Friday, September 08, 2006

எவ்ரிடே மனிதர்கள் -16 மணி

வயசு வித்தியாசம் பார்க்காம யாரும் உங்ககிட்டே வந்து 'சட்'ன்னு கை நீட்டணுமா?

எதுக்கு அடிக்கவா? சேச்சே... அதுக்கெல்லாம் இல்லை.

எந்த ஒரு குழுவிலும் இருக்கும்போது 'எனக்குக் கைரேகை பார்க்கத்தெரியும்'னு சொல்லிப் பாருங்க.ஜோசியத்துல் கொஞ்சம்கூட நம்பிக்கையே இல்லைன்னு சொல்லிக்கறவங்களும், அப்படி என்னதான் தன்னைப்பத்திச் சொல்லப் போறிங்கன்னு கையை நீட்டுவாங்க.
நாங்களும் இந்த 'வித்தை' தெரிந்தமாதிரி கொஞ்சம் உதார் விடறதுதான். கையை நீட்டும் தோழிகளிடம்,என்னமோ ரொம்ப சீரியஸ்ஸாப் பார்க்கறதுபோல, கையை அப்படி இப்படித் திருப்பிக் கவனிச்சுப் பார்த்து,நம்ம விரலைவிட்டு எண்ணுறது போலெல்லாம் போஸ் கொடுத்துட்டு, உன் பேர் வசந்தின்னு வசந்திகிட்டேயே சொல்லி அடி வாங்குனதுண்டு. ஆனா யாருக்குத்தான் எதிர்காலத்தைத் தெரிஞ்சுக்கும் ஆசை விட்டது?


இப்படித்தான் கூட வேலை செய்யும் நண்பர் ஒருத்தர் ஜோசியம், கைரேகை பத்திப் பேச்சு வந்தப்ப,அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் 'நல்லாக் கைரேகை பார்த்துச் சொல்லுவார்'ன்னு சொன்னதும் மேலோட்டமா கலாட்டா செஞ்சேனே தவிர, அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்லி நண்பரைத் தொணப்பி எடுத்துட்டேன். மணிக்கு இது பிஸினெஸ் இல்லையாம். எப்பவாவதுதான் கை பார்த்துச் சொல்வாராம், அதுவும் ரொம்பச் சிலருக்குத் தானாம்.


வேற வழி இல்லாம ஒரு நாள் வில்லிவாக்கம் வரை போய்வரலாமுன்னு சொன்னார் நண்பர். கிளம்பியாச்சு.பஸ்புடிச்சு, விலாசம் தேடிப் போய்ச் சேர்ந்தப்பவே மசமசன்னு இருட்டிக்கிட்டு வந்துச்சு. கதவுலே கைவச்சதும் திறந்துக்கிச்சு. உள்ளெ ஆள் அரவம் இல்லை. லேசான வெளிச்சம்.'மணி, மணி'ன்னுநண்பர் கூப்பிட்டார். 'உக்காருங்க, குளிச்சுட்டு வந்துடறேன்'னு சத்தம் மட்டும் வந்துச்சு.


பழைய காலத்து வீடு. ஆளோடி, முற்றம்ன்னு இருந்துச்சு. முற்றத்தில் ஒரு துளசி மாடம். அதை ஒட்டி இருந்த வெராந்தாவில் சுவர் முழுசும் சாமிப் படங்கள். எங்கியோ தென் தமிழ்நாட்டு கிராமத்து வீட்டுலே இருக்கறது மாதிரி ஒரு தோற்றம்.


கொஞ்சநேரத்தில் பூஜைமணி சத்தம் கேட்டுச்சு. கையில் கற்பூரத்தட்டோடு வந்தவர் ரொம்பக் கச்சலா மெலிஞ்சுஇருந்தார். லேசான தாடி. கண்ணுலே கனத்த ஃப்ரேம் போட்ட கண்ணாடி. எட்டுமுழ வேட்டி, மேலே தோளைப் போர்த்தி ஒரு அங்க வஸ்த்திரம். எங்களைப் பார்த்து சிநேகமாச் சிரிச்சப்ப வெள்ளையா பற்கள் பளிச்.


கற்பூரத்தை நாங்கள் கண்ணில் ஒத்திக்கிட்டதும் தட்டை வச்சுட்டு வந்து எங்கள் முன்னாலெ பாயில் உக்காந்தார்.என்னவோ தெரியலை, சட்ன்னு நான் நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உக்காந்தேன். நண்பரும் கீழே முற்றத்துலே காலைத் தொங்கவிட்டு உக்காந்துட்டார்.


மணிக்கு அன்னிக்கு ஆபீஸுலே நிறைய வேலையாம். கிளம்பி வரும்போதே நேரமாயிருச்சாம். நாங்க வர்றது முதல்லேயே தெரியுங்கறதாலே கதவைத் தாழ் போடாம வச்சிருந்தாராம்.


பொதுவா ஜோசியம், கைரேகை பார்க்கறவங்க விளக்கு வச்சபிறகு பார்க்கமாட்டாங்கன்னு எனக்கொரு எண்ணம் இருந்துச்சு. அதனாலே, இன்னொருநாள் வரச்சொல்லுவாரோன்னு யோசனையா இருந்தேன்.
மணியும் நண்பரும் ஒரு அஞ்சு நிமிஷம்போல அப்பா அம்மா வீடு வாசல்ன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. மணியின்அம்மா, அப்பா ஊருக்குப் போயிருக்காங்களாம். தஞ்சாவூர் பக்கம். நண்பருக்கு சொந்த ஊர் கும்பகோணம்.


பேசிக்கிட்டே இருந்தவர், இப்படி முன்னால் வந்து உக்காரும்மான்னு சொன்னார். கையை நீட்டுனதும் கவனமாப் பார்த்தார். எனெக்கென்னவோ வெளிச்சம் போதாதமாதிரி இருந்துச்சு. கூரையில் ஒரே ஒரு பவர் குறைஞ்ச லைட்.


ஒண்ணும் சொல்லாம கண்ணை மூடிக்கிட்டு ஏழெட்டு நிமிஷம் தியானம் செய்யறதுபோல இருந்தார்.


"நல்ல கைதாம்மா. அமோகமா இருப்பே"


எனக்கோ 'சப்'ன்னு போச்சு. விளக்கமா எதாவது சொல்வாருன்னு பார்த்தா, ஒண்ணும் காணமே!


கொஞ்சநேரம் அங்கே ஒரு நிசப்தம். இருட்டு வீட்டுலே குருட்டுப் பூனை மாதிரி இருந்தேன்.


" ரொம்ப வாய்த் துடுக்கு. எதாவது கஷ்டத்துலெ அப்பப்ப மாட்டிப்பே. ஆனாலும் முருகன் அருள்உனக்கு ரொம்ப இருக்கு. உதவி யார் ரூபத்துலேயாவது வரும். அப்படியே காப்பாத்தி விட்டுரும். உனக்குஅவுங்க யார், எப்படி வந்தாங்கன்றதுக் கூட தெரியாது."


" நான் முருகனைக் கும்பிடறது இல்லீங்களே" அசட்டுத்தனமா சொல்றேன்.( வாய் நீளம்,பக்குவம் போதாது)


" சரி வேணாம். கடவுள் நம்பிக்கை இருக்குல்லியா? கடவுள், உன்னோட இஷ்ட தெய்வம் இப்படி வச்சுக்கோயேன். நான் எப்பவும் முருகனைக் கும்பிடறதாலெ முருகன்னு சொன்னேன். ஓஹோன்னு இருப்பே"


தலையைத் தலையை ஆட்டுறேன்.


" சொந்த வீடு, பால்பாக்கியம் எல்லாம் இருக்கு. ஃபாரீனுக்குப் போயிருவே"
எனக்குத் தாங்க முடியலை. அப்பா அம்மா இல்லாமப்போயி ஹாஸ்டல் வாசம். பாஸ்போர்ட்ன்னு சொன்னா என்னன்னுக்கூடத் தெரியாது. இதுலெ சொந்த வீடு, பால் பாக்கியம், பாரீன்....?


" எல்லாம் நடக்கும். காலம் வரணும் இல்லையா? "


ஒண்ணும் பேசத் தோணலை. ரொம்ப இருட்டுமுன்னே பஸ்ஸைப் பிடிக்கணுமேன்னு கிளம்பிட்டோம். வர்ற வழியிலேயும் ஒரே யோசனைதான். நண்பர் என்னை பஸ் ஏத்திட்டு அவரோட பஸ்ஸுக்குக் காத்திருந்தார்.மறுநாள் வேலையில் பார்த்தப்ப, 'மணி சொன்னா அதேபோல நடக்கும். பாருங்க அப்புறம் நினைச்சுக்குவீங்க'ன்னார்.கொஞ்ச நாளுக்கப்புறம் இதெல்லாம் நடக்குமுன்னு நானே நம்ப ஆரம்பிச்சிருந்தேன். ஆனா இதுக்காகன்னு ஒருமுயற்சியும் செய்யலை. காலம் பாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்துச்சு. இது நடந்து சரியாப் பத்து வருசத்துலே நான் இந்தியாவை விட்டு கிளம்பியாச்சு. அப்ப நண்பர் சொன்னதுபோல நான் மணியை நினைச்சுக்கிட்டேந்தான்.அதுக்கப்புறம் அடிக்கடி மணியை நினைச்சுக்குவேன்.


சிலரை வாழ்க்கையிலே ஒண்ணு ரெண்டுதடவைதான் சந்திச்சிருப்பொம். ஆனா எப்பவும் மனசுலெ இருப்பாங்க. சிலரைநினைவு வச்சுக்கவே முடியாது.
மணி சொன்னது எல்லாமே நடந்துச்சு, ஒண்ணைத் தவிர. அது?
பால் கறக்க மாடு வாங்கிக்கலை. ஆனா ஃப்ரிட்ஜ்லே குறைஞ்சது ரெண்டு லிட்டர் பாலாவது எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கு.

இப்படி ப்லொக் ஆரம்பிச்சு எழுதுவேன்னு அவர் சொல்லவே இல்லியே(-:


அடுத்தவாரம்: ஷஃபி


நன்றி: தமிழோவியம்
------------

33 comments:

said...

துளசிக்கா
//1.ரொம்ப வாய்த் துடுக்கு. எதாவது கஷ்டத்துலெ அப்பப்ப மாட்டிப்பே
2.இப்படி ப்லொக் ஆரம்பிச்சு எழுதுவேன்னு அவர் சொல்லவே இல்லியே(-://

நீங்க ப்லொக் ஆரம்பிச்சு எழுது"வீங்க", அப்படிங்கறததான்
இப்படி நாசூக்கா சொன்னாரு போலே.

said...

சில பேரை சந்திக்காமலேயே மனசுக்குள்ள வந்திருக்கிறவங்கள பத்தி என்ன சொல்றீங்க துளசி. ஏதாவது கொண்டாட்டம் அல்லது பண்டிகை அப்படின்னா எனக்கு இப்பல்லாம் உங்க நினைவு வருது.
சக்தியில உங்க பின்னூட்டம் பார்க்கலையே துளசி.

said...

வாங்க பெருசு,

//நீங்க ப்லொக் ஆரம்பிச்சு எழுது"வீங்க", அப்படிங்கறததான்
இப்படி நாசூக்கா சொன்னாரு போலே.//

அப்டீங்கறீங்க? இருக்கும் இருக்கும்.:-))))

said...

வாங்க பத்மா.

உங்க கணக்குப் படி பார்த்தா ஒவ்வொரு வலைஞர்களும் ஒருவிதத்தில்
மனசுக்குள்ளெ பதிஞ்சுட்டாங்க பத்மா.

குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதாவது அநீதின்னு பார்த்தா/கேட்டாவே
உங்க நினைப்பு வந்துருது பத்மா.

'வடை'ன்னதும் என் நினைப்பு வருதுன்னு சிலர்(?) சொல்லி இருக்காங்க.
எப்படியோ நம்ம நினைப்பு வருதே.......... அதானே முக்கியம். இல்லீங்களா? :-))))

( மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே)


'சக்தி'யிலெ அறிமுகம் இடுகை வந்துச்சுப் பாருங்க. அப்பவே
இதை வாழ்த்தி ஒரு பின்னூட்டம் போட்டேன் பத்மா.
காணாமப் போயிருச்சா?

said...

//என்னவோ தெரியலை, சட்ன்னு நான் நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உக்காந்தேன்//

டீச்சர்,
இப்படி மரியாதை தெரிஞ்ச உங்களைப் போய், "ரொம்ப வாய்த் துடுக்கு" ன்னுல்லாம் சொல்லிட்டாரே. மனசுக்கு ஒரே கஷ்டமாப் போச்சு போங்க :-):-)

//சரி வேணாம். கடவுள் நம்பிக்கை இருக்குல்லியா? கடவுள், உன்னோட இஷ்ட தெய்வம் இப்படி வச்சுக்கோயேன்//
அடடா....மணி அண்ணன் மணியாத் தான் சொல்லி இருக்கார்!

said...

துளசி-இதையும் கொஞ்சம் படிங்க..
நான் சிறுவனாக இருந்த போது ஒரு கல்யாணத்தில் ஒருவர் இப்படி எல்லோருக்கும் பார்த்துக்கொண்டிருந்தார்.எங்கம்மாவுக்கு என் எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆசையில் என் கையை அவரிடம் காட்டச்சொன்னார்.
பார்த்துட்டு
"நீ நிச்சயம் டாக்டராக வருவாய்"-என்றார்.
இன்று..எனக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரிடம் போகிறேன்.
இது குறையாக சொல்லவில்லை,எனக்கு பார்த்தவர் தரம் அப்படி.
இதை முறையாக யாரிடமாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவ்வப்போது வந்து போகிறது.
இன்னொருவர் சும்மா கையைப்பார்த்துவிட்டு-உனக்கு வேலையே இந்தியாவுக்கு வெளியில் தான் என்றார்.ஓரளவு பலித்தது.
நாகையில் எங்க பக்கத்துவீட்டுகாரர் "நான் இப்போது சாவேன்" என்று பக்காவாக எழுதிவைத்து போனார்.அவரும் ஒரு ஜோசியரே.

said...

KRS,

மணி அண்ணனை அப்புறம் பார்க்கவே இல்லை. மகள் கையைப்
பார்க்கச் சொல்லலாமுன்னு ஒரு நப்பாசை.

வாயெல்லாம் இப்ப அடங்கிப்போச்சு(-:
வயசாச்சே. ஒரு அடக்கம் வேணாம்:-)

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா............."

said...

குமார்,
அதான் அவர் டாக்டரா ஆயிட்டாரே!:-)))))

சிலபேர் சரியாச் சொல்வாங்க போல. ஆனா அவுங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமே!
அதுதானே கஷ்டம்.
பக்கத்து வீட்டு ஜோசியர் சொன்னது நடந்துச்சா?

போனமுறை வந்தப்ப மகளொட ஜாதகம் ஒரு இடத்துலெ காமிக்கலாமுன்னு
கொண்டு வந்தேன். தி. நகர்லெ பிரபலமா இருக்க நம்பிக்கையான ஜோசியர்கிட்டே
தோழி மூலம் நேரம்கூட வாங்கிட்டேன். கடைசி நிமிஷத்துலே மனசுக்குள்ளே ஒரு
எண்ணம். எதாவது நல்லதா இல்லாமப் போயிருச்சுன்னா, அதை நினைச்சுக்கிட்டே
மனக்கவலை ஆயிருமே , இது தேவைதானா?

'நடக்கறது நடு வழியிலே நிக்காது'ன்னுவாங்க. அதுபோல எது நல்லதோ அதை நமக்குக்
கடவுள் செய்வார். அப்படியே இருக்கட்டுமுன்னு தோணிப்போச்சு.

'ஜகா' வாங்கிட்டேன்.

said...

சரியான முடிவுதான் எடுத்தீங்க.
பத்திரிக்கையில் வரும் ராசிபலனை பார்த்தாலே "என்னவோ பண்ணும்"

said...

அன்பு துளசி,
கை காமித்துக்கொள்ளும் பழக்கம் எப்பொதும் உண்டானது. ஆனால் நல்ல மனிதரிடம் கேட்க முடிந்தது உங்களூக்கு.
எனக்கும் என் 7 வயதில் ஒருத்தர் சொன்னார்.
நீ 40 வயசு வரை சிரமப் படுவே.4 குழந்தை உண்டு. 40 வயசுக்கு அப்புறம் வீட்டு வாசலை அடைச்சுண்டு நாலு கார் நிக்கும்னார்.
கார் நின்னுது.அப்போ எங்க வீட்டுக்காரர்கார் சர்வீஸ் ஸ்டெஷன் வைத்தார்.:-0))
சோ,அவர் சொன்னது பலித்தது.
ஜோசியம்பாக்க வேண்டாம்னு தீர்மானிக்கவும் ஒரு நேரம் வரணும்.

said...

// நீங்க "ப்ளோக்" ஆரம்பிச்சு எழுதுவீங்க....//

ஜோஸியர்களும் கைரேகை பார்ப்பவர்களும் பொதுவா நல்லதை
மட்டுமே சொல்வார்கள்.....
பிறரைப் பாதிக்கக்கூடியவற்றை
சொல்லாம மறைச்சுடுவாங்க...
ஆமாதானே....?

said...

குமார்,

வார பலன் தினப்பலன் எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு. இப்ப சமீப காலங்களிலே
தினக்காலண்டர்களிலெ ஒரு வரி அறிவுரை/பழமொழி வருது பாருங்க. அதைப் படிச்சாவே
பல நாள் சிரிப்புப் பொங்கிக்கிட்டு வரும். அவ்வளோ அபத்தம்.

ஆனா 'சிரிப்போட நாளை ஆரம்பிக்கறதே' நல்ல சகுனம்தான் :-)))))

said...

வல்லி,

வாங்க வாங்க. வாசல்லெ நாலு கார் நிக்கும். அது எல்லாமெ உங்க சொந்தம்னு சொல்லலியா அவர்? :-))

//நீ 40 வயசு வரை சிரமப் படுவே........//

'அப்புறம் அதுவே பழகிரும். பொருட்படுத்தமாட்டே'ன்னு சொல்ல மறந்துட்டாரா?

நீங்க சொல்றமாதிரி எங்கியோ ஒருத்தர் நல்லாச் சொல்றார். நமக்கு அதிர்ஷ்டம் வேணுமே அவரைக்
கண்டு பிடிக்க!

said...

சிஜி,

ஆஆஆஆஆஆஆஆஆ நற நற நற நற ( பல்லைக் கடிக்கும் சத்தம் கேக்குதா?)

said...

இப்படி ப்லொக் ஆரம்பிச்சு எழுதுவேன்னு அவர் சொல்லவே இல்லியே(-://

நல்லா வச்சீங்களே ஒரு குட்டு..

ஆனா நடக்கப் போறத சொல்றத விட நடந்தத சொன்னா நம்பறதுக்கு சுலபமாருக்கும்.. ஆனா கைரேகைங்கறது ஒருவகை கணிதம்தான் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அதை உண்மையாகவே தெரிந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

said...

வாங்க டிபிஆர்ஜோ.
//அதை உண்மையாகவே தெரிந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..


உண்மையில் தெரிந்தவர் நமக்குக் கிடைச்சார், அப்படின்னு நினைக்கிறேன்.

said...

நீங்கள் எழுதியது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் நான் தருமி கட்சிதான். இருந்தாலும் ஒருவர் நல்லது சொல்லி அது நடக்கும்போது நமக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

said...

துளசியக்கா,

ஸ்கூல் படிக்கும் போது 15வயதில் எனக்குக்கூட ஒருத்தர் ஜோஸியம் பார்த்து பாரின்ல வேலைக்குப் போவாய், 32வயசுலயே செத்துப்போவாய், என்றார்.

50% பலித்தது 12வருஷமாய் குவைத்தில் வேலையிலிருக்கிறேன். இப்போ வயது 32ஐத் தாண்டி 37வயசாயிடுச்சு.

இப்பவும் என் மரணம் பற்றிய ஜோஸிய ப்ரடிக்ஷனுக்கு என் மனைவி தான் என்னை விட அதிகமாக மிரள்வது.

தினப்பலன்ல அன்னிக்கு எந்த ராசிக்கு சூப்பர் பலனோ அது தான் நம்ம ராசி . இப்படித்தான் நம்ம ஜோஸிய நம்பிக்கை.

எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்ன்ற கீதை வாசகம் பிடித்தமானது.

ஜோஸியம் நகைச்சுவை மாதிரி. சீரியஸாக எல்லாம் எடுக்கக் கூடாது.

அன்புடன்,

ஹரிஹரன்.

said...

வாங்க மணியன்.

எனக்கும் அவ்வளவா நம்பிக்கை கிடையாதுதான். ஆனா சொன்னதுலே சிலது நடந்ததாலே
கொஞ்சூண்டு நம்பிக்கை இருக்கு. ஆனா மத்தவங்ககிட்டே 'கை நீட்ட' மாட்டேன்:-)

said...

ஹரிஹரன்,

சிஜி சொன்னதுபோல,பொதுவா ஜோசியருங்க 'கெட்டதைச் சொல்ல மாட்டாங்க' . அதெப்படி அவர் உங்க கை
பார்த்துட்டு எப்படி சாவு பத்திச் சொன்னாரு? (-:

போட்டும் 50% சரியா நடந்துச்சுல்லே அதுக்கு சந்தோஷப்பட்டுக்கணும்.

தினப்பலன்லே 'நண்பர்களால் செலவு'ன்னு யாருக்கு இருக்கோ அவுங்கதான்
அன்னிக்குக் காபிச் செலவு செய்யணுமுன்னு ஒரு காலத்துலே எங்க பிரெண்ட்ஸ்
கூட்டத்துலே ஒரு நியதி வச்சிருந்தோம்:-)))))

பயந்துபயந்துதான் தினமணிப் பேப்பரைத் திறக்கறது அப்பெல்லாம்:-))))

said...

நல்லா இருக்குது உங்க பதிவு எப்பவும் போல...

எனக்குக் கைரேகை பாக்கவும், பாத்துக்கவும் பிடிக்கும். அது ஏனோ தெரியாது...! morbid curiosity? ஓரளவு நம்பிக்கை வேற உண்டு; நிறைய கைரேகை புக் வேற படிச்சுருக்கேன். "ஃபாரின் போவ, இண்டர்நேஷனல் லெவல்ல பெரிய ஆளா வருவே"ன்னு சொன்னாங்க, 50% தான் நடந்துருக்குது, மிச்சம் நான் ஏதாவது அந்த லெவல்ல குற்றம் இழைச்சாத் தான்னு நினைச்சுட்டு இருந்தேன். உங்க இந்த பதிவு பாத்தவுடனே புரிஞ்சுது, வலை உலக அளவுலன்னு;-)) என்னா தீர்க்கதரிசிப்பா!!

வலை உலகத்திலயும் கெக்கே பிக்கேன்னு பேசிட்டிருப்பேன்ன்னு சொல்லாம போயிட்டாங்களே!!

said...

வாங்கப்பா கெக்கே பிக்குன்னு,

கைரேகை சாஸ்த்திரம் ரொம்பக் கரெக்ட்டா இருக்குமாம். ஏன்னா ஒருத்தர்
ரேகைமாதிரி இன்னொருத்தருக்கு இருக்காதுல்லையா?

ஆனா அதைப் பத்தி நல்லாப் படிச்சவங்ககிட்டே கேட்டால் ஒரு சமயம்
அவுங்க சொல்றது சரியா இருக்கும். ஆனா அப்படி 100% சரியாச் சொல்ல
யாரால முடியும்?

//நிறைய கைரேகை புக் வேற படிச்சுருக்கேன். //

நீங்க படிச்சதைச் சோதிச்சுப் பார்த்தீங்களா?

said...

"ஃப்ரிட்ஜ்லே குறைஞ்சது ரெண்டு லிட்டர் பாலாவது எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கு" - ஹாஹா நல்லா சிரிக்க சிரிக்க எழுதிருக்கிங்க

said...

துளசிக்கா, ஆமா, சீரோ புத்தகத்தில் சொன்னாப் போல பலதும் நடக்குது.

என்னப் பொறுத்த வரை, "உண்மை பேசு, நல்ல பிறவியாய் வாழு"ன்னு முறைகளோடு பிறந்து, அம்முறைகளை நம்புவருக்குக் கைரேகை நிஜத்தைச் சொல்லும். அதாவது கெட்டவனாய் இருந்தாலும், மனசுக்குள்ள இந்த விதிகளை நம்புவனுக்கும்...(how you physically react is usually based on your values - if they are common then கைரேகைகள் அந்த விதிகளின் படி அமையும்)... இன்னும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்...இப்ப நேரம் இல்ல இன்னும் விளக்கமாக சொல்ல:-(

நிறைய பேர்ட்ட சோதிச்சுப் பாத்துருக்கேன். மேற்சொன்ன விதிப்படி நிசந்தான்.

said...

அ, எம் பேரு கெக்கே பிக்குணி! :-))

said...

வாங்க WA.

மாடுகளைப் பராமரிக்கறதை விட ஃப்ரிஜ்லே
பால் வச்சுக்கறது ரொம்ப ஈஸி:-))))ரெண்டு மாடுகளும், கன்னுக்குட்டிகளும் நம்ம வீட்டு அடுக்களை ஜன்னல் கட்டையில்
உக்காந்திருக்குன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?

கிரகப்பிரவேசத்துக்கு வந்ததுங்கதான்:-))))

said...

அடடா.... oops....கெக்கே பிக்கேன்னு உங்க பேரைத் தப்பாச் சொல்லிட்டேனா?

கெக்கே பிக்குனி, இப்பச் சரியா?
எதுக்கு வம்பு? இனிமே நீங்க கெ.பி.

கைரேகை பத்தி விளக்கமா ஒரு பதிவு போடுங்களேன் கெ.பி.

said...

// இதுலெ சொந்த வீடு, ***பால்*** பாக்கியம், பாரீன்....? //
பார்த்தீங்களா, கோபால் மாமா பற்றி ஜோசியர் முன்னமேயே சொல்லிவிட்டார்
:-)))

said...

அடடே! மணி சொல்லீட்டாரா! நல்லதச் சொல்லி நடந்தது நல்லதுதான்.

சென்னையில இருந்து கெளம்புறதுக்கு முன்னாடி. அதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, இந்த கிராண்ட் ஸ்வீட்ஸ் வாசல்ல பைக்க நிறுத்தினேன். உள்ள போய் வேண்டியதுகள வாங்கீட்டு வந்து வண்டிய எடுக்கப் போறப்போ ஒருத்தர் வந்து ரேகை பாப்பேன்னு அடம் பிடிச்சாரு. வேண்டாம்னு சொன்னேன். அவரும் விடாம அம்மன் அருள் நெறைய இருக்கு. வெளிநாடு போவீங்கன்னு தொடங்குனாரு. நான் வேண்டாம்னு அழுத்தமாச் சொல்லீட்டு வண்டிய நகட்டீட்டு வந்துட்டேன். எங்கையாவது கூட்டத்துலயும் யாராவது ரேகா பாக்கத் தெரியும்னு (ரேகையத்தான் அப்படிச் சொன்னேன் ஹி ஹி) சொன்னா நான் கைய நீட்டவே மாட்டேன். அருணகிரி சொல்லிக் குடுத்துருக்காரே.

said...

லதா,

இந்தியாவுலே 7 வருசம் குப்பை கொட்டிட்டுத்தான்
பாரீன்னு சொல்லாம வுட்டுட்டாரேப்பா (-:
கோபால் மாமாவைக் கல்யாணம் கட்டுன புதுசுலெ கால் லிட்டர் பால்தான்
கணக்கு. அப்புறம் பால் பாக்கியம் எங்கே? :-)))))

said...

ராகவன்,

இது நடந்தே வருஷம் 34 ஆச்சு. இப்ப யாராவது கை பார்க்கறேன்னு சொன்னா
நம்ப மாட்டேன்.

அது போட்டும். க்ராண்ட் ஸ்வீட்ஸ்லே என்ன ஸ்பெஷல் வாங்குனீங்க? அதைச் சொல்லுங்க
முதல்லே.

said...

ஜோதிடத்தை முறையாகப் படிச்சு, வியபாரமாகச் செய்யாமல் இருக்கறவங்கதான் இப்படி சரியா பலன் சொல்வாங்க. என் துரதிர்ஷ்டம்... அப்படி ஒருத்‌தரையும் நான் லைஃப்ல சந்திச்சதில்ல!

said...

வாங்க கணேஷ்.

வருகைக்கு நன்றி.

கோடியில் ஒருத்தர் இருக்கலாம்!