Monday, September 11, 2006

பேசுவோமா

அநேகமா இந்த வாரத்துக்கான கடைசி சினிமா விமரிசனமா இது இருக்கலாம், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்...........


"படத்துலே கதாநாயகியோட வீடுன்னு ஒண்ணு காமிக்கறாங்க. ரொம்ப நல்லா இருக்கு.இல்லீங்க."


"படத்தோட கதை என்னன்னு சொல்லாம இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?"


"அந்த வீடு, பால்கனி எல்லாம் நிஜம்மா நல்லாத்தான் இருக்கு."


"அப்பக் கதை?"


"கதாநாயகியோட கிராமத்துத் தாத்தா பாட்டி வீடுகூட நல்லாத்தான் இருக்குங்க."


"இது என்ன விமரிசனம்? கதை, நாயகன், நாயகி எல்லாம் சொல்றதில்லையா?"


"அந்தக் கிராமம்கூடத்தான் பச்சைப்பசேல்னு நல்லாவே இருக்கு. இல்லையா?"


"சரியாப்போச்சு. அப்ப டைரக்டர், இசை இதெல்லாமாவது சொல்லேன்"


" லொகேஷன் பரவாயில்லை"


" உங்கிட்டேப் பேசிப் பிரயோஜனமில்லை"


" ஏங்க இப்படிக் கோச்சுக்கறிங்க? அதான் பேசலாமா'ன்னு சொன்னேனே."


" அதுதான் படத்தோட பேராச்சேம்மா.இல்லே 'பேசுவோமா'வா?"


" சரிங்க. உங்க மனசு எதுக்கு நோகணும்? கோச்சுக்கறதைப் பார்த்தாப் பயமாத்தான் இருக்கு. சுருக்கமாச் சொல்லட்டா? நிழல்கள் ரவியோட மனைவி வடிவுக்கரசி!காதல்னு சொன்னாலெ பிடிக்காத நாயகி.
ஒரு கதை எழுதிப் பெரிய எழுத்தாளரா (????) ஆயிட்டார் நாயகன். பத்திரிக்கை ஆசிரியர் 'எவ்வளோ செலவானாலும் பரவாயில்லை. எழுத்தாளரைக் காப்பாத்துங்க'ன்னு டாக்ட்டர்கிட்டே சொல்றார்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதுக்கும் மேலே என்னாலெ விமரிசிக்க முடியாதுங்க."


"குனால் & ஷர்மிலி நடிக்கிறாங்கன்னாவது சொல்லேம்மா. ரெண்டரை மணி நேரம் படம் எடுத்து ஓட்டறாங்க. நீ ஒண்ணும் சரியாச் சொல்லலேன்னா எப்படி?"


" அதான் வீடு நல்லா இருக்குன்னு அப்பலே இருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன்லே,இன்னும் என்னான்னு சொல்றதாம்"


"உனக்கு ஆனாலும் லொள்ளு ஜாஸ்தி"


" சரி, சரி. ஏசாதீங்க. நான் பழைய நிலைக்குத் திரும்பணுமுன்னா மாத்துப்படம் பார்க்கணும்"


" என்ன மாத்து......? ஓஓஓஓஓஓஓஓ மாத்து மருந்து மாதிரி மாத்துப் படமா?

என்னா படம் போடட்டும்?"

" போடுங்க, குணா"

" அய்ய்யய்யோ......என்ன....? குணாலா?"


" இல்லீங்க. குணா. நம்ம கமலோட குணா"

17 comments:

said...

டீச்சர், இந்த மாதிரி படத்தை எல்லாம் பாக்கறதை நிறுத்துங்க. இல்லைன்னா பெரும் போராட்டம் நடக்கும்.

(அட்லீஸ்ட் வெளிய சொல்லாமலாவது இருக்கலாமில்ல.)

said...

கொத்ஸ்,

இப்படிச் சொன்னா எப்படி?

'நலிந்தவர்களுக்குக் குரல் கொடுக்கணும்' இல்லையா?

'மைனாரிட்டி க்ரூப்பை யாரும் கவனிக்கலே'ன்னா நல்லாவா இருக்கும்?

said...

வாங்க நிர்மல்.
இன்னிக்கு நம்ம 'முத்துக்குளியல்' கூட நமக்கெதிரா இருக்கு.
எல்லாம் நேரம். 'பவர் அஃப் த உமன்' காட்டுது பாருங்க :-)))

said...

அக்கா, இதுபோல பார்த்துத் தொலைக்கக் கூடாத (சிலேடை!) படங்களைப் பற்றி அடிக்கடி எழுதுங்கள்.

said...

அரசு அன்று கொல்லும்;
தெய்வம் நின்று கொல்லும்;
வலை வாசகர் பாவம் என்றும் கொல்லும்- இப்படிப்பட்ட சினிமாவப்
பார்க்கவச்சு!
ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டுச்சுப்பா..

said...

அப்பாடா, உங்களுக்கும் ஒரு படம் சலிப்பு ஏற்படுத்தியதே !! இனி இந்த வாரம் சுவையான பதிவுகளை எதிர்நோக்கலாம்.

said...

குணால்&ஷர்மிலி?
நம்ம அஜித்தோட மச்சினியா?
ஜெய்ஹிந்தா? அர்ஜுன் படமில்லை அது?
என்ன என்ன என்ன வெண்ணீர்
அணிந்தது என்ன,.வேலைப் பிடித்தது என்ன கண்மூடி நின்றது என்ன. காவி உடுத்தது என்ன.இந்த லெவலுக்கு நீங்க போயிடுவீங்க சீக்கிரம்,இப்படிப் படம் பார்த்தா.:-))

said...

வாங்க லதா.

இங்கே வந்து மாட்டிக்கிட்டோமேங்க. கிடைச்சவரைக்கும்
லாபமுன்னுதான் இருக்கவேண்டி இருக்கு.

said...

சிஜி,
//ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டுச்சுப்பா.. //

சரி போகட்டும். பொழைச்சுப்போங்க.
இல்லாட்டா உங்களை யாரு காப்பாத்துவா? :-))))))

said...

வாங்க மணியன்.

'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், திமிரு'ன்னெல்லாம் கூட படங்கள் வந்தன.
ஆனா........... விமரிசனம் யாருக்கும் கிடைக்காததுக்கு மட்டும்தானே? :-)))))

said...

வல்லி,

இப்பவே KBS ரேஞ்சுலேதான் இருக்கேன். இது அஜீத் மச்சினிச்சியா? இருக்காது.
இருக்கவே இருக்காது. நீங்கதான் குருக்ஷேத்ரத்தையும், இதையும் போட்டுக் குழப்பிட்டீங்க:-)))

ஜெய் ஹிந்த்!

said...

என்னங்க.. முந்தின பதிவு இந்த பதிவு எதுமே என் சின்ன மூளைக்கு எட்டவே மாட்டேங்குது :(

said...

என்னங்க பொற்கொடி இப்படிச் சொல்லிக் காலை வாரிட்டீங்க?

சினிம்மாம்மா சினிமா. இதைத்தான் விமரிச்சிக்கறதுன்னு இல்லாம
'பார்க்கக் கிடைக்காத படங்களை' விமரிசனம் செய்யற கொளுகைக்கு
இப்படி ஆப்பு வைக்கலாமா? :-))))

said...

காலையில் பூக்கின்ற மலர்களெல்லாம் ஆண்டவன் திருவடியை அடைய விரும்பியே பூக்கின்றன. வீழ்கின்ற ஒவ்வொரு மழைத்துளியும் ஏழையின் கண்ணீரைத் துடைக்கவே வீழ்கின்றன. மாலையோ காலையோ வேறு எந்த வேளையோ! வீசுகின்ற தென்றல் இதமாகத்தான் வீசுகின்றன. இப்படியிருக்கப்பட்ட நேரத்திலே உலகின் ஓரத்திலே ஓர் நாடாம்! புதிய நிலம் என்னும் பெயராம்! ஆசிரியை என்று அழைக்கப்படும் துழாய் என்பது அவர் பெயர். பார்த்ததென்ன? இட்டதென்ன? ஏன் இந்த நிலை? எதனால் ஆனது இப்படி? யாரால்? இந்த வஞ்சத்தைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்றுதானே எல்லாரும் நினைக்கிறார்கள். இருக்கட்டும். அந்த நினைப்பு நினைப்பாகவே இருக்கட்டும். இருக்கட்டும்...இருக்கட்டும். :-(((((((((((((

said...

WAS IT THAT BAD

said...

ராகவன்,

நீங்களும் இந்தப் படத்தைப் பார்த்துட்டீங்களா?

ஏதோ நொந்துபோனமாதிரி இருக்கு:-)

said...

அனிதா,

பயந்துட்டீங்களா?

அவ்வளவா மோசமில்லை.

மனத்துணிவு வளர்த்துக்கணுமுன்னா இப்படி சிலதைச் செய்யணும்.
தயாரிப்பாளர் அவர் துணிவைக் காட்டிட்டார். அப்ப நாமும்....?