ஹொட்டேல் வளாகத்தில் காத்திருந்த டாக்ஸிகளில் ஒன்னு நமக்காக வந்துச்சு. இடத்தைச் சொன்னதும் சரின்னுட்டு வண்டியைக் கிளப்பினார் ஓட்டுநர். பஞ்சாபி இல்லைன்னு தோணுச்சு. ! கூகுள் சொன்ன பனிரெண்டு நிமிட்டை மறந்துடணும். இத்தனைக்கும் நாலரைக் கிமீதானாம் ! அரைமணி நேரம் கடந்தபின்..... ஒரு தோட்டத்துக்குள் வண்டியை நிறுத்தி, இடதுபக்கம் கையைக் காமிச்சு இந்த வழியாப்போங்கன்னுட்டுப் போயிட்டார்.
நசநசன்னு இருந்த மழைவேற வலுக்க ஆரம்பிச்சது..... நாங்க பாட்டுக்கு ஒத்தையடிப் பாதையில் நடந்து போய்க்கிட்டே இருக்கோம். யாரையாவது கேக்கலாமுன்னா.... யாரை ?
சின்னக் கட்டடம் போல ஒன்னு கண்ணில் பட்டதும் அங்கே போய் விசாரிக்கலாமுன்னா.... அது கடை போல இருக்கு. ஆளரவம் இல்லை. சுத்திச் சுத்திப்போய், வண்டிகள் வந்துபோகும் பெரிய பாதையில் புகுந்தோம். தூரத்தில் கார்பார்க். நிறைய வண்டிகள். அங்கே போனால் பாதிவழியில் நமக்கிடதுபக்கம் நாம் தேடிவந்தது இருக்கு ! அப்பதான் புரிஞ்சது, டாக்ஸிஓட்டி, நாம் போக வேண்டிய பாதைக்கு எதிர்ப்பக்கம் கை காட்டிட்டுப் போனது.... அடப்பாவி.... அரைமணி நேரம் அலையவிட்டுட்டியே..... அதுவும் மழையிலே.... இத்தனைக்கும் கையில் நெட் கனெக்ஷனோடு மொபைல் ஃபோன் வேற இருக்கு ! அதுலே பார்த்துருக்கலாமுல்லெ ? தெரியலைன்னா .... தெரியலைன்னு சொல்றதுக்கு ஏன் தெரியலை ?
ப்ளோடெல் கன்ஸர்வேட்டரின்னு பெயர். Prentice Bloedel என்பவர் இதைக் கட்ட நிறைய பொருளுதவி செஞ்சதால் அவர் பெயரையே வச்சாச். நன்றிக்கடன் ! 1969 ஆம் ஆண்டில் திறப்பு விழா நடந்துருக்கு !
இதுக்குள் போய்ப் பார்க்க கட்டணம் உண்டு. நமக்கு ஸீனியர் வகையில் கழிவு விலையில் டிக்கெட் கொடுத்தாங்க. (எங்கூரில் பார்க், கன்ஸர்வேட்டரி, ம்யூஸியம், ஆர்ட் கேலரி போல ஸிட்டிக் கவுன்ஸில் ஏற்று நடத்தும் இடங்களில் எல்லாம் அனுமதிக்கட்டணம்னு ஒன்னும் கிடையாது எனச் சொல்லிக்கொண்டு..... )
அரைக்கோள வடிவக்கூரை. கால் ஏக்கர் பரப்பளவு. நடைபாதைகளுக்கு ரெண்டு பக்கமும் செடிகளோ செடிகள். நம்மூரில் இல்லாத செடிகள் மீதே கவனம் இருந்தாலும், பச்சைப்பசேர்னு இருக்கும் செடிகளைப் பார்ப்பதும் பரவசமே !
Macaw வகை வண்ணவண்ணக் கிளிகள் அங்கங்கே ! Cockatoo & Parakeet & Lorikeet வகைகளும் இருந்தன. நம்மூர்த் தோட்டத்தில் இவை இல்லை.
500 exotic plants & 100 பறவைகளும் இருக்காம். கூடவே 1000 எலிகளைச் சேர்த்துருக்கலாம் :-)
டான்ஸ் மாஸ்டர் சரியாச் சொல்லித்தரலையேப்பா.....
ஒரே மாதிரியே எப்பவும் தலையாட்டினால் எப்படி ?


சின்னப்பசங்களுக்கான பொழுது போக்கும், கொஞ்சம் பறவைகளையும் செடிகளையும் அறிமுகம் செஞ்சுக்கும் வகையுமா ஒரு ஆக்டிவிட்டி ஷீட் !
அதை நிரப்பிக் கவுன்ட்டரில் கொடுத்துடலாம். நாலு வயசுவரை இலவச அனுமதி. அஞ்சுன்னால் அரை டிக்கெட் கட்டணம்.



வழக்கம்போல் சீன, ஜப்பான் பயணிகள் அதிக அளவில் இருந்தாங்க. நாமும் சுத்திப்பார்த்துட்டு, கவுன்ட்டரில் இருந்த பெண்ணிடம், ஒரு டாக்ஸியைக் கூப்பிடச் சொல்லி உதவி கேட்டோம். அதான் நமக்கு வலை வசதி இல்லையே.... எதிரில் அந்தாண்டை இருக்கும் ரெஸ்ட்டாரண்ட் வாசலில் போய் இருக்கச் சொன்னாங்க. டாக்ஸி வந்து பிக்கப் செஞ்சுருமாம்.
அந்தாண்டை போனால்..... ஒரு சின்னக்குழுவைப் படம் எடுத்துக்கிட்டு இருக்கார் ஒருவர். நல்ல அருமையான சிற்பங்கள் ! இங்கே நின்னு பார்த்தால் வன்கூவர் நகர் காட்சி கொடுக்குது. க்வாரி கார்டன். வன்கூவர் நகர நிர்மாணத்துக்குக் கற்கள் வெட்டி எடுத்த இடம் இது. நம்மூர் நகரத்துக்கும் கற்கள் வெட்டி எடுத்த இடத்தில் ஹால்ஸ்வெல் க்வாரின்னு ஒரு தோட்டம் இருக்கு என்பது நினைவுக்கு வராமல் இருக்குமோ ?
சின்னதாச் சரித்திரம் சொல்லும் மாடர்ன் கல்வெட்டு வச்சுருக்காங்க. வெங்கலவார்ப்புதான்.
டாக்ஸி வந்ததும் கிளம்பிக் கால்மணியில் ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். பக்கத்துலே இருக்கும் IGA Super Market லே ஏதாவது வாங்கிக்கலாமுன்னு போனால்.... அங்கே Curry Bar னு ஒன்னு !
வெஜ் & நான் வெஜ் ஐட்டம்ஸ் வச்சுருக்காங்க. ரைஸும் ரெடி. சூப் இருக்கு ! அங்கிருக்கும் சின்னச் சின்ன அட்டைக் கப்களில் எடுத்து, நிறுத்து வாங்கிக்கலாம். நூறுகிராம் $ 2.39 ! நகைக்கு முழமுன்னா இங்கே எடைக்குச் சோறும் கறியும் !
அங்கேயே உக்கார்ந்து சாப்பிட ஏற்பாடு உண்டு. இல்லைன்னா வாங்கி எடுத்துக்கிட்டும் போகலாம். அக்கம்பக்கத்து இடங்களில் வேலையாக இருக்கும் மக்கள் வந்து எடுத்துக்கிட்டுப் போறாங்க. சோறும் குழம்பும் கறியுமாச் சேர்த்து இருநூறு கிராம் போதுமே !
இது அருமையான ஏற்பாடு ! கடைக்கு வரும்போது அப்படியே லஞ்ச் முடிச்சுக்கிட்டுப் போயிடலாம் ! ரெஸ்ட்டாரண்டு, டேக் அவே இவைகளைவிட மலிவுதான், இல்லையோ ! இதுவரை இப்படி ஒன்னு பார்த்ததே இல்லை! இந்தப்பகுதி மேனேஜரிடம் பாராட்டி நாலு வார்த்தை சொல்லிட்டு வந்தேன்.
இந்த IGA நிறுவனம் (The Independent Grocers Alliance) நாப்பத்தியொரு நாடுகளில் வியாபாரம் செய்யறாங்களாம். மே மாதம் 1926 இல் ஆரம்பிச்சு இன்னும் ரெண்டே வருஷத்தில் நூறு வயசு நிறைவு !
மாம்பழம் இருந்தது. கத்தி இல்லை என்பதால் வாங்கிக்கலை.
மழையில் வேறெங்கும் போகாமல் அறைக்குத் திரும்பி ஒரு தூக்கம் போட்டாச்!
தொடரும்.......... :-)

8 comments:
அழகிய காட்சிகள்..
எடைக்கு உணவு - இந்த ஐடியா நல்லா இருக்கே! இங்கே சில இடங்களில் எடைக்கு துணிகள் விற்பனை உண்டு.
பறவைகள் அழகு. எலிகளுக்கும் இடம் - ஆஹா... நல்ல மனசு! :)
அருமை சிறப்பு நன்றி
மறுபடியும் என் கமெண்ட் காணோம்!
வாங்க ஸ்ரீராம்,
அதென்னமோ.... உங்க கமென்ட்ஸ், ரொம்பவே காக்காவுக்குப் பிடிச்சுருக்கு போல ! கவனமாக இருந்தும் இப்படி..........
வாங்க வெங்கட் நாகராஜ்,
இங்கே fill a bag என்று புத்தகக்கடை, ரெடிமேட் துணிக்கடைகளில் அப்ப வரும். அவர்கள் கொடுக்கும் பையில் நமக்கு எவ்ளோ முடியுமோ அவ்ளோ நிறைச்சுக்கலாம். நான் காஃபி டேபிள் புக்ஸ் வகையில் நிறைய வாங்கியிருக்கேன் !
அதேபோல் Rags கிடைக்கும். கட்பீஸ் வகை துடைக்கும் துணிகள் !
குட்டிக்குட்டி எலிகள் மின்னும் கண்களோடு ஓடி விளையாடுவது அழகு. ஆனால் கடைசிவரை கெமெராவில் சிக்கவே இல்லை.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
அட ராமா..... காக்கா ஊஷ்............. ப்ச்
Post a Comment