ஜூநௌவில் இன்னும் ஒரு நாலு மணி நேரம் வெளியே இருக்கலாம்தான், ஆனாலும் எங்கேன்னு போறது? மழை வேற விடும் லக்ஷணம் இல்லை.....
அங்கேயே ஏதாவது லஞ்சுக்குப் போனால் ஆச்சுன்னு ஸ்லோத் இருக்கும் கடைக்குப் போனால்.... பக்கத்துலே நண்டு சமைக்கிறாங்க. உயிரோடு கொதிநீரில் போடறதைப் பார்க்க ஒரு கூட்டம் நிக்குது. நம்மவர்தான் அது என்னன்னு வேடிக்கை பார்க்கப்போய், ஒரு படமும் எடுத்தாந்தார். நம்மூரில் உயிரோடு இப்படிச் செய்வது தடை செஞ்சுருக்காங்க.
ஒரு கடையில் செல்லம்போல் ஒரு லாமா !
போகட்டுமுன்னு கப்பலுக்குத் திரும்பிவந்து, லஞ்சுக்குப் போனோம். பேக்டு கூமெரா இருந்தது. நம்ம சக்கரைவள்ளிக்கிழங்குதான். நியூஸியில் இதுக்குப் பெயர் கூமெரா !வழக்கம்போல் பருப்பும் சாதமும்.
இன்னிக்கு டிஸ்ஸர்ட் செக்ஷனில் க்ரீஸ், ஈரான், டர்க்கி நாட்டு ஸ்பெஷல்ஸ் வச்சுருந்தாங்க. கூடவே வழக்கம்போல் மற்றவைகளும்.
Tulumba (Iran, Ottaman Empire )
Loukoumades ( Greek )

Kunaffa (Egypt)
பால்கனியில் இருந்து கொஞ்ச நேரம் வேடிக்கை... அப்புறம் ஒரு தூக்கம்னு நேரம் போயிருச்சு. அஞ்சுமணி போல பார்த்தால் இன்னொரு க்ரூய்ஸ் கப்பல் வந்துக்கிட்டு இருக்கு ! ரொம்பவே பிஸியான நாள்தான் போல ஜூநௌவில் !
அஞ்சரை போல டீக்கடைக்குப் போனோம். அங்கேயிருந்து கொஞ்சம் வேடிக்கை. ஆறரைக்குக் கப்பல் கிளம்பிருச்சு !
இன்னிக்கு ஏழு மணிக்கு நம்ம தியேட்டரில் ஸ்டேடியம் ஸ்டைல் ராக் ஸிடி நிகழ்ச்சி.
கீழே கொடுத்திருக்கும் லிங்கின் வழியாகவும் கொஞ்சம் பார்க்கலாம் !
https://www.facebook.com/1309695969/videos/489123537054179/
https://www.facebook.com/1309695969/videos/2450415495157919/
அதுமுடிஞ்சு வெளியில் வந்தால் க்ராண்ட் ஃபோயரில் Acoustic Duo The story teller நிகழ்ச்சி. ஆடியன்ஸ் யாரும் இல்லைன்னாக்கூட நோ ஒர்ரீஸ், எங்க கடமையை நாங்க செய்யறோம் என்ற பாவம் முகத்தில் ! எனக்கே ஐயோன்னு இருந்துச்சு.....
இதுக்கிடையில் லக்ஸுரி லாக்கெட் சார்ம் வாங்கிக்கறது, வலை மேய்ச்சல், அது இதுன்னு ஒன்பது வரை நேரம் போக்கிட்டு டின்னருக்குப் போயாச்சு.
எனக்கு பேக்டு வெஜ்ஜீஸ் & பீட்ஸா.
கொஞ்ச நேரம் நம்ம விளையாட்டு. எல்லாம் இன்னும் ரெண்டு மூணு நாளுக்குத்தான்....
பத்துமணிக்கு க்ராண்ட் ஃபோயரில் David Klinkenberg வயலின் வாசிக்கிறார். முந்தாநாள்தான் தூங்கிப்போயிட்டேனே.... இப்பவாவது உக்கார்ந்து கேக்கலாமான்னு ஒரு எண்ணம் வந்ததுதான்..... ஆனால் தியேட்டர் போல ஸீட்டிங் வசதி இல்லையே..... ப்ச்....
இதே நேரத்தில் 80'ஸ் பார்ட்டி வேற ஸ்கைலவுஞ்சில் !
க்ரூய்ஸ் டைரக்டர் Kate நல்லா ஜக்கிள் பண்ணத்தெரிஞ்சவுங்கதான்! இல்லைன்னா தினப்படி நிகழ்ச்சிகளையும், ஒப்பந்தம் செய்துள்ள கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் குழறுபடியில்லாமல் ஒரு வாரத்துக்கு நிரவி விடமுடியுமா !!! நல்ல ஒரு டீம் அமைஞ்சுருக்குன்னு நினைக்கிறேன் !
அறைக்குத் திரும்பினால் மறுநாளுக்கான விவரம் காத்திருக்கு. இன்னொரு ஊருக்குப் போறோம். இந்தப் பயணத்தின் ஹைலைட் என்னன்னால் ஹப்பர்ட் க்ளேஸியர். அதுதவிர மூணு நிறுத்தம், மூணு ஊர். நாளைக்குப்போவதுதான் கடைசி நிறுத்தம்.
வடக்கே க்ளேஸியர் வரை போயிட்டுத் திரும்பறோம். அதுக்குள்ளே அஞ்சுநாள் முடிஞ்சுருச்சே !!!!
கப்பலில், கப்பல் கம்பெனியின் ஆஃபீஸ் ஒன்னு இருக்கு. அடுத்த பயணத்துக்கு அங்கே புக் பண்ணினால் நல்ல டிஸ்கௌண்ட் தர்றாங்களாம். முதலில் இந்தப்பயணம் முடியட்டும். பார்க்கலாமுன்னு சொல்லிவச்சோம். கொஞ்சநாளுக்கு முன்னால் ஏதோ டிவி டாக்குமென்ட்ரி பார்த்தப்போ.... சிலர் இப்படி க்ரூய்ஸ் கப்பலிலேயே ஒன்னு மாத்தி ஒன்னுன்னு தொடர்ந்து வசிக்கறாங்கன்னு தெரிஞ்சது..... நமக்கு அதெல்லாம் சரிப்படாது இல்லையோ !!!
மறுநாள் பொழுது புலரும்போதே.... காடும் மலையுமா கண்ணில் பட்டது. போகப்போகக் கொஞ்ச தூரத்துலேயே குட்டிக்குட்டித் தீவுகள். ஆட்களே அங்கே இருக்கமாட்டாங்க.
நம் ஃபிஜித் தீவு வாழ்க்கையில் தெரிஞ்சுக்கிட்டது..... அங்கேயும் சுமார் முன்னூத்திச் சொச்சம் தீவுகள் ஃபிஜியின் எல்லைக்குள்ளேயே இருக்கு. கொஞ்சம் பெரிய அளவில் இருப்பவை எல்லாம் வேற நாட்டு வியாபாரமாக, ரிஸார்ட்களாக கட்டி, நாட்டுக்கு வருமானம் வருது. மற்ற தீவுகளில் மனிதர் யாருமே வசிப்பதில்லை. ஆடு மாடுகளைக் கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டால் போதுமாம். சில வருஷங்களில் அவை பல்கிப்பெருகினதும், கொண்டு வந்து விற்றால் ஆச்சு !
இன்றைக்குக் காலை, நம்ம தியேட்டரில் ஒரு சுவாரஸ்யமான லெக்ச்சர் இருக்கு. கட்டாயம் போகத்தான் வேணும் என்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.
கப்பலில் இருக்கும்வரைக் கஞ்சியை விடப் போறதில்லையாக்கும் !
மதுப்ரியர்களிடம் கேட்கணும்.....ஆமாம்..... இவ்ளோ விலையா இதுக்கு ? ஙே.....
தொடரும்..........:-)

8 comments:
உணவுப்பொருள்களால் நிறைந்தது உலகு! தொலைவில் மலையடிவாரத்தில் அந்த ஊர்.. ஜூநௌ..... பார்க்க அழகாக இருக்கிறது.
ஊர் அழகாக இருக்கிறது. உணவுப் பொருட்கள் கண்களைக் கவர்கின்றன. நண்டு உயிருடன் இருக்கும்போது சமைப்பது - ஐயோ பாவம்!
நானும் தொடர்கிறேன் பயணத்தில்.
deserts & cakes - wow; கண்ணால் தின்றேன்; நன்றி ...
வாங்க ஶ்ரீராம்,
சின்ன ஊர், அருமையான இயற்கைச் சூழல். கூட்டம் ரொம்பவே குறைவு ! நிம்மதியான வாழ்க்கையாகத்தான் இருக்கவேணும் ! நமக்குச் சரிப்படுமோ ???
வாங்க வெங்கட் நாகராஜ்,
அழகாக அலங்கரிச்சு வச்சுருக்கும் உணவுப்பொருட்களைக் கண்ணால் கண்டாலே வயிறு நிறைஞ்சுருது, இல்லையோ !!!!
பாவம்.... இந்த நண்டுகள்.. ப்ச்....
வாங்க விஸ்வநாத்,
நான் கேமெராக் கண்ணால் அளவுக்கதிகமாகவே தின்றேன். இப்ப உடல் எடையை எப்படிக் குறைக்கப்போறேனோன்னு இருக்கேன்.....
நிகழ்ச்சிகள் உணவு என பொழுது களிந்தது.
தீவு அழகாக இருக்கிறது பின்னணியில் மலை நல்ல காட்சி.
வாங்க மாதேவி,
இனிமையாகவே அந்த ஒரு வாரமும் கழிந்தது உண்மை !
Post a Comment