படத்தில் நாயகன் பெயர் 'பாரத்'
படத்தில் நாயகி பெயர் ' வைஷ்ணவி'
வில்லன் பெயரை மட்டும் 'ஜாக்'னு வச்சுட்டாங்க.
வில்லனின் உதவிக்கு வரும் நண்பன் 'சாம்'
ச்சியர் லீடர்ஸ் நாலுபேரோட பெட்ரோல் பங்குலே போய் அங்கெ பெட்ரோல் விற்பனையைத் தவிரவேற என்னமோ செய்யறாங்கன்னு பெரிய பூதக் கண்ணாடியை வச்சுக்கிட்டு ஆராயறார் 'சாம்'
பதான் சூட் போட்டுக்கிட்டு வர்ற 'ஜாக்'குக்கு 'வைஷ்ணவி மேலே 'கிக்'
பாரத்தும், பதான் சூட்டும் நண்பர்கள். வைஷ்ணவி யாருக்குன்னு போட்டி வருது.
அமெரிக்காவுலே 20 வருசம் இருந்துட்டு, மகளை ஒரு 'தீவிரவாத சம்பவத்துலே' பறிகொடுத்துட்டு இந்தியாவுக்கு எட்டுவயசு மகனோடு திரும்பி வரும் நாயகன் & நாயகி.
( யாருங்க அந்த 'அமெரிக்க ஹாஸ்பிட்டல்' ஸீன் வச்சது? ரொம்ப அமெச்சூரா இருக்கு. ஆனாபேஷிண்டை ட்ராலியில் வச்சுத் தள்ள ரெண்டு வெள்ளைக்காரர்களைக் கரெக்ட்டாப் பிடிச்சுப்போட்டுட்டாங்க)
இன்னொருத்தன் மனைவியான வைஷ்ணவியை அடைய ப.சூ( பதான் சூட்) 'ரோஜா' செடிகளையும்,தோட்டத்தையும் மிதிச்சு, உடைச்சுப் பாழாக்குறார்.
நாயகன் & குடும்பம் வசிக்கும் இடம் 'மாதா' நகர். ரொம்ப சென்ஸிடிவ் ஏரியா. ஆனா 24 மணி நேர செக்யூரிட்டி இருக்கு. அதுவும் அப்பப்ப 'லேப்ஸ்' ஆயிரும்.
'ட்ராப் கேட்'லெ செக்யூரிட்டி நிக்கும் மரப்பொட்டிக்கும் ஜே.கே'ன்னு பேர் இருக்கே, அதைப் பார்த்துக் கதையைப் புரிஞ்சுக்கணும். க்ளோஸப் காமிக்கிறாங்க.
எட்டு வயசு மகனுக்கு நிஜத் துப்பாக்கிமேலே பயங்கர ஆசை. கட்டாயம் வேணும்னு துடிக்கிறான். பையன் பேர் சுபாஷ்.
படத்தின் ஆறுதல் 'தம்பு அங்கிள்.' ரிட்டயர்டு மிலிட்டரிக்காரர். அவரோட வசனங்கள் எல்லாம் ரொம்ப யதார்த்தமா இருக்கு. பாதி சாப்பாட்டுலெ கரண்டு போயிருது.
"இருட்டுலே எப்படி சாப்புடறது தாத்தா?" ( எட்டு வயசு)
" அதெல்லாம் கவலைப்படாதே.இருட்டா இருந்தாலும் கை நேரா வாயைக் கண்டு பிடிச்சுரும். நீ சாப்புடு " ( தம்பு அங்கிள்)
ப.சூ. வெயிஸ்ட்லே ஆயுதங்களை வச்சுருக்கு. அதைப் பார்த்துட்டு ப.சூ. கிட்டே பேசற வசனம் டாப்.
சத்திய ராஜ், ரோஜா, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய்ன்னு தெரிஞ்ச முகங்கள்தான். தம்பு அங்கிள்தான் யாருன்னு தெரியலை.'பாரதி மணி'ன்னு டைட்டில்லே வருது, அவரா இருக்குமோ? நல்லாத்தான் செஞ்சுருக்கார்.
கமெடிக்குத் தனி ட்ராக் ஓடுது. வடிவேலு. வத்தலகுண்டுலே இருந்து ச்சென்னைக்குப் போறார்.( ஆஹா.... என் வத்தலகுண்டு)
இசை புதுசா ஒருத்தர். ஐஸக் தாமஸ் கொட்டுக்காப்பள்ளி ( கொடுக்கப்புளின்னு இங்கிலீஷுலே இருக்கு!)
மார்ட்டின் தேவகுமார் பின்னணி இசை. ஸூப்பர்.
தேவையில்லாம கய்யாங் புய்யாங்ன்னு இல்லாம 'கொயட்டா' இருக்கு.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஜெயபாரதி.
படம் எதைப் பத்திச் சொல்லுதுன்னு இன்னுமா உங்களுக்குப் புரியாம இருக்கும்?
ஜெய் ஹிந்த்!
அடடா.... ஒரு முக்கியமானதை விட்டுட்டேனே.... இது சத்யராஜின் 170வது படமாம்.
Saturday, September 09, 2006
குருக்ஷேத்திரம்
Posted by துளசி கோபால் at 9/09/2006 11:29:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
///" அதெல்லாம் கவலைப்படாதே.இருட்டா இருந்தாலும் கை நேரா வாயைக் கண்டு பிடிச்சுரும். நீ சாப்புடு " ( தம்பு அங்கிள்)///
இது மகாபாரதத்தில் வரும் கருத்து. பீமன் உணவை இருட்டில் உண்கிறான். எப்படி கை வாயை சரியாக சென்றடைகிறதென்று அருச்சுணன் சிந்தித்து இருட்டில் அம்பெய்து பழகுகிறான்.
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
வாங்க 'கேப்பிட்டல்ஸ்'
அடட....... மகாபாரதத்தில் வருதா?
இது எனக்குப் புதுச் செய்தி.
விவரம் தந்ததுக்கு நன்றி.
மொதத்தடவையா வந்துருக்கீங்க போல இருக்கே! நலமா?
///"....கவலைப் படாதே.இருட்டா இருந்தாலும்....கண்டுபிடிச்சுடும்..//
ஆமாங்க!இப்படித்தான் சில படங்கள் எங்ங்கனெ இருந்தாலும் சில கண்கள்
கண்டுபிடிச்சுடும்
கேபிடல்ஸுக்கு நன்றி
ஏங்க சிஜி,
நானாவாப் படத்தைத் தேடிக்கிட்டுப் போறேன்?
எல்லாம் 'தானாய்' வர்றதுதான்:-)))
அப்புறம் இருட்டு என்ன? வெளிச்சம் என்ன? :-)))))))))))))))))
//கமெடிக்குத் தனி ட்ராக் ஓடுது. //
கமெடி ??????
// நானாவாப் படத்தைத் தேடிக்கிட்டுப் போறேன்? எல்லாம் 'தானாய்' வர்றதுதான்:-))) //
:-)))))))))))
வாங்க சோ.பை.
//கமெடி ??????//
ரொம்ப சிரிப்பு வரலை. அதான் 'காலை' ஒடைச்சுட்டென்.:-)
ரொம்ப சிரிப்பு வரலை. காலை ஒடிச்ச்சுட்டேன்.
சரியாப் பொச்சு. ரொம்ப லேட்டா வந்து கமெண்ட் போடரேன்.தேசிபண்டிட் பாத்துட்டு இங்கே வந்தேன்.என்னடா கொடுமைனு கேக்கணூம் போல இருக்கே. இப்படில்லாம் சினிமா அங்கே மத்திரம் போடுவாங்களொ.
வாங்க வல்லி.
நம்ம சப்ளையர்/ டிஸ்ட்ரிப்யூட்டர் வர்ற படத்தையெல்லாம் சகட்டுமேனிக்கு அனுப்பி
வச்சுருவார். நாமும் க்ளப்புக்கு வாங்கறோம் இல்லியா?
அப்படியும் தாங்க முடியாம இனிமே நான் சொல்றதை மட்டும் அனுப்புங்கன்னு கண்டிஷன் போடுவேன்.
ஒரு ரெண்டு வாரம் ஒழுங்கா இருக்கும். மறுபடியும் அவுங்களுக்கு வர்ற படங்களை
இங்கெ அனுப்பிடறாருப்பா.
வெளிநாட்டு ரைட்ஸ் வாங்கிட்டு மலெசியாவுலெ இருந்து வருது எல்லாம்.
வந்ததைப் பார்த்துத் தொலைக்கணுமே(-:
Post a Comment