Friday, June 02, 2023

குறுக்கே கல் வச்சால் கூகுள்காரிக்குத் தெரியுமா ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 56

இன்றைக்கும் சந்திப்புன்னுதான் சொல்லணும். கோவில்களுக்குப் போகணும். ஆனால்  நம்மவர் எப்படி இருக்கார் என்பதைப் பொறுத்து  திட்டம் போட்டுக்கணும். காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வந்த கையோடு, கொஞ்ச நேரம் தினசரிகளைப் புரட்டிக்கிட்டு இருந்தவர்... அப்படியே கண்ணயர்ந்துட்டார். ஓய்வெடுக்கட்டுமுன்னு இருந்தேன். 


'நமக்கு, நம்ம வேலை'ன்னு போகலாமுன்னா....   தூக்கத்தில் இருப்பவரை எழுப்பிச் சொல்லிட்டுப் போவது எப்படி ? ஹெவி ப்ரேக்ஃபாஸ்ட் கூட இல்லையே....

ஒரு ஒன்னரை மணிக்குத்தான்  எழுந்தார்.  'சாப்பிடுமுன்' மருந்துகள் கூட எடுத்துக்கலை. ப்ச்.... 

மதியம்  மூணு மணிக்கு வண்டியை அனுப்பச் சொல்லிட்டு,  நம்ம சாப்பாடு ஆச்சு. விஜிதான் ட்ரைவர்.  முதலில்  ஒரு கோவில் விஸிட்.  வர்றோமுன்னு சேதி அனுப்பினேன். 

திருவான்மியூர் தாண்டிப் போய்க்கிட்டு இருக்கோம். மருந்தீஸ்வரர் நடை சாத்தி இருக்கும் நேரமில்லையோ.....   கொட்டிவாக்கம் போய்ச் சேர்ந்து, அட்ரஸ் சரியாகத் தெரியாமல் கொஞ்சம் சுத்தினோம்.  கூகுளார் சொன்ன வழியில் தெருவின் குறுக்கே குண்டாமுண்டான்னு கற்களை வச்சு மறிச்சுருக்காங்க.  அடுத்த தெருவழியாப் போனால் அங்கேயும் தடைக்கற்கள்.  இப்படி சடார் சடார்ன்னு அங்கங்கே  கல் வைக்கிறதும் குழி தோண்டுவதும் கூகுள்காரிக்கு எப்படித்தெரியும் ? வண்டியைத் திருப்பினதும்  அங்கே  அந்தப்பக்கம்  100 மீட்டர் போ, இந்தப்பக்கம்  லெஃப்ட் திரும்புன்னு நம்மை ஒருவழி பண்ணிக்கிட்டு இருக்காள், புண்ணியவதி.  
பேசாமக் கோவிலுக்கே ஃபோன் போடுன்னதும்,  அவுங்க ஒரு வழி சொல்ல, அப்படியே போய்ச் சேர்ந்தோம்.  கலைமாமணி முத்தரசி அவர்களின் வீடு !  கலைக்கோவில் இவுங்களோட நாட்டியப்பள்ளி !  மாடியில் வீடும், தரை தளத்தில் பள்ளியுமா....  லிஃப்ட் இருக்குன்றதால் நமக்குப் பிரச்சனையில்லை.
இங்கே நம்மூரில் இவுங்க மகள் குடும்பம் இருப்பதால்....  இவுங்க வந்து போவாங்க. மகள் குடும்பம் நம்ம நண்பர்கள்தான் ! வீட்டை அட்டகாஸமா வச்சுருக்காங்க.   அழகோ அழகு ! தரைத்தளத்தில்  இருக்கும் டான்ஸ் ஸ்டூடியோ  போனோம்.   சிம்பிள் & ஸ்வீட்.


இவுங்க அம்மாவின் அறைக்குப் போனால்....  (விழா அரங்கில் இருக்கோமோன்னு ஒரு நிமிட் நினைச்சுட்டேன் ) தமிழகத்தின்  அனைத்து  முதல்வர்களையும்  பார்க்கலாம். இவுங்க கணவருக்கு  விருதுகளை அளிக்கும் படங்கள் !  
ஹா.......... எப்படி ? திரைப்பட இயக்குநர்,வசனகர்த்தா.......   திரு சொர்ணம் அவர்கள் வீடு இல்லையோ !!!! இப்போதைய முதல்வர் 'நடிச்ச' படம் ஒன்னு இவர் இயக்கத்தில்தானாம் ! படத்தின் பெயர் 'ஒரே ரத்தம்'.  (இப்படி ஒரு படம் வந்ததா என்ன ? ஙே....)

விருந்தோம்பலை ரசித்தேன்......வ.....டை.....
அங்கிருந்து கிளம்பி அநந்தபதுமன் தரிசனம் ! இஷ்ட தெய்வக் கோவில். நிம்மதியான தரிசனத்துக்குக் கேரண்டீ !  அவனெதிரில் உக்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தேன். 
படம்: கூகுளார். நன்றி 

"எப்போ கிளம்பணுமுன்னு இதுவரை தெரியலையேடா... சட்னு கிளம்பணுமுன்னா...இங்கே வந்து சொல்லிப்போக முடியுமோ இல்லையோ.... இதையே விடை பெறும் வழிபாடுன்னு நினைச்சுக்கோ....."

"எதுக்காகக் கரையறாய் ? எல்லாம் எனக்குத் தெரியும் கவலைப்படாமப் போ"

இருக்குமோ.... இருக்கலாம்.  கண்கள் பாத தரிசனம் காணப்போனால்... பதுமமலர் கவசம் ஒன்னு காணோம். வெறும்பாதம்! பணிந்தேன்.
கோவிலுக்குள் இருக்கும் மரத்தடி ஈசனுக்கு முன்னால் சின்ன மண்டப அலங்காரம் அட்டகாசமா இருக்கு ! 
இந்தக் கோவிலில் எனக்குப் பிடிச்ச ஒரு விஷயம்.... சாமி காசை பிடுங்கித் தின்னும் நிர்வாகம் இல்லை என்பதே. இதனால் ஒவ்வொரு முறை போகும்போதும் ஏதாவது ஒரு முன்னேற்றம் நம் கண் முன்னில் ! இங்கேயும் அந்த மறநிலையத்துறை வந்து வாரிக்கிட்டுத்தான் போகுது.... ப்ச்.....
வைகுந்தவாசல் வெளிப்புறம். உட்புறம் தங்கத்தகடு போர்த்தியிருக்காங்க.

சந்த்யாகால ஆரத்தி  முடிஞ்சதும்  கொஞ்சநேரம்  உக்கார்ந்துட்டுக் கிளம்பி லோட்டஸ் வந்தாச்சு.  தினம் தினம் சாப்பாடுன்னு ஒன்னு இருக்குல்லே...  இன்றைக்கு சங்கீதா போகலாம். அப்படியே எனக்குப் பிடிச்ச மிக்சர் கொஞ்சம்  வாங்கிக்கணும்.   அதானே..... ஆசைப்படக்கூடாதுன்னு எத்தனை முறை அடக்கி வைப்பது ? உனக்கு மிக்சர் இன்னைக்குக் கிடையாது......போ.....
ஆனால் உனக்குபிடிச்ச அடை  இருக்கு. அவியல் வேணாம்.  வெண்ணையும்   வெல்லமும் போதும். மற்றவர்களுக்கு  சாம்பார் வடை, மஸால் தோசை, ரவா தோசை & அவியல் :-)  இங்கேயும் மஞ்சத்தட்டு !!!

மறுநாளும்  வழக்கம்போல்தான். நம்ம ஜன்னுவுக்கு ஒரு பரதநாட்டிய ட்ரெஸ், அமெஸானில் இருந்து வந்தது.  அதுக்கான மற்ற ஆக்ஸஸரீஸ் வாங்கிக்கணும். சலோ ....    எங்கே ? நம்ம விஜயாதான்...... காரணமில்லாமல் கடைக்கே போகமாட்டேன்னு  உங்களுக்குத் தெரியும்தானே !  



அப்போதான் பூர்விகாவிலிருந்து கூப்பிட்டாங்க. வாட்ச் வந்துருக்காம்.  இருக்கட்டுமுன்னு கடையிலும் வெளியிலுமா கொஞ்சம்  வாங்கிட்டுத்தான் கிளம்பினேன். அடடா.....    இதைப் பார்க்கலையேன்னு  அப்படியே குளத்தை  வலம் வந்தோம்.


முப்பதாயிரமுன்னு (ஒரு ரூ கம்மி)போட்டுருக்கே.... நெசமா ?  சரி  ஏதா இருந்தாலும் அது உமக்கேன்னேன்.  அடுத்துள்ள கீதா பஜ்ஜியில் நம்ம பெயர் எழுதிட்டார் பெருமாள் !
கவிதாயினி மதுமிதா இல்லத்திற்கு ஏகினோம். புத்தக வெளியீடு இருக்கு என்பதே அங்கு போகும்வரை தெரியாது !!!!  இங்கே பாருங்க!

https://youtu.be/h0vQ1T-Ix6M

சிலம்பாட்டத்தில் பின்னி எடுத்துருக்காங்க.  நெசமா ? இதோ கப்பு !!!! அதுவும் ஒன்னில்லையாக்கும் !!!!   ரெண்டு !!!  




ஏறக்குறைய பிரியாவிடை சந்திப்புதான்......

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்... இடமே இல்லைன்னு  அழுது முடிச்ச கையோடு, வீல்சேர் சேவை உண்டுன்னு சொல்லுச்சு.  சரி போனது போகட்டும்.... எப்படியும்  நம்ம ஒரிஜினல் டிக்கெட்டே   ஞாயிற்றுக் கிழமைக்கு இருக்கு. இன்னும்  ரெண்டே நாட்கள்தான். பொறுத்தது பொறுத்தோம்.  அப்புறமா நிதானமா பொங்கி எழுந்தால் ஆச்சு.........

குறைஞ்சபட்சம் காலை நீட்டிக்கும்படி  எமெர்ஜென்ஸி எக்ஸிட் டோர் இருக்கும் முன்வரிசைக்கு  மாத்திக்கலாமுன்னு கேட்டால்......வீல்சேர் ஆளுக்கு  அங்கே  இடமில்லைன்னு கண்டிப்பான பதில்.  ஆமாம் அதுவும் நியாயந்தான். அவரச ஆத்திரத்தில் சனமெல்லாம்  வெளியே குதிக்கும்படி ஆச்சுன்னா ?  ஒன்னு இருந்தால் ஒன்னு இல்லை. இப்போதைக்கு ரொம்ப முக்கியம் வீல்சேர்தானே ? ஏற்கெனவே துண்டுபோட்டுவச்ச பழைய இருக்கையே இருக்கட்டும். 


ஒரு விதத்தில்  பதற்றம் குறைஞ்சதுன்னுதான் சொல்லணும். முப்பது மட்டுமே உறுதின்னு (எடைதான்) தெரிஞ்சு போச்சு. ஆனாலும்  கொஞ்சம் அதிகம் இருக்குமோன்னு தோணுது.  எடு அந்த எலக்ட்ரானிக் ஸ்கேலை.  
எதையாவது கழிச்சுக் கட்டலாமுன்னா..... அப்படி ஒன்னும் இல்லை.... நம்மவரின் உடைகள் தவிர :-)

 பத்துகிலோவுக்கு   இப்பவே பணம் அடைச்சால்  ஆச்சு. எதுக்குன்னுதான் கவலைப்பட முடியும் ,சொல்லுங்க?

தொடரும்.......... :-)


11 comments:

said...

// எதையாவது கழிச்சுக் கட்டலாமுன்னா..... அப்படி ஒன்னும் இல்லை.... நம்மவரின் உடைகள் தவிர //
ஹாஹாஹாஹாஹா;

said...

கண்ணில் பட்டது நம்மவரின் உடைகள் …. அடடா… :)

சந்திப்புகளும், கடை உலாவும் நன்று. தொடரட்டும் பயணங்கள்.

said...

இந்தத் தடவை பலவித கோவில்கள் விசிட் மிஸ்ஸிங்.

இருந்தாலும் உடல்நிலை சரியானதே. உங்களுக்கும் லோகல் விசிட் மற்றும் பர்சேஸில் குறை இல்லை (ஆனால் எஸ் எம் சில்க் விசிட் பண்ணலையோ?)

said...

வாங்க விஸ்வநாத்,

அப்படியே செஞ்சுருந்தாலும் அதை உணர்ந்திருக்கச் சான்ஸே இல்லையாக்கும். அநேகமா எல்லாம் ஒரே மாதிரிதான் இல்லையோ !!!

நாந்தான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணிட்டேன் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உடைகள்....ஹாஹா

இந்த முறை, சந்திப்புகளும் கடை உலாவும் ரொம்பவே குறைஞ்ச அளவில்தான்.... உங்க இல்லம் கூட மிஸ் தான்....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

தென்தமிழகம் போவது ரத்தானதால் கோவில்களின் எண்ணிக்கையும் குறைஞ்சே போயிருச்சு. இதுவரை போகாத கோவில்கள் சிலவற்றை மனசில் குறிச்சுருந்தேன்.... வேளை வரவில்லை.

பொதுவா எஸ் எம் ஸில்க்ஸ் போறதில்லை. மகள் ஆறுவயசா இருந்தப்போ, மாமியோடு போய் ஒரு பட்டுப்பாவாடை வாங்கினேன்.

உங்க ஃபேவரிட் கடையா இது ? ஏற்கெனவே கூட ஒருமுறை குறிப்பிட்டு இருந்தீர்கள், இல்லை ?

said...

ஹாஹாஹா அதானே....டக்டக்குனு ரோடு வெட்டி கல் வைச்சா கூகுளுக்குத் தகவல் போலைனா அந்த தேவதை என்ன செய்யும் சொல்லுங்க?!!!!!!! கம்யூனிக்கேஷன் கேப்!!!

ஓரு வழியா நியூஸிக்கு போற லக்கேஜ் ரெடியாகிடுச்சுன்னு சொல்லுங்க....ஓ இன்னிக்கு ஃப்ளைட்டோ...சரி அண்ணாவை பத்திரமா கூட்டிட்டுப் போய் பயணம் நல்லபடியா அமையட்டும்..

கீதா

said...

ஒரு மாதிரி பயணத்துக்கு ஆயத்தம் ஆகிவிட்டீர்கள்.

said...

வாங்க கீதா,
நல்லவேளை கூகுள்காரி கத்தறதோடு சரி. கட்டையை எடுத்து அடிக்கமாட்டாள் என்ற தைரியம்தான்.

எனக்கு என்னென்னா அவள் பேச்சைக்கேக்கற ஆளு, நம்ம பேச்சைக் காதுகொடுத்துக் கேக்கறதில்லையே......

பத்திரமாக் கொண்டு வரணுமுன்னுதான் இந்தப்பாடு படவேண்டியிருந்தது....

said...

வாங்க மாதேவி,

பயணம் என்பது சும்மா இல்லைன்னு புரிதல் வந்துருக்கு இப்போ!!!

said...

வாங்க ப்ரபா,

வருகைக்கு நன்றி !