Friday, September 22, 2006

கொலுவுக்கான அழைப்பு




"கொலு வைக்கறது எப்படி? "


"இது தெரியாதா என்ன? பொம்மைகளை கொலுப்படியில் அடுக்கி வைக்கணும்."


"அந்தப் படிகளை எப்படிக் கட்டப்போறே?"


"இது தெரியாதா என்ன? வழக்கமான டெக்னிக்தான். வீட்டுலே இருக்கற வீடியோ கேஸட்டுகள் பாக்ஸ் எங்கே இருக்குன்னு பார்த்து இங்கே கொண்டுவந்து வையுங்க."


"ம்........வச்சாச்சு."


"எத்தனை படிகள் வைக்கலாம்? ஒரு அஞ்சு போதும். என்ன சொல்றீங்க?"


"அஞ்சு படி போதுமா? சரி. அஞ்சு."


"உங்க இஷ்டப்படியே அஞ்சு படி வச்சுக்கலாம்."

"ஹா..........ங்........."

"அதுலே இருந்து கேஸட்டுக்ளை எடுத்து ஒண்ணு மேலே ஒண்ணா அடுக்குங்க. ரெண்டு வரிசை இல்லேன்னா மூணு வரிசை போதும். ஆனா ஒவ்வொரு வரிசையிலும் 15 கேஸட் வச்சிருங்க."


"உயரம் ரொம்பக் குறைச்சலா இருக்கேம்மா. "


"நீங்கதானே அஞ்சு படி போதுமுன்னு சொன்னீங்க."


"நானா....?"


"பின்னே? இப்ப பன்னெண்டு பன்னெண்டா அதே மூணு வரிசை."


"ஆச்சு."


"அடுத்து ஒம்போது ஒம்போதா மூணு"


"கேஸட் பத்தாது போல இருக்கே. இன்னொரு பாக்ஸ் கொண்டு வரவா?"


"உங்க இஷ்டப்படியே கொண்டு வாங்க."


"பயங்கர கனமா இருக்கேம்மா."


"இருக்காதா பின்னே? இப்ப ஆறு ஆறாய் மூணு வரிசை. இப்பக் கடைசிப் படிக்கு மும்மூணாய் மூணு. அஞ்சு படி வந்துருச்சா? போதுமாப் பாருங்க."


"போதும். போதும். தாராளம். மேலே என்ன கலர் துணி விரிக்கப் போற? அந்த ப்ளூ போட்டுறலாமா? "


"ம்ம்ம்ம்ம்ம்ம் போன வருஷம் ப்ளூதான் போட்டேன். இந்த க்ரீம் கலர் நல்லா இருக்கா? "


"நல்லாதான் இருக்கு."


"அப்ப உங்க இஷ்டப்படியே இந்த க்ரீம் கலர்! துணியை ரெட்டையா நீளமா மடிச்சு அப்படியே படிகள் மேலே கவர் பண்ணி உள்ளுக்குள்ளே பின்பக்கமா ஒவ்வொரு வரிசையிலும் செருகிவிடுங்க. சுருக்கம் வரக்கூடாது. ஆச்சா?"



"சைடுலே வெளியே நீட்டாம மடிச்சு ஒரு டேப் போட்டு ஒட்டிறவா?"


"உங்க இஷ்டப்படியே செய்யுங்களேன். என்னைக் கேக்கணுமா என்ன?"


"இப்பச் சரியா இருக்கான்னு பாரு."


"ம்ம்ம்ம் அந்த பொம்மைகளையெல்லாம் எடுங்க. இப்படி என் கைக்கு எட்டுற தூரத்திலே வச்சிருங்க."


"எதாவது கணக்கு இருக்கா எப்படி அடுக்கணுமுன்னு?"


"அதெல்லாம் பிரச்சனை இல்லை. அவள் விகடன்லெ அனுராதா ரமணன் கொலு பொம்மைகளைஎப்படி அடுக்கணுமுன்னு விவரிச்சு இருக்காங்களாம்."


"அப்ப அதே மாதிரி அடுக்கினாப் போதும்,இல்லையா?"


"ஏங்க இது நம்ம வீட்டுக் கொலு இல்லையா? நமக்குத் தெரிஞ்ச மாதிரி அடுக்கினாப் போச்சு."


"சரி. முதல் படியிலே என்ன வைக்கலாம்? "


"சாஸ்த்திரப்படி மரப்பாச்சி பெருமாளும் தாயாரும். அந்தச் சின்னக் கலசம், ரெண்டு பக்கமும் குத்துவிளக்கை வச்சுறலாம். அசங்காம எடுத்து வச்சு ப்ளக் போட்டு ரெடியா வச்சுருங்க."


"வச்சாச்சு."


"அடுத்தபடியில் பிள்ளையார்களை வச்சுறலாம்."


"கிருஷ்ணனை வைக்கலையா? "


"பிள்ளையார்கிருஷ்ணரை வச்சாப் போறது. ரெண்டு பேரும் சேர்ந்து அழகா இருக்குமே."


"மூணாவது படிக்கு?"


"யானைகள்தான்."


"நாலாவதோ? "


"கொஞ்சம் ச்சின்ன மிருகங்கள் வைக்கலாமுன்னு பார்க்கறேன். அந்த ச்சின்ன சைஸ் யானைகளையெல்லாம் தாங்க."


"அப்ப அஞ்சாவதுக்கும் யானை எதாவது வைக்கப் போறியா?"

"ஆமாமாம். அந்த குட்டியூண்டு சைஸ் யானகளையே வச்சுக்கலாம். "

"என்ன தீம் இந்த வருஷம்?"


"எல்லாம் யானைத் தீம்தான். அதான் நமக்கு ஆகி வருது."

"இங்கே பாருங்க, நாம் கொலுவுலே என்ன பொம்மை வைக்கிறோமுன்றது முக்கியம் இல்லை. எவ்வளோ ஆத்மார்த்தமா வைக்கிறோமுன்னுதான் பார்க்கணும். அதுவுமில்லாம சிரத்தையா மனசார கடவுளைக் கும்பிடணும், இந்த உலகம், அதிலுள்ள உயிர்கள் எல்லாம் நல்லா வளமா இருக்கணுமுன்னு."


"தினம் நைவேத்தியம் உண்டா இல்லையா?"


"ஏன் இல்லாம? பழங்கள்தான். தினம் ஒரு வகை. ஹெல்தி ஃபுட்தான் நல்லது."

"அப்ப ஸ்பெஷலா ஒண்ணுமே இல்லையா? "

"கொலுவுக்கு ஸ்பெஷல் பதிவு உண்டு. நம்ம வலை நட்புகளையெல்லாம் அழைக்கணுமே.இவ்வளோ தூரத்துலே வேற இருக்கோம். இண்டெர்நெட் யுகமாச்சே. பேசாம வாய்ஸ் மெயிலில் பாட்டுப் பாடி அனுப்பச் சொல்லணும். இவ்வளோ கேக்கறீங்களே,இப்படி ஒரு நிமிஷம் உக்காருங்க. சாமிக்கு ஆரத்தி எடுத்துறலாம். இப்ப நீங்க ஒருபாட்டுப்பாடி கொலுவை ஆரம்பிச்சு வையுங்களேன்."


"எனக்கு ஒரே ஒரு பாட்டுதான் தெரியும். அதையே பாடலாமா? "


"தாராளமா.........."

"எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச்சொல்லி.....
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்"


" நல்ல பாட்டுதான். நல்லாவும் பாடுனீங்க"

"அல்லான்னு சொல்லிட்டேனே பரவாயில்லையா? "

"கடவுளுக்கு பேதமே கிடையாது. தப்பே இல்லை."

இன்னிக்கு அமாவசைக்கு ரெண்டு பொம்மை எடுத்து வைக்கலாமுன்னு ஆரம்பிச்சு, கொலுவை அடுக்கியே வச்சாச்சு.

அவுங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்துட்டு பாட்டுப் பாடி அனுப்பிவிடுங்க.பாடத்தெரியலை இல்லை முடியலைன்னா வருகைப் பட்டியலில்பதிஞ்சு வையுங்க.

எத்தனைபேர் வராங்கன்னு தெரிஞ்சால்தான் சுண்டலுக்கு ஏற்பாடு செய்ய முடியும்:-)

117 comments:

said...

வந்தேன் வந்தேன்! முதல் ஆளாய் வந்தேன்.


பதிவக்கூட முழுசா படிக்கலை! போட்டோ பாத்துட்டு சுண்டல் க்யூவுக்கு ஓடி வந்துட்டேன். சுண்டல் பார்சல் எனக்குத்தான் பர்ஸ்ட்!

இப்போதான் இங்க அடுக்கவே ஆரமிச்சுருக்கு.

said...

துளசியம்மா ...!

கொழுக்கட்டை உண்டா ?
நமக்கு அதானே முக்கியம் !

:)

said...

இரண்டு வருடங்களுக்கு முன் வரை நடந்த அனுபவங்களை கண் முன் கொண்டு வந்த பதிவு.

தினமும் என்ன சுண்டல் என்று மெனு கொடுத்தால் வருகை பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

:-)

said...

வாங்க ராம்ஸ்.

தம்பின்னா தம்பி தங்கக் கம்பி. இப்படித்தான் இருக்கணும். அக்கா வீட்டு வேலையெல்லாம்
இழுத்துப்போட்டுச் செய்யறதுலே என் தம்பியை மிஞ்ச ஆள் இல்லைன்னு எனக்கு ஏகப்பட்ட
பெருமையாக்கும்.

சுண்டல் என்ன பெரிய்ய சுண்டல்? தம்பிக்கில்லாததா?

//இப்போதான் இங்க அடுக்கவே ஆரமிச்சுருக்கு.//

நிறைய பொம்மைகளும், ஐடியாக்களும் இருந்தா அடுக்க லேட் ஆகும்தான்.

நமக்கோ எப்பவும் ஒரே 'தீம்' தான்:-)

said...

ஜிகே,

வந்து இப்படி உக்காந்து ஒரு பாட்டுப் பாடுங்க.

மெனுலே கொழுக்கட்டை இருக்கான்னு பார்க்கலாம்?

சீனக் கொழுக்கட்டை பரவாயில்லையா?

said...

நன்மனம்,

பேவரிட் சுண்டல் என்ன வகைன்னு தெரிஞ்சாத்தானே ஊறவைக்கிறதுக்கு?

ம்ம்ம் சொல்லுங்க. உங்க விருப்பம் எதுன்னு:-)

said...

ஆரம்பமே ப்ரமாதம். உக்காந்த இடத்தை விட்டு நகராம கொலு வச்ச முதல் ஆளு நீங்கதான்.

போன வருஷம் ஸ்விஸ்ல எம்ப்டி கார்ட்டன்கள் மேல புடவை பின் செய்து கொலு வைத்தோம்.
இந்த வருடம் திவான் மேல தான் வைக்கணும்.

said...

அந்த நாளில் நாங்க சுண்டல் வாங்கப்போனதே

சுண்டலுக்காக தான்

நம்புங்க!!

பொம்மைகள் எல்லாம் இப்பதான் பளிச்சுன்னு இருக்கும்.மீதி நாளெல்லாம் கொஞ்சம் அழுக்காக இருக்கும்.

:-))

said...

துளசி

சின்ன பொண்ணா இருக்கப்போ எப்படா இந்த கொலு வைப்போம்னு இருக்கும்..அந்த 9 நாட்களுக்காக வருசம் முழுதும் காத்துட்டு இருப்போம்.. இந்த வருசம் என்ன புதுசா பன்னலாம்னு போட்டி போட்டு பன்னுவோம்.. அட்டைல வீடு, மாடி வீடு, லைட் ஹவுஸ், கோபுரம்னு.

சாயந்திரம் ஆனா பட்டு பாவாடை எடுத்து கட்டீட்டு,குங்கும சிமிழ் எடுத்துட்டு வீடு வீடா போய் அழைசிட்டு...

அந்த நினைவுகள் தான் இப்ப நம்மல rejuvenate பன்னுது

ஹ்ம்ம்ம் அது ஒரு காலம்..

நல்லா இருக்கு துளசி.. நான் வரப்போ சக்கரை பொங்கள் பண்ணுங்க..

(கொல்டிங்களுக்கு அது தான் பிடிக்கும்னு யாரோ சொன்னாங்க.. ஹிஹிஹி)

said...

நானும் வந்துட்டேன் துளசிம்மா, சுண்டல் வரிசைக்கு 9 நாளும் 9 வகை இருக்கணும். நடுவுல ஒரு நாள் கொழுக்கட்டை, ஒரு நாள் சர்க்கரைப் பொங்கல் அவசியம்

எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு தெப்பக்குளமும் வச்சுருங்க... நமக்கு தெப்பக்குளம் அத சுத்தி கொஞ்சமா கடுகு மாதிரி சீக்கிரமா வளர்ற செடிகளைப் போட்டு உள்ள அன்னம் வாத்து படகு கப்பல்னு எதயாவது மிதக்கவிட்டாத்தான் கொலு நிறைஞ்சாப்ல இருக்கும்! ஏன்னா சின்ன வயசுல என் Dept அதான் ;-)

said...

வல்லி,
இந்த எம்ப்ட்டி கார்ட்டன் சரிப்படாதுப்பா. ரொம்பப் பெரிய படிகளா ஆயிருது.
அதுக்கு திவானே மேல்.

said...

குமார்,

இப்பெல்லாம் பொம்மைகள் எப்பவுமே பளிச்தான். ஷோ கேஸ்லே எப்பவுமே கொலுதான்.

அதையெல்லாம் 'யஹாங் ஸே வஹாங் & வஹாங் ஸே யஹாங்' தான்:-))))

said...

மங்கை,

//நல்லா இருக்கு துளசி.. நான் வரப்போ சக்கரை பொங்கள் பண்ணுங்க..

(கொல்டிங்களுக்கு அது தான் பிடிக்கும்னு யாரோ சொன்னாங்க.. ஹிஹிஹி)//

எதாவது உள்குத்து இருக்கோ?

said...

துளசி என்னை நானே சொல்லீட்டேன்.. கொல்டின்னு..

உள்குத்து எல்லாம் இனி தான் பழகனும்..

said...

வாங்க ராசுக்குட்டி.

சரியாப்போச்சு. கார்பெட்லே கோலம் போட வழி இல்லாம ஸ்டிக்கரை போர்டு பின் குத்தி
வச்சுருக்கு. (-:

குளம் வேணுமுன்னா வெளியேதான் வைக்கணும். நான் ச்சும்மா இருக்க முடியாம
ஒரு பழைய பாத் டப்பை தோட்டத்துலே வச்சு வாட்டர் லில்லி வச்சுருக்கேன்:-)

said...

மங்கை,

//துளசி என்னை நானே சொல்லீட்டேன்.. கொல்டின்னு.. //

நீங்களுமா?

என்னைச் சொல்றீங்களோன்னு நினைச்சேன்:-)

said...

"ஆனை முகத்தோனே.............."
பாடியாச்சு....சுண்டல் எங்கே?

said...

இதோ வந்தாச்சு.

ஆமா தலையாட்டி பொம்மை கொலுவில உண்டா??

இல்லை அதுக்கு பதிலா கோபால் சாரை உக்கார வைக்கப் போறீங்களா?

ஹி...ஹி...

said...

துளசி நீங்களுமா... ஆஹா... அப்படியா...அப்ப கண்டிப்பா சக்கரைப்பொங்கள் உண்டு

said...

துளசி,

ந்யூஸிலாண்டில் இருந்துகொண்டு அழைத்தால் வரமாட்டோம் என்று நினைத்தீர்களா? சுண்டலுக்காக நாங்கள் ஏரோப்ளேன் பிடித்தாவது வந்துவிடுவோம். திரும்பி இந்தியாவிற்கு வர டிக்கெட் செலவுக்கு? வழக்கமான ட்ரிக்தான். டிக்கெட் வாங்கித் தராவிட்டால் மீண்டும் ஒரு பாட்டு பாடிவிடுவோம் என்று மிரட்டி உங்களை டிக்கெட் வாங்கவும் வைத்துவிடுவோம்.

அப்படியே நாங்கள் அங்கே வரமுடியாவிட்டால் அங்கே இருக்கும் தெரிந்தவர்களின் ஒன்றுவிட்ட மச்சினியின் மூன்றாவது சகலையின் நான்காவது மாட்டுப்பெண்ணின் மகனுடைய நண்பனுக்கு ஃபோன் போட்டு சுண்டல் வஸூல் செய்ய சொல்லிவிடுவோம். ஜாக்கிரதை.

said...

Nice post thulasi
inga singapore vanda appuram..just 3 padi dan..and chinna chinna bommaidan..
India la irukkum..bodu..it was differetn..
missing those days

said...

வாங்க சிஜி.

இதோ ஊற வச்சாச்சு:-)

said...

சுதர்சன்,

கோபால் சார் அவ்வளோ பாக்கியம் செய்யலைப்பா.
பயந்துக்கிட்டு நாட்டை விட்டுப் போயிட்டார்:-)
பேசாம உங்களையே உக்கார வச்சுரலாமான்னு ஒரு யோசனை!

said...

மங்கை,

தமிழில் எழுதும் பல வலைஞர்கள் 'நம்ம' கூட்டத்தில் இருக்காங்கப்பா:-))))

சக்கரைப் பொங்கள்= சக்கரைப் பொங்கல் னு வச்சுக்கலாம் ப்ளீஸ்.

said...

வாங்க அனிதா.

காலம் போகப்போக ஒரு படியா
ஆனாலும் ஆகிரும். என்ன செய்யறது சொல்லுங்க?

பழைய நினைவுகள் வந்து பாடாப் படுத்துதுதான்(-:

said...

ஓஹோ அப்போ 'நம்ம'
சங்கம் உண்டா?

சக்கரைப் பொங்கல் எப்போ?
சரஸ்வதி பூஜைக்கா?/
திவான் ஆடாது. கார்ட்டன் போல.

இன்னும் பொம்மைகள் கீழே வரவில்லை.:-))
வலை நம்மளைக் கட்டிப் போடுது.

said...

வாங்க ம்யூஸ்.
நல்லா இருக்கீங்களா?

//அப்படியே நாங்கள் அங்கே வரமுடியாவிட்டால் அங்கே இருக்கும்
தெரிந்தவர்களின் ஒன்றுவிட்ட மச்சினியின் மூன்றாவது
சகலையின் நான்காவது மாட்டுப்பெண்ணின் மகனுடைய
நண்பனுக்கு ஃபோன் போட்டு சுண்டல் வஸூல்
செய்ய சொல்லிவிடுவோம். //

இது... :-)))))))))))))

said...

கொலுவுலே என்ன பொம்மை வைக்கிறோமுன்றது முக்கியம் இல்லை. எவ்வளோ ஆத்மார்த்தமா வைக்கிறோமுன்னுதான் பார்க்கணும். அதுவுமில்லாம சிரத்தையா மனசார கடவுளைக் கும்பிடணும், இந்த உலகம், அதிலுள்ள உயிர்கள் எல்லாம் நல்லா வளமா இருக்கணுமுன்னு."//

கரெக்ட். அதான் முக்கியம்.

அந்த ஸ்டைலா படுத்துருக்கற புள்ளையார் க்யூட்டாருக்காருங்க.

அது சரி.. இங்கயே இப்பல்லாம் சிடிதான். அங்க இன்னமும் வீடியோ கேசட்டுதானா.. அதுவும் கொலு படி வைக்கற அளவுக்கு வச்சிருக்கீங்களா? தேவைதான்:)

said...

வல்லி,
'நம்ம' சங்கம் மூணு மாசம் ஆச்சு ஆரம்பிச்சு.

ஸ்ரீ ராம் நவமி கொண்டாடுனாங்களாம்.

நான் போகலைப்பா. கொஞ்ச நாள் பார்க்கணும் எப்படிப் போகுதுன்னு:-)

அவுனு காதா?

வழக்கமா விஜயதசமிதான் நம்ம வீட்டுலே விசேஷம்.

இந்த வருசம் அதையும் அடக்கி வாசிக்கணும்.

எப்படியும் தீபாவளிக்கு முன்னாலே ஒருநாள் ஏற்பாடு செஞ்சுரணும்.

பாவம், நம்ம சாமி. 'தேமே'ன்னு வந்து உக்கார்ந்துருக்கு. வருஷம் ஒரு நாளாவது உற்சவம் செய்யணும் இல்லையா?

said...

//மெனுலே கொழுக்கட்டை இருக்கான்னு பார்க்கலாம்?

சீனக் கொழுக்கட்டை பரவாயில்லையா?//


துளசி அம்மா !

சீன கொழுக்கட்டையா ...?
நன்றாக இருக்கும் அதன் பெயர் பாவ் (pav) என்று சொல்வார்கள், வெள்ளை மற்றும் பிங்க் கலரில் இருக்கும், இனிப்பு மற்றும் அசைவ வகையில் கிடைக்கும் !

நான் இனிப்பு மட்டுமே சாப்பிட்டு இருக்கேன்.

said...

நவராத்திரி முதல் நாளன்று தயிர்சாதம்தான் படையல்(நைவேத்யம்).
சுண்டல், கொழுக்கட்டை, சக்கரைப்பொங்கல் எல்லாம் இனி வரும் நாட்களில்தான்.

தாங்கள் கேட்டுக்கொண்டபடி இன்று நவராத்திரி பற்றிக் கதை விடுகிறேன். கைவிரலில் சிறு கொப்புளம். பரவாயில்லை.
இறைவனை வேண்டுவதற்குமுன் என்னியும் நினைவில் கொண்டால் போதும். தின்பண்டங்கள் வருவதற்குள் ஊசிப்......

Anonymous said...

சுண்டல் க்யுல நானும் சேந்துக்குறேன்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

புள்ளையார்க்கென்னங்க, கொடுத்து வச்சவர். ஹாய்யா படுத்துக்க முடியும்:-)

இப்ப நமக்கும் விஸிடியும் டிவிடியுமாத்தான் வருது. இதெல்லாம் முந்தி வந்துக்கிட்டு
இருந்தது. சொந்த கலெக்ஷன், க்ளப்புக்கு வாங்குனதுன்னு ஏகப்பட்டது கிடக்கு.

அதையெல்லாம் எப்படி எங்கே கழிச்சுக் கட்டறதுன்னு தெரியலை. ரப்பிஷ் டம்ப்லே
போடறதும் கஷ்டம். ப்ளாஸ்டிக் ஆச்சே! மனசும் வரமாட்டேங்குது, சினிமாவைத் தூக்கிப்போட.

ஹிந்திப் படங்கள்தான் இப்ப கொலுவிலே! தமிழ்ப் படங்களை ஒரு அலமாரியில் வச்சுருக்கேன்.
எப்பவாவது தோணுச்சுன்னா பார்க்கலாமேன்னு. ஹிந்திக்கு வந்த கதியைப் பாருங்க:-)
எப்படியோ அதுக்கும் ஒரு பயன் வந்துச்சு பாருங்களேன்:-)

said...

ஜிகே,

இங்கே பாவ் ரெடிமேடாவே கிடைக்குது. கவலையை விடுங்க. எல்லாம் ச்சீனர்கள் உபயம்தான்.

said...

வாங்க ஞானவெட்டி அண்ணா.
வணக்கம். நல்லா இருக்கீங்களா?

தயிர்சாதம்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்பீல் ஏது?

மக்கள்ஸ், தயிர்சாதக் க்யூ மட்டும் இப்படி வந்து உக்காருங்க.:-)

கைவிரலில் கொப்புளமா? பத்திரம். கவனமா இருங்க. மருந்து போட்டீங்களா?
நவராத்திரி கதைகளை சொல்லுங்க அண்ணா.

தின்பண்டங்களுடன் ஒரு ஊசியும் வச்சால் போச்சு:-)

said...

WA,

வாங்க வாங்க.வராதவுங்க வந்துருக்கீங்க. இதுக்குத்தான் பண்டிகைகள், நல்ல நாள் கொண்டாடுறது.

நம்ம வீட்டுக் கியூவிலே உக்கார்ந்துக்கலாம். வாங்க. உங்களுக்கில்லாத சுண்டலா?

said...

கொலுவுக்கு வந்தாச்சு!
'அலைபாயுதே கண்ணா'ன்னு பாட யாரு இருக்கா?

said...

வாங்க இளா.

என்ன.....? யாரு.... இருக்காவா?

ஏன் யாரோ பாடணுமுன்னு நினைக்கிறீங்க?
நீங்களே பாடலாம். அப்பத்தான் சுண்டல்:-)

said...

"நான் பாடலாஆஆஆஆஆம்"
"அலைபாயுதே ராதே" அப்படின்னு பாடினா ஏற்கனவே இருக்கிற ராதை-தங்கமணி எனக்கு கிடைக்கப்போற சுண்டலை கிடைக்கவிடாம பண்ணிருவாங்க. அதான் பாடாம இருக்கேன்.

said...

நான் வேணாச் சொல்லட்டுமா தங்கமணிகிட்டே,
'அதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்சும்மா. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையாக்கும்'னு :-)))

said...

அம்மாடி!,
நவராத்திரி - முன்னுரை
போட்டாச்...

said...

அன்பு நன்மனம்! கவனிக்க!!
**************************
துர்க்காதேவி-படையல் அட்டவணை.
***********************************
ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்
திங்கள் - வெண்பொங்கல்
செவ்வாய் - தக்காளி சாதம்*
புதன் - புளியோதரை
வியாழன் - எலுமிச்சம்பழ சாதம்
வெள்ளி - தேங்காய் சாதம், பாயசம்
சனி - காய்கறி கலந்த அன்னம்

said...

hi akka,

The golu is super. we kept in our home also. Include my name also in your sundal list

said...

சூப்பர் நீட்டா இருக்கு. ஒவ்வொரு படியிலும்
கோலம் போல தெரிவது என்ன கோல டேப்பா?

said...

மாமாவோட இஷ்டப்படி(?) அமைஞ்ச கொலு சூப்பர். இந்த சின்ன சின்ன யானைங்கள எங்கே பிடிச்சிங்க? அருமையான அணிவகுப்பு.
(சரி சரி மிச்சமிருக்கிற சுண்டல இப்படி தள்ளுங்க.)
ஆயுத பூஜ அன்னைக்கு பொரி கடல வாங்கவாவது முன்னடியே வரப் முயற்சி பணறேன்

said...

வாங்க ஞானவெட்டியண்ணா.

மெனு கொடுத்ததுக்கு ரொம்ப சந்தோஷம். நம்ம மக்கள்ஸ் எல்லாருக்கும்
ரொம்ப உதவியா இருக்கு.

இன்னிக்கு காய்கறிகள் கதம்பசாதமா? ஜமாய்ச்சுறலாம்.

தினம் ஒரு பதிவா இந்த நவராத்திரிக்குப் போடுவீங்கதானே?

said...

மீனாப்ரியா,

வாங்க வாங்க. உங்களுக்கில்லாத சுண்டலா? என்ன சுண்டலுன்னு சொல்லலியே.

said...

ஆதிரை,

அதேதான். கரெக்ட்டாக் கண்டு பிடிச்சீங்க. கோலம் போட வழி இல்லாம்
ஸ்டிக்கரை முன்னாலே வைக்கலாமுன்னு பார்த்தா, அந்த பாக்ஸ்லே ரெண்டு
கோலம் பார்டர் ஸ்டிக்கர் இருந்துச்சு. பத்துமான்னு கவலை. நம்ம அதிர்ஷ்டம்
ஒவ்வொரு பாக்கெட்லேயும் மூணு. அளவும் சரியா அமைஞ்சு போச்சு.

அப்புறமென்ன? இந்த வருஷம் மனசுக்கு ரொம்பத் திருப்தியா அமைஞ்சது.

ப்ளூடாக் ரொம்ப வசதியா இருக்கு,

said...

"வினாயகனே! வினை தீர்த்தவனே"
அக்கா, பாடியாச்சு, DHL லே சுண்டல் அனுப்பவும்.

said...

அதென்ன ப்ளூடாக்? fரீயாக் கிடைக்குமா/

முதல் நாள் சனிக்கிழமை புரட்டாசி.
அதனால் எள்ளு போட்டு சுண்டல் செய்யலாம்.
தயிர் சாதமும் +கறுப்பு கொண்டக் கடலையும் எங்க வீட்டு வழக்கம்.மஹாலய அமாவாசை அன்னிக்கே புதுசா மஞ்சள், பாக்கு,வெத்திலை,கண்ணாடி வளையல்கள்,எட்டணாக்கள்,சீப்பு,குட்டிக் கண்ணாடி எல்லாம் ரெடி. எல்லோரும் கொலுவுக்கு வாங்க.

said...

வாங்க மதி.

எங்கே, எந்த நாட்டுக்குப்போனாலும் யானை வாங்கிட்டு வர்றதுதான் பொழைப்பாப் போச்சே:-)))
துணி, மரம், கல்லு, கிறிஸ்ட்டல்னு எந்த வகையா இருந்தாலும் 'ஹை.. இது நம்மகிட்டே இல்லையே'ன்னு
வாங்கிக்கறதுதான். இப்பப் பொண்ணுக்கும், அப்பாவுக்கும் கூட ட்ரெய்னிங் கொடுத்து வச்சுட்டொம்லெ.
அவுங்களும் யானை, புள்ளையார்ன்னு எதாவது பார்த்தா விடறதில்லை:-)))) ஒரு 250 தேறும் இப்போதைக்கு.

said...

வல்லி,

எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டீங்க.
தோ.....வண்ட்டேன்:-)))

இந்த Blu Tack re-usable adhesive தான்ப்பா. ஆணி கீணி அடிக்காம
சுவரைப் பாழாக்காம போஸ்ட்டர் ஒட்ட, படங்கள் மாட்ட ன்னு எல்லாத்துக்கும்
வசதி. ஒண்ணோடொண்னு ஒட்டிவைக்கவும் , முக்கியமா வேணாமுன்னா திருப்பி
எடுத்து உருட்டி வச்சுக்கலாம். ப்ளாஸ்ட்டிசைன் மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

ப்ரீ இல்லை, காசு கொடுத்து வாங்கணும்:-)

said...

வாங்க பெருசு.

இப்படி உக்காந்து முழுப்பாட்டையும் பாடுங்க. சுண்டலை அனுப்பிடலாம்:-))))

said...

ஆகா...டீச்சர் வீட்டிலும் யானையா? சரி நம்ம முதல் பதிவ போடறோம். கஜ பூஜை போட்டுறலாம்-ன்னு போட்டுட்டு, இங்க வந்தா...
எங்கும் யானை எதிலும் யானை!

இப்ப வந்து சுண்டல் வாங்கிக்கறேன். கொலு முடிஞ்சப்பறம் இன்னொரு தபா வர்றேன். எங்கள படம் பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இந்த டீச்சர் எவ்ளோ வீடியோ காஸெட் வாங்கி வச்சிருக்காங்கன்னு கணக்கு எடுக்கணும் :-)

அம்பாள், அல்லா, அன்னை மரி அனைவரும் கொலுவிருக்க இனிய நவராத்திரி வாழ்துக்கள்!

said...

KRS,

சொன்னா நம்பமாட்டீங்க. எங்க வீட்டு ஆட்டீக்லே எனக்கொரு மேரியின் சிலை கிடைச்சது.
அது இப்ப நம்ம வீட்டு பூஜை ரூமில் இருக்கற ஷோ கேஸில் இருக்கு. ரெண்டு கை கூப்பி
வச்சுருக்கற Our lady of Fatima.

said...

நவராத்திரி பதிவு போட்டாச்சு!!!

said...

நல்லா இருக்கு சாரே...

said...

//நல்லா இருக்கு சாரே...//

ஹா........... இது உமக்கே நல்லா இருக்கா? சரி. சார் வந்ததும் சொல்லிடறேன்.

said...

ஞானவெட்டியண்ணா,

பதிவைப் பார்த்தாச்சு. சூப்பர்!

said...

பாட்டுதானே...ம்ம்ஹ்ம்ம்ம்

அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரீஈஈஈஈஈஈஈஈஈஈ
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
டும்டும்டும்டும்டும்
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

பாடியாச்சு...கொழுக்கட்டை, சுண்டல், ஞானவெட்டியான் ஐயா சொன்ன காய்கறி கலந்த சோறு...எல்லாம் வந்து எனக்குக் குடுங்க...

said...

கொலு அருமை....சுண்டல் எங்கே?

said...

டீச்சர்! எனக்கும் கொஞ்சம் சுண்டல் தாறீங்களா?........ எனக்கு ஒரு டவுட் டீச்சர், அதேப்படி நீங்க பதிவு போட்டா மட்டும் மொத பக்கத்துல வருது, நான் போட்டா, எங்க இருக்குன்னே தெரிய மாட்டேங்குதே?!.................

said...

வாங்க ராகவன்.

உங்க பாட்டு அருமை. பாடிக்கிட்டே வந்து கடைசியிலே

ம்ம்ம்ம்ம் மலை ஏறுவியா........? ஆஆஆஆஆஆ
டூன்ங்ட்டுட்டுங் டூன்ங்ட்டுட்டுங் டூன்ங்ட்டுட்டுங்

//காய்கறி கலந்த சோறு...எல்லாம் வந்து எனக்குக் குடுங்க...//

வர்றப்பக் கொடுத்தாப் போதுமுல்லெ?:-)

said...

பாரதீயமாடர்ன்ப்ரின்ஸ்,

வாங்க, வாங்க. நல்லா இருக்கீங்களா?

சுண்டல்தானே? இதோ....
சு ண் ட ல்.
பேசாம ஒரு சுண்டல் படத்தைக் கூடவே போட்டுருக்கலாம்,இல்லே? :-)))

said...

மிக்கி மெளஸ்,

வாங்க. புதுசுங்களா? வந்தது சந்தோஷம். இதோ சுண்டல்.

ஆமாம், நீங்க சொல்றது புரியலையே(-:

அதான் 'பதிவு போட்டா முதல் பக்கம்'?

ஸ்க்ரீன்லே மேலேருந்து கீழா மூணு பகுதி இருக்கு.
இடது பக்கம் தமிழ்மணம் நிர்வாகிகள் ( அப்படின்னு நினைக்கிறேன்)
வலது பக்கம் பின்னூட்டம் மாடரேஷன் போட்டு இருந்தீங்கன்னா பின்னூட்டம்
வரவர அங்கெ காமிக்கும்.
நடுவுலே இருக்கறது நம்ம பதிவை இடதுபக்கம் இருக்கற 'உர்ல் அளி'யிலே
அளிச்சா வர்றது. அதுவும் கொஞ்சநேரம்தான் காமிக்கும். புதுப் பதிவுகள் வர வர
அது கீழே இறங்கிருது.

இதெல்லாம் எல்லாருக்கும் பொதுதான். நானும் கூட்டத்தில் கோவிந்தாதான்:-)))

said...

துளசியக்கா!
நானும் உள்ளேன். சுண்டல் உண்டுதானே!
சிக்கன கொலுவா??? நடக்கட்டும்.
யோகன் பாரிஸ்

said...

சுண்டல் சூப்பர். என்னைத் தயிர் சாத லிஸ்டில் சேர்த்துக்குங்க.

said...

வாங்க யோகன்.
//சிக்கன கொலுவா???//
அவசரத்துலே சிக்கன் கொலுவா?ன்னு படிச்சுட்டு
ஒரு கணம் 'ஆடி'ப் போயிட்டேன்.:-))))

said...

கொத்ஸ்,

தச்சு பாம்( தச்சு மம்மு) தினமும் உண்டு.
தாராளமா வாங்க.

said...

கொலு அழகு..மணல்வீடு வச்சு பார்க் எல்லாம் வைக்கலியா..சூப்பர் கொலு.

said...

நெல்லைசிவா,

பார்க், மணல் எல்லாம் இருக்கு. ஆனா வீட்டுக்கு வெளியிலே:-))

அட தாமரைக்குளம் கூட இருக்குங்க. நிஜமாத்தான். எல்லாம் தோட்டத்துலே வச்சுருக்கேன்.
அங்கெயும் கார்டன்நோம்ஸ் இருக்காங்க.

said...

கொலு சூப்பர். என்ன சுண்டல் இன்னிக்கு ?

ஒரு பாட்டு கேளுங்க

http://www.emusic.com/album/10835/10835109.html

said...

வாங்க ஜெயஸ்ரீ.

பாட்டு லிங்க் கட்டாயி கட்டாயி வருது. பரவால்லே. இந்தப்
பாட்டு எங்கிட்டே ஏற்கெனவே சிடி இருக்கு. உங்க பேரைச் சொல்லி
ஒருக்காக் கேட்டுக்கிட்டு இருக்கேன்:-))))

சுண்டல் செய்யலை. ஒருத்திக்கு எவ்வளன்னு செய்யறது?

சாமிக்கு பத்திய சாப்பாடுதான்.

பழங்கள். இன்னிக்கு ஹனி ட்யூ மெலன்.

said...

ஹலோ அக்கா,
//" நல்ல பாட்டுதான். நல்லாவும் பாடுனீங்க"//
நல்ல பதிவுதான். நல்லாவும் எழுதியிருக்கீங்க.

எனக்கும் சுண்டல் சூடா பார்சல்ல்ல்!

said...

வாங்க கெளதம்.

இதோ....சுண்டல் அனுப்பியாச்சு.

வேற 'ஊசி' வாங்கிக்குங்க, 'போயிருந்தால்':-))
'நூல்' கட்டாயம் இருக்கும்.

said...

"ஆனந்த சாகரா முரளீதரா...
மீராப்ரபு ராதேஷ்யாம் வேணுகோபாலா
நந்தயசோதா.. ஆனந்த கிஷோரா..
ஜெய் ஜெய கோகுலபாலா ஜெய வேணுகோபாலா.."

ம்ம் துளசியக்கா,

பாட்டு பாடியாச்சு, பார்சல் உண்டுதானே! சுண்டல், தயிர்சாதம், பச்சைக்கற்பூரம்+ நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்னு DHL expressல சூடு ஆறுமுன்பு அனுப்பி வைக்கவும்.

குவைத்லேர்ந்து நம்மாத்து நவராத்திரி நைவேத்யம் அனுப்பியிருக்கேன் வந்ததுதான்னு சொல்லுங்கோக்கா!

அன்புடன்,

ஹரிஹரன்

said...

துளசியக்கா,

இந்த வார பூங்காவில் தங்களது "சிக்கு புக்கு ரயிலே" பயணக்குறிப்பு பகுதியில்
பிரசுரமாகியிருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன் ,
ஹரிஹரன்

said...

சுண்டல் எல்லாம் தீர்ந்து விட்டதா ?
சரி, வந்ததிற்கு நானும் பாடிவிட்டிப் போகிறேன்..."பொம்மக்கோல் பட்சணம், வீட்டைப் பார்த்தா இலட்சணம், சுண்டல் தராட்டி அவலட்சணம் .."

said...

ஹரிஹரன்,

வாங்க வாங்க.

பாட்டு சூப்பர் போங்க. 'குரலும்' நல்லாவே இருக்கு.
அதுலெயும் ரெண்டு இடத்துலே 'வேணு கோபாலா'ன்னு வர்றது
ரொம்பவே பிடிச்சுப்போச்சு:-)

அனுப்புன பிரசாதங்களும் அற்புதம்( ஆமா என்னென்ன
நைவேத்யம்னு சொல்லி இருக்கலாமுல்லே?)

இதோ உங்களுக்கு பார்ஸல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ரெடி.


பூங்காவிலெ வந்துருக்குன்னு நீங்க சொன்னபிறகுதான் பார்த்தேன்.
ரொம்ப தேங்க்ஸ் அறிவிச்சதுக்கு.
சிஜியும் மெயில் அனுப்புனார்.
ஸோ......... பயணக்கதைகளுக்குத்தான் டிமாண்ட்டோ? :-)))

said...

பண்டு ரங்க விட்டலே ஹரி நாராயண!
புரந்தர விட்டலே ஹரி நாராயண!
ஹரி நாராயண பஜ நாராய!
ஹரி நாராயண பஜ நாராய!
விட்டலா ஹரி விட்டலா!
விட்டலா ஹரி விட்டலா!
விட்டலா ஹரி விட்டலா!

(சுண்டல் இருக்கா தீர்ந்துடுச்சா...!?)

said...

அக்கா,

யதேச்சயாப் பாடின "வேணுகோபாலா" பாட்டு அக்காவின் மனம் கவர்ந்ததில் மகிழ்ச்சி!. குரல் வளத்தினை பாராட்டியமைக்கு நன்றிகள்.

நேற்றைய மடப்பள்ளி ஸ்பெஷல்:
ரவா கேசரி + பாசிப்பயறு சுண்டல்

இன்னிக்கு நைவேத்தியம் சர்க்கரைப்பொங்கல் + தட்டாம்பயறு சுண்டல்.

பயணக் கதைகளில் இடங்கள் தானே ஹீரோ. கருத்துக்களும் திணிக்கப்படாதது பயணக் கட்டுரைகளில் தானே. எனவே வெகுதியான விருப்பு வருவது இயல்புதானே!

அன்புடன்,

ஹரிஹரன்

said...

சிபி,

வாங்க. என்ன ஒரே பஜனை மடமா இருக்கு.:-)))
அம்பாள் மேலெ ஒரு பாட்டுப் பாடக்கூடாதா?

சுண்டல் செய்யலை. விதவிதமான ப்ரூட்ஸ்தான். சாமி பத்தியம்.

said...

ஹரிஹரன்,

கதை அப்படிப்போறதா? :-)

said...

"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் ..தேவி...."

பாடியாச்சு! சுண்டல் பொட்டலமா கட்டி கொடுத்துடுங்க!

said...

வாங்க மணியன்,

நேத்து இப்படித்தான் ஒரு அஞ்சுவயசுக் குழந்தை 'நர்ஸரி ரைம்ஸ்' சொன்னது.
இப்ப நீங்களும் அந்த வரிசையிலா? :-))))

said...

அ.ஆ,

அதானே ஊமையே பேச்சு வந்து பாடின பாட்டை
ஆவியாவந்து பாடுனது...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

சுண்டல் பொட்டலம் மொதக்கறது காத்துலே:-)

said...

டீச்சர்
சுண்டல் இருக்குங்களா வரலாமா...இல்ல தீர்ந்துபோச்சா??

said...

வாங்க கப்பி,

உங்களுக்கு ஸ்பெஷல் சுண்டல் இருக்கு:-)

Anonymous said...

ரொம்ப லேட்டா வந்துவிட்டேன் போல இருக்கே. சுண்டல் பாக்கி இருககா?

வீடியோ கேசட் படிகள் அற்புதம். நம்பவே முடியவில்லை. அற்புதமான அழகு. கொலு தெய்வீகக் களை இப்போதே...
நீங்க தான் யானை ஸ்பெஷலிஸ்டாச்சே யானைகள் வழக்கம் போல க்யூட்.

said...

வாங்க வலைஞன்.

அதெல்லாம் லேட் இல்லை.
பண்டிகை முடிய இன்னும் 7 நாள் இருக்கு:-)

//யானைகள் வழக்கம் போல க்யூட். //

ரொம்ப நன்றி.

Anonymous said...

ஆக பாக்காத கேக்காத பட கேஸட்டெல்லாம் இதுக்குதான் வாங்குறீங்கன்னு தெரிஞ்சு போச்சு. இதுக்கு இப்படி ஒரு உபயோகத்த கண்டுபிடிச்சு அசல் கிவின்னு நிரூபிச்சுட்டீங்க. பேடன்ட் அப்ளை பண்ணுங்க. சுண்டல் தீர்ந்து போச்சுன்னா fish & chipsஆ?

said...

இதாங்க பெரும்பிரச்சனை ஒங்க கூட, எப்ப வந்தாலும், தொண்ணூறு, நூறுன்னு கமண்ட் இருந்தா, நாங்கல்லாம் எப்படி கமண்டு போடறதுன்ன்னு வாணாம்?

said...

ஆஹா.... வராதவங்கெல்லாம்கூட வந்துருக்கீங்க?
காலையில் மழை பெய்ய ஆரம்பிச்சவுடனேயே நினைச்சேன்,
அதிசயம் எதோ நடக்கப்போகுதுன்னு. அப்படியே ஆச்சு.

நல்லா இருக்கீங்களா பிரகாசு. ? உங்களுக்காகவே இன்னிக்கு ஸ்பெஷல்
சுண்டல் பண்ணிடறேன்.

என்னங்க இப்படி 90,100யே அதிகப்படியாச் சொல்லிட்டீங்க?
அங்கங்கெ போய்ப் பாருங்க, எப்படி 200,300ன்னு அடிச்சுக்கிட்டுப் போகுதுன்னு.

said...

சுரேஷூ,

இந்த ஃபிஷ் & சிப்ஸ் நல்ல ஐடியாவா இருக்கேப்பா:-)))

நவராத்ரின்றதாலே சிப் & சிப்ஸ் இருக்கட்டுமே ப்ளீஸ்:-))))

said...

அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது அல்வாப் பொட்டலம் மட்டுமே!

சுண்டல் அல்ல!

ஏதோ ஊழல் நடந்து இருக்கிறது!

said...

அ.ஆ,

ஒரு ஊழலும் இல்லீங்க. சுண்டல் தீர்ந்து போச்சுன்னு 'அல்வா' வச்சுருந்தேன் பார்சலில்:-)

said...

மனதுக்கு நிறைவான பதிவு.

Anonymous said...

துள்சிமேடம்ம்ம்ம்ம்ம்ம்...வந்துட்டேன் நானும்! வலைத்தளம் வந்ததும் முதல்ல உங்க கொலுக்குதான் ஆஜர்!
என்ன பாட்டு பாடணும்?(கூட்டத்தைகுறைக்கத்தான்!!)
ஷைலஜா

said...

துளசி

100 ஆவது பின்னூட்டம் என்னோடதா இருக்கட்டும்...

வாழ்த்துக்கள்

மங்கை

said...

அட! ஷைலூ.

வாங்க வாங்க. ஜெர்மனியை 'வென்று' வந்தாச்சா?

said...

மங்கை,

இப்பத்தான் பார்த்தேன் 100வது என்னோடதேப்பா.

said...

ஆ...! கொலு 100 படியில் கட்டியாச்சு !
:))

said...

வாங்க ராதாராகவன்.
பிடிச்சதா? நன்றிங்க.

அடிக்கடி வந்துட்டுப் போகணும்ங்க..

said...

ஜிகே,

வாங்க வாங்க.
103 படி ஆயிருச்சு.
உயரம் கூடிப்போச்சோ?

said...

என்னோடது 105ங்க டீச்சர்ம்மா.....
:-))))

said...

வாங்க ராம்.

எண் விளையாட்டா? அய்யோ கொத்ஸ்க்குச் சொல்லிறாதீங்க ப்ளீஸ்.

said...

ஏங்க என் கிட்ட சொல்லக் கூடாது? :)

said...

//எண் விளையாட்டா? அய்யோ கொத்ஸ்க்குச் சொல்லிறாதீங்க ப்ளீஸ். //

சிங்கம் தூங்கிட்டு இருக்கார்.....

said...

ஐ யம் வெரி சாரி கொத்ஸ், தெரியமா நீங்க தூங்கிட்டு இருக்கிறதா சொல்லீட்டேன்.

said...

ராம்,

சிங்கம் முழிச்சுக்கிட்டார்ப்பா.


கொத்ஸ்,

அதெல்லாம் ச்சும்மா.
நம்பரை ஏத்தி விட்டுறப் போறிங்களேன்னு ஒரு திகில்:-)

said...

ராம்,

மாட்டிகிட்டீங்க சிங்கம்கிட்டே.

நான் ஜூட்:-)

said...

லேட்டா வந்தவங்களுக்கும் பிரசாதம் உண்டு அல்லவா! எப்படியும் பத்து நாளில் ஒரு நாளைக்குக் கண்டிப்பாகக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்,
என்னுடைய வருகை.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

என்ன சிவா இப்படிக் கேட்டுட்டீங்க?

கொலு முடிஞ்சபிறகு வந்தாலும்கூட
பிரசாதம் கிடைக்கும்:-))))

( சமைக்காத உணவு!)

said...

நானெல்லாம் நவராத்திரி ரெண்டாம் நாள்ல இருந்துதான் வசூலுக்கு கிளம்பறது வழக்கம், அதான் வழக்கம் மாறாம இன்னிக்கி வந்திருக்கேன் (சோம்பேறின்னு சொல்ல வேண்டியதுதான, அதுல என்ன சப்பைகட்டு) அதுக்குள்ள 113 பேர் சுண்டலுக்கு வந்திட்டாங்களா... மிச்சம் மீதி எதுவும் இருக்கா?

அந்த காலத்துல ரெண்டு - ஒண்ணு இனிப்பு, ஒண்ணு காரம் - ziploc (வெறும் ப்ளாஸ்டிக் பைதான், சும்மா உதாருக்கு இந்த பேரு) பைங்கள தூக்கிகிட்டு வசூலுக்கு போவோம். ஃபிகர் பாக்கன்னு இல்லாம உண்மையிலேயே சுண்டலுக்கு அலைஞ்ச அப்பிராணி பருவம். ரொம்ப வருசமாச்சி நவராத்திரி சுண்டல் சாப்பிட்டு. fedex next day airல ரெண்டு பொட்டலம் அனுப்பி வைங்க. பாட்டு வேணுமின்னா podcast ஆ அனுப்பி வைக்கிறேன். (ஆனா அதை ஒலிபரப்ப மாட்டீங்க... நவராத்திரியில கானா பாடல் எல்லாம் போடுவீங்களா என்ன?)

said...

வாங்க முகமூடி.

நீங்க வந்ததே சந்தோஷம்.

கானா எல்லாம் நம்ம சாமிக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமாச்சேங்க.
நீங்க பாடுங்க.

said...

துளசி,
சாமி இது என்ன இத்தனை பேருக்கு எப்படி சுண்டல் பொட்டலம் கட்டினீங்க?
நிஜமா அருமை துளசி.இந்த அன்பு என்னிக்கும் நீடிக்க வாழ்த்துக்கள்.இதோ அம்பாள் பாட்டு.
அம்பா நீ இரங்காயெனில் புகலேது?
நீயே கதி ஈஸ்வரீஈஈஈஈ
சிவகாமி தய சாகரீஇ

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
எம் அம்மையே உமையே!
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ
கை காட்டும் தேவியோ
அம்பாஆஆஆஆஆஆ
கரூணைக் கடைக்கண் பார்!!
ஜகம் புகழும் ஜகதம்பாஆ

பாட்டுப் போறுமா.
போதாதுனா சொல்லுங்க,
கூகிள்லே பாடி அனுப்பறேன்.
அப்புறம் ஜிகே பயந்துடும்.

said...

வாங்க வல்லி.

உங்க பாட்டு ரொம்ப ஜோர்.

ஆமா ... "மலை ஏறுவியா

ஏறமாட்டேன்.... ஈஈஈஈஈஈஈஈஈஈ"

இதையெல்லாம் விட்டுட்டீங்க! பரவாயில்லைப்பா.
நானே அதையும் சேர்த்து பாடிட்டேன்:-))))

சாமிங்க எல்லாம் என்னைப் பார்த்து ஒரே முறைப்பு:-)