Friday, August 02, 2024

போட்ட முதலை (! ) எடுத்தாச் :-)......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 23 )

பனிச்சுவர்களை விட்டு விலகிக் கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டு  இருக்கோம்.  பனிப்பாறைகளும் நம்மைப் பின் தொடர்ந்தே வருகின்றன......
இப்படிக் கோலாகலமான காட்சிகள் வெளியே இருந்தாலும்,  கப்பலுக்குள் தினசரி பரிபாடிகள் ஒன்னும் முடங்காதெ.... அந்தந்த நேரத்தில், அதது  நடந்துக்கிட்டே இருக்கு. 


க்ராண்ட் ஃபோயரில்  பெல்லி டான்ஸ் க்ளாஸ்.  கொஞ்ச நேரம் ஆடி மகிழும்  மக்கள். பாதி ஆட்டம்  இந்த டான்ஸுக்கான உடுப்பில்தான் இருக்கு. கொஞ்சம் அசைஞ்சாலே போதும். 
ஒரிஜினல் பெல்லி டான்ஸை, நம்ம ஈஜிப்ட்  பயணத்தில் பார்த்துருக்கோம். இங்கே நியூஸியிலும் வெள்ளைக்கார மங்கையர்களுக்குப் பிடிச்சுப்போய் இந்த டான்ஸ்க்குப் பள்ளிக்கூடமே  நடத்தறாங்க. இப்போ பாலிவுட் டான்ஸும் பிரபலமாகி, அதுக்கும் ஒரு டான்ஸ் ஸ்டூடியோ வச்சுச் சொல்லித்தர்றார் நண்பரின் மகன். 
டான்ஸ்  க்ளாஸ் முடிஞ்சதும்  லைவ் ம்யூஸிக்னு வயலினும் செல்லோவும். அதுக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது ! 

கப்பலுக்குள் இருக்கும் கடைத்தெருவில் 'மார்கெட் டே' ! ஒரே ஒரு கடைதான். வெளியே ஏழெட்டு மேஜைகளைப் போட்டுக் கடைப்பொருட்களையெல்லாம் குவிச்சு வச்சுருக்காங்க. !

நம்ம கெஸீனோவில் ஒரு விளையாட்டுப்போட்டி !  $ 500 Slot Tournament .   'நீயும் பெயர் கொடு'ன்னார் நம்மவர். அதெல்லாம் என்னால் ஆகாது. அவ்வளவு வெறியோடு வேகமா ஆட முடியாது. வேடிக்கை பார்த்தால் போதும் !  கடைசியில் ஒரு லேடிதான் ஜெயிச்சாங்க !



சாயங்காலம் ஏழு மணிக்குத் தியேட்டரில்  Jason Blanchard Standup Comedy . போகலாமான்னார் நம்மவர். எனக்கு அவ்வளவா ஆர்வம் கிடையாது.     ஸில்லி ஜோக்கடிச்சால் எனக்குச் சிரிப்பும் வராது. நீங்க போயிட்டு வாங்கன்னேன்.  சொல்பேச்சு கேக்கலை. 
அதுக்குப் பதிலா நடக்கப்போகலாமேன்னு கிளம்பி ஒரு சுத்து சுத்திட்டு வந்தோம். 
கெஸீனோவில் இன்றைக்கு அஞ்சு டாலர் வவுச்சர் எல்லோருக்கும்  தர்றாங்க.  ரூம் கார்டைக் காட்டினால் போதும்.  நம்ம மெஷீனில் டாப் அப் ஆகிருது.  என்ன ஒன்னு.... பாதி ஆட்டத்தில் நிறுத்த  முடியாது.   ரெண்டு பேருமா ஆடு ஆடுன்னு  ஆடறோம். நான் நிதானமா வழக்கம்போல்.  பொறுமைத்திலகம், நிறைய பெட் வச்சு ஆடி அஞ்சு டாலருக்கு மேல்  ஜயிச்சாச் !  குருவுக்கு மிஞ்சின சிஷ்யர் !  கேஷ் வவுச்சரை எடுத்துக்கிட்டுப்போய் காசை வாங்க வச்சேன்:-)   ஆகக்கூடி நாம் முதல்முதலில் போட்ட முதலை (! ) எடுத்தாச்!   இனி  கொஞ்சம் கொஞ்சமா கேஷ் வவுச்சரை எடுத்து வச்சுக்கிட்டு, தினமும் கொஞ்ச நேரம் ஆடித்தீர்த்தால் ஆச்சு !





டின்னருக்குப்போனால், டிஸ்ஸர்ட் செக்‌ஷனில் இண்டியன் டே !  கேஸரி, கேரட் ஹல்வா, சேமியா பாயஸம்னு மூணுவகை. இப்படி ஒரே நாளில் வைக்காமல் தினம் ஒரு வகைன்னு வைக்கப்டாதா ? என்னவோ போங்க.....  மூணையும் சாப்பிட்டுப் பார்த்தேன்.  கேஸரி ரொம்ப சுமார். பாயஸம் பரவாயில்லை. கேரட் ஹல்வா நல்லாவே இருந்தது !

https://www.facebook.com/1309695969/videos/1680995862637427/

மேலே லிங்க். ஒரு ஒன்னரை நிமிட் வீடியோ க்ளிப். ஒரு நிமிட்டுக்கும் குறைவாக இருந்தால் இங்கேயே சேர்க்க முடிகிறது. 




நல்ல மழையும் காத்துமா இருந்ததால் மொட்டை மாடிக்குப்போகும் வழிகளையெல்லாம் அடைச்சுப் பூட்டுனாங்க.  போகட்டும்,  ஆட்டம் க்ளோஸ்னு நம்ம அறைக்குப்போய்,  வலைக்குள் நுழைஞ்சேன்! என் மொபைலுக்கு நெட் கனெக்ஷன் வாங்கினாலும்  ப்ளூடூத் வழியா நம்மவர் ஃபோனுக்கும் பகிர்ந்துக்கலாம் என்பதால் சண்டை இல்லாத  மேய்ச்சல் !
தினமும் ரெண்டு முறை அறையைச் சுத்தம் செஞ்சு, படுக்கை விரிப்புகளை சரியாக்கிட்டுப் போயிடறாங்க. கூடவே நாலு குட்நைட் சாக்லெட்ஸும்.   

தொடரும்......... :-)

12 comments:

said...

கப்பலின் உட்புற வெளிப்புற காட்சிகள் சுவாரஸ்யம். பெல்லி டான்ஸ் அசைவுகள் புன்னகைக்க வைக்கிறது!

said...

அனைத்தும் நன்று.... ரசித்தேன்...

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

கப்பலில் இருந்து வீட்டுக்கு வரும்போது ஏதாவது கலைகளைக் கற்றுக்கொண்டுதான் வருவோம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசித்தமைக்கு நன்றி .

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

ஆஹா ...

said...

பெல்லிடான்ஸ் சூப்பராக இருந்திருக்கும்.துபாய் பயணத்தில் பார்த்தோம்.

கெசினோ வின்னஸ்க்கு வாழ்த்துகள்.

said...

வாங்க அனுப்ரேம்,

ஆஹா.... உங்களை இங்கே பார்த்தே ரொம்பநாளாச்சே ! நலம்தானே ?

said...

வாங்க மாதேவி,

ஆமாம். இதை நீங்க அப்ப எழுதிய எகிப்து பயணக்கதையிலேயே சொல்லியிருந்தீங்க !
கெஸினோ வின்..... ஹாஹா
நன்றி !

said...

நாங்கள் அனைவரும் நலம் மா ..கடந்த ஆறு மாதங்களாக பையனின் கல்லூரி படிப்புக்கான நுழைவு தேர்வு மற்றும் கல்லூரியில் சேர்வது. கணவரின் பயணங்கள் என்பதால் நேரம் மிக வேகமாக சென்றுவிட்டது.. இனி தொடர்ந்து தங்கள் தளம் வருவேன் ...

said...

வாங்க அனுப்ரேம்,

எல்லாம் நல்லபடி நடந்தது மகிழ்ச்சி!

வலையில் உள்ள வசதியே நேரம் கிடைக்கும்போது வாசிக்கலாம் என்பதுதான் !

மீண்டும் வருக !