Tuesday, June 06, 2023

49

எப்படி இப்படின்னு எனக்கே வியப்பா இருக்கு ! நாப்பத்தியொன்பது கடந்து ஐம்பதாவது வருஷத்துக்குள் நுழைஞ்சுருக்கோம். எல்லாம் பெரும் ஆளின் கருணையைத் தவிர  வேறேது !
ஏழு டிகிரி குளிரில் ஆரம்பிச்ச நாள்  மழைக்கிடையிலும் நல்லாவே போச்சு.
காலையில் நம்ம ஹரேக்ருஷ்ணா கோவில் விஸிட். 




மதியம் பேரன் வந்து  பார்த்துட்டுப்போனான் !  அவனும் என்னைப்போல் மாலடிமை. ஒரே ஒரு சின்ன வித்தியாசம்..... நான் திருமாலடிமை. அவன்  வெறுமாலடிமை ! அம்மாவோடு ஊரில் இருக்கும் ஷாப்பிங் மால்களைச் சுத்திக்கிட்டு இருக்கானாக்கும் :-)


சாயங்காலம்  நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம். எதிர்பாராத விதமா..... அங்கே  இரண்டாவதாக  தேவி பூஜையும் ஹோமமும் !   அடுத்தபடி சிவனுக்குப் பாலபிஷேகம் !



தேவியின் பெயர்  Maa Baglamukhi . சக்திபீடக்கோவில். மத்தியப்ரதேசத்தில் இருக்காம். தேவியின் பக்தர், தன் இஷ்டதேவி பூஜைக்குக் கோவிலில்  கேட்டுக் கொண்டபடியால்  நடத்திவைத்தார் பண்டிட் ரைஜல் .(நேப்பாள் பண்டிட். இவரை நாங்க  சௌத் இண்டியன் பண்டிட்டா மாத்திப்புட்டோம் !) 










அப்போ முதலாவது ? நம்ம செல்லப்புள்ளையார் பூஜைதான் ! நம்ம வீட்டுலே அருகம்புல்  அட்டகாசமா வளர்ந்துருக்கு !  விடமுடியுமா ?

இப்படி மூணுவகைக் கொண்டாட்டம் மனசுக்கு நிறைவைத் தந்தது உண்மை !
பொன்விழா  ஆண்டு நல்ல முறையில் ஆரம்பம் !





எல்லாப்புகழும் எம்பெருமாளுக்கே !!!! 






9 comments:

said...

வாழ்த்துகள். இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமா வாழப் ப்ரார்த்திக்கிறேன்.

said...

திருமண நாளில் கோவில் தரிசனங்கள் நன்று.

said...

மா பாலமுகி ஹோம தீயில் ஒரு பெண்ணுருவம் நிற்பது போல தோன்றுகிறது!  ஐம்பது வருட பூர்த்திக்கு என் நமஸ்காரங்களுடன் இருவரும் இணைந்து இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

said...

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
திங்கக்கிழமை போஸ்ட் இன்னும் வரலை, ஞாபகப்படுத்துகிறேன்.

said...

Best wishes for the golden couple.happy anniversary .

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இப்போ நம்ம ஊரில் ஆறு கோவில்கள் வந்தாச்சு. இதில் ரெண்டு தனியார் கோவில்கள்.

எப்படியும் ஒரு நாள் கிழமைன்னா கோவிலுக்குப் போகமுடியும் என்பதே விசேஷம்தான் !

said...

வாங்க ஸ்ரீராம்,

உங்கள் பிரார்த்தனைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

இன்னும் 50 பூர்த்தியாகலை. இப்போதான் ஆரம்பம்.

ஹோமத்தீயை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். நிறையப்பேரைப் பார்த்திருக்கேன் !

இன்று ஒரு புதிய அம்பாளைப் பற்றித் தெரிஞ்சுக்க முடிஞ்சதும் விசேஷம்தான் ! பஞ்சபாண்டவர்கள் வனவாஸத்தில் தரிசனம் செய்த தேவியாம். சக்தி பீடம் !

said...

வாங்க விஸ்வநாத்,

வாழ்த்த வயது எதற்கு ? மனம் இருந்தால் போதுமே!

இதுதான் அந்த திங்கக்கிழமை போஸ்ட் :-)

நாளையப்பதிவு இப்போதான் எழுத ஆரம்பிச்சேன்.

said...

வாங்க ஏஞ்சல்,

மிகவும் நன்றி !