Monday, June 12, 2023

சொல்பேச்சு கேட்பது சென்னையோடு போச்சு............... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 59

காலை ஆறரைக்கு வண்டிக்குச் சொன்னதால், சரியான நேரத்துக்கு வந்துருச்சு.  நாங்களும் குளிச்சு முடிச்சு ரெடியா இருந்தோம்.  மதிவாணன் அறைக்கு வந்து வணக்கம் சொல்லிட்டுப் பொட்டிகளைக்கீழே கொண்டு போனார்.  இங்கே லோட்டஸில் ப்ரேக்ஃபாஸ்ட் காலை ஏழரைக்குத்தான் என்பதால் , எப்பவும்  ஏர்ப்போர்ட் போற போக்கில் பாலாஜி பவனில் சாப்பிட்டுப்போவதுதான் வழக்கம்.  இப்பவும் அதே !  கீதா கஃபே திறக்க நேரமாகும். 
இந்த முறை 'கண்ணாடி க்ளிக்ஸ்' ரொம்ப எடுக்கவே இல்லை. அதனால் கடைசியா ஒன்னு :-)
இதுவரை நாம் சந்திக்காத புது  ட்ரைவர். தனியாப்போய் வேறொரு இடத்தில் உக்கார்ந்துக்கிட்டார்.  அவரவருக்கு வேண்டியதை வாங்கி உள்ளே தள்ளியாச்சு. நாங்க இட்லி,வடை காஃபி. இன்றைக்குக் கொடுக்கவேண்டிய மாத்திரைகளை ரெடியா எடுத்து வச்சுருந்தேன்.  நம்ம கார்த்திக்,  கொடுத்த  மாத்திரை பாக்ஸ் ரொம்பவே பயனாக இருந்தது. 



காலையில் ஏர்ப்போர்ட்டுக்கு வரேன்னார்.  வீட்டுக்குப் பக்கம்தானேன்னு !  நாந்தான்  வேணாமுன்னு சொன்னேன்.  எங்கூர் போல  எல்லோரும் உள்ளே   இமிக்ரேஷன் ஹால் வாசல் வரை போய்ப் பேசிக்கிட்டு இருக்க முடியாது.    அஞ்சு நிமிட் பார்த்துப் பேச  அத்தனை காலையில் கிளம்பி வர்றது அதிகம்னு தோணுச்சு.

காலையில் அவ்வளவா ட்ராஃபிக் இல்லாததால்  ஏழரைக்கே   ஏர்ப்போர்ட்.  ட்ராலிகளில் சாமான்களை ஏற்றிக்கொடுத்துட்டு ட்ரைவர் போயிட்டார். நம்மவர்  நடைவண்டிக் குழந்தை போல  முன்னே போறார்:-)


உதவியாளர்னு ஒருத்தர் வந்து எதாவது உதவி வேணுமான்னு என்னாண்டை கேட்டார்.  வீல்சேருக்குச் சொல்லியிருக்கோம்னதும் ஒரு நிமிசம் இங்கேயே இருங்கன்னு போனவர் திரும்பி வரும்போது கூடவே இன்னொருவருடன் வந்து ரெண்டுபேருமா நம்ம ட்ராலிகளைத் தள்ளிக்கிட்டு ஏர்லைன்ஸ் செக்கின் கவுண்டருக்குப் போனாங்க.  இப்பதான் எனக்கு மனசுக்குள்ளே திக் திக். 


பெட்டிகளை  எடை போட்டால்  ரெண்டு கிலோ எடை குறைவு !!!!! அப்பாடான்னு ஆஸ்வாசமா இருந்தாலும்.... 'போச்சே ரெண்டு'ன்னு இருந்ததும் உண்மை. செக்கின் பெட்டிகளையெல்லாம்  செக்த்ரூ பண்ணியாச்சு.  ரெண்டு ஃப்ளைட்டுக்கான போர்டிங் பாஸ் கிடைச்சாச்.  பத்தே நிமிட்டில்  எல்லாவேலையும் படபடன்னு முடிஞ்சது. வீல்சேரும் வந்துருச்சு.   வரலாறு முக்கியமாச்சே.  மனசுக்குள் 'சுமைதாங்கி சாய்ந்தால்....  'பாட்டு ஒலிக்க ரெண்டு க்ளிக்ஸ் :-)

போர்டிங் கேட்  இருக்கைகளாண்டை கொண்டுபோய் விட்ட உதவியாளர்,   வசதியா உக்கார்ந்துக்குங்க. எதாவது சாப்பிட வாங்கி வரவான்னு உபசரிச்சார்.  எல்லாம் ஆச்சு. நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க. இன்னும் நேரம் இருக்கேன்னோம்.  ஒவ்வொன்னா வீல்சேர்கள் வர ஆரம்பிச்சது. நிறையப்பேர்கள்  இந்த சேவையைப் பயன்படுத்திக்கறாங்க போல !  நமக்கு இது முதல் அனுபவம் !

அப்பப்ப  அங்கிருக்கும் கடைகளைப்போய் எட்டிப்பார்த்துத் திரும்பிக்கிட்டு இருந்தேன்.  ஒரு கடையில் நான் முந்தி ஒருக்கா குருக்ஷேத்திரத்தில் ஒரு ம்யூஸியத்தில் பார்த்த மாதிரி ஒரு  யானை பொம்மை இருந்தது. என்ன விலையோன்னு  பார்த்தேன்.....  கொஞ்சம்தான்.  கடைக்காரர், 'எல்லோரும் வந்து பார்க்கறீங்களே தவிர  வாங்கறதில்லை'ன்னு  சொன்னார். குரலில் கோபம் இருந்தது.   
விலையைப் பார்த்தால் வாங்கற மாதிரியா இருக்கு ? அப்படி அவ்ளோ கொடுத்து வாங்கும் நிலையில் இருக்கிறவங்க.....  ஏர்ப்போர்ட்டில் வந்தா வாங்குவாங்க ?  ஸிட்டிக்குள்ளே இருக்கும்  ஸ்பெஷாலிட்டிக் கடைகளில் இதைவிட  இன்னும் அட்டகாசமா இருப்பதை விட்டுவச்சுருப்பாங்களா ?

வீல்சேர் உதவியாளர் திரும்பி வந்துட்டார்.  பொதுவா ஃப்ளைட்  போர்டிங் அறிவிக்கும் முன்னேயே வீல்சேர்கள்  கிளம்பி விமான வாசலுக்குப் போயிருது. ஒன்பதரைக்கெல்லாம்  நாம்  உள்ளே நம் இருக்கைகளில்.

இனி வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.  நம்மவர் முகம் கூடக் கொஞ்சம் தெளிஞ்சாப்லெ இருக்கு !   நட்புகளுக்கும் உறவினர்களுக்கும்  நன்றி சொல்லி, ஒரு படமும் அனுப்பினேன்.  ஃப்ளைட் மோடில் போகறதுக்கு முன்னால்  பார்த்தால்  கார்த்திக் சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய சேதி.... 'கிளம்பியாச்சா ?'  இந்தக் கார்த்திக்  நம்ம பூனா மாமியின் பேரன். அவரோட வேலையில் கொஞ்சநாள் சிங்கை வாசமாம்.  என்னைச் சுத்தி ஏகப்பட்ட கார்த்திக்குகள் !   முருகன் அனுப்பி வைக்கிறான் போல !
வரவேண்டியவங்க எல்லோரும் வந்து சேர்ந்து  இருக்கைகள் எல்லாம் நிரம்பினதும் சம்ப்ரதாய சடங்குகள்  எல்லாம் முடிஞ்சு வண்டி கிளம்பிருச்சு.  அப்ப நம்மவர் முகத்தைப் பார்க்கணுமே !!!!  

நம்மவர் வழக்கம்போல்  சி னி மா...........    நானும் என் வழக்கம்போல் ஃப்ளைட்பாத். படங்கள்  எடுத்தது கூட ஒரு நாலைஞ்சோடு சரி. ப்ச்..... பத்திரமா வீடுவரை கொண்டு சேர்க்கணுமே.....

சாங்கியில் இறங்குனப்ப அங்கே மணி அஞ்சரை.   வீல்சேர் மக்கள் கடைசியாத்தான் இறங்கணும். அதுவரை ?  ஃப்ளைட் மோட் எடுத்தால் ஆச்சு.  முதல் சேதி.....   'வந்தாச்சா ?' நம்ம சிங்கை கார்த்திக்தான். ' இப்பதான் லேண்ட் ஆச்சு. ஹொட்டேலுக்குப் போயிட்டுக்  கூப்பிடறேன்.'

"எனக்கு எப்படியும் நாப்பது நிமிஷம் ஆகும் அங்கு வர. அதனால் கொஞ்சம்  ஒரு மணி நேரம் இருக்கும்போது சொல்லிருங்க, பெரியம்மா."

"  ஆஹா அதுக்கென்ன.  இதோ வெளியே வந்து டாக்ஸி பிடிச்சதும் சொல்றேன்"

வீல்சேர் மக்களை ஒவ்வொருத்தராகக் கூட்டிப்போய்   வீல்சேரில் உக்காரவச்சாங்க.  அவ்ளோதான். கிளம்புவாங்கன்னு நான் கூடவே நிக்கறேன். எங்கே ?  கையில் உள்ள பேப்பர்ஸ் பார்த்து பெயர், ஸீட் நம்பர், போர்டிங் பாஸ் எல்லாம் செக்பண்ணிட்டு மும்மூணு வீல்சேர்களாய்  ரயில் பொட்டி மாதிரி இணைச்சுட்டாங்க. இவர் வேற 'நீ முன்னாலே போம்மா'ன்னாரா.... நான் என் கேபின்பேகை இழுத்துக்கிட்டுப் போறேன்.  திருப்பத்தில் திரும்பிப் பார்த்தால்...  கூ..............  ரயில் அங்கேயே நிக்குது !
நான் திரும்பி ரயிலை நோக்கிப்போறேன். பாதிவழியில் ரயில் கிளம்பி வருது. அடுத்த ஸ்டாப்  ன்னு லிஃப்ட்க்குப் பக்கத்தில்!  ரயில் ட்ரைவர்  ரயிலை அப்படியே விட்டுட்டு கையில் இருந்த பேப்பர்களை இன்னொருவருக்குக் காமிச்சு என்னமோ பேசறார். அவரோட மேலதிகாரியாக இருக்கலாம்.

பொறுமையின் திலகம்னு பெயர் வச்ச நம்ம சிஜி (காலம் சென்ற சிவஞானம் ஐயா ) வாக்கைப் பொய்யாக்கிட்டார். தடால்னு எழுந்து லிஃப்ட் பட்டனை அமுக்கி உள்ளே நுழைய நானும் கூடவே ஓடினேன்.
ஒரு தளம்தான்  இமிக்ரேஷன் ஹாலுக்கு.  அங்கே வழக்கமான கூட்டம். அரைவல் கார்டுன்னு இப்பெல்லாம்  தர்றதில்லையாம். எல்லாமே பேப்பர்லெஸ் சமாச்சாரமாகியாச்சு.  எலெக்ட்ரானிக்  அரைவல் கார்ட்.  இ சர்வீஸ் .  நிறைய   டேப்லெட்ஸ்  வரிசையா நிக்க, நாம் வரிசையில் நின்னு இடம் பிடிச்சு எல்லா விவரங்களையும்  அதுலே டைப் பண்ணிறணும்.  
இந்த மூணு வருஷத்துலே ஆன மாற்றங்களில் இதுவும் ஒன்னு. நமக்கென்ன தெரியும். நாம்தான்  மூணுவருஷமா நாட்டை விட்டு அசையலையே....  இந்தப் பதிவு எழுதும் போதுதான், இங்கே நியூஸியிலும் இப்படி அமைச்சுக்கிட்டு இருக்காங்கன்னும் வெள்ளோட்டம் ஆச்சுன்னும் சேதி. இந்த ஜூன் மாச இறுதியில்  முழுசுமா செயல்பட ஆரம்பிச்சுருமாம் !

முதல்முதலா இதைக் கண்ணுலே பார்க்கும்போது சின்ன தடுமாற்றம் யாருக்கும் வர்றது இயல்புதான்.  ஆனா.... நாமோ பொறுமையில்லாமல் நிக்கும்போது..... எல்லாமே தவறாகப்போயிருதே.... பத்து மினிட் போல அதனுடன் இவர் மல்லுக்கட்ட.... நான் 'ஆ'ன்னு ......

நிறையப்பேரை உதவிக்கு வச்சுருக்காங்க. அதுலே ஒருவர் வந்து உதவி செஞ்சதும் எல்லாம் சரியாச்சு. திரும்பிப் பார்த்தால்..... ரயில் பெட்டி மக்கள், 'எல்லாம் முடிச்சு' வீல்சேரில் உக்கார்ந்து  வெளியே போய்க்கிட்டு இருக்காங்க. நாம் போய் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் வாங்கிக்கிட்டு  டாக்ஸி பிடிக்க நடந்து போறோம்.  கொஞ்சம்,  தூ......ரம்தான் அந்த வாசல்.  பொறுமையா இருந்திருந்தால்.....  நடக்காம வந்துருப்பார்தானே ? ஏர்ப்போர்ட்டில் வச்சு சண்டை போட முடியாதென்பதால் நான் மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டேன்.  மறக்காமல் கார்த்திக்குக்கு சேதி அனுப்பினேன்.

பார்க் ராயல்,l கிச்சனர் ரோடு, போய்ச் சேர்ந்து,  செக்கின் செஞ்சு ரூமுக்குப் போய் கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணும்போதே,  'வந்துட்டேன்'னு  கீழே லாபியில் இருந்து கார்த்திக்கின் சேதி. கீழே போய் கொஞ்ச நேரம் பேசிட்டுச் சாப்பிடப்போனோம். எங்கே போலாமுன்னு  கேட்டதும், உன் இஷ்டமுன்னு சொன்னேன். அடுத்த தெருதான். சையத் ஆல்வி ரோடு. முஸ்தாஃபா கடை இருக்கும் தெருன்னு சொன்னால் சட்னு புரிஞ்சுரும்.  

கார்த்திக் ரொம்ப மாறினாப்போல !  பார்த்தே எட்டு வருஷமாச்சே !  கடைசியாப் பார்த்தது, அவுங்க அப்பாம்மா சஷ்டியப்தப் பூர்த்தியில் இல்லையோ !  அதுவே நமக்கு யதேச்சையா நெருங்கிய தோழி மூலம்தான் தெரிஞ்சது.  காசிப் பயணத்துக்காக இந்தியா வந்திருந்தோம்.  விஷயம் கேள்விப்பட்டதும்  கிளம்பி மண்டபத்துக்குப் போயிட்டோம்.  அங்கே மாங்கல்யதாரண சமயம்  ஆஜர் !  திடுக்குன்னு எங்களைப் பார்த்ததும்  வத்ஸலாவுக்குக் கண்ணீர் ததும்பிருச்சு.  எங்க அக்கா வந்துருக்கா, அக்கா வந்துருக்கான்னு எல்லோராண்டையும் சொல்லிப் பெருமைப்பட்டது இப்பவும் என் நினைவில் பசுமையா இருக்கு !  அன்றைக்கு வைகுண்ட ஏகாதசி நாள்.  சொர்கவாசல் திறப்புக்கு அடையார் அநந்தபதுமன் கோவிலுக்குப்போக ஆசை. ஆனால்  கூட்டம் நெரியுமுன்னு போகலை. சஷ்டியப்தபூர்த்தி விழாவுக்காக, ஆண்டவன் ஆஸ்ரமம் ஹாலுக்குப் போனால் வழியிலேயே பெருமாளின் திருவீதி உலா !   மனசு பழசுக்குப்போயிருச்சு......   


கார்த்திக் கூட்டிப்போன இடத்தில்   சாட் ஐட்டம் ஸ்பெஷலாம்.  கடை பேரை கவனிக்கலை.  ஆனா கைலாஷ் பர்பத் இல்லையாக்கும். என்னென்னவோ  ஆர்டர் பண்ணி,  சாப்பிட்டதும்  கொஞ்சம் இதே தெருவில் நடந்து போய்  ஆளுக்கொரு இளநீர் ஆச்சு. சிங்கையில்  மட்டும் இளநீரைத் தவறவிடமாட்டேன்.  அடுத்தாப்ல  ஹைய்யோ.... பலாப்பழம் !  

விடமுடியாது. ரெண்டு  அரைக்கிலோ வாங்கி ஆளுக்கொன்னு.  கார்த்திக், இங்கே சொந்த சமையல்.   குடும்பம் இன்னும் இந்தியாவில்தான்.  வீடு பார்த்துக்கிட்டு இருக்காப்ல.  அநேகமாக  அடுத்தமாசம்  வந்துருவாங்க மனைவியும், குழந்தையும்.  திரும்பிப்போக ஒரு முக்கால்மணிப் பயணம் இருக்கேன்னு  அங்கிருந்தே  டாடா பைபை சொன்னேன்.  பலாக்கொட்டையை  மறக்காமச் சமைச்சுக்கணுமுன்னு சொல்லியும் வச்சேன்.    


கொஞ்சம் கூன் போட்டமாதிரி தெரிஞ்சது.பொழுதன்னிக்கும் Bபேக்Pபேக் மூட்டை சுமக்கறதால் இருக்கணும்.  இப்பெல்லாம் முக்காவாசி ஆண்களும் மூட்டை சுமக்கறதைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்....
நம்மவரை மெல்ல நடத்திப் பக்கவாட்டு  வழிமூலம்  ஹொட்டேலுக்குள்  கூப்ட்டு வந்தாச்சு. பழகின இடம் என்பதால்  எளிதுதான்.

முதல் வேலையாப் பலாப்பழத்தைத் தின்னு முடிச்சோம். கொட்டைகளைக் குப்பைக்கூடையில் போடும்போது கண்ணுலே ஜலம் வச்சுண்ட்டேன். 

எழுத்தாளர் தோழிக்கு வந்த விவரம் சொன்னேன்.  நாளை சந்திப்பு !

"சரி, சீக்கிரமாத் தூங்கப்போகலாம். காலையில் சுப்ரபாத சேவைக்குப் போகணும். நீங்க தூங்குங்க. நான் போயிட்டு  வந்துருவேன்"

குட்நைட்!

தொடரும்........... :-)


10 comments:

said...

நியூசிக்கு பலாக்கொட்டைகளைக் கொண்டுபோக முடியாது இல்லையா?

7 டாலருக்கு 1 கிலோ சுளையா? இங்க 120-150 ரூபாய்.

பத்திரமாக சிங்கப்பூர் போயிருக்கீங்க. அங்க கோவிலுக்குப் போனீங்களான்னு அடுத்த பதிவுலதான் தெரியும்.

2 கிலோவுக்கு, அந்தப் புடவை, கொஞ்சம் நொறுக்குத் தீனி....ம்ம்ம்ம் வாய்ப்பைத் தவற விட்டுட்டீங்க

said...

Joyful Singapore...!

said...

அருமை நன்றி

said...

சிங்கை வந்தாச்சா...

ஆஹா பலாப்பழம். நல்லாருக்கே...பலாக்கொட்டைய தட்டிக் கொண்டு போயிடுங்க...இல்லைனா முழுசா கொண்டு போக முடியுமா? அமெரிக்காவுக்கு எல்லாம் கொண்டு போக முடியாது அது போல இங்கயுமான்னு...அட 2 கிலோ குறைவாத்தானே இருக்கு...செக்கின் பெட்டி...ஆனா சிங்கப்பூர்ல லோடு ஏறுமோ?!!! அந்த 2 கிலோக்கு...ஹாஹாஹா...

சரி சிங்கை பதிவு அடுத்தாப்ல...எல்லாம் நல்லபடியா நடக்கும்...கோபால் அண்ணா நடந்தது நல்லதே!! எல்லாம் நல்லதுக்கே...

கீதா

said...

பலாப்பழத்துடன் சிங்கை ஆரம்பம்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

ஒரு பூவோ, இலையோ, கனியோ, கொட்டையோ கொண்டுவர முடியாது. தலையில் இருக்கும் பூவைக்கூட விமானம் தரையிறங்குமுன் எடுத்துக் குப்பையில் போட்டுறணும்.

கிலோ ஏழுடாலர் கொள்ளாம். இங்கே நாலைஞ்சு சுளைகளோடு சக்கரைத்தண்ணீர் இருக்கும் டின் நாலு டாலர். ருசியே தெரியாது.

said...

வாங்க ஸ்ரீராம்,

இந்த முறை நோ ஜாய்ஃபுல் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

பலாப்பழங்களையும் இன்னும் மற்ற எல்லாவற்றையும் 'படம் பிடிச்சு'க் கொண்டுவரத்தடை ஏதும் இல்லை !

கையில் கேபின் பேக்ஸ் மட்டுமே. அதில் ஏழு கிலோவுக்கு மேல் அனுமதி இல்லையேப்பா....

said...

வாங்க மாதேவி,

முக்கனிகளை அங்கேயே முழுங்கிட்டு வந்துறணும்.