Wednesday, September 13, 2006

Sonic Boom

நேத்துப் பகல் சுமார் மூணு மணி இருக்கும். வீட்டுலே ஒரு சின்ன பூசு வேலைக்குஒருத்தர் வந்து வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார். திடீர்னு ஒரு பெரிய 'இடி' சத்தம்.வீடே ஒரு குலுங்கு குலுங்குச்சு. வெளியே நல்ல வெய்யில் வேற. ஆகாயமோ மேகமே இல்லாம ரொம்பச் சுத்தம்.எங்கியோ இடி இடிக்குதுன்னு ஒரு கணம் நினைச்சாலும் உள்ளே ஓடிப்போய்ப் பார்த்தேன்,பூசுவேலையில் சுவர் இடிஞ்சு விழுந்துருச்சோன்னு. ஊஹூம்....... நல்லவேளை அப்படி ஒண்ணும் இல்லை.


கொஞ்ச நேரத்துலேயே என்ன விஷயமுன்னு புரிஞ்சு போச்சு. விண் கல் விழுந்துருக்கு.சாயந்திரம் பூரா டிவியில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ரேடியோ மட்டும் ச்சும்மா இருக்குமா?அதுபாட்டுக்கு அது பங்குக்கு( இப்ப நானும் என் பங்கைச் சொல்லிட்டேன்)


எப்படியோ எங்கூருக்கு இப்படி ஒரு விளம்பரம் கிடைச்சிருக்கு.


அதிகப்படி விவரம் இங்கே பாருங்க.


இது இப்படி இருக்க இன்னிக்கு வேற ஒரு நியூஸ். அந்த விண்கல் விலைக்கு வேணுமான்னு இங்கே 'ட்ரேட் மீ' ன்ற சைட்டுலே வந்துக்கிட்டு இருக்கு. விஞ்ஞானிகள் சொல்லிட்டாங்க,ஒரு கால்பந்து அளவு கல்லுதான் விழுந்துருக்கு. அதுவும் அட்மாஸ்ஃபியர்லே நுழைஞ்சதும் தூளாச் சிதறிடும்னு.


இப்ப எந்தக் கல்லை விக்கறாங்கன்னு தெரியலையே(-:


'போலிகள் ஜாக்கிரதை! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்'

ஆகக்கூடி மனுஷன் எதுலேயும், எப்பவும் பணம் பண்ணத் தயாரா இருக்கான்!

23 comments:

said...

anbu thuLasi, hope everything is fine.

said...

வல்லி,

நன்றி. அதெல்லாம் ஒண்ணும் ஆகலை. நாடே நல்லாத்தான் இருக்கு.

இதுவே இவ்வளவு சத்தம்ன்னா, போர் நடக்குற இடங்கள் எப்படி இருக்கும்?

நினைச்சாவே நடுக்கமா இருக்குப்பா.

said...

துளசியம்மா...!

தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று சந்தோசப்படுங்கள் !

ஆமாம் உங்க ஊரில் மட்டுதான் இதுபோல் அதியம் எல்லாம் நடக்கிறதா ?

:)

said...

சும்மா வாங்கிப்போடுங்க
இந்தியாவுலே நல்ல விலை போகும்
இந்த்யாதான் good sellers market
ஆய்டுச்சே

said...

வாங்க GK.

ரொம்ப நாளா ஒண்ணும் நடக்காம 'டல்'ல்லா இருந்துச்சு நம்மூரு. இப்பக் கொஞ்சம்
'லிஃப்ட் கிடைச்சிருக்கு':-))))

இதாலே இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படலைன்றதே ஆறுதல்தான்.

said...

சிஜி,

'அப்டீங்கறீங்க?'

ஒரிஜனலான்னு தெரிஞ்சுக்கிட்டுப் பார்க்கலாம்.

விண்கல் நெக்லேஸ் போட்டா வாஸ்துப்படி நல்லதுன்னு சொல்லிட்டாப்போதும்:-)))

said...

//விண்கல் நெக்லேஸ் போட்டா வாஸ்துப்படி நல்லதுன்னு சொல்லிட்டாப்போதும்:-)))//

:))

said...

நல்லா இருக்கே கதை.
எனக்கு ஏஜென்சி கொடுக்கணும் சொல்லிட்டேன்.
வீட்டை சுத்தி இருக்கிற கல்லெல்லாம் எடுத்து அனுப்பிருங்க.
ஆமாம் கல் என்ன கலர்? பச்சை மஞ்சள் தான் இப்போ ராசி:-))

said...

என்னங்க!!
பூச்சு வேலையிலே சுவர் இடியுமா??
புதுசா ஏதாவது பயமுடுத்தாதீங்க.
:-))

said...

டீச்சர்,

பாத்து பத்திரம்! நியூஸ்ல மறு நிகழ்வு, முன்னெச்சரிக்கை பற்றி ஏதாவது சொன்னார்களா?

சயன்டிஸ்டுகள் பாவம் அவர்கள் வேலையைச் செய்யவுடாமல்,
"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்" ன்னு அறிக்கை கொடுக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டதா? என்னடா இது நியூசிக்கு வந்த சோதனை? (திருவிளையாடல் ஏமநாத பாகவதர் ஸ்டைலில் படிக்கவும்)!

said...

வந்ததுக்கு நன்றி கைப்புள்ளெ.


வல்லி,

இதென்ன பூலோக சமாச்சாரமா?

'விண்'ணும்மா விண்ணு. கலரெல்லாம் ஒரு மாதிரி கருப்பாத்தான் கிடக்கும்.

வர்றப்ப எரிஞ்சுருதுல்லே?

மனிதர்கள் புரிந்து கொள்ள இது மண்ணுலகக் கல் அல்ல:-))))


ஏஜண்டா பதிஞ்சுக்கறேன். நோ வொர்ரீஸ்.ரெஜிஸ்ட்ட்ரேஷன் ஃபீஸ் அனுப்பி வையுங்க:-)))

said...

வாங்க குமார்.
//பூச்சு வேலையிலே சுவர் இடியுமா??//

oops.....கட்டடக்காரர் இருக்கறதைக் கவனிக்கலை:-)))

said...

KRS,

மறு நிகழ்வு ஒண்ணும் சொல்லலை. ஆனா இப்ப

இப்படி ஒரு செய்தி

வந்துருக்கு.

said...

என்ன டீச்சர்...ஒங்க ஊருல மட்டுந்தான் விண்கல் விழுகுமா?

எங்க ஊர்லயும் விழுகுது கல்.

இலையில பொங்கல்
தலையில செங்கல் :-)))))))

விழுந்த கல்ல நீங்க மொதல்லயே ஓடிப் போய் எடுத்து வெச்சிருந்தா அத ரெண்டு கோடி ரூவாய்க்கு வித்திருக்கலாம்ல.

விண்கல்லுல கழுவுன தண்ணி மெடிசின். விண்கல்ல தெனமும் தொட்டுக் கும்புட்டா கண்ணு நல்லா தெரியும். விண்கல்ல படுக்கைக்குக் கீழ வெச்சுக்கிட்டா ஒடம்பு வலி வியாதி எல்லாம் போயிரும். விண்கல்ல பஸ்பம் பண்ணிச் சாப்பிட்டா இளமை மாறாம இருக்கும். இதையெல்லாம் யாரும் ஒங்க கிட்ட சொல்லலையா?

said...

வாங்க ராகவன்.

அடடா.... இந்த ஐடியா எல்லாம் 'சட்'னு எனக்குத் தோணலையே.

என் மாணவர்கள் எல்லாம் இப்படி 'குருவை மிஞ்சின சிஷ்யர்'களா
இருக்கறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா.

கற்ற 'கல்'வியை மறக்கக்கூடாது.
உங்களுக்கும் ஏஜன்ஸி வேணுமா? :-))))

said...

நமக்கு ஒரு 'விண்கல்' நெக்லெஸ் முன்பதிவு செய்து கொள்ளவும். கல்லெல்லாம் 'விண்கல்' போலாகுமா ?

said...

துளசியக்கா,

இதோ போர் நடக்குற இடத்துல இருந்த என்னோட நேரடி மினி அனுபவம்.

2003 மார்ச் கடைசில ஏதோ சதாம் ஹூசேன் புண்ணியத்திலே இங்க குவைத்தில நம்ம வீடு, அலுவலகம்னு ரெண்டு இடத்திலயும் 500மீட்டர் தொலைவில மிஸ்ஸைல் விழுந்ததைப் பார்த்தேன். மிஸ்ஸைல் ஆரஞ்சுக்கலர் ப்ளேமோட விழுந்து 2நொடிதாண்டி 'பம்ம்ம்'னு வந்த சவுண்ட்ல கட்டடமே லேசா ஆடினதில கொஞ்சம் ஆடித்தான் போனது மனசு.

விண்கல் மனுஷப்பயலுக்கு ஸ்பெஷலாச்சே. ஏஜென்ஸி தந்தா சீஸனல்/டாபிகல் வாஸ்து பிஸினஸ்ஸு செஞ்சிரலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

said...

வாங்க மணியன்.

உங்களுக்கில்லாத விண்கல் நெக்லேஸ்ஸா?

ஒரு பார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ஸேல்:-)

said...

ஹரிஹரன்,

500 மீட்டர் தூரத்துக்குள்ளெயா?

பயங்கரமா இருந்துருக்குமே!

//விண்கல் மனுஷப்பயலுக்கு ஸ்பெஷலாச்சே//

இது.........:-)))))))))))))

said...

துளசி எங்கேயும் மக்கள் ஒன்னாத்தான் இருக்கிறாங்க. இங்கே கூட விண்கலம் வெடித்தப்ப (கல்பனா இறந்துபோனாங்களே) உடனே எங்கேயோ சிதறின பாகங்களை எல்லாம் மக்கள் எடுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறமா அத வச்சுக்கிட்டா federal crime ன்னு சொல்லி திருப்பி வாங்கிட்டாங்க. வந்தவர்ரைக்கும் ஆதாயாம், என்ன சொல்றீங்க

said...

வாங்க பத்மா.

மனிதர்கள் எல்லாருமே அடிப்படையில் ஒண்ணுதான். இல்லீங்களா?

said...

துளசியக்கா!
மனிதன் எதையும்; புதுமையாகச் செய்து பிழைக்க முற்படுவது தவறா! எதற்கும் ஒரு துண்டு வாங்கி வையுங்கோ!
யோகன் பாரிஸ்

said...

யோகன்,

வாங்கிறலாங்கறீங்க:-)))

இன்னும் யார் யாருக்கு வேணுமுன்னு தெரிஞ்சா 'ஹோல்சேலில்' வாங்கிறலாம் :-))))0