ஒரு மணி நேரத்துலே 'ஸ்ப்ரிங் ஃபீல்ட்' ஸ்டேஷன் வந்துச்சு. அஞ்சு நிமிஷம் நிக்குமாம். வெளியே வந்தால் கைக்கு எட்டும் தூரத்துலே வெள்ளிப் பனிமலை. எல்லாரும் 'க்ளிக் க்ளிக் க்ளிக்' இந்தியர் ஒருத்தர்( அநேகமா தென்னாப்பிரிக்காவா இருக்கலாம்) நம்மை படம் எடுக்கவான்னு கேட்டு நம்ம கேமிராவுலே எடுத்து உதவி(?) செஞ்சார். உள்ளெ ஏறிப்பார்த்த பிறகுதான் தெரியுது முக்கியமான விஷயமான 'பேக் ட்ராப்'பைக் கோட்டை விட்டுருக்கார். இந்த ஸ்டேஷனிலே'அந்த ஊர் பேக்கரியிலே இருந்து சுடச்சுட மஃப்பின் வந்துருக்கு. சீக்கிரம் போனா வாங்கலாமு'ன்னு நம்ம ட்ரைவர்/கைடுசொன்னார்.
பைனாப்பிள் & சாக்லேட் மஃப்பின். நல்லாவே இருந்தது.
ச்சின்னச் சின்னதா டன்னல்கள், ப்ரிட்ஜுகள்னு வந்துக்கிட்டு இருந்துச்சு. ஒவ்வொரு இடத்தையும் நம்ம கைடு வர்ணிச்சுக்கிட்டே இருந்தார். ரெயிலில் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள், தடை ஏதும் இல்லாம பார்க்க வசதியா இருந்துச்சு. எல்லாமே டபுள் க்ளேஸ்டு. 23 டிகிரியிலே உள்ளெ நல்லா அருமையான கதகதப்பு. வெளியே திறந்தவெளியிலே நின்னு படம் எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் ஒரு ஓப்பன் டெக் இருந்துச்சு. மொத்தம்12 பெட்டிங்க. ரெஸ்ட்ரூம்/கழிப்பறைகள் எல்லாம் நீட் & டைடி.
ச்சின்ன ஆறுகள், ஓடைகள்ன்னு கடந்து போய்க்கிட்டு இருக்கோம். ஆள் அரவமே இல்லாத அத்துவானக்காடு. அங்கங்கேசில மாடுகள், ஆடுகள், சில இடங்களிலே குதிரைகள். இவுங்க எல்லாம் தண்ணீர் குடிக்க அங்கங்கே தண்ணீர்தொட்டி கட்டி வச்சிருக்காங்க. தண்ணீர் தீரத்தீர தானே நிரப்பிக்கும் வகைகள். நல்ல விஷயம்.
ஆர்தர்ஸ்பாஸ் என்ற ஸ்டேஷன் வந்துச்சு. இது கடல் மட்டத்துலே இருந்து 737 மீட்டர் உயரத்துலே இருக்கு. "இங்கே இருந்து ஒரு மலையைக் குடைஞ்ச டன்னல் வழியா ரெயில் போகப்போகுது. டன்னல் நீளம் எட்டரை கிலோ மீட்டர்.'வியூயிங் டெக்' கை மூடிருவோம். ( இல்லேன்னாமட்டும் குகைக்குள்ளே போறப்ப என்ன வியூ தெரியுமாம்?) ஏன்னா.....?தற்கொலை செஞ்சுக்கறவங்க அங்கே இருட்டுலே ரெயில்லே இருந்து குதிக்கிறாங்க'ன்னு கைடு சொன்னதும் ஆடிப்போயிட்டேன். சாவறவங்க எதுக்கு இருட்டுக்குள்ளெ குதிக்கணும்? ஒரு வேளை உயிர் போகாம பிழைச்சுட்டா உதவிக்கு யாரும்போக முடியாம நாறிடமாட்டாங்களா? என்ன அநியாயமா இருக்குடா சாமி.
எக்ஸ்ட்ரா எஞ்சினுங்க வந்து சேர்ந்துக்குச்சு. ஏற்கெனவே ரெண்டு எஞ்சினுங்க இழுத்துக்கிட்டுப் போகுதுங்க. இப்பப் பின்னாலே மூணு எஞ்சினுங்க. 33 மீட்டருக்கு ஒரு மீட்டர்ன்ற கணக்குலே ஏத்தம். 1908 லே குகையை வெட்ட ஆரம்பிச்சாங்களாம். 5 வருசத்துலே முடிக்கணுங்கற திட்டம். ஆனா 15 வருஷம் வேளை இழுத்துருச்சாம். மலைக்கு ரெண்டு பக்கத்துலே இருந்தும் ஒரே சமயத்துலே வேலை ஆரம்பிச்சு வந்துக்கிட்டே இருந்தாங்களாம். இப்ப இருக்கறமாதிரி மாடர்ன் மெஷினரி இல்லாத காலக் கட்டம். கடைசியிலே ரெண்டு பகுதியும் இணைஞ்சப்ப வெறும் 19 மில்லிமீட்டர் இடைவெளி வித்தியாசம்தானாம். ஒண்ணொண்ணும் ஒரு பக்கம் போயிருந்தா கதை கந்தலாயிருக்கும்.
ரெயிலுக்குள்ளே மூணு ஜயண்ட் ஃபேன் வச்சு, பெட்டிகளுக்கு காத்தோட்டம் வந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு 25 நிமிஷம்ஆச்சு, வெளிச்சம் பாக்க. மொத்தம் 19 டன்னல்கள், 5 வயாடக்ட். இதுலே ஒரு வயாடக்ட்( viaduct) தெற்குத்தீவுலேயே உசரம் கூடியது. 73 மீட்டர் உயரத்துலே 146 மீட்டர் நீளம். இன்னொரு பாலத்துக்கு இந்த வருசம் வயசு 100 ஆச்சாம்.
இங்கே Coast to Coast ன்னு ஒரு ரேஸ் நடக்கும். அதுக்கு மேற்கே 'க்ரேமவுத்' என்ற ஊர்லே இருந்து ஆரம்பிச்சு,சைக்கிள், படகு, சைக்கிள், படகுன்னு மாறிமாறி வந்து கடைசியா ஓட்டத்துலே வந்து 'கிறைஸ்ட்சர்ச்'சுலே முடிப்பாங்க.அவுங்க எந்தெந்த இடத்துலே க்ராஸ்செஞ்சு வருவாங்கன்னெல்லாம் கைடு சொல்லிக்கிட்டே வந்தார். அந்தப் பாலங்களையும்காமிச்சார். (படங்கள்தான் இந்த ஸ்பீட்லே சரியா வரலை. பெட்டிக்குள்ளே இருந்து எடுத்ததெல்லாம் டபுள் க்ளேஸாலேரிஃப்ளெஷன் வந்துருச்சு) க்ரேமவுத்( Greymouth) வந்து சேரும்போது மணி பகல் 12.45. நாலரைமணி நேரமாயிருக்கு,231 கிலோ மீட்டர் தூரத்துக்கு.
இங்கே ஒரு மணி நேரம் நிறுத்தம். 1.45க்குக் கிளம்பி வந்த வழியே போகணும். இந்த ஒரு மணி நேரத்தை ஊரைச்சுத்திப் பார்த்துட்டு, திரும்பறப்ப சாப்புட்டுக்கலாமுன்னு முடிவு செஞ்சோம். முந்தியே சில தடவை வந்துட்டுப்போன ஊர்தான். அப்பக் கார்லே வந்தோம். சின்ன டவுன். க்ரே ரிவர் கடலோட கலக்குற இடம்தான் ஊர். மலைப்பாதையிலே வளைஞ்சு வளைஞ்சு கார் ஏறும்போது பயமா இருக்கும். நல்ல காலம் இப்ப அங்கேயும் புது வயாடக்ட் 'ரோடு ட்ரான்ஸ்போர்ட்'க்குப் போட்டுட்டாங்க. அது போட்டபிறகு நாங்க இந்த ஊருக்கு வரலை. பக்கத்துலே இருக்கற இன்னொரு ஊர்லே நிலக்கரி சுரங்கம்.அங்கே இருந்து நிலக்கரி இந்த ஊருக்கு வந்து ரயில் சவாரியிலே நாட்டோட கிழக்குப் பகுதிக்கு வந்துருது ஏற்றுமதிக்கு. இந்தவசதிக்குப் போட்ட ரெயில்பாதைதான் இப்ப டூரிஸ்ட் அட்ராக்ஷனா ஆயிருக்கு. ஒரு காலத்துலே தங்கச்சுரங்கமும் இருந்துச்சு.ஆனா எல்லாத்தையும் சுரண்டியாச்சுன்னு விட்டுட்டாங்க.
ஊர் அப்படிக்கு அப்படியேதான். முந்தி வந்ததுக்கு இப்ப ஒண்ணும் புதுசா மாற்றம் வந்துறலை. ஆங்........ புதுசா நவநாகரீக கழிப்பறை கட்டி வச்சுருக்காங்க. கலர் லைட்டுங்க ஜிகுஜிகுன்னு ஓடிக்கிட்டுப் பாட்டுவேற பாடுது. இவ்வளோஅட்ராக்ஷன் எதுக்குன்னு பார்த்தா......... இதுக்குத்தான். சட்டுப்புட்டுன்னு போயிட்டு வர்றவங்களுக்குத்தான் இது லாயக்கு போல.( மேல் விவரம் படத்தில்) நம்மூர்லேயும் இப்படி வசதிகள் செய்யற காலம் எப்ப வருமோ?உள்ளூர் நியூஸ் பேப்பர் புதுக் கட்டிடத்துலே இருக்கு. எல்லாமெ கண்ணாடி. உள்ளே ப்ரிண்டிங் மெஷீன் சுத்தறதைக் கொஞ்சம் வேடிக்கைப் பார்த்துட்டு வந்தோம். எல்லாம் இலவசப்பேப்பர்தான்.
திரும்பி வந்து வண்டியிலே நம்ம இடம் எதுன்னு பார்த்தா, போறப்ப இருந்த அதே பக்கம். போர்டிங் பாஸ் கலெக்ட்செய்ய வந்தவர்கிட்டே சொல்லிட்டு இன்னொரு பெட்டியிலே போய் எதிர்ப்பக்கமா உக்கார்ந்துட்டு வந்தோம். அப்பத்தானே ரெண்டு பக்கக் காட்சிகளும் முழுசாப் பார்த்த திருப்தி. இன்னொருக்கா கைடு சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டே சரியா சாயந்திரம் 6.05க்கு ஊர் வந்து சேர்ந்தாச்சு.
நல்ல ட்ரிப்தான். உலகப்புகழ் பெற்ற ரயில் பயணங்கள் பட்டியலில் இதுவும் இருக்காம். (எத்தனாவது ரேங்க்குன்னு யாரும் கேக்கப்பிடாது, ஆமாம். இருக்குன்றதே இப்பத்துப் பெருமை.) கூட்டம் இல்லை. நஷ்டத்துலே ஓடுது. ரயில் பெட்டிகளை 'அப் க்ரேடு' செய்யணும்( எல்லாம் அருமையாத்தான் இருக்கு. பொழுதண்ணிக்கும் ஒரு அப் கிரேடு என்ன வேண்டி இருக்கு?) அதுக்கு நிறைய செலவாகும். அதனாலே இந்த ரெயிலுக்கும் ஆப்பு வைக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்காங்களாம். நல்லவேளை, அதுக்கு முன்னாலே போய்வரச் சான்ஸ் கிடைச்சது.
நமக்கு வேணுமுன்னா இந்த டிக்கெட்டை ரிட்டர்ன் ட்ரிப்பை ஒரு நாலஞ்சு நாளைக்கும் தள்ளிப் போட்டுக்கலாம். 15 நாள்வரைக்கும் தள்ளலாமாம். அதுக்கெல்லாம் நேரம் கிடைக்கணும். நமக்கோ எப்பவும் காலிலே வெந்நீர் ஊத்திக்கிட்டமாதிரிபதைப்பு. அப்படியும் ஒரு பத்து மணிநேரத்துக்குக் கோபாலைக் கட்டிப்போட்டாச்சுல்லே:-)))))
திரும்பி வரும்போது ஒரு இந்திய இளஞ்ஜோடியைப் பார்த்தோம். தேன் நிலவுக்கு வந்திருக்காங்க. எந்த ஊருன்னு கேட்டோம், கோலாப்பூர்னு சொன்னதும், எனக்கு ஞாபகம் வந்தது 'ஆஹா...மஹாலக்ஷ்மி'கோயில்.நம்ம ஆளு சொல்றாரு 'ஓஓஓ அங்கே செருப்பு ரொம்ப ஃபேமஸ் இல்லே?'ன்னு. நேரம் இருந்தா வீட்டுக்கு வாங்கன்னு விலாசம் கொடுத்தோம்.மறுநாள் காலையிலே கிளம்பிடுறாங்களாம்.
நீங்களும் இந்தப் பக்கம் வந்தா கட்டாயம் இதுலே ஒரு ட்ரிப் அடிங்க. நல்ல வித்தியாசமான ஒரு அனுபவம்.
Saturday, September 16, 2006
சிக்கு புக்கு ரயிலே (பாகம் 2)
Posted by துளசி கோபால் at 9/16/2006 12:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
நாங்க வரும் வரை அந்த ரயில் இருக்கனும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வோம்.
ஆமாம் ஆங்கில எழுத்துக்கு கீழே என்ன "பிரெயில்" எழுத்தா?
நல்ல எண்ணம்.
ஆமாங்க குமார். அது ப்ரெயில் எழுத்துதான்.
நீங்க வர்றவரைக்கும் இருக்கும். இல்லாம எங்கே போகப்போகுது
அந்த மலைகள்? :-)))))
ரயில்...? விதி இருந்தா இருக்கும்.
"யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்"-நிரூபிக்கிறீங்க.
சரளமான எழுத்து நடை.
நல்லா இருக்கு
//அங்கங்கே தண்ணீர்தொட்டி கட்டி வச்சிருக்காங்க. தண்ணீர் தீரத்தீர தானே நிரப்பிக்கும் வகைகள். //
இந்த தொட்டிங்க கொஞ்சம் தமிழ்நாட்டுப் பக்கம் அனுப்புங்களேன். அப்புறம் தண்ணிப் பஞ்சமாவது ஒண்ணாவது!
கோபாலைப் பத்து மணிநேரத்துக்குக் கட்டிப் போட்டாச்சில்ல.
அழகான மலைப் பயணம்.
லெமன் ரைஸ்,சிப்ஸ் எல்லாமெ சூப்பர். நீங்க ஸ்விஸ்ஸில க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் போனிங்களா.
மூச்சு விடவே மறந்துவிட வைக்கும் அழகு. ரயில் பயணம் நீளாதா?;-((
//கடைசியிலே ரெண்டு பகுதியும் இணைஞ்சப்ப வெறும் 19 மில்லிமீட்டர் இடைவெளி வித்தியாசம்தானாம். ஒண்ணொண்ணும் ஒரு பக்கம் போயிருந்தா கதை கந்தலாயிருக்கும்.//
இது மாதிரி ஒரு சர்தாரி ஜோக் உண்டு.
வாங்க சிஜி.
எதோ நம்மாலான உதவி:-))))
நேத்து உங்க பின்னூட்டம் பார்த்த பிறகு நல்ல தம்பி & பைத்தியக்காரனைத்
தேடினேன். கிந்தன் கிடைக்கலை. ஆனால் நல்ல தம்பியிலே ஒரு
தெருக்கூத்து கிடைச்சது.
இந்திர லோகத்தைவிட தமிழ்நாடு எவ்வளவு நல்லா இருக்குன்னு
சொல்றாங்க. கேட்டுட்டு ஒரு பெருமூச்சுதான் விட முடிஞ்சது.
அதுலே சொல்ற தமிழ்நாட்டுக்கும், இப்ப இருக்கறதுக்கும் ...........
போட்டும், ஏணி எங்கே இருக்குன்னு சொல்லுங்க. எட்டுதான்னு பார்க்கலாம்.
கொத்ஸ்,
தண்ணித் தொட்டிங்களை அனுப்பிறலாம். பிரச்சனை இல்லை.
ஆனா....தண்ணீ?
வல்லி,
சுவிஸ்லே வெறும் மூணுநாள்தான் இருந்தோம். பெர்ன், ஜெனிவா, லுஸெர்ந்தான் பார்க்க முடிஞ்சது.
எல்லாம் பஸ் ட்ரிப்தான். ட்ரெயினில் போகலைப்பா(-:
கோபால் அங்கே மவுண்ட் ப்ளாங் போயிருக்கார் கேபிள் கார்லே.
அமுக,
ஜோக்கை சொல்லிருங்களேன். நல்ல ஜோக் தானே?
துளசியக்கா,
ரொம்ப வருழம் கழிச்சு இந்தமுறை சென்னையிலேர்ந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ்லேயும் திரும்ப வரும் போது போடி-மதுரை பாஸஞ்சர் மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ்ன்னு ரயில் பயண தாகத்தைத் தீர்த்துக்கிட்டேன்.
அன்புடன்
ஹரிஹரன்
ஹரிஹரன்,
பசங்க நல்லா எஞ்சாய் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
இவ்வளோ ரயில் ரசிகர்கள் இருக்காங்க பாருங்களேன்:-))))
அக்கா,
ஓடுற ரயில் வாசப்படியிலே உக்கார்ந்துகிட்டு வளைவில் நமக்குப் பின்னாடி "ஆர்க்" அடிக்கிற 15 பெட்டிகளைக் காண்பது, ரயிலுக்குள்ளேயே பேன்ட்ரி காரிலிருந்து கூவி விற்கப்படுவதை உள்ளே தள்ளிக்கொண்டே வயல் வெளியில் மறையும் சூரியனைக் கண்டுகளிப்பது எல்லாம் ரொம்பவே ரயில்-தனமானது.
பசங்களுக்கு நம்ம ஊர் ரயிலைக் காட்டவேண்டிய கடமை இருக்கிறதல்லவா?
அன்புடன்,
ஹரிஹரன்
//கொத்ஸ்,
தண்ணித் தொட்டிங்களை அனுப்பிறலாம். பிரச்சனை இல்லை.
ஆனா....தண்ணீ?//
அது என்ன பிரச்சனை? அதான் அது தானா நிரம்பிக்கும்ன்னு சொல்லிட்டீங்களே. அது அடிபம்பு அடிச்சு ரொப்பிக்குதோ அல்லது ஒரு 4 மைல் நடந்து போயி எங்கனா பிடிச்சுக்கிட்டு வருமோ அல்லது மெட்ரோ லாரி வரும் போது சண்டை போட்டு வாங்குமோ எனக்குத் தெரியாது. அது தானா ரொம்பற தொட்டி அதனால நான் பார்க்கும் போதெல்லாம் தண்ணி இருக்கும். ஆமா! :)
//நீங்களும் இந்தப் பக்கம் வந்தா கட்டாயம் இதுலே ஒரு ட்ரிப் அடிங்க. நல்ல வித்தியாசமான ஒரு அனுபவம்//
அதுதான் ஓசியிலேயே உங்க பதிவு மூலமா சுத்தி பாத்தாச்சே. நாங்களும் கூடவே வந்த மாதிரி இருந்திச்சி. இன்னும் நாலஞ்சி படத்தை போட்டிருந்தீங்கன்னா கூட கொஞ்சம் ரசிச்சி இருப்போம்.
துளசியம்மா!!!
தங்கள் கூற்று மெய்யாகிறது. வாருங்கள் amkblr.blogspot.com உங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஹரிஹரன்,
//பேன்ட்ரி காரிலிருந்து கூவி விற்கப்படுவதை //
ஆமாங்க. இது ரொம்பக் கூடிப்போச்சு. அஞ்சு நிமிஷத்துக்கு ஒண்ணுன்னு
கொண்டு வந்தா எப்படி? இடைவெளி விடலாமுல்லெ?
//பசங்களுக்கு நம்ம ஊர் ரயிலைக் காட்டவேண்டிய
கடமை இருக்கிறதல்லவா?//
பின்னே? :-)))))
பசங்க நம்மளைப் புல்லுபோல பார்க்கும்:-)))
கொத்ஸ்,
இந்த லொள்ளுதானே? :-))))
இங்கே தண்ணிக்கு என்ன பஞ்சம்?
மெட்ரோ வாவது.... லாரியாவது.......?
பைப் லைன் போட்டே வச்சுருப்பாங்க .
மதி,
அதெல்லாம் நானாய் சொன்னது பாதி,
சொல்லாதது மீதின்னு ..........
வந்து பார்த்தா
'தானாய்த் தெரியும் மீதி!'
மெளல்ஸ்,
வாங்க வாங்க. ஜோதியிலே ஐக்கியமானதுக்கு வாழ்த்து(க்)கள்.
///அதுதான் ஓசியிலேயே உங்க பதிவு மூலமா சுத்தி பாத்தாச்சே. நாங்களும் கூடவே வந்த மாதிரி இருந்திச்சி.///
சூப்பர்ங்க.. நானே சுத்தி பாத்தா கூட இவ்ளோ நல்லா ரசிச்சு இருப்பேனா தெரியல.. பெரிய நன்றி with lotsa pugai from ears :)
துளசி,அநுபவங்களைச் சொல்வதில் நீங்கள் அருமையாகச் சொல்கிறீர்கள்.
அழகான இடங்கள்,மலைகள்...
இவ்வ+ருக்கு வந்து போவதும் நன்றாய்த் தோணுது.
ஆனால்...பையில் கனமில்லை.
செல்வா,
இதுதானே....? பேசாம ஒருக்கா வந்துட்டுப் போங்கப்பா
இங்கே நஷ்டத்துலெ இருக்குன்னு புலம்பறாங்க:-)))
பொற்கொடி,
//நானே சுத்தி பாத்தா கூட இவ்ளோ நல்லா ரசிச்சு இருப்பேனா தெரியல//
அதெப்படி? இது உண்மையான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?
போனா வராது பொழுது போனாக் கிடைக்காது. அம்புட்டுத்தான் சொல்வேன்:-)))
வாங்க ஸ்ரீரங்கன்.
வராதவுங்க வந்துருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?
பையில் கனமெல்லாம் காலப்போக்கில் வந்துரும். எல்லாம் நேரம்தான்.
மலைப்பாதையிலே வளைஞ்சு வளைஞ்சு கார் ஏறும்போது பயமா இருக்கும். //
அந்த பயம்தானே த்ரில்லே.
நீங்களும் இந்தப் பக்கம் வந்தா கட்டாயம் இதுலே ஒரு ட்ரிப் அடிங்க.//
டிக்கட் மட்டும் நீங்க வாங்கி குடுத்துருங்க.. பட்டாளத்தோட வந்துடறோம்:)
வாங்க டிபிஆர்ஜோ.
//அந்த பயம்தானே த்ரில்லே.//
இப்பெல்லாம் த்ரில்லே பயமாப் போச்சு:-)
//டிக்கட் மட்டும் நீங்க வாங்கி குடுத்துருங்க.. பட்டாளத்தோட வந்துடறோம்:) //
இதென்னங்க பெரிய பிரமாதம். நேரம் வரணும். அப்ப ஒரு ப்ளேனையே ச்சார்ட்டர் பண்ணிருவொம்லெ
நம்ம நண்பர்கள் வந்துட்டுப்போக:-)))
Post a Comment