத்தான் ரிட்டயர் லைஃப் அனுபவிக்க முடியும். இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு.
உருவத்தைப் பார்த்து எதையும் சொல்ல முடியலை:-))))
தொடரும்.................
25 comments:
பெண்கள் வயதைதான் கண்டுபிடிக்க கஷ்டம் என்று நினைத்தேன்..ஆம்பிளைக்குமா? :-))
அவருக்கு தமிழ் தெரிந்தால் இந்த பதிவை அனுப்பவும். "நொந்திடுவார்" இல்லை மனைவியிடம் இருந்து மறைத்திடுவார். :-))))
//இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு. //
ஆஹா உங்களுக்கு வயசு கம்மின்னு சொல்லிக்கறதுக்காக இப்படியா!!!
வாங்க குமார்.
பொதுவா ஆம்பிளைகளுக்கு வயசு தெரியறதில்லைன்னு என் எண்ணம். அதை
இப்படிப் புரட்டிப்போட்டுட்டாரே..........
அவருக்குத் தமிழ் எங்கே தெரியும்? நான் அந்தப் 'படகு'லே உக்கார்ந்து
சொல்லிக் கொடுத்தால்தான்:-)
வாங்க ச்சின்ன அம்மிணி.
எல்லாத்தையும் 'உள்ட்டாவா' புரிஞ்சுக்கிட்டீங்களா?
அவரு எங்களைவிட இளையவருங்க.
வாங்க டெல்ஃபீன்.
ஏற்கெனவே 'நீட்டி முழக்கி'ச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
இதுலே நீங்க வேற:-)
இனிமே இந்த 'நடை'யை விடமுடியுமா?
படிக்கிறவங்களுக்கு இனி திண்டாட்டம்தான்:-)
//"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு நல்ல இடம் வாங்கிப் போடணுமுன்னு மனசுலே இருக்கு. அப்பத்தான் ரிட்டயர் லைஃப் அனுபவிக்க முடியும். இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு.//
ஹ ஹா ஹா!!
உங்க வயசு பத்தின டீட்டெயில வெளில வுட்டுடீங்களே டீச்சர்!!!!
ஹ ஹ ஹா!!!
வாங்க CVR.
எங்கே? இந்த இடத்தில் 'நம்ம' என்பது மறுபாதி:-)
இல்லைன்னு நீங்க சொன்னால்......... அம்பத்தி நாலுக்கு 'மேல்'
எவ்வளவுன்னு சொல்லலையே:-))))
என்ன டீச்சர் நீங்க. 54 எல்லாம் சின்ன வயசுதான. 70 வரைக்கும் சின்ன வயசுதான். அதனால உங்களுக்கும் சின்ன வயசுதான்
good morning teacher.
.
//இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)///
இதுல கிடைக்குற சுகமே சுகம் தான்..
அது எல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும்.. எத்தன வருஷமானாலும் நீங்க இத மறக்காம இருக்கீங்களேக்கா...குஷ் ஹே
:-)))
பசிக்குது, மணி பன்னிரெண்டு ஆச்சு. இந்தியன் ரெஸ்டாரெண்ட் தேடணும்?
கொஞ்சம் பொறுங்க, இப்படியே நேரா போய் லெப்டுல திரும்பி, மூணாவது ரைட் கட்டிங்கு முனையில கோவில் இருக்கு,அங்க மதியம் சாப்பாடு போடுவாங்களாம். ஆனா மணி ரெண்டு ஆயிடும். அதுக்குள்ள இங்க சிட்டி மால் பக்கத்துல ஒரு
இந்தியன் தம்பதிகள் ஸ்நாக்ஸ் விக்கிராங்க, அங்க பாவ் பாஜி சூப்பராய் இருக்குமாம் அதை வேணா சாப்பிட்டுட்டு கோவிலுக்குப்
போகலாம்.
அம்மா, அவசரம்.
இருடா, இந்த ஆத்தங்கரையில இருந்து நேரா போன, ஒரு பெரிய ஷாபிங் மால் வரும், அங்க டாய்லெட் இருக்கும்.
துளசி, நீங்க போன நாடூ, ஊரூ பத்தி எழுதுறீங்க இல்லே, அதை காப்பி எடுத்து வெச்சிக்கிட்டேன். நாளைக்கு அந்த அந்த ஊரூக்குப் போகும்போது, நாலு வாட்டி அதைப் படிச்சிட்டுப் போனா, இப்படிதான் நடக்கும் :-)
என்னங்க ச்சின்ன அம்மிணி,
இதுதான் கோ.குவா? :-)))))
வாங்க பெருசு.
என்ன ரெண்டு மூணு வகுப்புலெ ஆளையே காணோம்?
வாங்க மங்கை.
இதுவும் ஒரு மெமரி ட்ரிக்கர்தான்:-)
வாங்க உஷா.
நாளைக்கு அங்கே போகும்போது எல்லாமே மாறி இருக்கவும் ச்சான்ஸ் இருக்கு.
இந்தியன் ரெயில்வேயிலேயே என்னமோ வெள்ளைக்காரன் சாப்பாடுகளாத்தான் இருக்கு.
இட்லிதோசை லிஸ்ட்டுலேயே இல்லையாமே(-:
பாவு பாஜிக்குப் பதிலா பீட்ஸா வச்சுக்கலாம்:-)
சாப்பட்ட்ராமிகள் பா
வாங்க சிஜி.
'ஒருநாள் உணவை ஒழி.............' சொன்னதும்
ஒரு 'ராமி'தானே? :-)))))
இத்தனை வயசுனு அவங்களுக்கெல்லாம் ஏதுப்பா. முப்பது நாப்பதுனு லட்சம் கணக்குப் பேசறவர் வாழ்க்கை பூரா உழைச்சுட்டு இருப்பார். பொண்டாட்டியையாவது சும்மா விடலாம்...அவளும் வண்டி ஓட்டியே வயசாயிடுவா:)))
கொசுறு ஜாடி நல்லா இருக்கே. அப்படியே பேருக்கேத்த மாதிரி ரெண்டு கோல்ட் காயின் போட்டுக் கொடுக்கக் கூடாதோ...
ரொம்ப வருசத்துக்கு முன்னால ஆனந்த விகடன் ஆசிரியர் மணியன் (இவர் கதையும் எழுதுவார்) பயணக்கட்டுரைகளை எழுதுவார். பின்னால அது புத்தகங்களாவும் வந்துது. அந்த மாதிரி நீங்களும் உங்க பயணக் கட்டுரைகள தனியா புத்தகமாவும் போடலாம் துளசி.
புகைப்படங்களும் சூப்பரா இருக்கு. அதுல அந்த பூனை (இல்லை நாயா) கூட்டுக்குள்ள தொங்கறது.. க்யூட்டா இருக்கு... நல்ல ரசனையோட எடுத்துருக்கீங்க..
வாங்க வல்லி.
//வண்டி ஓட்டியே வயசாயிடுவா:)))//
ஹா ஹா ஹா.......
அவரோட பிள்ளைங்க இப்படி வாங்கற ப்ளான் இருக்குன்னாலும் நம்பாதாம்!!!
எல்லாப் பசங்களும் ஒண்ணுதான் போல. நம்ம அப்பாஅம்மாவுக்கு இதெல்லாம்
வாங்க மனசு வராதுன்னு நினைக்குதுங்க.:-)
கொசுறுக் கப் இங்கே வாங்குனதுப்பா. கல் 2 டாலர்ன்னா கப் ரெண்டு டாலர்.
வாங்க டிபிஆர்ஜோ.
//நீங்களும் உங்க பயணக் கட்டுரைகள
தனியா புத்தகமாவும் போடலாம் துளசி//
அப்டீங்கறீங்க? உங்க புத்தகம் போட்ட அனுபவம்
கைகொடுத்தால் ஜமாய்ய்ச்சுறமாட்டேனா? :-))
அது நாய் சைஸ்லே இருக்கும் பூனைதாங்க. எங்க ஜிகேவும்
இப்படி ஒரு ச்சின்ன நாய் அளவுலேதான் இருக்கான்.
எல்லாம் வயசுக்கு மீறுன வளர்த்தி:-)
//'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூமோட கொடுத்துட்டதாலே இதை வாங்கிக்கலை.//
அவருதான் உங்களுக்குப் பாவப்பட்டு இடம் குடுத்து இருக்காருன்னு நினைச்சேன்.... :))
அப்பாடி, ஒரு வழியா தமிழ்மணத்துலே நம்ம பதிவு வந்துடுச்சு!
ம்ம்ம்ம்...இப்போதான் முதல் தடவையா உங்க தளத்துக்கு வரேன். பயணக் கட்டுரைகள் அருமை! மத்தது படிக்க நேரமில்லே. விரைவில்..
வாங்க கொத்ஸ்.
எங்கே சிலநாளா ஆளைக் காணோம்?
நீங்க சொன்னது ரொம்பச்சரி. அவருக்குப்போக மீதி வசதிதான் எங்க ரெண்டு
பேருக்கும். முன்னுரிமையெல்லாம் 'நாற்காலி' க்கே:-)
வாங்க தஞ்சாவூரான்.
முதல்முறையா வந்துருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?
தமிழ்மணத்துலே சேர்ந்தாச்சுல்லே. இனி 'நேரம் கொல்லி'க்கு
அடிமைதான் நீங்களும்:-)))))
நிதானமாப் படிக்கங்க. ஏகப்பட்டது இருக்கு:-)
Post a Comment