அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியதும், என் கண்முன் பூதாகரமாக நிற்பது இந்த சமையல்தான். காய்கறி வாங்கிக்கக் கடைக்குப் போகணுமேன்னு கிளம்பி, வண்டியை எடுக்க ஆட்டோகேட்டைத் திறந்தால்.... திறக்காமல் அதன் சண்டித்தனம் . அந்த பாக்ஸின் மூடியைத் திறந்தால் எறும்புக்கூட்டம் ஒன்னு குடித்தனம் செய்யுது! இந்த ஊரில் இவ்ளோ எறும்பை நான் பார்த்ததே இல்லை. ஸர்க்யூட் போர்டை எல்லாம் கெடுத்து வச்சுருக்குதுகள்.
சம்பந்தப்பட்ட கம்பெனிக்குத் தகவல் சொல்லிட்டு....... பயணம் போய்வந்த பெட்டிகளைத் திறந்து ஒழுங்குபடுத்த ஆரம்பிச்சார் 'நம்மவர்'
தினமும் எதையாவது சமைக்கவேணும்தானே ? இருக்கவே இருக்கு பருப்பும் நெய்யும், பீன்ஸ் கறியும் ! கூடவே தயிரும்! கொஞ்சமா சக்கப்ரதமன் செஞ்சு நைவேத்யம் ஆச்சு.
நானும் 'வந்தவங்களுக்கு ஒரு இடம் தேடி ஒதுக்கி வச்சேன்'. கல்யாணப்பொண்ணு சடை பில்லைகூட இல்லாமல் இருந்தால் நல்லாவா இருக்கும் ?
ஒரு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னேயே Canopy type structure ஒன்னு நம்ம அடுக்களைப்பக்கம் இருக்கும் கன்ஸர்வேட்டரியையொட்டி அமைக்க ஏற்பாடு செஞ்சுருந்தோம். கம்பெனி ஓனர் நம்ம நண்பர்தான். நம்மாட்கள் இப்படி தொழில் ஆரம்பிச்சுச் செய்வதை நாம் ஊக்குவிக்கணும் இல்லையோ ! அதனால் இவர்களோடு ஒப்பந்தம்.
நாம் ஊருக்குக் கிளம்பும் வரை தயாரிப்பு முடியலை. கோவிட் காரணம் எல்லா தொழில்களுக்கும் கொஞ்சம் இழுபறியே. அதனால் நாம் வந்த பின் செய்துகொடுத்தால் போதும் என்றாச்சு. இப்பதான் நாம் வந்துட்டோமே... மறுநாள் வேலையை ஆரம்பிக்க வர்றோமுன்னு சேதி அனுப்பினாங்க. ஒரே நாளில் வேலையை முடிச்சுட்டாங்க. இங்கே நியூஸிக்கு மேலே வானவெளியில் ஓஸோன் லேயரில் ஒரு பெரிய ஓட்டை இருக்காம். அதனால் ஸ்கின் கேன்ஸர் அதிகம். அதன் காரணமாத்தான் கன்ஸர்வேட்டரியில் சூடு தாக்காமல் இருக்க இப்படி. இங்கிருக்கும் குளிருக்கு வெயிலும் வேண்டி இருக்கு. அதே சமயம் பாதுகாப்பாகவும் இருக்கணுமே.... ப்ச்....
கோபாலின் நலம் விசாரிச்சுப்போக நண்பர்கள் வருகையும் ஆரம்பிச்சுருந்தது..... 'நடந்தது என்ன'ன்னு சுருங்கச் சொல்லி விளக்கவேண்டிய கடமை வேற எனக்கு :-) நோயாளியையே சொல்ல்ச் சொன்னால்.... கோர்வையா சொல்லத்தெரியாமல் முழிக்கிறார். ஜூஸியாச் சொல்ல என்னை விட்டால் வேற யார் இருக்கா சொல்லுங்கோ ?
இதுலே நம்மவன் வேற.... என்னை விட்டு ஒரு நிமிட்டும் பிரியமாட்டானாம்...... எங்கே நானோ அங்கே அவன்.
தோட்டம் பார்க்கறதுக்குச் சகிக்கலைன்னாலும்..... பூக்களும் பழங்களும் அவரவர் கடமையைச் செய்ய மறக்கலை.
கார்த்திகை தீபத்திருநாள் வந்துருச்சு. கொஞ்சம் ஆரோக்கியமா (!) கொண்டாடலாமேன்னு..... கோதுமைப்பொரி (உருண்டை) நைவேத்யம் ! சின்னதா கொஞ்சம் அலங்காரங்கள். நாள் கிழமைன்னா விடமுடியுமோ ?
மறுநாள் விஷ்ணுகார்த்திகைக்குச் சக்கரைப்பொங்கல். அன்றைக்குப் புதன் கிழமை. எங்களுக்கு யோகா வகுப்பு உண்டு. இவரும் வரேன்னார். அங்கே வந்து ஒன்னும் செய்யாமல் ச்சும்மா ஒரு பக்கம் உக்கார்றதா இருந்தால் கூட்டிப்போவேன் என்றேன். அப்படியே ஆச்சு. நாலு பேரைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்தானே !
டாக்டர் விஸிட் போனோம். நல்ல மாறுதல் இருக்கு. கொஞ்சநாளில் சரியாகிருமுன்னு சொல்லி வேற சில மருந்துகளையும் எழுதிக்கொடுத்தாங்க. மருந்து வாங்கிக்க பக்கத்தில் இருக்கும் ஷாப்பிங் சென்டர் போனால்.... க்றிஸ்மஸ் அலங்காரங்கள் கண்ணைப்பறிக்குது.
அப்பதான் நம்ம வீட்டில் க்றிஸ்மஸ் அலங்காரம் ஒன்னுமே செய்யலையேன்னு தோணுச்சு. பெருசாப் பண்டிகை கொண்டாடலைன்னாலும்.... 'ஊரோடு ஒத்துவாழ்' னு குறைஞ்சபட்சம் ஒரு ரீத் மாட்டிவைப்பேன். (உண்மையைச் சொன்னால் நம்ம தெருவில் ரெண்டே வீடுகளில்தான் கிறிஸ்மஸ் அலங்காரம். அதுலே நம்மது ஒன்னு. ) அதென்னவோ இங்கத்து மக்கள் அலங்கரிக்க ஒன்னும் மெனெக்கெடறது இல்லை. பண்டிகையன்னிக்கு சர்ச்சுக்காவது போவாங்களான்னு பார்த்தால்.... சர்ச்சிலும் கொஞ்சம் சீனியர்ஸ் மாத்திரம்தான் சர்வீஸுக்குப் போவாங்க. மத்தபடி மக்கள்ஸ்..... கோடை விடுமுறைன்னு அங்கே இங்கே போறதோடு சரி. குடும்பத்தோடு க்றிஸ்மஸ் லஞ்ச்.
கோடைகாலம் என்பதால் ராத்ரி பத்துவரை வெளிச்சமாகத்தான் இருக்கும். காலையிலும் நாலரைக்கே வெளிச்சம் வந்துரும். கொஞ்சம் இருட்டினால் விளக்கு அலங்காரம் ஜொலிக்குமேன்னால்..... எங்கே ?
8 comments:
So, பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்து செட்டில் ஆயாச்சு!
கொண்டாட்டங்களும் தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.
//ச்சும்மா ஒரு பக்கம் உக்கார்றதா இருந்தால் கூட்டிப்போவேன்// ஹாஹாஹா;
ரஜ்ஜு ட்ட பேசற மாதிரியே கோபால் சார்ட்ட பேசிட்டீங்க
கார்த்திகை தீபம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
வாங்க ஸ்ரீராம்,
ஒழுங்கா வீடு வந்து சேர்ந்ததுதான் முக்கியம். செட்டில் ஆறதெல்லாம்.... மெல்ல மெல்லதான் !
வாங்க வெங்கட் நாகராஜ்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை இங்கேயும் சொல்லிக்கறேன். நல்லா இருங்க !
வாங்க விஸ்வநாத்,
அதே அதே.... ரஜ்ஜுகிட்டே பேசறதுதான் அவனோட அப்பாவுக்கும் :-)
வாங்க மாதேவி,
அப்பப்பக் கிடைக்கும் தேன் துளிகள் இவை !
Post a Comment