போய்ச்சேர்ந்தவுடன் செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டுக்கிட்டு இருந்தேன் மனசுக்குள். வழக்கம்போல் பருப்பு, சாதம், பீன்ஸ் ரெடி செஞ்சுக்கணும். குழந்தை எப்படி இருக்கானோ..... அவனைப்போய்க் கூட்டி வரணும். டாக்டரைப் போய்ப் பார்க்கணும்.....
எண்ண ஓட்டங்களால் தூக்கம் கூட வரலை. அரைகுறைத்தூக்கம்தான் ஃப்ளைட் முழுக்க. ரொம்பக்கூட்டமா இருக்கு. இவ்ளோபேரா நம்மூருக்கு வர்றாங்க ?
உள்ளூர் நேரம் பத்தே முக்காலுக்கு வெளியே வந்தோம். வீல்சேர் உதவியாளர் வண்டி தள்ளிவர, இமிக்ரேஷன், பேகேஜ் க்ளெய்ம் ஆச்சு.
ருசி 6 குழுவின் ஷ்யாம் தயாரித்து விற்கும் பிரண்டைப்பொடி மட்டும் (ஆன்லைனில் சென்னையில் வாங்கி வச்சுருந்தது )டிக்ளேர் பண்ண வேண்டி இருந்தது. மற்றபடி தின்னும் சமாச்சாரம் ஒன்னும்தான் நம்மிடம் இல்லையே..... என்னன்னு கேட்டப்பப் பிரண்டைன்னு சொன்னால் புரியுமோ ? சட்னி பௌடர் என்றேன். 'கொண்டுபொய்க்கோ'ன்னுட்டார் ஆப்பீஸர். வீல்சேர் உதவியாளர், வெளியே வரவேற்பு ஹாலில் கொண்டு வந்து உக்காரவச்சுட்டுப் போனாங்க. இவுங்க என்னோட ஃபேஸ்புக் ஃப்ரெண்டாம். அவுங்க சொல்லிதான் எனக்குத் தெரியும் :-) ஃபிஜி மக்கள்தான்.
மகளுக்குச் சேதி அனுப்பினார். மருமகன் கூட்டிப்போக வந்துட்டாராம். பதில் சேதி. பார்க்கிங்கில் வண்டியை விட்டுட்டு ஓடி வர்றார். கிளம்பி வீட்டுக்குப் போய்ச் சேரும்போது மணி பனிரெண்டரை. அலுப்பும் ஆர்வமுமாய் வீட்டுக்குள் போனால், மகள் வந்து காத்திருக்காள். மருமகன் எங்களை வீட்டில் விட்டுட்டு ஆஃபிஸ் போயிட்டார்.
சாமி அறையைத் திறந்து, விளக்குப் போட்டுட்டு சாமி நமஸ்காரம் பன்ணிட்டுக் குக்கர் வச்சுட்டுக் குளிக்கப்போகலாமுன்னு பார்த்தால்..... பெரிய பொதி ஒன்னு கிச்சன் டேபிளில் இருக்கு. உள்ளூர்த் தோழி, கொண்டுவந்து கொடுத்துட்டுப்போனாங்களாம்.
பால், ப்ரெட், ஜூஸ், பழங்கள், சப்பாத்தி, சாதம், குழம்பு, கறிகள், கூட்டு, தயிர் னு சம்ப்ரதாயமான சாப்பாடு ! பாட்டிலில் மிளகுக்குழம்பு வேற ! சட்னு குளிச்சுட்டு வந்து கேபின் பேகில் இருக்கும் விட்டலன் தம்பதிகளையும், நிக்கிற மஹாலக்ஷ்மியையும் எடுத்து சாமி அறையில் வச்சுப் பழங்களை நைவேத்யம் பண்ணியாச்சு.
எல்லோருமா சாப்பிட்டதும், நம்ம டாக்டர் க்ளினிக் போறோம். நான் கூட்டிப்போறேன்னு சொன்னாலும் மகள் கேக்கலை.
நம்ம மருந்து லிஸ்ட், ஸ்கேன் சம்மரி எல்லாம் பார்த்துட்டு, இவரைப் பரிசோதிச்ச டாக்டர், இந்தியாவில் இருந்து கொண்டுவந்த மருந்துகளையெல்லாம் நிறுத்தச் சொல்லிட்டுப் புது மருந்துகள் எழுதிக்கொடுத்தாங்க. இந்திய மருந்துகளில் சில, இங்கே தடை செய்யப்பட்டவைகளாம். மேலும் மற்ற மருந்துகள் டோஸேஜ் எல்லாம் அதிகம், ரொம்ப ஸ்ட்ராங்கான வகைகள்னு சொன்னாங்க. ஒரு வாரம் கழிச்சு வந்து பார்க்கணுமாம். ஒரு மாசத்துக்கு ட்ரைவிங் கூடாதுன்னாங்க. கைவசம் இன்னொரு ட்ரைவரும் வண்டியும் இருப்பதால் பிரச்சனை இல்லைதானே !
கையோடு, மருந்துக்கடையில் மருந்துகளை வாங்கி வந்தோம். இங்கே... டாக்டர் க்ளினிக்கில் பார்மஸி இருக்காது.
வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் மருமகன் வேலையிலிருந்து திரும்பினார். நாங்க மூவரும் காஃபி ஒன்னு போட்டுக்குடிச்சோம். மருமகன் காஃபி டீ ஒன்னும் குடிக்கமாட்டார்.
கிளம்பி கேட்டரிக்குப் போனோம். ரஜ்ஜு, கேட்டரி ஓனரிடம் ரொம்ப நல்ல பெயர் வாங்கியிருந்தான். செல்லப்பிள்ளை !!!! அவனைப் பிரிவது கஷ்டமாக இருக்காம்! நீங்களே வச்சுக்குங்கன்னேன். பில் செட்டில் பண்ணிட்டு, நன்றி சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
https://www.facebook.com/1309695969/videos/1386361431941899/
சாமி அறைக்குப்போய் கும்பிட்டு, கூண்டைத் திறந்ததும், துள்ளிக்குதிச்சு வெளியில் வந்தவன், வீட்டுலே எல்லாம் உள்ளது உள்ளபடி இருக்கான்னு செக் பண்ணிட்டுத் தோட்டத்துக்குப் போனான்.
https://www.facebook.com/1309695969/videos/799052998479675/
இப்பதான் நானும் தோட்டத்தை எட்டிப்பார்க்கிறேன். தாமரை, ரோஜாக்கள் எல்லாம் பூத்து, செழிப்பாக இருந்தன.சில செடிகள் மண்டையைப் போட்டுருக்குகள். மல்லிச்செடி பூத்து முடிஞ்சு காய்ஞ்சும் போய்க்கிடக்குது. என் 'வெற்றிலைக்கொடிக்கால் ' போயே போச்சு. நான் ஒன்னும் வாயைத் திறக்கலை. தோட்டத்தைப் பார்த்துக்கிட்ட மகளுக்கும் மருமகனுக்கும் நன்றி சொன்னேன்.
அவுங்க கிளம்பிப்போனாங்க. எனக்கோ உடல் அடிச்சுப்போட்டாப்லெ இருக்கு. ராத்ரிக்கு ப்ரெட் & பால் போதும். நல்லாத் தூங்கி எழுந்திருக்கணும்.
இப்பதான் நம்ம பயணம் முடிவுக்கு வருது ! ஆனால் ஒரேடியா சந்தோஷப்படவேண்டாம். ஃபாலோ அப் என்ற சமாச்சாரம் நிறைய வரும் !
பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.
இன்னும் ஒன்னும் சொல்லவேண்டியிருக்கு. பயணத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் ரொம்பவே கஷ்டப்படவேண்டி இருக்கும் என்பது இந்தப்பயணத்தில் கண்ட அனுபவம். கூடியவரை நலமுடன் இருக்கும்போதே பயணங்களை அனுபவிக்கணும் !
ஆதலினால் பயணம் செய்வீர்!
12 comments:
அருமை, நன்றி,
பிரயாணத்தின்போது உடல் நலம் குன்றியது மிகவும் பயமான விஷயம்மா.கடவுள் துணை இருந்து நல்லபடியா வீடு வந்து சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சி
stay always blessed.
take care.
god bless the entire family.
romba sandhosham maa.
வாங்க விஸ்வநாத்,
தொடர் வருகைக்கு நன்றி !
வாங்க க்ருபா,
ரொம்ப மகிழ்ச்சி !
நன்றி !
நல்லபடியா இருப்பிடம் வைகுந்தத்துக்கு போய்ச் சேர்ந்துட்டீங்க. வீட்டுத் தோட்டத்தின் படம் இன்னும் வரும் என்று நினைக்கிறேன்.
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் உணவு இருந்தால் சந்தோஷம்தான்.
வாங்க நெல்லைத் தமிழன்,
தோட்டத்தின் படங்களுக்கு என்ன குறைவு ! தினம் ஒரு பத்து க்ளிக்காவது வரும்🤣
தோழிக்கு இங்கேயும் நன்றி சொல்லிக்கறேன்🙏
யதாஸ்தானத்துக்கு வந்தாச்சு!
ரஜ்ஜு சமத்து செம க்யூட்!!..பின்னே ஓணர் செக் பண்ணாண்டாமா??!!!!
தோட்டம் அழகா இருக்கே..ரோஜா..ஏல்லாம் இன்னும் வரும் இல்லையோ..
பசிச்ச வயித்துக்கு சாப்பாடு ரெடி! ஆஹா இதல்லவோ நட்புகளின் அன்பு, கரிசனம்.
பாருங்க //இவுங்க என்னோட ஃபேஸ்புக் ஃப்ரெண்டாம். அவுங்க சொல்லிதான் எனக்குத் தெரியும் :-) ஃபிஜி மக்கள்தான்.//
பாருங்க எப்படி எல்லாமோ எங்கேருந்தெல்லாமோ நமக்குத் தெரியாதவங்க நம்மை அணுகுவது...உதவுவது!! World is very small! ஆனா அந்த சக்தி பெரியது!
கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க ஆதலால் பயணம் செய்வீர்!!! யெஸ் யெஸ் அப்படியே டிட்டோ செய்கிறேன். அந்த பாராவை.
தொடரட்டும் உங்க பதிவுகள்....
கீதா
நல்லபடியாக வீடு திரும்பியாயிற்று... மகிழ்ச்சி.
உடல்நலத்துடன் இருக்கும்போதே முடிந்தவரை பயணித்து விட வேண்டும் என்பது சரியான விஷயம். நம்மில் பலருக்கு இது புரிவதில்லை. பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வீர்.
நலமாக வீடுதிரும்பியது மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கும். செல்லத்துடன் பொழுதுபோயிருக்கும்.
வாங்க கீதா,
வாழ்க்கையும் காலமும் யாருக்காகவாவது கொஞ்சம் நிக்குதோ ? அதன் போக்கிலேயே நாமும் போகவேண்டியதுதான் !
இந்தப் பயணம் என்பதுக்குத்தான் அளவே இல்லை. எவ்ளோ இருக்குல்லே பார்த்து அனுபவிக்க !!!!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
பயணத்துலே உடல்நலம் ரொம்ப முக்கியமுன்னு நல்லாவே புரிஞ்சு போச்சு இந்தப் பயணத்தில் !!!! பொறுமைத்திலகம் கொஞ்சம் பொறுமையாக இருந்துருக்கலாம். நல்லவேளை.... ரொம்பப் படுத்தாமல் விட்டு வச்சதுக்கு பெருமாளுக்கு நன்றி!
வாங்க மாதேவி,
செல்லம் ஒரு கணமும் பிரியாமல் இருக்கு, வீடு வந்தபின் !
Post a Comment