Tlingit tribe மக்கள் மலைக்கு அந்தாண்டை இருந்து, மலைமேல் ஏறிப்பார்த்தப்பக் காற்றுக்கு அடக்கமா மலையடிவாரத்துலே இடம் இருந்ததைக் கவனிச்சு இறங்கி வந்து பார்த்தால்.... ஒரு ஓடை நிறைய ஸால்மன் மீன்களின் குட்டிகள் இருந்துருக்கு ! கடலில் இருந்தாலும், நல்ல தண்ணீருக்கு வந்துதான் முட்டையிடும் மீன்கள் இவை என்பதால் இனி மீனுக்குக் குறைவில்லைன்னு புரிஞ்சுருக்கு ! இப்பவும் Solman Capital of the world என்றே இந்த இடம் அறியப்படுதாம் !
அந்த ஓடையில் மீன்கள் பிடிச்சுக் கரையில் காயவச்சு எடுத்து வைக்கும் வழக்கம் இருந்துருக்கு. அந்தப் பகுதியில் நாம் பெரிய திருவடிகள் என்று சொல்லும் க்ருஷ்ணப்பருந்துகள் ஏராளம். அவையும் அந்த மீன்களுக்காக அங்கே வந்து போகும். அவற்றைப்பிடிக்கப்போனால்..... பெரிய ஓசையுடன் பறந்து போகுமாம். கருடனின் சைஸ் , அந்த அளவுக்குப் பெரூசு ! அதன் உடலே மூணடி நீளம் வரையாமே ! அப்போ றெக்கையோ ???? Tlingit மொழியில் kitcxanனு சொல்வாங்களாம். அதுக்குப் பொருள் thundering wings of an eagle ! அதுதான் கொஞ்சம் மரூவி கெச்சிக்கன் ஆகிருச்சுன்னு அந்தப் பழங்குடி பரம்பரையில் வந்தவர் ஒருவர் சொல்லியிருக்கார் !
அந்த ஓடைக்கே கெச்சிக்கன் என்று பெயர் வைக்கப்போய்க் கடைசியில் அந்த ஊருக்கும் அதே பெயர் நிலைச்சுப்போச்சு !
இந்த வகை பருந்துகள், ஆன்மிகத்தொடர்புள்ளவைன்னும் ஒரு நம்பிக்கை அவர்களிடையே இருக்காம்! (இருக்காதா பின்னே ? நம்ம விஷ்ணுவின் வாகனம் இல்லையோ!!!) அவை கண்ணில்பட்டால், அதிர்ஷ்டமாம் ! அடிச்சக்கை... கப்பலில் இங்கே வந்துக்கிட்டு இருந்த சமயம் தொலைதூரத்தில் ஒன்னு, கடலில் இருந்த கல்லில் உக்கார்ந்திருந்ததைப் பார்த்தோமே ! அப்ப நாம் அதிர்ஷ்டசாலிகளேதான் !!!!
ஆமாம்.... இந்தப் பருந்துகளுக்குத் தலையில், நரைமுடி டோபா வச்சாப்லேதானே இருக்கு. அப்ப ஏன் இதுக்கு Bald eagle னு பெயர் வச்சுருக்காங்க. டோபாவுக்குக்கீழே மொட்டைத்தலையா இருக்குமோ ?



டெக்கில் நடந்துபோகும்போதே கட்க்ளாஸ் வகை ஓவியங்களாக விதவித பறவை, மிருகங்கள் எல்லாம் பார்த்தோம். இந்த இடம் கூட க்ரூய்ஸ்களுக்கான Pபோர்ட்தான்.
இந்தப் பகுதியில் கரடிகள் அதிகமாம் ! ஆமாம். உண்மைதான்னு கடைகளில் நிற்கும் கரடிகள் சொன்னதைக் காதாரக்கேட்டேன் :-) சுற்றுலாப்பயணிகளைக் குறிவைக்கும் கடைகளே எல்லாம் !
அலாஸ்காவிலேயே அதிக மழைபெய்யும் பகுதி இதுதானாம். மழை எவ்வளவு பெய்திருக்குன்னு சொல்லும் போட்டி வேற இருக்காம் !
கரைக்குப்பக்கத்தில் வரும் மலைத்தொடரின் வாலில் ஒரு டன்னல் வெட்டியிருக்காங்க. நாம் இறங்குனது முதல் பெர்த் என்பதால் அதுக்குள் போய் வரலை.
சாயங்காலம் ஏழு மணிக்குள் கப்பலுக்குத் திரும்பி வரணும். நிறைய நேரம் இருக்கேன்னு டவுனைச் சுத்திக்கிட்டு இருக்காமல் , இந்த ஊரின் ஸ்பெஷல் சமாச்சாரமான டோட்டம் போல்ஸ் நிறைய இருக்கும் இடத்துக்குப் போறோம்.
அக்கம்பக்கம் விசாரிச்சதுலே பஸ் சர்வீஸ் இருக்குன்னும், அதுவும் இலவச பஸ்தான்னும் தெரிஞ்சது. பஸ் ஸ்டாப்பாண்டை போய்க் காத்திருந்தோம்.
இப்ப நாம் போகவேண்டிய இடம் டோட்டம் ஹெரிடேஜ் சென்டர்.
பஸ் ஸ்டாப்புக்கு வரும் வழியில் பெரிய திருவடி இருக்கார். க்ளிக் க்ளிக்.
இதுதான் இங்கே மெயின் ரோடு போல! Grant Street னு பெயர். எதிரில் இருந்த கட்டடத்தில் வெவ்வேற நாட்டுக்கொடிகள். அதுலே இந்தியக்கொடி பார்த்ததும் மனசு சந்தோஷப்பட்டது ! என்ன பில்டிங்னு தெரியலையே..... இந்தாண்டை இருக்கும் கட்டடத்தில் Masonic Templeனு பார்த்ததும் நம்ம இலவசக்கொத்தனார்தான் நினைவுக்கு வந்தார்.
கப்பலில் இருந்து வெளியே வந்து வேடிக்கை பார்த்து நடந்ததிலேயே ஒரு மணி நேரம் போயிருக்குன்னு தெரிஞ்சதும் 'திக்'னு இருந்துச்சு. பஸ் வந்ததும் இடத்தைச் சொல்லிட்டு உள்ளே போய் உக்கார்ந்தோம். ஒரு ஏழெட்டு நிமிட் பயணம்தான். இறக்கிவிட்டவர், அதோ அந்தப் பாதையில் போங்கன்னு கை காட்டிட்டுப் போனார்.
லேசா ஒரு ஏத்தம்..... நிதானமா ஏறிப்போறேன். ரெண்டு பக்கங்களிலும் சின்னதும் பெருசுமாக் குலச்சின்னக் கம்பங்களே ! ஹெரிடேஜ் கட்டடத்துக்கு முன்னால் ஒரு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம்.
கப்பலை விட்டு இறங்கி வெளியே வரும்போதே உள்ளூர் சுற்றிக்காட்டும் வகையில் நிறைய தனிப்பட்ட டூர்கள் கொண்டுபோகும் ஏற்பாடுகள் இருப்பதைப் பார்த்தோம்தான். கரடி, மூஸ் என்ற ரெயின்டீர், வழுக்கைத்தலை பருந்து, திமிங்கிலம், ஹெரிடேஜ் சென்டர், ஃப்ளோட் ப்ளேன் மூலம் போய்ப் பார்க்கும் Flight seeing tours to Fjord at Tongass National Forest இப்படி சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் ! ஒரு ரெஸ்ட்டாரண்ட் டூரில், நம்மையே மீன் பிடிக்க வச்சு, அதைப் பிடிச்சுக்கொடுத்ததும் சமைச்சுத் தருவாங்களாம். இதுதான் சால்மன் மீன்களின் தலைமையிடமாச்சே.... மீனுக்குக் குறைச்சலா என்ன ?
நாம் நியூஸியிலேயே Fjords பார்த்திருக்கோம் என்றதால் போகலை. காடு, கரடி எல்லாம் சுற்றிப்பார்க்க ஆசை இருந்தாலும் நிறைய நடக்கணும், அதுவும் குன்றுகள் இருக்கும் ஏத்தத்தில் என்பதால் வேணாமுன்னு இருந்தோம். ஹெரிடேஜ் சென்டரில், இங்கத்துப் பழங்குடிகள், அவர்களது கலை, கலாச்சாரம் எல்லாம் சொல்லும் குலச்சின்னக் கம்பங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத அளவில் நிறைய இருப்பதால் அங்கே போகலாமுன்னு நாங்களே தீர்மானிச்சதுதான்.
இந்த இடத்தில் அக்கம்பக்கத்துப் பதினெட்டுப்பட்டிகளிலும் இருந்து பழுதான கம்பங்களைக் கொண்டுவந்து பழையபடியே புதுப்பிச்சுக் கொடுக்கறாங்க!
ஒவ்வொரு குலச்சின்னக் கம்பங்களுக்கு அருகில் அதுக்குண்டான பெயர் எழுதி வச்சுருக்காங்க. எங்க நியூஸியில் இப்படி குலச்சின்னக் கம்பங்கள் இருக்குன்னாலும்.... இங்கேதான் மூக்கும் முழியுமா இருக்குன்னு எனக்கொரு தோணல்.
சுத்திப் பார்த்துக் க்ளிக்கிக்கிட்டு சென்டர் பக்கம் போனால்..... வரப்போற ஏதோ திருவிழாவுக்காக ஒரு இளைஞர் கூட்டம் பயிற்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க ! ஓசைப்படாம இருந்துட்டோம்.
இந்த ஹெரிடேஜ் சென்டரை, 1976 இல்தான் கட்டியிருக்காங்க. பழங்குடிகளின் கலை கலாச்சாரங்களைக் கட்டிக்காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்குல்லே ?
அந்தாண்டை இருக்கும் இன்னொரு ஹாலில் தூண்/கம்பங்கள், புதுப்பிக்கும் வேலை நடக்குது. வெளியே இன்னொரு கம்பம் படுத்துருக்கு. நல்ல பெரிய உருண்டையான முழுமரம்தான் !
அடுத்த கவலை உடனே....... இங்கிருந்து எப்படித் திரும்பி ஊருக்குள் போறது? இறக்கிவிட்ட இடத்துக்குப் போகணுமோ? எதிர்சாரியில் இருக்கும் நினைவுப்பொருட்கள் கடையில் விசாரிச்சால்... பஸ் வருமாம் ! எதிரில் போய் நின்னால் போதுமுன்னு சொன்னாங்க.
ஒரு இருபது நிமிட் தேவுடு காக்கவேண்டியிருந்தது..... வேறெங்காவது போய்ப் பார்க்கலாமுன்னு நினைச்சாலும்.... பஸ் வந்துட்டா ? ஒழுங்காக் கப்பலுக்குப் போய்ச் சேர வேணாமா ?
ஷட்டில் பஸ்ஸில் ஏறி டவுனில் இறங்கினோம். கப்பல் இருக்கும் திசை நோக்கிப் போனால்... கடலையொட்டிய தெரு முனையில் ஒரு சர்ச் !
St. Johns Church, 1897 லே கட்டுனதாம்.' சர்ச் கட்ட இலவசமா இடம் தர்றோம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அங்கே ஒரு பள்ளிக்கூடமும் நடத்தணும், எங்கள் பிள்ளைகளுக்காக' ன்னு இங்கத்துப் பழங்குடி மக்கள் கேட்டுக்கிட்டாங்களாம். அப்படியே ஆச்சு. இந்தப் பகுதியின் முதல் சர்ச்சும் முதல் பள்ளிக்கூடமும் இப்படித்தான் , இதே இடத்தில்தான் ஆரம்பிச்சுருக்கு !
Episcopal Church னு பெயர் போட்டுருக்காங்க. புதுப்பெயரா இருக்கே ! நமக்குத் தெரிஞ்சது ப்ராட்டஸ்டண்ட் & கேத்தலிக் னு ரெண்டுதான். அப்புறம் நியூஸி வந்த பிறகுதான் வேற பிரிவுகளும் இருக்குன்னு தெரியவந்தது. ஒரு அரசியல் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணம், புது அரசியல்கட்சி உருவாகும் அதே முறைதான் போல ! மனுஷன் எப்போ.... ஒரே கருத்துடன் மனம் மாறாமல் ஒரே குழுவாக இருந்துருக்கான் ? மாற்றுக்கருத்து இருக்கத்தானே செய்யும் ?
இந்தத் தெரு முழுக்க டோட்டம்போல் டிஸைன்களைச் சிறிய அளவில் செய்து விற்கும் கடைகளே ! அழகாத்தான் இருக்கு ! ஆனால் நமக்கில்லை....
கடைசியா வந்து சேர்ந்த இடத்தில் நகைக்கடைகள் ! ' உள்ளே வா.... இலவசம் இருக்கு' !
தங்கச் சுரங்கங்கள் இருப்பதை நினைவுபடுத்தும் விதம்..... தங்கத்துகள்கள் அடைச்ச குட்டிபாட்டில்களை நினைவுப்பரிசுகளா விற்கப்போட்டுருக்காங்க. தங்கம் அரிச்செடுக்கும் இடங்களும் சுற்றுலாப்பயணிகளுக்காக இருக்காம். நாம் நியூஸியில் இப்படி ஒரு தங்கச் சுரங்கத்தின் வெளியில் இருக்கும் சிற்றாறுக்குப்போயிருக்கோம். நாமே அரிச்செடுத்த தங்கத்துகள்களை ஒரு பாட்டில் போட்டு வச்சுருக்கேன். ஆனால் கடையில் இப்போ இருப்பதைப்போலப் பளபளன்னு இல்லை நம்மது.
ஒரு நகைக்கடையில் Ammolite Gem stone பென்டன்ட் இருந்தது. பலவித அளவுகளில் இருந்தாலும், சின்னதா ஒன்னு எனக்காச்சு. கப்பல் பயணத்தில் இந்த ஊர்தான் கடைசி நிறுத்தம் நமக்கு. நினைவுக்காக இருக்கட்டுமேன்னு துணிஞ்சுட்டேன். அப்படியே மகளுக்கு Kyanite Gemstone ஒன்னு.
அஞ்சே முக்காலுக்குக் கப்பலுக்குப் போயிட்டோம். வழக்கம்போல் மசாலாச் சாயாவுடன் வரவேற்பு !
ஏழு மணிக்கு நம்ம தியேட்டரில் மேஜிக் ஷோ ! கப்பலில் முதல்நாள் மைண்ட் ரீடிங் ஷோ நடத்திய சிங்கப்பூர்க்காரர் Jeremy Tan தான். சீட்டுக்கட்டில் இருக்கும் சீட்டுகளை வச்சே மேஜிக்.
எட்டரை வரை சூரியன் அஸ்தமிக்கவே இல்லை. மலைவாயில் விழும்வரை பார்த்துட்டு, ஒன்பதுக்கு டின்னர் போனோம். அதுவும் ஆச்சு !
நாளைக் கதை நாளைக்குன்னு இப்போதைக்கு ரெஸ்ட்தான்.......
தொடரும்........:-)

8 comments:
அருமை நன்றி
படங்களில் அந்த இடத்தின் அழகை ரசித்தேன். மலைகளுக்கு நடுவில் ஆறு.. பார்க்க மிக அழகு.
படங்கள் வழி நாங்களும் இந்த இடத்தில் ஒரு உலா வந்தோம். கடைசி படம் - கண்களையும் மனதையும் கவர்ந்தது.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஸ்ரீராம்,
இயற்கை அழகிற்கு ஈடு உண்டோ !!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
அழகான இடங்கள்தான் ! கடைசிவரை நார்தர்ன் லைட்ஸ் பார்க்கக் கிடைக்கவேயில்லை. ஆறுதல் பரிசுதான் இந்த அஸ்தமனம் .
ஊரை கண்டு களித்தோம்.
சூரியன் அஸ்தமனம் காட்சி அருமை.
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றிப்பா !
Post a Comment