Thursday, August 22, 2024

வன்கூவரைப் பார்த்து முடிச்சாச்சா ? .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 31 )

கண் முழிக்கும்போது ஏழேகால் !  மாலை ஏழேகால் ! சூரிய அஸ்தமனம். இதுதான்  கடைசி என்னும்போது மனசுக்குள் ஒரு மென்மை உணர்வு வந்துருதுல்லே ?  ஒரு காஃபி குடிச்சுட்டுக் கிளம்பி டேவீஸ் தெருவுக்குப் பொடிநடையில் போனோம். நல்லவேளையா மழை இல்லை.  கொஞ்ச நேரம் வேடிக்கை. 
பெரிய Dட்ரக் ஸ்டோர் ஒன்னு இருபத்திநாலு மணி நேரமும் திறந்திருக்குமாம். Icy Hot னு  ஒன்னு, நம்ம நெருங்கிய தோழியின் (மருத்துவர்)பரிந்துரைப்படி ஒரு அமெரிக்கப்பயணத்தில்  நம்மவர் வாங்கி வந்தது,  அருமையான வலிநிவாரணி ! அது நியூஸியில் கிடைப்பதில்லை.  இங்கே மருந்துக்கடையில் கிடைக்குமான்னு பார்க்கணும்.
உள்ளே போனால்  சூப்பர் மார்கெட் போல ப்ரெட், பழங்கள் இத்தியாதிகள் நிறைஞ்சுருக்கு !  நாம் தேடியதும் கிடைச்சது. ஒரு வாக்கிங் ஸ்டிக் நல்லா இருக்கேன்னு அதைவச்சு நடந்து பார்த்தேன், அப்போ நிஜமாவே அப்படி ஒன்னு வாங்கவேண்டிவரும் என்று தெரியாது, கேட்டோ  !
ஐஸ்க்ரீம் கடையில் ........ வெறும் க்ளிக் மட்டும். எங்கியாவது போய் ராச்சாப்பாட்டை முடிச்சுக்கணும்.  மலேஷியன்  ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம். உள் அலங்காரம் நல்லாவே இருக்கு ! பல்லாங்குழி வச்சுருக்காங்க. ! Roti Canai சாப்பிட்டு ரொம்ப வருஷங்களாச்சுல்லெ ? அதுவே இருக்கட்டும். 



நெருங்கிய தோழி, 'சின்னமன் பன்' சாப்பிடலையான்னு  நேத்து கேட்டாங்க. அவுங்களுக்காக ரெண்டு பன் வாங்கிக்கிட்டு  அறைக்கு வந்தப்ப மணி ஒன்பதரை.

கட்டக்கடைசியாப் பொட்டி அடுக்கும் வேலையை ஆரம்பிச்சார் நம்மவர். தடா போட்டேன். நேத்துதானே பொட்டியைக் கப்பலில்  அடுக்கினோம். அதைத் திறக்கக்கூட இல்லை. எதுக்குச் சும்மாச்சும்மா.......

மறுநாள் கிளம்பறோமே.... லேட் செக்கவுட் கேட்டதுக்குப் பகல் ஒரு மணிவரை கொடுத்தாங்க.   கொஞ்சம் நல்லாத்தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கணும்னு நினைச்சுத் தூங்கப்போனால்.....  ராத்ரி மூணே முக்காலுக்குத் தூக்கம் போச்சு.   ராத்ரி நேரத்து வன்கூவர் வீதிகளில் ஒரு அமைதி.  அந்த நேரத்திலும்  அப்பப்ப ஒன்னுரெண்டு வண்டிகள் போய்க்கிட்டுத்தான் இருக்கு. இப்பவும் ஹாஸ்பிடலுக்கு எதுத்த அறைன்னாலும் ஆம்புலன்ஸ்  ஒன்னும்  வரலை..... 
ஒரு காஃபியைக் குடிச்சுட்டு வலைமேய்ஞ்சதும் அப்படியே கண்ணை இழுத்துக்கிட்டுப்போய் தூக்கம்..... எப்பவும் ரெண்டாவது குட்டித்தூக்கம்தான் சுகமான சுகம் ! 
ஏழரைக்கு எழுந்து நிதானமாக் குளியல் வேலைகளை முடிச்சுட்டு ஒன்பதுக்கு  ப்ரேக்ஃபாஸ்ட்.  தோழியை நினைவில் வச்சுக்கிட்டோம்.  படமெடுத்துத் தோழிக்கும் அனுப்பினேன் :-)
ஒருமணிக்குச் செக்கவுட் செஞ்சுட்டுப் பெட்டிகளையெல்லாம்  கீழே கொடுத்துட்டு மெதுநடையில் பக்கத்துக் கடைக்குப் போனோம். நம்மவருக்கு இருநூறு கிராம் :-) எனக்குப் பசி இல்லை.  ஒன்னும் வேண்டியிருக்கலை. 
 
நம்மூருக்கும் வன்கூவருக்கும் விலைவாசி எப்படின்னு நோட்டம் பார்த்தேன். ப்ச்.... ஏறக்கொறைய எல்லாமே டபுள் விலை. பொதுவா நியூஸிதான் எக்ஸ்பென்ஸிவ் னு சொல்வாங்க. இங்கே  எல்லாமே டபுள் டபுள் !
போதும் வயித்தெரிச்சல்னு  கொஞ்ச தூரத்தில் இருக்கும்  ஆர்ட் கேலரிக்குப் போனால்  மூடிக்கிடக்கு.......    போகட்டுமுன்னு  அந்தச் சதுக்கத்தில் கொஞ்சம்  சுத்துனோம். ராவ், மசாலா பூனை விக்கறாராம் !  சோம்பேறிச் சிங்கம் கூட இருக்காம் !   பிழைப்புக்கு என்னெல்லாம் செய்யவேண்டி இருக்கு பாருங்க.... 

நம்மூர்லெ இல்லாத ஒன்னு அங்கே தாராளமாக்கிடைக்குது !
நியூஸியில் சமீபத்துலேதான்  (ஏப்ரல் ஒன்னு, 2020. ) இது சின்ன அளவில் இருக்கும் மருந்து வகைகளுக்கு அனுமதி கொடுத்துருக்காங்க. இதுக்கே  நாங்க , மக்களை முட்டாளாக்கிட்டாங்கன்னு மூஞ்சைத்தூக்கி வச்சுக்கிட்டு இருக்கோம்......

பஸிஃபிக் சென்டர்னு  அடுத்தப்லெ இருக்கும் ஷாப்பிங் சென்டருக்குப் போனோம்.  கையில் இருக்கும் நேரத்தைக்கொல்லணுமே !  நமக்கு ஃப்ளைட் ராத்ரிதான். ஏழு மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும். 
துணிகள்  நிறமும் டிசைனும் ஒன்னும் நமக்குச் சரிப்படலை.  குழந்தைக்கு ஏதாவது தேறுமான்னு பார்த்தால் நல்ல ப்ரிண்ட் போட்டதுலே சைஸ் சரியாக் கிடைக்கலை.  அவனுடைய சைஸில் இருந்தது ரொம்பவே சுமார்..... ப்ச்...வரவர காசுக்கு மதிப்பில்லாமப்போகுதுன்னு தோணும் வகையில் ஒரு உடுப்பு. $798 . இதுக்கா இவ்வளவு? என்னமோ போங்க.........


ஒரு கடையில் ஸேல்ஸ் அசிஸ்டன்ட்டாக இருக்கும்  ஸ்ரீலங்கன் பெண்ணுடன் கொஞ்சம்  பேச்சு. தமிழ்ச்சங்கங்கள் எல்லாம் ரொம்ப நல்லாவே இயங்குதாம். பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டில் தமிழ் கதைக்கின்றனராம். கேக்கும்போதே மனசுக்கு நிறைவாக இருந்தது உண்மை. பொண்ணோட பெயர் அத்தினி ! எனக்குத் தெனாலி ஞாபகம் வந்தது !

நாலே முக்கால்தான் ஆச்சு. ஆனால் எனக்குத்தான் பொறுமை இல்லை. போதும் விண்டோ ஷாப்பிங். 
ஷெராட்டன் வந்து பொட்டிகளை எடுத்துக்கிட்டு டாக்ஸி பிடிச்சோம் ஏர்போர்ட்டுக்கு !

வன்கூவரைப் பார்த்தது போதும்...........

தொடரும்........... :-)

10 comments:

said...

மசாலா பூனை, சோம்பேறி சிங்கம்? புரியவில்லை!

படங்களை ரசித்தேன்.

said...

அழகான மாம்பழங்கள். சுவை நன்றாக இருக்குமா? அதைக்கூட வாங்கிச் சுவைக்காமல் விண்டோ ஷாப்பிங் செய்தது நல்லாவா இருக்கு?

said...

வாங்க ஸ்ரீராம்,

அவை ராவ் பர்கர் கடை மெனுவில் ! SPICY CAT & LAZY LION

said...

வாங்க நெல்லைத் தமிழன்,
கத்தி இல்லையே.....

said...

One cinnamon bun $5.69 ! Pretty expensive. I don’t remember Vancouver as that expensive when I visited few years ago

said...

விதம் விதமான உணவுகள்... மாம்பழம் கண்களை ஈர்க்கிறது. தகவல்கள் அனைத்தையும் ரசித்தேன். நன்றி.

said...

வாங்க தெய்வா,
நலமா ? ஒரு பன் இல்லை, ரெண்டு இருக்கு. ஆனாலும் விலை அதிகம்தான் ! நாங்க 2017 லே கனடா வந்தபோதுகூட இவ்ளோ விலை உயர்வு இல்லை.... இந்தப்பயணத்தில்தான் ........ முகத்தில் அறையும் விலை......... ப்ச்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

விதவிதமாக இருந்தாலும் நமக்கான ச்சாய்ஸ் குறைவுதான்..... மாம்பழம்....... கண்ணால் தின்னேன்.

said...

// எனக்குத் தெனாலி ஞாபகம் வந்தது !// எப்பப்பாத்தாலும் என்ன சினிமா நெனப்பு வேண்டியிருக்கு என்ற உங்க வழக்கமான டயலாக் விட்டுப்போச்சி இங்க.

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா அதானே..... ! இன்னொரு வரியையும் சேர்க்கணும். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது....