ஆட்டோமாடிக் லாக் பூட்டிக்கிச்சு. படி இறங்குற சமயத்துலே இஸ்த்திரி போடக் கொடுத்த துணிகளை எடுத்துக்கிட்டு மேலே வர்றாங்க மணிகண்டனோட அம்மா. கையோட வாங்கி வச்சுட்டுப் போயிறலாமுன்னுக் கதவைத் திறக்கறோம்........... அடக் கடவுளே! ஏடாகூடமாப் பூட்டிக்கிச்சோ? திறக்க வரலை(-:
இப்போ என்ன செய்யறதுன்னே புரியலை. வீட்டுச் சொந்தக்காரருக்கு போன் போட்டா, அவர் வீட்டுலே இல்லை.கிளம்புனது கிளம்பியாச்சு. வந்து பார்த்துக்கலாமுன்னு வெளியே போயிட்டோம். கோமளாஸ்லே சாப்பாடு. பக்கத்து பில்டிங்லே போய் மணி ச்சேஞ்ச் வசதி இருக்கான்னு பார்த்துக்கிட்டு இருந்தப்ப, அங்கே இருந்த ஒரு கடைக்காரர் பணம் மாத்திக் கொடுக்கறேன்னு சொல்லி, பையனை அனுப்பிவிட்டிருந்தார். வர்றவரைக்கும் எதோ பேசிக்கிட்டு இருந்தப்பத்தான், கொஞ்சம் விஸிட்டிங் கார்டு ப்ரிண்ட் செஞ்சுக்கணுமேன்ற நினைவு வந்துச்சு. கடைக்காரரும், அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் செஞ்சு தருவாருன்னு அவருக்கு போன் போட்டார் .. ... பத்து நிமிஷம் வெயிட் செஞ்சா அவர் வந்துருவாருன்னதும் சரின்னோம்.வீட்டுக்குத் திரும்பலாமுன்னா பூட்டைத்தான் திறக்க முடியலையே. அங்கே இருந்தே மறுபடியும் வீட்டு ஓனரைப் போன்லே பிடிச்சு விஷயத்தைச் சொன்னதும் இதோ கிளம்பி வரேன்னார்.
வீட்டைத் திறக்கறது எல்லாத்தைவிடவும் முக்கியமாச்சேன்னு, கடைக்காரர்கிட்டே எங்க வீட்டு போன் நம்பரைக் கொடுத்துட்டு வீட்டைப் பார்க்க ஓடுனோம். நாங்க போகவும், ஓனர் வரவும் சரியா இருந்துச்சு. அவர் என்னவோ செஞ்சு ஃபோர்ஸ் பண்ணிக் கதவைத் திறந்துட்டார். இப்பப் பூட்டைச் சரி செய்யணுமே....... அதுக்கு மல்லாடிக்கிட்டு இருந்தார்.
அப்பத்தான் கடைக்காரர் சொன்ன நபர்கிட்டே இருந்து போன் வருது. விலாசம் சொன்னா நேரில் வரேன்னார்.எங்களுக்கோ விலாசம் எல்லாம் சொல்ல விருப்பம் இல்லை. ப்ளாட் நம்பர் எல்லாம் சொல்லாம, கீழ்தளத்துலே இருக்கற ப்ரவுஸிங் செண்ட்டருக்கு வந்துறச் சொன்னோம். அப்படி வந்தவர்தான் ஷஃபி.
நானும் தோழியுமா வியாபார விஷயமா அப்ப இந்தியாவுக்கு வந்திருந்தோம். விஸிட் கார்டு அடிச்சுக்கறதுலே இருந்து,இங்கே தொடங்கப்போற கடைக்குச் சாமான்கள் வாங்கறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் இருந்துச்சு. கையோடு கொண்டுவந்துருந்த ஃபைலில் இருந்து நிறைய சாம்பிள் கார்டுகளைக் காமிச்சார் ஷஃபி. எங்க மனசுலே இருந்த டிஸைனைச் சொல்லி வரைஞ்சு காமிச்சு ஒரு மாதிரி புரிய வச்சோம். அதுக்கேத்த மாதிரி செஞ்சுகிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனார்.
"நீங்க என்ன ஜாதி மேடம்?"
சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. தோழிக்கோ அவ்வளவாத் தமிழ் தெரியாது.
" ஆமாம். தமிழ் நாட்டுலே ஜாதி என்ன கேட்டா 7 வருசம் ஜெயில்னு எப்பவோ சொன்னாங்களே....... அதுஇன்னும் அமுலில் இருக்கா?"
" என்ன மேடம் நீங்க? ஹிஹி..... ச்சும்மாத்தான் கேட்டேன் மேடம்"
" ஓஓஓஓஓ அப்படியா...? நான் மனுஷ ஜாதி"
" சரியாச் சொன்னீங்க மேடம். நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு நான் எதிர் பார்த்தேன். அதுக்குத்தான் இப்படிக் கேட்டேன் மேடம். நானும் உங்களைப் போலத்தான் மேடம். ஜாதி என்னங்க ஜாதி? மனுசங்க எல்லாம் ஒண்ணுதான்னு இருப்பேன் மேடம்"
இதுதான் ஷஃபி. இடத்துக்குத் தகுந்தாப்போல பேச்சு. இப்படி இல்லேன்னா பிழைக்கவும் முடியாதுதான். ஆனா நொடிக்குநொடி இந்த 'மேடம்' தான் பாடாய்ப் படுத்துது. இங்கே கடைகண்ணிகளிலும், மத்த இடங்களிலும் இதே ரோதனைதான்.மரியாதையாப் பேசறதுக்காக இந்த 'மேடம்' வருது போல.
கார்டு ரெடியாம். சாம்பிள் கொண்டு வரேன்னதும் நாங்க இங்கே ஒரு ரெஸ்டாரண்டுக்கு வரச்சொல்லிட்டோம். பிஸினெஸ் டின்னர்? தங்கி இருந்த இடத்துக்கு யாரையும் வரவழைச்சுப் பேச வேணாமுன்னு ஒரு முடிவு. டிஸைன் நல்லாத்தான் இருந்துச்சு. அதையே ப்ரிண்ட் செய்யச் சொல்லியாச்சு. இன்னும் எங்களுக்குத் தேவையான சாமான்களுக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னார். எங்களுக்கு நல்ல டிஸ்கவுண்டிலே சாமான்கள் இங்கே இருந்து வாங்கிக்கவும், அதையெல்லாம் அவுங்களே ஷிப்பிங் பண்ண ஏற்பாடு இருக்குன்னு சொன்னோம்.
"அவுங்களுக்கு என்னை இண்ட்ரட்யூஸ் பண்ணிருங்க மேடம். நான் உங்களுக்கு ஏஜண்டா இருக்கேன். எல்லா ஆர்டர்களையும் சரிபார்த்து அனுப்பி வச்சுருவேன்"
" அப்படி ஒருத்தர் வேணும்தான். அங்கே கடை எப்படிப் போகுதுன்னு பார்த்துக்கிட்டுச் சொல்றேன்"
" துணிமணிகளுக்கு எனக்குத் தெரிஞ்ச சேட் இருக்கார் மேடம். அவர் மூலமா வாங்கலாமா?"
" வேணாங்க. எங்களுக்கு எக்ஸ்க்ளூஸிவா புடவைகள் அனுப்ப ஒரு ஏஜண்ட் ஏற்கெனவே இருக்காங்க"
"நீங்க ரெண்டு பேரும் தைரியமா இப்படி பிஸினெஸ் தொடங்கறீங்க பாருங்க இது நல்லாப் போகும் மேடம். நீங்க இந்து, அவுங்க( என் தோழி)கிறிஸ்டியன், நானு முஸ்லீம். இப்படி எல்லா மதமும் சேர்ந்து ஒத்துமையா ஒரு காரியம் செய்யறப்ப அது எப்பவும் ஜெயிக்கும் மேடம்"
நாங்க சந்திச்ச பலரில், சிலர் கேட்டதுபோல இவரும் 'இங்கே இந்த நாட்டுக்கு வர நாங்க உதவி செய்ய முடியுமா'ன்னு கேட்டார். எல்லாருக்கும் சொன்ன பதிலையே இவருக்கும் சொல்லி வச்சோம், நெட்லே எல்லா விவரமும் இருக்கு. பார்த்து அப்ளை செய்யுங்கன்னு.
ஷஃபிக்கு ரெண்டு பெண் குழந்தைகளாம். எட்டும் அஞ்சும் வயசாம். தங்கச்சிங்க ரெண்டு பேருக்கு இன்னும் கல்யாணம் முடியலையாம். அதுக்காக வேலைக்கு மிடில் ஈஸ்ட் போகலாமுன்னு ஒரு எண்ணம் இருக்காம். அப்பாஅம்மா சம்மதிக்கலையாம். பிள்ளைங்களை விட்டுட்டுப்போக மனசு வரலையாம்.
பேச்சுவாக்குலே இங்கே ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க ஐடியா இருக்கறதாச் சொல்லவும், 'என் மனைவி நல்லா சமைப்பாங்க மேடம். நானும் சமைப்பேன். ஆனால் அவுங்க போல வராது மேடம். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குவந்து ஒருதடவை சாப்பிட்டுப் பார்க்கணும் மேடம்'ன்னு ஆரம்பிச்சுட்டார்.
எங்களுக்கு இந்த மாதிரி யார் வீட்டுக்கு போகவும்,சாப்பிடவும் விருப்பம் இல்லாததாலெ சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்கறதே கஷ்டமாயிருச்சு.
சிலநாட்கள் சில பொருட்களை மாதிரிக்காகக் கொண்டு வந்து காமிச்சார்தான். அதுலே ஒண்ணும் சரியான தரமா இல்லைன்றதுதான் விஷயம். கண்ட சாமான்களையும் வாங்கிக்கற எண்ணம் எங்களுக்கு இல்லை. இதுபோல ஒவ்வொரு சந்திப்பும் வீட்டுக்கு வெளியிலேயே இருந்துச்சு. அப்பப்ப அவருடைய சேவைக்குப் பணம் கொடுத்துக்கிட்டே வந்தோம். ஒவ்வொரு முறையும் வீட்டுக்குச் சாப்பிட வரணுமுன்னு வற்புறுத்திக்கிட்டே இருந்தார்.
அவர் மூலமா வாங்குன ஒருசில சாமான்களுக்குப் ஃபைனல் பேமெண்ட் கொடுக்க வேண்டி இருந்துச்சு. போன்லே எங்களைக் கூப்பிட்டு வரேன்னு சொன்னார். நாங்க தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குக் கீழே நிறைய கடைகண்ணிகள் இருந்துச்சு.அங்கே ஒரு இடத்துலே சந்திக்கறோமுன்னு சொல்லிட்டுக் கீழே போறதுக்காக ப்ளாட்டுக் கதவைத் திறந்தால்.........கதவுக்கு வெளியிலே நின்னுக்கிட்டு இருக்கார் ஷஃபி. தூக்கிவாரிப் போட்டுச்சு எனக்கு.
இதுவரை நாங்க எந்த ப்ளாட்டுலே இருக்கோமுன்னு அவருக்குச் சொல்லவே இல்லை. போன் நம்பர் மட்டும்தான் கொடுத்துருந்தோம். ஒருவேளை அதை வச்சு அட்ரஸை, தொலைபேசி விசாரணையில் தெரிஞ்சுகிட்டு இருக்கலாம்.ஆனால் எனக்கென்னமோ ரொம்ப 'நோஸி'யா இருக்கறதாப் பட்டுச்சு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துட்டு அவரை அனுப்பி வச்சோம். அதுக்கப்புறம் அவரோடு எந்தவிதமாவும் பேசவும் மனசுக்குப் பிடிக்கலை. அவரும் விடாம பலமுறை ஃபோன் பண்ணிக் கேட்டுக்கிட்டே இருந்தார். எங்களை வழி அனுப்ப ஏர்ப்போர்ட்டுக்கு வ்ர்றதாவும் சொல்லிக்கிட்டே இருந்தார்.
எதாவது செஞ்சு, வாழ்க்கையில் ஜெயிக்கணுங்கற வெறி நம்ம ஷஃபிக்கு இருந்துச்சு. இவர்கிட்டே எங்களுக்குப் பிடிச்சவிஷயம் நேரம் தவறாமை. சொன்ன நேரத்துக்குச் சரியா வந்துருவார். இன்னொரு விஷயம் எப்பவும் சிரிச்ச முகம்.கடைசியாச் சொல்லணுமுன்னா மரியாதையான பேச்சு.
பேசிப்பேசி ஆளுங்களை நைச்சியமா கன்வின்ஸ் பண்ணறதுலே ஷஃபி மாதிரி வேற யாரையும் நான் இதுவரை பார்த்ததில்லை.வெறும் 500 விஸிட்டிங் கார்டு கேட்ட எங்களை அஞ்சாயிரம் கார்டு வாங்கிக்கச் சம்மதிக்க வச்சதைச் சொல்லணும்!
அடுத்த வாரம்: கஸ்தூரி
நன்றி: தமிழோவியம்
Wednesday, September 20, 2006
எவ்ரிடே மனிதர்கள் -17 ஷஃபி
Posted by துளசி கோபால் at 9/20/2006 07:34:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
test
" கைகால் எல்லாம் ஒரே நடுக்கம்"
"ஏதாவது செய்து வாழ்க்கையிலே
ஜெயிக்கணும் ன்ற வெறி....."
ஆர்வக்கோளாறு!
ஆபத்தானவர் இல்லை!
என்னா டெஸ்ட்?
"கைகால் எல்லாம் ஒரே நடுக்கம்"--
வயசாகுதில்லே...
//சரியாச் சொன்னீங்க மேடம்//
//அவுங்களுக்கு என்னை இண்ட்ரட்யூஸ் பண்ணிருங்க மேடம்//
//துணிமணிகளுக்கு எனக்குத் தெரிஞ்ச சேட் இருக்கார் மேடம். அவர் மூலமா வாங்கலாமா//
//'என் மனைவி நல்லா சமைப்பாங்க மேடம். நானும் சமைப்பேன்//
வியாபார நோக்கம் மேலோங்கியே இருக்கிறது ஷாஃபிக்கு.
சிஜி,
//என்னா டெஸ்ட்?
"கைகால் எல்லாம் ஒரே நடுக்கம்"--
வயசாகுதில்லே...//
வாய்( கை) தவறி ஒண்ணு சொல்லிறக்கூடாதே? :-))))
பதிவு போட்டு 24 மணி நேரமாச்சு. பின்னூட்டம் மருந்துக்குக்கூட வரலைன்னதும்
மக்கள்ஸ் பதிவைப் பார்த்தாங்களா இல்லையா? தமிழ் மணத்துலே தெரியுதா இல்லையா?
பின்னூட்டப்பெட்டி வேலை செய்யுதா இல்லையா? ன்ற கவலை எல்லாம் ஒண்ணாச் சேர்ந்துவந்து
ஏற்பட்ட கை கால் நடுக்கம்( ஷிவரிங்)
இளா,
வாங்க. என்ன இந்தப் பக்கம் அபூர்வமா?
நல்லா இருக்கீங்களா?
//வியாபார நோக்கம் மேலோங்கியே இருக்கிறது ஷாஃபிக்கு.//
எல்லாம் சர்வைவல் டெக்னிக் தானே?
உங்ககிட்ட ஒரு விதமான பதட்டத்தோட இருந்திருக்கார் ஷஃபி. உங்ககிட்ட நல்ல பேரு வாங்கினா பிஸினஸ்ம் வரும், பணமும் வரும். எந்த மனிதனுக்கும் இருக்கிற குணம்தான். அவரை நினைச்சா பாவமா இருக்குதுங்க.
மக்கள்ஸ் பதிவைப் பார்த்தாங்களா இல்லையா? தமிழ் மணத்துலே தெரியுதா இல்லையா?
பின்னூட்டப்பெட்டி வேலை செய்யுதா இல்லையா? ன்ற கவலை எல்லாம் ஒண்ணாச் சேர்ந்துவந்து
ஏற்பட்ட கை கால் நடுக்கம்( ஷிவரிங்)//
என்னது துளசியோட பதிவுக்கு பின்னூட்டம் வர மாட்டேங்குதா.. மக்கள்ஸ் எல்லாம் எங்கயாவது வெளியூர் போய்ட்டாங்களா?
வாங்க தம்பி,
எனக்கும்தான் அவரை நினைச்சா சிலசமயம் பாவமாத் தோணுது.
நல்ல மனிதர்தான்.
என்னங்க டிபிஆர்ஜோ,
உங்களுக்குத்தெரிஞ்சுருச்சு. நம்ம சிஜி என்ன வார்த்தை சொல்லிட்டாரு பார்த்தீங்கல்லெ?
வயசாகுதாமெ வயசு. அப்டிங்களா? :-)))))
//வாங்க. என்ன இந்தப் பக்கம் அபூர்வமா?
நல்லா இருக்கீங்களா?//
ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல நல்லா இருக்கேங்க. தினமும் உங்க பதிவு படிக்கிறதுதான், ஆனா பின்னூட்டம் போடாம கிளம்பிருவேன். இன்னிக்கு என்னமோ தோணிச்சு, போட்டாச்சு. இனிமே தவறாம வரும் பாருங்க பின்னூட்டம்.
//பதிவு போட்டு 24 மணி நேரமாச்சு. பின்னூட்டம் மருந்துக்குக்கூட வரலைன்னதும்
மக்கள்ஸ் பதிவைப் பார்த்தாங்களா இல்லையா? தமிழ் மணத்துலே தெரியுதா இல்லையா?
பின்னூட்டப்பெட்டி வேலை செய்யுதா இல்லையா? ன்ற கவலை எல்லாம் ஒண்ணாச் சேர்ந்துவந்து
ஏற்பட்ட கை கால் நடுக்கம்( ஷிவரிங்)//
அட இப்படியெல்லாம் நடுங்குமா? நம்ம விவசாயத்துல முக்கால் வாசி பதிவுகள் ஒரு பின்னூட்டம் கூட இல்லாம ஓடியிருக்கே. அப்போ எனக்கும் ஷிவரிங் வருமா?
இளா,
//அப்போ எனக்கும் ஷிவரிங் வருமா?//
ஷிவரிங் வரலையா? அப்போ இது 'சிக் குன் குன்யா'வா?
நானும் பலர் பதிவுகளையும் படிச்சுட்டு ஒண்ணும் சொல்லாம ஓசைப்படாமப்
போறவதான். அது நல்லா இல்லேன்னும் தெரியும். சிலசமயம் வேற வழி இல்லை(-:
ஷஃபி போன்ற இளைஞர்களை நானும் பார்த்திருக்கிறேன்; மகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் சிலசமயம் 'ஓவர்ஸ்மார்ட்'டாக செயல்படுவதால் எரிச்சலும் பட்டிருக்கிறேன், உங்கள் அறை எண்ணை கண்டுபிடித்து வந்ததைப் போன்று.
இளா: விவசாயத்தில் பதிவுகள் பின்னூட்ட உரமின்றி வளர மண்ணின் வளமையே காரணம் :)
துளசி டீச்சர்: உங்கள் பதியும் நேரம் மற்ற ஏதாவதுஒரு கண்டத்திலாவது உறங்கும் நேரமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :)) நடுக்கம் வராது.
வாங்க மணியன்.
எனக்குத்தான் ஊருக்கு முந்தி பொழுது விடிஞ்சுருதே:-)
டேட் லைன்லே இருக்கறதாலெ மொத சூரியனே நமக்குதான்:-)
//பின்னூட்ட உரமின்றி வளர மண்ணின் வளமையே காரணம் //
நன்றி மணியன்.
கொஞ்சமாவது நடுக்கம் போச்சா?
ஷஃபி மாதிரி ஆட்களைப் பார்த்தால் தான் எனக்கு நடுக்கம் வரும்.
அவர்கள் முன்னேறட்டும். நம்மை விட்டு விட வேண்டும்.
ஆனால் இந்த நச்சரவு செய்து மேலே வருபவர்கள் தான் பிழைக்கத் தெரிந்தவர்கள்.
வல்லி வாங்க.
நடுக்கம் நின்னு ரொம்ப நேரமாச்சு:-)))
நன்றிப்பா.
Post a Comment