Wednesday, June 14, 2023

என்பெருமாள், சிங்கைச் சீனு ............கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 60

காலையில் சீக்கிரம் எழுந்துக்க அலாரம் நாலரைக்கு வைக்கச் சொல்லி இருந்தேன்.   அடிச்சதும் அவர்  என்னை எழுப்பிவிடணும். எனக்குத்தான் காது கேக்கலையே....
இவர் எழுப்பினது அஞ்சு மணிக்கு.  தடாலுன்னு எழுந்து குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போகணும். நான் குளிச்சு முடிச்சதும் , இவர் குளிக்கப்போறார். கோவிலுக்கு வரணுமாம். காலை வீசிப்போட்டால் அஞ்சு நிமிட் நடைதான். இதுக்காகவேதான் இந்த ஹொட்டேலில் தங்குவது.  இவருக்கு காலை வீசிப்போட முடியாதென்பதால்  கொஞ்சம் நிதானமாக நடந்து போகணும்.  கொஞ்சம் முன்னால் எழுப்பிவிட்டுருக்கலாம்....... ப்ச்....

கீழே லாபியில் யாருமில்லை.....    ஜிலோன்னு இருக்கு.  இங்கே   வாசல் படிகள் ஏறி இறங்க முடியாதவர்களுக்குக் குட்டியா ஒரு லிஃப்ட் ஒன்னு படிகட்டுப்பக்கம் இருக்கு. ரொம்ப நல்லதாப்போச்சு.  மணி இன்னும்  ஆறடிக்கலை. அதிகாலை வேளையில்  கொஞ்சம் கூடக் குளிர் இல்லாம இருப்பதை இங்கே மட்டும்தான் அனுபவிக்கறேன். செராங்கூன் ரோடு.....  ஆள் நடமாட்டமில்லாமல்..... சூப்பர்!





கோவில் வாசலுக்குள் நுழைஞ்சப்ப.....  மனசுக்குள் சொல்ல முடியாத ஒரு  மகிழ்ச்சி! உள்ளே  மூலவருக்குத் திரை போட்டுருக்கு. பட்டர்ஸ்வாமிகள் , கையிலுள்ள புத்தகம் பார்த்துப் படித்தபடி  சுப்ரபாத ஸேவையை ஆரம்பிச்சுருக்கார். கொடிமரம், பெரிய திருவடி ஸேவிச்சு, மண்டபத்துள் ஏறிப்போய் உட்கார்ந்தோம்.  நமக்காக நாற்காலிகளைப்போட்டு வச்சுருக்கார் பெருமாள். 

சுப்ரபாதம் சொல்லி முடிக்கும்போது, கோவில் வாத்யக்கலைஞர்களின்   வாசிப்பு.  அதிகாலை நாதஸ்வர ஒலி என்னமா மனசுக்குள்  போகுது பாருங்க..... மனநிறைவு ! 

https://www.facebook.com/1309695969/videos/1081483772812428/

https://www.facebook.com/1309695969/videos/828079372218132/

கருவறை திரை விலகி, மூலவருக்கான ஆரத்தி.....   ஒரு  நாலைஞ்சு பக்தர்கள் வருகை !  காட்சிக்கு எளியவனா நிக்கறான் !   கோவில்னா எப்படி இருக்கணும் என்பதற்கு இந்தக் கோவிலைத்தான் உதாரணமாச் சொல்லணும். சொல்லுவேன் ! 





சம்ப்ரதாயப் பூஜை முடிஞ்சது. எல்லோரும்  தொட்டுக் கண்ணில்  ஒத்திக்கிட்டோம்.  எல்லாம் ஒரு பத்துநிமிட் தான் இருக்கும். மறுபடி திரை போட்டாச்சு. மற்ற சந்நிதிகளுக்கு ஆரத்தி காண்பிக்க எல்லோரும் போயிட்டாங்க. நாங்களும் நிதானமா ப்ரகாரத்தை வலம் வர்றோம். 








முதலில் புள்ளையார். பக்கத்திலேயே தம்பி, வேல்வடிவில் !   புதுசா இருக்கு இப்போ சார்த்தியிருக்கும் வெள்ளிக்கவசம்.  புள்ளையார் முகமே என்னமோ வித்தியாசமா எனக்குத் தெரியுது.  உற்சவர் அமர்க்களம்.  எல்லோருக்கும்  கல்லுவச்ச திருமண்.......     ஆஹா.....! 
சந்நிதியை வலம் வந்தால் அடுத்து ஸ்ரீவிஷ்ணுதுர்கை !   மூணாவது சந்நிதியில் இந்தப்பக்கம் ஸ்ரீந்ருஸிம்ஹர். அடுத்தபக்கம் ஸ்ரீ சுதர்ஸனர். 


வலம் தொடர்கிறோம். அடுத்த சந்நிதியில் ஸ்ரீ மஹாலக்ஷ்மித்தாயார் ! 

பிரகாரத்தின் ஓரம்  டைனிங் ஹால். இந்த இடம்தான் முந்தி  அறநிலையத்துறை ஆஃபீஸாக இருந்தது. (நண்பர் இங்கேதான் ஆடிட்டர்) 
அடுத்து நம்ம ஆண்டாள்!   தூமணி மாடம் ஆச்சு ! துளசி மாடத்துக்கும் ஒரு நமஸ்காரம்.

ஆஞ்சி சந்நிதியில்,  திருமஞ்சனத்துக்கு தயாராகிறார்.  இன்றைக்கு ஏதோ விசேஷமம் போல....  ஹோம குண்டம்  ரெடியாறது..... 

திரும்ப மூலவரை நோக்கி வர்றோம். திரை விலகி, பளிச்னு காட்சி கொடுக்கறார் !  பெருமாளே.... நீர் நல்லா இரும்னு  சொல்லி வாழ்த்தினேன். 

நாங்க ஒரு பக்கமா உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்க ஆரம்பிச்சோம். அரைமணிக்கூறு போனதே தெரியலை.  நல்லவேளை,  தவறவிடலைன்னு திருப்தி.  பிரஸாதம் ஏதாவது உண்டான்னு டைனிங் ஹால் போனால்...... சுத்தம்.....  கொஞ்சம் கேசரி மட்டும் நமக்காக வெயிட்டிங்.  எல்லாம் துளி போதும். ப்ரஸாதமில்லையோ !



திரும்ப மூலவராண்டை போய் கண் நிறைய தரிசனம். ஆரத்தி, தீர்த்தம் சடாரி கிடைச்சது.  போயிட்டு வரேண்டான்னு  சொல்லிக்கும்போதே.....  மனசு விம்மி...... சரியாப் பார்க்கவிடாமப் பார்வையை நீர்த்திரை மறைப்பதேன் ? 


பத்துநிமிட் போல உக்கார்ந்துட்டு மெல்லக் கிளம்பினோம்.  இனி எப்போ ???

முஸ்தாஃபா கடந்து அதே சையத் ஆல்வி ரோடில் நுழைஞ்சு அடையார் ஆனந்த பவனில் ப்ரேக்ஃபாஸ்ட்.   எனக்குக் கோமளவிலாஸ் (பழசு)தான் பிடிக்கும். அவ்ளோதூரம் இவரை நடக்க வைக்க முடியாது....
எதுத்த சந்தில் நுழைஞ்சால்  பார்க் ராயல். சைடு வழி உள்ளே போனோம்.  அறைக்குப் போனதும் அன்றைய காலை மருந்துகளைக் கொடுத்துட்டு, என்னோட மருந்துகளையும் எடுத்துக்கிட்டேன். அறை ஜன்னல் வழியாப் பார்த்தால்  பெருமாள் கோபுரம் ! நம்மவருக்கு  BP பார்த்தால்.....  126/76 !!!   இறக்கிவிட்ருக்கான் !   ஆஹா..... ஆஹா.....

நம்மவருக்கே என்னைப் பார்த்தால் பாவமா இருந்துருக்கும் போல......  'நான் தூங்கறேன்மா. நீ போய்  கொஞ்சம்  வெளியே  சுத்திட்டு, எதாவது வாங்கணுமுன்னா வாங்கிட்டு வா' ன்னார்.  'வாங்கறதுக்குன்னு ரொம்ப இல்லை.....  ஆனால்  காளியம்மன் கோவில்வரை போயிட்டு வரேன்'னு கிளம்பினேன். 

செராங்கூன் ரோடு........   காலை ஒன்பதரைக்கு முன்னால்  போனால்.... கூட்டமே இல்லாமல்  நடக்கவே அருமையாக இருக்கும் !

தொடரும்......... :-)

8 comments:

said...

பெரியாழ்வாருக்கு அப்ப்றம் பெருமாள வாழ்த்தினதூ நீங்க தான்

said...

சிங்கைச் சீனுவின் திவ்ய தரிசனம் - உங்களால் எங்களுக்கும்! நன்றி.

படங்கள் அனைத்தும் நன்று.

said...

சிங்கை பெருமாள் தரிசனமும் கிடைத்தாகிவிட்டது.

said...

மன நிறைவான பதிவு.

said...

வாங்க விஸ்வநாத்,

ஆ..... அவரெங்கே............ நாம் எங்கே ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இங்கே மட்டும் எடுக்கும் படங்கள் எல்லாம் எப்பவுமே பளிச் பளிச்தான் !

மூலவர் என்ன அழகு இல்லே ? அதான் நான் பெற்ற இன்பம் வகையில் இங்கே !

said...

வாங்க மாதேவி,

நிம்மதியான தரிசனம் இல்லையோ !!!

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எனக்கும் மனநிறைவே !